பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 26, 2010

மண்டேனா ஒன்று - 26/7/2010


அடுத்ததாக பங்கு பரிவர்த்தனையில் நீங்கள் முடிவெடுக்க வேண்டியது எம்மாதிரியான சந்தையில் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்பதை. உங்கள் முகவரிடம் நீங்கள் படிவத்தை நிரப்பும் பொழுதே அதற்கான விருப்பத்தைத் தெரிவு செய்து விட வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை National Stock Exchange (Nifty(National Fifty)) என்றும், Bombay Stock Exchange (BSE (Sensex, Sensitivity Index)) என்றும் இரண்டு பெரிய பரிவர்த்தனை மையங்கள் செயல்படுகின்றன. இதில் பம்பாய் பங்குசந்தையில் சுமார் 4925 நிறுவனங்களும், தேசிய பங்குசந்தையான நிஃப்டியில் சுமார் 2000 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய பங்குசந்தையான NSE இந்தியாவினுடைய மிகப்பெரிய பங்குசந்தையாகவும், உலகின் மூன்றாவது பெரிய பங்குசந்தையாகவும் கருதப்படுகிறது. பம்பாய் பங்குசந்தை ஆசியாவின் மிகப்பழமையான பங்குசந்தையாகும். இது 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

பம்பாய் பங்குசந்தையைப் பொருத்தவரை, இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த முதல் பெரிய 30 நிறுவனங்களைத் தெரிவு செய்து, அவற்றின் தர நிர்ணயத்திற்கேற்றவாறு சில புள்ளிகள் கொடுக்கப்பட்டு, அவற்றின் சராசரி மதிப்பானது "ஸென்ஸெக்ஸ்" குறியீட்டு மதிப்பையும், அவற்றின் ஏற்ற இறக்கத்தையும் நிர்ணயம் செய்கின்றது. நிஃப்டிக்கும் இதே போன்றுதான். நிஃப்டியில் இந்தியாவின் முதல் பெரிய ஐம்பது நிறுவனங்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்து பங்கு வர்த்தக சூழல் மாறுபடும். ஆனால் இந்நிறுவனங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குரியது. இந்நிறுவனங்களில் செயல்பாடுகள் தவிர்த்து, சந்தை நிலவரங்களைப் வேறு சில காரணிகளும் நிர்ணயம் செய்கின்றன. இந்திய பொருளாதாரம், உலக சந்தைகளின் வர்த்தக நிலவரம் போன்றவையும் இந்திய பங்கு வர்த்தக சூழலை நிர்ணயிக்கின்றன.

அடுத்தகட்டமாக, எம்மாதிரியான நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால் லாபகரமாக இருக்கும்? அந்நிறுவனங்களை எவ்வாறு தெரிவு செய்வது என்பது பங்குவர்த்தகத்தில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விஷயம். அது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக நாம் முதலீடு அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற நிறுவனத்தின் வர்த்தகம், மற்றும் அவற்றினுடைய பொருளாதார நடவடிக்கைகள் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் தேசிய பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள சுமார் இரண்டாயிரம் நிறுவனங்களையும், பம்பாய் பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள சுமார் பனிரெண்டாயிரம் நிறுவனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு பொறுமை, நேரம், சக்தி இவையெல்லாம் இருக்கிறதா? நிச்சயமாகக் கிடையாது. அப்படியே முயன்றாலும் குழப்பம்தான் மிஞ்சும். சாதாரணமாக சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் சந்தை முதலீடு சில லட்சங்களிலிருந்து, பல லட்சம் கோடிகள் வரை வேறுபடும். அவற்றின் பங்கு விலைகள் ஐம்பது பைசாவிலிருது, சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை அதிகபட்சமாக செல்லும். இவற்றில் சரியான நிறுவனங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதற்கான சில அடிப்படை வழிகளை இப்போது பார்ப்போம்.

* 250

கோடி ரூபாய் சந்தை முதலீடு :

முதலில் நாம் வாங்க எத்தனிக்கின்ற நிறுவனத்தின் சந்தை முதலீடு குறைந்தபட்சம் 250 கோடி ரூபாயாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேசிய பங்குசந்தையில் இவ்வாறான நிறுவனங்கள் சுமார் 500 இடம் பெற்றிருக்கின்றன. பொதுவாக குறைந்த சந்தை முதலீட்டைக் கொண்ட நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டாளர்களுகாக அதிகமாக எவ்விதத்திலும் மெனக்கெடாது.

*

மொத்த விற்பனை ( Total Volume )

அடுத்ததாக, நாம் முதலீடு/பரிவர்த்தனை செய்யவிருக்கின்ற நிறுவனப் பங்கின் அன்றாட மொத்த விற்பனை நிலவரம் (வாங்குதல், விற்றல் இரண்டையும் சேர்த்து) எப்படி இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம். குறைந்தபட்சம் சில ஆயிரம் பங்குகளாவது விற்பனை ஆகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். மிகக் குறைந்த அளவே விற்பனை ஆகும் பங்குகளை வாங்கினால், சந்தை சரிவு முகமாக இருக்கும் போது நஷ்டம் தவிர்க்க இயலாததாகிவிடும். தவிர இந்நிறுவனப் பங்குகளின் ஏற்ற இறக்கம் இரண்டுமே சந்தை நிலவரத்திற்குத் தொடர்பில்லாமல் அபரிமிதமாக இருக்கும். அதனால் இது போன்ற பங்குகளைத் தவிர்த்து விடுவது நல்லது.

