பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 19, 2010

மண்டேனா ஒன்று - 19/7/2010


மண்டேனா ஒன்று கட்டுரையின் தொடர்ச்சி......

சுதந்திரம் என்பது அனைவராலும் எப்படி வேண்டுமாயினும் பயன்படுத்தப்படக்கூடிய உரிமம் அல்ல, ஆனால் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு தகுந்தாற்போல் மட்டும் வளைக்கப்படக் கூடியதா? "காந்தியின் படுகொலை காந்தியவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விடவில்லை" என்று கூறுகிறார் மஹராஷ்டிர துணை முதல்வர் கோபிநாத் முண்டே, மேலும் தொடர்கையில், " இந்நாடகத்திற்கான தடையினால் கோட்ஸேவினுடைய கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாது" என்று கூறுகிறார். ஆனால் இவருடையே இதே விதமான வாதம் இவருடைய கட்சியினுடைய எம்.எஃப்.ஹுஸேன் மற்றும் சில பாப் பாடகர்களின் மீதான எதிர்நிலைபாடுகளுடன் பொருந்திப் போகுமா? உறுதியான நிலைபாடென்பது எப்பொழுதுமே அரசியல் வசதிகளுக்காக மாற்றிக் கொள்ளக்கூடியதல்ல. மஹராஷ்டிர சிவ சேனா மற்றும் பாஜக ஆகியவை இந்நாடகத்தின் மீதான வற்புறுத்தப்பட்ட தடை நடவடிக்கையினால் அதிருப்தியுற்றுள்ளது புரிந்துகொள்ளக் கூடியதே. பாஜக முகாமில் உள்ள ஒரு சாரார், வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் தனது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் விதமாகச் செயல்படவில்லை என உறுதியாக நம்புகின்றனர். இது, எவ்வாறாயினும், ஒரு தீவிரமான கண்ணோட்டம். எனினும் கட்சித் தலைமை இந்த கோட்ஸே தொடர்பான சர்ச்சையை, "காந்தியைக் கொன்றவர்கள்" என்று தங்கள் மீது இருக்கும் ஒருவிதமான பழியிலிருந்து விடுபடுவதற்குண்டான வாய்ப்பாகவே கருதுகின்றனர். அரசியல் அரங்கில் தனக்குரியதான மரியாதையைத் தேடும் படலத்திலிருக்கும் பாஜக, கோட்ஸேவின் கொள்கைகளுடன் தங்களுக்கிருக்கும் தொடர்புச் சங்கிலியின் கடைசிக் கண்ணியை அறுத்தெறியக் கூட தயங்காது. சங் பரிவாரின் தலைமையிடத்தில் காந்திக்கென்று ஒரு இடம் கொடுத்த பிறகு, பாஜக தன்னுடைய பழைய கொள்கைகளுக்குத் திரும்புவது சந்தேகம்தான்.

எந்நிலையிலும், கோட்ஸேவினுடைய சிக்கலான கொள்கைகளைப் புரிந்து கொள்வது கடினம். ஜான் எஃப் கென்னடியையோ அல்லது மார்டின் லூதர் கிங்கையோ கொலை செய்த கொலையாளிகளைப் போன்று மாறுபட்ட மனநிலையைக் கொண்டவரல்ல கோட்ஸே. கோட்ஸே முறையாகப் படித்துப் பட்டம் பெற்றவரல்லராயினும், எது சரி, எது தவறு என முழுமையாகவும், மிகத்திறமையாகவும் வாதிடக் கூடிய அளவிற்கு வன்மையான மராத்தியப் புலமை கொண்டவர். "காந்தியினுடைய கொலை கூலிக்காக செய்யப்பட்ட ஒப்பந்தக் கொலையல்ல" என்று கூறுகிறார் விக்ரம் சாவர்க்கர், இவர் முன்னாள் ஹிந்து மஹாசபாவினுடைய தலைவர். தனிப்பட்ட முறையில் கோட்ஸேவையும், ஆப்தேவையும் நன்கறிந்தவர். " கோட்ஸே கற்றறிந்த மனிதர், தவிர அவருடைய கொலைச்செயலுக்குப் பின்னால் கொள்கை ரீதியான காரணங்கள் இருந்தன" என்கிறார்.

