பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 28, 2010

மண்டேனா ஒன்று 28/6/2010

இது வெறும் அலங்காரம்தான்!!

பாகிஸ்தானிடம் அமைதியாகக் கூறுவோம், ஆனால் அழுத்தமாக!! இந்த பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகளை உதிர்த்தது நமது தமிழகத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள். உள்துறை அமைச்சர்களுக்கான “சார்க்” உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தினமும் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் இந்திய மக்களுக்கு ”சிவப்புக் கம்பளம்” விரித்துக் கொண்டிருக்கும் வேளையில், முப்பதாண்டுகளில் பாகிஸ்தான் செல்லும் முதல் இந்திய உள்துறை அமைச்சர் மற்றும் மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் அமைச்சர் என்ற பெருமைகளைச் சுமந்தவாறு நேற்று இஸ்லாமாபாத்தில் சிகப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுள்ளார்.பாகிஸ்தானில் சென்று இறங்கிய கையோடு, இஸ்லாமாபாத்தில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்குடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து சம்பிரதாயப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதே பழைய பல்லவியாக, ஹஃபீஸ் சயீதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மாலிக்கிடம், நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் பாகிஸ்தானிற்கு வந்து விட்டது என சிதம்பரம் கூறியதாக பத்திரிக்கைச் செய்திகளில் வந்துள்ளது. இது என்ன ஏதாவது சாந்தி கல்யாண முகூர்த்த வேளையா என்று தெரியவில்லை, சிதம்பரத்திற்கே வெளிச்சம். சம்பவம் நடந்து இரண்டாண்டுகளாகி விட்டது. நாமும் எவ்வளவோ இங்கிருந்தே கெஞ்சி விட்டோம். அங்கு சென்று பேசாமலிருந்தால், மீடியாக்களின் பேச்சுக்கிடமாகும் என போகிற போக்கில் நடவடிக்கை தேவை என பாகிஸ்தானிடம் கேட்கிறாற் போலிருக்கிறது.

சிறப்பு விமானத்தில் நிருபர்களிடம் கூறுகையில், இது தொடர்பாக பேச இது தருணமல்ல, சார்க் மாநாட்டிற்காக இங்கு வந்திருக்கிறேன். ஆனால் பாகிஸ்தானிடம் அமைதியாகவும், அழுத்தமாகவும் கூறுவோம் என்று கூறியிருக்கிறார். நிஜமாகவே மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் நிலை சர்வதேசப் பார்வையில் கேலிக்கிடமாகியுள்ளது. பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஹஃபீஸ் சயீத் ஆகியோரின் தொடர்புகளுக்கான அத்தனை ஆதாரங்களை இந்தியா கொடுத்த பிறகும், அவையெல்லாம் சரிதான் என அமெரிக்கா அங்கீகரித்த பிறகும், எல்லாவற்றையுமே பாகிஸ்தான் போதாது என புறந்தள்ளிவிட்டது. இத்தனை அழுத்தமான ஆதாரங்களைக் கொடுத்த பிறகும், அமைதியாகக் கூறுவோம் என சிதம்பரம் கூறுவது நகைப்புக்குரிய விஷயம். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்வரை பேச்சுவார்த்தையே கிடையாது என மார்தட்டிய மத்திய அரசு பிறகு பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தி, அடுத்த கட்டமாக பாகிஸ்தானுக்கு படையெடுக்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானிய பயங்கரவாதமாகட்டும் அல்லது நக்ஸல் தீவிரவாதமாகட்டும், நம்மால் அமைதியாக மட்டும் கூறத்தான் முடியும். அதற்கும் மேல் ஆணித்தரமாக செயல்பட நமக்கு முதுகெலும்போ, தைரியமோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

- யதிராஜ்

13 Comments:

Vinoth said...

