பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 06, 2010

முக்கோணக் கதை

தலைப்பைப் பார்த்து விட்டு, இட்லிவடையில் ஏதோ மெகா தொடர் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று எண்ண வேண்டாம். இது மெகா தொடர் அல்ல, ஆனால் ஒரு மெகா தொடர் பற்றியது.




காங்கிரஸும், சிபிஐயும் தங்களுக்குப் பொழுது போகாத சமயம் மட்டும் பேசி வந்த ஸ்பெக்ட்ரம் முறைகேடு இப்போது நிஜமாகவே சீரியஸான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளிகளால் பாராளுமன்றமே கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பித்து வருகிறது. இந்நிலையில் புதிய அத்யாயமாக அமைச்சர் ராஜா மற்றும் நிரா நாடியா என்ற கார்பொரேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் கனிமொழி ஆகியோரிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை நேற்றைய தினம் ஹெட்லைன்ஸ் டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டு திமுக மற்றும் ராஜாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளது. மற்ற செய்தி சேனல்கள் இதை கண்டுக்கொள்ளவே இல்லை என்பது வேறு விஷயம்.

இந்தியாவிலுள்ள சில கார்பொரேட் நிறுவனங்களுக்கு செய்தித் தொடர்பாளராகச் செயல்படுபவர் நிரா ராடியா. இவர் மத்திய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு மிகவும் வேண்டியவர் என கூறப்படுகிறது. தவிர இவர் மத்திய அரசிலும் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்பவர் என்பது கூடுதல் செய்தி. செல்வாக்கு என்றால், மத்திய அமைச்சர் பதவியையே பெற்றுத் தருமளவிற்க்கு செல்வாக்கு படைத்தவர். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இவர் பெயரும் அடிபட்டு, இப்பொழுது இவர் சிபிஐ விசாரணையின் கீழ் இருப்பவர் (என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியும் ) இவரிடம் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் தொலைபேசியில் பேசியது ஹெட்லைன்ஸ் டுடே சானலில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த உரையாடலில், தனக்குக் கிடைக்கப் போகும் அமைச்சரவை மற்றும் அதற்கு போட்டியாக இருப்பவர்கள் என உரையாடல் நீள்கிறது. மொத்தம் 50 மணி நேரம் இந்த உரையாடல்கள் என்று சொல்லுகிறது செய்தி சேனல். இந்த உரையாடல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக பதவியேற்ற சில நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வருமானவரித் துறை ஆணையம் இதனைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது ஹெட்லைன்ஸ் டுடே சானல் வசம் கிடைத்தது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை. காங்கிரஸே இதை லீக் செய்திருக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.


Here are excerpts from a conversation recorded on May 24, 2009 at 11.05 am.

Raja: My name is cleared?
Radia: Yeah, your case was cleared last night itself. No, what is happening with Daya?
Raja: Textiles or fertilisers?
Radia: Not for Daya though, Azhagiri or Daya only one can come in?
Raja: No, two can come...
Radia: Both?
Radia: Baalu, will be the problem, I hope.
Radia: It will be difficult for the leader to justify three family members.
Raja: (laughs) Yeah, but everybody knows...
Radia: No she said that, Kani told me last night, that is what her father told her yesterday, that for him to justify three family members would be very difficult; he recognises that problem...
Raja: Let us see what we can do...let us fight.

In these conversations, Kanimozhi - referred to as Kani - is heard telling Radia that the DMK must get the telecom portfolio. Here are excerpts from the conversation recorded on May 21, 2009 at 8:41 pm.

Kani: Hello
Radia: PM has already clarified that the deal has not been done. They are still in the middle of discussing it.
Kani: They've already promised to give us telecom...but it cannot become that they shift...
Radia: What?
Kani: They have already told us that they will give us telecom. Now it shouldn't be given to him because he's going around planting stories.
Radia: He's planting it on all the channels while you were on the plane.
Kani: Ya I know that.
Radia: But Kanni, the PM has just made a statement that I have no problems with Raja and Baalu and they are my esteemed colleagues.
Kani: He can make a statement. But whoever's going to come and talk to dad shouldn't talk otherwise.. See what people say outside and what actually they mean is different... And all of us know that in politics.