காந்தியினுடைய கொலைக்குப் பின்னாலிருந்த தன்னுடைய கொள்கை ரீதியான காரணங்களை கோட்ஸே தன்னுடைய விரிவான நீதிமன்ற வாதத்தில் விளக்கியுள்ளார். சமகால அரசியல் ரீதியிலான, தத்துவார்த்த ரீதியிலான தன்னுடைய அவ்வாதத்தில், போற்றுதலுக்குரியதாகவும், வணங்குதலுக்குரியதாகவும் உள்ள தங்களது தேசத்தினைத் துண்டாட காந்திக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறியிருக்கிறார். கோட்ஸேவின் நீதிமன்ற வாதம் அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒன்றாக அமைந்திருந்தது. நீதிபதிகளே அசரும் அளவிற்கு அவருடைய வாதம் அமைந்திருந்தது. மூன்று பெஞ்சுகளை உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்தானத்திலிருந்த ஜி.டி.கோஸ்லா, பின்னாளில் எழுதும்போது, "கோட்ஸேவின் வாதத்தைக் கேட்ட நீதிமன்றத்திலிருந்த பெண்களனைவரும் கண்ணீர் சிந்தி அழுதனர்" என்று குறிப்பிட்டிருந்தார். கோட்ஸேவின் வாதத்தினைக் கேட்ட பொதுமக்களை ஜூரிகளாக நியமித்திருந்தால், தீர்ப்பு கோட்ஸேவிற்குச் சாதகமாக அமைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தன்னுடைய சகோதரரைப் பற்றிய வாத பிரதிவாதங்களை அரசாங்கம் முடக்க முயல்வதற்கான காரணங்களை ஆராய்கிறார் கோபால் கோட்ஸே. "உண்மைகள் வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை" என்று கூறுகிறார்.

கோட்ஸே, சட்டத்திற்குப் புறம்பான தனது செயலிலிருந்த நீதியை நிலைநாட்டுவதற்காக ஆற்றிய உணர்வுப் பூர்வமான உரைதான் அரசாங்கத்தின் பயத்திற்கு ஆணிவேராக அமைந்தது. 1950 களில், இன்னமும் குழந்தைப்பருவத்திலேயே இருந்த இந்திய ஜனநாயகத்திற்கு அது ஒரு நியாயமான பயம்தான். பிரிவினையும், அதைத் தொடர்ந்த கொடூரங்களும் மக்கள் மனங்களில் பசுமையாகவே இருந்ததுவும், கோட்ஸேவினுடைய செய்தி அதனை இன்னமும் உசுப்பி விடுவதற்கு ஹேதுவாக இருந்ததுவுமே இதற்குக் காரணம். ஆனால் இது ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய நிலை. இப்பொழுது பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் மறுகுடியமர்த்தப்பட்டு, மிகவும் வசதியாகவே வாழ்கின்றனர். கோட்ஸே பயந்ததுபோல் தேசிய உணர்வு பண்டமாற்று செய்யப்பட்டுவிடவில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஹிந்துத்துவா கொள்கைகள் கூட இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கோட்ஸே நீதியின் முன் நிறுத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டார். இப்பொழுது அவர் வரலாற்றுக்குச் சொந்தமானவர்.

கோட்ஸேவினுடைய கூட்டாளி மதன்லால் பாஹ்வா, காந்தி கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரை அவருடைய ப்ரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்து, தோல்வியடைந்த போதுகூட, காந்தி மதன்லால் பாஹ்வாவிற்காக மன்னிப்பை யாசித்து, அவரையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றார். பாஹ்வா பகவத் கீதையினால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட காந்தி மேலும் கூறுகையில், " தங்கள் கருத்திலிருந்து மாறுபட்டவர்கள் தீயவர்களாகத்தானிருக்க வேண்டும் என்ற நினைப்பை இளைய சமுதாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

மேற்கூறிய இச்செய்தி, கடந்த காலத்தை வைத்துக் கால்பந்தாட்டம் ஆட நினைக்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.

புனேவில் கோட்ஸேவையும், ஆப்தேவையும் ஆதர்ஸமாக எண்ணும் பலர் இன்னமும் இருக்கின்றனர். மஹாத்மாவைக் கொன்றவர்களுடைய வம்சாவளிகளுக்கு, காந்தியைக் கொன்ற தங்களது முன்னோர்களின் செயலை உயர்த்திப் பிடிப்பதை ஒரு பெருமையாகவே கருதுகின்றனர்.

