பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 12, 2010

ஆனந்த் டொபலோவ் - Game 11 & 12 - An Express Report

யாரோ செய்த பிளாக் மேஜிக் என்று நினைக்கிறேன், நேற்று இரவு சீக்கிரம் தூங்கிவிட்டேன். அதனால் ஆனந்தின் பிளாக் மெஜிக் பற்றி லலிதா ராம் எனக்கு அனுப்பிய கட்டுரையை சுட சுட போட முடியவில்லை. மன்னிக்கவும்.

இனி லலிதா ராமின் எஸ்பிரஸ் ரிப்போர்ட்...


ஆனந்த் டொபலோவ் - Game 11 & 12 - An Express Report

இது ரிப்போர்டாக இல்லாமல் நாவலாக இருந்தால், பத்து பக்கங்களுக்கு நீட்டி முழக்கி, சஸ்பன்ஸை வளர்த்து, நகம் கடிக்க வைத்து, சீட் நுனிக்கு இழுத்து இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கலாம்..

இப்போது அதற்கெல்லாம் வழியில்லை.

ஆனந்த் மீண்டும் (செஸ்ஸில்) ‘விஸ்வநாதன்’ ஆனார்.

ஒரு சின்ன recap:

************

போட்டியின் பெரும்பான்மையான ஆட்டங்களில் அதிரடியாய் ஆடுவதைத் தவிர்த்து, எதிராளியைத் தவறு செய்யத் தூண்டும் விதமாகவே ஆட முயன்றார் ஆனந்த். போட்டியின் முதல் பகுதியில் வெற்றியும் கண்டார். ஆனால், இரண்டாவது பகுதியில் டொபலோவ் விழித்துக் கொண்டு துல்லியமாக ஆடினார். பெரும்பாலான தவறுகளை ஆனந்தே செய்தார். இதனால் எட்டாவது ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததோடன்றி, ஒன்பதாவது ஆட்டத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி டிராவாகிப் போனது.

************

பதினோறாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு கடைசி வெள்ளை.

பத்து ஆட்டங்களில் சமநிலையில் முடியாத ஆட்டங்கள் அனைத்திலுமே வெள்ளைக் காய்களுடன் விளையாடியவரே வென்றிருந்தார். கிட்டத்தட்ட ஆனந்தின் வெற்றிக்கு அதுதான் கடைசி வாய்ப்பு.

இந்த சூழலில் ஆனந்த் தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வாரா?

ஓபனிங்கைப் பொறுத்த வரை, நான்கு ஆட்டங்களில் விளையாடிய Catalan-ஐ டொபலோவ் மழுங்கடித்து விட்டார். ஒரு ஆட்டத்தில் விளையாடிய Nimzo Indian-ல் ஆனந்தின் கை ஓங்கியிருந்த போதும், கிடைத்த ஓய்வு நாளில் டொபலோவின் டீம் அந்த ஓபனிங்கை அலசித் தீர்த்திருக்கும். சர்வ நிச்சயமாய் வேறொரு ஓபனிங்கைத்தான் ஆனந்த் விளையாடியாக வேண்டும்.

ஐந்து ஆட்டங்களை 1.d4 என்ற நகர்த்தலில் தொடங்கிய ஆனந்த், ஆறாவது வெள்ளை ஆட்டத்தை 1.c4 என்ற நகர்த்தலில் தொடங்கினார்.

இந்த முடிவு டொபலோவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று ஆனந்த் எதிர்பார்த்திருக்கக் கூடும். English Opening-ல் ஆனந்த் ஆட்டத்தைத் தொடங்கிய போதும், ஆட்டம் சமமாகவே தொடர்ந்தது. ஆனந்தின் திட்டமென்ன என்று அறியும் வரை, டொபலோவ் கோதாவில் குதிக்கத் தயாராகயில்லை. ஆனந்தும் டொபலோவ் பொறுமையிழக்கும் வரை விடுவதாக இல்லை. இருவரும் சளைக்காமல் middle game-ஐ ஆடி, ஆட்டம் நிச்சயம் டிராதான் என்ற நிலைக்கு இழுத்துச் சென்றனர்.

