பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 04, 2010

Well Done Abba - விமர்சனம்

வடிவேலு ஒரு படத்தில் “என் கிணற்றை காணோம்” என்று போலீஸை டென்ஷன் செய்து காமெடி பண்ணுவார். இந்த படத்திலும் கிணறு காணாமல் போகிறது. காமெடிக்காக அல்ல...சீரியஸாகவே காணாமல் போகிறது.


படத்தின் கதை:
ஆந்திராவின் சிக்கட்பள்ளி கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று டிரைவர் வேலை பார்க்கும் ஒரு எழுத்தறிவு கூட இல்லாத அர்மான் அலி.த்ரீ-இடியட்ஸில் வாத்தியாராக வருவாரே அவரே தான்.கிராமத்தில் அவருடைய மகள் சித்தப்பா சித்தியுடன் வசிக்கிறாள்.

அவளை பார்க்க சொந்த ஊருக்கு வரும் போது, சொந்த ஊரில் தண்ணீர் கஷ்டம். மகளுக்கு திருமணம் வேறு முடிக்க வேண்டும். இவர் "கிணறை வெட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்' என்று இறங்குகிறார். அரசாங்கம், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கிணறு வெட்ட வழங்கும் உதவித்தொகையை பெற முயற்சி செய்கிறார்.

கிராம அதிகாரி, தாசில்தார், MPDO, சர்வே பண்ண வேண்டிய எஞ்சினியர், ரிஜிஸ்தார், காண்ட்ராக்டர் என்று ஆளாளுக்கு கமிஷன் தர வேண்டியாதாகிறது. முதல் இன்ஸ்டால்மண்டில் வந்த தொகை இதற்கே சரியாகிறது. இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வர வேண்டுமானால், கிணறு வெட்ட ஆரம்பித்து விட்டதாக சான்று காட்ட வேண்டும். அத்தனை அதிகாரிகளும் சேர்ந்து பொய் போட்டோ, பொய் ரசீது என்று தயார் செய்து இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வரவழைக்கிறார்கள். அதும் கமிஷனில் காலி.
கட்டவே ஆரம்பிக்க படாத கிணற்றுக்கு "இந்த கிணற்றில் தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கிறது" என்று கூட சர்டிபிகேட் தருகிறார் கிராம அதிகாரி.

இப்படியே ஒவ்வொரு இன்ஸ்டால்மென்ட் பணமும் அதிகாரிகளின் கமிஷனில் கரைந்து விட, தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கலங்கி போகிறார் அலி. அப்போது அவருடைய மகள் லஞ்ச திருட்டில் தொலைந்து போன தனது தந்தையின் கிணற்றை மீட்க முடிவு செய்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் காமிராவின் முன் தலைமுடியை விரித்து போட்டு கொண்டு அடிக்குரலில் பேச வராது; வர்மக்கலை மர்மக்கலை ஏதும் தெரியாது; ஸ்டுடண்ட்ஸ் வைத்து நெட்வர்க் உருவாக்க தெரியாது, அட்லீஸ்ட் டவாலி வேலை பார்த்தாலும் பரவாயில்லை அதுவும் இல்லை, குறைந்த பட்சம் சேவல் வேஷம் கூட போட தெரியாது என்றால் என்ன பண்ணுவார் பாவம் அதனால்...

அதனால் பொறுமையாக போலீஸ் ஸ்டேஷன் சென்று 'எங்கள் கிணறை காணோம்' என்று புகார் கொடுக்கிறார்கள். அவர் வடிவேல் படத்துல வர்ற மாதிரி சிரிப்பு போலீஸ் அல்ல. உண்மையில் டென்ஷன் ஆகி விடுகிறார். அவரிடம் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். அதோடு அந்த கிராமத்தில் இது மாதிரி இன்னும் எழுபத்து ஐந்து கிணறுகள் "காணாமல் போய்" இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சனை மந்திரி வரை போகிறது. எப்படி சால்வ் ஆகிறது என்பதையும் நானே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் விடுகிறேன்.

இனி போமன் இராணி பற்றி. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்று இரட்டை வேடம். தம்பியாக வருபவர் சில காமெடி முயற்சிகளுக்கு மட்டும். அண்ணன் தான் ஹீரோ. எழுத்தறிவில்லாத innocent டிரைவர் / அப்பா. நன்றாக நடித்தார் என்று சொல்வதற்கில்லை. அந்த கதாபத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தி போகிறார். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் இவர் இருக்கிறார். இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. விவரமான பெண். அப்பாவுடன் சேர்ந்து கிணற்றை தேடி போராடுவது ரசிக்கிறது.

