பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 18, 2010

ராவணன் - சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா

* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.

* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை. இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.


* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.

* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.

* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.

* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.

* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.

* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.

* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.

* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.

* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.

* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.

* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.

* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.

* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!

* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.

* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

விக்ரமுக்கும் ஹரன் பிரசன்னாவுக்கு ஒரே ஒற்றுமை இருவருக்கும் வயதாகிவிட்டது !
நல்ல விமர்சனம் படிக்க இங்கே செல்லவும்


32 Comments:

Gaana Kabali said...

'கனகவேல் காக்க' நல்ல படம் என்று பத்ரி அவர்கள் இதே இட்லிவடையில் விமர்சனம் எழுதிய போது இந்த ஹரன் பிரசன்னா எங்கே போயிருந்தார்?

அந்த படத்தை பற்றியும் கிழி கிழி என்று கிழித்து விமர்சனம் எழுதியிருக்க வேண்டியது தானே ? உங்களுக்கு வேண்டப்பட்டவர் அந்த படத்திற்கு வசனம் எழுதிய ஒரே காரணத்திற்காக அது நல்ல படம் ஆகி விட்டது இல்லையா?

நடு நிலைமையோடு விமர்சனம் எழுதுங்கப்பா.

ஜெயக்குமார் said...

ராவணன் படத்திற்கு வந்த உண்மையான விமர்சனம். அதிலும் இந்த வரிகள் டாப்.

//ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.
//

ரிஷபன்Meena said...

”என்ன கொடுமை சரவணன்“ வசனத்தை எந்த இடத்தில் யார் பேசினாலும் எப்படி சிரிப்பை வரவழைக்கிறதோ அப்படி
சீரியஸ் விஷயத்துக்கு எழுதினாலும் சரி சினிமாவுக்கு எழுதினாலும் சரி மஞ்சள் கமெண்ட் சிரிக்கவைக்கிறது.
ஹரன் விமர்சனத்தை படித்ததும் வால்பையன் சொன்னா மாதிரி படம் ஊத்திக்கிச்சோ என்று தோன்றுவதால்
நான் இந்தப் படத்தை பார்பதாக இல்லை.

இண்டெலக்சுவல் பதிவுகள் மற்றும் வசனங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி வந்துடும்.

virutcham said...

ரோஜா படத்துக்கும் தான். சாவித்திரி சத்யவான் - மகாபாரதம்

Xathish said...

So whats your point again?

This looks like a rant not a proper review. Also please stop insulting the director personally just do your business of criticizing the film as a reviewer.

I mean, can this reviewer even make an interesting powerpoint slideshow? If not please shut up.

I am not saying the film is good or anything. Just know your limits as a critic while reviewing a film.
And Idlyvadai please do not post this kind of garbage as a review.

Shankar said...

wow wow wow what a nice/correct dissection

ராசராசசோழன் said...

ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி. - classic statement...சரியான நக்கல்...

Tyler Durden said...

இந்த திரைப்படத்தின் பெயரே "ராவணன்" என்னும் போது, ஒரு நன்றி கார்டு வேறு தனியாக போட வேண்டுமா? படத்தின் இறுதியில் "எழுத்து & இயக்கம் : கம்பர், வால்மீகி மற்றும் மணிரத்னம் " என்று கார்டு போட வேண்டும் என்றும் கம்பர் / வால்மீகி குடும்பங்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி.

seetha said...

முதல் நாள் முதல் டிக்கட் என்று ஆட்க்கள் இருக்கும் வரையில் மணிரத்தினத்தின் முழு இருட்டு ,அடைத்த தொண்டை வசனங்க
ள் படம் வரத்தான் செய்யும்.

ஒரு நிகழ்வின் பாதிப்பை கெடுக்க வேண்டுமென்றால் மணிரத்தினத்திடம் சொன்னால் போதும்.அவருடய பம்பாய் பார்த்தாலே தெரியும்.

Jayakanthan - ஜெயகாந்தன் said...

ஹரன் பிரசன்னா: இருவர் படம் யாரை மையமாக வைத்து எடுத்தது என்று வெளிப்படையாக சொல்லாமலெ வீட்டுக்கு ஆட்டோ அனுப்பராஙக! இதுல சொல்லிட்டு படம் எடுக்கர அளவுக்கு இந்தியாவில் இன்னமமும் "Freedom of speech" வரவில்லை. நடு நிலைமையோடு விமர்சனம் எழுதுங்கப்பா. இனிமேல் உங்க விமர்சனத்த கண்ணால பாக்க கூட மாட்டேன்! I agree with this comment: இந்த திரைப்படத்தின் பெயரே "ராவணன்" என்னும் போது, ஒரு நன்றி கார்டு வேறு தனியாக போட வேண்டுமா? படத்தின் இறுதியில் "எழுத்து & இயக்கம் : கம்பர், வால்மீகி மற்றும் மணிரத்னம் " என்று கார்டு போட வேண்டும் என்றும் கம்பர் / வால்மீகி குடும்பங்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி.

