பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 11, 2010

ஜாஸ்மின் - சாதனை மலர்

"கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன " என்று எழுதினார் கருணாநிதி அவர்கள். கோவில்கள் என்பதற்கு பதிலாக நாம் தனியார் பள்ளிகள் என்று போட்டு கொள்ளலாம்.

பள்ளிகளின் கட்டணத்தை முறை படுத்தி, அரசின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் அல்லது அறிக்கை அளவிலேயே உள்ளது என்பது கண்கூடு. இப்படி ஒரு விஷயம் இருப்பதையே பல தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது காட்டிக்கொள்ளவில்லை.
தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை பற்றி அரசுக்கு அறிவிக்க முறையாக இதுவரைக்கும் ஒரு "ஹெல்ப் லைன்" வசதி ஏன் தொடங்கப்படவில்லை என்று தெரியவில்லை.

தனியார் பள்ளிகள் பற்றி நான் கண்ட, கேட்ட, பார்த்த விஷயங்களை பற்றி இங்கே எழுதிகிறேன். கூடவே பெற்றோர்களின் அறியாமை பற்றியும் நாம் பார்ப்போம்.

1 . ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக ரூ. 50 ஆயிரம் கட்டணம் வாங்கினார்கள். ஆனால், பில் ஏதும் தரவில்லை. கட்டட நிதி என்று சொல்லி இருக்கிறார்கள்.

2 . ஒரு பள்ளியில், குழந்தையை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் தனியாக இன்டர்வீயு நடத்தி, அவர்கள் இருவரும் கண்டிப்பாக டிகிரி படித்து இருக்கவேண்டும் என்றவர்கள்,, அவர்களின் சான்றிதழ் களை வாங்கி சோதனை செய்தும் இருக்கிறார்கள்.

3 . சேர்க்கையின் போது, அரசின் அறிவிப்பை சுட்டி காட்டிய பெற்றோரை, கடுமையாக மிரட்டி இருக்கிறது ஒரு பள்ளியின் நிர்வாகம்.

4 . சென்னையில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளியில் வசூலிக்க படும் கட்டணத்தில், ஒரு மாணவன் BE படித்துவிடலாம் என்று சொன்னார் ஒரு நண்பர். பெற்றோர்கள் இங்கு நடைபெறும் கொள்ளையை எதிர்த்து சாலைமறியலில்இறங்கினார்கள்.

5 . மற்றொரு பள்ளியில், நாங்கள் கட்டணத்தை குறைக்க மாட்டோம், விருப்பம் இல்லை என்றால் உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு போங்கள் என்று வெளிப்படையா அறிவித்துஇருக்கிறார்கள்.

6 . ஒரு நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஒரு மிக பெரிய தொகை கொடுத்து, ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு ஒன்பதாவது படிக்கும் தனது மகனை மாற்றினார் ஒருவர். அதற்க்கு அவர் சொன்ன காரணம், " இங்கே கோச்சிங் சரியில்லை சார், வரும் வருஷம் டென்த் ஆச்சே "என்றார்.

7 . ஒன்பதாவது படிக்கும் போதே பத்தாம் வகுப்புக்கும், பிளஸ் ஒன் படிக்கும் போதே பிளஸ் டூ படிப்பிற்கும் சிறப்பு டியுஷன்களை தொடங்கிவிடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். நிறைய மார்க் வாங்க வேண்டுமே என்கிறார்கள்.

8 . பள்ளி செல்லும் நேரம் தவிர, குறைந்தது ஆறு மணிநேரம் டியுஷன்களில் செலவு செய்கிறார்கள் பத்தாம் மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள். பள்ளி கட்டணத்துக்கு இணையாக இதற்கும் செலவு செய்கிறார்கள்பெற்றோர்கள்.

9 . ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளியில் தம் குழந்தைகள் படிப்பதையே இன்று உள்ள படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இவர்கள் அனைவரின் முகத்திலும் தண்ணிரை தெளித்து, அவர்களின் மயக்கத்தை போக்கி இருக்கிறார் ஜாஸ்மின் என்ற மாணவி.

திருநெல்வேலியில், ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்யும் ஏழை தந்தை, படிக்காத தாயார் என்ற சூழ்நிலையில் வளர்ந்து ஒரு பெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறார் ஜாஸ்மின்.