Here are more excerpts from the conversations:

Radia: Kani there's feedback from the Congress. They say we recognise that the problem with the DMK is an internal problem. It's a problem between the family. It's a problem between their own people. They have given us a list of five people. This is not acceptable to us.
Kani: Ya
Radia: It is for them to resolve. We have told them what is the best that we can do.
Kani: Three and four...
Radia: We appreciate that the dialogue has broken down but it is not for us to get back to them. As far as we are concerned, Maran has been calling Ghulam Nabi Azad on the half hour demanding all sorts of things and they have told him that there is no point in you calling us.
Kani: But what is the demand he's got.
Radia: He has been making the same demands that you give us five portfolios or we will not join or give us railways, otherwise he has also demanded coal and mines. So they are saying as far as we are concerned this is an internal DMK problem. It has nothing to do with the Congress at all. They have taken a decision that it is for Karuna to decide who he wants and who he doesn't want in the formula. That has been provided to him. It's up to Karuna to decide but they feel that there are far too many people calling him including Maran.


முழு விவரம் இங்கே

சிபிஐ ரிப்போர்ட்

இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்கவி என்ன இவ்வாறு சொல்லுகிறார் "acting against Raja would not be as easy as in the case of Shashi Tharoor, Singhvi pointed out that the telecom minister did not belong to Congress."

கலைஞர் பேட்டி:

கேள்வி:- சில பத்திரிகைகளும், மாற்று கட்சியினர் சிலரும் மத்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசி, அவர் பதவி விலக வேண்டுமென்று சொல்லி வருகிறார்களே?

பதில்:- மத்திய மந்திரி ஆ.ராசா ஒரு "தலித்'' ஆக இருக்கின்ற காரணத்தால் ஆதிக்க சக்திகள் சில இந்த அவதூறை பரப்பிக்கொண்டிருக்கின்றன.


எது எப்படியோ கலைஞர் டெல்லியில் நான் உங்களுக்கு சந்தோஷமான செய்தி எதுவும் கொண்டு வரவில்லை என்றார். நமக்கு இதைவிட வேற என்ன சந்தோஷம் வேண்டும் ?


19 Comments:

kggouthaman said...

உரையாடல்களை தமிழில் மொழி பெயர்த்தால், தமிழ்ப் பதிவுகள் (மட்டுமே) படிப்போருக்கும், ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அதில் படிக்க சோம்பேறித்தனம் உடையவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

Shankari said...

சில சந்தேகங்கள்:
1.ஹெட் லைன்'s டுடே ஏன் இப்போது இந்த நியூஸ் வெளியிட வேண்டும்?
2.சில தினங்கள் முன் இதே சேனல கருணாநிதி தொகுதியில் 'ஸ்டிங் ஆபரேஷன்' - கல்சுரல் லைசென்ஸ் வாங்கி ஆபாச டான்ஸ் நைட்ல நடக்றத commissioner கிட்ட வீடியோ காட்டினாங்க. ஏன் இப்படி DMK தாக்குதல்? மற்ற சேனல் இத கண்டுக்கவ இல்ல?
3.அந்த சமயம் கனிமொழி தான் எல்லா சகோதரன் கிட்ட தூது பிரச்னை சரி செய்தது என்றெல்லாம் பேய்ச்சு வந்ததே..
4.ராஜா - கன்மொழி என்ன லிங்க்?
5.ராஜா பதவி நிலைக்குமா?

Gaana Kabali said...

"கருணாநிதி: மத்திய மந்திரி ஆ.ராசா ஒரு "தலித்'' ஆக இருக்கின்ற காரணத்தால் ஆதிக்க சக்திகள் சில இந்த அவதூறை பரப்பிக்கொண்டிருக்கின்றன."

தப்பு பண்ணும் போது அவர் 'தலித்' இல்லையா? தண்டனை என்றால் மட்டும் 'தலித் ' ஆகி விடுவாரா?

சீனு said...

அப்ப 60000 கோடிய (எத்தனை சைபர்) திரும்ப வசூல் பன்னிடலாம்னு சொல்லுங்க...

Anonymous said...

எனக்கென்னமோ கானாவும் இட்லிவடையும், ஒன்றுதான் என்பது போல் தெரிகிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
M Arunachalam said...

//1.ஹெட் லைன்'s டுடே ஏன் இப்போது இந்த நியூஸ் வெளியிட வேண்டும்?//
எப்போது வெளியிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

//2.சில தினங்கள் முன் இதே சேனல கருணாநிதி தொகுதியில் 'ஸ்டிங் ஆபரேஷன்' - கல்சுரல் லைசென்ஸ் வாங்கி ஆபாச டான்ஸ் நைட்ல நடக்றத commissioner கிட்ட வீடியோ காட்டினாங்க. ஏன் இப்படி DMK தாக்குதல்? மற்ற சேனல் இத கண்டுக்கவ இல்ல?//
திருடுபவனை பார்த்துதானே "திருடன்" என்று கத்த முடியும்? சன் டிவியோ அல்லது கலைஞர் டிவியோ வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களோ?