Jayakumar said...

இட்லி வடையில் இவ்வளவு காரம் ஆகாது. கதையும் கதை மாந்தர்களையும் விமர்சிப்பதை விட தனிப்பட்ட விமர்சனங்கள் அதிகம் எனத் தோன்றுகிறது. மற்றவர் சிந்தனைகளையும் அதன் வெளிப்பாடுகளையும் பிடித்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையென்றல் பிடித்தம் இல்லை என் ஆரோக்கிய விமர்சனம் அளித்து அவர்களை மேலும் மெருகேற்ற ஊக்கமளிக்கலாம்.
விமர்சனம் என்ற பெயரில் தன் விருப்பங்களை வெளிப்படுத்தக்கூடாது.

SathyaRam said...

What would have been the difference had Sujatha written the dialogues for the movie?

க‌ரிச‌ல்கார‌ன் said...

ராவ‌ண‌ன், க‌ன‌க‌வேல் காக்க‌ ப‌ட‌ அளவுக்கெல்லாம் வ‌ர‌வில்லை

/ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி/

ஓங்குக எழுத்தாள‌ர்க‌ளாக‌ப் பார்த்து ந‌ட‌த்தும் விம‌ர்ச‌ன‌ப்புர‌ட்சி

R. Jagannathan said...

I agree with the comment by 'Xathish' on the 'review' by Haran.
By this time every one is surd of what to expect from Maniratnam. It is to his credit, Haran went and saw the film on the first day. I think 90% of the review was written before seeing the film and 10% later - to fill in the gaps! It is anyway hightime that films of such high budget (including Eanthiran) should lick the ground to ensure some sense returns to the producers and fans can look forward to reasonable story line and entertainment. - R. Jagannathan

ஆட்டையாம்பட்டி அம்பி said...

இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

natarajan venkatasubramanian said...

உங்களுக்கு மணியைப் பிடிக்கவில்லை என்பைதற்காக ரொம்ப நேரம் உக்கார்ந்து யோசித்திருக்கிறீர்கள்.

Anonymous said...

mokkai post

James Arputha Raj said...

//Idlyvadai please do not post this kind of garbage as a review

I second that

dEEpz said...

I watched the movie Raavanan yesterday, and I simply loved it. I never have liked Aishwarya Rai before, but I thought she was good here; I think we should stop commenting on her age.. come on.. we accept heroes in their 40's and 50's, for that matter, Vikram is well past 40 - Ash is just 36-37..
Personally I thought the only silly element in the movie was Karthik's role. That was a disaster.. could have been etched out better. I am a Tamil woman, and I had no qualms watching Aishwarya Rai toy with her feelings for Vikram.. in fact I was hoping they'd just hug in the end and walk away into the sunset.. perfect romantic ending

வலைஞன் said...

மணிரத்தினம்,சுஹாசினி பற்றிய விமரிசனம் எழுதிவிட்டீர்கள்.
ராவணன் பட விமரிசனம் எங்கே?

வலைஞன் said...

கொள்கைகள்:
வளர்ந்த நாடுகளின் குடிமக்கள் :
=எங்களுக்கு பிடிக்காத TV programme களைப்பார்க்கமாட்டோம்.
அதை பற்றி பேசமாட்டோம்
=எங்களுக்கு பிடிக்காத சினிமாக்களைப் பார்க்கமாட்டோம்.
அதை பற்றி பேசமாட்டோம்
=எங்களுக்கு பிடிக்காத
வேட்பாளர்களுக்கு ஓட்டுபோடமாட்டோம்
அவர்களைப்பற்றி பேசமாட்டோம்

இந்தியாவின் குடிமக்கள் :
=எங்களுக்கு பிடிக்காத TV programme களைத்தான் விடாமல் பார்ப்போம்
அதை பற்றி மட்டும்தான் பேசுவோம்.
=எங்களுக்கு பிடிக்காத சினிமாக்களைத்தான் விடாமல் பார்ப்போம்
அதை பற்றி மட்டும்தான் பேசுவோம்
=எங்களுக்கு பிடிக்காத
வேட்பாளர்களுக்குத்தான் தொடர்ந்து ஓட்டுபோடுவோம்
அவர்களைப்பற்றி மட்டும்தான் பேசுவோம்.
=நல்லதை புகழ்வதை விட கெடுதலை விமரிசிப்ப்தில் எங்களுக்கு அலாதி இன்பம்.
எனவே எங்களை சுற்றி எப்போதும், அழுவாச்சி சீரியல்கள்,அரைவேக்காடு சினிமாக்கள்,அயோக்கிய அரசியல்வாதிகள்

Pragii said...

