பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 02, 2010

வெள்ளி விமர்சனம் The Stoning of Soraya

Do not act like a hypocrite
who thinks he can conceal his wiles
while loudly quoting the Koran

- Hafes - 14th Century Iranian Poet.


இஸ்லாத்தில் திருமணத்திற்குப் பின் பிற ஆடவனுடன் ஒரு பெண் தவறான உறவு வைத்திருந்தாள் என நிரூபிக்கப்பட்டால் அவளைக் கல்லால் அடித்துக் கொலை செய்ய வேண்டும் என்கிறது குரான். நாகரீக நாடுகள் அனைத்தும் இந்த கொடூர தண்டனையை எதிர்க்கின்றன.இதற்கு இஸ்லாம் தரும் நியாயம் :

மனிதனின் காம வேட்கையைத் தணித்துக்கொள்ள ஏராளமான வடிகால்களை அமைத்துக் கொடுத்துவிட்ட பின்னரும் ( ஏக காலத்தில் ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்வதைக் குறிக்கும்) பிறன்மனை நோக்கினால் அவளை ( அவனை அல்ல) கல்லாலடித்தல் நியாயமே.

ஈரானை பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஃப்ரீடூன் ஷாஹேப்ஜம் ( Freidoune Sahebjam) உண்மையில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு 1984ல் எழுதிய நாவலின் திரைவடிவம் இது.

இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சி நடக்கும் ஈரானில் இந்த இஸ்லாமிய சட்டத்தின் துணைகொண்டு எப்படி ஒரு அப்பாவிப் பெண் கொல்லப்பட்டாள் என்பதை சொல்கிறது இப்படம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைபோல சவுதி, ஏமன் மற்றும் அதை ஒட்டிய அடிப்படைவாத நாடுகளிலும், வெளியே தெரியாமல் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானத்திலும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஈரானில் குப்பையா என்ற ஊரில் நடந்திருக்கிறது இந்தக் கொலை. தனது மருமகளுக்கு நடந்த இந்த மனிதாபிமானமற்ற அநியாயத்தை எப்படியாவது இந்த உலகத்திற்குச் சொல்லிவிட விரும்புகிறாள். அந்த ஊரை ஒட்டிய ஒரு இடத்தில் பிரஞ்சுப் பயணியின் வாகனம் பழுதடைந்துவிட குப்பையா என்ற ஊருக்கு வாகனத்தைச் சரிசெய்ய வருகிறான். அவனுக்கு சுரையாவின் அத்தை நடந்ததை பேட்டி மூலம் சொல்ல அந்த பயணியின் மூலம் இரானில் நடந்துகொண்டிருக்கும் காட்டுமிராண்டித்தனம் வெளியுலகிற்கு தெரியவருகிறது.

அதிகாரவெறியும், ஆணாதிக்கமும் கொண்டவன் அலி. அவனுக்கு சுரையா வாழ்க்கைப்படுகிறாள். அவன் மூலம் சுரையாவிற்கு நான்கு குழந்தைகள். 14 வயதிலிருக்கும் வேறு ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்புவதாலும், அதேசமயம் மனைவிக்கு தரவேண்டிய ’மகர்’ பணத்தை திருப்பித்தர விரும்பாததாலும் சுரையாவை ஒழித்துக்கட்ட அலி திட்டமிடுகிறான்.


அதற்கு பழைய அரசாங்க குற்றவாளியும், இன்றைய முல்லாவாகவும் இருப்பவனின் உதவியை நாடுகிறான். முல்லாவை மிரட்டி மனைவியை விவாகரத்திற்கு சம்மதிக்க வைக்கச் சொல்கிறான் அலி. முல்லாவும் அலிக்கு சாதகமாகச் செல்லும்படி அறிவுறுத்துவதுடன், தான் அவளுக்கு விவாகரத்திற்குப் பின்னர் ”பாதுகாப்பாய்” இருப்பதாகவும், பணஉதவி செய்வதாயும் சொல்கிறார். முல்லாவின் இந்த மிரட்டல் கலந்த அறிவுரையை கேட்டு சுரையாவும், இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும் சுரையாவின் அத்தை ஸாஹ்ராவும் முல்லாவை திட்டி, விரட்டி விடுகின்றனர். இருவரையும் மிரட்டிச் செல்லும் முல்லா அலியுடன் சேர்ந்து சதி செய்து சுரையாவிற்கு கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனை பெற்று தருகிறான்.

எப்படி ஈரானில் மதகுருமார்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதையும், நீதி, சட்டமெல்லாம் ஆண்களுக்கு சாதகமாக வளைக்கப்படுவதையும், பெண்களின் குரலுக்கு அங்கு மதிப்பே இல்லாத நிலையையும் எடுத்துச் சொல்கிறது படம்.

படத்தின் ஆரம்பத்தில் சுரையாவின் அத்தை ஸாஹ்ரா ஓடைக்கரையிலிருந்து சில எலும்புகளை எடுத்து அதை அடக்கம் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். ஏன் இந்த சோகம்? யாருடைய எலும்புகள் இவை?

எல்லாவற்றிற்கும் பதில்தான் இந்தப்படம். படம் முடிவடையும்போது இந்த முதல் காட்சியை நினைத்தால் மனம் பதறும்.

கல்லால் அடித்துக் கொல்லுதலை இவ்வளவு முழுமையாக எந்தப் படத்திலாவது காண்பித்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சுரையாவிற்கான தீர்ப்பை அனுப்பி வைப்பதில் ஆரம்பித்து, அவள் ஓடிவிடாமல் இருக்க பெண்களை அனுப்பி, பின்னர் இடுப்பளவு குழிவெட்டி, கையைக் கட்டி, குழியில் இறக்கி, மண்ணால் மூடி, அவள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வாசிக்கின்றனர்.