48 நகர்த்தல்களுக்குப் பின், இருவரிடமும் 3 pawns, ஒரு குதிரை, ஒரு யானை மட்டுமே மிஞ்சியிருந்தது. 49-வது நகர்த்தலில் ஆனந்த் அதிரடியாய் விளையாடினார். தனது queen-side pawn-ஐ King-side play-க்காக தியாகம் செய்தார்.

ஆட்டம் சமநிலையிலிருந்து விலகியது.

கரணம் தப்பினால் மரணம்.

யாருக்கு? இருவருக்கும்தான்.

ஆனந்த் முதன் முறையாய் வெற்றிக்காக ஆட ஆரம்பித்தார். டொபலோவும் வெற்றியைப் பெற முனைந்தார்.

கடைசி வெள்ளை ஆட்டத்தில் ஜெயிக்க மிகப் பெரிய ரிஸ்கை ஆனந்த் எடுத்த போதும், இருவரும் துல்லியமாக ஆடினர்.

ஆட்டத்தை லைவாகப் பார்த்த ஆனந்த் ரசிகர்களுக்கு இதயத்துடிப்பு காய்கறி விலை போல எகிறியிருக்கும்.

கடுமையான போராட்டத்துக்குப் பின் ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்த நாள் ஒய்வுக்குப் பின், கடைசி ஆட்டம். டொபலோவுக்கு வெள்ளை.

கருப்புக் காய்களுடன் கடைசி ஆட்டத்தை ஆடுவது ஆனந்துக்கு சிரமம்தான் என்ற போதும், டொபலோவுக்கு வேறு வகையில் நெருக்கடிகள்.

ஒரு வேளை ஜெயிக்கவில்லை என்றால், போட்டி ராபிட் ஆட்டங்களுக்குச் செல்லும். ஆனந்தான் Best ever rapid player. டொபலோவை பல முறை வென்றும் இருக்கிறார். 2006-ல் கிராம்னிக்குடனான போட்டியிலும் டொபலோவ் ராபிட் ஆட்டங்களில்தான் தோல்வியுற்றார்.

ஆனந்துக்கு கடைசி ஆட்டத்தை ஜெயித்துதான் ஆக வேண்டும் என்றில்லை.ஆனால், டொபலோவுக்கோ நிச்சயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி.

போட்டியைத் தொடர்ந்து பார்த்த எனக்கே, ஓய்வு நாளில் மிகவும் சஞ்சலமாக இருந்தது. போட்டியாளர் இருவரும் எப்படிக் கழித்தனரோ! பாவம்.

ஆனந்தின் strategy,

1. டொபலோவின் preparation-ல் மாட்டிக் கொள்ளக் கூடாது.
2. டொபலோவை drawish ஆட்டத்துக்குள் இழுக்க வேண்டும்.
3.டொபலோவ் டிராவுக்கு இசைந்தால் சரி. டிரா கூடாது என்று நினைத்து அதீதமாய் அதிரடி ஆட்டத்தைப் பயன்படுத்தி, தோல்வியை அடைந்தால் நல்லதாய் போயிற்று!

இந்த strategy-க்கு ஏற்ற தொடக்கததை ஆனந்த் தயார் செய்ய வேண்டும்.

மூன்று முறை டிரா செய்த Slav defense-க்கே ஆனந்த் திரும்புவாரா? அல்லது சமீபத்தில் பயன்படுத்திய Grunfeld-ல் தொடங்குவாரா?

இரண்டிலும் இல்லை. காலம் காலமாய் black-ல் தொற்காமல் இருக்கும் சூழல்களை எண்ணற்ற ஆட்டங்களில் அளித்து வந்த Queen's Gambit Declined-ஐ தேர்வு செய்தார்.

முதல் இருபது நகர்த்தல்கள் கடகடவென்று வைத்தார் ஆனந்த். அந் நிலையில் அவரது C5 pawn சற்று weak-ஆக இருப்பினும், அவரது வெள்ளை பிஷப்பும் யானையும் டொபலோவின் back rank-ஐத் தாக்கத் தயாராக இருந்தன.

சில நகர்த்தல்களுக்குப் பின் ஆனந்தின் பிஷப் a8-h1 diagonal-ஐ வியாபித்து இருந்தது. அதே diagonal-ல் இருந்த ராஜாவை, டொபலோவின் e-pawn-ம், f-pawn-ம் காத்தன.

ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் டிராவை நோக்கிச் செல்வதை டொபலோவ் உணர்திருக்க வேண்டும். எதையாவது செய்து சமநிலையைக் குலைக்க விழைந்தார் டொபலோவ். தனது 31 & 32-வது நகர்த்தலில் முன் குறிப்பிட்ட e மற்றும் f pawn-கள் கொண்டு ஆனந்தின் pawn-கள் இரண்டை வீழ்த்தினார். இதனால் டொபலோவின் ராஜாவைத் தாக்குவது சுலபமானது.

இவ்விரு நகர்த்தல்களை விளையாடியதுமே ஆனந்தின் கை ஓங்கிவிட்டது. ஆட்டத்தை லைவாக விமர்சனம் செய்த வல்லுனர்களை டொபலோவின் blunder அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Tiger from Madras had smelt blood.

அடுத்தடுத்து அதிரடியாய் ஆடி டொபலோவை நெருக்கினார்.

டொபலோவ் தனது 40-வது நகர்த்தலில் செக் வைத்தார். ஆனந்த் தன் ராஜாவை நகர்த்தியதும், Susan Polgar என்ற commentator & GM, அந்த நகர்த்தலை blunder என்றார். அதனைப் படித்த போது ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது. .

9-வது ஆட்டத்திலும் ஆனந்த் 40-வது நகர்த்தலில்தான் தவறிழைத்து கை மேல் இருந்த வெற்றியைக் கோட்டை விட்டார்

மீண்டுமொருமுறை வெற்றியின் விளிம்பில் இருந்து வீழ்வாரா ஆனந்த்?

நல்ல காலம் அப்படியொன்றும் ஆகவில்லை. சூசன் போல்கர்தான் அவசரக் குடுக்கை!

“இந்த நகர்த்தலை ஆடியதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். அப்புறம்தான் நான் செய்தது blunder அல்ல என்று உரைத்தது”, என்று press conference-ல் கூறியிருக்கிறார் ஆனந்த்

டொபலோவுக்கு தன் தவறு உடனே புரிந்திருக்க வேண்டும். இருப்பினும் தொடர்ந்து ஆடினார். ஒரு கட்டத்தில் தன் ராணியை ஆனந்தின் யானை மற்றும் பிஷப்புக்காக தியாகம் செய்தார்.

ஆனந்த் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம் என்று உணர்ந்ததும், பொறுமையாக ஆட ஆரம்பித்தார். எண்ணற்ற வழிகளில் வெற்றியைப் பெறலாம் என்ற நிலையில்,உள்ளதில் பாதுகாப்பான வழியிலேயே ஆட்டத்தைத் தொடர்ந்தார். டொபலோவின் காய்களை வீழ்த்தாமல், zugzwang சூழல்களை உருவாக்கினார். (zugzwang என்பது நம் கையாலேயே நம் கண்ணைக் குத்திக் கொள்ளும் நிலை. எதை நகர்த்தினாலும் நிலைமை மோசமாகிவிடும்.)

ஒரு ராணியே பாடாய் அடுத்தும் நிலையில், இன்னொரு ராணியையும் ஆனந்த் passed pawn மூலம் பெற்றுவிடுவார் என்று உணர்ந்த போது, டொபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

பன்னிரெண்டு ஆட்டங்களில் முதன் முறையாய் கருப்புக்கு வெற்றி.

டொபலோவ் தோற்றாலும் நிச்சயம் பல இதயங்களை வென்றிருப்பார்.

போட்டியின் பல நேரங்களில் அவர் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் ஆனந்த் வென்றாலும், இருவரும் கடைசி நொடி வரை போராடினர்.

Kasparov-Karpov-க்குப் பின், மயிரிழையில் சாம்பியன் முடிவானது இந்தப் போட்டியில்தான். (கிராம்னிக்-டொபலோவ் ஆட்டங்கள் ராபிட் வரை சென்ற போதும், அங்கு ஏற்பட்ட சர்ச்சைகள் ஆட்ட முடிவை வெகுவாக பாதித்தன.)

Kasparov era-க்கும் carlsen era-க்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தை ஆனந்த் ஆக்கிரமித்தார் என்று நாளைய வரலாறு கூறுவதை ஆனந்த் இந்த வெற்றியின் மூலம் தவிர்த்துள்ளார்.