அம்பாலா சிறைச்சாலையில், மரணத்தை ஏற்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்னதாக, தனது உயிலை தனது தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்கின்ற மாஜிஸ்ட்ரேட் மூலமாக உறுதி செய்து கொண்டார். அவ்வுயிலில் கோட்ஸே தனது மூத்த சகோதரருக்கு சில விஷயங்களைப் பணித்திருந்தார். " அகண்ட ஹிந்துஸ்தானத்தின் மண்ணில் என்று புனிதமான சிந்து நதி சுதந்திரமாகப் பாய்கிறதோ, அன்று தனது சாம்பல் அதில் கரைக்கப்பட வேண்டும், இதற்கு எத்தனை காலமானாலும் அது பொருட்டல்ல. அதுவரையிலும் தனது சாம்பலைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிதையூட்டப்பட்ட பிறகு, நாராயண் ஆப்தே மற்றும் கோட்ஸேவினுடைய அஸ்தி அவர்களுடைய குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்படவில்லை. சிறை அதிகாரிகள் அவர்களுடைய சாம்பல் குடுவைகளை ரயில்வே பாலத்திற்கடியிலுள்ள காகர் நதியில் வீசியெறிந்து விட்டனர். இவ்விஷயத்தை அந்த அதிகாரிகளுள் ஒருவர் கடைத்தெருவில் தற்செயலாய் ஒருவரிடம் சொல்ல, அந்த நபர் அதனை இந்திராசென் ஷர்மா என்ற ஹிந்து மஹாசபா ஊழியரிடம் தெரிவித்தார். உடனே இந்திராசென் ஷர்மாவும், மற்றுமிரு ஹிந்து மஹாசபா ஊழியர்களும் அவ்விடத்தை அடைந்து, அதனை மீட்டனர். " அந்த நதி வெறும் ஆறு அங்குல ஆழமே உடையது" என்று கூறும் இந்திராசென் ஷர்மா, தற்போது ஓய்வு பெற்று தில்லியில் வசித்து வருகிறார். எப்படியோ முயன்று பாதி சாம்பலை மீட்டு விட்டோம் என்று மேலும் தொடர்ந்தார். மீட்டெடுக்கப்பட்ட சாம்பல் உள்ளூர் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஓம் ப்ரகாஷ் கோஹல் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் மூலமாக நாசிக்கிலுள்ள டாக்டர். எல்.வி.பரஞ்ச்பே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவர் மூலமாக அது 1965 இல் கோபால் கோட்ஸே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அது இன்றளவிலும் அவரது இல்லத்தில் வெள்ளிக் குடுவையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. கோட்ஸேவினுடைய கனவு நிறைவேறுவதற்காக அவரது அஸ்தி காத்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 15 அன்றும் கோட்ஸே மற்றும் ஆப்தேவுடைய நினைவு தினம் புனேவில் அனுசரிக்கப்படும். அகண்ட பாரத வரைபடத்திற்கு நடுவே கோட்ஸே மற்றும் ஆப்தே ஆகியோரது படங்கள் பதிக்கப்பட்டு, அதற்கு மாலையிடப்பட்டு, அவர்கள் இறந்து கடந்த வருடங்களின் எண்ணிக்கையை நினைவுறும் பொருட்டு அத்தனை தீபங்கள் ஏற்றப்படும். இறுதியாக, அங்கு கூடியுள்ளவர்கள் கூட்டாக இணைந்து கோட்ஸேவினுடைய கனவான அஹண்ட பாரதத்தை உருவாக்கப் பாடுபடும் பொருட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர். ஜெருசலேமை மீட்க யூதர்களுக்கு 1600 ஆண்டுகள் ஆனது. ஒவ்வொரு ஆண்டும், அடுத்த ஆண்டு ஜெருசலேமை அடைவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வர், என்று கூறுகிறார் கோபால் கோட்ஸே.