/அமைதியாகக் கூறுவோம்/

அவர் கூறி முடிக்கும் போது இந்திய அமைதியாக தான் இருக்கும். தீவிரவாததால் சுடு காடாக :(

உண்மையான இஸ்லமியன் said...

அருமையான உள்துறை மந்திரி. இப்படிக் கூறுவதற்குப் பதில் நாண்டுகிட்டுச் சாகலாம் என யாராவது அவருக்குச் சொன்னால் புண்ணியமாப் போகும்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

நாட்டின் பாதுகாப்பு உட்பட எல்லாவற்றையுமே, கேலிக்குரிய அரசியலாக்கி வருகிறோம் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

இதுவரை 19 dossiers கொடுத்திருக்கிறோம், 20 கொடுத்திருக்கிறோம் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டுக்கொள்வது எவ்வளவு கேவலம்!


”எவ்வளவு அடி அடிச்சாலும் தாங்கறாண்டா” ரேஞ்சுக்குப் போய்விட்டோம்!

Don said...

Another one sided article. There are lot of variables in this game that the article failed to explore. Earlier Pakisthan was almost ready for war after 26/11 by having it's tanks in the border and it cleverly cited this as the reason for not helping US. US intervened, and hope you know about the frequent visits by top officials from US to India during those days.It's because of American pressure that India had to remain passive gritting it's teeth. Our politicians aren't open about the US pressure, as it'll be a matter of shame. But a country of India's stature has no other way. I feel Chidambaram is doing his best.
I'll blame the border security/naval forces for 26/11. I had lost faith in the army due to the increasing corruption cases against top officials and it's obvious inefficacy. India has a lot to learn from Srilanka in this aspect. There are LTTE sympathizers like Vaiko here, and did Srilanka ever ask for their extradition. Instead it did what it can do to protect itself, that's what India should also be doing. Everyday we read Indian fishermen being caught and tortured by Srilankan naval force as it suspects them as suppliers for LTTE. If a tiny country like Srilanka can make it's border so secure why not India. Why is India's border so porous. After all Pakisthan isn't a new enemy and infiltration was happening for a long time. How can we blame the politicians for infiltration? Who knows the corrupt officials in army might be allowing militants to infiltrate. India is after all a land of such traitors and back-stabbers.
No one, not even the press questions the border security and naval forces. I do accept that Chidambaram failed in rigorously squeezing the border security/naval forces. It's tough for a politician to intervene/doubt the basic ethics of an armed force.

Anonymous said...

Hello Mr.Yadhiraj, what you r expecting..do you want a war between india and pak..will this solve the issue..you guys r sitting in a/c room and write a blog like this..please listen ipdi unarchi poorvama eludarthala,what u r going to get or r u going to get saieed or bin laden..nuthing right.?.so stop critising chidambaram or any other..try to give some idea or be silent like others instead of writing these craps..

கருத்துதான் முக்கியம். said...

சிதம்பரம், இந்தியாவிலிருந்து (கலைஞரைபோல்) ஒரு கடிதம் எழுதிவிட்டு சும்மா உட்கார்ந்திராமல், அங்கே போய் ஏதோ சொல்கிறாரே என்று ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் நாம் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடாத வரையில் சரி.

ஜீயார் said...

////////Anonymous said...

Hello Mr.Yadhiraj, what you r expecting..do you want a war between india and pak..will this solve the issue..you guys r sitting in a/c room and write a blog like this..please listen ipdi unarchi poorvama eludarthala,what u r going to get or r u going to get saieed or bin laden..nuthing right.?.so stop critising chidambaram or any other..try to give some idea or be silent like others instead of writing these craps..
/////////////////

இந்தியா பாக்கிஸ்தான் சண்டையை யாரும் விரும்பல சார். ஆனா இந்த ஒரு தடவை மட்டும்தான் மன்னிப்போம் இனிமேல் எங்களிடம் வாலாட்டினால் நடக்கிறதே வேற என்பன போன்ற நமது அமைச்சர்களின் அறைக்கூவல்களைதான் சகிக்க முடியல சார். இந்தியாவிடம் தீவிரவாதத்தை வேரருக்கும் மனவலிமை இல்லை என்பதை உலகம் கண்கூடாக கண்ட பின்பும் எல்கேஜி பையன் மிஸ்ஸிடம் மிஸ் இவன் என் பேக்கை பிடுக்கிட்டான் என கம்ப்ளைன் பண்றது போல் அமேரிக்காவிடம் கம்ப்ளென் பண்ணும் அரசு இருக்கும் பொழுது நாம் வேற என்ன சார் பண்ணமுடியும்.