Post Kasparov era-வில் சிறந்த ஆட்டக்காரர்களான கிராம்னிக் மற்றும் டொபலோவை வீழ்த்தியதன் மூலம், ஆனந்த் தன் புகழை நிலைக்கச் செய்துள்ளார்..

இந்தப் போட்டியில் ஆனந்த் தோற்றிருந்தால், இன்னும் சில வருடங்கள் free-flowing chess விளையாடியிருப்பார். இப்போது, அடுத்த challenger-க்காகத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

Preview மட்டும் எழுதி கடைசியில் ஒரு round up எழுதலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். இ.வ ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஏழு கட்டுரைகள்! இருபது நாட்களுக்குள்! என் போன்ற சோம்பேறியை இவ்வளவு எழுத வைத்ததற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சத்தை அடைவது கடினம். அதைவிடக் கடினம் உச்சத்தில் நீடிப்பது.

அதைச் சாதித்துக் காட்டிய ஆனந்துக்கு hats off!


லலிதா ராம்
பெங்களூர் (1.15 AM)

பி.கு: 12-வது ஆட்டத்தில் டிரா செய்தால், ஆனந்தை ராபிட் ஆட்டங்களில் சந்திக்க வேண்டுமே என்று டொபலோவ் பயப்படவில்லையாம். 13-ம் தேதி ராபிட் ஆட்டங்கள் ஆட நேரிடுமே என்று பயந்தாராம். 2006-ல் கிராம்னிக்குடனும் 13-ம் தேதி விளையாடிதான் டொபலோவ் தோற்றாராம். அதனால்தான் ஆட்டத்தை ராபிட் ஆட்டங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க முயன்றாராம். பாவம் டொபலோவ்! சென்டிமெண்டால் வடை போச்சு!

Anand's interview after victory: http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1226927




தொடர்ந்து லலிதா ராம் இட்லிவடையில் எழுதுவார் என்று நம்புகிறேன் :-)


36 Comments:

Anonymous said...

லலிதா ராம் மற்றும் இவ விற்க்கு கோடானு கோடி நன்றிகள், வெகுகாலமாய் மறந்திருந்த செஸ் ஆர்வத்தை தட்டி எழுப்பி விட்டீர்கள். 11 ஆவது கேமிலிருந்து என் குடும்பத்தாரும் இவ விற்கும் , லலிதா ராமிற்க்கு ரசிகர்கள் ஆகிபோனார்கள்
Bala
Texas.

பிரபாகர் said...

டிவியில் வெற்றிச் செய்தியைக் கேட்டு சந்தோஷித்து உடன் இட்லிவடையை நாட, அருமையான தகவல்களுடன் (கொஞ்சம் எழுத்துப் பிழைகளுடன்) இடுகை...

ரொம்ப நன்றிங்க.

பிரபாகர்...

Shankar said...

Dear IV,
Great job by Lalitha madam. She has rekindled the dormant chess game spirit in most of us.
Lets hope she continues to write and inspire us not only on chess but other interesting sports too.
Good luck to both of you.
regards

shankar

SAN said...

Hi IV & Lalitha Ram,
Thanks to lalitha ram for your excellent review anf IV for posting the same.

Congrats for Anand.

shanmuganathan said...

விஸ்வநாதன் ஆனந்தக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்........இனிமேல் டோபலோவ்கு home advantage கிடையாது என்று போட்டி முடிந்த பின் ஆனந்த் கூறியது செஸ் உலகின் ரசிகர்ளை வெகுவாக ஈர்த்திருக்கும் என்று நம்புகிறேன்....இந்த இடத்தில் இட்லிவடையில் இந்த போட்டி ஆரம்பிக்கும் முன்னர் எழுதியருந்த கட்டுரையில்
""பல முன்னணி செஸ் வீரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவரின் பதில், “இருவரும் மிக மிக நல்ல ஆட்டக்காரர்கள். ஆனந்தின் நிதானம் அவரது பலம். வெறும் செஸ் பலத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், ஆனந்த் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆட்டங்கள் பல்கேரியாவில் நடக்கின்றன. அது சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை அடக்குவதற்கு சமானம். ஒரு சிங்கம் மட்டுமென்றால் பரவாயில்லை. இரண்டு சிங்கங்கள் இருக்கின்றன. உலக சாம்பியன் ஆவதற்கு இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காத என்ற நிலையில் இரு சிங்கங்களும் பசியுடன் இருக்கின்றன. ஜெயிப்பதற்காக அவை எதை வேண்டுமானாலும் செய்யும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது டொபலோவுக்கு வாய்ப்புகள் அதிகம்” "
எத்தனை சிங்கம் வந்தாலும் கூட்டத்துக்கு என்று ஒரு சிங்கராஜா இருப்பர்..அவர் தான் ஆனந்த் என்று மற்றவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.... மீண்டும் ஒருமுறை ஆனந்தின் சாதனைக்கு வாழ்த்துக்கள்..

