பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 14, 2010

மண்டேனா ஒன்று - 14/6/2010

சென்னைக்குப் பிரியாவிடை கொடுப்பதற்கான கடைசிநேர முஸ்தீபுகளுடன் மூழ்கியிருந்த தருணத்தில், திடீரென என்னுடைய அறையின் சாளரம் வழியாக குடலைக் குமட்டுகின்ற, வார்த்தைகளால் வர்ணிக்கவியலாத துர் வாடை வீசியது. என்னவென்று யோசிப்பதற்கெல்லாம் ப்ரமேயமின்றி போட்டதைப் போட்டபடியே விட்டுவிட்டு, வெளியே வந்துவிட்டேன். நாங்கள் இருப்பது ஆறாவது தளம். கீழே தரைதளத்தில் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின், குடியிருப்போர் சங்க செயலாளர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் என்ன ஏது என்று விசாரித்த போது, கட்டிடத்தின் “கழிவு நீர்” இணைப்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்ய மாநகராட்சி ஊழியர்கள் வந்திருப்பதாகவும் கூறினார். அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், அடைப்பை அகற்ற அறுநூறு ரூபாய் ஆகுமென்றும், முன்பணமாக 200 வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். முன்பணம் எதற்கு என்று சங்க செயலாளர் வினவியபோது, டாஸ்மாக் போய் வருவதற்கு என்று பதிலளித்தார் மாநகராட்சி ஊழியர். நான் ஒன்றும் புரியாமல் வெறும் பார்வையாளராய் இதெல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்த ஊழியர்கள், “மேன் ஹோலிற்குள்” இறங்க ஆயத்தமாயினர். எங்கு சென்றாலும் ஒரே வாடைதான் என்ற நிலையில், என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கலாமென்று, கைக்குட்டையுடன் முக்கைப் பொத்தி நின்ற எனக்கு, அவர்கள் குழிக்குள் இறங்கிய விநாடியில் என்னுடைய உடலின் சகல அவயவங்ளும் ஸ்தம்பித்து விட்டன. சுமார் 160 வீடுகள் கொண்ட எங்களது அடுக்குமாடிக் குடியிருப்பின், அத்தனை வீடுகளின் மலக்கழிவுகளும் சங்கமிக்கும் ஒரு மலக்குழியில், சற்றும் அருவருப்பின்றி இறங்கினார் அம்மாநகராட்சி ஊழியர். இப்போதுதான் எதற்கு டாஸ்மாக் சென்றார் என்று மெதுவாகப் புரியத் துவங்கியது. நம் இருப்பிடங்களில், நாம் பயன்படுத்தும் கழிப்பறையையே சுத்தப்படுத்த அசூயைப் படும் நம்மைப் போன்றோரோடு ஒப்பிடுகையில், எவ்வளவு சஹிப்புத்தன்மையுடன் இருந்தால் இவர்கள் இத்தொழிலைச் செய்ய முனைவர்? இவர்களெல்லாம் கடவுளுக்குச் சமானமாக பூஜிக்கத் தகுந்தவர்கள் என்று கூறினால் அது மிகையல்ல. இவர்களுக்கு அறுநூறென்ன, ஆறாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட போதாது. அதற்கு மேல் அவர்களைப் பார்க்க மனமில்லாமல் அங்கிருந்து அகன்று விட்டேன். எப்பொழுதோ செய்தித் தாள்களில், மனிதக் கழிவுகள் அகற்றுவோர் பற்றிப் படித்திருப்பினும், அதனை நேரில் கண்டபோது, வர்ணிப்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட அதிர்ச்சி ஏற்பட்டது. தவிர உள்ளே விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் பிராணாபாயமும் உண்டு. அரைஜான் வயிற்றைக் கழுவ இவர்கள் படும் அவலம் நேரில் கண்ட பிறகுதான் தெரிந்தது.

