பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 05, 2010

மண்டேனா ஒன்று 5/7/2010

இட்லிவடை படிக்கும் நேரம் தவிர்த்து ஆன்லைனில் யதிராஜ் பங்குசந்தையில் விளையாடுபவர் என்பது பலருக்கு தெரியாது. திராவிட கழகத்தையும், காங்கிரஸையும் கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்காமல், பங்குசந்தை பற்றி எழுதுங்கள் என்ற கட்டளையினால் இந்த பதிவு. அவருக்கு நன்றி :-)

பங்குசந்தை - சில ஆலோசனைகள்


Disclaimer : பங்குச் சந்தையிலுடன் உள்ள சிறிதுகாலத் தொடர்பால் விளைந்த அதிகப்பிரசங்கித்தனத்தால் இப்படியொரு கட்டுரையை (?) எழுத நேரிட்டுள்ளமைக்கு வருந்துகிறேன். இட்லிவடையிலுள்ள விஷயஞானிகள் சற்றே என்னுடைய அதிகப்பிரசங்கிதனத்தைப் பொறுத்தருள்வார்களாக!!

இன்றைய அவசர யுகத்தில் அதிக அலுப்பு சலிப்பில்லாமல், சுமாரான முதலீட்டுடன் அதிக லாபமீட்ட எண்ணுபவர்களின் நினைவிற்கு வரும் முதல் முதலீட்டு யுக்தி பங்குசந்தைதான். மேம்போக்காகப் பார்க்கின் பங்குசந்தை என்றாலே நஷ்டம், சூதாட்டம் என்ற இரு வார்த்தைகளும் நினைவிற்கு வருவதையோ, அல்லது விவாதிக்கப்படுவதையோ தவிர்க்க இயலாது. ஆனால் ஆழமாக சற்றே நோக்கினால் இவை இரண்டுமே அப்பட்டமான உண்மையல்ல. பங்குசந்தையைப் பற்றிய ஆழ்ந்த அடிப்படை அறிவு மற்றும் அதிகமான முன்னெச்சரிக்கை(ஜாக்கிரதை) உணர்ச்சி ஆகிய இரண்டும் நஷ்டத்திற்கு இட்டுச் செல்லாது. அதிக லாபம் அல்லது லாபம் இவ்விரண்டுமே நம்முடைய வியாபார யுக்தியைப் (Trading Strategy) பொருத்த விஷயம். பங்குசந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்று நினைக்கும் ஆரம்பகட்டத்திலுள்ளவர்களுக்கு சில அறிவுரைகள் aka Do's and Don'ts.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அடிப்படைத் தேவை ஒரு நிரந்தர கணக்கு அட்டை (Pan Card) மற்றும் ஒரு வங்கி சேமிப்புக் கணக்கு. இவ்விரண்டும் இருந்தால் ஆர்வமும், முதலீடு செய்ய வசதியும் இருப்பவர் எவரும் பங்கு வர்த்தகத்தில், பரிமாற்றத்தில் ஈடுபடலாம். அடுத்ததாக அரசு மற்றும் SEBI (Stock Exchange Board Of India) அங்கீகாரம் பெற்ற ஒரு முகவரிடம் DMAT (Dematerialized) கணக்கு. கணக்கு துவங்குவதற்கு முன்பாக அம்முகவர் செபி அங்கீகாரம் பெற்றவர்தானா என்பதையும், அவருடைய பதிவு எண்ணையும் உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். இப்பொழுதெல்லாம் முன்புபோல் பங்குப் பத்திரங்கள் புழக்கத்தில் இல்லாத காரணத்தால் இந்த "டிமேட்" கணக்கு மிகவும் அவசியம்.

முகவரிடம் கணக்கு துவங்குவதற்காக நிரப்பப்படும் படிவத்திலுள்ள அனைத்து சட்டதிட்டங்களையும் கவனமாகப் படித்த பின்னரே கையெழுத்திடவும். இது பிறகு ஏற்படும் சங்கடங்களையும், சிக்கல்களையும் தவிர்க்க உதவும்.

