பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 28, 2010

சாய்னா நெஹ்வாலுக்கு வாழ்த்துகள்


சயாகா சாடோவுக்கு எதிரான இறுதிப் போட்டி நேற்று முடிவடைந்தது.

சாய்னா நெஹ்வால் இரண்டாவது முறையாக இந்தோனேஷிய ஓபன் போட்டியை வென்றுள்ளார். மூன்று வாரங்களில் மூன்றாவது பட்டம் வெல்லும் சாய்னா உலக த்ர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நியோ ஸ்போர்ட்ஸ் தயவில் முழு ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது. சாடோ தர வரிசையில் 26-வது இடத்தில் இருப்பினும் மிகப் பிரமாதமாக ஆடினார்.

கோர்டின் ஒரு பக்கத்தில் காற்று சற்றே சாதகமாக இருந்தது. சாய்னா முதலில் அதைப் பயன்படுத்து 11-5 என்று முன்னணியில் இருந்தார். 11 புள்ளிகள் எடுத்ததும் கோர்ட்டின் எதிர்பக்கத்துக்கு மாற்ற சாடோ ஸ்கோரை சமன் செய்தார். 11-11-க்கு பிறகு இருவரும் மாறி மாறி புள்ளிகள் வென்றனர். ஒரு கட்டத்தில் முதன் முறையாக சாடோ 18-17 என்று லீடைப் பெற்றார். அதன் பின் சாய்னா துல்லியமாக ஆடி 21-19 என்று முதல் கேமை வென்றார்.

சாடோவை பவர் கேம் கொண்டு ஜெயிக்க நினைத்த முயற்சிகள் எல்லாம் வீணாகவே போயின. அடிக்கு அடி கொடுப்பதில் சாடோ வல்லவராகத் தெரிகிறார். அதிகம் வலக்கை ஆட்டக்காரர்களை எதிர் கொள்வதால், இடக்கை ஆட்டக்காரரை எதிர்கொள்ளத் தேவையான மாற்றங்களை உடனுக்குடன் செய்து கொள்வதில் சாய்னாவுக்கு கொஞ்சம் சங்கடம் இருப்பதாகத் தெரிந்தது.

இரண்டாவது கேமில் சாடோவின் டிராப் ஷாட்களும் கடினமான angle-களும் ஆட்டத்தை அவருக்கு சாதகமாக்கின. 6 புள்ளிகள் பின்னடைவு அடைந்ததும் சாய்னா கொஞ்சம் எரிச்சலுற்றவராய் தெரிந்தார். அவப்போது நல்ல புள்ளிகளை சாய்னா வென்றாலும் சாடோ சுலபமாக வென்றார்.

கேம் விவரம் 1-1 என்ற போதும் மொமெண்டம் சாடோவின் பக்கம்.

மூன்றாவது கேமில் சாய்னா பவர் ஆட்டத்தைத் தவிர்த்து பொறுமையாய் எதிராளி தவறு செய்யும் வரை காத்திருக்கும் ஆட்டத்துக்குத் தாவினார். சாடோவும் பிரஷரைத் சரியாக எதிர் கொள்ளத் தெரியாதவராய் நிறைய தவறிழைத்தார். காற்று தன் பக்கம் இருக்கும் போதும் அதனை உபயோகிக்காமல் over push செய்தது சொந்த செல்வில் சூனியம்.

மூன்றாம் கேமை வென்று பட்டம் பெற்ற சாய்னாவுக்கு வயது இருபதே.

அதிகம் படாடோபம் இன்று, மீடியா வலைக்குள் விழாமல், ஆட்டத்தை மட்டும் கவனம் செலுத்தி இமாலய முன்னேற்றம் அடைந்துள்ளார் சாய்னா.

- லலிதா ராம் ( http://cricketthavira.wordpress.com/ )

பிகு: லலிதா ராம் இசை பற்றியும் எழுதுவார். அதன் முகவரி டைம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள் :-)விரைவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்.


4 Comments:

AGASIYAM said...

முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html

Anonymous said...

Welldone Saina!

Anonymous said...

Very glad to know about this news and proud as well!
Only worry is she should just concentrate the game, no fame ditch!

Essex Siva

R.Gopi said...

Hearty Congratulations SAINA NEHWAL