காலம் எவ்வளவுதான் நவீனமயமாகி, வாழ்க்கை எவ்வளவுதான் விஞ்ஞான மயமானாலும், சமூகத்தின் ஒருசாரார் இன்னும் கற்காலத்திலேயே இருப்பது, அல்லது இருத்தி வைக்கப்பட்டிருப்பதை அவலமென்று சொல்வது கூட பொருத்தமல்ல. நம் அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை சமூகநீதி, சமத்துவம் என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு என்று திருமாவளவர்கள் இன்னொரு பக்கம் முழங்குகின்றனர். ஆனால் செல்வாக்குடைய ஒரு ஸ்தாபனத்தில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தோடு இருக்கும் இவர்கள் நினைத்திருந்தால், இந்நிலையை சீர்படுத்தியிருக்க முடியாதா? அல்லது சமூகநீதியே மனித உருவாய் முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் கருணாநிதியால்தான் இவர்களது தலையெழுத்தை மாற்றியெழுதவியலாதா? திருமாவளவன் போன்றோருக்கெல்லாம் கனடாவிற்கும், ஐரோப்பாவிற்கும் பறந்து சென்று புலி பஜனை செய்யவே பொழுது போதாமலிருக்கும் நிலையில், அவர்களைக் குற்றம் சொல்லியும் பிரயோஜனமில்லைதான். குறைந்தபட்சம் கோடை காலத்தில் “அஃபிஷியல் ட்ரிப்” என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பவுசில் ஐரோப்பிய குளிர் தேசங்களுக்கு ஓசிப் பிரயாணம் மேற்கொள்கையில், அங்கு எவ்வாறு மனிதக் கழிவுகள் கையாளப் படுகின்றன என்று தெரிந்து வந்து சொன்னாலாவது அரசாங்கம் ஏதேனும் செய்ய முயற்சிக்க ஏதுவாக இருக்கும்.

இப்போதிருக்கும் கையாலாகாத சூழலில், வர்ணாசிரமத்தையும், மனுதர்மத்தையும் சாடுவதுதான் ஒரே தீர்வு இதற்கெல்லாம்.

அயல் தேசங்களில் இருப்போர், இப்பிரச்சினை அங்கு எவ்வாறு கையாளப்படுகிறது என்று பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் நலம்.

- யதிராஜ்

35 Comments:

Water Treatment said...

இங்கு துபாயில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவது வெகுகுறைவு. ஏன் என்றால், கட்டுமானப்பனியின் போதே, கழிவுகுழாய் வலைவுகளில் வெளியிலிருந்து திறந்து சரிசெய்யும் வகையில் "ஓபனர்" வைக்கின்ரனர். எவ்விடத்தில் அடைப்பு இருக்கிறதோ அந்த ஓப்பனரை திறந்து "ஆசிட் போன்ற" ஓர் திரவத்தை ஊற்றுகின்ரனர்.அது அடைப்பை கரைத்து சரி செய்கிறது.

ஜாஹிர்

Hariharan # 03985177737685368452 said...

For Drainage which is being used for waste water along with human waste high power Vacuum tanker truck is being used to suck out the blockage through hose pipe at blocked drainage through man hole.

While In Tamilnadu/Madras for the past 43 years of agmark Paguththarivu puratchi katchi is ruling and hence there is no NEED to blame anything else other than Dravida Pethadin.

செந்தழல் ரவி said...

இங்கே (நார்வேயில்) முழுமையான பெயிலியர் ஆகாத ட்ரையினேஜ் சிஸ்டம் உள்ளது. அப்படியே பெயிலியர் ஆகி தண்ணீர் தேங்கினால் அதனை சரி செய்பவருக்கு மருத்துவருக்கு ஐடி துறையினருக்கு கொடுக்கும் சம்பளத்தை விட அதிகம் தரவேண்டும்.

இங்குள்ள ட்ரையினேஜ் சிஸ்டத்தை செயல்படுத்தினாலே மனித கழிவை மனிதன் எடுப்பதை தவிர்க்கலாம்.

ஆனால் ஒன்று சார். இதனை அவர்கள் செய்யுமாறு சமூகத்தை வடிவமைத்தது யார் சார் ?

kggouthaman said...