முகவரைத் தேர்ந்தெடுக்கும் முன், எந்த முகவரிடம் கழிவுத் தொகை (Commission) மற்றும் இதர தொகைகள் குறைவாக உள்ளது என்று விசாரித்தல் மிகவும் அவசியம்.

கணக்கு துவங்கி பரிமாற்ற நடவடிக்கைகளையும் துவங்கிய பிறகு, உங்களது ஒவ்வொறு பரிமாற்றத்திற்கு எழுத்துப் பூர்வமான "Contract Note" பெறுதல் அவசியம். இது பிற்காலத்தில் நமது பரிமாற்ற நடவடிக்கைகளில் இருதரப்பிற்கும் ஏற்படும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய உதவும். பெரும்பாலும் அனைத்து முகவர்களுமே மின்னஞ்சல் மூலம் அன்றாட பரிமாற்ற விவரங்களைத் தெரிவிப்பதால், எழுத்துப் பூர்வமாக நடவடிக்கை விவரங்களைத் தருமாறு வற்புறுத்துவது மிக அவசியம். இதற்கென தனி கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.

முகவர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ, எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க முற்படுவதற்கு முன்னும், அந்நிறுவனத்தின் ஜாதகத்தை சற்றே ஆராய்வது மிகவும் அவசியம். அந்நிறுவனத்தின் கடந்த சில ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கைகள், அந்நிறுவனத்தின் லாபநட்ட விவரங்கள், கடந்த ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்த பங்காதாய விவரங்கள் மற்றும் சதவிகிதங்கள், அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்புகள், அந்நிறுவனத்தின் நிர்வாகிகள், இயக்குனர்கள் பற்றிய விவரங்கள், மற்றும் பங்குச்சந்தை ஏற்ற இறக்க சமயங்களில் அந்நிறுவன பங்குகளின் சந்தை நிலவரம் இவற்றை ஆராய்வது மிக்வும் அவசியம். பெரும்பாலும் குறைந்த விலையுடைய நிறுவனப்பங்குகளில் முதலீடு செய்யும் போது இவ்விவரங்கள் மிகவும் அவசியம். (அதிக விலையுடைய பங்குகளில் முதலீடு செய்வது அதிக லாபம், குறைந்த விலைப் பங்குகள் குறைந்த லாபத்தையே அளிக்கும் என்பன போன்ற செய்திகள் அக்மார்க் மூடத்தனம்.) மேற்கூறிய விவரங்கள் அனைத்தையும் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்வதுதான் மிகவும் முக்கியம்.

உங்களது பரிமாற்ற, வர்த்தக முடிவுகள் அனைத்தையுமே நீங்களே சுயமாக எடுப்பது மிகவும் அவசியம். பலவேளைகளில் உங்களுடைய முகவர் அளிக்கும் தகவல்கள் சரியானவையாக இருக்காது. சிலவேளைகளில் சில நிறுவன பங்குகளைப் பற்றி ஒரு செயற்கையான அபிப்ராயத்தைத் தோற்றுவிப்பதற்காக தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளைப் பற்றி தொடர்ந்து பரிந்துரைப்பதுண்டு. எனவே அவர்களுடைய அறிவுரைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பரிமாற்றத்தில் ஈடுபடுவது கண்ணைக் கட்டிக் கொண்டு கயிற்றின் மேல் நடப்பதற்குச் சமம்.

அதிக ஏற்ற இறக்கம் உள்ள பங்குகளில் முதலீடு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. அவை எவ்வளவுக்கெவ்வளவு லாபத்தை ஈட்டித் தருகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு நட்ட அபாயமும் உண்டு.

இந்தப் பங்கு வாங்கினால் நிச்சயமாக லாபம் உண்டு என முகவரோ, அல்லது உங்களது சக முதலீட்டாள நண்பர்களோ அறிவுறுத்தினால், நிச்சயமாக அவற்றை கண்மூடித்தனமாக நம்பி ஏமாற வேண்டாம். பங்குச்சந்தையைப் பொறுத்தவரை அவ்வாறான ஸ்திரத்தன்மை என்று எதுவுமே கிடையாது.