பஞ்சு மெத்தையில் 1000 மூட்டைகளுக்கு மத்தியில் படுத்து உறங்காமல் தவிப்பதற்கு கட்டாந்தரையில் படுத்து நிம்மதியாக தூங்கலாம் என்பதே என் எண்ணம்.

Anonymous said...

//,what u r going to get or r u going to get saieed or bin laden..nuthing right.?//

Simple by catching them, country will save you & your family members from terrorists ;)

அமுதப்ரியன் said...

என்ன யதிராஜ் நீங்க, ஒன்னும் புரியாத மாதிரி பேசறீங்களே. அவங்க மேல கைய வைச்சா இவங்களுக்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் போயிடுமுல்ல. ”அதுவும் இங்க போனது 1000 , 2000 உயிர்கள்தானே, அதான் இன்னும் கோடிக்கணக்கான பேர் இருக்கோமே செத்து போறதுக்கு” என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்னமோ. எவ்வளவு ஈஸியாக தேசதுரோக செயல்களை இந்தியாவில் செய்யலாம் தெரியுமா.

Karthick said...

////////Hello Mr.Yadhiraj, what you r expecting..do you want a war between india and pak..will this solve the issue..//////////

So sir...pls suggest a solution. Instead of been loosing lots of innocent ppl anymore, so what shall we do..still shouting "Thiviravathathai irumbu karam kondu adakkuvom nu" . Let the ppl came to know the inablity of the fellow whom we choose(? - did we choose him. he came by money in the name of recount)

Anonymous said...

The Indian media will take charge only when something gore/tragic incidents happens to our country. Otherwise the people are stupid enough to cheat.. The muslim minority votes,scandles, corrupting the nation,money making, the next elections, freebies.. there are more to think than the security of nation..

NOthing has been organised in our nation.To say a few,HOw to handle the terror attacks, how to counter terror, handling the disasters and relief measures,Even the most revenue generated cricket board itself is corrupted then wat else to say abt a nation.

Precisely, Its a paradise for insane (politicians)

@Prashanth@

Anonymous said...

Hey look for a better blog theme.
With so many visitors Idlyvadai deserves a better looking blog theme.

ஜீயார் said...

தீவீரவாத்திற்கெதிரான போரினால் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்கள் பறிபோகும் என்பது சரியான வாதம் அல்ல. பெரிய அண்ணன் தப்பா நினைச்சிடுவாங்களோ என இந்தியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் மன்மோகன்சிங் நினைக்கிறார். நாம் எதிர்க்க வேண்டியது பாகிஸ்தானாக மட்டும் இல்லாம வடகொரியாவோ சிரியாவோ இல்ல பாலஸ்தீனோ இருந்திருந்தா நம்ம இந்திய ரூபாயை ஒரு பைசா கூட செலவு பண்ணாம அவங்க நாட்டிலிருந்தே ராணுவத்தை வரவழைத்து இந்தியாவை சுடுகாடாக்கிருப்பார் நம்ம மன்மோகன் சிங். நம் கெட்ட நேரம் பாகிஸ்தான் அவங்களுக்கு ரொம்ப வேண்டிய நாடாம். அதான் சும்மா உதார் மட்டும் விட்டுட்டு மிச்சமிருக்கிற வருடங்களையும் ஒட்டிடலாம்னு நினைச்சிருக்கிறார்.