வளர்ந்துவரும் நாட்டில் உள்ள இந்தப் பிரச்னையை, வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் & அரசாங்கம் / உள்நாட்டு சிவில் நிர்வாகங்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பது நம் நாட்டு நிர்வாகிகளுக்கு இ வ வாசகர்கள் மூலமாகத் தெரியவந்தால் நல்லது என்று நானும் நினைக்கிறேன்.

மிளகாய் பொடி said...

They need to be given protective suits to at least breath clean air.....

Anonymous said...

நமது நாட்டில் 'தொலை நோக்கு ' என்பது கிடையாது. கழிவுப் பொருட்களை அகற்றும் சிஸ்டம் அடுத்த நூறு ஆண்டுகளுக்காவது தேறுமா என்று யோசித்து வடிவமைக்க வேண்டும்.சிக்கனம் கருதி அரசும் வீடுகள் கட்டுவோர்களும் (பிளாட் ஒனர்களையும் சேர்த்துத்தான்) தொலை நோக்கின்றி இவற்றைக் கட்டமைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட வேலைகளை செய்வதற்கும் ஆளிருக்கிறதே என்ற மெத்தனமும் ஒரு காரணம்.இந்த வேலைகளில் இருப்பவர்களை கரைத் தேற்ற இயந்திரங்கள்தான் உதவ வேண்டும்.

buvanesh said...

உண்மையான அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள பதிவு.இந்த நூற்றாண்டிலும் இந்த அவலம் தொடர்வது நம் இந்தியா முழுக்க உள்ள ஒரு கேவலமான மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல்.இதற்கு பொறுப்பு நாம் அனைவரும்தான்.ஆனால் செந்தழல் ரவி கூறியிருப்பதற்கு என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.ரவி சார் உங்களை மாதிரி எண்ணம் கொண்டவர்கள் தான் அவர்களை மேலே விடாமல் தடுப்பது.பிரச்னையை பற்றி பேசும்போதே,பிரச்சினையை திசை திருப்பும் விஷயம் இது.உருப்படியாக ஏதும் செய்யாமல் பழைய புராணங்களை பேசி விட்டு நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கு பொறுப்பு நானல்ல என்று கூறும் மனோபாவம் அது.ஆனால் அவரை கூறி பயன் ஒன்றுமில்லை.அரசன் எவ்வழி குடி அவ்வழி.

buvanesh.

http://buvaneshk.blogspot.com

Udayakumar Sree said...

ஏதோ ஒரு நாட்டுல, மனுசக் கழிசடைய கிளீன் பண்ண மனுசன யூஸ் பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருக்குறதா கேள்விபட்டுக்கிறேன். .இல்லாத விஞ்ஞானமெல்லாம் (2G & 3G) கண்டுபுடிச்சு, அதுல எப்புடி நூதனமா திருடலாம்னு கணக்கு போட்டுக்கினு இருக்கிற நம்ம ஊரு கழிசடைங்கள நெனைச்சு சிரிக்கிறதா அழுவரதான்னே தெரியல!

Anonymous said...

The main reason for the blockage in drainage is the disposal(throwing) of used sanitary napkins thro' the toilets(closets).This is done by educated and learned women only, due to sheer indifference and arrogance.This happens in most of the multistoried flats

ngoppan said...

ஜாதி அரசியல்வாதிகள் இவர்களை பின்தங்கி வைத்திருக்கும் வரை தான் வோட்டு பெறுவார்கள். It helps them maintain the "us vs them" mentality to stay in power

usenet8988 said...

அமெரிக்காவில் இந்த மாதிரியான பிரச்சினைகளை, பல கருவிகள் மூலம் சரிசெய்கிறார்கள். அவைகளில் சில,

1. Jet Equipment (2) - (~ $100,000)
2. CCTV Camera Robot (1) - (~$150,000)
3. Excavator (1) - (~$150,000)
4. Backhoe (1) - (~150,000)

இவைகளெல்லாம், ஒவ்வொரு townshipம் வைத்திருக்கும். எங்கள் townshipன் மக்கள் தொகை 30,000, அவர்களின் முகவரி http://www.mtsaonline.org/. அவர்கள் இந்த கருவிகளில் எத்தனை வைத்துள்ளனர் என்பதை பிராக்கெட்டில் தந்துள்ளேன். இந்த சேவைக்காக ஒவ்வொரு வீடும் சுமார் $30 ஒரு மாசத்திற்கு தருகிறோம்.