*

நிறுவனத்தின் வர்த்தக நடைமுறை மற்றும் லாபங்கள்

பல நிறுவனங்கள், தங்களது ஆரம்ப கட்ட முதலீட்டுத் தேவைகளை தங்களது பங்குகளை வெளியிடுவதன் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்ளும். இதனால் ஏற்படும் சுமைகளை பின்னர் செய்யப்படும் வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக ஈடுகட்டிக் கொள்ளலாம் என்பது அந்நிறுவனங்களின் வியாபார யுக்தி. இது மேம்போக்காக கவர்ச்சியான யுக்தியாகத் தெரிந்தாலும், இதில் அதிக ரிஸ்க் அடங்கியுள்ளது. ஆரம்பகட்ட முதலீட்டுத் தேவைகள் என்பது தொழிற்சாலைகளை நிறுவுவது, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வது மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்றவை ஆகும். எப்போதுமே புதிதாகத் துவங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் எழ வாய்ப்புகள் அதிகம். இதனால் செலவீனங்கள் அதிகரிக்கும். இதன் தாக்கம் சந்தை இறங்குமுகமாக இருக்கும்போது நிறுவனப் பங்கு விலைகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற நிறுவனங்களை ஒதுக்கி விடுவது நலம்.

*

பணப் புழக்கம்

வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள், தங்களது பணப்புழக்கம் பற்றிய தகவல்களை வெளியிடாமல், லாபத்தை மட்டும் முன்னிறுத்திக் காண்பிக்கும். இவை பெரும்பாலும் விரிவாக்க பணப்புழக்கம் மற்றும் லாபம் ஆகியவை இரண்டும் சரி விகிதமாக இருந்தால் பங்குகளின் மதிப்பில் ஏற்றம் ஏற்படும். ஆனால் இரண்டிலும் வேறுபாடுகள் தோன்றினால் பங்குதாரர்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

மேற்கூறியவையெல்லாமே அடிப்படை விஷயங்கள்தான். இன்னமும் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் போகப் போக பார்க்கலாம்.

(...தொடரும்)

8 Comments:

kggouthaman said...

பங்கு சந்தை பரிவர்த்தனைகள் எல்லாமே ஆங்கிலத்தில் நடக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கவனிக்கவேண்டிய அம்சங்களாகிய கடைசி நான்கு விவரங்களின் முக்கிய வார்த்தைகளின் ஆங்கிலப் பதங்களை, அடைப்புக் குறிக்குள் போட்டிருந்தால், புரிந்துகொள்வது இன்னும் சுலபமாக இருக்கும். மற்றபடி, விவரங்களை அருமையாகக் கூறி இருக்கின்றீர்கள் நன்றி யதிராஜ் சம்பத்குமார்.

யதிராஜ சம்பத் குமார் said...

ஆலோசனைக்கு நன்றி கெளதமன் சார். அடுத்தமுறையிலிருந்து அவ்வாறே செய்கிறேன்.

tamildigitalcinema said...
This comment has been removed by a blog administrator.
SAN said...

IV,
Any post on the following news story in New Indian Express regarding IAS officer Uma Shanker where he has openly complained against MuKa and maran brothers.
Why there is no coverage from the Tamil press?

http://expressbuzz.com/states/tamilnadu/%E2%80%98karunanidhi-family-and-government-harassing-me%E2%80%99/193176.html

Anonymous said...

சன்டேன்னா இரண்டிலிருந்து மண்டேன்னா ஒன்று என்றாகி ட்யூஸ் டேன்னா ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது இட்லிவடை! பாவம்!

IdlyVadai said...

//சன்டேன்னா இரண்டிலிருந்து மண்டேன்னா ஒன்று என்றாகி ட்யூஸ் டேன்னா ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது இட்லிவடை! பாவம்!//

டியூச்டேன்னா உங்க கமெண்ட் :-)

Shakthi said...

Good article... Much helpful for de beginners like me..... Sometimes Idlyvadai also useful??? :)

R.Gopi said...

// IdlyVadai said...
//சன்டேன்னா இரண்டிலிருந்து மண்டேன்னா ஒன்று என்றாகி ட்யூஸ் டேன்னா ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது இட்லிவடை! பாவம்!//

டியூச்டேன்னா உங்க கமெண்ட் :-)//

*********

அதிரடிக்காரன் இட்லி இட்லி இட்லி தான்..

ஏன்யா அனானி.... ஏன்யா, வந்தோமா, ஏதாவது இருந்தா படிச்சோமா, போனோமான்னு இல்லாம, இது ஒனக்கு தேவையா?