ஊடகங்களில் அவ்வப்போது நிறுவனங்களின் அரசாங்கத்துடனான ஏஜென்ஸீக்களுடனான தொடர்பு மற்றும் பதிவு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட, கவர்ச்சியான விளம்பரங்களை நம்ப வேண்டாம். அவை பங்கு பரிவர்த்தனையில் எவ்விதமான மிகைப்படுத்தப்பட்ட மாற்றங்களையும் ஏற்படுத்தி விடாது.

எக்காரணத்தை முன்னிட்டும் உங்களுடைய டிமேட் கணக்கின் காசோலை போன்ற ஸ்லிப்புகள் அடங்கிய புத்தகத்தை முகவர் வசம் ஒப்படைக்காதீர்கள். இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய கவர்ச்சியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். நிறுவனத்தின் கார்பரேட் முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளை நம்பக் கூடாது. நிறுவனம் பற்றிய எந்தவொரு சிறு தகவலையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவே தெரிந்து கொள்ளவும்.

கடைசியாக, உங்களது சக முதலீட்டாள நண்பர்களைப் பார்த்து அப்படியே அவர்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களிலேயே முதலீடு செய்ய வேண்டாம். எல்லாமே உங்களுடைய சுயமாக முடிவாகவே இருக்கட்டும்.

இப்போதைக்கு இவ்வளவுதான். பிழைகள் இருப்பின் பொருத்தருள்க. உங்களுடைய ஆலோசனைகளையும் இன்ன பிற தகவல்களையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

- யதிராஜ்

தொடரும்... ( ஒரு நம்பிக்கை தான் :-)


19 Comments:

மஞ்சள் ஜட்டி said...

//மண்டோனா ஒன்று 5/7/2010//

அது என்ன மண்டோனா ?? செம்மொழி யான பிறகும் எழுத்துப்பிழை இருக்கலாமா??

லெமூரியன்... said...

நல்ல விஷயம்....நேரம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் ஆழமாக விவரிக்கவும்..!

kggouthaman said...

நல்ல ஆரம்பம், எளிய முறையில் சொல்லி இருக்கிறீர்கள் யதிராஜ். நிச்சயம் தொடர வேண்டும். சர்க்கரைக் கம்பெனிகளின் பங்கு விலைகள், கோடையில் குறைந்தும், மழைக் காலத்தில் வானைத் தொடுவதும் ஏன்? ஆடி மாதத்தில் பங்கு சந்தையில் பொதுவாக என்ன மாற்றங்கள் இருக்கும்?

Srikanth Meenakshi said...

//பங்குச்சந்தையில் விளையாடுபவர்//

பங்குச்சந்தை விளையாட்டுக் களன் அல்ல. முதலீட்டுக் களன்.

முதலீட்டாளர் முதலில் முடிவு செய்ய வேண்டிய விஷயம் எவ்வளவு தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்பதாகும். ஒருவர் தனது சேமிப்பில் (வருமானத்தில் இல்லை) ஒரு பத்திலிருந்து இருபது சதம் வரை நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். அதுவும் அவர் ஒரு முப்பத்தி ஐந்து வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில். வயதாக ஆக, இந்தச் சதவிகிதம் குறைய வேண்டும். காரணம், பங்குச்சந்தை முதலீடுகள் (என்னதான் ஆராய்ந்து ஜாதகம் கணித்துச் செய்தாலும்), risk அதிகம் உள்ளவை.

