பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 07, 2010

கோர்ட் நேரம்

சில வாரங்களுக்கு முன்பு டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் "நேரத்தை வீண் அடித்ததற்காக" ரூ10,000/= அபராதம் விதித்தது. அப்படி என்ன கோர்ட் நேரத்தை வீண் அடித்தார் என்று பார்க்கலாம். சென்னை பாரிஸ் கார்னரில் தெருவில் நடக்கும் பட்டாசு விற்பனையை பாதுகாப்பு நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்ற உத்திரவிட வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கு ஒன்றை தொடந்தார்.

வழக்கு விசாரனையில் அரசு தரப்பு "ஏற்கனவே 2008-ம் ஆண்டு இம்மாதிரி வழக்கிற்கு இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" என்று கூறினார். இதற்குப் பதிலளித்த டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் பின்பற்றாததால் மீண்டும் இந்த வழக்கை தொடர்ந்ததாக தெரிவித்தார்.
அதற்கு பிறகு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்

இந்த பிரச்சினை தொடர்பாக 2008-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கிற்கு உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்திய வெடிபொருட்கள் சட்டத்தை போலீஸ் கமிஷனர் முறையாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது. இதை போலீஸ் கமிஷனரோ மற்ற அதிகாரிகளோ சரியாக பின்பற்றவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கலாம். அதற்கு மாறாக அவர் புதிய வழக்கு தொடர்ந்ததால் நீதிமன்ற நேரத்தை வீண் அடித்ததற்காக டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கிறது. மேலும் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கேள்விகள்:
1. வாய்தா என்ற ஒன்று வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் வீண் அடிக்கப்படுகிறது ? இந்திய நீதிமன்றங்களில் மொத்தமாகத் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியன். இதற்கு யார் காரணம்? ட்ராபிக் ராமசாமி போன்றோர்களா அல்லது வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கு தொடுத்தவர்களை ஆண்டிப் பண்டாரங்களாக்கும் வழக்கறிஞர்களா?
2. ஒரு கேஸ் போடும் முன்பு இதற்கு முன் இதே மாதிரி வழக்கு தொடுத்திருக்கிறார்களா என்று பொது ஜனம் ஆராய்ச்சி செய்துவிட்டு தான் கேஸ் போட வேண்டுமா ?
3. போப்பால் விஷ வாயு வழக்கு 26 வருடம் நடைபெற்று இதனால் கோர்ட் நேரம் வீணாகவில்லையா ?
4. 'கற்பு' குறித்த வழக்கில் குஷ்புவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் 23 வழக்கு போட்டது இது எந்த வகை ?
5. அப்சல் குரு, கசாப், மற்றும் பலருக்கு மரண தண்டனை கொடுத்த பின்பு நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு மனு மீது உட்கார்ந்துக்கொண்டு இருப்பது வீண் இல்லையா ?
6 சொத்து குவிப்பு வழக்கில் ஜெ வழக்கை வேறு ஊருக்கு மாற்றுவது, பின்பு அதை மொழிபெயர்க்க செய்வது என்று செய்வது எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது ?
7. தினகரன் ஆபீஸ் எரிக்கப்பட்ட வழக்கில் வீடியோ சாட்சி இருந்தும் கோர்ட் நேரத்தை வீண்ணடிக்க கூடாது என்ற நல்ல எண்ணதில் கேஸை மூடிவிட்டார்கள்.
8. மயானக் கூரை, இலவச செருப்பு என்று வழக்கு நடக்கும். ஆனா, கழகத்துல ஐக்கியம் ஆயிட்டா கேஸ் இல்லாம போயிடும். எல்லாம் நேரம் தான்!
9. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விவகாரத்தில் நடந்த கூத்து இன்னும் முடியவில்லை. அவர் விடுப்பில் இருக்கிறாரா அல்லது சிக்கிம் ‎நீதிபதியாக இருக்கிறாரா என்று சட்ட அமைச்சரே குழம்பு போயிருக்கார்.
10. இதை தவிர காவிரி, முல்லை பெரியார், நீதிமன்றப் புறக்கணிப்பு என்று பெரிய பட்டியல் இருக்கிறது...