>While In Tamilnadu/Madras for the
> past 43 years of agmark
> Paguththarivu puratchi katchi is
>ruling and hence there is no NEED
>to blame anything else other than
>Dravida Pethadin.

மற்ற திராவிட பெத்தடின் போடாத மாநிலங்கள் இந்த துறையில் எப்படி முன்னேறியிருக்கிறார்கள் என்று சொன்னால் நன்றாயிருக்கும்.

vandu said...

செந்தழலால் அண்ணா

கண்டிப்பா நானில்லே கேட்டுக்கிடுங்க. அதா அங்ஙனே முக்காடு போட்டுக்கிட்டு போறான் பாருங்ஞே....அவிந்தான்....விடாதீய. போயி நாலு வப்பு வையிஞே ... நாங்க இதா உங்க பின்னாடியே வந்துகிட்டு இருக்கோம். தகிரியமா போங்கே...

ரிஷபன்Meena said...

//ஆனால் ஒன்று சார். இதனை அவர்கள் செய்யுமாறு சமூகத்தை வடிவமைத்தது யார் சார் //

//அப்படியே பெயிலியர் ஆகி தண்ணீர் தேங்கினால் அதனை சரி செய்பவருக்கு மருத்துவருக்கு ஐடி துறையினருக்கு கொடுக்கும் சம்பளத்தை விட அதிகம் தரவேண்டும்.//

1.அப்படி மனிதர்கள் இறங்க வேண்டாத அளவுக்கு தொழில்நுட்பத்தை பயன் படுத்தலாம்.

2.அது உடணடி சாத்தியமில்லாதது என்பதால் மருத்துவருக்கு ஐடி துறையினருக்கு கொடுக்கும் சம்பளத்தை விட அதிகம் கொடுக்காவிட்டாலும், அவர்கள் தரம் உயரும் அளவுக்கு சம்பளத்தை கொடுக்கலாம்.

ஆதி மனிதன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உருப்புடியான ஒரு கட்டுரை. நன்றி.

ஆனால் இதெல்லாம் ஆளுபவர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெரியாமலா இருக்கும்? ஹை கோர்ட்டே ஒரு தடவை இம்மாதிரி சுத்தம் செய்வதை தடை செய்ததாக ஞாபகம்.

சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு தடவை அந்த வேதனையை நேரில் கண்டால் ஒரு வேளை ஏதும் நல்லது நடக்கலாம்.

Sethu, Riyadh said...

Please see this link (last para under the heading "Bill to provide quota to Arunthathiyars passed") for the news that 1 year back, Stalin announced scheme " allocating Rs 6.3 crore for buying machinery to remove blocks in manholes in the Chennai Corporation and in nine other corporations in the state by way of helping the scavengers to avoid entering manholes and do manual scavenging."

Where is this 6.3 crore now and where are the machines ? I think everybody knows where is this money now.....

Also, please see the link below http://mcraygormechanicals.tradeindia.com/Exporters_Suppliers/Exporter16218.371960/Sewer-Cleaning-Machine.html. This INDIAN company claims to EXPORT the sewer cleaning machines........so need for knowledge about mechanisms from abroad. All it requires is a LITTLE HEART by the POLITICIANS to do some good for the people while they swindle money endlessly...
http://arunthathiyer-tamilnadu.blogspot.com/2009_03_01_archive.html

Hariharan # 03985177737685368452 said...

//ஆனால் ஒன்று சார். இதனை அவர்கள் செய்யுமாறு சமூகத்தை வடிவமைத்தது யார் சார் ?//

Invaders Persian Islamic rulers also known as Mugals as a part of their heritage called in-human slavery

Priya said...

