பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 05, 2010

பள்ளியில் முதலிடம் பெற்றும் படிக்க வழியற்ற வெட்டியான் மகன்

சில நாட்களுக்கு முன் இட்லிவடையில் போட சொல்லி எனக்கு வந்த செய்தி. தாமதத்துக்கு மன்னிக்கவும்...


பத்தாம் வகுப்பில் 474 மதிப்பெண் பெற்ற மயான வெட்டியான் மகன் தனசேகரபாண்டியன் மேல்படிப்புக்கு வழியின்றி தவிக்கிறார்.மதுரை பாக்கியநாதபுரத்தை சேர்ந்த பாண்டி, தத்தனேரி மயானத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது மகன் தனசேகர பாண்டியன், கனகவேல் காலனி ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவரது மார்க் விபரம்:தமிழ்-94, ஆங்கிலம்- 89, கணிதம்-100, அறிவியல்-98, சமூகஅறிவியல்- 98.

வறுமை குடும்பம்: தந்தை பாண்டி தத்தனேரி சுடுகாட்டில் வெட்டியான் உதவியாளராக பணியாற்றுகிறார். குடும்ப வறுமையால் பாண்டி மேல்படிப்புக்கு செல்ல முடியவில்லை. பள்ளி முதல்வர் தாமஸ் கிறிஸ்டோபர் கூறுகையில், அனைத்து வகுப்புகளிலும் தனசேகர பாண்டியன் முதலிடம் பெறுவார். எனவே அவருக்கு வகுப்பாசிரியை இந்திரா உட்பட ஆசிரியர்கள் சிறப்பு கவனம் எடுத்தனர். மாவட்ட ராங்க் பெறாவிட்டாலும்,
பள்ளியில் முதலிடம் பெற்றுவிட்டார்'' என்றார்.

தந்தை பாண்டி கூறுகையில், "வேறெந்த வருமானமும் இல்லாத நிலையில், வருவாய் போதவில்லையென்றாலும் எனது மகன், மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறேன். எனது மகன் நல்ல மதிப்பெண் பெற்றதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் மேலும் படிக்க வைக்க வழியில்லை. எனது மகன் நன்கு படிப்பார் என்பதால் எனது தொழிலில் ஒருபோதும் அவரது உதவியை நாடியதில்லை'' என்றார்.

தனசேகர பாண்டியன் கூறுகையில், உயர்கல்வியில் மருத்துவத் துறையை தேர்வு செய்ய விரும்புகிறேன். ஆனால் பிளஸ்2 படிப்பே கேள்விக்குறியாகிவிடும் போல உள்ளதுஎன்றார். இவருக்கு உதவ விரும்பினால், "217, அந்தோணியார் கோயில் குறுக்குத் தெரு, பாக்கியநாதபுரம், தத்தனேரி, மதுரை-18' என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். பள்ளி முதல்வரை 94430 20125 ல் அழைக்கலாம்.

( நன்றி: தினமலர் )30 Comments:

Udayakumar Sree said...

கட்டாயம், இந்த விஷயத்தை அமைச்சர் பொன்முடி கவனத்திற்கு கொண்டு செல்ல மாண்புமிகு அனைத்து இட்லிவடை வாசகர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். என்னால் முடிந்த உதவியையும் செய்கிறேன். தனியார் கல்வி நிறுவனங்களோடு தொடர்புள்ள இட்லிவடை வாசகர்கள் நினைத்தால் தனசேகர பாண்டியனின் கல்வி ஒரு பெரிய விஷயமே இல்லை!!!

geetha santhanam said...

தனசேகர பாண்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கட்டாயமாக எங்களால் முடிந்த பொருளுதவியைச் செய்கிறோம். தகவலுக்கு நன்றி.---கீதா

Anonymous said...

