பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 21, 2010

மண்டேனா ஒன்று 21/6/2010


கால்பந்தாட்டத் துளிகள்
உலகளாவிய கால்பந்தாட்ட ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை கால்பந்தாட்டத் திருவிழா, தென்னாப்ரிக்காவில் துவங்கி, அமர்க்களமாகவும், மிகுந்த பரபரப்பிற்கிடையேயும் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்குத் தோதான ஒரு கால்பந்தாட்ட அணி இல்லை. ஆனால் அதுபற்றிய அரசியலுக்குள் செல்வதற்குண்டான அவசியமோ, எண்ணமோ நமக்கு இல்லை. இக்கட்டுரையும் அதுபற்றியது இல்லை. ஆனால் இந்திய கால்ப்பந்தாட்ட ரசிகர்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடையுமளவிற்கு நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கும் அதிக பங்கிருக்கிறது. அதுபற்றி இப்பொழுது பார்ப்போம்.


தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைக்கும், கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்க முடியுமா? ஆம், ஜபுலானி பந்துகள்!(Jabulani என்பது அடிடாஸ் நிறுவனம் தயாரிக்கும் கால்பந்துகள். இவைதான் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பயன்படுத்தப்படும் அதிகாரப் பூர்வமான பந்துகள்.) அங்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நூறு கால்பந்துகளிலும், கேரளாவின் ரப்பர் தோட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு விதமான ரப்பர் கூழ் சுமார் 7 கிலோ அளவில் கலக்கப்பட்டிருக்கிறது.

”லேடக்ஸ்” (Latex) என்று சொல்லப்படும் இரப்பர் கூழினால் தயாரிக்கப்படும் ”ப்லாடர்கள்” (Bladders) கால்பந்திற்கு வடிவத்தையும், எழும்பும் (Bouncing) தன்மையையும், வேகத்தையும் அளிக்கிறது. இவை தில்லியிலுள்ள Enkay India Rubber Co, என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இந்த ப்லாடர்களைத் தயாரிப்பதற்குண்டான மூல பொருளான “லேடக்ஸ்” வகை ரப்பர் கூழை கேரளாவின் ரப்பர் தோட்டங்களிலிருந்து இந்நிறுவமன் கொள்முதல் செய்துள்ளது.

“நாங்கள் இதுவரை சுமார் இரண்டு லட்சம் ப்லாடர்களைத் தயாரித்து ஜபுலானிக்கு அளித்துள்ளோம், இன்னும் சப்ளை செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார் என்கே நிறுவனத்தின் இயக்குனரான திரு.நரேஷ் ஜெயின். இந்நிறுவனம் வெகு காலமாகவே அடிடாஸ் நிறுவனத்திற்கு லேடக்ஸ் வகை ப்லாடர்களைத் தயாரித்து அளித்து வருகிறது. “நாங்கள் இதற்காகக் கொள்முதல் செய்யும் ரப்பர்களில் அதிகபட்சம் கேரளாவிலிருந்தே கொள்முதல் செய்கிறோம். கேரள அரசாங்கத்தின் ரப்பர் தோட்டங்கள் எங்களுக்கு இவ்வகை மூலப்பொருட்களை வழங்கி வருகின்றனர். தரம், மற்றும் இதர வசதிகளுக்காக நாங்கள் கேரளாவையே விரும்புகிறோம் என்று கூறுகிறார் நரேஷ் ஜெயின்.

கேரளாவில் ரப்பர் பயிரிடும் அரசாங்க ஸ்தாபனமும், அந்நிறுவனம் தங்களிடம் வாடிக்கையாக, அதிக அளவில் லேடக்ஸ் ரப்பர்களைக் கொள்முதல் செய்வதாக உறுதிப் படுத்தியுள்ளது. என்கே நிறுவனம் எங்களிடமிருந்து 12 ட்ரக் லோட் ( Truck Loads) அளவிற்கு லேடக்ஸை கொள்முதல் செய்துள்ளது என்று கூறுகிறார், திரு.மோகன் குமார், இவர் இத்தொடர்பான ரப்பர் பயிரிடும் நிறுவனத்தின் பொது மேலாளர்.

