பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 17, 2010

செம்மொழி மாநாடும், செல்பேசி மோசடிகளும்..

இன்று காலை என்னுடைய உறக்கத்தைக் கலைத்த செல்பேசி குறுஞ்செய்தி, ஆச்சர்யம், அதிர்ச்சி, திகைப்பு என பலவிதமான உணர்ச்சிகளையும் ஒருங்கே தோற்றுவித்தது. அதிக பீடிகை இல்லாமல் நேராக விஷயத்திற்கு வந்து விடுகிறேன். கீழே இருப்பதுதான் அக்குறுஞ்செய்தி.

“ Tamil sem mozhli manadu 23rd-27th (2010) AT COVAI CODISIA HALL. Frwd thismessage to 15peoples including me. You'l get Rs 199.86 from state government of TAMIL NADU. It's true and I received. see today's hindu news paper. Check your balance after 5 mins...it will safe.."

இதுதான் அக்குறுஞ்செய்தி. அட்சரம் பிசகாமல் கொடுத்திருக்கிறேன். இச்செய்தியைப் படித்தவுடன், செய்தி அனுப்பிய எனது நண்பரைத் தொடர்பு கொண்டு இது உண்மையா? நீங்கள் இச்செய்தியை 15 பேருக்கு அனுப்பியதன் மூலம் உங்களுக்கு அதில் குறிப்பிட்டுள்ள அளவு பணம் கிடைத்திருக்கிறதா என விசாரித்தேன். ஆனால் அவரோ, “எனக்கு வேறு ஒருவர் அனுப்பினார், நானும் 20 பேருக்கு மேல் அனுப்பிவிட்டேன் ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை” என்ற ரீதியில் பதிலளித்தார்.

இது போன்ற “ஃபார்வர்டு” குறுஞ்செய்திகள் பெரும்பாலும் நம்பகத்தன்மையற்றது என்றே வைத்துக் கொண்டாலும், கழகத்தின் கவர் கொடுக்கும் பாரம்பர்யம் சிறிதே ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, தமிழக அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் சகட்டு மேனிக்கு ஐந்து நாட்கள் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதுவும் போதாதென கவர் கொடுத்து கூட்டத்தை கவர் செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது என்னவோ வாஸ்தவம். இது உண்மையென்றால் தமிழுக்கு இதை விட பெரிய அவமானமும், கேவலமும் வேறெதுவும் இல்லை. இது பொய் மற்றும் யாரோ சிலரின் விஷமச் செயல் என்றால், இதில் இரண்டு மதிப்பு மிகுந்த ஸ்தாபனங்களின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று தமிழக அரசு, மற்றொன்று ஹிந்து செய்தித்தாள் நிறுவனம். இவ்வாறான பொய்யான, அரசு மற்றும் மதிப்பு மிக்க செய்தித்தாளின் பெயரால் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடனான வதந்திகள் கடுமையான நடவடிக்கைக்குரியவை.

இது குறித்து, தமிழகத்திலுள்ள ஹிந்து அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வாறான செய்தி ஏதும் ஹிந்துவில் வெளியிடப்படவில்லை என்றும் இது ஏதோ விஷமப் பிரச்சாரம் என்று தெரிவித்தனர். இவ்விஷமத்தை செய்வது யாராக இருந்தாலும், உங்களில் எவருக்கேனும் இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால், அதனை தயவு செய்து மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்ய வேண்டாம். அதுவே தமிழுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும்.

- யதிராஜ்

இட்லிவடை பற்றி எஸ்.எம்.எஸ் செய்தால் ஒரு ரூபாய் தருகிறேன் :-)


24 Comments:

சுரேஷ் கண்ணன் said...

இந்த இடுகையை ஐந்து நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்திருக்கிறேன். :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இட்லிவடை பற்றி எஸ்.எம்.எஸ் செய்தால் ஒரு ரூபாய் தருகிறேன்//


தம்பி இன்னும் ஒரு ரூபா வரலை.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இட்லிவடை பற்றி எஸ்.எம்.எஸ் செய்தால் ஒரு ரூபாய் தருகிறேன்//


இட்லிவடை பற்றி என் நண்பனுக்கு SMS அனுப்பியுள்ளேன். (செய்தி இதுதான் : வரும்போது மறக்காமல் இரண்டு இட்லி ஒரு வடை வாங்கி வரவும்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அன்று தமிழ் வளர்க்க இருந்தது சங்கம்;
வளர்ந்துவிட்ட தமிழுக்கு இவர்களால் ஆன பங்கம்
சரி செய்யுமா முத்தமிழ்ச் சிங்கம்!
(ஸ்...ஸ்.....ஸ்.... அப்பா என்னா வில்லங்கம்?)

kggouthaman said...