உண்மையில் எஸ் ஸி எஸ் டிக்கான இடங்களையெல்லாம் அவர்களில் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ், டாக்டர், அரசியல்வாதிகள் வீட்டுப் பிள்ளைகள் அள்ளிக் கொண்டு போக இவரைப் போன்றவர்கள் படிக்க முடியாமல் போய் விடுகிறது. ப்ளஸ் 1, 2 படிக்க அதிகம் செலவாகாது அதை அந்த பள்ளியே கவனித்துக் கொள்ளலாம். கல்லூரிப் படிப்பு என்றால் அதுவும் தனியார் கல்வி என்றால் அதிகம் செலவு ஆகலாம் அதற்குத் தாராளமாக அனைவரும் உதவி செய்யலாம். +2 படிப்பிற்கு என்ன உதவி எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை அதிக பட்சம் அவருக்கு வருடத்திற்கு ஒரு சில ஆயிரம் ரூபாய்கள் தேவைப் படுமாக இருக்கும்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//தனியார் கல்வி நிறுவனங்களோடு தொடர்புள்ள இட்லிவடை வாசகர்கள் நினைத்தால் தனசேகர பாண்டியனின் கல்வி ஒரு பெரிய விஷயமே இல்லை!!!
//

well said.

kggouthaman said...

நன்றி. இ வ வாழ்க வளமுடன்.

Anonymous said...

idlyvadai supports varnasramam..so he should not continue studies. he should help his father performing his dharma.

- Shankara

KVK said...

http://agaram.in/

KVK said...

The organization working towards helping the under-privileged in attaining their right to knowledge and quality education. Agaram provides a platform for better learning, a podium to brighten their tomorrow and give them the best in their pursuit of happiness by transforming their dreams to reality.

http://agaram.in/about.php

Anonymous said...

May be the family would've declined converting to Xianity. Otherwise he would've got free education in that xian school.

snkm said...

மேல்நிலைக் கல்வி வரை அனைவருக்கும் கட்டாயமாக இலவசமாக கொடுக்க வேண்டும்! கல்வியின் தரத்தை அதிகரிக்க வேண்டும்! எல்லா சமுதாயத்திலும் உள்ள பணக்காரர்கள் அடுத்தவருக்கு வழி விட்டு தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் பணத்தில் படிக்க வசதி செய்து கொடுத்தால், எல்லாக் குழந்தைகளும் நல்ல தரமான கல்வி கிடைக்க வழி பிறக்கும்! குறைந்த பட்சம் நம் நண்பர்களாவது, இதை கடை பிடித்தால் நல்லது!

SAN said...

IV,
I recommend this site for all IV followers

http://www.narendramodi.com

A very interesting site on how a Cheif Minister should be.

யதிராஜ சம்பத் குமார் said...

idlyvadai supports varnasramam..so he should not continue studies. he should help his father performing his dharma.//


Total Barf.

sriram said...

அந்த பள்ளி முதல்வரிடம் தொலைபேசினேன். சிறுவனுக்கு பள்ளி இறுதி வரை தேவையான உதவி கிடைத்து விட்டது. கல்லூரி செல்லும் போது கண்டிப்பாக உதவி தேவைப் படுமென்று சொன்னார்.
அவரிடம் ஏதாவது ஒரு (பள்ளியின் / முதல்வரின் / சிறுவனினின்) மின் மடல் முகவரி கேட்டிருக்கிறேன், நாளை கிடைத்தவுடன் எழுதுகிறேன்.
சென்னையிலோ / மதுரையிலோ / மதுரை அருகிலோ இருக்கும் பதிவர் யாராவது இந்த சிறுவனை நினைவில் நிறுத்தி, அவ்வப்போது தொடர்பு கொண்டு உதவி தேவைப் படும் போது பதிவுலகத்துக்கு தெரியப் படுத்தினால் ... Nothing is Impossible.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

IdlyVadai said...

பாஸ்டன் ஸ்ரீராம்,

தகவலுக்கு மிக்க நன்றி. நிச்சயம் இவருக்கு நாம் உதவ வேண்டும்.