முதலில் சுரையாவின் தகப்பனும், பின்னர் கணவனும், அவளது ஆண் குழந்தைகளும், முல்லாவும், மேயரும், அதன் பின்னர் ஊர்மக்களும் கல்லால் அடிக்கின்றனர். சுரையாவின் அப்பா கல்லெறியும்போது அவள்மேல் படாததால் தண்டனையை நிறுத்திவிட அத்தை ஸாஹ்ரா மன்றாடுகிறாள். ஆனால் அலியோ அந்த கல்லை தான்வாங்கி சுரையாவின் நெற்றியில் எறிகிறான்.எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, பரிதாபமோ இன்றி, மொத்த ஊரும் ஏதோ திருமணவிழாவில் கலந்து கொள்வதுபோல வந்து கல்லெறிந்து கொல்கின்றனர்.பார்க்கும் நமக்குத்தான் உடல் தூக்கிப் போடுகிறது. எல்லோரும் கல்லெறிந்து அவளை ரத்தக்குப்பையாகப் போட்டுச் செல்கின்றனர். அவ்வூருக்கு வரும் கழைக்கூத்தாடி பரிதாபப்பட்டு சுரையாவின் பிணத்தின்மீது போர்வை போத்துகிறான்.சுரையாவின் மீது குற்றம் சுமத்தியபின் சொல்லும் வசனம் மிக முக்கியமானது. ’’எனக்கு சாவைப் பற்றிய பயமில்லை. ஆனால் கல்லால் அடிபட்டுச் சாதலும், அதன் வலியை நினைக்கும்போதுதான் மிகக் கஷ்டமாய் இருக்கிறதென’’.


மேலும் குற்றம்சாட்டப்பட்ட சுரையாவுக்கு தண்டனையும், அவளுடன் இணைத்துபேசப்பட்ட ஆணுக்கு கல்லால அடிக்கும் உரிமையையும் தரப்படுகிறது. மதத்தின் பெயராலே ஆணுக்கு எந்தவித தண்டனையுமின்றி தப்பித்துவிடவும், பொய்க்குற்றச்சாட்டின் மூலமே ஒரு பெண்ணை சவக்குழிக்குள் தள்ளிவிட முடிவதும் இவர்களின் சாதனைதான்.


இந்தப் படம்தான் மேற்குலகிற்கு ஈரானின் இந்த கொடூர தண்டனைகள் குறித்து தெரியப்படுத்தியது. மத அடக்குமுறையின் காரணமாகவும், வெளியுலகத் தொடர்பில்லாததினாலும் மதத்தின் பெயரால் நடக்கும் அநியாயங்கள் வெளித்தெரியாமலேயே போகின்றன.

மெல்லிய இதயம் கொண்டவர்கள் கடைசி 15 நிமிடங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பல நாட்களுக்கு தவிக்க வேண்டியிருக்கும்.இசை

படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை சோகமயமான இசைதான் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கும்.. அதன் விரியம் கூடுதலும், குறைவதும் சூழ்நிலையின் தாக்கத்தைப் பொறுத்து அமைகிறது.

படம் முழுக்க உற்சாகமான ஒரு முகத்தைக்கூட பார்க்க முடிவதில்லை. எல்லோரும் சபிக்கப்பட்டவர்கள் போலவும், வாழவேண்டுமே என்பதற்காக உயிருடன் இருப்பதுபோலவுமே இருக்கிறார்கள்.

அந்தக் கிராமம் முழுக்க மலையும், மலைசார்ந்த இடங்களும், அந்த மலையிலிருந்து கிடைத்த கற்களாளினால் கட்டப்பட்ட வீடுகளும், எந்த வித வசதியும் அற்று இருக்கிறது. மத சம்பந்தப்பட்ட தண்டனைகள் வழங்குவது மட்டுமே ஊரில் ஒரு கலகலப்பை உண்டாக்குகிறது.


பெர்சிய மொழித் திரைப்படத்தை ஆங்கில டைட்டில் துணையுடன் எளிதாய்ப் பார்க்கலாம். பலதிரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது.

இயக்கம் : சைரஸ் நவ்ரஸ்தே ( Cyrus Nowrasteh)

ஜோர்டானின் ஒரு கிராமத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கல்லெறியும் காட்சி மாத்திரம் கிட்டத்தட்ட ஆறு நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இது ரொம்ப கொடூரமானதாகவும், அதீதமாகவும் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறினாலும் இந்தப் படத்தில் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. இந்தப்பட்டத்திற்கு இது அவசியம் என இயக்குனர் கூறிவிட்டார்.

வாஷிங்க்டன் எக்ஸாமினர் ”இந்தப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் எது ஈரானில் புரட்சியின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பது குறித்த தெளிவுடன் வருவார்கள் எனக்குறிப்பிட்டிருந்தது.

எல்லா அரசாங்கங்களும் செய்வதுபோல ஈரானும் இந்தத் திரைப்படத்தின் மூலப்புத்தகத்தை தடை செய்தது. இது திரைப்படமாக வெளிவந்து பெருவாரியான ஆதரவைப் பெற்றவுடன் ஈரான் தரமசங்கடத்தில் நெளிய ஆரம்பித்து கல்லால் அடித்துக்கொலை செய்வதை தடை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்போவதாக அறிவித்தது. அந்த அளவிலேயே இப்படம் வெற்றிபெற்றுவிட்டதாகக் கொள்ளலாம். ஆனல் இன்றுவரை இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்படவில்லை.

இன்னொரு அருமையான ஈரானியத் திரைப்படம் இது.

- ஜெய் ஹனுமான்

48 Comments:

Maniz said...

i saw this movie last week. Great Movie

jaisankar jaganathan said...

மடவாதிகளின் ஆட்சி இப்படித்தான் இருக்கும். நம்ப ஊர்ல ஒரு மட தலைவர் விதவைகளை களர்நிலம் என்று சொல்லவில்லையா

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்ன ஆச்சர்யம்? கிட்டத்தட்ட இந்த கருத்தில் நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன். படியுங்க, கருத்து சொல்லுங்க.

கும்மி said...