இது ஒரு காமெடி படம் அல்ல...படத்தில் காமெடி முயற்சிகளும் கம்மி தான். சட்டசபையில் இந்த கிணறு பிரச்சனையை விவாதிக்க படும் போது, ஆளுங்கட்சி அமைச்சர் சொல்கிறார், "எதிர்கட்சிக்காரர்கள் தான் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கொண்டு ஏதோ சதி பண்ணி கிணறுகளை திருடி விட்டதாக" சொல்கிறார்.

முச்கானுக்கும் ஆரிப் அலிக்கும் ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக், கிராம அதிகாரியான மனைவியை உப்புக்கு சப்பாணி ஆக்கிவிட்டு முன்னிற்கும் கணவர், புது கல்யாண தம்பதி சர்வே எஞ்சினியரும் அவருடைய மனைவியும், "எங்கப்பா மூணு லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த(?) இன்ஸ்பெக்டர் போஸ்ட்; இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் நீங்கள் அதை திரும்ப சம்பாதித்து எங்கப்பாவிற்கு திருப்பி கொடுக்க வில்லை" என்று மனைவியிடம் சதா வசை வாங்கும் இன்ஸ்பெக்டர் கணவன் என்று படத்துக்குள் நிறைய குட்டி குட்டி கதைகள். சிலது படத்தோடு ஒட்டியும் சிலது ஒட்டாமலும்.

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருபவர் சோனாலி குல்கர்னி. மே மாதம் படத்தில் ஹீரோயின்; இந்த படத்தில் ஊறுகாய் ரோலில் வருகிறார்.

பாடல்கள் படத்தோடு பார்க்க போர் அடிக்க வில்லை.
ஒரு வசனம்: ஆரிப் அலியின் தந்தை சொல்வார். ஒரு போராட்ட ஊர்வலத்தின் போது ஒரு சின்ன பையன் ரோட்டில் அழுது கொண்டு இருந்தான். நான் அழைத்து வந்து வளர்த்தேன். அவனுடைய பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன்....அதாவது என் மகன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதே எங்களுக்கு தெரியாது"; பிடித்தது.

ஆந்திரா கிராமத்து ஹிந்தி என்பதால் கைக்கூ, நக்கோ, மியா என்றெல்லாம் வட்டார வழக்கில் பேசுகிறார்கள்.வட்டார மொழியின் தமிழ் பேசும் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் ஒரு ரசனை உணர்வு இதிலும்.

அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வதாக கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அத்தனை அதிகாரிகள் லெவலையும் தாண்டி கடைசியில் மக்களுக்கு எந்த லட்சணத்தில் போய் சேருகிறது என்ற மெசேஜை சொல்லும் படம்;

My Verdict: "Very well done" என்று சொல்ல ஆசை; ஆனால் படம் சற்று வேகம் கம்மி என்பதால் "Watchable once என்று சொல்ல வைக்கிறது.
- ப்ரியா கதிரவன்

சிரியஸா உங்க விமர்சனம் காமெடியா இருக்கு!


14 Comments:

மானஸ்தன் said...

இட்லிவடை!
எப்போதிருந்து/ஏன் கொபசெ ஆஸ்தான சினிமா விமர்சகராக மாறி விட்டார்? ஜெய் ஹனுமானுடன் ஏதாவது மனஸ்தாபமா? அனுசரிச்சு செல்லவும்.

IdlyVadai said...

//இட்லிவடை!
எப்போதிருந்து/ஏன் கொபசெ ஆஸ்தான சினிமா விமர்சகராக மாறி விட்டார்? ஜெய் ஹனுமானுடன் ஏதாவது மனஸ்தாபமா? அனுசரிச்சு செல்லவும்.//

உங்க ஹனுமானத்துக்கு ஒரு ஜெய்!

Kameswara Rao said...

இட்லிவடை,
நம் ஊரில் சினிமாவில் தான் இந்த மாதிரி விஷயம் சட்டசபைக்கு போகும், நிஜத்தில் ஆட்டோ தான் வரும் !

இது நம் இந்திய நாட்டில் சகஜம், (தோண்ட தோண்ட தங்கம் - இந்திரா சௌந்தரராஜன்) தோண்ட தோண்ட ஊழல்
நம் நாட்டில் .


காமேஷ்
போட்ஸ்வானா

நாஞ்சில் பிரதாப் said...

பார்த்தேன். அக்மார்க் ஷ்யாம் பெனகலின் படம்தான்...ஒரே கூட்டம்.
ஒருதடவை பார்க்கலாம்...