நெல்லை டவுன் அருகே உள்ள கல்லணை எம்.பி. ல் மாநகராட்சி பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று இருக்கிறார் ஜாஸ்மின். இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு விஷயம்...இவர் தனியாக டியுஷன் எதுவும் படிக்கவில்லை என்பதே.

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இன்று ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இன்னொருவர், முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் படித்து, நாகை அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.

ஊட்டி கான்வென்டில் படித்து வீணா போனவர்களும் இருக்கிறார்கள்,மிக சாதாரண அரசு பள்ளியில் படித்து சாதித்தவர்களும் இருக்கிறார்கள்.

"முயற்சியும், ஈடுபாடும் மட்டுமே நான் வெற்றி பெற காரணம் " என்கிறார் சாதனை மாணவி ஜாஸ்மின்.

படிக்கிற பிள்ளைகள் எங்கு இருந்தாலும் படிக்கும் என்பதற்கு இந்த உதாரணங்கள் போதும்தானே?

-இன்பா


22 Comments:

shanmuganathan said...

தனிபட்ட மாணவியின் சாதனையை பள்ளியின் சாதனையாக ஏமாறும் பெற்றோர்களையும் ஏமாற்றும் பள்ளிகளையும் வன்மையாக கண்டிக்கிறேன்..எதோ ஒரு தனிப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் சாதனையை வைத்து அந்த பள்ளியை சிறந்த பள்ளி என்று சொல்வது தவறு..இதை என் சுற்றுவட்டாரத்தில் என்னால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்..

எவ்வளவோ சிறந்த பள்ளியாக இருந்தாலும் ஒரு மாணவனை 75-85 விழுக்காடு வரைக்குமே எடுக்க வைக்க முடியும்..அதையும் மீறி அந்த மாணவன் மாநிலத்தில் முதலோ அல்லது 85 விழுக்காடு மேலே எடுப்பது அந்த மாணவனின் தனிப்பட்ட சாதனையாகும்..இது பெற்றோர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..அவரு எங்களுது சாதனை என்று சொல்லி கொள்ளும் பள்ளிகளிடம் ஒன்று கேக்கிறேன்,உங்களால் சொல்லிதரபட்டு தேர்வு எழுதும் 150 மாணவர்களில் ஒருவர் மட்டும் மாநிலத்தில் முதலிடம் பெறுவது எப்படி,அப்படி என்றால் நீங்கள் மீதி உள்ள 149 பேருக்கு சரியாக சொல்லி தரவில்லை என்று அர்த்தமா ??

Anonymous said...

Hi,

I've been reading your blog for a while.It's a problem with our education system. The older method 'PUC' is better than this +1,+2. Don't see only the marks in 10 and +2. I've seen in my college that these high scorers are just studying and not learning and not applying what they learned.

Vinoth said...

அரசுக்கு (!?!) தனியார் பள்ளிகளில் இருந்து செல்ல வேண்டிய "கப்பம்" முறையாக செல்லவில்லை, அதனால் தான் இந்த கட்டண நடை முறையை அரசு மேற்கொண்டுள்ளது. மற்றபடி மக்கள் மீது அக்கறை கொண்டு இல்லை...

ராசராசசோழன் said...

இந்த அறிவுகொட்ட சனங்களுக்கு எங்க புரிய போவுது...

Anonymous said...

கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த ஜப்பான் நன்பரும், டாக்டரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில், தமிழ் வழியில் படிக்க வைக்கிறார்களா? நிச்சயமாக இருக்காது! ஏன், உங்கள் குழந்தைகளை (அல்லது எதிர்காலத்தில் வரப்போகும் குழந்தைகளை) மாநகராட்சிப் பள்ளியில் சேர்ப்பீரா? ஊருக்கு உபதேசிப்பது எளிது.

ஆதி மனிதன் said...

ஜாஸ்மின் மலர்கள் பல மலர வாழ்த்துக்கள்.

ஹரன்பிரசன்னா said...

கல்லணை பள்ளி ரொம்பவும் சுமாரான பள்ளி. இது தனிப்பட்ட மாணவியின் சாதனையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். கல்லணை பள்ளியின் கடந்த கால மதிப்பெண் வரலாற்றைப் பார்த்தால் இது விளங்கும்.