காற்றை தன்னுள்ளே இருத்தி வைத்திருப்பது கால்பந்தினுள் உள்ள ப்லாடரின் தனிச்சிறப்பு. ஆனால் பந்தினுடைய எழும்பும் தன்மை, வேகம், வடிவம் முதலானவை பந்து தயாரிப்பு முறை மற்றும் பந்தின் மேலே பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒருவகையான தோலின் தரம், தன்மை மற்றும் உட்புற லைனிங் தையல் சார்ந்த விஷயம் என்கிறார் நரேஷ் ஜெயின்.

நம்முடைய அணி கால்பந்தாட்டத்தில் பங்கேற்கவில்லையென்றால் என்ன? ஆனால் ஜபுலானி பந்துகள் சுவாசிப்பது நம்முடைய லேடக்ஸ் என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தானே?

(நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.)


போர்த்துகீசியர்கள் கோவாவை விட்டு அகன்றாலும், அவர்களுடைய வாசனை இன்னும் கோவாவை விட்டு அகலவில்லை போலும். வாஸ்கோடகாமா இன்று இருந்திருந்தால் இதனை நினைத்து பெருமை அடைந்திருப்பார்.

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத் திருவிழாவையொட்டி கோவாவை கடுமையான கால்பந்தாட்ட ஜீரம் பற்றியிருக்கிறது. முந்தைய உலகக் கோப்பை போட்டிகளின் போதும் சரி, ஐரோப்பிய உள்ளூர் கால்பந்தாட்ட போட்டிகளாகட்டும், கோவா ரசிகர்கள் வழக்கம் போல் இம்முறையும் சிகப்பு, பச்சை என போர்த்துகீசிய கால்பந்தாட்ட அணியின் வர்ணத்தைப் பிரதிபலிக்கின்றனர்.

அர்ஜெண்டினா, ப்ரேஸில் போன்று போர்ச்சுகல் கால்பந்தாட்ட அணி ஒன்றும் அவ்வளவு தரமான அணி என்று சொல்ல முடியாவிட்டாலும், கோவாவின் ஆதரவு போர்ச்சுகலுக்கே. கோவாவில் நீங்கள் எங்கு சென்றாலும், எங்களுடைய உடை, நடனம், இசை, உணவு, வாழ்க்கைமுறை என அனைத்திலுமே போர்த்துகீசியர்களின் அடையாளத்தையும், தாக்கத்தையும் காணமுடியும். எனவே கால்பந்தாட்டத்தில் மட்டும் போர்ச்சுக்கலை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார் சேவியோ மெஸியாஸ், இவர் கோவா கால்பந்து சங்கத்தின் செயலாளர்.

இவர் போர்ச்சுகலின் ஆதரவாளராயினும், இவருடைய :விருப்ப ஆட்டக்காரர் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி.உலகக் கோப்பையும், பியர் விற்பனையும்.

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத் திருவிழா, உலகளாவிய பியர் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. சமீபகாலமாக சரிந்திருந்த விற்பனையை இந்த உலகக் கோப்பை தூக்கி நிறுத்தியுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பானில் பியர் விற்பனை இவ்வுலக்கோப்பை துவங்கியதற்குப் பிறகு இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாம். குறிப்பாக ஜப்பான் அணி, கேமரூன் அணியை வென்ற பிறகு ஜப்பானின் பியர் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஜப்பான் ப்ரீவரி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பியர் சந்தையான சீனாவிலும் இதே நிலைதான்.

பியர் விற்பனை உயர்வுக்காவது உலகக்கோப்பை என்ற காரணம் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக்கிற்கு? நமக்கு வருடம் 365 நாட்களும் உலக்கோப்பைதான்!! செம்மொழி மாநாட்டையொட்டி டாஸ்மாக் விற்பனை அநேகமாக ஐந்து மடங்காக உயரலாம்.


-யதிராஜ சம்பத் குமார்

21 Comments:

Guru said...

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் தென்கொரியா க்ரீசை வெற்றி கொண்டது. அந்த வெற்றியை கொரியர்கள் கோலாகலமாய் கொண்டாடியிருக்கிறார்கள். தெருக்களில், வீடுகளில், ஹோட்டல்களில், பார்களில் என்று குடித்தும் ஆடிப் பாடியும் கொண்டாடியிருக்க, அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம். What a News……

Extra news from cablesankar.blogspot.com

R.Gopi said...

