பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 25, 2010

கழட்டியது என்ன ?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவை கொண்டாடும் வண்ணம் இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாருடைய போறாத வேளையோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மங்களூரில் விபத்துக்குள்ளாகி, கொண்டாட்ட விருந்து தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டுள்ளது. உடனே ப்ரஃபுல் படேல் ராஜிநாமா என்று சொல்லி அது எதிரொலிப்பதற்கு முன்னமே பிரதமர் ராஜிநாமாவை ஏற்கவில்லை என செய்திகள் வந்துவிட்டன. ஆனால் இப்போது நமக்கு இது ஒரு பொருட்டல்ல. மீடியாக்கள் விருந்து ரத்து என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து செய்திகளுக்கு மத்தியில் அதி முக்கியத்துவம் கொடுத்து இச்செய்தியை சொல்லிக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் இன்று இந்த ஓராண்டில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசுவதற்காக பிரதமர் என்றழைக்கப்படும் திரு.மன்மோகன் சிங் அவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து இன்று பேசியுள்ளார். வழக்கம்போல் அவரது பேட்டிக்கு ஆளுங்கட்சித் தரப்பில் பலமான வரவேற்பும், எதிர்கட்சித் தரப்பில் பலத்த அதிருப்தியும் தெரிவித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இனிதே இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பிரதமர் பின்வரும் சில வழக்கமான கேள்விகளுக்கு அதே வழக்கமான பதில்களை அளித்துள்ளார். அவற்றில் சில...

விலைவாசி உயர்வு மிகவும் கவலையளிப்பதாக பிரதமர் பேசியுள்ளார். ஒரு பொருளாதார மேதையாக மதிக்கப்படுபவரே இப்படி விலைவாசி உயர்வைப் பற்றிக் கவலைப்பட்டால், எழுபது கோடி சாமானியர்கள் என்ன செய்வார்கள்? இவ்வளவுக்குப் பிறகும் “ ஆம் ஆத்மி” என்று சொல்வதற்கு காங்கிரஸாருக்கு எப்படித்தான் மனது வருகிறதோ? ஒவ்வொரு வருடமும், விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், அதனை எப்போது கட்டுப் படுத்துவது? கவலைப்பட்டு முடிப்பதற்குள் அடுத்த தேர்தலே வந்து விடும். ஆனாலும் பிரதமர் இப்படி வெளிப்படையாக பேசுவது, அவருக்கு இன்னும் அரசியல் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. கலைஞர் பாணியில், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது என்று ஒரு போடு போட்டால், விலைவாசி உயர்வைப் பற்றி இடதுசாரிகள் கூட வாய் திறக்கமாட்டார்கள். இல்லை பக்கத்து தேசத்தில் பாருங்கள் என்று ஒரு புள்ளி விவரம் கொடுத்தால் முடிந்தது கதை. மன்மோகன் சிங் எப்போதுதான் இதை எல்லாம் கற்றுக் கொள்ளப் போகிறாரோ? கலைஞரின் வழிகாட்டுதல் சரியில்லையோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

அடுத்ததும் பிரதமரின் வழக்கமான வேதனைதான். ”நக்ஸல்வாதம் அதிகரித்திருப்பது வேதனை தருகிறது”. யாருக்காக வேதனைப் படுகிறார் என்று குழப்பமாக இருக்கிறது. நக்ஸலைட்டுகளுக்காக வேதனைப் படுகிறாரா அல்லது ஆம் ஆத்மிக்காக வேதனைப்படுகிறாரா என்பதைத் தெளிவு படுத்துதல் நலம். இவருடைய கேபினட்டில் இருப்பவர்களே, நக்ஸல்களைத் தீவிரவாதிகள் என்று சொல்ல முடியாது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்றால் எதற்காக இவர் கவலைப்படுகிறார்? அதுவும் புரியவில்லை. எது எப்படியாயினும் உயிரிழப்பது பொதுமக்களும், போலிஸ் ஜவான்களும்தானே? நாம் ஒரு கண்டனம் தெரிவித்தால் போதாதா? வேதனை, பசி தூக்கம் தொலைத்ததெல்லாம் போதுமே!!

