அமைச்சர் நெப்போலியனின் உதவியாளர் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் படம் பதித்த மோதிரத்தை தனது விரலில் அணிந்திருந்தார். சில சமயம் டிபன் சாப்பிடும் போது இதை கழட்டி தட்டாகவும் உபயோகப்படுத்துவார் என்று தெரிகிறது. போன வாரம் விமான நிலையத்தில் வந்த போது இவருடைய மோதிரம் லாலுவின் கண்ணில் பட இந்த மோதிரத்தை போட்டு பார்க்கலாமா என்று கேட்டுள்ளார். மேலே உள்ள படம் அது தான். முன்பு பால் கறப்பது மாதிரியும், தன் கிராம மக்களுக்கு கிராப் வெட்டுவது மாதிரியும் போஸ் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விமான நிலையத்தில் இந்த மோதிரத்தை போட்டுக்கொண்டு திமுகவினரை உற்சாகப்படுத்தினார் என்று செய்தி:-)
மோதிரம் கொடுத்தவர் உற்சாகமாக இருந்தாரா ? லாலு திருப்பி கொடுத்தாரா ? இவ்வளவு பெரிய அழகிய மோதிரத்தில் அழகிரிக்கு ஏன் கொஞ்சம் இடம் கொடுக்கவில்லை போன்ற செய்திகள் இல்லை.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, June 17, 2010
திமுகவில் லாலு ?
Posted by IdlyVadai at 6/17/2010 06:49:00 AM
Labels: செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










10 Comments:
அது சாப்பாட்டு தட்டாக மட்டுமன்றி பல வட்டங்கள், மாவட்டங்கள் அது போன்ற மோதிரங்களை, தங்களுடைய (மிக எளிமையான) கார்களில் மிதமான வேகத்தில்(குப.80கிமீ)நகரவலம் வரும் போது-போலீசார பிடித்து வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பதற்காக, dashபோர்டு மீதும் வைத்திருக்கிறார்கள்!!
//இவ்வளவு பெரிய அழகிய மோதிரத்தில் அழகிரிக்கு ஏன் கொஞ்சம் இடம் கொடுக்கவில்லை போன்ற செய்திகள் இல்லை//
வம்புக்கு ஏன் இப்படி இட்லி வடை எப்படி அலையறது :-D
இந்த மோதிரத்தி விரல்ல போடுவாரா முழகைல போடுவாரா??? ரொம்பச் சின்னதா இருக்கு...
ஹாண்ட் லக்கேஜ்-ல் இருக்கும் ஊறுகாய்பாட்டில் இட்லி பொடியை எல்லாம் தூக்கி காடாசி விடுகிறார்களே
இந்த மாதிரி ஆயுதத்துடன் விமானத்தில் ஏற எப்படி அனுமதிக்கிறார்கள்.
ஆபத்து சமயங்களில் சட்டசபையில் அடிதடியின் போது மைக், செருப்பு, நாற்காலி போன்ற பொருட்கள் பறந்து வரும் போது கேடயமாகவும் பயன்படும். வசதியாக இதன் பின் நாமே மறைந்து கொள்ளவும் செய்யலாம்.
இது ஒரு 2 in 1. இதை கொண்டு தாக்கவும் செய்யலாம். (தாமரைக்கனி!)
மோதிரம் கொடுத்தவர் உற்சாகமாக இருந்தாரா ? லாலு திருப்பி கொடுத்தாரா ? இவ்வளவு பெரிய அழகிய மோதிரத்தில் அழகிரிக்கு ஏன் கொஞ்சம் இடம் கொடுக்கவில்லை போன்ற செய்திகள் இல்லை
//
பரட்ட பத்தவச்சுட்டியே!
அன்பு நண்பர்களே ..
கிழே இருக்கும் இந்த சுட்டி ய் சொடிக்கி , தமிழ் செம்மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல் இ தெரிஞ்சு கொள்ளவும் . எல்லோரும் குடும்பத்துடன் கண்டிப்பாக வந்து விடாதிர்கள் . நாங்களே கோயம்புத்தூர் விட்டு எங்க ஓடறது தெரியாம இருக்கோம் . அஞ்சு நாள் வியாபாரம் ( அதான் பா பிசினஸ்) மணியடிக போவதால் நல்ல போக்கிடம் இருந்தால் சொல்லவும் . வாழ்க தமிழ் ... வாழ்க ஸ்பெக்ட்ரம் .. வாழ்க இந்தியா ..
http://coimbatoreli ve.blogspot. com/2010/ 06/5.html
Patha Vachitiya Parata.
நெப்பொலியனின் உதவியாளரே இவ்வளவு பெரிய மோதிரம் வைத்திருந்தால், மந்திரியிடம் என்ன எதிர்பார்க்கலாம்? ஆனால், எனக்குத் தெரிந்த வரையில் நெப்போலியன் அப்படியிருக்கமாட்டார். (அவர் நேர் வழியில் பிஸினெஸ் செய்தது தெரியும்).
அவர் உதவியாளர் என்பவர், உண்மையில் மேலிடத்து ஒற்றர் என்பது என் அபிப்ராயம்.
பண்டைய காலத்தில் வாள் சண்டையிடும் போது பாதுகாக்க கேடையம் பயன்படுத்துவார்கள்...
இதுவும் கேடையம் தான்....(கொஞ்சம் சிறுசு) ...
பல பிரச்சனைகள் வரும் போது பாதுகாத்துகொள்ளலாமே...
Post a Comment