//பியர் விற்பனை உயர்வுக்காவது உலகக்கோப்பை என்ற காரணம் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக்கிற்கு? நமக்கு வருடம் 365 நாட்களும் உலக்கோப்பைதான்!! செம்மொழி மாநாட்டையொட்டி டாஸ்மாக் விற்பனை அநேகமாக ஐந்து மடங்காக உயரலாம்.//

********

படிக்கும் போது சிரிப்பு வந்தாலும், மிக மிக கசப்பான உண்மை...

திமுக மகளிர் அணி என்னென்ன அராஜகம் பண்ண போகுதோ...

மொத்தத்துல இந்த மாநாடு ஒரு பெரிய அளவிலான “மானாட மயிலாட” ப்ரோக்ராம் ஆக இருக்கும்..

இனியவன் said...

--பியர் விற்பனை உயர்வுக்காவது உலகக்கோப்பை என்ற காரணம் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக்கிற்கு? நமக்கு வருடம் 365 நாட்களும் உலக்கோப்பைதான்!! செம்மொழி மாநாட்டையொட்டி டாஸ்மாக் விற்பனை அநேகமாக ஐந்து மடங்காக உயரலாம்.--------
இதுக்கு பேரு தான் டைமிங் டச்சுனு சொல்றது.. நச்சுனு முடிசீங்க...

Madhavan said...

//பியர் விற்பனை உயர்வுக்காவது உலகக்கோப்பை என்ற காரணம் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக்கிற்கு? நமக்கு வருடம் 365 நாட்களும் உலக்கோப்பைதான்!! செம்மொழி மாநாட்டையொட்டி டாஸ்மாக் விற்பனை அநேகமாக ஐந்து மடங்காக உயரலாம்.//

சரிதான்.. இதனால் தமிழகளுக்கு (மக்களுக்கு)எதாவது உருப்படியான விஷயம் நடக்கும்னு, யார் தான் எதிர்பாக்குறாங்க...?

kggouthaman said...

ஆக, இந்தியாவில் தயாரிக்கப் படுபவைகளை, எல்லா நாட்டினரும் காலால் உதைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?

Thomas Ruban said...

//நம்முடைய அணி கால்பந்தாட்டத்தில் பங்கேற்கவில்லையென்றால் என்ன? ஆனால் ஜபுலானி பந்துகள் சுவாசிப்பது நம்முடைய லேடக்ஸ் என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தானே?//

இதேப்போல் நிறைய விசியங்களில் பெருமை படலாம்...
1. நம் நாட்டு பெரும்பாலான மக்கள் சாப்பாட்டுக்கு இல்லாமல் பசியோடு கஸ்டப்பாட்டாலும், நம் நாட்டில் விளையும் பாசுமதி அரிசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

2. சிறந்த மென்பொருட்கள் உருவாக்குவது நாம் ஆனால் அதை உபோயோகப்படுத்தி லாபம் பார்ப்பது அவர்கள்...

இப்படி பல விசியங்களில் பெருமை படலாம்..நாம் விரல் சூப்பியே சந்தோஷ படுகிறோம்.

நன்றி.

Anonymous said...

I don't know what's there to feel proud about. It's not even a finished product but a commodity raw material that we supply. Probably we can be as proud as the sulphur mine owner in Angola who claims that his chemical is used to ripen fruits in India..

Gaana Kabali said...

//நம்முடைய அணி கால்பந்தாட்டத்தில் பங்கேற்கவில்லையென்றால் என்ன? ஆனால் ஜபுலானி பந்துகள் சுவாசிப்பது நம்முடைய லேடக்ஸ் என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தானே?//

'சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் '
என்று தான் பாரதியார் பாடினார்.

இப்பொழுது உலகளாவிய கால்பந்து போட்டியிலேயே சேரத்து ரப்பர் தான்
முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து பெருமைப் படுகிறோம்.

கிரிக்கட்டுக்கு தரப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குத்
தரப் படுவதில்லை என்ற நெடுநாளைய குறை இந்தியர்களுக்கு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

என்று மடியும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

அது சரி, இந்த இடுகையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க , பெரும்பாலான பின்னூட்டங்கள் பியரைப் பற்றியும் டாஸ்மாக்கைப் பற்றியுமே இருக்கிறதே ஏன்?

Kameswara Rao said...

இந்த கால்பந்துகளில் எதோ கோளாறு அப்படி இப்படின்னு
இங்கே ஒரே புகைச்சல்., விஷயம் கேரளா ரப்பர் பந்து தயாரிப்புகளில்
பயன்படுத்த பட்டிருக்கு ... கேரளா என்று சொன்னாலே துள்ளல் தான்
போல

Venu said...

