பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 30, 2010

உலகக் கோப்பை இரண்டாவது சுற்று - Day 3

இரண்டாம் சுற்றின் மூன்றாம் நாளில் முதல் ஆட்டத்தில் நெதரலாந்தை எதிர்த்து ஸ்லொவாகியா விளையாடியது.

நெதர்லாந்து எந்தக் காரணத்தினாலோ உலகக் கோப்பை என்றால் சொதப்பும். ரூட் குலிட், வான் பாஸ்டம் போன்ற லெஜெண்ட்கள் ஆடும் போதும் என்ன காரணத்தினாலோ சத்தமின்றி போட்டியை விட்டு வெளியேறுவர் நெதர்லாந்தினர்.

இம் முறை நெதர்லாந்து முதல் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. எந்த ஒரு டச்சு அணியும் இது வ்ரை நான்கு ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றியைக் கண்டதில்லை என்பதால், ஸ்லோவாகியாவை எதிர்த்து வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது. நெதர்லாந்தின் சிறந்த வீரரான ரோபன் காயத்திலிருந்து மீண்டு ஆட வந்தது அணிக்கு வலு சேர்த்திருக்கும்.ஸ்லோவாகியா அணி கோலியத்தைக் வீழ்த்திய டேவிட். கடந்த சாம்பியன் இத்தாலியை வீட்டுக்கு அனுப்பிய உற்சாகத்தில் இருக்கும் நாடு. ஸ்லோவாகியாவின் ஸ்டிரைகர் விட்டெக் மிகச் சிறப்பாக் ஆடி கோல்களை குவித்து வருகிறார். இன்னொரு கோலியத்தை வீழ்த்துவாரா டேவிட்?

The second one was too hot handle.

ஆட்டம் தொடங்கிய போது ஸ்லோவாகியா, பெரிய அணியைக் கண்டு மிரளாமல் தன்னம்பிக்கையுடன் ஆடியது. நேரம் செல்ல செல்ல வான் பெர்ஸியும், ஸ்னைடரும் ஸ்லோவாக்கிய தற்காப்புக்கு நெருக்கடியை அதிகரித்தபடி வந்தனர். 18-வது நிமிடத்தில் நெதர்லாந்து அரையில் இருந்து செலுத்தப்பட்ட லாங் பாலை பிடிக்க ஸ்லோவாகிய வீரரை outpace செய்ய சீறிய ரோபன் பந்தை முதலில் அடைந்து, வலப்பக்கத்தில் இருந்த பந்தை இடப்பக்கமாய் திசை திருப்பி, தடுக்க வந்த டிஃபெண்டர் கண்ணில் மண்ணை தூவி, near post-ல் கோலின் கீழ் பகுதியில் செல்லுமாறு பந்தை தனது இடக் காலால் செலுத்த ஸ்கோர் 1-0.


Arjen Robben Goal To Slovakia - The best bloopers are a click away

ரோபனின் மின்னல் வேக ஓட்டம் டச்சு ரசிகர்களுக்கு நிறைவாக இருந்திருக்கும். அந் நாட்டின் சிறந்த வீரர் காயத்திலிருந்து முற்றிலும் மீண்டதை எண்ணி மகிழ்ந்திருப்பர்.

முதல் பாதியிலேயே இன்னும்சில கோல்களை நெதர்லாந்து போட்டிருக்கக் கூடும். ஆர்ஸெனலுக்கு ஆடும் வான் பெர்ஸிக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர் முற்றிலும் பயன்படுத்தாததால் இடைவேளையின் போதும் ஸ்கோர் 1-0 என்றே தொடர்ந்தது.

இரண்டாம் பாதியிலும் ரோபன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். வான் பெர்ஸி டிஃபெண்டர்களை ஏய்த்து தனியாக இருந்த ரோபனிடம் அளிக்க, அவரது முயற்சி கோல்கீப்பர் Mucha-வின் (இவர் பெயரை தமிழில் எழுதினால் என்னவோ போல இருக்கிறது), விரல் நுனியில் பட்டு கோலை விட்டு விலகியது.

65 நிமிடங்களுக்கு பின், ஞானோதயம் வந்தவர்கள் போல, ஸ்லோவாகியர்கள் அதிரடியில் இறங்கினர். 67-வது நிமிடத்தில் ஒரு நல்ல ஷாட்டை கோலுக்கு வெளியில் தள்ளி காத்தார் டச்சு கோல்கீப்பர். சில நொடிகளுக்கெல்லாம் ஸ்லோவாகியாவின் chance of a lifetime வாய்த்தது. ஆளரவமில்லாத இடத்தில், பொறுமையாய் குறி பார்த்து அடிக்க போதிய அவகாசத்துடன் ஒரு பொன்னான வாய்ப்பு ஸ்லொவாகியா அணியின் சிறந்த வீரர் விட்டெக்குக்கு வாய்த்து. பந்தை நேராக கோல்கீப்பர் ஸ்டெகெலென்பர்க்கிடம் அடித்து வீணாக்கினார் விட்டெக். இந்த முயற்சி கோலாகியிருப்பின் ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.