There is no dignity of labour in our country. Poo vikaravanga, Drainage clean panravanga kittai beram pesi enna panna poromnu Niraiya peru ninaikarathey illai..
They might give 100 rupees tips in a restaurant or drop 1000 bucks in tirupathi.

But surera ithanai kashtam illamal (manual process without protection, gear, machinery is horrible)panna mudiyamal ponathuku blame Chennai Corporation and our government. Least the workers can do is form an union like Kerala and ask for more money - But othumai illiye..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சென்னைக்குப் பிரியாவிடை கொடுப்பதற்கான கடைசிநேர //

திரு யதிராஜ் சென்னையைவிட்டு கிளம்புகிறாரா? இந்தியாவை விட்டே கிளம்புகிறாரா?

யதிராஜ சம்பத் குமார் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை :


சென்னையை விட்டு மட்டுமே!! கூப்பிடு தூரத்திற்குதான் சென்றிருக்கிறேன். :-)

Kameswara Rao said...

I have been living year for almost a decade now and I have not seen an incident like this.. nor heard off.

I do not know about the system I heard that they used to blow out (mechanised) way to clear swereage.

Our Muka & Co they will not change these stuff and do nothing for the upliftment of these downtrodden bcos you and I will never go to Election booths for voting its only them who decides their fate
and that is why they are kept like these since the days of independence.Kamesh
Botswana

Anonymous said...

HERE IN ALKHOBAR, SAUDI ARABIA, IT IS COMMON PROBLEM - DRAINAGE BLOCK.
CORPORATION TRUCK WITH VACUUM PUMP WILL COME AND CLEAR IT.
BANGLADESH OR INDIAN WORKERS WILL DO THIS JOB. EVEN THOUGH, THEY ARE NOT GOING INSIDE, THEY HAVE TO BEAR THE ODOUR.
Mr. RAVI, YOU WANT TO POLITICISE EVERYTHING.
YOU WANT TO HAVE THE ADVANTANGE OF KEEPING ONE SECTION OF PEOPLE ALWAYS UNDER YOU, THROWING THE BLAME SOMEWHERE.
THIS YOU ARE DOING IT AWAY FROM OUR COUNTRY ALSO!!!

Sriram Srinivasan said...

படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.எவ்வளோவோ இயந்திரங்கள் வந்துவிட்டன இதையும் இயந்திரங்கள் தான் செய்ய வேண்டும் என்ற
நிலை இங்கு வந்தால் தான், இவர்களின் நிலை மாறும்.

- ஸ்ரீராம்

Franklin Selvaraj said...

==>
மற்ற திராவிட பெத்தடின் போடாத மாநிலங்கள் இந்த துறையில் எப்படி முன்னேறியிருக்கிறார்கள் என்று சொன்னால் நன்றாயிருக்கும்.
==>
Right said. கட்டுரையாளர் திராவிட எதிர்ப்பாளர்.

ஜெயக்குமார் said...

நல்ல பதிவு..
மீண்டும், மீண்டும் சொல்லப்படவேண்டியது.. இந்நிலை மாறும்வரை

Anonymous said...

"""ஆனால் ஒன்று சார். இதனை அவர்கள் செய்யுமாறு சமூகத்தை வடிவமைத்தது யார் சார் ?""""
அதான் அவர் பதிவிலியே பதில் சொல்லியுள்ளாரே!
’’வர்ணாசிரமமும், மனுதர்மம்னு”
இவ்வளவு கரிசனம் காட்டும் இவர்(ஒரு பேச்சுக்குதான்!) உள்ளே இறங்கச்சொன்னால் இறங்குவாறா? நிச்சயமாக முடியாது.பாப்பான்களுக்கு உடலால் உழைக்கும் எந்த வேலையும் செய்யமுடியாது!

Anonymous said...

Recently I booked a flat in the chennai city. Payment has been made to CMWSSB. Sewerage facility is very near to the flat. But the CMWSSB refuse to provide facility. As per the author, we are still living in stoneage.

Anonymous said...

மு.க.ஸ்டாலின் இதற்கு மாற்றாக இந்திர கருவியை ஒர் விழாவில் அறிமுக படுத்தியதாக செய்தி படித்தாக நினைவு...!