இந்த நினைவுக் கூட்டத்திற்கு கூடும் மக்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், சமீப காலங்களில் இம்மாதிரியான கோட்ஸே நினைவுக் கூட்டங்கள் இந்தியா முழுவதிலும் அதிகரித்துள்ளன. இப்பணியில் ஆழ்ந்துள்ளவர்களுக்கு கோட்ஸே ஆதர்ஸ புருஷராக விளங்குகிறார். "ஹிந்து மஹாசபாவினுடைய அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட எங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினரைப் பொருத்தவரை அன்று தேச விரோத நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காந்தி இம்மரணத்திற்குத் தகுதியானவர்தான்." என்று கூறுகிறார் வீர் சாவர்க்கரின் மருமகனான விக்ரம் சாவர்க்கர். இந்த சமாஜத்தின் ஒரு பகுதியினர் நாதுராமுடைய செயலின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர் என்று கூறுகிறார் கோபால் கோட்ஸே. கோட்ஸேவின் மீது மக்களுக்கு அனுதாபம் இருந்தது, ஆனால் அரசாங்கத்திற்கு பயந்தனர்.

மக்களின் பயம் புரிந்து கொள்ளக் கூடியதே. காந்தியின் கொலைக்குப் பிறகு கோபம் கொண்ட காங்கிரஸார் புனேவிலுள்ள பிராமண சமூகத்தின் பக்கம் திருப்பி விடப்பட்டனர். புனேவிலுள்ள பிராமண சமூகத்தின் மீது கலவரத்தில் ஈடுபட்டனர். சில வாரங்களுக்கு புனேவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபாவுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். " அது மிகவும் கஷ்டமான காலகட்டம்" என்று நினைவு கூர்கிறார் சிந்து கோட்ஸே, கோபாலினுடைய மனைவி. எங்கள் வீடு சூறையாடப்பட்டு, நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். சிந்து கோட்ஸேவினுடைய பெயரில் இருக்கும் கோட்ஸேவைக் கூட நீக்கி விடும்படி சிந்துவினுடைய நலம் விரும்பிகள் அறிவுறுத்தினர். ஆனால் சிந்து மறுத்துவிட்டார். "நான் கோட்ஸே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறேன், நான் இறந்த பின்னும் கோட்ஸேவாகவே இருப்பேன்". நாதுராமினுடைய தமையனின் மனைவி என்பதில் பெருமிதமடைகிறேன், என்று கூறுகிறார் சிந்து கோட்ஸே.

என் மீது பலதரப்பிலிருந்தும் தொடுக்கப்பட்ட விமர்சனங்களினால், எனக்கு என் செயலின் நீதியின் மீதிருந்த நம்பிக்கையைத் தகர்த்து விட முடியவில்லை, என்று மேல்முறையீட்டு நீதிமன்ற வாதத்தில் குறிப்பிட்டார் நாதுராம் கோட்ஸே.

தொடர்ச்சியாக புகைக்கும் பழக்கமுடைய நாராயண் தத்தாத்ரேய ஆப்தேயை மணந்து கொண்ட போது ஜம்புதாய் ஆப்தேவிற்கு வெறும் 14 வயதுதான். தனது 31 ஆவது வயதிலேயே விதந்துவாக்கப்பட்டுவிட்ட அவர். அதற்கு அடுத்த ஆண்டே தனது ஒரே குழந்தையையும் பறிகொடுத்து விட்டார். தற்போது தனது தந்தைக்குச் சொந்தமான பூர்வீக வீட்டின் மாடிப் பகுதியில் வசித்து வருகிறார். கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு பழைய கடிகாரம்தான் அவருடைய ஒரே விலையுயர்ந்த உடைமை. அவரது கணவரை நினைவு படுத்தும் விதமாக அவர் வைத்திருப்பது, ஆப்தேயின் பழைய புகைப்படமும், அவர் கட்டிய மங்கல சூத்திரமும்தான் (தாலி). ஆப்தே தான் இறந்தாலும், தன்னை ஒரு விதவையாக வாழக்கூடாது என்று அறிவுறுத்தியிருப்பதால், அதனை இன்னமும் அணிந்திருப்பதாகச் சொல்கிறார். அரசியலிலிருந்து எப்போதும் விலகியே இருக்கும் ஜம்புதாய் ஆப்தேவிற்கு, காந்தியின் கொலையில் தன்னுடைய கணவரின் பங்கு அவர் பம்பாயில் கைது செய்யப்பட்ட பிறகுதான் தெரியும். அதனால் நீங்கள் கோபமடைந்தீர்களா? என்று கேட்டதற்கு, எதற்காக கோபமடைய வேண்டும்? என் கணவர் தேசத்திற்காக தன் உயிரையே அற்பணித்திருக்கிறார். இது தியாகம். எதற்காக வருத்தம்? என்று வினவுகிறார்.