அதற்காக, மற்ற பள்ளிகள் செய்வதை நியாயம் என்று சொல்லவில்லை. இது மாணவியின் தனிப்பட்ட சாதனையாக இருக்கலாம் என்கிறேன்.

யதிராஜ சம்பத் குமார் said...

என்னுடைய பக்கத்து வீட்டு நபருடைய மகன், செட்டிநாடு வித்யாஷ்ரமில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். மாதக் கட்டணம் மட்டும் ரூபாய் 8000. தமிழகத்தின் பல குடும்பங்களில் மாத மொத்த வருமானவே இவ்வளவு இருக்குமா என்பது சந்தேகம். கேட்டால் ஒரு வகுப்பிற்கு வெறும் ஏழு பேர் மாத்திரமே சேர்த்து ஸ்பெஷல் கோச்சிங் தருகிறோம் என்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிற்கு என்ன ஸ்பெஷல் கோச்சிங்கோ? இது தவிர வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவிற்கு அனுமதி கிடையாது.....அங்கேயே எல்லாம்.

பல வசதியுடைய பெற்றோரும் இது போன்ற கட்டணங்களைக் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றனர். அவர்கள் அதற்கு கூறும் காரணம், அங்கு படித்தால்தான் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியுமாம். எங்கு போய் முட்டிக் கொள்வது?

(அரசாங்க பள்ளிகளில் விநியோகிக்கப்பட்ட ஆங்கிலவழி பயிற்சி தொடர்பான சிடிக்களில் பலான பட சிடிக்களும் கலந்திருந்தனவாம். பயிற்சி வகுப்பில் சிடியில் பலான படம் ஓடியிருக்கிறது. அரசாங்கள் பள்ளி நிர்வாகம் இப்படியிருப்பதை, தனியார் பள்ளிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.)

snkm said...

ஜாஸ்மினுக்கு வாழ்த்துக்கள்! குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு அவர்களுக்கு அதிகமாக சுமையை ஏற்படுத்தி விடாமல் அவர்கள் படிக்க உதவிகள் ( டிவியை தவிர்ப்பது, குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன் விளையாட அனுமதித்து அன்று நடத்திய பாடங்களை படிக்கச் சொல்வது ) செய்தால் நல்லது!

kggouthaman said...

சாதனை படைத்த மாணவி ஜாஸ்மினுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

Kannan said...

கூத்து இதோடு நிற்கவில்லை. சமீபத்திய அரசானை கட்டண விகிதங்கள் குருட்டாம்போக்கில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றனவாம். பள்ளி நடத்தும் ஒருவர் கூறியது "எங்கயாவது வெளிக்கி இருக்க போகும் போது எதாவது ஸ்கூல் கண்ணுல பட்டால், 'சும்மா வந்தேன் அப்படியே ஒரு விசிட் அடிச்சேன்' என்று கூறுவார்களாம் அரசு கல்வி அதிகாரிகள். இதன் அர்த்தம் 'கவர் வாங்க வந்தேன்'. ஒரு விசிட்டுக்கு ரூபாய் 500 முதல் 2000 வரை விலை என்று கூறினார். மேலும் பள்ளி நிர்வாகம் பழைய தேதி போட்டு பழைய கட்டணம் வசூலிகின்றது என்றார். வெகு விரைவில் பரீட்சை இல்லாத நடைமுறை கொண்டு வரப்படுகிறது, கேட்டால் பரிட்சையின் பொருட்டு தற்கொலை அதிக அளவில் உள்ளதாக கூறுகின்றனர் என்றார்.

Software Engineer said...

வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

nellai அண்ணாச்சி said...

படிக்கிற பிள்ள எங்கெங்ன்னாலும் படிக்கும்

Anonymous said...

தனியாரால்தான் நல்ல கல்வி கொடுக்க முடியும் என்பது சரியில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பின் மாணவர்கள் செல்லும் கல்வி நிறுவனங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான்.

Anonymous said...

//ஹரன்பிரசன்னா said...

கல்லணை பள்ளி ரொம்பவும் சுமாரான பள்ளி. இது தனிப்பட்ட மாணவியின் சாதனையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். கல்லணை பள்ளியின் கடந்த கால மதிப்பெண் வரலாற்றைப் பார்த்தால் இது விளங்கும்.