அன்புடன்,
இட்லிவடை

Anonymous said...

நல்லது நிரம்ப செய்கின்றீர்.

kggouthaman said...

பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களின் பின்னூட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது. இட்லிவடை வாசகர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமன் இந்தியா said...

பாராட்டுக்குரியது கட்டுரை மட்டும் அல்ல.இந்த போஸ்ட் களை படித்தால் பெரும் நம்பிக்கை பிறக்கிறது.ஒன்று நிச்சயம்! அந்தக் குழந்தைக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதால் தான் (இறைவனால்)இவ் விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக தோன்றுகிறது. நாம் எல்லோரும் பொருள் உதவி செய்தாலும்,அன்றிலும் ஒரு பெரும் பிரார்த்தனை செய்வோமாக!

Aruna said...

Sriram

Thanks for your post. I tried contacting the principal but there was no response. Could you please post an update when you have one? If any help is required, I would like to do my bit.

சாய்ராம் கோபாலன் said...

//sriram said... அந்த பள்ளி முதல்வரிடம் தொலைபேசினேன். சிறுவனுக்கு பள்ளி இறுதி வரை தேவையான உதவி கிடைத்து விட்டது. கல்லூரி செல்லும் போது கண்டிப்பாக உதவி தேவைப் படுமென்று சொன்னார்.
.... பாஸ்டன் ஸ்ரீராம் //

"எம்.ஜி. யார்" படத்தில் வருவது போல் "நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு - நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு"

"அந்நியன்" படம் பார்த்து தியேட்டர் விட்டு வெளியே வந்தவுடன் நாம் நம்மை சுற்றி நடப்பதை மறந்து நம் தேவையை மற்றும் பார்த்துக்கொள்ளுகின்றோம்.

அரசாங்கம் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம்மால் முடிந்த உதவியை நாமே செய்யலாம். இதை அமைச்சருக்கு கொண்டு செல்வதற்குள் அந்த சிறுவன் வேலைக்கே வந்துவிடுவான் அல்லது அமைச்சரே மாறி இருப்பார்.

"எங்கள் ப்ளாக்" கௌதமன் நான் அந்த பிள்ளையின் படிப்பு செலவை பார்த்துக்கொள்ள உதவ ரெடி என்ற அவரின் ப்ளாகில் போட்டதற்கு உங்கள் பதிவை பார்க்குமாறு சொன்னார்.

"என்ன கொண்டு வந்தோம் எடுத்து செல்ல".

நாம் கர்ணனாக இருக்க தேவையில்லை அட்லீஸ்ட் குசெலனாகவாவது இருப்போமே ?

Sanjith said...

Will it be possible to get help from AGARAM foundation , I have jus send a mail to them and will try calling also to get the information.

Anonymous said...

மற்றவருக்கு ஒரு கஷ்டம் என்றால் தன் சக்தியையும் மீறி உதவ இது போன்ற நடுத்தர வர்க்க வாசகர்கள் உடனடியாக முன் வருகிறார்களே தவிர கருப்பு பண பெரும் பணக்காரர்களோ, கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும் அந்த கிழக்கோட்டானோ கண்டு கொள்வதே இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் மட்டுமே தமிழகம் மொத்தத்தையும் இன்னும் 25 ஆண்டுகளுக்கு டிகிரி வரை இலவச கல்வி தர போதுமானது

Kameswara Rao said...

IV

Great that readers have already done their job..

Nice Post, Prompt Response

Let us not talk about politicians here "toothless guys" and Anony what you are talking is rubbish

All is Well

Kamesh
Botswana

ரிஷபன்Meena said...