1940 களில் புனேவில் கோட்ஸே மிகவும் பிரபல்யமான நபர். நாராயண் ஆப்தேவினுடைய தந்தை மிகவும் மதிக்கப்பட்ட கல்வியாளர். நகரின் மிகப்பழமையான பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காந்தியினுடைய கொலையில் இவர்களுடைய பங்கு இவர்கள் சார்ந்த சமூகத்தை வேண்டுமானால் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம், ஆனால் அச்சமூகம் அதில் தொடர்புடைய இவர்களுடைய குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விடவில்லை. கோபால் கோட்ஸே சிறையிலிருந்த போது சிந்து கோட்ஸே ஒரு சிறிய பொறியியல் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஜம்புதாய் ஆப்தே ஒரு நர்சரி பள்ளி ஆசிரியையாக ஓய்வு பெற்றிருந்தார். கோபால் கோட்ஸேவின் குழந்தைகள் என்பதால் எங்களது குழந்தைகள் பள்ளியில் தனிமைப்படுத்தப்படவில்லை. போதிக்கும் சமூகத்தினர் மிகுந்த புரிதலுடன் இருந்தனர். ஜம்புதாயும் அவ்வாறே கூறினார். எங்கள் சமூகம் எங்களுக்கு மிக்க ஆதரவாக இருந்தது.

(முற்றும்)

22 Comments:

Anonymous said...

அடுத்த இடுகையாக ‘பிரபாகரன் ராஜீவிற்கு கொடுத்த தண்டனை’ பற்றி கொளத்தூர் மணியின் கட்டுரை போடவும்.

யதிராஜ சம்பத் குமார் said...

அனானி:

திருமா காங்கிரஸுடன் கூட்டணி கண்டு பிரபாகரனை ஒழிக்கச் செய்த உதவியைப் பற்றி வேண்டுமாயின் ஒரு தனிப் பதிவிடலாம்.

Anonymous said...

Prabhakaran and Godse cannot be compared. Godse did not run away nor deny his killing Mahatma Gandhi. Neither LTTE nor Prabhakaran at any point of time admitted their killing of Rajiv Gandhi. Further, Prabhakaran was a party to the Indo-Srilanka agreement. He was trained and nurtured by India. His act is an act of Undaveetku droham. Godse was misguided. Mahatma Gandhi did not speak about the Muslim atrocities during partition. Millions of Hindus lost their houses and got killed. Godse and many other Hindus at that time thought that Gandhi was not doing justice to the Hindus. He admitted openly that he killed Gandhi and was proud of it. He never asked for mercy whereas Prabhakaran to his end denied his role in killing Rajiv and was bending backwards to get India's help in the final stages of his war. Prabhakaran was a terrorist and an opportunist who can't be compared with Godse. The post is about freedom to publish even undesirable matters and allow a debate and not about justification of Gandhi's murder. Had Prabhakaran made a statement detailing his reasons for killing Rajiv Gandhi the same must also be published. M.F.Hussain cannot be drawn as a parallel here since he was a great hypocrat. He did not choose to draw Prophet Mohammed or Virgin Marry. He was bold enough only to draw Hindu Goddesses. His artistic mind cannot restrct itself only to Hinduism. Being a Muslim his imagination must have been ripe and fertile with Muslim thoughts. He was aware that he will be killed the moment he draws anything about Prophet Mohammed. He was a coward and chose Hindu Gods because he knows that India is full of psuedo secularists who will protect him. Had he been universal in his paintings covering all religions everybody would have supported him. No artist who is proud of his art or convinced of his works will run away.

Anonymous said...

ஆளப் பிறந்தவர் பெயரில்லாமல் நடமாடலாமா ?

Anonymous said...

Idlyvadai can we expect next article about "Amaithu pura" auto shankar, Thiyaga semmal Veerapan, etc etc....

Anonymous said...

//அகண்ட ஹிந்துஸ்தானத்தின் மண்ணில் என்று புனிதமான சிந்து நதி சுதந்திரமாகப் பாய்கிறதோ, அன்று தனது சாம்பல் அதில் கரைக்கப்பட வேண்டும், இதற்கு எத்தனை காலமானாலும் அது பொருட்டல்ல. அதுவரையிலும் தனது சாம்பலைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்//

What a man…!

raghavendran said...