அதற்காக, மற்ற பள்ளிகள் செய்வதை நியாயம் என்று சொல்லவில்லை. இது மாணவியின் தனிப்பட்ட சாதனையாக இருக்கலாம் என்கிறேன்//

ஹரன் பிரசன்னா சார்.. எனக்குத் தெரிந்த வரை, கல்லணை பள்ளி பல திறமையான மாணவிகளைக் கொடுக்கும் ஒரு தரமான பள்ளி. காசு இருந்தால் தான் கல்வி என்று பணம் பார்க்கும் நோக்கோடு தான் இன்று பல தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏழை மாணவர்கள் பலர் படிக்கும் மாநகராட்சி பள்ளிகளில் அவர்களது குடும்ப சூழ்நிலைகளையும் கடந்து வந்து தரமான பயிற்சி கொடுத்து சாதனை படைக்க வைக்கும் பள்ளிகளுள், கல்லணையும் ஒன்று.
மாநில அளவில் இல்லையென்றாலும் 'தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை இருக்கும் திருநெல்வேலியின் மாவட்ட அளவில் பலமுறை சாதனைகளைப் படைத்திருக்கும் பள்ளி அது!
செய்தியை அறிந்த போது அது ஒரு மகிழ்ச்சியான தகவலாக இருந்ததே தவிர அதிர்ச்சியாக இல்லை!
நீங்கள் எந்த அடிப்படையில் இப்படி கூறினீர்கள் என்று தெரியவில்லை :)
இதை இ.வ. கொஞ்சம் கேட்கக் கூடாதா??

Anonymous said...

எனக்குத் தெரிந்த புகழ் பெற்ற ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம் அரசு அறிவித்திருக்கும் கல்விக் கட்டணம் (பதினொன்றாயிரம்) என்பதை மீறி இருபதாயிரம் கேட்கிறார்கள். அதற்க்கு ரசீது கிடையாது. அந்தத் தொகையை வகுப்பறையில் வைத்து ஆசிரியரின் கையில் தான் கொடுக்க வேண்டுமாம்.
இப்படித் தான் செய்வோம். வேண்டாம் என்றால் வேறு பள்ளியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அந்தப் பள்ளி.

//பள்ளிகளின் கட்டணத்தை முறை படுத்தி, அரசின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் அல்லது அறிக்கை அளவிலேயே உள்ளது என்பது கண்கூடு//

இந்த அறிக்கை எல்லாம் வெறும் கண்துடைப்போ என்றே தோன்றுகிறது..

//தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை பற்றி அரசுக்கு அறிவிக்க முறையாக இதுவரைக்கும் ஒரு "ஹெல்ப் லைன்" வசதி ஏன் தொடங்கப்படவில்லை என்று தெரியவில்லை//

நிதர்சனம்.. தகுந்த நேரத்தில் இன்பாவின் பதிவு. நன்றி IV!

Anonymous said...

நாட்டின் முதன்மையான வழக்கறிஞர், கணித வல்லுனர், விஞ்ஞானி, சிந்தனையாளர், பொருளாதார மேதை, மருத்துவ நிபுணர், தொழிலதிபர், பத்திரிகையாளர், எழுத்தாளர், தத்துவ மேதை முதலிய கிரீடங்களை எத்தனை முதல் மாணவர்கள் அணிவார்கள் என்று தெரியவில்லை. அதிகபட்சமாக அவர்கள் அமெரிக்கா செல்லக் கூடும்.

ஏட்டுக் கல்வியையும், தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து ஒரு மனிதனை அளவிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவே அவனது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். உதாரணத்துக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்று.

கல்லூரி ஆசிரியர்கள் அதில் பங்கெடுத்தனர். நீங்கள் என்ன மாதிரியான புத்தகம் வாசிக்கிறீர்கள், கடைசியாக என்ன தலையங்கம் வாசித்தீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு அதிர்ச்சியளிக்கும் பதிலே கிட்டியது. அவர்கள் வாசித்ததாகச் சொன்னதெல்லாம் எம்.எஸ்.உதயமூர்த்தி ரீதியிலான சுய முன்னேற்ற நூல்கள். அவற்றையெல்லாம் தான் எட்டாம் வகுப்பிலேயே வாசித்துவிட்டதாக கோபிநாத் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி இன்று பத்தோடு பதினொன்றாக சிறுசேரியில் வேலை செய்கிறார். இது ஒரு வகை. பொறியியலும் கிடைக்காமல், மருத்துவமும் கிடைக்காமல் கோவை வேளாண்மைக் கல்லூரியில் இணைந்த என் பள்ளிப் பருவத் தோழர் இன்னொரு வகை. இளங்கலை வேளாண்மை அறிவியலுக்குப் பிறகு MSC, Phd .. இப்போது வட மாநிலம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர்.

