பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 16, 2010

போபால் கசிவும், பிரிட்டிஷ் கசிவும்.

சில வாரங்களாக ஆங்கில செய்திகளில் மட்டும் இந்த செய்தி வந்து கொண்டு இருக்கிறது. டிவிட்டரில் வழக்கம் போல ஐஃபோன், பிளாக்பெரி, செம்மொழி என்ற ஜல்லியும். என் போஸ்ட் என்ற விளம்பரமும். ஆறுதலுக்கு பேயோன் மட்டும் தான் இருக்கிறார்.

சரி விஷயத்துக்கு வருவோம். பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவு தொடர்ந்து பரவுகிறது. இதற்கு முன் இது மாதிரி நிறைய நடந்திருக்கு ஆனால் இந்த முறை ஓபாமாவுக்கு கொஞ்சம் கோபம் வந்ததால் இன்னும் பிபிசியில் இந்த நியூஸ் வந்துக்கொண்டு இருக்கிறது.
கடந்த வெள்ளி அன்று இந்த கசிவு புளோரிடாவை வந்து அடைந்திருக்கிறது. தனக்கு வந்தால் தான் பித்தமும் தலைவலியும் என்பது போல அவர்கள் பக்கம் வந்தால் தான் பிரச்சனை புரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த மாதிரி எண்ணை கசிவினால் வழக்கம் போல இறந்த மீன்கள் கரைப்பக்கம் ஒதுங்கும். வேறு பல உயிரினங்களும் மடியலாம்.

BP ( பிரிட்டிஷ் பெட்ரோலியம்) நிர்வாகமும் ஓபாமாவும் கசிவை நிறுத்த மற்று திட்டம் பற்றி ஒன்றை வகுத்துள்ளார்கள். ஆனால் அது நடைமுறைக்கு வர ஆக்ஸ்ட் மாதம் ஆகலாம். அதுவரை ஒரு நாளைக்கு 500,000 காலன் முதல் 4 மில்லியன் காலன்கள் வரை கசிவு ஏற்படுகிறது.

இந்த எண்ணை கசிவினால் என்ன பெரிய பாதிப்பு என்றால் அமெரிக்க சுற்றுலா துறைக்கு பெரிய பாதிப்பு. இந்த பழுப்பு நிற தண்ணீரில் நாங்க குளிக்க மாட்டோம் என்று பயணிகள் அடம்பிடிக்கிறார்கள். ஓபாமாவுக்கு வந்துவிட்டது கோபம்.

பெரும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டை ஒபாமா நிர்வாகம் எடுத்துள்ளது.

ஆனால் இதே போன்ற நிலைப்பாட்டை நிலைப்பாடு அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் பொருந்தும். ஆனால் நம் அரசு உடனே எதுவும் செய்யாது. மிஞ்சி போனால் ஒரு கடிதம் எழுதும். சில தொண்டு நிறுவன அம்மாக்கள் காட்டன் புடவை கட்டிக்கொண்டு ஆங்கில சேனலில் பொளந்துக்கட்டுவார்கள். லல்லு ஏதாவது ஜோக் அடிக்க உடனே டிவியை அங்கே தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்.


பிளைட்டில் இறந்தவர்களுக்கு சில லட்சம் நஷ்ட ஈடும், ரயிலில் இறந்தவர்களுக்கு சில ஆயிரம் நஷ்ட ஈடும் கொடுப்பதில்லையா ? போபால் கசிவும், பிரிட்டிஷ் கசிவும் அது மாதிரி தான்.

16 Comments:

Guru said...

///பிளைட்டில் இறந்தவர்களுக்கு சில லட்சம் நஷ்ட ஈடும், ரயிலில் இறந்தவர்களுக்கு சில ஆயிரம் நஷ்ட ஈடும் கொடுப்பதில்லையா ? போபால் கசிவும், பிரிட்டிஷ் கசிவும் அது மாதிரி தான்.///

வரிக்கு வரி வழிமொழிகிறேன் !

Rangan Kandaswamy said...

நீங்கள் அமெரிக்காவில் படித்து விட்டதால், அமெரிக்க ஜால்ரா என்று தெரிகிறது.