பட்டாசு வெடித்து சேதம் நடந்தால் அரசும் நீதிமன்றமும் என்ன செய்யும் ? நஷ்ட ஈடாக குடும்பத்துக்கு 10,000 தரும். இது தான் சமுக நலமா ?


25 Comments:

Thomas Ruban said...

பார்த்து சார் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுவிட போகிறார்கள்.
அரசியல்வாதிகளை முறைத்துக் கொண்டால் ஆட்டோ வரும்.

நீதிபதிகளை முறைத்துக்கொண்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.

இதல்லாம் எழுதபடாத சட்டங்கள்.

பகிர்வுக்கு நன்றி.

R. Jagannathan said...

கேள்விகள் சரிதான், ஆனால் ஏன் இத்தனை லேட்? இதை படிக்கவேண்டியவர்கள் படிப்பர்களா? - ஜகன்னாதன்

Thomas Ruban said...

//கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விவகாரத்தில் நடந்த கூத்து இன்னும் முடியவில்லை. அவர் விடுப்பில் இருக்கிறாரா அல்லது சிக்கிம் ‎நீதிபதியாக இருக்கிறாரா என்று சட்ட அமைச்சரே குழம்பு போயிருக்கார்.//

இப்படி அரசாங்க ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது.

R. Jagannathan said...

I share an SMS reg. FB W'cup:

Brazil won in 1994 + 1970

Argentina won in 1986+1978

Germany won in 1990+1974

Brazil also won in 2002+1962

Add these figures - in each case it is 3964.

Now, we are in 2010. Deduct 3964-2010=1954. Who won in 1954? Germany! We got this year's winner! Can we wait and see if this prediction turns right?!
-R. Jagannathan

geeyar said...

நீதிபதியின் தீர்ப்பு சரியானதே. இதில் குறைகாண்பது தவறு. பழைய தீர்ப்பை மதிக்காத காவல்துறை மீது அவர் வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும்.

Palanivel Raj G said...

இன்று நீதிபதிகளாக இருப்பவர்கள் இதற்க்கு முன்பு வாய்தா எடுத்து கொண்டு இருந்தவர்கள் தானே... மக்கள் கஷ்டம் அவர்களுக்கு எப்படி தெரிய போகிறது...

Vijay said...

வர வர இந்த நாட்டில் வாழ்வதற்கே எரிச்சலாக இருக்கிறது. இது தான் நேர்மை உறங்கும் நேரம் போலிருக்கு.

Anonymous said...

ஏண்டா இந்த நாட்டில் வந்து பிறந்தோம் என்று சில வேளைகளில் நினைப்பதுண்டு...

kggouthaman said...

நேற்று, எங்கள் வீட்டு வாசலில் இருக்கின்ற ஒரு செடியை வேலி வழியாக ஒரு மாடு தின்று கொண்டு இருந்தது. தெருவில் போகின்ற ஒரு மனிதர், எங்கள் வீட்டு கேட்டைத் திறந்து, அழைப்பு மணியை அழுத்தி, என்னை அழைத்து, 'மாடு செடியை மேய்கிறது பாருங்கள்' என்றார். நான் உடனே, 'சென்ற வாரம் ஒரு மாடு வந்து மேய்ந்தபோது, இதோ இந்தக் குச்சியால் லேசாக அடித்து அதை அப்பால் விரட்டி, செடியை மாடு மேயாமல் காப்பாற்றினேன். அப்பொழுது நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அதைப் பார்த்து, இந்தக் குச்சியிடம்தான் நீங்கள் வந்து இதை சொல்லி இருக்கவேண்டும். அதை விடுத்து, நீங்கள் அழைப்பு மணி அடித்து என்னைக் கூப்பிட்டு என் நேரத்தை வீணடித்ததால், நீங்க எனக்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும்' என்றேன்.அதற்கு அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் பாருங்கள்! அடா டா என்ன ஓட்டம்!