Nanban said...

Hats off to you Lalitha Ram for your fabulous writing.

R. Jagannathan said...

Firstly, congrats to Vishy Anand!

Secondly, thanks to Lalitha Ram for an interesting Tamil commentary of the games, which, as other followers of the IV site have mentioned, have kindled a good interest in the game of chess.

/ ஆனந்த் மீண்டும் (செஸ்ஸில்) ‘விஸ்வநாதன்’ ஆனார். / - Well said!

-R. Jagannathan

Anonymous said...

ஷங்கர்!
'லலிதா'ராம் என்ற பெயரில் எழுதுபவர் ஆண் தான். 'மேடம்' அல்ல.

IdlyVadai said...

//ஷங்கர்!
'லலிதா'ராம் என்ற பெயரில் எழுதுபவர் ஆண் தான். 'மேடம்' அல்ல.//

எங்கடா ஆனந்துக்கு கிடைத்த நல்ல பெயரால் லலிதா ராமுக்கு கெட்ட பெயர் கிடைத்துவிட்டதே என்று நினைத்தேன். அப்பாடா உங்க கமெண்ட் பார்த்த பின் தான் நிம்மதியாச்சு. :-)

8 வருஷம் நெட்டில் ஜல்லி அடித்த இவருக்கே இந்த பிரச்சனை என்றால் புதுசா ஜல்லி அடிக்க வந்தவர்களின் நிலமை - நினைக்கவே பயமா இருக்கு :-)

R. Jagannathan said...

Dear IV - note this / ஆனந்த் மீண்டும் செஸ்ஸில் ‘விஸ்வநாதன்’ ஆனார் /. இவர் தான் ஐயா உலக நாயகன். மற்றவரெல்லாம் போலி.( அதாவது குண்டுச்சட்டி நாயகன்!)
வந்து விடு்வீர்களே வரிந்து கட்டிக் கொண்டு!- R. Jagannathan

Anonymous said...

Un related to this post:

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18286

தனிப்பட்ட முறையில் மோசமாக விமர்சிப்பது நியாயம் தானா? 'பழகிய பாசத்துடன்' பன்னீருக்கு முதல்வர் கேள்வி - Does not MK uses below the belt language for Jaya and others ?

Shankar said...

Kudos to Anand and thanks to lalitha ram

அனுஜன்யா said...

விஷியின் பன்னிரெண்டாம் ஆட்டத்தின் விறுவிறுப்பு போலவே, ராமின் உடனடி ரிப்போர்ட் கச்சிதம். இப்போது இவ்வளவு நல்லா எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதும், லைவ் கம்மெண்டரியில் சொல்லப்பட்ட Zugswang பற்றி எழுதியது pleasant surprise.

மற்றபடி அனைத்தும் சுபம். ஆனந்தை 'விஸ்வநாதன்' அல்லது 'உலக நாயகன்' அல்லது மெட்ராஸ் டைகர் அல்லது சென்னை சூப்பர் கிங் என்று பல்வேறு அடைமொழிகளில் புகழ்ந்து தள்ளலாம். Like Sachin, Vishy too is always gracious in victory as in defeats. Topa deserves praise for such a rivetting match.

But, this kind of interest in chess should be sustained. People from TN have a great tradition in chess. I wonder whether we should abruptly stop this, switch over probably to World T-20, FIFA world cup in June, Wimbledon, Commonwealth games et al. I know quite a lot of youngsters are interested in chess and net-savvy. In fact, couple of days back, another popular blogger Karki had covered the 11th game and analyzed it. (http://www.karkibava.com/2010/05/blog-post_10.html). Idlyvadai is THE most popular blog in Tamil. With a gifted writer like Lalitha Ram, something should be done on a regular basis to sustain and enhance interest in the game. These are juz initial loud thoughts. Hope both IV and LR will consider it.