நியாய தராசில் - ராவணன்

http://shockan.blogspot.com/2010/06/blog-post_20.html

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஹரன்ஜி,

கொஞ்சம் ஓவராத்தான் ஒரு பிடி பிடிச்சிருக்கீங்க! இன்னிக்கு போட்டுத் தள்றதுங்கற முடிவோடதான் படத்துக்குப் போனீங்களோ!

இருந்தாலும் கடைசிக் காட்சியில் ஐஸ் ‘பக் பக்’ என்று அபத்தமாக ஆரம்பித்ததும், எங்கே அவரும் ‘ஹை ஹை டண்டணக்கா, டண் டண்!’ என்று ஆரம்பித்து விடுவாரோ என்று பயந்தே போய் விட்டேன்!

கொடுமைடா சாமி!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

கரிசல்காரன் சொன்ன ‘ஓங்குக எழுத்தாள‌ர்க‌ளாக‌ப் பார்த்து ந‌ட‌த்தும் விம‌ர்ச‌ன‌ப்புர‌ட்சி’யை ரசித்தேன்!

Kameswara Rao said...

இராவணன் சீதை hug பண்ணிண்டு போன ரொமாண்டிக் எண்டிங்
என்ன கொடுமை சரவணன் இது (seriousaga)
இதுல எதுக்கு என்திரன் படம் ஊதிகொண்டல் நன்றாக இருக்கும்
அப்படின்னு ஒரு அல்ப ஆசை தெரிவிச்சி இருக்காங்க

நான் இப்பொழுது வரை படம் பார்கவில்லை
போற போக்க பார்த்தல் பார்காம இருப்பது உத்தமம்னு தோணுது

Anonymous said...

இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை ?
So you regard mani ratnam is some director, if not then what is the meaning for the above lines

Anonymous said...

Review seems harsh but every word is true.I discovered the hard way.
Who'll refund my ticket cost?
If Sivaji does its overacting and half baked comedians like Vivek will make fun of it- if Vikram does its good acting, is it?.
Pongappa.
Seems we Tamilians love screaming psycho chatacters.
Nondha sami

ரிஷபன்Meena said...

வலைஞன்

அப்படி பார்த்தா எப்புடி. உங்க லாஜிக் ரொம்ப உதை வாங்குதே

நாகூர் ரூமி said...

ஹரன்பிரசன்னா, அருமை மிக அருமை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டுமா என்று யோசிக்க வைத்துவிட்டது உங்கள் விமர்சனம். சுஹாசினியின் ‘இண்டெல்லெக்சுவல்’தனம் பற்றிய விமர்சனம்தான் எவ்வளவு உண்மை! உங்கள் கிண்டலை மிகவும் ரசித்தேன். விமர்சனத்தில் முடிவு சூப்பர் பன்ச்!
நாகூர் ரூமி

Anonymous said...

valaigan - unga comment superrrrrrrrrrrr

Anonymous said...

அய்யா இதைதான் பல ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். மணிரத்னத்தை திட்டும் ஒரே ஆள் நான்தான் என்று பல நூறாண்டுகளாக ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். அய்யா என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? மணிரத்தினம் வீட்டின் வெளியில் நிர்வாண போராட்டம் நடத்தலாம் என்று இருக்கிறேன். அதற்க்கு அதிகம் செலவாகும். நிர்வாணம் என்றால் சுமாவா, பெரியாரே நிர்வாணமாக ரஷ்யாவில் நின்றார்.அய்யா இதைதான் பல ஐநூறு ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். அதற்க்கு அதிகம் செலவாகும்.நேற்று வீட்டில் செம வறுமை, நேராக டீக்கடை சென்று ஒரு அப்சொலுட் வோட்கா தொடை நனைய சாந்தி அடித்தேன். அய்யா இதைதான் பல ஆயிரம் ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். ராவன் ஹிந்தியில் கிழித்து தோரணம் கட்டிவிட்டாகள் அய்யா, இதை என்னவென்று சொல்வது.

ஏன் அய்யா ஒரு எழுத்தாளன் ரோட்டோரம் ரம் அடிப்பது தவறா? சொல்லுங்கள். இதை தவறு என்று பிரான்சில் சொன்னால் ரோடில் ரத்த ஆறு ஒடுமையா ரத்த ஆறு ஓடும். தெரியாமல் தான் கேட்கிறேன், ரஜினி வைப்பது போல் என்னால் ஆயிரம் ரூபாய் டிப்ஸ் வைக்க முடியாது. இது ஒரு எழுத்தாளனின் தலைவிதி. அய்யா இதைதான் பல பத்தாயிரம் ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன்.

Anonymous said...

well said வலைஞன்...lol....cool comments