84-வது நிமிடத்தில் Kuyt-ன் அற்புதமான கிராஸை வாங்கி கச்சிதமாய் கோலடித்தார் ஸ்னைடர். 2-0.

ஆறு நிமிடங்களில் ஸ்லோவாகியா பல முயற்சிகள் செய்த போதும் கோல் அடிக்க இஞ்சரி டைம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

பெனல்டி பாக்ஸினுள் விட்டக்கை நெதர்லாந்து கோல்கீப்பர் வீழ்த்தி ஃபௌலாக்கியதால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது. விட்டக் கோல் அடித்து 2-1 ஆக்குவதற்கும் இறுதி விசில் ஊதப்படுவதற்கும் சரியாக இருந்தது.

ஸ்லொவாகியாவின் ட்ரீம் ரன் அத்துடன் நிறைவு பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் இரண்டு தென் அமெரிக்க நாடுகளான பிரேசிலும் சிலீயும் மோதின.

பிரேசில் ஃபாவரிட் என்றாலும் சிலீயும் முதல் ரவுண்டில் சிறப்பாகவே ஆடியிருந்தது.

இதற்கு முந்தைய உலகக் கோப்பகளில் இரு முறை பிரேசிலிடம் தோற்றுள்ளது சிலீ. மூன்றாம் முறையாவது வெல்ல வேண்டும் என்று முனைப்பாக களமிறங்கியதாலோ என்னமோ வழக்கமாய் ஆடுவதை விட அதிகமாய் அதிரடியில் இறங்கியது.

இதனால் கோலடிக்க வாய்ப்புகள் உருவானாலும் காகா, ரொபினோ, ஃபாபியானோ போன்ற ப்ரேசில் வீரர்கள் கோல் அடிக்க ஏதுவான களன்களும் நிறையவே அமைந்தன. சிலீயின் வாய்ப்புகளை எல்லாம் சிஸாரும், லூசியோவும் மழுங்கடித்துக் கொண்டே இருந்தனர். பிரேசிலுக்கு இருந்த வாய்ப்புகளைப் பார்க்கும் போது அவர்கள் 34-வது நிமிடம் வரை கோலடிக்காதது அதிசயம்.

மைகானின் கார்னரை Juan கச்சிதமாய் தலையால் அடித்து கோலாக்கி பிரேசிலை முன்னிலைப் படுத்தினார். இதன் பிறகு சிலீயின் டிஃபென்ஸ் சுத்தமாய் தகர்ந்து போனது. அடுத்த 4-வது நிமிடத்தில், இடது முனையில் இருந்து பந்தை ரொபினோ காகாவுக்கு அளிக்க, அதை அவர் தனியாய் இருந்த ஃபாபியானோவிடம் திருப்ப, முன்னால் வந்த கோல்கீப்பரைச் சுற்றி பந்தைக் கொண்டு போய், ஆளில்லா கோலுக்குள் சுலபமாய் தள்ளி 2-0 ஆக்கினார் ஃபாபியானோ.

2-0 Brazil - Chile - www.tugagolo.com

Tugagolo ponto | MySpace Video


இரண்டாம் பாதியில் ரமிரெஸ் மைதானத்தின் அரையிலிருந்து தனி ஆளாய் பந்தைக் கொண்டு வந்து இரு டிஃபெண்டர்களைத் தாண்டி ரொபினோவுக்கு அளிக்க, சிங்கிள் டச்சில் கச்சிதமாய், கோல்கீப்பரின் நீட்டிய இடக்கரத்துக்கு எட்டா வகையில் கோலாக்கினார் ரொபினோ.

எதிர்பார்த்த முடிவுதான்.

3-0 என்று பெரும் வெற்றியை அடைந்து, கால் இறுதியில் நெதர்லாந்தை மோதவிருக்கிறது பிரேசில்.

That should be another cracker of a game!

Samba flair-க்கு எதிரில் Dutch Dynamism தாக்குப்பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- லலிதா ராம்
http://carnaticmusicreview.wordpress.com/

4 Comments:

ரிஷபன்Meena said...

பார்த்த மேட்ச் தான் என்றாலும் பிடித்த சினிமாவின் விமர்சனம் படித்தது போலிருக்கு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம கடையிலும் (சென்செக்ஸ் கணக்கிடுவது பற்றி) சரக்கு வந்திருக்கு
http://rishaban.blogspot.com

Madhavan said...

nice article. well written..

LK said...

nice :)

Vikram said...

i guess, it would be an all-south american final - brazil vs argentina.

I wouldnt be surprised if it is an all-south american semi-final :)

brazil vs uruguay & argentina vs paraguay.