அடுத்து சம்பிரதாயமான சமாதானம். “மத்திய அமைச்சர் ராசா மீது ஊழல் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்”. சி.பி.ஐ ரிபோர்ட் வெளியே வந்த பிறகும், ஒலி நாடா சந்தி சிரித்த பிறகும் என்ன நிரூபிக்கப்பட வேண்டும் என பிரதமர் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. ராசாவே நான் செய்தது தப்பு என்று சொன்னால் கூட நிருபித்து காட்டுங்கள் என்று சொல்லுவார் போல. நடவடிக்கை எடுப்பதற்கு அவர் ஒன்றும் காங்கிரஸ் அமைச்சர் இல்லை என அபிஷேக் மனு சிங்வி கூறியதை விட என்ன நிரூபணம் வேண்டும்? ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது குரங்காட்டி கையிலுள்ள குச்சி என்று பொது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டது. குச்சியை ஆட்டினால் குரங்கும் ஆடும்; அடி விழும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

அடுத்து, ”பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறோம்”. எப்போதுவரை என்பது தெரியவில்லை. அநேகமாக அடுத்த குண்டுவெடிப்பு வரை என்பதை நாமாக அனுமானம் செய்து கொள்ளலாம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்த முறை இந்திய மண்ணில் நாச வேலையில் ஈடுபட்டால், உடனே பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு துணை போவதாக ஆவேசமான அறிக்கைகள் பறக்கும். அடுத்து சொல்லி வைத்தாற்போல் பேச்சுவார்த்தை இனி கிடையவே கிடையாது என்ற வீராவேச பேச்சுக்கள் வரும். பிறகு அமெரிக்கா மூலமாக ஆவண பரிமாற்றங்கள் நிகழும். பிறகு எங்காவது ஒரு உச்சி மாநாட்டில் இருநாட்டு பிரதமர்களும் கைகுலுக்கிக் கொண்டு, அடுத்த பேச்சுவார்த்தை தில்லியிலா லாகூரிலா என்பதனை முடிவு செய்வர். அதற்குள் மக்கள் அனைத்தையும் மறந்து விடுவர். இதுவும் புளித்துப் போன பேச்சுதான்.

அடுத்ததாக, மத வித்யாசம் பாராமல் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கிறார். தீவிரவாதம் என்று வந்து விட்ட பிறகு அதில் எங்கு மதம் வந்தது? அப்படியென்றால் இதுநாள்வரை அஃப்ஸல் குருவை பாதுகாப்பதன் காரணம் என்ன? கருணை மனு ஜனாதிபதி வசம் உள்ளது என்று அரசு கூறுகிறது. ஆனால் அவரோ, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் மீதே கருணை மனு மீது முடிவு செய்யப்படுமென்கிறார். அப்படியானால் உள்துறை அமைச்சகம் அதனை ஏன் தாமதப் படுத்துகிறது? ஏற்கனவே நமது நீதிமன்றங்கள் ஆமை வேகத்தில் வழக்குகளை நடத்துகின்றன. இந்நிலையில் தீர்ப்பு வந்த பிறகும், தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டால் நீதித்துறை எதற்கு? கருணை என்பதே கிஞ்சித்தும் இல்லாமல் அப்பாவிப் பொதுமக்களை பலிவாங்கிய கொடுமையான தீவிரவாதிக்கு என்ன கருணை வேண்டிக் கிடக்கிறது? இதற்கிடையில் அஜ்மல் கஸாபிற்கு இந்த ஆண்டிற்குள் தண்டனை நிறைவேற்றப்படுமென வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார். இப்பொழுதுதான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது. இன்னும் அதனை பம்பாய் உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பிறகு கருணை மனு வேறு இருக்கிறது. ஆனால் இவர்கள் மைக்கையும், கேமராவையும் பார்த்துவிட்டால் மனம் போன போக்கில் உளற ஆரம்பித்து விடுகின்றனர்.

மனைவி மற்றும் சோனியா ஆகியோரின் வழிகாட்டுதலில் அரசை நடத்துகின்றேன் என்றிருக்கிறார். கூடவே நான் இன்னும் பிரதமராக பதவியேற்ற கடமையை முடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதுவும் எப்போது? பதவியேற்று ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு!! இப்போது புரிகிறதா இவருடைய கடமை ஏன் இன்னும் முடியவில்லை என்பது? நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

பால நாயகம், பகு நாயகம், ஸ்த்ரீ நாயகம், அ நாயகம் என்கிறது ஒரு ஸம்ஸ்க்ருத பழமொழி. அதாவது சிறுவனால் வழிநடத்தப்படும் அரசும், கூட்டணி அரசும், ஒரு பெண்ணின் வழிகாட்டுதலில் நடக்கும் அரசும் உருப்பட்டதாக சரித்திரமில்லை என்பது அதன் பொருள். இப்போது விளங்கும் இவருடைய கடமை ஏன் இன்னும் முடியவில்லை என்பது.