Godse's Ideology and belief cannot be less evaluated with gandhiji's belief's and ideologies.

Today's generation only knows Rahul khan ghandy's and Antanio maino

Anonymous said...

SOME OF THE ANONYMOUS COMMENTS ARE REALLY FUNNY. THE FIRST AND FIFTH ONE ARE REALLY GOOD. I WILL ADD SOME MORE - KULLA SEKAR (TRIPLICANE),VEERAMANI(AYOTHI KUPPAM)....

முகமூடி said...

யதி அருமையான கட்டுரை. நல்ல அலசல். ஒரு முற்றிலும் புதிய கோணம்.

Anonymous said...

"Prabhakaran and Godse cannot be compared. Godse did not run away nor deny his killing Mahatma Gandhi."
-- why did he had muslim name in his hand?. Every one can tell one story after committed sucide.

rk said...

The only mistake Godse did was leaving the killing of Gandhi too late. Had he done it even 5 years earlier,country called Pakistan would not have emerged. India would have been spared all these border disputes, Kasmir problems , etc.Still, hats off to a true patriot.
Comparing him to terrorist Prabhakaran is an insult to Godse's memory.

Muthu said...

யதிராஜ், நீங்கள் கோட்சேவுக்கு ஆதரவாளர் மற்றும் அவரை ஹீரோவாக நினைத்தால் கீழே உள்ளவற்றையும் நீங்கள் ஒத்து கொள்ள வேண்டும்.
1 ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் எல்லோரும் நல்லவர்கள், அவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டதால் தான் இவ்வாறு செய்கிறார்கள். அப்போ கசாப் கூட நல்லவன்தான் !!
2 பின் லேடன் கூட ரொம்ப நல்லவன்...ஏன் எல்லா தீவிரவாதியும் நல்லவங்கதான்!!
ஒரே தப்பை இந்துக்களும் முஸ்லிம்கள் செய்யும் போது உங்கள் இரு வேறுபட்ட கருத்துக்கள் ரொம்ப நகைச்சுவையாக இருக்கிறது. உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆதாயம் இருக்கும போது தவறுகள் மன்னிக்க படுகின்றன!! உங்களின் கட்டுரை மிக அழுத்தமாக ஒரு விஷயத்தை சொல்லுகிறது.. 'இந்து தீவிரவாதம்' தான் தீவிரவாதத்தின் முன்னோடி!
//" கோட்ஸே கற்றறிந்த மனிதர், தவிர அவருடைய கொலைச்செயலுக்குப் பின்னால் கொள்கை ரீதியான காரணங்கள் இருந்தன"// இதே இழவு கொள்கை காரணங்களால் தான் எல்லா தீவிரவாதிகளும் உருவாக்க படுகிறார்கள்.
//"கோட்ஸேவின் வாதத்தைக் கேட்ட நீதிமன்றத்திலிருந்த பெண்களனைவரும் கண்ணீர் சிந்தி அழுதனர்"//
ஆட்டோ சங்கருக்கு கூட அவருடைய சொந்த காரர்கள் யாரோ கண்ணீர் விட்டிருப்பார்கள்...இது என்ன பெரிய விஷயமா??
//புனேவில் கோட்ஸேவையும், ஆப்தேவையும் ஆதர்ஸமாக எண்ணும் பலர் இன்னமும் இருக்கின்றனர்//
இப்போ புரியுதா இன்னும் இருக்கிறார்கள்???!! (புனேயில் மட்டுமா??)
//அகண்ட ஹிந்துஸ்தானத்தின் மண்ணில் என்று புனிதமான சிந்து நதி சுதந்திரமாகப் பாய்கிறதோ, அன்று தனது சாம்பல் அதில் கரைக்கப்பட வேண்டும்//.. அவரோட ஆசையும் நிறைவேற போறதில்லை..சாம்பலை கரைக்கவும் போறதில்லை!! நல்லவேளை நைல் நதின்னு சொல்லாமல் விட்டார்.
//ஜெருசலேமை மீட்க யூதர்களுக்கு 1600 ஆண்டுகள் ஆனது. ஒவ்வொரு ஆண்டும், அடுத்த ஆண்டு ஜெருசலேமை அடைவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வர், என்று கூறுகிறார் கோபால் கோட்ஸே//
யூதர்கள் போல் ஹிந்துக்களும் இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்று அர்த்தம்!! (இதைதான் சில ஹிந்துக்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள்)

நல்ல வேளை யதிராஜ் இட்லிவடை கூட்டணி கோட்சேவுக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் நடத்த வில்லை.. அந்த வகையில் நாமெல்லாம் பாக்கியசாலி!!

kggouthaman said...