Please write about MAHINDRA SATYAM also. IT played a major role in FIFA 2010. An Official IT sponser for FIFA 2010.

அனுஜன்யா said...

'ஜபுலானி' என்றால் (தென் ஆப்பிரிக்காவின்) ஜுலு மொழியில் 'கொண்டாட்டம்' என்று பொருள். கேரளாவில் லேடெக்ஸ், தைவானில் இன்னொரு கச்சா பொருள் என்று கூட்டு சேர்ந்து சீனாவில் தயாரிக்கப் பட்ட பந்துகள் அவை.

ஜபுலானி பந்தின் புகைப்படம் போட்டிருக்கலாம். இது பழசு கண்ணா பழசு :)

சரி, கால்பந்து போட்டிகள் பற்றி யார் எழுதப் போவது? எதிராஜ்? அத்துடன் லலிதா ராம் விம்பிள்டன் பற்றி எழுதலாம்.

அனுஜன்யா

ராசராசசோழன் said...

சுவையான பதிவு...பில் கொடுத்துடாதீங்க

Suresh S R said...

அது கேரளா ரப்பரா, குமரி மாவட்ட ரப்பரா என்று விசாரித்து எழுதவும்.

Anonymous said...

you should have mentioned that it's one Indian IT company is the official IT sponsor for FITA - 2010. It's Mahindra Satyam! You can see in the advertising boards!
Given the fact that the status of this Company last year, it's really a overwhelming news!

Regards,
Essex Siva

Anonymous said...

naan eludhum pathivirkum indha postirkum endhavida sambandhmum illai.veru eppady idlyvaai contact seivadhu endru theriyadhadal indha vazhi semmozhi padal mulukka mulukka vandherihalal padapattuulladhu.arunasairam bombay jayashree etc.TMS kooda sourashtra brahmin than.vasudeva menon ivargal parvaiyil malyalee.MGRai thitta payan paduthiya sol.oru TAMIZH isai karuvium payanpauthavillai.PUSHPAVANAM KUPPUSAMY PONDRA TAMIL PADAGARGAL ILLAIYA.TAMIL DIRECTORGALUUKU PANJAMA.GUGANATHAN,AMIR ELLAM ENNA SEIKIRARGAL.THIRUMAVUM VEERAMANIYUM SEMMOZHI PADALAI PADA MATTARGALA.DALIT ILAKKIYAM PATTRI ENAKKU THRINDU KATTURAI ILLAI.THIRUMA ENNA SEIVAR.MP PADHAVI ELLA SIRUMAIKALAIYUM EEDU SEITHUVIDUMA.MUDALVAR PARPANAGAL INDRI TAMIL ILLAI ENDRU UNARNDHU VITTARA.ENAKKU ONDRUME PURIYA VILLAAI.TAMIL MANATTIL VANDHERIGALIN ATTAKASAM.EN KULAPPATHAI PLEASE POKKUNGAL.NANDRI ULLANAI IRUPPEN.

SAN said...

IV,
Where r u?
Where is the live commentry for TSM(Tamil semmozhi maanadu)!!!!!

Anonymous said...

Dear SAN,
TSM என்றால் தமிழர்கள் சாகும் மாநாடு.

Anonymous said...

அது கேரளா ரப்பரா, குமரி மாவட்ட ரப்பரா என்று விசாரித்து எழுதவும்.

எப்படியோ அது இந்திய நாட்டின் ரப்பர், போதுமா?

நிறுத்தங்கப்பா, உங்க தமிழின வெறியை.

Anonymous said...

To IdlyVadai Team
I don't know whether I am doing the right thing but I am posting it here.This link "The Most Important Video Ever Part 1/8" http://www.youtube.com/watch?v=F-QA2rkpBSY
is a lecture by one of the best professor's in US,this deals with a lot of things, the mathematics explained here is something that everyone should know,even the illiterates.This not only deals with Mathematics but also about energy crisis and stuff.Its mostly based on America but it's also applies to all places.

Sorry again I just wanted to share this but I am not a blogger(I just visit and read)nor will this reach many people if I post.If you could post this or make it into a proper blog, I am sure it will help a lot of people in understanding a lot of simple things.

Anonymous said...

where are you? coimbatore poittingala? no post from monday!!?? what is this?

Anonymous said...

where are you? coimbatore poittingala? no post from monday!!?? what is this?