கடைசியாக இப்போது பிரதமர் கூறியதுதான் நிதர்சனம், மற்றும் உண்மையாக இருக்கும். “இளைய தலைமுறையினருக்கு வழிவிடக் காத்திருக்கிறேன்”. விட்டால் போதுமென்ற நிலைக்கு பிரதமர் வந்து விட்டார் போலும். ஐயோ பாவம்!! அவரும் ராகுல் எப்போது தலையசைப்பார் என்று காத்திருக்கிறார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ராகுலுக்கு மறுபடியும் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் வந்து மட்டும் என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போகின்றன?? அயல்நாட்டு கருப்புப் பணம் திரும்பி விடப் போகிறதா? ஸ்பெக்ட்ரம் ஊழல் நிரூபிக்கப்பட்டு தொடர்புடையோர் மீது நடவடிக்கைகள் வரப் போகிறதா? தீவிரவாதம் குறைந்து விடப் போகிறதா அல்லது விலைவாசிதான் வீழ்ந்து விடப் போகிறதா? எதுவுமே இல்லை.


இனி நாம் என்னதான் செய்வது?? பேசாமல் பிரதமர் அடுத்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாமாண்டு நிறைவு செய்தியாளர் சந்திப்பு வரை காத்திருக்கலாம். அட்சரம் பிசகாமல் கிளிப்பிள்ளை போல் நேற்றைய தினம் சொன்ன அனைத்தையும் மறுபடியும் சொல்லுவார். நாமும், இதே கட்டுரையை அடுத்த ஆண்டும் மறுபிரசுரம் செய்து கொள்ளலாம்.

- யதிராஜ சம்பத் குமார்

கழட்டியது என்ன என்று இன்னுமா தெரியவில்லை ? நம்ம ஜட்டி தான்!25 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Manjal commen, super!

ரிஷபன்Meena said...

நம்ம நாட்டின் சாபக்கேடே நல்ல தலைவர்கள் இல்லாது தான்.வெற்று வியாபாரிகள் கூட்டம் தான் நம்மிடம்.

காங்கிரஸ் எப்போதும் இப்படி தான் இருக்கப் போகிறது.


பா.ஜ.க மாதிரி துப்புக் கெட்ட கட்சிகள் சுத்தமாக செத்து தொலைந்தாலாவது அந்த வெற்றிடத்தை நிரப்ப வருகிறவர்களாவது நல்ல மாற்றம் தருவார்களா என்று பார்க்கலாம்.

இந்தப் பிரதமரை மிஸ்டர் க்ளீன் என்றழைப்பவர்கள் வாயை டெட்டால் போட்டு கழுவனும்.


செயலே இல்லாத நல்லவரைக் காட்டிலும் அடவடியான கெட்டவன் பரவாயில்லை.

Madhavan said...

//ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது குரங்காட்டி கையிலுள்ள குச்சி என்று பொது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டது. குச்சியை ஆட்டினால் குரங்கும் ஆடும்; அடி விழும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.//

Exact example.

Anonymous said...

ஜட்டி யா மட்டும் கழட்டினாங்கலேனு சந்தோஷ படுங்க

Nanban said...

Yethiraj,

Wonderful eye opener article. But, what choices do we have? Either Congress or BJP and we have seen they have changed nothing being in power. What a shame that
1) We couldn't take firm action against Pakistan
2) We can't mediate with Naxals and Maoists
3) Politicians condemning only through statements in the media without any action
4) On top of it channels supporting the ruling government and publishing their so called achievements

I think we all want to change everything to better but we are not ready to change. Even if there are people who want to change the numbers are so small to impact on the community / nation.

mak said...

"செயலே இல்லாத நல்லவரைக் காட்டிலும் அடவடியான கெட்டவன் பரவாயில்லை." - so M. K. Alagiri better.

geetha santhanam said...

// பிரதமர் என்றழைக்கப்படும் திரு.மன்மோகன் சிங் அவர்கள்/

/ராசாவே நான் செய்தது தப்பு என்று சொன்னால் கூட நிருபித்து காட்டுங்கள் என்று சொல்லுவார் போல//
கலக்கிட்டீங்க.super. சோ அவர்களின் சாயல் தெரிகிறது.---geetha

IdlyVadai said...

இன்னும் சில பகுதிகள் சேர்த்திருக்கிறோம்.

SATHEESH said...