இந்தப் பதிவை படிக்கும்போதே சற்று நடுங்கித்தான் போகிறது. திரையில் பார்க்கும் துணிவு நிச்சயமாய் இல்லை.
இது இஸ்லாமியர்கள் செய்வது; இஸ்லாத்தில் இல்லை என்பவர்கள் இது போன்ற இஸ்லாமியர்களைத் திருத்த என்ன முயற்சி எடுத்தார்கள் என்று கூறுவார்களா?

பா. ரெங்கதுரை said...

வாழ்க அன்பு மதம்! ஓங்குக இறைவன் அருளிய ஷரியா சட்டம். டாக்டர் கலைஞர் அவர்கள் இச்சட்டத்தைத் தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தி செம்மொழி மாநாட்டின் போதாவது அறிவிப்பு வெளியிடுவாரா? இன்ஷா அல்லா.

Anonymous said...

Will Hollywood also make a movie about the peadophile piests molesting the 200 deaf children with vatican's help?

பார்வையாளன் said...

எல்லா சட்டங்களும், ஆணின் பார்வையில் இருந்து இயற்ற பட்டதால் நடக்கும் கொடூரம் இது...

கண்டிப்பாக , பெருங்கருணை உள்ள அல்லா இதை விரும்பி இருக்க மாட்டார்..

இது ஒரு புறம் இருக்க, நம் நாட்டில் , கல்லால் அடித்து கொலவது இல்லையே தவிர, சொல்லால் அடித்து கொல்வது , இருக்கத்தான் செய்கறது....

இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை...

தவறு செய்யும் அஆன் , அதை பற்றி பெருமையாக சினிமா எடுக்காலாம், வலை பதிவு எழுதலாம், கதை எழுதலாம்
தவறு செய்யும் பெண்ணுக்கு , சொல் அடி கட்டாயம் உண்டு...

நம் நாட்டில், ஒரு பெண் தலைவி, தன துணைவர் மற்றும் கணவருடன் ஒன்றாக விழக்களில் கலந்து கொள்ள முடியுமா...

Muthu said...

மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்கள் மீது விஷம் கக்கியதற்க்கு நன்றி!! தொடர்ந்து கக்கி
வரும் யுவராஜ் மற்றும் , இன்பா கூட்டணியில் தற்பொழுது ஜெய் ஹானுமன், இவர்களுக்கு இ.வ என்ற முகம் மற்றும் அகம் இல்லா மனிதனின் அமோக ஆதரவு!! வாழ்க உங்கள் சேவை!!

Madumitha said...

படிக்கும்போதே மனசு
பதறுகிறது.
பார்த்தால்?

khaleel said...

these laws are indeed stupid and would be better if these are abolised at the earliest.
but it seems to be very much exaggerated in the movie and doubly exaggerated in the review.

jai sankar - your comment is super.we can go on talking about that mada thalaivar.

சீனு said...

//மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்கள் மீது விஷம் கக்கியதற்க்கு நன்றி!! தொடர்ந்து கக்கி
வரும் யுவராஜ் மற்றும் , இன்பா கூட்டணியில் தற்பொழுது ஜெய் ஹானுமன், இவர்களுக்கு இ.வ என்ற முகம் மற்றும் அகம் இல்லா மனிதனின் அமோக ஆதரவு!! வாழ்க உங்கள் சேவை!!//

முத்து சொல்றது உண்மை தான். அளாவுக்கு அதிகமாகவே இவ-வில் இதை போன்ற கட்டுரைகள் வருகிறது. எப்போ அனுமன் சேனாவில் சேர்ந்தீர்கள்.

ஆனால் முத்து, அதுக்காக இந்த படத்தில் காட்டப்படுவதை நியாயப்படுத்தாதீர்கள்.

//but it seems to be very much exaggerated in the movie and doubly exaggerated in the review.//

இது 'எல்லா' இடத்திலும் நடப்பது தானே?

//jai sankar - your comment is super.we can go on talking about that mada thalaivar.//

Why not? Why don you write a new post about that, so that we all can talk there...

ஜீயார் said...

ஃஃஃ மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்கள் மீது விஷம் கக்கியதற்க்கு நன்றி!! தொடர்ந்து கக்கி
வரும் யுவராஜ் மற்றும் , இன்பா கூட்டணியில் தற்பொழுது ஜெய் ஹானுமன், இவர்களுக்கு இ.வ என்ற முகம் மற்றும் அகம் இல்லா மனிதனின் அமோக ஆதரவு!! வாழ்க உங்கள் சேவை!!ஃஃஃஃ

வாங்க சார், நீங்க மதத்தின் பெயரை சொல்லி பெண்களை பழிவாங்குவீர்கள். அதை அம்பலபடுத்தினால் அது இஸ்லாமியர்கள் மீது தாக்குதல். நல்லா இருக்குசார் உங்கள் நியாயம். முகம்மது வாழ்ந்த காலத்தில் பெண்களை ஒரு மனித ஜந்தாக நினைக்காத மாக்கள் உயிர் வாழ்ந்திருக்கலாம். அதற்காக இன்னும் நாங்கள் அப்படிதான் இருப்போம் என்பது நாகரீகமான செயலாக இருக்காது. அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் என்று பெண்களை பெண்களாக மதிக்க ஆரம்பிக்கின்றீர்களோ அன்றுதான் உங்கள் மீது இருக்கின்ற தீவிரவாத முத்திரை அழியும். திருந்துங்கள், திருந்த முயற்சியாவது செய்யுங்கள்.

யதிராஜ சம்பத் குமார் said...

முத்து சார்...


சொல்றதுதான் சொல்றீங்க....என் பெயரையாவது ஒழுங்கா சொல்லுங்க சார். பாவம் அது என்ன பண்ணுச்சு?

முல்லாஹ் said...

அருமையான கட்டுரை. பொதுவாக இஸ்லாத்தில் இருக்கும் பெண்களுக்கு உரிமை/மரியாதை என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் ஒரு கட்டுபாட்டோடு வளர்க்கபடுவார்கள். இந்த பெண்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தட்டி கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவோ/ஆற்றலோ கொடுக்கப்படவில்லை. இவர்கள் தங்களின் அடிமை விலங்கை விரும்பி அணிவதாக நான் உணர்கிறேன். இவர்கள் பொது அறிவு இவர்களுக்கு போடப்பட்ட சிறு வட்டத்திற்குள் மட்டுமே சுற்றுகிறது. ஒரு சில பெண்கள் இதில் மாறுபட்டு வெளிவந்தாலும் அவர்கள் இந்த முறையை மாற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மற்ற மதங்களில் இத்தகைய விமர்சனகள்/விவாதங்கள் தவறாக பார்க்கபடுவதில்லை. ஆனால் இஸ்லாத்தில் இது பெரும் பாவம்/குற்றம். இந்நிலையில் இருக்கும் பெண்களை மேல் கொண்டுவர அவர்கள் குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் நினைத்தால் ஒழிய இவர்களை காப்பாற்ற வேறு வழியில்லை.

ஆனால் இந்த கட்டுரை விவரிக்கும் காட்டுமிராண்டி தனம் ஈரானில், அரேபியாவில் இப்போது நடப்பதாக நான் நம்பவில்லை. ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தானில் (ஒரு சில இடங்களில்) இருக்கும் தாலிபான்களிடம் இத்தகைய கொடூரம் நடக்கலாம். இத்தகைய கொடூர மனதை அவர்களுடைய 'அந்த இறைவன்' கூட கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்.

குறிப்பு:
தயவுசெய்து ஒரு சென்சிடிவான விஷயம் விவாதிக்கும் போது தடம் மாற்றி விடாதீர்கள்.. இது இஸ்லாமிய பெண்களுக்கு இழைக்கபடும் அநீதி பற்றிய கட்டுரை. மற்ற பிற ஓட்டைகளை பின்னர் லிஸ்ட் போட்டு கொள்ளலாம்.

Muthu said...

திரு.ஜீயார், விதவை திருமண மறுப்பு, உடன் கட்டை ஏற்றுதல், பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, மாதவிடாய் நேரங்களில் வீட்டுக்கு வெளியில் வைத்தல், தேவதாசி
முறை மற்றும் பொட்டு கட்டி விடுதல், வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் அரை குறை உடையில் இல்லை உடையின்றி பெண்களை ஆட விடுதல், மனைவி மீது சந்தேகம் வந்தால் தீயில் இறங்க சொல்லுதல்!கர்ப்பகிரகத்தில் களியாட்டம், பெண் சீடர்களுடன் ஆன்மீக பரிசோதனை.....!! இன்னும் இருக்கு சொல்லணுமா உங்களின் பெண்ணுரிமை பற்றி!!??
இ.வ, யதி, இன்பா, ஜெய், பிறரின் முதுகில் உள்ள அழுக்கை துடைப்பதை விட உங்களின் ______ உள்ள அழுக்கை சுத்தம் செய்யுங்கள்!!
எங்களை திருத்திக்க எங்களுக்கு தெரியும்!!

Venkat said...

Commenters,
Whenever you see a post like this in Idly vadai or elsewhere, please make sure your comments only address the "issue in question" in a very gentle and polite manner. No matter whatever the provocation, let us stick to what we want. Remember we are not questioning a fact, we are questioning the other on his/her belief systems. Their belief is as staunch as ours. We need people to see reason and try to be sympathetic to your view. Spitting venom/sarcastic remarks are not going to help us achieve the cause. In a way, we are also helping the terrorist cause - after all terrorists wants to divide the society.
People who read IV are people like us but they are just on the other side of the fence. We grew up together and we do not have to suddenly treat them very differently. At the end of the day, we are not going to make people think by offending anyone. What if someone in our own family does not see reason? Do we irritate them by our words or do we come down to their level and initiate a dialogue with them? In order to do that, we have to be very specific, data oriented and sympathize with that individual's problem.
Please understand that though Islamic brothers do seem to support some of the moderate actions - in reality they do not support the Taliban and/or most of their principles after all they too have females in their families also. They are not going to support things like do not send women to receive education, work etc.
So, let us be gentle and concentrate on what we want instead of doing things that is getting counter productive…
It is my 2 cents…

"We have just enough religions to make us hate, but not enough to make us love one another." - Jonathan Swift

Venkat said...

I tried posting this comment twice and this is 3rd time. Every time it is giving me error message. Hence retrying one last time.

Commenters,
Whenever you see a post like this in Idly vadai or elsewhere, please make sure your comments only address the "issue in question" in a very gentle and polite manner. No matter whatever the provocation, let us stick to what we want. Remember we are not questioning a fact, we are questioning the other on his/her belief systems. Their belief is as staunch as ours. We need people to see reason and try to be sympathetic to your view. Spitting venom/sarcastic remarks are not going to help us achieve the cause. In a way, we are also helping the terrorist cause - after all terrorists wants to divide the society.
People who read IV are people like us but they are just on the other side of the fence. We grew up together and we do not have to suddenly treat them very differently. At the end of the day, we are not going to make people think by offending anyone. What if someone in our own family does not see reason? Do we irritate them by our words or do we come down to their level and initiate a dialogue with them? In order to do that, we have to be very specific, data oriented and sympathize with that individual's problem.
Please understand that though Islamic brothers do seem to support some of the moderate actions - in reality they do not support the Taliban and/or most of their principles after all they too have females in their families also. They are not going to support things like do not send women to receive education, work etc.
So, let us be gentle and concentrate on what we want instead of doing things that is getting counter productive…
It is my 2 cents…

"We have just enough religions to make us hate, but not enough to make us love one another." - Jonathan Swift

- Venkataraghavan R

Anony8 said...

விதவை திருமண மறுப்பு, உடன் கட்டை ஏற்றுதல், பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, மாதவிடாய் நேரங்களில் வீட்டுக்கு வெளியில் வைத்தல், தேவதாசி
முறை மற்றும் பொட்டு கட்டி விடுதல், வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் அரை குறை உடையில் இல்லை உடையின்றி பெண்களை ஆட விடுதல், மனைவி மீது சந்தேகம் வந்தால் தீயில் இறங்க சொல்லுதல்!கர்ப்பகிரகத்தில் களியாட்டம், பெண் சீடர்களுடன் ஆன்மீக பரிசோதனை.....!! இன்னும் இருக்கு சொல்லணுமா உங்களின் பெண்ணுரிமை பற்றி!!??
இ.வ, யதி, இன்பா, ஜெய், பிறரின் முதுகில் உள்ள அழுக்கை துடைப்பதை விட உங்களின் ______ உள்ள அழுக்கை சுத்தம் செய்யுங்கள்!!
எங்களை திருத்திக்க எங்களுக்கு தெரியும்!!

April 02, 2010 9:55 PM


-----------

@Muthu bhai

Hindus as always discuss their intrinsic wrongdoings and discuss their failures, superstitions, injustice and other shortcomings in OPEN including with people of other beliefs and/or Atheists, but Muslims like you DONT and shy away from it saying it's YOUR PROBLEM... thatz the crux of this issue.

கால்கரி சிவா said...

//மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்கள் மீது விஷம் கக்கியதற்க்கு நன்றி!! //

என்ன நியாயம் இது. ஒரு சமூகத்தில் இருக்கும் அவலத்தை சுட்டிக்காட்டினால் அது விஷம் கக்குவதா.

என் சமூகத்தில் விதவை மறுமண மறுப்பு இருந்தால் அதை சுட்டிக்காட்டினால் நான் யோசிப்பேன் அறிவுரை சொன்னவர் மேல் எரிந்து விழமாட்டேன்

கர்ப்பகிரக்கத்தின் காமுகனுக்கு வக்காலத்து வாங்கி யாரும் வரவில்லை.

அவதாரம் என்று பலர் நம்பும் ராமன் சீதையை தியில் இறக்கிய சம்பவத்தை வைத்து பட்டி மன்றம் நடத்தி சகிப்புத் தன்மை கொண்டவர்தாம் நாங்கள். ஏன் நீங்களும் தாம்.

உங்களும் சகிப்பு தன்மை, உங்களுக்காக கடைசியாக வந்த தூதுவரின் குழந்தை திருமணத்தை வைத்து ஒரு பட்டி மன்றம் நடத்தினால் என்ன ஆகும் என்று தெரியும்

உங்களுக்கு இணக்கமாக போனால் மதநல்லிணக்கம் கேள்விகள் கேட்டால் காழ்புணர்ச்சி. என்னே அமைதி மார்க்கத்தின் தாக்கம்

Anonymous said...

உங்களுக்கு இணக்கமாக போனால் மதநல்லிணக்கம் கேள்விகள் கேட்டால் காழ்புணர்ச்சி. என்னே அமைதி மார்க்கத்தின் தாக்கம்

----------

Repeattuu.

முரண்பாடுகளில் இணக்கம் என்றால் பரவாஇல்லை, இவர்கள் செய்யும் வன்முறைகளுக்கும், அக்ரமங்களுக்கும் நாம் இணங்கி செல்வதையே விரும்புகிறார்கள்.

Anonymous said...

அவதாரம் என்று பலர் நம்பும் ராமன் சீதையை தியில் இறக்கிய சம்பவத்தை வைத்து பட்டி மன்றம் நடத்தி சகிப்புத் தன்மை கொண்டவர்தாம் நாங்கள். ஏன் நீங்களும் தாம்.

-------

Even the wartime crimes like killing Vaali, or killing Karna/other Gauravas are openly discussed, analyzed, crucified in Hinduism, but even the killings of civilians, Children and Women by Mohammed and his army are not dare discussed by anyone... muslims or non-muslims fearing the all-expected "backlash".

Anonymous said...

Please understand that though Islamic brothers do seem to support some of the "extremist" actions - in reality they do not support the Taliban and/or most of their principles after all they too have females in their families also. They are not going to support things like do not send women to receive education, work etc.

----
Venkat Sir...
I request you to study how the educated Muslims in the West(Not in any Arab/Muslim Nations) behave before praising them. They are all the same, whetr in Saudi or in UK/USA. They all support, defend, Terror directly or indirectly.

யதிராஜ சம்பத் குமார் said...

திரு.ஜீயார், விதவை திருமண மறுப்பு, உடன் கட்டை ஏற்றுதல், பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, மாதவிடாய் நேரங்களில் வீட்டுக்கு வெளியில் வைத்தல், தேவதாசி
முறை மற்றும் பொட்டு கட்டி விடுதல்//

நீங்கள் சொல்கின்ற எல்லாமே கடந்த காலத்திய விஷயங்கள். இப்போது எதுவுமே நடைமுறையில் இல்லை. எல்லாம் திருந்தி விட்டார்கள் காலத்திற்கேற்ப.

மாதவிடாய் காலத்தில் அதன் விளைவுகளால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக அந்த நாட்களில் பெண்கள் விலகி இருந்தனர். இதுவும் ஆரோக்யம் தொடர்பான விஷயம்.

ஒரு சினிமா விமர்சனத்திற்கு ஏன் இவ்வளவு குரோதத்துடன் மதச்சாயம் பூசப்படுகிறது என்று தெரியவில்லை. முத்துவை விட்டால் இட்லிவடைக்கு ஃபத்வா பிறப்பித்துவிடுவார் போலிருக்கிறது.

Anonymous said...

அரைவேக்காட்டு இட்லி வடையே! எதையும் முழுதும் தெரிந்துக்கொள்ளாமல் இஸ்லாத்தின் மீதுள்ள காழ்புணர்ச்சியை காட்ட கிளம்பியிருக்கும் அரைவேக்காடே, உனக்கு யார் சொன்னது விபச்சாரத்திற்கு தண்டனை அவளை ( அவனை அல்ல) கல்லாலடித்தல் நியாயமே என்று. க‌ல்லால் அடித்த‌ல் அவ‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌ அவ‌னுக்கும் தான். இஸ்லாத்தில் த‌ண்ட‌னைகளில் பார‌பட்ச‌ம் கிடையாது. அது உன்னை போன்ற‌ ம‌த‌வெறிய‌ர்க‌ளுக்கு தெரின்திருக்க‌ வாய்ப்பில்லை. இல்லை தெரின்திருன்தும் வ‌ழ‌க்க‌ம் போல் ந‌டிக்கிறாயோ என்ன‌வோ.

Anonymous said...

அரைவேக்காட்டு இட்லி வடையே! எதையும் முழுதும் தெரிந்துக்கொள்ளாமல் இஸ்லாத்தின் மீதுள்ள காழ்புணர்ச்சியை காட்ட கிளம்பியிருக்கும் அரைவேக்காடே, உனக்கு யார் சொன்னது விபச்சாரத்திற்கு தண்டனை அவளை ( அவனை அல்ல) கல்லாலடித்தல் நியாயமே என்று. க‌ல்லால் அடித்த‌ல் அவ‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌ அவ‌னுக்கும் தான். இஸ்லாத்தில் த‌ண்ட‌னைகளில் பார‌பட்ச‌ம் கிடையாது. அது உன்னை போன்ற‌ ம‌த‌வெறிய‌ர்க‌ளுக்கு தெரின்திருக்க‌ வாய்ப்பில்லை. இல்லை தெரின்திருன்தும் வ‌ழ‌க்க‌ம் போல் ந‌டிக்கிறாயோ என்ன‌வோ.

R.Gopi said...

//உங்களுக்கு இணக்கமாக போனால் மதநல்லிணக்கம் கேள்விகள் கேட்டால் காழ்புணர்ச்சி. என்னே அமைதி மார்க்கத்தின் தாக்கம்.//

******

முரண்பாட்டின் மூட்டை...

பதிவை ஒட்டிய பின்னூட்டங்களே பதிவை அழகு படுத்தும்....

இதில் மதக்கலப்பு விமர்சனங்கள், பின்னூட்டங்கள் வேண்டாமே!!

ஜீயார் said...

முத்து மற்றும் ஆனானிக்கான பதில்

ஃஃஃஃ விதவை திருமண மறுப்பு, உடன் கட்டை ஏற்றுதல், பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, மாதவிடாய் நேரங்களில் வீட்டுக்கு வெளியில் வைத்தல், தேவதாசி
முறை மற்றும் பொட்டு கட்டி விடுதல், வருடா வருடம் கோவில் ஃஃஃஃ

பண்டைய காலங்களிலில் இந்து முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மதத்தினரும் பெண்களை அடிமைப் படுத்தினர். நீங்கள் மேற்கூறிய கொடுமைகள் இந்துக்களில் இருந்தன. ராஜாராம் மோகன்ராய் போன்ற பல தலைவர்களின் பெருமுயற்சியால் இன்று 99 சதவீதம் இந்துக்கள் மனிதர்களாக மாறிவிட்டனர். அப்படி இன்றும் உத்திரபிரதேசம் போன்ற சில வடமாநிலங்களிலும் மிகச்சில இடங்களில் பெண் சமுதாயத்திற் கெதிரான கொடுமைகள் நடைபெறத்தான் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று அது பற்றிய ஒரு விவாதம் ஏற்பட்டால் எந்த இந்துவும் அவன் இந்து என்ற ஒரே காரணத்தை கூறி அவனுக்கு வக்காலத்து வாங்கமாட்டான். ஆனால் நீங்கள் மேற்கூறிய சம்பவங்கள் இன்றும் தலிபான்களால் நடத்தப்படுகின்றன என்பதை தெரிந்தும் இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சிறிதும் இரக்கம் இன்றி இது முஸ்லிம் விரோத நடவடிக்கை என்றால்.... உங்களுக்கே தெரிவில்லையா உங்கள் வாதம் எவ்வளவு கீழ்த்தரமானது என்று.

அப்புறம் இந்தியாவின் தலைவிதி

அசாரூதின் என்ற கிரிக்கெட் வீரர் ஊழல் புகாரில் சிக்கியபோது நான் முஸ்லிம் என்பதால் மாட்டிக்கொண்டேன் என்றார்.
தற்போதைய கிரிக்கெட் வீரர் யுசுப் பதானும் சில போட்டிகளில் தன் திறமையை நிறுபிக்கத் தவறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது அதே புகாரை தெரிவித்தார். உங்களுக்கு யார் சொல்லித்தருவது சிறுபான்மையினர் என்ற கேடகத்தை தவறாக பயன்படுத்த?

jaisankar jaganathan said...

//எங்களை திருத்திக்க எங்களுக்கு தெரியும்!!
//
athu eppoooooooo??????????????????????? after 1400 years

old testament said...

கல்லால் எறிந்து கொள்வது என்று பைபிலிலும் தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் லாவகமாக மனிதனால் பைபிள் மாற்றப்பட்டது என்பதுதான் உண்மை

Anonymous said...

It's a real story and this is still happening IN ALL THE MUSLIMS COUNTRIES.

It's the responsibility of ALL HUMANS of this world to save the Muslim Girls from oppression and slavery by their family and community.

Anonymous said...