My SMS to friends:
"Read Idlyvadai everyday, every hour.
www.idlyvadai.blogspot.com"
இன்னும் யாருக்கும் அனுப்பவில்லை.
என் சார்பில் யாராவது அனுப்புவதாக இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை.

KATHIR = RAY said...

Ho Andha Message Avlo Thooram Reach Ayuruchaa

Enakkum Vandhuchu Forward panninen.

Tamil Sem Mozhi Maanadu Info Kedaikattumnathaan.

கருத்துரையிடுக.
http://kannivirgin.blogspot.com/2010/06/blog-post.html

வீரராகவன் said...

முத்தமிழ்ச் சிங்கம்!
"ச்” வராது.
இந்த மாநாட்டில் தமிழுக்கு உரிய சிறப்பான் ‘ழ’கரத்தை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் மேடை ஏறி பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது தமிழ் ழகரப் பணிமன்றம். செவிசாய்ப்பார்களா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//kggouthaman said...
My SMS to friends:
"Read Idlyvadai everyday, every hour.
www.idlyvadai.blogspot.com"

//

www? Is it not httpp:://idlyvadai.blogspot.com?

Sorry, no one rupee to you, Sir!

By the way, where is my one Rupee?

Anonymous said...

one mistake in the post. who said that Hindu is reputed. change the post and publish

ஸ்ரீராம். said...

இந்த குறுஞ்செய்தி கிடைக்காத தமிழனே இருக்க மாட்டான் என்று நினைக்கிறேன்...! முன்னர் அழகிரி பிறந்த நாள். மற்றும் இடைத் தேர்தல் சமயங்களில் கூட இது போன்ற குறுஞ்செய்திகள் வந்ததுண்டு. பொதுவாக இது போன்ற செய்திகளை ஃபார்வேர்ட் செய்யத் தொடங்கும்போதே ஏர் டெல் லிலுருந்து இவற்றை நம்ப வேண்டாம் என்று முன்னர் செர்விஸ் மெச்செஜ் வந்துள்ளது.
அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை இல்லையாம்...மாநாடு போக விரும்புபவர்கள் சிறப்பு விடுப்பு எடுக்க மட்டும் அனுமதி, மற்றபடி அலுவலகங்கள் இயங்கும் என்று நண்பர் சொன்னார்.

ராசராசசோழன் said...

எதோ மதிப்பு மிகுந்தனு சொன்னீங்களே.....காதுல சரியா விழல...

ஆதி மனிதன் said...

//ஏற்கனவே தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, தமிழக அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் சகட்டு மேனிக்கு ஐந்து நாட்கள் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.//

அதுமட்டுமா? சென்னையிலேர்ந்து வெளி நாடுகளுக்கு விமான டிக்கெட் கூட கிடைக்க மாட்டேங்குது. எல்லாம் புல் அடுத்த ஒரு வாரத்திற்கு. அவ்ளோ பேர் மாநாட்டுக்கு வெளி நாடுகளிலிருந்து வராங்களா இல்ல இங்க உள்ளவங்க மாநாட்டு விடுமுறையில் உல்லாச பயணம் கிளம்பிட்டாங்களானு தெரியல.

"கிடக்கறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில வை" அப்படிதான் நடக்குது இங்க.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நாடு.

Madhavan said...

//...போன்ற “ஃபார்வர்டு” குறுஞ்செய்திகள் பெரும்பாலும் நம்பகத்தன்மையற்றது என்றே வைத்துக் கொண்டாலும், கழகத்தின் கவர் கொடுக்கும் பாரம்பர்யம் சிறிதே ஐயத்தை ஏற்படுத்துகிறது.//


Truly TRUE..

//Anonymous Anonymous said...

one mistake in the post. who said that "Hindu" is reputed. change the post and publish//

I strongly second this point.. with one insertion as "Who said that 'Hindu-News Paper' is reputed..."

Anonymous said...

தமிழ் செம்மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல்
http://coimbatoreli ve.blogspot. com/2010/ 06/5.html

Anonymous said...

Coooooool Mr.
I can clearly see your Inner-burn feeling. what to do ???

Tamilan
Qatar

Anonymous said...

even i got these SMSs, but i never believe these so, did not fwd it

அஞ்சா நஞ்சன் said...