ரிஷபன்Meena said...

கெளதமன் சார், விளக்கம் சூப்பர்.

அப்ப செக் பெளன்ஸ்-ன்னு கேஸ் கொடுத்தா , குற்றவாளி உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு செக் கொடுத்துட்டார், இப்ப பாங்க் தான் பணம் இல்லைன்னு சொன்னது அதனால பாங்க் மேல கேஸ் போடுங்கன்னு சொன்னாலும் சொல்வாங்க.( பழைய செந்தில் ஜோக்)

வர வர கமெடி டைம்-க்கும் கோர்ட் டைம்-க்கும் வித்தியாசமே இல்லாம போயிடுச்சு.

பாரதி மணி said...

’சட்டம் ஓர் இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு’ என்று ஒருவர் சொல்லிவிட்டுப்போனார். நீதிபதிகளின் தீர்ப்பு ஒரு ட்யூப் லைட்!

கெளதமன், உங்கள் கதையை பாராட்டுகிறேன்!

பாரதி மணி

Madhavan said...

kggouthaman said.....

Madhavan laghted out loud.

What else we do in INDIA..

வலைஞன் said...

கௌதமன்,
கதை இப்படி இருந்தால் இன்னும் நல்ல இருக்கு(மோ)?.........

நேற்று, எங்கள் வீட்டு வாசலில் கொட்டியிருக்கும் குப்பையை பார்த்த தெருவில் போகின்ற ஒரு மனிதர், எங்கள் வீட்டு கேட்டைத் திறந்து, அழைப்பு மணியை அழுத்தி, என்னை அழைத்து, 'வாசலில் ஒரே குப்பையாக உள்ளது பாருங்கள்' என்றார். நான் உடனே, 'சென்ற வாரம் இதேபோல், இதே புகாரை நீங்கள் என்னிடம் சொன்னபோது,நான் என் மனைவியை கூப்பிட்டு உடனே அனைத்தையும் அகற்றிவிடு என ஆணையிட்டேன்.குப்பையை மீண்டும் பார்த்த நீங்கள் என் மனைவியிடம்தான் வந்து இதை சொல்லி இருக்கவேண்டும். அதை விடுத்து, நீங்கள் அழைப்பு மணி அடித்து என்னைக் கூப்பிட்டு என் நேரத்தை வீணடித்ததால், நீங்க எனக்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும்' என்றேன்.அதற்கு அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் பாருங்கள்! அடா டா என்ன ஓட்டம்!

பதிவு செய்த IV க்கு நன்றி

ரவிபிரகாஷ் said...

ராமுவின் பென்சிலை சோமு பிடுங்கிக்கொண்டான். ராமு ஆசிரியரிடம் முறையிட்டான். ஆசிரியர் சோமுவைக் கூப்பிட்டு, ராமுவின் பென்சிலை உடனே அவனிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டார். சில நாள் கழித்து, ராமு மீண்டும் ஆசிரியரிடம் சென்று, “சோமு என் பென்சிலைத் தரமாட்டேங்கிறான் சார்” என்று முறையிட்டான். “ஏற்கெனவே நீ இந்தப் புகாரை என்கிட்டே கொண்டு வந்திருக்கே. நானும் சோமுவைக் கூப்பிட்டு, உன் பென்சிலை உடனே கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுட்டேன். மறுபடியும் நீ இதே புகாரை என்கிட்டே கொண்டு வந்து, என் நேரத்தை வீணடிச்சுட்டே! அதனால உனக்கு ஒரு ரூபா ஃபைன் விதிக்கிறேன்” என்றார். “சோமு பென்சிலைக் கொடுக்காதது மட்டுமில்லே சார்! அந்த வாத்தியார் என்ன பெரிய புடுங்கியா? அவன் சொன்னா நான் உடனே கொடுத்துடணுமான்னு கேட்டு உங்களை அவமதிச்சுட்டான் சார்!” என்று ஆசிரியரிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று இப்போது குழம்பிக்கொண்டு இருக்கிறான் ராமு!