Hariharan # 03985177737685368452 said...

//மற்ற திராவிட பெத்தடின் போடாத மாநிலங்கள் இந்த துறையில் எப்படி முன்னேறியிருக்கிறார்கள் என்று சொன்னால் நன்றாயிருக்கும்.//

Tamilnadu Dravida politicians have been claiming their special extra-ordinary empathy for tamil citizens. Despite the fact these pagutharivu parties ruling 43 years nothing happened to improve civility of tamil society is the bitter fact.

It is not necessary to typically divert what other non dravidian politician ruled states in India have done to improve the civity of their states.

Anonymous said...

//இவ்வளவு கரிசனம் காட்டும் இவர்(ஒரு பேச்சுக்குதான்!) உள்ளே இறங்கச்சொன்னால் இறங்குவாறா? நிச்சயமாக முடியாது.பாப்பான்களுக்கு உடலால் உழைக்கும் எந்த வேலையும் செய்யமுடியாது!//
இதைச் சொல்லும் பார்ப்பான் இல்லாத இந்த அனானி இற்ங்கி வேலை செய்வாரா?
தூங்கும் பார்ப்பானை இடறாதே

செந்தழல் ரவி said...

ஹரிஹரன், திராவிட கச்சிகளின் ஆச்சியில் ஏன் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை ?

செந்தழல் ரவி said...

சென்னையை விட்டு மட்டுமே!! கூப்பிடு தூரத்திற்குதான் சென்றிருக்கிறேன். :-)

June 15, 2010 12:49 PM////

செங்கல்பட்டு ? காஞ்சீபுரம் ? திருவள்ளூர் ?

jaisankar jaganathan said...

//ஆச்சியில் ஏன் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை ?
//

ஆச்சில முன்னேறுனா வெட்டிபுடுவாங்க தெரியுமா

usenet8988 said...

/* Tamilnadu Dravida politicians have been claiming their special extra-ordinary empathy for tamil citizens. Despite the fact these pagutharivu parties ruling 43 years nothing happened to improve civility of tamil society is the bitter fact.

It is not necessary to typically divert what other non dravidian politician ruled states in India have done to improve the civity of their states. */

Hmmm...you are blaming "Dravida Pethadin" for this...without providing any evidence that this epidemic is indeed caused and persisted by "Dravida Pethadin". Go ahead..live in your own oblivion.

R.Gopi said...

யதி....

மிக மிக நல்ல கட்டுரை... துப்புறவு பணியாளர்களின் அவல நிலையை தெளிவாக காட்டியது.... அதிலும் இந்த வரிகளை ரசித்தேன் ...

//திருமாவளவன் போன்றோருக்கெல்லாம் கனடாவிற்கும், ஐரோப்பாவிற்கும் பறந்து சென்று புலி பஜனை செய்யவே பொழுது போதாமலிருக்கும் நிலையில், //


தோழர் ஜாஹிர் சொல்வது தான் இங்கு நடைமுறையில் உள்ளது...

//Water Treatment said...
இங்கு துபாயில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவது வெகுகுறைவு. ஏன் என்றால், கட்டுமானப்பனியின் போதே, கழிவுகுழாய் வலைவுகளில் வெளியிலிருந்து திறந்து சரிசெய்யும் வகையில் "ஓபனர்" வைக்கின்ரனர். எவ்விடத்தில் அடைப்பு இருக்கிறதோ அந்த ஓப்பனரை திறந்து "ஆசிட் போன்ற" ஓர் திரவத்தை ஊற்றுகின்ரனர்.அது அடைப்பை கரைத்து சரி செய்கிறது.

ஜாஹிர்//

krish3898 said...

தூங்கும் பார்ப்பானை இடறாதே..

Well said,when ever PAPAN, hold the big post,they always did something to people,like.
Rajaji,
shesan,
Gopalsami.
this all example,those days govt dept many papan,but now no papan,see the real???.
when you say papan,we getting better,.
any have god will help india.
dare to krishna3898