//Commissions//

இந்தியாவில் இரு வகை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன - ஒன்று அன்றே வாங்கி அன்றே விற்கப்படும் பங்குகளுக்கு (day-trading), மற்றது, ஒரு நாள் வாங்கி பல நாட்கள்/மாதங்கள் கழித்து விற்கப்படுபவை (delivery-based). முன்னதில் கட்டணம் மிகக்குறைவு. பின்னதில் சற்று அதிகம். பொதுவாக day-trading கட்டணங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும். ஆனால், ஒரு நாள் வாங்கி அன்று விற்க முடியாமல் போய் விட்டால், இரண்டாவது கட்டணம் தானாக அமலுக்கு வரும். மேலும் day-trading என்பது சூதாட்டத்திற்கு நிகர் தான். ஒரு கம்பெனியின் ஆதார மதிப்பைக் குறித்து கவலைப்படாது, அதன் அந்நாளைய போக்கு எப்படி இருக்கும் என்று ஊகிப்பது. இது அபாயகரமானது, பெரும் நஷ்டத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது. ஆகையால், ஆரம்ப முதலீட்டாளர்கள் delivery-based trading செய்வதே நல்லது. அதற்கான கட்டண விகிதம் என்னவென்று தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நிதிவள சேவை நிறுவனங்கள் உங்களிடம் இருக்கும் பணத்திற்கு அதிகமாக முதலீடு செய்ய அனுமதிக்கும் (margin).
அப்படி அதிகமாக முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வட்டி உண்டு. ஆரம்ப முதலீட்டாளர்கள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருக்கும் பணம் நஷ்டமடைந்தால் அதோடு போயிற்று. கடன் வாங்கி நஷ்டப்பட்டால், கட்டுக்கடங்காமல் நஷ்டமாகும். :-(

வங்கியில் பணத்தை வைத்திருப்பதற்கும், நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் இடைப்பட்ட அளவில் ஒரு வழி இருக்கிறது. அது பற்றிப் பேசுவது சுய விளம்பரமாகக் கருதப்பட வாய்ப்பிருப்பதால் தவிர்க்கிறேன்.

நன்றி,

ஶ்ரீகாந்த்

venkat said...

The information given my Mr. Yathiraj Sampathkumar's quite informative. On the top of it investors are requested, don't get inspire on the stocks to buy or sell from the channels / media. Some of the good research reports available from the stock brokers. Investors can go thro the same and take their own decision. Some of the industries currently recommended is pharma sector and auto and auto anciliary sectors.

Anonymous said...

Really don't understand how Suntv/hindu and all other media outlets suggest buying stocks.
How can they suggest a stock?

Anonymous said...

simple wisdom from some one who has lost money by picking stocks and trying to slowly gain my ground by investing only in bluechip stocks(very rarely) and mainly in index funds regularly.

- Don't pick stocks
- Don't time the market.
- Plan to buy small amounts regularly.
- No one has a clear idea about a stock.
- Any stock can crash (Enron,Citibank,Bearsterns etc)
- Collective risk reduction/spreading is the only simple way to beat it.
- Unless you are lucky or buffet.

-nathan

ரிஷபன்Meena said...

அரிச்சுவடியில் இருந்து ஆரம்பித்திருக்கிறீர்கள். நல்லாருக்கு.

//இந்தப் பங்கு வாங்கினால் நிச்சயமாக லாபம் உண்டு என முகவரோ, அல்லது உங்களது சக முதலீட்டாள நண்பர்களோ அறிவுறுத்தினால், நிச்சயமாக அவற்றை கண்மூடித்தனமாக நம்பி ஏமாற வேண்டாம்.//

முகவர் சொன்னால் நம்ப வேண்டாமென்கிறீர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

சக முதலீட்டாளர்( திறமையான Speculative business செய்யாத) சொன்னால் ஏன் நம்பக் கூடாது.

எல்லா செக்டாரையும் எல்லா ஸ்டாக்குகளையும் பற்றி நாம் எல்லா நேரங்களிலும் அறிந்து வைத்திருக்க முடியாது. வேறு வேலையில் இருப்பவர்கள், பங்கு வர்த்தகத்தில் குழுவாக செயல்படும் போது நல்ல பலனிருக்கத்தான் செய்கிறது.

R. Jagannathan said...

இன்னும் ஒரு எக்ஸ்பர்ட் ஒபீனியன்! எத்தனை கட்டுரைகள் (நாணயம், தினமலர் எட்செட்ரா) படித்தாலும் ஒரு எழவும் புரிவதில்லை. அனானியின் கருத்து ரொம்ப கரெக்ட்! ( - No one has a clear idea about a stock.
- Any stock can crash (Enron,Citibank,Bearsterns etc)
-ஜகன்னாதன்

Anonymous said...

மஞ்சள் ஜட்டி 2
மண்டே என்றாலே ஆங்கிலம்? இதுல எழுத்து பிழையுமா?

kggouthaman said...