இதெல்லாம் ரொம்ப ஓல்டு. ஒரு குழந்தையின் படத்தை போட்டு, இவள் இன்னும் பத்து நாளில் இறந்து விடுவாள். இந்த மெயிலை மற்றவர்களுக்கு அனுப்பினால் ஒவ்வொரு மெயிலுக்கும் microsoft ஒரு டாலர் அக்குழந்தைக்கு அனுப்பி வைக்கும் என்ற ரீதியில் மெயில் வரும். வேறு வேலை இல்லாதவர்கள் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். ஆகவே 'இரண்டு மதிப்பு மிகுந்த ஸ்தாபனங்களின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது' என்ற கவலை எல்லாம் வேண்டாம்.

usenet8988 said...

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால், கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு?
இதற்கு ஒரு blog, அப்புறம் இதை சாக்காக வைத்து கழகங்களுக்கு ஒரு இடி. ஏனய்யா, தினம் திருப்பதி ஏழுமலையான் படத்தை 10 பேருக்கு அனுப்பச்சொல்லி செய்தி வரும்போது, மதவாதிகளை இடித்து ஒரு blog போட்டாலென்ன?

யதிராஜ சம்பத் குமார் said...

இந்த கட்டுரை விஷயத்தைக் காட்டிலும், ஹிந்து பத்திரிக்கையை மதிப்பு மிகுந்தது என்று நான் குறிப்பிட்டிருப்பது பலருக்கு சற்றே நெருடலாக இருப்பது போன்று தெரிகிறது.

என்னைப் பொறுத்தமட்டில், இப்போது சற்றே தரம் குறைந்திருப்பது போன்றும், மற்றும் கழகம், இடதுசாரிகள் என சில சாராரிடையே சார்புநிலை கொண்டிருப்பதால் மட்டும் அப்பத்திரிக்கையினைக் குறைத்து மதி்ப்பிட்டு விட முடியாது. ஒரு நூறாண்டைக் கடந்தும் பாரதம் முழுவதும் பல கோடி சந்தாதாரர்களை உடைய ஒரு பத்திரிக்கையாக இருப்பதால் அது நிச்சயம் ஒரு மதிப்பு மிகுந்த ஸ்தாபனம்தான்.

(குறிப்பு : நான் ஹிந்து பத்திரிக்கை படிப்பதில்லை.)

யதிராஜ சம்பத் குமார் said...

Usenet மற்றும் ஏனைய பகுத்தறிவு பக்தர்களுக்கு...

இன்றைய சூழலில் திமுக இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கினால் கூட ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்களின் சமீபகால செயல்பாடுகள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் இடித்துரைக்க வேண்டியது என்னை அல்ல!!

திருப்பதி ஏழுமலையான் பார்வர்டு மெசேஜ் விஷயமும் சில விஷமிகளின் மோசடிதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு இப்படியொரு விழிப்புணர்வு பதிவு போடுமளவிற்கு திருப்பதி தேவஸ்தானம் கடந்தகாலத்தில் யாருக்கும் திருப்பதிக்கு வந்தால் 500, 1000 என்று கவர் கொடுத்ததாகத் தகவல் இல்லை.

நன்றி.

virutcham said...

செம்மொழி மாநாடு குறித்த தகவலை கூட தமிழில் அனுப்பத் தெரியலை.
எல்லோருக்கும் போய்ச் சேரணும்னா தமிழ் உபயோகம் இல்லன்னு சொல்லரா மாதிரி இருக்கே

Anonymous said...

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால், கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு?
இதற்கு ஒரு blog, அப்புறம் இதை சாக்காக வைத்து கழகங்களுக்கு ஒரு இடி. ஏனய்யா, தினம் திருப்பதி ஏழுமலையான் படத்தை 10 பேருக்கு அனுப்பச்சொல்லி செய்தி வரும்போது, மதவாதிகளை இடித்து ஒரு blog போட்டாலென்ன?

CORRECT

Anonymous said...

Those who are Tamilian can hear
Semmozhi song here.

http://www.maalaimalar.com/

Anonymous said...

எதிர்பார்த்தபடி மாநாட்டை புறக்கணிக்கும்படி ஜெயா சொல்லியாச்சு. சாமானிய மக்களின் கேள்வி - தமிழ் நாட்டுக்கு எப்போது விடிவுகாலம் ஏற்படும் ( தமிழர் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடும் நாள்). தமிழன் எப்போது தனது எதிரியை தமிழ் நாட்டை விட்டு விரட்டி அடிப்பான். ( விடுதலை புலிகளே மாநாட்டுக்கு வாழ்த்து மடல் அனுப்பி உள்ளனர்)