R. Jagannathan said...

ரவிப்ரகாஷ் அவர்களே, கோர்ட்டுக்குத் தெரியும் ஏன் அதன் தீர்ப்பு மதிக்கப் படவில்லையென்று! சோமுவை ஒன்றும் செய்ய முடியாது! எத்தனை எத்தனை தீர்ப்புகள், எத்தனை எத்தனை அவமரியாதைகள்! தீர்ப்பு எழுதுவது ஜட்ஜ் ஆனாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது ‘மக்கள்’ (ரௌடிகள் என்று அர்த்தம்) தலைவர்கள் தானே? பாவம், ட்ராஃபிக் ராமசாமி போன்றவர்கள். - ஜகன்னாதன்

Anonymous said...

இதே வழக்கில் முன்பே தீர்ப்பு அளித்திருக்கலாம். அதை போலீஸ் நடைமுறைப் படுத்தாவிட்டால் சட்ட அவமதிப்பு வழக்குப் போடலாம்தான். அதை மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே! ரூ.பத்தாயிரம் தண்டனை எதற்கு? jurisdiction தவறாக எத்தனையோ வழக்குகள் போடப்படுகின்றன. அப்போதெல்லாம் சுப்ரீம் கோர்ட் கூட சரியான வழியில் வாருங்கள் என்று சொல்லி விடுகிறார்களே தவிர வேறு தண்டனை விதிப்பதில்லையே!

கிரி said...

இட்லி வடை நல்லா நாக்க புடுங்கற மாதிரி கேட்டீங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கௌதமன் சார் கதை சூப்பர். வலைஞன் எதிர் கதை இன்னும் சூப்பர்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நாட்டில் இன்னமும் நீதி நேர்மைக்கு இடம் இருப்பது போல நினைத்துக் கொண்டு இப்படி ஒரு பதிவு போட்டு என் நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு என்னுடைய எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டுமென தண்டனை விதிக்கிறேன்.
(படித்த பிறகு உங்கள் நேரத்தை வீணடித்ததற்காக நீங்கள் எனக்கு தண்டனை கொடுப்பது உங்கள் இஷ்டம்)

ஒன்னும் தெரியாத பப்பா!!! said...

அம்மணமாக திரிபவர்கள் ஊரில் பேன்ட் போட்டவன் முட்டாள்.

ஒன்னும் தெரியாத பப்பா!!! said...

அம்மணமாக திரிபவர்களின் ஊரில் பேன்ட் போட்டவன் முட்டாள்.

R.Gopi said...

யார் யார் எந்தெந்த விதத்தில் கோர்ட் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்பதை பொதுமக்களிடம் பகிரங்கமாக போட்டுடைத்து விட்டீரே ஐயா...

கழகம் எவ்வழி, கண்மணிகள் அவ்வழி... இதுல என்னத்த கோர்ட், என்னத்த தீர்ப்பு, என்னத்த நேரம் வீணாகுது!!!

வலைஞன் said...

என்ன செய்ய போகிறோம்?
என்ன செய்ய போகிறோம்?
என்ன செய்ய போகிறோம்?
என்ன செய்ய போகிறோம்?
என்ன செய்ய போகிறோம்?
என்ன செய்ய போகிறோம்?

70 கோடி முறை imposition எழுதவேண்டும்!

Anonymous said...

Great article. The court system could be a deviation from democracy. The court seems to be an orthodox, anachronistic, autocratic entity. There doesn't seem to be any body that overlooks the way the court operates, number of pending cases and the need for more courts etc.
Even in a democratic country,if the public comments about the court, the court dishonor case might follow as said in the first post. Holy shit, No one dares to write articles about the court for that reason.

Anonymous said...

Indha Taminadu Uruappadave urupadathu.