பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 19, 2010

திநகரில் கிழக்கு புத்தக ஷோரூம் !

திநகரில் கிழக்கு புத்தக ஷோரூம் இன்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது.


இன்று ஜோ என்று பேய்த மழையின் காரணமாக, ஷோரூம் அழகுபடுத்தும் வேலைகள் மட்டும் பாக்கியுள்ளது.

மற்றபடி, இன்றே தி.நகர் கிழக்கு ஷோரூம் செயல்படத் துவங்கியுள்ளது. அதாவது பிரசன்னா அங்கே இருப்பார்முகவரி:

கிழக்கு புத்தக ஷோரூம்,
3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,
57, தெற்கு உஸ்மான் சாலை,
ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்,
தி.நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: 044-42868126
மொபைல்: 95000-45640

அனைவரும் தி.நகர் கிழக்கு புத்தக ஷோரூமுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்று மழை கொட்டுவதால், ஷோரூமுக்குச் செல்ல நினைப்பவர்கள் ஒரு தடவை ஃபோனில் அழைத்துப் பேசிவிட்டுச் செல்லவும். ( இலவச குடை எல்லாம் கிடையாது. )

முதல் ஒரு வாரத்துக்கு மட்டும், திறப்பு விழா சிறப்புச் சலுகையாக, 10% கழிவு தரப்படும். மேலதிக விவரங்களுக்கு தி.நகர் கிழக்கு புத்தக ஷோரூமைத் தொடர்புகொள்ளவும்.

உங்களுக்கு தேவையாக புத்தகம் கிடைக்கவில்லை என்றால், ரத்னா பவன் வடைகறி நன்றாக இருக்கும், அதனால் கவலை வேண்டாம் :-)

நன்றி: சரக்கு மாஸ்டர்

11 Comments:

Anonymous said...

mmm. naxalitelaa 45 appavinga sethu irukanga.

adha pathi endha seithiyum illa. idhe muslim terrorists edhavathu gundu vachi irundha vaanathukum boomikum guthipeenga. thirudhangayaa.

காவேரி கணேஷ் said...

இன்று அடைமழையில் தி.நகரில் உதிக்கும் கிழக்கிற்கு புயல் மழை போல் வணிகம் செழித்து வளர தெற்கிலிருந்து வாழ்த்துக்கிறேன்

snkm said...

என்ன இது ரத்னா பவன் வடை கறியும் ஷோ ரூமில் கிடைக்கச் செய்து விட்டீர்களா!
தி நகர் வாசிகள் கிழக்கு பதிப்பக புத்தகங்களை அருகிலேயே வாங்கலாம்! நன்றி!

யதிராஜ சம்பத் குமார் said...

திரு.பத்ரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

கிழக்கில் தற்போது வெளியிடப்படும் தேவனுடைய நாவல்கள் அனைத்துமே, அவற்றை முன்பு பதிப்பித்த அல்லையன்ஸ் பதிப்பகத்தாரைக் காட்டிலும் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனைக் குறைப்பதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொண்டால் மெச்சத்தகுந்ததாக இருக்கும்.

நன்றி.

Anonymous said...

அப்படியே பரோடால ஒரு ஷோரூம் ஆரம்பிச்சு வையுங்களேன் ;)

Anonymous said...

வாழ்த்துக்கள் !! நன்றி !!

kggouthaman said...

முன்னேற்றப் பாதையில் மேலும் ஒரு அடி எடுத்துவைத்திருக்கும் கிழக்குப் பதிப்பகத்திற்கு எங்கள் வாழ்த்துகள்.

கால்கரி சிவா said...

கார் பார்க்கிங் இருக்கா?

வலைஞன் said...

//திரு.பத்ரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

கிழக்கில் தற்போது வெளியிடப்படும் தேவனுடைய நாவல்கள் அனைத்துமே, அவற்றை முன்பு பதிப்பித்த அல்லையன்ஸ் பதிப்பகத்தாரைக் காட்டிலும் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனைக் குறைப்பதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொண்டால் மெச்சத்தகுந்ததாக இருக்கும்.

நன்றி.//

நம் நாட்டில் இட்லிவடை விற்கும் அளவில், நூற்றில் ஒரு பங்காவது, புத்தகங்கள் விற்றால் மட்டுமே, இது சாத்தியம்.
;-)

மாயவரத்தான்.... said...

ஹூம்.. எங்க ஊரு பக்கம் எல்லாம் கிழக்கு பதிப்பக புத்தகங்கள் ஹோட்டலிலே தான் கிடைக்குது. இங்கே கிழக்கிலே ஹோட்டல் ஐட்டம் கிடைக்குமோ?!

Anand said...

ennakku paisasam endra tamil noval venum. ungalidam irukkiratha?