//3.அந்த சமயம் கனிமொழி தான் எல்லா சகோதரன் கிட்ட தூது பிரச்னை சரி செய்தது என்றெல்லாம் பேய்ச்சு வந்ததே..//
அந்த பேச்சு வந்த இடத்துலேயே இந்த செய்தி பற்றியும் கேட்டுக்குங்களேன். உங்க மனசுக்கு இதமாக செய்தி கூறுவார்கள்.

//4.ராஜா - கன்மொழி என்ன லிங்க்?//
இதுக்கு சன் டிவி கிட்ட கேட்டாதான் சரியான பதில் கிடைக்கும்.

//5.ராஜா பதவி நிலைக்குமா?//
ராஜாவுக்கு பதவி நிலைக்குதோ இல்லையோ, தி.மு.க.வை விட்டு தொலைதொடர்பு துறை போகாது என்பது மட்டும் நிச்சயம். ருசி கண்ட பூனை அவ்வளவு லேசில் விட்டுவிடாது.

எதுக்கும், சென்ற வருடம் நான் எழுதிய "அம்புலிமாமா" கதையை படித்து கொஞ்சம் தெளிவு பெற முயற்சிக்கவும். அதன் லிங்க் இதோ:
http://hereisarun.blogspot.com/2009/07/blog-post.html

M Arunachalam said...

ஸ்பெக்ட்ரம் ஊழல் முதல்முறை அடிபட்டபோது, அது ஒரு ஊழலே இல்லை என்று ஒரு தமிழ் பதிவர் (பத்ரியோ (அ) வேறு யாரோ) இட்லிவடை வலைதளத்தில் வக்காலத்து வாங்கினார். இப்ப அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை.

2G அலைவரிசையை அகில இந்தியா முழுமைக்கும் ஒரு கம்பனிக்கு ரூ. 1,650 கோடி வீதம் பல முன், பின் தெரியாத குழுமங்களுக்கு மந்திரி ராஜா விற்று விட்டார், 2007 ம் ஆண்டு. இப்போது, 2010 ம் ஆண்டில், 3G அலைவரிசைக்கு ஏலம் நடந்துகொண்டு இருக்கிறது, மிகவும் வெளிப்படையான முறையில். இப்போதும், ராஜா தன் கைவரிசையை காட்ட முயுற்சித்து, ஏல அடிப்படை தொகையை அதே ரூ. 1,650 கோடிக்கு வைக்க பரிந்துரைத்தார். ஆனால், சோனியா காங்கிரஸ் அமைச்சரான, பிரணாப் முகர்ஜி அதனை நிராகரித்து, ஏல குறைந்தபட்ச தொகையை ரூ. 3,500 கோடிக்கு ஏற்றிவிட்டார்.

அப்படி விலை எற்றப்பட்டபிரகும்கூட, நேற்றைய நிலவரப்படி, ரூ. 11,044 கோடிக்கு அகில இந்திய அலைவரிசை விலை போய்க்கொண்டு இருக்கின்றது. இது, ஒரு கம்பனிக்கான தொகை. மொத்தம் நான்கு கம்பனிகளுக்கு, சுமார் ரூ. 44,000 கோடி இந்திய அரசாங்கம் அள்ள போகிறது.

இரண்டு ஏல தொகையையும் கணக்கிட்டால், ராஜாவினால், இந்திய அரசாங்கத்துக்கு, ஒரு கம்பனியின் மூலமே, சுமார் ரூ. 9,400 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2G அலைவரிசை கொடுத்ததோ 10, 15 கம்பனிகளுக்கு. இதிலிருந்தே தெரிகிறதே, ராஜாவினால், இந்தியாவுக்கு எவ்வளவு நஷ்டம் (தி.மு.க.வுக்கு எவ்வளவு லாபம்) என்று. இப்படிப்பட்ட வருமானம் வரும் துறையை தி.மு.க. விட்டுக்கொடுக்க, இது என்ன சாதாரண இலங்கை தமிழரின் உயிர் பிரச்னையா?

M Arunachalam said...

The 2G spectrum scam has now gained prominence because on 26th April, 2010, The Daily Pioneer newspaper, came out with an article titled "2G SPECTRUM SCANDAL: To save Cong-DMK ties, officer probing Raja scam transferred". In that article the paper has detailed how Vineet Agarwal, the DIG of CBI, who was investigating the 2G spectrum allotment scam and stumbled upon evidence proving the involvement of Raja, has been packed off to his parent cadre from CBI. Subsequently, Daily Pioneer continued to publish various details and evidences and correspondences between different Govt. sources to prove how there were evidences of corruption and how the probe is being scuttled now to save Cong-DMK ties. It also came out with how the Govt. has authorised telephone tapping in the case and how a senior beurocrat who was caught red-handed while taking bribe spilled the beans with Swiss Bank accounts etc. The 2G scam is getting murkier by the day.

Gaana Kabali said...

"எனக்கென்னமோ கானாவும் இட்லிவடையும், ஒன்றுதான் என்பது போல் தெரிகிறது.-பெயரிலி (Anony)

நல்ல நகைச்சுவை !
சிரிப்புத்தான் வருகுதையா !

ந.லோகநாதன் said...

Good, தப்பு பண்ணும் போது அவர் 'தலித்' இல்லையா? தண்டனை என்றால் மட்டும் 'தலித் ' ஆகி விடுவாரா?

Nilofer Anbarasu said...

// இவர் மத்திய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு மிகவும் வேண்டியவர்//

ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு!
நல்ல அடைமொழி, மாலை மலர் படிச்ச மாதிருயே இருக்கு. அவர்கள் தான் இது போல் அடைமொழி எல்லாம் கொடுப்பார்கள்.

Anonymous said...

http://4.bp.blogspot.com/_fDJKgMmt09Q/S-FCMT2jEqI/AAAAAAAAAUA/k5vOACxOHIk/s1600/tiruppur1.jpg

Anonymous said...

ஆதிக்க சக்திகள் கக்கன் ஒ பி ராமன் கே ஜி பாலக்ருஷ்ணன் மீராகுமாரி இன்னும் எத்தனையோ தலித்து களையெல்லாம் விட்டுவிட்டார்கள் . பாவம் சில ஆயிரம் கோடி சம்பாதித்தவரை குற்றம் சாட்டுகிறார்கள்

நம்பர் ஒன said...

மாண்புமிகு முதலமைச்சர், இப்பொழுது ஜூன் பதினொன்றில் வரப் போகின்ற ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் தலித் பிரிவைச் சேர்ந்த கை சுத்தமான ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரை ராஜ்யசபை உறுப்பினர் ஆக்கி, அவருக்கு தொலைத் தொடர்பு இலாக்காவை வாங்கிக் கொடுக்கவேண்டும். அப்போ தலித் மக்களின் உண்மையான ஆதரவாளர் முதல்வர் என்பது நாடு அறிந்துகொள்ளும். இப்பொழுது எதிர்த்துப் பேசுகின்ற ஆதிக்க சக்திகள் அப்பொழுது வாயடைத்துப் போவார்கள். செய்வாரா மா மு?

அமுதப்ரியன் said...

/* செய்வாரா மா மு? */

அனானி தாங்கள் மேற்சொன்னதை பேசாமல் இப்படி எழுதுங்கள்.
செய்வாரா மாமு?

Rasu said...

535 பேர்ல இவன் ஒருத்தந்தான் தலித்தா, இந்த மஞ்சள்துண்டு இப்படி விஷவார்த்தைகளை கொட்டுகிறார்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள் அது இதுதான் போலிருக்கிறது.

Anonymous said...

This is for (foolish)voters to decide. Karuna recently made a trip to Delhi and said it is to urge centre to implement woman's bill. This old man, even in his last phase has confidence that he can fool people with such a lie. The whole India knows Raja has usurped a huge money in this scam. Even people within congress tweet about a man of stature like Manmohan trying to protect a crook like Raja. It's for you, Tamil people to decide and wake up. But you're a corrupt,wicked yourselves and instruct your kids to go abroad and earn in dollars without even the slightest concern for the Nation. Who will lead you, if yourself are a corrupt, betrayers of the Nation?
Your fate is sealed. M.K will rule you even as a ghost and he'll bring a legislation that ghosts are allowed to rule such fools!.

ரஜினிதாசன் said...

இது கிளைமாக்ஸ். திமுக அழிவின் ஆரம்பம்.

அதிமுக கொடநாட்டில் முடங்கி கிடக்கிறது

தமிழினத் தலைவர் ரஜினிகாந்த் எண்ட்ரி கொடுக்க இது சரியான தருணம்

தமிழகத்தை உய்விக்க வா தலைவா