விஷியின் Free flow chess இனிமேல் அவ்வளவு எளிதில் காணக் கிடைக்காது என்ற உங்கள் கருத்து சரிதான் என்று நினைக்கிறேன். பொன்னியின் செல்வனின் கடைசி அத்தியாயங்களில் வந்தியத்தேவன் எப்படி துள்ளும் வாலிபப் பருவத்திலிருந்து mature individual ஆக மாறியிருப்பான் என்று கல்கி எழுதியது ஞாபகம் வருகிறது.

ராம், நிச்சயம் உங்களைப் பாராட்ட வேண்டும். டெக்னிகல் விளையாட்டை மிக சுவாரஸ்யமாக எழுதுவது அவ்வளவு சுலபமில்லை. வாழ்த்துகள். போலவே, இட்லிவடை குழுமத்திற்கும் (குழுமம் தானே?).

அனுஜன்யா

Swami said...

Thanks to Lalitha Ram for the detailed report and thanks IV for publishing it.. ( not sure whether lalitha ram is also part of IV group :) ) .

In this cricket crazy nation bcz of vishy chess has got some space.

Shankar said...

Dear Annonymus,
Thanks for informing that lalith ram was not a "madam".

Shankar

ராஜ சுப்ரமணியன் said...

உலக சாம்பியன் ஆனந்திற்கு வாழ்த்துக்கள். 4-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தியாவும், தமிழகமும், சென்னையும், பெசண்ட்நகரும் இதை எப்படி கொண்டாடப் போகிறார்கள்?

நேற்று இந்தியா கிரிக்கெட்டில் ஸ்ரீலங்காவை வீழ்த்தியிருந்தால் ... அதுதான் தலைப்பு செய்தியாகவும், செய்தித்தாள் முழுதும் டோனியின் ஃபோட்டோக்களும் தான் நிரம்பியிருந்திருக்கும். நல்ல வேளை, இந்தியா அடி வாங்கியது, ஆனந்தைப் பற்றிய செய்தி வெளிவந்தது.

kirthika said...

excellent coverage of 12 matches by ram.hope so he continues with same interest to cover up other games too as anujanya said.

அறிவிலி said...

Great review.Thanks to Lalitha Ram and IV

As anujanya mentioned, IV and Lalitha Ram shoud do something tosustain the interest.

Perhaps some chess puzzles for the readers to solve???????

ந.லோகநாதன் said...

All the best to Anand! ...என் மனமார்ந்த பாராட்டுக்கள் to Anand...You rock Vishy

ரிஷபன் said...

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எந்த சப்ஜெக்டைப் பற்றி எழுதினாலும் வாசகரை அதனுள் ஒன்றிப் போக வைத்து விடுவார்.

உங்கள் எழுத்தும் அதைச் செய்கிறது.

அனுஜென்யா,
உங்கள் பின்னூட்டம் ரசிக்கும்படி இருக்கிறது.










லலிதா ராம்

கிரி said...

லலிதாராம் மற்றும் இட்லிவடைக்கு நன்றி :-)

பதிவு ரொம்ப அருமையா இருந்தது..போட்டியில் இருந்த பரபரப்பு லலிதாராம் அவர்கள் எழுத்திலும். ரொம்ப வருடத்திற்கு பிறகு செஸ் பற்றி இங்கு தான் ஆர்வமாக படித்தேன்.

Sabarinathan Arthanari said...

நன்று லலிதா ராம் & இட்லிவடை

அனாமதேயன் said...

உச்சத்தை அடைவது கடினம். அதைவிடக் கடினம் உச்சத்தில் நீடிப்பது.

அதைச் சாதித்துக் காட்டிய ஆனந்துக்கு hats off!

செஸ் போன்ற ஆட்டங்களை விமர்சனம் செய்வது கடினம்
அதைவிடக் கடினம் அதனை அறியாதவர்களுக்கும் அறிய வேண்டும் என ஆர்வத்தை தூண்டும்படி எழுதுவது
லலிதாராமுக்கு hats off!
- வீரராகவன்

Balaji said...

Really nice article through out the series!! I watched last 4 games lively in net!! ANAND really rocked the game!!!

Saran said...

//*உச்சத்தை அடைவது கடினம். அதைவிடக் கடினம் உச்சத்தில் நீடிப்பது.