IdlyVadai said...

//இது நம் இந்திய நாட்டில் சகஜம், (தோண்ட தோண்ட தங்கம் - இந்திரா சௌந்தரராஜன்) தோண்ட தோண்ட ஊழல்
நம் நாட்டில் .//

அட நீங்க வேற போன வருஷம் நடந்த இந்த கூத்தை பாருங்க - http://thatstamil.oneindia.in/news/2009/12/08/temple-pond-disappears-chennai.html

Gaana Kabali said...

ஐயா ப்ரியா கதிரவன் அவர்களே!
உங்கள் விமரிசனம் நகைச்சுவையோடும், விறுவிறுப்பாகவும், நன்றாகவும் இருக்கிறது. பாராட்டுகள்.

படத்தை சீக்கிரமே பார்க்கவேண்டும் என தூண்டுகிறது.

நல்ல படத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததிற்கு நன்றி.

Anonymous said...

Cittttizzzzzen....

Anonymous said...

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்? He is Saleem Ghouse, a theatre actor, who also acted in many tamil films as Villain such as Chinna Gounder, Vetri Vizha and recently Vettaikaran.

Anonymous said...

Ganna , Priya kathiravan is not a guy. Kathiravan is her guy :-). She writes too good. Check out her blog.

http://priyakathiravan.blogspot.com/

சிலருக்கு குசும்பு கூடவே பிறந்தது . இவங்களுக்கும் அப்படித்தான்.

Inaya Subbudu said...

1960களில் வந்த கி.ராஜநாராயணன் கதையை நினைவூடுகிறது. அதில், கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து ஒருசில ஏக்கரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர், அரசாங்கம் தருவதாக சொல்லும் கிணறு மானியத்துக்கு ஆசைப்பட்டு, கிணறும் இல்லாமல், இருக்கின்ற நிலங்களையும் இழந்து கண்ணீரோடு கிராமத்தைவிட்டு அக்குடும்பம் வெளியேறுவதுபோல் அமைத்திருப்பார்.

அதிலும் லஞ்சம், கந்துவட்டி எல்லாம் உண்டு.

கி.ரா என் கதையை திருடிவிட்டார்கள் என வழக்குத் தொடரலாம். :)

Gaana Kabali said...

சகோதரி ப்ரியா கதிரவன் அவர்களே,

தங்கள் விமர்சனம் படித்தபின் ஏற்பட்ட உந்துதலின் காரணமாக இந்த படத்தை இன்று பார்த்துவிட்டேன்.

நீங்கள் சொன்னது போல் படம் அவ்வளவு மெதுவாக செல்லவில்லை. எனக்கென்னவோ நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும், இயல்பான ஓட்டத்துடன் செல்வது போல் தான் இருந்தது.

திரைக் கதை செம்மையாக செதுக்கப் பட்டிருக்கிறது.ஒவ்வொருவரும் தங்கள் மிகையில்லாத இயல்பான நடிப்பால் நம் நெஞ்சை வருடுகிறார்கள். போமன் இரானியின் நடிப்பை Three Idiots படம் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது அவர் ரசிகனாகவே மாறிவிட்டேன். புத்திசாலித் தனமான வசனங்கள். நல்ல பாடல்கள்.

நான் தான் டைரக்டர் என்று ஒவ்வொரு பிரேமிலும் காட்டிக் கொள்ளும் "பாலச்சந்திரத்தனம்" இந்த படத்தில் இல்லவே இல்லை.

ஆமாம், இந்த படத்தின் இயக்குனர் 'ஷ்யாம் பெனகல்' என்பதை நீங்கள் என் குறிப்பிடவில்லை?

"Well Done Abba - விமர்சனம்" வெளியிட்ட இட்லிவடைக்கு நன்றி .

SAN said...

I enjoyed this movie.
Thanks for Priya Kadhiravan and IV for the crisp review.

But the trouble was i took my daughter who is 7 years old to this movie.After this movie she is very reluctant to watch any movies with me.The other day i literally carried her to watch 'paiya' movie.

Anonymous said...

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. I think the author has mistaken the identity of Minisha Lambha (the heroine of this movie) and Kangna Renawat (who acted in Dhaam Dhoom with Jayam Ravi) whom he is referring here.

ஜெயக்குமார் said...

”காணாமல் போன கினறு” என்ற பாடம் எங்களுக்கு கூட்டுறவு ஆசிரியர் எப்படி ஊழல் புரையோடிப்போயுள்ளது என்பதை நகைச்சுவையாக 1992ல் சொன்ன பாடம் இது. இன்று இது திரைப்படமாக..