படத்துல இருக்கறது யாருங்க? பார்த்தா ராஜ்நாத் சிங் மாதிரி இருக்குது?

rawanan said...

Good one Muthu

Anonymous said...

Its a fantastic article. Yathiraj , if possible could you please 'post' the speech made by the Godse in court.

I am not against gandhi at the same time the 'post' is also not.We have been brought up reading good things by these personalities and not ready to even question the other side. Even in gandhis biography by his great grandson, an affair by gandhi has been highlighted. But nobody doesnt even ready to face the truth. Jus recently Modi said, What nehru has done to make his bday as childrens day?..its absolutely right. He likes kid. agreed but the photographs of Nehru with kids are royal heirs. Children of royal family. Even there is a story of Nehru and Mrs mountbaten..? NObody questions history. coz history has been rewritten cautiously in our country.

you cannot compare godse and veerappan/osama/Autoshankar.

ppl emotionally shdnot respond to this post. Veerappan is a smugler with the blessings of both the karnataka and Tamilnad govt. both the govts groomed him. Osama groomed by US and now reaping the benefits. Osama is against the US ideologies. BTW JIHAD is another Shamefulthing which he follows.Killing the innocents to mark his agitation. AShanker is a rapist. Its a shame if we compare all three with Godse.


***** Citizen ****

kggouthaman said...

கொல்லுதல் என்பது எந்தக் காலத்திலும் சரியான ஒரு செயல் அல்ல, எந்தப் பிரச்னைக்கும் தீர்வும் அல்ல. (நீதிமன்றத் தீர்ப்பாக அளிக்கப்படுகிற தண்டனைகள் நீங்கலாக) ஆனால், கொன்றவர், ஏன் கொன்றார் என்பதற்கு கூறுகின்ற வாதத்தைத் தெரிந்துகொள்வதில் தவறு இல்லை. அதில் உள்ள நியாய அநியாயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். The other side of the coin என்கிற வகையில், இந்தக் கட்டுரை சரியானதே என்பது என் அபிப்பிராயம்.

வழிப்போக்கன் said...

முகப்புப் படம் கோட்சேவின் படம்தானா?வீர சாவர்காரின் இளவயது படம் என்று நினைக்கிறேன்.
வழிப்போக்கன்

செல்வா said...

முத்து சொல்வது சரிதான். வன்முறையால் சாதிப்பது நிலையாக இருப்பதில்லை.
மேலும் இந்தியா பாகிஸ்தான் பிரிந்தது சரியே என்று எண்ணுகின்றேன். இன்னும் சொல்லப்போனால் காஷ்மீரை சரியாக பிரிக்காதாதல்தான் நாம் இன்றும் பல உயிர்களை இழந்து கொண்டு இருகின்றோம். ஒற்றுமையாய் இருக்க இயலாதவர்கள் பிரிவதுதான் நல்லது. நம்மை விட்டு பிரிந்து சென்றதால் நம்மை விட அவர்களக்குத்தான் நட்டம். உண்மையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் பிரச்சனைகள் இல்லாதிருந்தால் நாம் இன்னும் முன்னேறியிருப்போம்.

இனிய தமிழ் said...

நல்ல கட்டுரை..நல்ல அலசல்...

Muthu said...

கட்டுரையும் சரியானது அல்ல, படமும் சரியானது அல்ல!

Muthu said...

கோட்சேவோட போட்டோ எதுன்னே தெரியாம இந்த கட்டுரை எழுதிய யதிராஜ் மற்றும் அதை வெளியிட்ட இட்லிவடை ரெண்டு பேரும்தான் இந்த வாரத்தின் தலை சிறந்த 'கொ.ப.செ'

snkm said...

இட்லிவடைக்கும், யதிராஜசம்பத்குமார் அவர்களுக்கும் நன்றி! பாரதத்தின் பெருமையை அனைவரும் உணர வேண்டும்!