நல்ல மதிப்பெண், நல்ல கல்லூரி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டம்.... இது முடிந்தால் வாழ்வில் செட்டில் ஆகிவிட்டதாகச் சிலர் (குறிப்பாக பெற்றோர்) கருதுகிறார்கள். ஆனால் உள்ளபடியே சொன்னால் நல்ல மதிப்பெண் என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. பொருளாதார ரீதியான தோல்வியையும், வேலையின்மையையும் அது தவிர்க்கும். ஆனால் மறுபடியும் செய்தித்தாளில் போட்டோ வருமளவு வெற்றியை நிச்சயப்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

Anonymous said...

இதை நான் சொல்லியே தீர வேண்டும். வெறும் முப்பது வீடுகளைக் கொண்ட சின்னஞ்சிறு கிராமம் எங்களுடையது. தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட வேட்பாளர்கள் யாரும் வர வேண்டிய அவசியம் இல்லாமல் ஒதுக்கப்பட்ட ஒரு சிற்றூர்.

அப்படிப்பட்ட கிராமம்தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1175 மதிப்பெண்களை எடுத்து திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியை (மாநில முதல் மதிப்பெண் 1183) உற்பத்தி செய்திருக்கிறது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் இதே மாதிரி மாவட்ட முதலிடம் பெற்ற மாணவியை எங்களூர் கொண்டிருந்தது. இருவரும் சகோதரிகள்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் என் நினைவுக்கு வருகிறது. கோவை மாநகரம் அடக்க முடியாத வியப்பை எனக்களித்த சமயம் அது. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேல் நிலைப் பள்ளிப் படிப்புக்குக் கோவையில் சேர்ந்திருந்தேன். என்னை விடக் கூடுதல் மதிப்பெண் வாங்கிய நிறைய பேர் 11 ஆம் வகுப்பில் நுழைந்தனர்.

அதில் ஒருவன், பத்தாவதில் ஐநூறுக்கு 465 மதிப்பெண் பெற்றிருந்தான். வெகு விரைவில் பதினொன்றாவது காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் 1,200 க்கு 464 மதிப்பெண் மட்டுமே அவனால் எடுக்க முடிந்தது. தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே ஒருவனின் அறிவை அளவிடும் துல்லியமான கருவியல்ல எனப் புரிந்துகொள்ள அது எனக்குப் போதுமானதாக இருந்தது.

மாநில முதலிடம், இரண்டாம் இடம் வாங்கும் மாணவர்கள் பேப்பருக்கு போஸ் கொடுத்து, தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகிறார்கள். அதன் பிறகு என்ன ஆகிறார்கள்? சமுதாயத்தில் இவர்களால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? யாருக்குமே விடை தெரியாத கேள்விகள் இவை.

அவர்களது கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், உழைப்பும் நிச்சயம் பாராட்டுக்கு உரியது. அதற்கு இணையான அளவு பரிதாபமும் அவர்கள் மீது எனக்கு எழுவதுண்டு. அன்னம், தண்ணீர் பாராமல் வருடம் முழுவதும் கண் விழித்துப் படித்து எண்ணற்ற மதிப்பெண் வாங்கும் நபர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை குறித்து கரிசனமும் உண்டு.

தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை விளக்கு - என்ற கேள்வியிலிருந்தே எனக்கு பயாலஜி மீது பயம். பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் தேர்வுக்கு முந்தைய நாள் தூர்தர்ஷனில் ‘தூறல் நின்னு போச்சு’ படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் சேர்ந்த அதே கல்லூரியில், அதே துறையில்தான் என்னை விட 100 மதிப்பெண் கூடுதலாக எடுத்த எங்கள் பள்ளியின் முதல் மாணவன் அந்தோணி சேர்ந்தான்.

எங்களுக்கு முந்தைய வருடம் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனும்கூட அப்படித்தான். நினைத்த கல்லூரி கிடைக்காமல் ஒரு வருடம் கடத்தி எங்களோடு சேர்ந்தார் (ர் - ஒரு வருடம் சீனியர் அல்லவா).

கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். நள்ளிரவு நேரத்தில் ஒரு நாள் அந்தோணி கோவை அஞ்சுமுக்குப்பகுதி அருகே சுற்றிக்கொண்டிருந்த போது போலீஸ் அவனை லத்தியால் அடித்திருக்கிறது. அன்றே முடிவு செய்துவிட்டான், இனி மேல் போலீஸ் கை வைக்க முடியாத பணிக்குச் செல்ல வேண்டுமென்று. அதன் காரணமாகவே பிரபலமான மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தும்கூட அதை மறுத்துவிட்டான்.

இப்போது விமானப் படையின் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்து வருகிறான். சம்பளம் குறைவுதான். அவன் சம்பாதித்ததும் குறைவுதான். எனினும் கோயம்புத்தூரில் எந்த போலீஸ்காரரும் அந்தோணி மேல் இனி கை வைக்க முடியாது.

இந்தக் கதையை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், வேலைக்காகப் படிப்பதற்கும், விருப்பப்பட்டுப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு நம்மில் பல பேருக்குப் புரியவில்லை என்பதால்தான். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்காக மட்டுமே படித்தாக வேண்டிய சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் நாம் வசிக்க வேண்டியிருக்கிறது.

முதலிடம் வாங்கும் மாணவர்களில் எதிர்காலம் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களில் எத்தனை பேர் சுயமாகத் தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்று தெரியவில்லை.

ஜோதிஜி said...

திருப்பூரில் லிட்டில் கிங்டம் என்றொரு "தரமான" பள்ளிக்கூடம் இருக்கிறது. பாலர்பள்ளியில் கொண்டு போய் சேர்க்க பெற்றோர்கள் TOFEL போன்ற பரிச்சை எழுதி தேர்ச்சி பெற்று இருந்தாலும் அந்தம்மா கொடுக்கும் லந்தில் மறந்து போய் விடுவார்கள்.

பள்ளி தொடங்கியது முதல் மத்திய அரசாங்கம் பாடத்திட்டம் என்று வசூலித்த தொகை மூன்று இலக்க கோடிகளைத் தாண்டும்.

குவிந்து கொண்டுருப்பவர்கள் இருக்கும் போது அந்தம்மாவின் கும்மி எப்படி குறையும்.

சில மாதங்களுக்கு முன் கவர்னர் வந்து போன பிறகு (?) பாடத்திட்டம் ஓகே ஆகியுள்ளதாம். கக்கூஸ் போல் தொடங்கிய கட்டிடம் இன்று கல்லூரி போல் ஐந்து வருடங்களில் வளர்ந்து உள்ளது.

கேள்வி கேட்பவர்கள் யாராவது இருந்தால் TC வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லும் அந்தப் பேயின் ஆட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தவறு அந்த பணப்பேய் மேல் அல்ல. புரியாத பிசாசுக்கூட்டத்தின் மேல்.

idi thaangi said...

"படிக்கிற பிள்ளைகள் எங்கு இருந்தாலும் படிக்கும் என்பதற்கு இந்த உதாரணங்கள் போதும்தானே?" அய்யா ஒரு விதிவிலக்கு கேசை வைத்து பொது கேசை பேசக் கூடாது. விதி விலக்குகள் எதிலும் உண்டு. மோசமான பள்ளியில் படிப்பதை விட நல்ல பள்ளியில் படிப்பது ஒரு சுமாரான மாணவனுக்கு நிச்சயம் சாதகமாகவே அமையும் என்பதில் ஐயம் இருக்க முடியுமா என்ன? ஆகவே தவறான கருத்துக்களை பரப்பாதீர்.

Anonymous said...

You all are bloody idiots. when government can deliver liquor with out fail in time, why not government deliver education. Just because you want some one to work for you you start the bogey of free education.

The taxes of people are for peoples welfare, even part of 25,000 crores from tasmac sales say 10 % can pay all engineering education and school education free.

The bastard are after chidambaram temple, courts support the criminal acts. instead of that you all should go to courts asking govt to take ver all schools and appoint local management team to manage schools

virutcham said...

தனியார் பள்ளி சார்ந்த குறைகளை எங்கு யாரிடம் முறையிட வேண்டும் என்பது பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன்