பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 15, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-5-2010

ரொம்ப நாள் கழித்து முனி கடிதம்...

டியர் முனி,

என்ன? சத்தத்தையே காணும்? ரெண்டு வாரம் முன்னாடி போட்ட லெட்டருக்கு பதில் கூடப் போடலை? அடிக்கற வெய்யில்ல சரக்கடிச்சுட்டு சுருண்டு படுததுட்டயா? சரி, பரவாயில்லை. இதப் படிச்சுட்டானும் பதில் போடு. நியூஸ் எல்லாம் கொஞ்சம் பழசா இருக்கும் கண்டுக்காதே. வலைப்பதிவுல தான் அரைச்ச மாவையே அரைப்பது ஃபேஷனாச்சே !

முதலில் இதை படிக்கும் அன்னையர்களுக்கு பிலேட்டட் “அன்னையர் தின வாழ்த்துகள்” சொல்லிவிடு. இந்த அன்னையர் தினம் எல்லாம் முன்பு கிடையாது. நம்ம பசங்க அமெரிக்கா சென்ற பிறகு அப்பா தினம், அன்னையர் தினம் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். நமக்கு தெரிந்த்து எல்லாம் அண்ணன்/தம்பி அக்கா/தங்கைக்கு பச்சைப் புடவை வாங்கி தந்தார்கள் அவ்வளவு தான். அக்கா,தங்கை இல்லாதவர்கள் டாவடிக்காத ஃபிகர்களுக்கு வாங்கி தந்தார்கள். எனக்கு ஒரு சந்தேகம். ஏன் மாமியார் தினம் என்று ஒரு நாளை நாம் கொண்டாடுவதில்லை? யாராவது நல்லாப் படிச்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.

படிப்பு என்றதும் நம்ம மாணவர்களுக்கு உடனே ஞாபகம் வருவது சினிமா தியேட்டர் தான். தமிழ்நாட்டில் பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்கள் ஆகிவிட்டது பலருக்கு தெரியும். ஏன் அப்படி ஆச்சு? நல்ல தரமான படங்கள் வரவில்லை, அதனால் வசூல் இல்லை. இப்ப பள்ளிக்கூடங்கள் கூட கல்யாண மண்டபங்கள் ஆகிவிடும் போல இருக்கு. போன வாரம் தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் குறித்து தமிழக அரசில் அறிவிப்பு ஒன்று வெளியானது. நியாயமாக இருப்பதாக தெரிகிறது. உடனே தனியார் பள்ளிகள் இந்த அரசணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார்கள். நல்ல வேளை பள்ளிக்களுக்கு எல்லாம் இப்போது விடுமுறை. இல்லையென்றால் போராட்டம் அது இது என்று ஆரம்பித்திருப்பார்கள். இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த கட்டணம் இவர்கள் கொடுத்த வரவு செலவு கணக்குகளின் அடிப்படையில் அமைத்தது. இவர்கள் இப்ப கோர்ட் படியேறுவதை பார்த்தால் இவர்கள் கொடுத்த கணக்குகள் தவறானவை என்று தெரிகிறது. பள்ளிகள் வருஷா வருஷம் பில்டிங் டொனேஷன் என்று வாங்குதற்கு பில்டிங் கட்டியிருந்தால் தமிழ் நாடு முழுக்க பில்டிங்காக இருந்திருக்கும். இந்த பிஸினஸ் புள்ளிகள் அரசு இந்த முடிவை மறு பரிசீலினை செய்யா விட்டால் பள்ளிகளை எல்லாம் கல்யாண மண்டபங்கள் ஆக்கிவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். எப்படியாவது இவர்களுக்கு வசூல் நடக்கணும். இந்த பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்/என்ன செய்வார்கள் என்ற பயம் வருவது நியாயம்தானே?

எந்தப் பள்ளியில் படிச்சாலும், பிறகு ஏதோ ஒரு டிகிரி படிச்சு மேல படிக்க வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த உடனே பின் நம் மக்கள் அங்கே குப்பையே இல்லை, கோக், பெப்ஸி எல்லாம் ரொம்ப பெரிசாக இருக்கிறது என்று ஒரு வாரத்துக்குப் பேசுவார்கள். அது போல ஐ.ஐ.டி. மற்றும் அமெரிக்காவில் படிச்சு பின்னர் அமைச்சர் ஆகி, இப்போ சீனா சுற்றிப் பார்க்கப்போன ஜெயராம் ரமேஷ் (இவர் யார் என்று கேட்பவர்களுக்கு: கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பட்டமளிப்பு விழாவில் வெள்ளைக்கார சம்ப்ரதாயம் தேவை இல்லை என்று கோட்டைக் கழட்டி வீசிய மத்திய அமைச்சர்), சீனாவுடனான வர்த்தக விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கை காட்டுகிறது. இது தேவை இல்லை என்று கமெண்ட் அடிக்க உடனே மன்மோகன் சிங் மற்ற இலாகா பற்றி கமெண்ட் அடிக்க கூடாது என்று அறிவுரை. 'கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்று சொல்லுவார்கள். அது போல ஸ்பெக்டரம் ராசா விஷயத்தில் இனி யாரும் வாய் திறக்க மாட்டார்கள், மன்மோகன் சிங் உட்பட. அவரே சொல்லிவிட்டாரே மற்ற அமைச்சர்களைப்பற்றிக் கமெண்ட் அடிக்க கூடாது என்று. இதுக்கு வேற ஒரு நல்ல வழியும் இருக்கு. யாருக்கும் தெரியாம வெளியூருக்குப் போனோமா வந்தோமா என்று இருக்க "நம்ம ஊரு" அமைச்சரிடம் எல்லா அமைச்சர்களும் ட்ரைனிங் எடுத்துண்டா அவங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே நல்லது.

அமைச்சர்கள் என்றாலே காசு வாங்கினார்கள், சொத்து சேர்க்கிறார்கள் என்று கொஞ்ச நாளா சத்தம் ஜாஸ்தியாக் கேக்குது. இதே மாதிரி உங்களுக்கும் நெறைய சேரணும்னா அக்ஷய திரிதியை அன்னிக்கு வாங்குங்க என்று சில வருஷங்களாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வாரம் தி.நகரில் தங்கம் வாங்கும் பைத்தியங்களைப் பார்க்கலாம். காழியூர் நாராயணன் வேற டிவியில் வந்து வெள்ளை வஸ்து வாங்கினால் நல்லது என்று ப்ளாட்டினத்துக்கு விளம்பரம் செய்கிறார். தங்கம் போய் இப்ப பிளாட்டினம். ப்ளாட்டினம் வியாபாரம் ஆக வேண்டாமா? எனக்கு ஒரு சந்தேகம் ஏஞ்சலினா ஜூலி போன்றவர்களும் கேதரின் ஜீடா ஜோன்ஸ் போன்றவர்களும் ப்ளாடினம் போட்டுக்கொண்டால் பரவாயில்லை. நம்ம ஊர்ப் பெண்களுக்கு இது எல்லாம் நல்லா இருக்குமா? நினைக்கவே ... எதுக்கு வீண் வன்பு. எனக்கு இன்னொரு சந்தேகம் அக்ஷய திரிதியைக்கு வெள்ளை நல்லது என்று சொல்லும் காழியூர் நாராயணன் டிவியில் தோன்றும் விளம்பரத்தில் ஏன் டை அடித்துக்கொண்டுள்ளார் ? அந்த பகவானுக்கே வெளிச்சம்.

கல்கி பகவான் எனும் விஜயக்குமாரைப் பற்றி சன் டிவி கொஞ்ச நாள் முன்னாடி சில வீடியோ காட்சிகளை போட்டு காட்டியது. ஆனால் ஃப்.எம் சேனலில் அம்மா சென்னை வருகைக்கு விளம்பரம் தூள் கிளப்புகிறது. எதை நம்புவது? சன் டிவியையா? அல்லது ரேடியோவையா அல்லது கல்கி பற்றி குங்குமத்தில் வரும் விளம்பரத்தையா ?

உலக செஸ் போட்டியில் ஆனந்த் மீண்டும் பட்டம் பெறுவாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. லலிதா ராம் உங்களுக்கு தான் ஜோசியரை எல்லாம் நல்லா தெரியுமே! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெரும் என்று சரியாக சொன்னீர்களே! அது போல உங்க ஆஸ்தான ஜோசியரை கேட்டு சொல்லுங்க என்கிறார். ஆனந்த வெற்றி பெருவாரா என்று எனக்கு முன் கூட்டியே தெரியாது. ஆனால் இட்லிவடை படிப்பவர்கள் செஸ் பதிவுக்குத் தந்த ஆதரவினால் லலிதா ராம் வெற்றி பெற்றுவிட்டார். அவர் எழுதின விமர்சனத்திகாகவே ஆனந்த் கடைசி ஆட்டத்தில் ஜெயிச்சு சாம்பியன் ஆயிட்டார் என்பது ரொம்ப நல்ல செய்தி.

செஸ் வெற்றி ரொம்ப சந்தோஷம் என்றாலும் சுறா வெற்றி பெற முடியவில்லை. படத்தில் "இந்த அண்ணா" என்று வசனம் பேசியவர் வருத்தத்தில் இருப்பதாகச் செய்தி. இருந்தாலும், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் போல சன் பிக்சர்சின் சுறா பட டிக்கெட் 1 ரூபாய்க்கு விற்பனை என்ற செய்தியும் மக்கள் மத்தியில் வலம் வருது. ஆனால், பாதி படத்தில் வெளியே செல்ல வேண்டும் என்றால் 200 ரூபாயாம். இதனால் நல்ல வசூல் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். விஜய்க்கு எப்படியோ, சன் பிச்சர்ஸ் போட்ட காசை எடுத்துவிடுவார்கள்.அஜித்துக்கு பெண் ரசிகைகள் ஜாஸ்தியா அல்லது விஜய்க்கு ஜாஸ்தியா என்று பார்த்தால் விஜய் என்று தான் சொல்ல வேண்டும். பெண்கள் இப்பல்லாம் சைடு பாரில் விஜய் பட வசனத்தை விளம்பரம் செய்கிறார்கள். எப்படியோ சன் பிக்சர்ஸ் சிங்கம் படத்தை தியேட்டர்களுக்கு கொடுத்து நஷ்டத்தை சரி செய்ய போகிறார்களாம். சிங்கம் சிங்கிளா வருமா? இன்னொரு சூப்பர் ஸ்டார் சிங்கம் ஒன்று டபுளா வர வேண்டும். அது எப்போ வரும் என்று யாருக்கும் தெரியாது ? ஆனா வரும். அது வரும் போது நாம் தான் மேக்கப் போட்டு தியேட்டருக்கு போகணும். நமக்கும் வயசாகிறது இல்லையா ? எதுக்கு இவரை பற்றி சொல்லி வீண் சர்ச்சை

சர்ச்சைப் புகழ் ராம் சேனா ப்ரமோத் முத்தலிக் இம்முறை தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே விரித்த வலையில் படு வசமாகச் சிக்கியுள்ளார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக ஒரு மாநாடு நடத்தப் போவதாகவும், அதில் கலவரத்தை நிகழ்த்த ஆட்களைத் திரட்டி வருவதாகவும், அதற்கு 60 லட்சம் வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போல் நடித்த ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் தெஹல்கா நிருபர்களிடம் கூறியுள்ளர். இவையனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, நேற்று ஹெட்லைன்ஸ் டுடே முதலான வட இந்திய மீடியாக்களில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீராம் சேனாவிற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிக்ஷத் என்ற இரு அமைப்புகளுமே அறிக்கை வெளியிட்டுள்ளன.

முன்பே இவர்கள் கலாட்டா செய்த போது ஏன் இந்த அறிக்கை விடவில்லை? காவி கண்ணை மறைத்துவிட்டதா? நல்ல வேளை இவர் தமிழ் ஹிந்துவாக இல்லாமல் கன்னட ஹிந்துவாக இருக்கிறார். அதனால் தமிழ் ஹிந்துக்களுக்கு இது கண்ணில் படவில்லை. பி.ஜே.பிக்கு இது எல்லாம் தெரியாமலா இருக்கும் ? இந்த விவகாரத்தில் கர்நாடக பாஜக அரசு அசிரத்தை காட்டாமல், முத்தலிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அவர்கள் செய்வார்களா என்பது சந்தேகம் தான். அவர்கள் பாடே நாய்பட்ட பாடாக இருக்கிறது.

இதுநாள் வரை யார் இவர் என்று தெரியாமல் இந்த பாஜக தலைவர் நிதின் கட்கரி வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு கொஞ்சம் அவல் கொடுத்துள்ளார். வெட்டுத் தீர்மானத்தில் அரசிற்கு ஆதரவாக வாக்களித்த லாலு மற்றும் முலாயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் விமர்சித்த கட்கரி, “லாலுவும், முலாயமும் முன்னர் சிங்கம் போல பாய்ந்ததாகவும், சிபிஐயின் நடவடிக்கைக்குப் பிறகு, காங்கிரஸிற்கு நாயைப் போல நன்றியுடையவர்களாக இருப்பதாகவும்” ( காங்கிரஸ் காலை நக்கினார்கள் என்று நாய்க்கு கூட கோபம் வரும் வார்த்தையை ) தெரிவித்தார். ( படம் தற்செயலாக அமைந்தது )

சச்சின் செய்த சாதனைக்கு அவருக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே போல நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்று, 2007 முதல் இன்று வரை undisputed சாம்பியன் ஆக விளங்கும் ஆனந்த் செய்த சாதனைக்கு அவருக்கும் கொடுக்கலாம் என்று இன்றுவரை யாருமே சொல்லாதது ஏனோ? இத்தனைக்கும் ஆனந்த் அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளை சச்சினுக்கு முன்பே பெற்றார் என்பதை சொல்லியே ஆகணும். மூளையை கசக்கி அறிவைக் கொண்டு விளையாடினால் கோரிக்கை வைக்க மாட்டார்களோ என்னவோ! யார் கண்டது. ரொம்ப வருஷம் கழித்து கொடுத்தால் Once a pawn a time என்று நாம் சொல்ல வேண்டியிருக்கும்.

கொஞ்சம் கொசுறுச் செய்திகள், உனக்காக ஸ்பெஷலா!


"அணு அணுவாய்ச் சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் சரியான வழிதான்...' என்ற அறிவுமதியின் கவிதை வரிகள். 2007 முதல், காதல் விவகாரத்தால் நடைபெறும் கொலைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்கிறது செய்தி. டிவியில் “ஐ லவ் யூ ...” என்று கீழே எஸ்.எம்.எஸ் போடும் டிவியில் தான் இந்த நியூஸும் படிக்கிறார்கள்.

ஹிருத்திக்ரோஷன் நடித்துள்ள கைட் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ். இந்த படத்தில் முகம் காட்டாமல் இருப்பவர் பார்பரா மேரி. பார்பரா மேல் ஆடை இல்லாமல், ஹிருத்திக் ரோஷனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. உடனே அலைந்துக்கொண்டு போகாதே அந்த காட்ச் இ இந்தி மொழியில் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் இருக்கிறதாம். உடனே நம்ம மக்கள் டவுலேட் செய்து பார்த்துவிடுவார்கல். இந்த படம் நல்லா வசூல் ஆக வேண்டும் என்று ஹிருத்திக் சாய்பாபாவை கும்பிட்டார் என்பது டெய்ல் பீஸ். ( தயவு செய்து இளகிய மனம் கொண்டவர்கள் , ஆண்கள், குழந்தைகள் இந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள் )

இப்படிக்கு,
இட்லிவடை


சமையல் குறிப்பு எழுதுவது கஷ்டம் என்று தற்போது கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இது இரண்டுமே கஷ்டம் படிப்பதற்கு !


22 Comments:

Anonymous said...

ந.ப. ந.ப.

Guru said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் முனிக்கு ஒரு சூப்பர் கடுதாசி. !

சூர்யன் எப்.எம். இதே மாறி தான் நித்யாவுக்கும் விளம்பரம் பண்ணாங்கோ. ஊர் சுற்றலாம் வாங்க ஸ்பெஷல் நிகழ்ச்சில்ல்லாம் பான்னங்கோ நித்யாவுக்கு. காசே தான் கடவுளடா.

இது அமைச்சர்களெல்லாம் வாயால் கெடும் நேரம் போல இருக்கு.சசி தரூர்,இப்போ ஜெயராம். ஆனா, ஒருத்தர் போன்ல என்னனமோ பேசிருக்கார், அவர் இன்னும் அமைச்சராக இருக்கிறார் எல்லாம் அந்த சூரியனுக்கே வெளிச்சம். பேசினால் பிரச்சனை தான்னு தான் மதுரை சிங்கம் பார்லிமெண்டு போகாம ஊர் சுற்றுகிறதோ !!

முதாலிக் மேட்டர் இன்னும் கொஞ்ச நாளைக்கு பகுத்தறிவு,நாத்திகம்,பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களுக்கு கொண்டாட்டம். முதாலிக் ஸ்பெஷல் பதிவு போட்டு தமிழ்மணத்தை நிரப்பி விடுவார்கள்.

பா.ஜ.க. இப்பொழுது நாங்களும் எதிர் கட்சி தான் என்று காண்பிக்க அப்போ அப்போ நம்ம புரட்சி தலைவி மாதிரி ஆர்ர்பாட்டம்,அறிக்கை அவ்ளோ தான். செயல்ல ஒன்னும் காணோம்.

கைட்ஸ் (kites) நல்லா பறக்கட்டும்.

சிங்கம் வருதோ இல்லையோ சுறா இறா ஆயிடுச்சு.

Palay King said...

Good Letter

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அந்த செஸ் கார்ட்டூன் சூப்பர்! எங்கிருந்துதான் புடிக்கிறீங்களோ?

//இந்த வாரம் தி.நகரில் தங்கம் வாங்கும் பைத்தியங்களைப் பார்க்கலாம்//

அது என்ன தி.நகர்ல வாங்கறவங்க தான் பைத்தியங்களா? தன் உழைப்பை நம்பாம அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புற எவருமே பைத்தியம்தான்.

//சன் பிக்சர்சின் சுறா பட டிக்கெட் 1 ரூபாய்க்கு விற்பனை என்ற செய்தியும் மக்கள் மத்தியில் வலம் வருது. ஆனால், பாதி படத்தில் வெளியே செல்ல வேண்டும் என்றால் 200 ரூபாயாம்.//

ha.....ha.....ha.....ha.....ha...!


// எதை நம்புவது? சன் டிவியையா? அல்லது ரேடியோவையா அல்லது கல்கி பற்றி குங்குமத்தில் வரும் விளம்பரத்தையா ?//

வடிவேல் சொல்லும் ஒரு வசனம்தான் நினைவுக்கு வருகிறது (இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது....?)

//அவர் எழுதின விமர்சனத்திகாகவே ஆனந்த் கடைசி ஆட்டத்தில் ஜெயிச்சு சாம்பியன் ஆயிட்டார் என்பது ரொம்ப நல்ல செய்தி.//

ஏன், அதுவும் இட்லிவடையில் எழுதியதால்தான் இந்த வெற்றி என்று சொல்லவேண்டியது தானே?

சும்மாவா சொன்னாங்க......
"Success has many parents while failure is an orphan."

என்று!

//( தயவு செய்து இளகிய மனம் கொண்டவர்கள் , ஆண்கள், குழந்தைகள் இந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள் )//

நான் பாக்கலீங்கோ....நான் பாக்கலீங்கோ....(வடிவேல் வசனம் நினைவுக்கு வர வேண்டாம்)

//( காங்கிரஸ் காலை நக்கினார்கள் என்று நாய்க்கு கூட கோபம் வரும் வார்த்தையை ) தெரிவித்தார். ( படம் தற்செயலாக அமைந்தது )//

இந்த குசும்பு தான வேண்டாங்கறது?

//சமையல் குறிப்பு எழுதுவது கஷ்டம் என்று தற்போது கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இது இரண்டுமே கஷ்டம் படிப்பதற்கு !//

என்ன சொல்றீங்க, யாரைச் சொல்றீங்கன்னு புரியலை!

dondu(#11168674346665545885) said...

மேலாடையில்லாமல் ரித்திக் கூடத்தான் இருக்கிறார். அதுக்கு இது சரியாப்போச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மார்கண்டேயன் said...

// சமையல் குறிப்பு எழுதுவது கஷ்டம் என்று தற்போது கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இது இரண்டுமே கஷ்டம் படிப்பதற்கு ! //

நல்ல சிந்தனை ., இந்த வசைச்சொல் யாருக்கு . . . ?!!!

kggouthaman said...

இ வ - நல்ல கவர் அப்.
?? - நல்லா கவர் அப்.

ரிஷபன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுன்னு ஒரு கடுதாசி...

மதத்தை காப்பாத்துறேன்னு புறப்படறவங்க எல்லா மதத்திலும் போலி தான். காசு பாக்க ஒரு வழி!!

R.Subramanian@R.S.Mani said...

Gin is also white in colour; can anybody get clarifiaction from Kaliyurar, by buying Gin on Atchaya Thirithiai day, can I get enough quqntity of Gin through out my life period;( Not for a long period; Already I am in sixties)
Suppamani

KVK said...

கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,

"யார் அந்த குருவி விஜய்"

for more joke like this go to
http://e-fun.blogspot.com/2009/02/vijay-jokes-2.html

Gaana Kabali said...

//எனக்கு ஒரு சந்தேகம். ஏன் மாமியார் தினம் என்று ஒரு நாளை நாம் கொண்டாடுவதில்லை? யாராவது நல்லாப் படிச்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.//

மனைவியரின் அம்மாக்களுக்கு அன்னையர் தின பரிசு வாங்கித்தர கணவர்களின் பர்ஸ் தானே காலியாகிறது . ஆகவே அந்த கணவர்களுக்கு அன்று தான் மாமியார் தினம்.

//பள்ளிகள் வருஷா வருஷம் பில்டிங் டொனேஷன் என்று வாங்குதற்கு பில்டிங் கட்டியிருந்தால் தமிழ் நாடு முழுக்க பில்டிங்காக இருந்திருக்கும்.//

நல்லா சொன்னீங்க நீங்க !

//இன்னொரு சந்தேகம் அக்ஷய திரிதியைக்கு வெள்ளை நல்லது என்று சொல்லும் காழியூர் நாராயணன் டிவியில் தோன்றும் விளம்பரத்தில் ஏன் டை அடித்துக்கொண்டுள்ளார் ?//

அதானே ! அந்த விளம்பரம் வந்த போது நீங்கள் எழுதியிருப்பதை நினைத்து விழுந்து சிரித்தேன் . வீட்டில் உள்ளவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

//சர்ச்சைப் புகழ் ராம் சேனா ப்ரமோத் முத்தலிக் இம்முறை தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே விரித்த வலையில் படு வசமாகச் சிக்கியுள்ளார்.//

முத்தலிக், நித்யானந்தா,கல்கி போன்ற கயவர்களைத் தாண்டியும் இந்து மதம் வளர்ந்துக் கொண்டு தானிருக்கிறது.

//சமையல் குறிப்பு எழுதுவது கஷ்டம் என்று தற்போது கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.//

இதோ நான் சமையல் குறிப்பையே கவிதையாக்கி விட்டேன்.

"பாகலின் கசப்பு காணாமல்
போகுமே
மஞ்சள்தூள்
உப்பு
வெல்லத்துடன் சேர்த்து
சிறிதுநேரம்
ஊறவைத்து சமைத்தால்!"

சமையல் குறிப்பை மடக்கிப் போடுங்கள்-
கவிதையாகிவிடும்.

இது படிக்கமட்டும் இல்லை, சமைத்தால் சாப்பிடவும் கஷ்டமாக இருக்கும்.

Anonymous said...

ஜின் colourless ஆ வெள்ளையா?

டகிள் பாட்சா said...

வெள்ளை உலோகம்னா அலுமினியத்தில் நகை போட்டுக்கலாமே! ரங்கனாதன் தெரு நகை கடைகளில் இப்ப என்ன சொக்கத்தங்க நகைகளையா விக்கறாங்க! அண்ணாச்சி நகை கடைல விக்கறதெல்லாம் தகர நகைகள்னு கேள்வி. ப்ளாட்டினம் நகை வாங்க மாட்டெங்கறாங்கன்னு நகை வியாபாரிகள் ரூம் போட்டு யோசிச்சு காழியூர் நாராயணன் ஜோசியம் மூலமா மார்க்கெட் பண்ண பாக்கறாங்க. முட்டாள் ஜனங்க! நம்பினாலும் நம்பிடுவாங்க!

சனீஸ்வரர் said...

முனீஸ்வரனுக்கு சனீஸ்வரன் எழுதிக்கொள்வது:

ஐயா முனீஸ்வரரே, வணக்கம்.

இந்தக் கட்டுரையில் நீர் இவ்வாறு சொல்லி உள்ளீர்கள்:

//முன்பே இவர்கள் கலாட்டா செய்த போது ஏன் இந்த அறிக்கை விடவில்லை? காவி கண்ணை மறைத்துவிட்டதா? நல்ல வேளை இவர் தமிழ் ஹிந்துவாக இல்லாமல் கன்னட ஹிந்துவாக இருக்கிறார். அதனால் தமிழ் ஹிந்துக்களுக்கு இது கண்ணில் படவில்லை. //

ஐயா முனியாரே,

ஏன் தப்புத் தப்பாய் எழுதுகிறீர்?

தமிழ் இந்து தளத்தினர் எப்போதோ இந்த ஆளின் டவுசரைக் கழட்டி ஓட விட்டு விட்டனர்.

இதைப் படித்துப் பாருங்கள் ஐயா.

மங்களூர்: தாலிபானை காப்பியடிப்பதா இந்துக் கலாச்சாரம்?

இப்படித் தப்பு தப்பாய் செய்தி சொல்வதற்கு டெஹல்காவிடம் முனியும் காசு வாங்கிவிட்டாரோ என்னவோ ?

KVR said...

//சமையல் குறிப்பு எழுதுவது கஷ்டம் என்று தற்போது கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இது இரண்டுமே கஷ்டம் படிப்பதற்கு !
//

permission denied வருதே :-(

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

"ஸ்ரீராம் சேனாவிற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிக்ஷத் என்ற இரு அமைப்புகளுமே அறிக்கை வெளியிட்டுள்ளன.

முன்பே இவர்கள் கலாட்டா செய்த போது ஏன் இந்த அறிக்கை விடவில்லை? காவி கண்ணை மறைத்துவிட்டதா?"

முன்பு மங்களூரில் இவர்கள் நடத்திய கலாட்டா சமயத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இதேபோல் சொன்னது உங்கள் கண்ணை மறைத்து ஏதோ ஒன்று மறைத்துவிட்டதே! அது என்ன?
-கண்ணன்.

கிரி said...

//எனக்கு இன்னொரு சந்தேகம் அக்ஷய திரிதியைக்கு வெள்ளை நல்லது என்று சொல்லும் காழியூர் நாராயணன் டிவியில் தோன்றும் விளம்பரத்தில் ஏன் டை அடித்துக்கொண்டுள்ளார் ? அந்த பகவானுக்கே வெளிச்சம்.//

ஹா ஹா அதெல்லாம் நமக்கு தான் அவருக்கல்ல. எப்போதுமே அறிவுரை!! மற்றவர்களுக்கு தான் :-)

//பெண்கள் இப்பல்லாம் சைடு பாரில் விஜய் பட வசனத்தை விளம்பரம் செய்கிறார்கள். //

அப்படி என்ன வசனம் ;-)

//நமக்கும் வயசாகிறது இல்லையா ? //

இட்லிவடை "நமக்கு" என்று ஏன் எங்களை சேர்க்கறீங்க! உங்களை மட்டும் சொல்லுங்க ;-)

//இவர் தமிழ் ஹிந்துவாக இல்லாமல் கன்னட ஹிந்துவாக இருக்கிறார். அதனால் தமிழ் ஹிந்துக்களுக்கு இது கண்ணில் படவில்லை//

lol

//தயவு செய்து இளகிய மனம் கொண்டவர்கள் , ஆண்கள், குழந்தைகள் இந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள்//

பார்த்துட்டேன்! பார்த்துட்டேன்!! ;-)

இட்லிவடை முனி கடிதம் கலக்கல்.

கால்கரி சிவா said...

போகிற போக்கில் தமிழ் இந்து தளத்தினரை இழுத்ததைப் பார்த்தால் உங்களுக்கும் செக்யூலர் வியாதி ஆரம்பித்துவிட்டதா என நினைத்தேன். சனீஸ்வரர் பதில் சொல்லிவிட்டார்.

www.tamilhindu.com is a sophisticated site

வீரராகவன் said...

ஒரு விஷயம் அனைவருமே மறந்து விடுகிறார்கள். உலகத்திலேயே அந்த பள்ளியில் படித்தால்தான் தன் பிள்ளை நல்லா வருவான் என்று படாதபாடுபட்டு (இரவு முழுவதும் வெளியில் பிச்சைக்காரனைப் போல் நின்று/ அல்லது ஏகப்பட்ட பணம் தர தயார் என்று சொல்லி கெஞ்சுவது) சேர்த்துவிட்டு அதன் பிறகு கொள்ளை அடிக்கிறார்களே என்று கூப்பாடு போடுவது. ஏன் வேறு பள்ளியே இல்லையா? உங்களுக்கு தரமான கல்வியும் வேண்டும். தன் பிள்ளை கராத்தே, யோகா, நடனம், பாட்டு என எல்லாவற்றையும் கற்க வேண்டும். திறமையான ஆசிரியர் வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறைகள் வேண்டும். ஆனால் கட்டணம் மட்டும் குறைத்து வாங்க வேண்டுமா? ஒன்று தெரியுமா? அரசு ஒவ்வொரு அரசு பள்ளி மாணவனுக்கும் ரூபாய் ஆயிரத்து நானூறு வருடத்திற்கு செலவழிக்கிறது. சில தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்தது வெறும் எண்ணூறும் அதற்கும் கம்மியாகத்தான். மூன்று வருடங்களுக்கு இதை வாங்கி என்ன செய்ய முடியும்?
சிலர் நினைப்பது போல் அரசுடைமையாக்கினால் மற்ற அரசு பள்ளிகளின் தரம் போல தாழ்ந்து போகும். பெற்றோர்களுக்கு இப்போது மகிழ்ச்சியாக இருப்பது பின்னர் வேதனையில்தான் முடியும். ஒவ்வொரு வகுப்பறை கட்டுவதற்கும் குறைந்தது இரண்டு லட்சமாவது தேவை என்பது கட்டிடத் தொழிலாளிக்கு கூட புரியும். காற்றிலேயே கட்டிடம் எழுப்புபவர்களுக்கு இந்த வேதனை புரியாது. அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயித்ததை அனைவரும் அறிவர். குறைந்தபட்ச ஆண்டுதொகை ஆயிரத்தை விடக் குறைவு. இதில் பள்ளி நடத்துவதோ ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ இயலாத காரியம்.
அரசு கேட்ட எல்லா விவரங்களையும் பள்ளிகள் கொடுத்தன. ஆனால் அவற்றை அப்படியே ஒதுக்கிவிட்டு சகட்டு மேனிக்கு தொகை குறைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏன் குறைப்பு என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. தயவு செய்து பள்ளி நிர்வாகம் பக்கம் உள்ள நியாயங்களையும் பாருங்கள்.

ரிஷபன் said...

தனியார் பள்ளியில் படித்தால் மட்டும் தான் கல்வியா ?

அரசு பள்ளிகளில் படித்தவர்கள் எல்லாம் வீனாகப் போய்விடார்களா என்ன ?

நான் பள்ளி இறுதிவரை அரசு பள்ளியில் தான் படித்தேன். உயர் கல்வி என்று வரும் போது மெட்ரிகுலேஷன் மானவர்கள் அரசு பள்ளி மானவர்கள் எல்லாம் ஒன்று தான்.


நான் மட்டுமல்ல என் மற்ற அரசுப் பள்ளி நண்பர்களும் நல்ல நிலையில் தான் இருக்கிறோம். தனியார் பள்ளியில் கற்றால் தான் கல்வி என்பதெல்லாம் மாயை.

சீனு said...

//கல்கி பகவான் எனும் விஜயக்குமாரைப் பற்றி சன் டிவி கொஞ்ச நாள் முன்னாடி சில வீடியோ காட்சிகளை போட்டு காட்டியது. ஆனால் ஃப்.எம் சேனலில் அம்மா சென்னை வருகைக்கு விளம்பரம் தூள் கிளப்புகிறது. எதை நம்புவது? சன் டிவியையா? அல்லது ரேடியோவையா அல்லது கல்கி பற்றி குங்குமத்தில் வரும் விளம்பரத்தையா ?//

நேத்து விஜய் டிவியில், கல்கியின் ஒன்னெஸ் பற்றின நிகழ்ச்சி...இன்னும் திருந்த விட மாட்டேங்குறாங்க மக்களை...

ஐயன் காளி said...

உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?

தொடரும் ஊழல்கள் குறித்து நீங்கள் என்ன செய்யலாம் ?