மக்களாட்சி என்று சொல்லி வெறும் 4896 ( Total MPs + MLAs )மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்தால் இப்படிதான் .

ரிஷபன்Meena said...

//"செயலே இல்லாத நல்லவரைக் காட்டிலும் அடவடியான கெட்டவன் பரவாயில்லை." - so M. K. Alagiri better//

நிச்சயமா பராவாயில்லை அட்லீஸ்ட் நான் ரொம்ப நல்லவன் என்கிற இமேஜ்டன் சுத்தாமலாவது இருப்பார்.

எதற்கும் தன் அறிவை பயன்படுத்தவனுக்கும் முட்டாள் கெட்டவனுக்கும் என்ன வித்தியாசம் என்று சொன்னால் தன்யனாவேன்.

Anonymous said...

If you have so much concern for the nation, stop writing such satires. Whining is what women do. Sad, that this has become a habit of men too. Why don't you start a party and stand in elections?. If none of this is going to happen, then your concerns are just fake. We can complaint to the whole world about the dirts in our streets. But we will develop as a nation only when we come forward to clean the dirt in our streets. Our nations suffers not because of corrupt politicians but because of reluctance and cowardliness of the larger public.

Anonymous said...

இப்போ நம்மா புடிச்ச பெர்ய தலைவலி
கலைஞரோ,ஜெயாவோ,மாயாவோ அல்லர்..இந்த MMS தான்.சரியான சவ சவ கேஸ் !!.ஏதாவது University professor ஆகா இருக்கத்தான் லாயக்கு!

மானஸ்தன் said...

இன்றைய பொன் மொழி.
உதிர்த்தவர் : ஸ்பெக்டரம் ராசா

2G ரேஷன் அரிசி மாதிரி.
3G பாஸ்மதி அரிசி மாதிரி.

என்னமாத் தின்க் பண்ணரான்யா இந்தாளு. :>

மஞ்சள் ஜட்டி said...

கழட்டியது நம் ஜட்டி மட்டும அல்ல.. அவரோட (மன்மோகன் சிங்) சொந்த ஜட்டியைய்ம் தான்.. .... கூட என்னோட மஞ்ச ஜட்டியும் கழண்டது.. இந்த பதிவை படிச்சிட்டு..

பகல்கனவு பக்கிரி said...

நீங்க வேணா பாருங்க, ராஜா ரிசைன் பண்ணப் போறாரு, அந்த துறையை ராகுல் காந்தி எடுத்துக் கொண்டு பிரமாதமான முன்னேற்றங்கள் கொண்டுவரப் போகிறார்.

DR.KVM said...

இதுகூட தெரிலியாக்கும்கழட்டியது நம்ம கோமணத்தைத்தான்

R Gopinathan said...

>>If you have so much concern for the nation.....but because of reluctance and cowardliness of the larger public.<<

அனானி சார், உங்க கருத்து தலை சுத்த வெக்குது சார். நாளைக்கு யாராவது பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு "நாசமாப் போன பல்லவன் பஸ். அர மணி நேரமா நிக்கறேன், ஒரு கருமம் புடிச்ச பஸ் கூட வரலியே! இன்னைக்கு நான் ஆபிஸ் போன மாதிரி தான். இவனுங்களை எல்லாம் எவன் கேக்கறது? இந்த நாட்டுல சாதாரண ஜனங்களை பத்தி யாரு கவலைப்படரா" அப்படீன்னு சொன்னா நீங்க உடனே "பொம்பளை மாதிரி ஏன் இப்படி அழுவற, உனக்கு உண்மைலயே இந்த நாட்டுல இருக்குற போக்குவரத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு வேணும்ன்னு தோணுச்சுன்னா,இதையெல்லாம் நீயே சரி பண்ணனும். நீயே ஒரு பஸ் வாங்கி ஓட்டி மக்களுக்கு சேவை செய்யணும். அப்படி நீ செய்யலைன்னா, "your concerns are just fake" ன்னு சொல்லி பஸ் ஸ்டாப்ல நிக்கறவங்களை எல்லாம் தலை தெறிக்க ஓட வெச்சிருவீங்க போல இருக்கே சார்.
பதவியில இருக்கறவங்க தப்பு பண்ணும்போது அதை எதிர்த்து குரல் குடுக்கறது தானே மீடியாவோட வேலை? அது கூடாதுன்னா, பின்ன ஜனநாயகத்துல 'fourth estate' உடைய வேலை என்ன சார்? 'சுறா, சிங்கம், கொசு'ன்னு எதையாவது எழுதி பக்கத்தை நிரப்பி மக்களோட மூளைகளை மழுங்கடிக்கறது மட்டும்தானா? இந்த மாதிரி கட்டுரைகளை படிக்கற நூறு பேர்ல ஒரு பத்து பேராவது இதை யோசிச்சுப் பாத்து அடுத்த எலெக்ஷன்ல ஒட்டு போட்டா அதுவே இந்த மாதிரிக் கட்டுரைகளுக்கு ஒரு வெற்றிதானே! நாட்டுல நடக்கற கொடுமைகளைப் பத்தி பேசற எல்லாருமே கட்சி ஆரம்பிச்சுதான் நல்லது செய்யனுமா? இப்படி நாலு பேரை சிந்திக்க வெச்சு ஒரு 'catalyst' ஆ செயல்படக் கூடாதா? என்னமோ போங்க சார்.
அது சரி, அனானி சார், மத்தவங்களை "பொம்பளை மாதிரி அழுவாத. வாய்ப் பேச்சை விட்டுட்டு கட்சி ஆரம்பி"ன்னு வீராவேசமா நீங்க சொல்றதப் பாத்தா மத்தவங்களுக்கு உபதேசம் செய்யற அளவுக்கு உங்களுக்கு அந்த தகுதி இருக்கு போல தெரியுது. அப்படீன்னா நீங்க ஏதாவது கட்சி நடத்தறீங்களா? உங்க கட்சியோட பேரைச் சொன்னா இட்லிவடை வாசகர்கள் உங்க கட்சியப் பத்தி தெரிஞ்சிக்கவும் அடுத்த எலெக்ஷன்ல உங்க கட்சிக்கு வோட்டு போடவும் உதவியா இருக்குமே!

Anonymous said...

//பால நாயகம், பகு நாயகம், ஸ்த்ரீ நாயகம், அ நாயகம் என்கிறது ஒரு ஸம்ஸ்க்ருத பழமொழி. அதாவது சிறுவனால் வழிநடத்தப்படும் அரசும், கூட்டணி அரசும், ஒரு பெண்ணின் வழிகாட்டுதலில் நடக்கும் அரசும் உருப்பட்டதாக சரித்திரமில்லை என்பது அதன் பொருள். இப்போது விளங்கும் இவருடைய கடமை ஏன் இன்னும் முடியவில்லை என்பது.
// .....do you still think woman cant lead the nation ???

Anonymous said...

super kazattal :)

Ki A A

Anonymous said...

super kazattal :)

Ki A A

Anonymous said...

To R.Gopinath,
I'm not against being a media. But my concern is that there are too many medias/critics out there. The critics outnumber the "doers". A true critic is one who plunges into action when there is an absence of leaders, meeting his expectations. It's the most easiest thing in the world to whine. But imagine if everyone in the name of media starts whining.
After all even a short stint as a leader will only make you a better critic.
The pallavan example you cite is twisted to support your argument, I'm sure you should be aware of the procedure to deal with it without resorting to running your own bus. And asking if I run a party is typical of the Tamil cynicism promoted by the dravidian parties.
Even you have cited in your pallavan example that "is there anyone to question them?". Even the blogpost is about MMS's failure as a leader. And you are saying why we should run a party to serve people. Because it's the question of leadership. The absence of leadership cannot be filled by media/critics but only by a leader.

Anonymous said...

indira gandhi has ruled successfully. Mughal emperor Akbar took the throne at the age of 13. UPA's 2004-09 coalition tenure was also reasonably successful.

and you are still quoting something from the dead sanskrit? come out of ur shell

Calgarysiva said...

ஐயா எனக்கு ஒரு உம்மே தெரிஞ்சாகனும் ஐயா கி அ அ அனானியில் இந்த கி அ அ க்கு அர்த்தம் என்ன?

Anonymous said...

ஆம் ஆத்மி என்ரால் மாங்கா மடையர்கள்தானே?

Anonymous said...

The fourth estate..media isnt strong in our country.particularly in Tamil Nadu, where SUN TV rules. In karnataka and Andhra, there are almost 5 - 8 pvt tv news channels..which tugs amongst themselves reveling truth to the public.. whereas in TN it sucks.. DMK rules in every media say dinakaran(Useless paper)Red fm, Sun networand other family members owned Channels..Its high time tat any other north channelslike NDTv, CNN, TV9 shud focus on Tamil nadu..Coz how many ppl in TN really know abt the spectrum scam and audio files released. All the media licks the KK foot. This shd be changed..

** Desperado**