அமெரிக்காவின் பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று எழுதவும்.

சரி அவர்கள் எக்கேடு கேட்டால் நமக்கென்ன? நம் நாட்டை தான் பார்க்கணும்.

நம் நாடு இப்படி தான்.

யார் தவறு? அரசியல்வாதிகள்....

ராசராசசோழன் said...

நெத்தில அடிக்கிற மாதிரி சொல்லிடீங்க..

ஜோதிஜி said...

இது குறித்து ஹாலிவுட் பாலா மேலோட்டமாக ஒரு பின்னூட்டத்தில் எழுதி உள்ளார்.

Anonymous said...

சேலம் பக்கத்துல எங்க சுடுகாட்டுல ஐயர் பொணத்தை எரிக்க விட மாட்டோமுன்னு தகராறாமே! ஜூ.வி.யில பாத்தீங்களா?!

கடைசியா அருந்ததியர் மக்கள் வந்து உதவி பண்ணி பிணத்தை எரித்தார்களாம்

இதுவும் பார்ப்பனீயத்தில வருமோ?!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நம்ம ஊரு அரசியல்வியாதிகளுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் முதுகெலும்பு உடைந்து ரொம்ப நாளாகிறது. இதில் உலக நாயகன் (என தானே நம்பும்) அமெரிக்காவிற்கு எதிராக எதுவும் நடக்காது.

செந்தழல் ரவி said...

சில வாரங்களாக ஆங்கில செய்திகளில் மட்டும் இந்த செய்தி வந்து கொண்டு இருக்கிறது. டிவிட்டரில் வழக்கம் போல ஐஃபோன், பிளாக்பெரி, செம்மொழி என்ற ஜல்லியும். என் போஸ்ட் என்ற விளம்பரமும். ஆறுதலுக்கு பேயோன் மட்டும் தான் இருக்கிறார்.&&&

என்னை தேறுதலுக்காவது சேர்த்துக்கொள்ளுதல் நலம். போர் அடிக்காம இருக்கும்.

செந்தழல் ரவி said...

சேலம் பக்கத்துல எங்க சுடுகாட்டுல ஐயர் பொணத்தை எரிக்க விட மாட்டோமுன்னு தகராறாமே! ஜூ.வி.யில பாத்தீங்களா?!

கடைசியா அருந்ததியர் மக்கள் வந்து உதவி பண்ணி பிணத்தை எரித்தார்களாம்

இதுவும் பார்ப்பனீயத்தில வருமோ?!

June 16, 2010 7:06 PM///

இதை இங்கே போட்டது யாரு ?

யதிராஜ சம்பத் குமார் said...

யூனியன் கார்பைடு ஆண்டர்சனை விடுவிப்பதற்கு அல்லது தப்புவிக்க வைப்பதற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் (இன்றும் இருப்பவர்கள்) நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது அன்றாடம் வெளிவரும் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. அன்றைய ஆண்டர்சன் முதல் இன்றைய குவாட்ரோக்கி வரை அயல்நாட்டு அயோக்யர்களை விடுவிப்பதில் காங்கிரஸிற்கு அப்படி என்னதான் ஆதாயமோ தெரியவி்ல்லை. அன்று அவர்கள் செய்ததை இன்று இருப்பவர்கள் முழுமையாக மறைப்பதற்கு மெனக்கெடுகிறார்கள். ஆக காங்கிரஸ் இந்தியாவிற்கு சவக்கிடங்கு தோண்டுவதில் அன்று முதல் இன்றுவரை நிறையவே மெனக்கெட்டிருக்கிறது என்பதுதான் அவர்களின் ஐம்பதாண்டு கால ஒரே சாதனை.

ஒபாமாவை இதில் குறைகாண இடமில்லை. பிரச்சனை என்று வந்ததும் நட்பு நாட்டிடமும் கடுமை காட்டுகிறார். ஆனால் நம் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது. பாகிஸ்தானிடம் இன்னும் கெஞ்சும் நிலையில்தான் இருக்கிறோம். இதுதான் ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கிடையேயும் உள்ள வித்யாசம்.