அமைதி மார்க்கம் ஒரு அறிவியல் பூர்வமான அமைதி மார்க்கம். அது பெண்களுக்கு உண்மையான விடுதலை அளிக்கிறது. ஆண்களுக்கும் விடுதலை அளிக்கிறது. பெண்களை கறுப்பு அங்கி போட்டு அழைத்து வருவதால் எத்தனையோ நன்மைகள் உள்ளன. இஸ்லாம் அதன் முழுமையான வடிவில் பெண்களின் கறுப்பு அங்கியில் உள்ள கண்களையும் அடைத்துவிட வேண்டும் என்று சொல்கிறது. பெண்களின் கண்கள் வழியாக சைத்தான் உள்ளே நுழைந்து விடுவான் என இறைத்தூதரின் வாக்கு கூட இருக்கிறது. அறியாமைக் கால காட்டுமிராண்டித்தனங்களில் காதல் ஒன்று. இணைவைப்பர்களின் பாடலில் "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்று இருக்கிறது. பெண்களை பார்க்க விட்டால் காதல் வளரும். பிறகு பெண்கள் மார்க்கக் கேடான வழிக்கு செல்வார்கள். அப்புறம் பெண்கள் எப்படி நடந்து போவது என்று கேட்கிறீர்களா...இறைவன் எல்லாம் அறிந்தவன். அவன் இறக்கிய மறையில் அதையும் சொல்லாமல் இருப்பானா? முழுக்க கறுப்பு அங்கி போட்டு மூடிய பிறகு பெண்களின் கையில் லெதர் பட்டைகளை வாங்கி மாட்டி சங்கிலிகளை அதில் பிணைத்து ஒன்றோ மூன்றோ மனைவிகளை கூட நீங்கள் கூட்டிப் போகலாம். காலையிலும் மாலையிலுமாக அப்படி வாக்கிங் போய் வந்தீர்கள் என்றால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவர்களும் தேவையில்லாமல் நகைக்கடை ஜவுளிக்கடையெல்லாம் பார்த்து உங்கள் பர்ஸை காலி செய்ய மாட்டார்கள். அமைதி மார்க்கத்தில் நாய்கள்தான் வைத்துக்கொள்ளக் கூடாது மனைவிகளை அல்ல. நாய்களை வளர்த்தால் உண்ணிப்பிரச்சனைகள் எல்லாம் வரும். மனைவிகள் அப்படி அல்ல. நாய்களை நீங்கள் விவாகரத்தும் செய்ய முடியாது. மனைவிகளை எங்கள் மார்க்கத்தில் அப்படி அல்ல. நாய்களை கல்லால் அடித்தால் ஊளையிடும். திரும்ப கடிக்கக் கூட செய்யும். ஆனால் மனைவிகள் அப்படி அல்ல. அமைதி மார்க்கத்தின் படி வளர்க்கப்பட்ட மனைவிகள் கல்லால் அடிபடும் போது கழுத்தளவு புதைத்து அடிப்பதால் அவர்கள் திரும்ப கடிக்க மாட்டார்கள் என்பதனை ஏக இறைவன் உறுதி செய்கிறான். இப்படிப்பட்ட ஒரு பகுத்தறிவான மார்க்கத்தை இட்லி வடை போன்ற மதவெறியர்கள் பழித்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.

-அமைதி மார்க்க கொலைவெறி அமைதிப் போர் படை

உண்மையான இஸ்லாமியன் said...

// அந்த சம்பவத்தை நினைக்கும் போது என்னுடைய நாடிகள் படபடவென்று துடிக்கின்றன, இதயம் வலிக்கிறது, கண்ணீரில்லாமல் கண்கள் வரண்டுவிட்டன, நெஞ்சம் உறைந்து விட்டது//

http://solvanam.com/?p=7483

அமைதி மார்கத்தினர் இந்தியாவில் - டெல்லியில் செய்த காரியத்தினால் ஒரு 13 வயதுச் சிறுமியின் டைரியில் இது எழுதப்பட்டிருக்கிறது..

அமைதி மார்க்கம்!!!!மயான அமைதி போல

Anonymous said...

I don't think Islam is the only religion or muslims are the only people treating without respect or sub-humans. If you are a guy who grew up with sisters, remember how they were made to serve you while you were treated royally just because you are a prospective man. It was easy to handle women to condition them to think they are not whole-humans. Change that attitude and everything will change. But I have seen men are afraid to bring that change and openly admit that they are equal to women because of so many varieties of reasons.

khaleel said...

well the discussion is just getting digressed or rather allowed to be digressed.
whether stoning of women is cruel - yes its ofcourse cruel and has no place in any civilization.
if it is stoning in islam it is sati or discrimination of women in another religion. sati is not some age old practice. its still an accepted practice in nepal and parts of uttar pradesh. if you dont believe me google yourself and find out whether its still practiced or not. (if you need i can provide the link)
if somebody takes a movie which shows that a widow is being forcibly thrown into the funeral pyre and she cries in pain for hours before fully burnt to death yathiraj or myself or anybody who watches that scene cant have a good sleep for nights.

what i think most important is the way this blog(idlyvadai) is acting as if it cares very much for the wellbeing of muslim women. i am sure (for that matter most people who follows the blog) that these blog owners dont care a thing about these ladies. they are just happy that they have an issue to criticize the muslim society.
if only such cruel laws are abolished the first persons to worry about these would be RSS,VHP and Idlyvadai kind of guys. because they are losing out on issues on which they can make fun of muslims and also they can fan the hatred against muslims. if somebody is advising with the real intention of well being will always welcome and it will be accepted. but the hanuman who wrote this review doesnt seems to be of that kind (and he also very well know that). after all change is the only truth in life.
As somebody pointed out in the comments section its surprising that idlyvadai is so much concerned about muslim women these days!! article after article, review after review is only about muslims. well. i am not sure whether they care about the muslims or not. but i am sure that they know how to increase the hits to the site. certainly an article like this spreads like wild fire and brings new visitors. all the best.

நொந்து நூடுல்ஸான லூசாகா பையன் said...

சென்ஸார் சர்டிபிகேட் முடிந்தவுடன் தொடங்கும் இந்த கொலை வெறி.

குத்தாட்டம், பஞ்ச் டயலாக், டிஷ்யூம் டிஷ்யூம் எல்லாம்.

நீங்க சொன்னது டெரர்ன்னா இது டெரிபிக் டெரர்.

இத செய்ய விஜய், அஜித்ன்னு ஒரு பட்டாளமே இருக்கே, அது பத்தி இட்லி வடை சொல்லுங்கோ.

Anony8 said...

@khaleel
u r proving once again, itz impossible to have a meaningful discussion/debate with a Muslim.
You already can see lots of comments about Sati and the Hindus' ability to counter and eliminate the menace. But still u r taking a blunted weapon to defend the indefendable crimes, which are institutionalized in Muslim countries even today.

and btw, all the Sati's happening in UP and Nepal are purely voluntary, which shud also be eliminated. didn't u get that important info by googling it???