அதைச் சாதித்துக் காட்டிய ஆனந்துக்கு hats off! *//
Good Quoted with
Nice conclusion..

Thanks for lalitha ram for bringing the chess Championship scenario into our eyes. Nice narration.Expecting more from you about this kind.
Thanks to Idly vadai too ..

யதிராஜ சம்பத் குமார் said...

தொடர்ந்து செஸ் பற்றி எழுதி அசத்திய லலிதா ராமிற்கு நன்றிகள் பல.

பாழாய் போன கிரிக்கெட்டை தூக்கத்தைத் தியாகம் செய்து பார்த்து அடைந்த சோகத்தை ஒரே நிமிடத்தில் ஆனந்தின் வெற்றிச் செய்தி போக்கடித்தது.

லலிதா ராம் மற்றும் இட்லிவடைக்கு நன்றிகள் பல.

Anonymous said...

ஐயா இட்லிவடை! லலிதா ராமை பெண் எனக் கருதினால் அவருக்கு அது கெட்ட பெயரா?

Raj Chandra said...

This was one of the best sports series writing in Tamil. Lalitha Ram, great job.

Please write about Chess very often. Atleast gives me some satisfaction to play in in the mind based on your commentaries. :)

Regards,
Rajesh

Ram said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

குறிப்பாக அனுஜன்யா!

ஒவ்வொரு கட்டுரைக்கும் தாங்கள் அளிக்கும் விவரமான பின்னூட்டத்தை வெகுவாக ரசித்தேன்.

இ.வ-க்கும், இ.வ வாசகர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி!!!!!!

லலிதாராம் (space விடாமல் பெயரை எழுதியுள்ளேன். சீதாராம், ஜானகிராம் போன்ற பெயர்களைப் படிப்பதைப் போலப் படிக்கவும்:-):-))

Anonymous said...

leave all these.
start a topic on tamilconference.

What is the stuff and grammar of the conference's theme script?

refer to today's dinakaran and the kavidai.

kaliraj - Qatar said...

Congratz to Anandh.

Thanks for Idly vadai & Lalitha Ram to publishing this.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல வேளை....இந்தியா T-20 உலகக் கோப்பையில் தோற்றது...இல்லை என்றால் எல்லாரும் கிரிக்கெட்டைப் பற்றியே பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். பிற விளையாட்டுக்களிலும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் என்பதை அநேகமாக எல்லோரும் மறந்துவிட்ட நிலையில் இம்மாதிரி பதிவுகள் ஆறுதலைத் தருகின்றன.

Hats off Idlyvadai!

Hats off Lalitharam!

பார்வையாளன் said...

மிக மிக அருமையான தொடர் பதிவுகள்.. இட்லி வடை- லதாராம் அணிக்கு நன்றி...

Anonymous said...

NJK writes,
Hats off to Vishy Anand !
He has won the title for the 4th time. By doing so he has brought fame & name to our great country.




THANK YOU ANAND !
NJK

Anonymous said...

V VISHNU SUDHARSHAN from Pune writes,
What a victory yet again!!!
one must remember before the start of the match,he had to travel 2000 kms in a span of just 48 hours.How much strain he must have felt and the organisers had agreed only for 24 hours postponement.He is in his early 40's and he is still in his reign
If only he born in any of the North Indian state he would have got the recognition he deserves and in Tamil nadu also, unfortunately he is born in a community not receptive to "bigwigs"
Let us sing the praise of Vishwanathan Anand

VISHNU
PUNE 14/5/10

Anonymous said...

''''V VISHNU SUDHARSHAN from Pune writes,
What a victory yet again!!!
one must remember before the start of the match,he had to travel 2000 kms in a span of just 48 hours.How much strain he must have felt and the organisers had agreed only for 24 hours postponement.He is in his early 40's and he is still in his reign
If only he born in any of the North Indian state he would have got the recognition he deserves and in Tamil nadu also, unfortunately he is born in a community not receptive to "bigwigs"
Let us sing the praise of Vishwanathan Anand

VISHNU
PUNE 14/5/10'''''''
what you are trying to say? annand is paapan? why you are looking caste in sports man? for your information ,krishnamachari srikatnth was given land by mk for winning world cup 83,even though he is not in need!(ofcurse krish begged for this as if he on street, is different issue)