Anandha said...

+1

I agree with you. Bhopal incident was bigger than 9/11 because it killed more people than any other single incident. It was mad made disaster.

But our leaders are not buying and right now blame game is going on. Our Congress leaders are almost become PRO for Warren Anderson. So we would never reach consensus on this.

Anonymous said...

ஐயா அது பெயர்தான் பிரிட்டிஷ் பெட்ரோலியமே தவிர அது ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனி அமெரிக்கர்கள்தான் அதில் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள். இட்லி வடை இன்னும் ஆழமாக ஒரு கட்டுரை போட்டிருக்கலாம். நிலமை இ வ சொல்வது போல அவ்வளவு சிம்ப்பிளானது இல்லை. இந்தக் கசிவு ஒட்டு மொத்த உலக அழிவில் கொண்டு போய் விட்டு விடக் கூடிய அளவு ஆபத்தானது. விஷயம் மிகவும் சீரியசானது. மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் கசிவினால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்பு வெறும் 11 பேர்கள்தான் அதையும் போபாலில் இறந்த 15000 பேர்களையும் ஒப்பிட முடியாது. ஆனால் இந்தக் கசிவு இப்படியே தொடருமானால் உலகம் அழியும் நிலை வந்து விடும். நான் ஆண்டர்சனையோ அமெரிக்காவையோ குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. நம்மை ஆளும், நாம் ஓட்டுப் போடும் காங்கிரஸ் கட்சி மட்டுமே அனைத்துக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். அர்ஜுன் சிங் போன்ற ஒரு நாசகாரனை மக்கள் கல்லால் அடித்துக் கொன்றாலும் தகும். மன்மோகன் சொல்கிறார் போபால் போன்ற விபத்து எல்லாம் சகஜமாம். இப்படி ஒரு பிரதமர். குவாட்ரோச்சியையும் ஆண்டர்சனையும் தப்பித்து வைக்கும் ஒரு சூப்பர் பிரதமர் அவளுக்கு ஏவல் செய்ய அர்ஜுன் சிங் போன்ற அல்லக்கைகள் இவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்கள். இன்னும் ஆயிரம் விஷ வாயு கசிந்தாலும் நம் மக்கள் திருந்தப் போவதில்லை.

இட்லி வடை நம் தமிழ் பத்திரிகை மாதிரி கட்டுரை வெளியிடாமல் சொல்வனத்தில் வரும் விஞ்ஞான கட்டுரைகள் போல ஆழமான கட்டுரை ஒன்றை இந்த விஷயத்தில் வெளியிட வேண்டும்

வசீகரா said...

Dear Idlyvadai,

Please look into this FAQ: http://www.bhopal.com/faq.htm#faq0

the Union Carbide blames indian employee who delibrately poured water which caused the gas leakage. Its a shocking news and no one knows about it. Do you?

Mani

VENG said...

பிளைட்டில் இறந்தவர்களுக்கு சில லட்சம் நஷ்ட ஈடும், ரயிலில் இறந்தவர்களுக்கு சில ஆயிரம் நஷ்ட ஈடும் கொடுப்பதில்லையா ?

-செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

R. Jagannathan said...

All of you would also have read / seen today's news that BP has agreed to deposit $20Billion in an escrow account for damages.
We are Indians - slaves despite 60 years of Independence. We didn't have and we don't have political leaders with spine to stand up to countries and to protect our interest.
It is also true, we Indian Nationals as a whole, do not conduct ourselves with dignity and self-respect which can command respect of other nationals.
Our media harping on the 'escape' of Warren Anderson had done nothing in the past years for the Bhopal cause - except for annual remebrances.
-R. Jagannathan

Gopal said...

To quote like Telecom 2G/3GRasa Bhopal accident is like PDS rice and BP oil spill is Basmati rice. Thats all.

Anonymous said...

CAN SOMEBODY WRITE ABOUT CUDDALORE SIPCOT (CUDDALORE- CHIDAMBARAM ROAD) WHERE ONE MORE DISATER IS AWAITING? GOPALA ALKHOBAR