Anonymous said...

//////////what i think most important is the way this blog(idlyvadai) is acting as if it cares very much for the wellbeing of muslim women. i am sure (for that matter most people who follows the blog) that these blog owners dont care a thing about these ladies. they are just happy that they have an issue to criticize the muslim society./////

Wow Mr Khaleel, as if idlyvadai doesnt have any other job to do.

///after all change is the only truth in life.///

Even we hope one day ppl of ur kind wil change..but dono how long wil tat take and for wat cost..????

**Citizen**

கும்மி said...

Anony8 said...
//and btw, all the Sati's happening in UP and Nepal are purely voluntary, which shud also be eliminated//

தன்னிச்சையாய் நடைபெறும் அந்த தவறைத் தடுக்க இந்து மத அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன அன்பரே? மதத்தின் பெயரால் நடக்கும் எந்த தவறுமே ஏற்புடையது அல்ல என்றே எண்ணுகின்றேன்!

ஜெயக்குமார் said...

//மதத்தின் பெயரால் நடக்கும் எந்த தவறுமே ஏற்புடையது அல்ல என்றே எண்ணுகின்றேன்//

மிகச் சரி.

Sam said...

How muslims in Yemen and Iran want the law to allow marrying a 9 yr old girl..

http://www.jihadwatch.org/2010/03/tarek-fatah-call-your-office-muslim-leaders-in-yemen-say-those-who-support-ban-on-child-marriage-are.html

Article 1041 of the Civil Code of the Islamic Republic of Iran states that girls can be engaged before the age of nine, and married at nine: “Marriage before puberty (nine full lunar years for girls) is prohibited. Marriage contracted before reaching puberty with the permission of the guardian is valid provided that the interests of the ward are duly observed.”

The Ayatollah Khomeini himself married a ten-year-old girl when he was twenty-eight. Khomeini called marriage to a prepubescent girl “a divine blessing,” and advised the faithful: “Do your best to ensure that your daughters do not see their first blood in your house.”

khaleel said...

i am happy when i am right about people. this article is a classic case of wolf crying for the lamb.

@anonymous - do you think that muslims like to kill their own women then?
i have already told that this a cruel punishment and inhuman. having said that it is very much exaggerated in the movie and in the review. it has happened over 25 yrs back. muslims dont have to do anything on this now. bcos it doesnt happen in most muslims areas but may happen only in taliban controlled areas and not in iran.

sati is very much happening in UP and god only knows whether its voluntary or by force!!! (even voluntary is quite disgusting) and may be the sangh parivar can do something to stop the socalled ' voluntary' satis instead of worrying about an incident happened in iran 25 yrs back. very recently some guy in pakistan has killed both his daughters by a sharp knife as offering to kali. (check TOI)if you have to take a movie on this the whole scene will give only sleepless nights. unlike us who have no control over taliban's activities you and the sangh parivar can do something about sati or offering of children to gods. after all its happening in main land hindu area.


and look - i dont want to drag this discussion in to hindus vs muslims conflict (i have very good hindu friends personally and i find it disgusting to enter into such an argument)

what other meaningful discussion you want?

ya. you are correct. this blog doesnt have any other job to do other than fanning the hatred.

and you once again prove that no matter what explanation is given, you and your sangh parivar team are never going to come out of your complex (inferiority or superiority). you are no different from taliban. same ideology . same mindset.

Anonymous said...

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்"

I hope the vice versa is also true!

"பூணும்
நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப்போந்து
நிற்பது தாய் சிவ சக்தியாம்"

When will the chauvinistic male society realize this??

Sreenivasan said...

islam does not talk of universal brotherhood .its brotherhood encompasses only muslims
- Dr. B.R.Ambedkar.

அது என்ன அமைதி மார்க்கம். அவங்க கருத்துக்கு உடன்பாடாத ஆட்களை மயான அமைதிபடுதுரதால அப்படி சொல்லிகுவாங்க்களோ.

சீனு said...

//அது என்ன அமைதி மார்க்கம். அவங்க கருத்துக்கு உடன்பாடாத ஆட்களை மயான அமைதிபடுதுரதால அப்படி சொல்லிகுவாங்க்களோ.//

அப்ப மயான அமைதி மார்க்கம்னு சொல்லலாமா?

அரவிந்தன் நீலகண்டன் said...

//தன்னிச்சையாய் நடைபெறும் அந்த தவறைத் தடுக்க இந்து மத அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன அன்பரே//

அதுதான...இந்த சாரதா சட்டம் இல்லீங்கண்ணா சாரதா சட்டம். அத கொண்டாந்தது ஆருன்னு நெனைக்கீய?

காழியன் said...

//கல்லால் எறிந்து கொள்வது என்று பைபிலிலும் தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் லாவகமாக மனிதனால் பைபிள் மாற்றப்பட்டது என்பதுதான் உண்மை//

இது நல்ல விஷயம்தானே? இல்லை என்றால் இன்றைய கிருத்தவனும் சக மனிதனை கல்லால் அடித்துகொண்டிருப்பான். காலத்துக்கு ஏற்றார் போல் மனிதன் மாற வேண்டும்.

Anonymous said...

Even if Sati is being practiced in isolated place; for not practicing it ,no Hindu group issues fatwa or demand the non compliance be dealt with death penalty. The practice is barbaric & hence most of the people have given it up like so many other practices that have been found to be not correct socially.
Hinduism has come a long way by rediscovering & reforming itself from within. This doesnot mean that it has perfected itself but has to do a lot more & it will definitely do it once all of them if not most of them get educated. The same cannot be said of other religions

கிரி said...

இட்லிவடை இன்று தான் படம் பார்த்தேன்.. சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

எனக்கு கடைசியில் அந்த ஜர்னலிஸ்ட் தப்பித்து செல்லும் காட்சி The Lost king of scotland படத்தின் இறுதி காட்சியை நினைவு படுத்தியது. அதிலும் இதைப்போலவே இருக்கும் ஆனால் இதை விட பரபரப்பாக.