பெயர் தெரியாத கம்பெனிகளின் பங்குகளை வாங்குவதைவிட நன்கு தெரிந்த, பிரபலமான, NIFTY இல இடம் பெறுகின்ற கம்பெனிகளின் பங்குகளை, வாங்கும்பொழுது, கடந்த ஒரு வருடத்திற்குள் அது விற்ற குறைந்த பட்ச விலையின் அருகில் இருக்கும் பொழுது வாங்கி, வாங்கிய விலையிலிருந்து 20 அல்லது 25 சதவிகிதம் அதிகம் விலை போகும்பொழுது விற்றுவிடுதல் நல்லது. இதுவும் பல strategy களில் ஒன்று.

அண்ணாமலை..!! said...

ஆரம்ப நிலையிலிருந்து தொடங்கி இருப்பது
நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது.
மிக நன்றிகள் இட்லிவடைக்கும்,
யதிராஜ் அவர்களுக்கும்!

Anonymous said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உருப்படியான பதிவு...ஓய், தொடரட்டும் உமது சேவை.

(உமது ஐபி அட்ரஸை வைத்து உம்மைத் தேடுவதாக தகவல் வந்ததால் சில விஷயாதிகளை தற்போது தொடுவதில்லை போலும்)

Thomas Ruban said...

பங்குச்சந்தை சக்கரவர்த்தி வாரான் பஃபட் பங்குச்சந்தையில் "கற்றது கைமண்ணளவு கல்லாதது உலலகளவு"
என்று சொல்வார்.

நேரம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் விரிவாகவும் எழுதுங்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்.

அலர்ட் ஆறுமுகம் said...

//Anonymous said...
மஞ்சள் ஜட்டி 2
மண்டே என்றாலே ஆங்கிலம்? இதுல எழுத்து பிழையுமா?
//

Anany, Take a look at his post in bold with in quotes. initially idly vaday titled it with mistake which has been corrected...

geeyar said...

அட போங்க சார். சரியாக மார்க்கெட் முடியப்போற டைம்ல தான் ஏதாவது ஒரு வெங்காய அமைச்சர் பெட்ரோல் விலை உயராது என பேட்டி குடுப்பார். அதே மார்க்கெட் முடியுற நேரம்தான் பெட்ரோலை தூக்கி நிப்பாட்டுத அமைச்சர் விலை உயர்த்தியாச்சுன்னு அறிக்கை விடுவார். எல்லாம் புரோக்கர் கையில இருக்கு சார். ஒரு அறிக்கை விட்டா இவ்ளோனு தனி ரேட் சார்.

சொர்க்கம் said...

//அட போங்க சார். சரியாக மார்க்கெட் முடியப்போற டைம்ல தான் ஏதாவது ஒரு வெங்காய அமைச்சர் பெட்ரோல் விலை உயராது என பேட்டி குடுப்பார். அதே மார்க்கெட் முடியுற நேரம்தான் பெட்ரோலை தூக்கி நிப்பாட்டுத அமைச்சர் விலை உயர்த்தியாச்சுன்னு அறிக்கை விடுவார். எல்லாம் புரோக்கர் கையில இருக்கு சார். ஒரு அறிக்கை விட்டா இவ்ளோனு தனி ரேட் சார்.
///

very correct. Also all media (including Finance channels and news papers are manipulated).
For example last month, I sent a mail to a channel with my subject to expose "insider trading" and they don't even took my question to discuss and I know why.
Simple answer is manipulation !!!

சொர்க்கம் said...

//அட போங்க சார். சரியாக மார்க்கெட் முடியப்போற டைம்ல தான் ஏதாவது ஒரு வெங்காய அமைச்சர் பெட்ரோல் விலை உயராது என பேட்டி குடுப்பார். அதே மார்க்கெட் முடியுற நேரம்தான் பெட்ரோலை தூக்கி நிப்பாட்டுத அமைச்சர் விலை உயர்த்தியாச்சுன்னு அறிக்கை விடுவார். எல்லாம் புரோக்கர் கையில இருக்கு சார். ஒரு அறிக்கை விட்டா இவ்ளோனு தனி ரேட் சார்.
///

You are correct. every media and ministers , the entire system is manipulated.

balu said...

uncertain is certain in market carefull