//மற்றவருக்கு ஒரு கஷ்டம் என்றால் தன் சக்தியையும் மீறி உதவ இது போன்ற நடுத்தர வர்க்க வாசகர்கள் உடனடியாக முன் வருகிறார்களே தவிர கருப்பு பண பெரும் பணக்காரர்களோ, கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும் அந்த கிழக்கோட்டானோ கண்டு கொள்வதே இல்லை.//

நடுத்தர மக்கள் மட்டுமே வாழ்வை இரசித்து வாழ்பவர்கள். நிதானமான வாழ்க்கை வாழும் போது அடுத்தவர் துயரம் கண்ணில் படுகிறது, அதைக் களையவும் முடிகிறது.


ஆங்காங்கே கெஸ்ட் அவுஸ் வாங்கி வைத்திருக்கும் என் உறவினர் ஒருவர் வருடத்தில் ஒரு முறையேனும் அங்கே போய் தங்கி நான் அறிந்ததில்லை.

அளவுக்கு மேல் பணம் நிம்மதியை அழிக்க மட்டுமே.

Anonymous said...

WHat is his further education plan(+2/Diplamo/etc) ? And how much does he want? and for what.?

My question may be idiotic... but there has to be some clarity when you put down such obligation..

Is he not eligible under any existing scholarships???

sriram said...

Follow up :
The School is Good Sheperd Matriculation Hr Secondary School, the name of the contact person is Smiles. He is the son of the corrospondant and he is taking care of the school. As said earlier, Financial Aid for Pandian until 12th Std is secured and we can pitch in when he needs help for his college Education (provided he scores over 85% in 12th). The email ID of the school is gsmhss_84@yahoo.co.in.

Smiles claims that the school is being run with service motivation. He further claims that there are few students like Pandian who are doing well in studies and need financial support. I am working on confirming the claims made by Smiles using bloggers like Dharumi. Request the readers of Idly vadai to gather information about this school and share.

Let us all come to a common ground under the flagship of IDLY VADAI and adopt the poor children of this school (provided the claims are true and they are not charging exorbitant fee). We can make a representation to the school and request them to charge 50% of the fee for the poor kids and we can try to pay that 50%.

Please let me know your views on this

regards
Boston Sriram
bostonsriram.blogspot.com
nsriram73@gmail.com

Itsdifferent said...

Thanks to everyone who stepped in or would like to help out.
Mostly folks like this student, whose issue is highlighted in newspapers/magazines get immediate help. There are many more students like him, who are in need of help It would be better for all of us to associate ourselves with any one of such organizations, based on your experience, trust and belief.

I am associated with an org called IndiaSudar (http://indiasudar.org/) and we have been helping lots of students, continuously tracking them as well. We also help provide schools with supplies, teachers salaries etc. Check it out yourself, and if you are convinced please join.

Anonymous said...

Hi All,

10th pass outs (supported by Infosys foundation).


Dear all,
If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2010) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form:

580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block, Bangalore.

Contact numbers:
1. Ms. Saraswati - 99009 06338
2. Mr. Shivkumar - 99866 30301
3. Ms. Bindu - 99645 34667

Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help .

Shankar said...

Hi IV,
I have a fund to help needy students every academic year to commemorate may parents' death anniversary.I am willing to contribute either directly or through Idly vadai.
Kindly contact me.
Shankar
mahashank@gmail.com

IdlyVadai said...

//
Hi IV,
I have a fund to help needy students every academic year to commemorate may parents' death anniversary.I am willing to contribute either directly or through Idly vadai.
Kindly contact me.
Shankar
mahashank@gmail.com
//

ஷங்கர் நன்றி. இங்கே பாருங்கள் நீங்கள் உதவலாம்

http://idlyvadai.blogspot.com/2010/06/blog-post_09.html

ராமுடு said...

Pls Post this:

Dear all,
If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2010) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further
studies. Please ask the students to contact the people mentioned below to get the form:

580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block,Bangalore .

Contact numbers:

1. Ms. Saraswati - 99009 06338
2. Mr. Shivkumar - 99866 30301
3. Ms. Bindu - 99645 34667

Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help.