ஜோஹன்னஸ்பர்க் , எல்லிஸ் பார்க் அரங்கம்.
2 -ஆம் தரவரிசை ஸ்பெயின், 38 -ஆம் தரவரிசை ஹோண்டுறாஸ் அணிகள் இடையில் ஆன லீக் போட்டி.
ஸ்பெயின் அணி உலகின் தலைசிறந்த கோல் காப்பாளர் இகர் கேசில்லாஸ்(Iker Casillas), முன்கள வீரர்கள் டாரஸ்(Torres), டேவிட் வில்லா(David Villa) , மையகள வீரர் செஸ்க் பாப்ரிகாஸ்(Cesc Fabregas) என ஒரு நட்சத்திரக் கும்பலை கொண்டது.
மாறாக ஹோண்டுராஸ் நட்சத்திர வீரர்களோ, செல்சீ, ரியல் மாட்ரிட் போன்ற முன்னணி கிளப் வீரர்களோ கொண்ட அணி அல்ல.
2008 ஆம் ஆண்டு யூரோ சாம்பியன் ஸ்பெயின் தனது முதல் ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால், வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
முதல் பாதி:
வழக்கம் போல ஸ்பெயின் அணி தனது அதிரடிஆட்டத்தை வூவூசெலா(vuvuzela) ஆரவாரங்களுக்கு இடையே தொடங்கியது. 7 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா சற்று தொலைவில் இருந்து அடித்த பந்து, கோல் கம்பத்தின் மேல் விளிம்பில் பட்டு வெளியேறியது.
அடுத்தடுத்து ஸ்பெயின் வீரர்கள், ஹோண்டுராஸ் பெனால்டி பகுதியில் சரமாரியாக தாக்குதல்களை நடத்தினாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனாலும் மையகள பகுதியில் பந்தினை பாஸ் செய்யும் வேகம் பிரம்மிப்பாக இருந்தது. இந்த உலக கோப்பையில் இவ்வளவு நளினமாகவும், வேகமாகவும் ஆடும் ஒரே அணி ஸ்பெயின் மட்டுமே.
கோல்!!! - ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் ஹோண்டு ராஸ் அணியின் மூன்று பின் கள ஆட்டக்காரர்களை ஏமாற்றி , ஸ்பெயினின் டேவிட் வில்லா முதல் கோலை போட்டார். குறிப்பாக வில்லா -வின் வேகமான dribbling (பந்தினை லாவகமாக சிறு சிறு எத்துதல்களினால் கடத்துதல்) அர்ஜென்டினா-வின் மெஸ்ஸி-யை ஞாபகப்படுத்தியது.
33 - வது நிமிடத்தில் டாரஸ் அடுத்தடுத்து இரண்டு வாய்ப்புகளை வீணடித்தார். 41-வது நிமிடத்தில் வில்லா கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார்.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0௦ என்ற கணக்கில் முன்னணியில் இருந்தாலும் நழுவவிட்ட கோல் வாய்ப்புகளைப் பார்க்கும் போது, ஒரு பின்னடைவே. ஹோண்டுறாஸ் அணியால் கோலை நோக்கி உருப்படியாக ஒரு தடவை கூட பந்தினை நகர்த்த முடியவில்லை.
இரண்டாம் பாதி:
இரண்டாம் பாதியில் களம் இறங்கிய ஹோண்டுறாஸ் அணியின் மாற்று ஆட்டக்காரர் பெயர் வெல்கம்(Welcome).
கோல்!!! - 51 -வது நிமிடத்தில் டேவிட் வில்லா அடித்த பந்து ஹோண்டுறாஸ் அணியின் பின்கள ஆட்டக்காரரின் காலில் பட்டு உயரே எழும்பி, கோல் கீப்பரை ஏமாற்றி வலைக்குள் புகுந்தது. ஸ்பெயினின் எதிர்பாராத கோல் .
ஸ்பெயின் வீரர் பீகே-விற்கு(Pique) இது போதாத உலக கோப்பை போல. சுவிட்சர்லாந்து ஆட்டத்தில் எதிரணி வீரர் காலணி பட்டு கண்ணின் விளிம்பில் காயம். இந்தமுறை ஹோண்டுறாஸ் வீரர் வெல்கம் காலணியால் வாயில் காயம். உலக கோப்பை முடிவதற்குள் உடம்பு ரணகளம் ஆகிவிடும்.
பெனால்டி வாய்ப்பு - ஆட்டத்தின் 16-வ நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நவாஸ்(இவரின் நீல நிற கண்கள் கிரேக்க சிலையையோ (அ) மறுமலர்ச்சி கால சிலையையோ ஞாபகப்படுத்தியது) , ஹோண்டுறாஸ் பின்கள ஆட்டக்காரரால் பெனால்டி பகுதிக்குள் தள்ளிவிடப்பட்டதால் தரப்பட்டது.
டேவிட் வில்லா, ஹாட் டிரிக் கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்த பொது , அவர் அடித்த பந்து கோல் கம்பத்தைத் விட்டு விலகி வெளியே சென்றது. அருமையான வாய்ப்பு கோட்டை விடப்பட்டது.
செஸ்க் பாப்ரிகாஸ் - சென்ற ஆட்டத்தைப் போலவே , இதிலும் ஆட்ட பின்பாதியில் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய போது ரசிகர்களின் ஆரவாரிப்பு வூவூசெலாவையும் மீறி கேட்டது. அவர் களம் இறங்கிய உடன், 66- வது நிமிடத்தில் அவர் அடித்த பந்து கோல் ஆயிருக்க வேண்டிய நேரத்தில், ஹோண்டுறாஸ் ஆட்டக்காரர் சிறப்பாக தடுத்து வெளியேற்றினார்.
ஆட்டத்தின் மீதி நேரத்தில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தினாலும் , மூன்றாவது கோல் போடமுடியவில்லை. ஹோண்டுறாஸ் கடைசிவரை எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. அந்த அணியின் வீரர் மார்ட்நேசின் சேவல் கொண்டை தலைமுடியை தவிர அவர்களின் ஆட்டத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை
இந்த வெற்றி மூலம் ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை Group-H ல் தக்க வைத்துக் கொண்டது. அடுத்த ஆட்டத்தில் சிலியை சந்திக்கிறது.
கடந்த போட்டியினைப் போலவே ஸ்பெயின் அணியினர், இந்த ஆட்டத்திலும் finishing- இல் சொதப்பினர். மைய களத்தில் இருந்து லாவகமாக கொண்டு வரப்படும் பந்தை கோல் கம்பத்திற்குள் அனுப்புவதில் பல தடவை கோட்டை விட்டனர்.
ஸ்பெயினின் இந்த வெற்றியினால் எனக்கும் மகிழ்ச்சி தான். காரணம் சுவிட்சர்லாந்து போட்டியின் இறுதி நேரத்தில் கேமரா மேனால் திரும்ப, திரும்ப காட்டப்பட்ட வருத்தம் தோய்ந்த, அந்த ஸ்பானிய தேவதை-யின் (:)) முகத்தில் கொள்ளை சந்தோசம் கண்டிப்பாக இருக்கும் என்பதாலும்.
ஸ்பெயின் கண்டிப்பாக இறுதிப் போட்டிக்குள் செல்ல வேண்டும் என நான் விரும்புவது அவர்களின் சிறப்பான ஆட்டத்திற்காக மட்டுமில்லாமல் அந்த அழகுப் பெண்ணின் மகிழ்ச்சிக்காகவும் தான் . So, ஸ்பானிஷ் பசங்களா பாத்து ஆடுங்கப்பு.
- இளமாறன்
இளமாறனை இட்லிவடை குழு வரவேற்கிறது!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, June 24, 2010
கால்பந்து போட்டி விமர்சனம்
Posted by IdlyVadai at 6/24/2010 12:41:00 PM
Labels: இளமாறன், விமர்சனம், விருந்தினர், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)











8 Comments:
IV,
Off topic an interesting news item:
http://timesofindia.indiatimes.com/India/Land-gifted-to-Rajendra-Prasad-usurped-by-Cong/articleshow/6084995.cms
இளமாறறின் கால்பந்து போட்டி விமர்சனம் மிக அருமையாக உள்ளது
வாழ்த்துகள்.
//இளமாறனை இட்லிவடை குழு வரவேற்கிறது!
//
நல்ல விமர்சனம்
இந்த வாட்டி பிரான்ஸ் மிகப்பெரிய அதிர்ச்சி ..கால்பந்தாட்ட உலகத்திலேயே பிரான்ஸ் "Zidene" மாதிரி ஆடுவதற்கு இன்னொருத்தன் வர மாட்டான் (ர்) . அவர் போன டீம் உயிர் இல்லாமல் இருக்குது
களம் எனவோ Argentina , பிரேசில்கு சாதகமா இருக்கு . இந்த வருடம் என் அதரவு போர்சுகல் , நெதர்லாந்து . போன வாட்டி இந்திய லேர்து ஒரு ரெப்ரீ அவது போனாக ..இந்த வாட்டி அதுவும் இல்ல . ஹ்ம்ம்ம் .... Hocky எ ஒழிசாச்சு , கிரிக்கெட் ம ஒழிகறதுக்கு ஒரு மோடி மஸ்தான் வந்தாச்சு , அட போங்கப்பு ...
இத்தாலி கால பந்தில் (லாவது) அடி வாங்கியது சந்தோஷமாக இருந்தது.
IV,
A good article in New Indian Express on STM.
http://expressbuzz.com/opinion/columnists/kalaignar%E2%80%99s-vuvuzela/184604.html
உங்கள் தேவதைக்காகவாவது ஸ்பெயின் வெல்லட்டும்...
டேவிட் வில்லா என்பதை டாவிட் வியா என்றும் காசில்லஸ் என்பதை காசிய்யாஸ் என்றும் உச்சரிக்க வேண்டும்.
Post a Comment