பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 23, 2010

FLASH:குமுதம் எம்.டி. கைது

குமுதம் - என்ன நடந்தது

சில மணி நேரம் முன்பு குமுதம் இதழ் மேனேஜிங் டைரக்டர் வரதராஜன் கைது என்று சன் டிவியில் ஃபிளாஷ் நியூஸ் ( தற்போது நிபந்தனை ஜாமீன், நாளை காலை திரும்பும் ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள். கடைசித் தகவல்: ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனை ரகசிய இடத்துக்குப் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனராம்).

இந்த பிரச்சனை என்ன என்று தெரிந்துக்கொள்ள எஸ்.ஏ.பி க்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.

குமுதம் நிறுவன முதல் ஆசிரியர் எஸ்.ஏ.பியும், பதிப்பாளர் பார்த்தசாரதியும் நல்ல நண்பர்கள். அவர்களை போலவே அவர்கள் பிள்ளைகளும் - ஜவஹர் பழனியப்பன், மற்றும் வரதராஜன். பழனியப்பன் அமெரிக்காவில் பிரபல மருத்துவர். அவருக்கு குமுதத்தில் கிடைக்கும் வருமானம் பாக்கெட் மணி போன்றது. ஆனால் அவர் அப்பா நேசித்த பத்திரிக்கையை இவரும் நேசித்தார். அதை நடத்தும் முழு பொறுப்பும் தன் உற்ற நண்பர் வரதராஜனிடம் கொடுத்து வைத்தார்.

வரதராஜன் நாம் தான் குமுதத்தை முழுவதும் கவனித்துக்கொள்ளுகிறோம். இவர் வருடத்துக்கு ஒரு முறை இந்தியா வருகிறார் என்று அதை முழுவதும் அபகரிக்கப் பார்த்தார். இது ஜவஹருக்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர் தங்கை கிருஷ்ணா சிதம்பரம் குமுதத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் வந்த சில நாட்களிலேயே அவரை வரதராஜன் விரட்டினார் என்று சொல்லப்படுகிறது. இவரையே இப்படி விரட்டினால், மற்றவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள்.

சரி, இப்போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். நித்தியானந்தா மாட்டிய போது குமுதம் மற்ற பத்திரிக்கையைவிட இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்தது. ஜவஹர் மற்றும் அவரது தாயார் நித்தியானந்தாவின் பக்தர்கள். அதனால் வரதராஜன் ஜஹவரை வெறுப்பேத்த இதைச் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

இதை தொடர்ந்து ஜவஹர் பழனியப்பனுக்கு ‘வேண்டபட்ட ஆள்’ என்று அவர் நினைத்த குமுதம் ஊழியர்கள் பலருக்கு டார்ச்சர் கொடுக்க துவங்கினார். கொஞ்ச நாள் முன்னால் பா.ராகவன் எழுதிய தொடர் சொக்கன் எழுதிய தொடர் இரண்டும் ரிப்போர்ட்டரில் தீடீர் என்று நிறுத்தப்பட்டது நினைவிருக்கும். அப்படி நிறுத்திய போது பல வெளியூர்களில் தொடரும் என்று இருந்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் முற்றும்!. இதுவும் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்று பேசிக்கொண்டனர்.

திருவேங்கிமலை சரவணன் ஜவஹர் குருப் என்று நினைத்து அவர் மீது பாலியல் குற்றசாட்டை பதிவு செய்தார் என்று சொல்லுகிறார்கள். இதற்கு அப்பறம் திருவேங்கிமலை சரவணன் வரதராஜனின் மீது பல குற்றசாட்டுக்களை பதிவு செய்தார். இது வெளியே வரவில்லை. அதனால் இன்று தன்னை வரதராஜன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திருவேங்கிட சரவணன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் வரதராஜன் தான் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் இன்று ஜஹவர் கேஸ் பதிவு செய்ய இத்தனை டிராமாவும் நடந்திருக்கு. இந்த விளையாட்டில் பல கோடிப் பணம் கையாடல் நடந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

முதல்வர் இந்த வழக்கின்மீது தனி அக்கறை செலுத்துவார் என்று நம்பலாம்.

- குமுதம் ரிப்போட்

நியூஸ்

தினமலர் : நிதி முறைகேடு செய்ததாக வந்த குற்றசாட்டின் பேரில் குமுதம் வாரஇதழின் பதிப்பாசிரியர் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.குமுதம் வார இதழின் பதிப்பாசிரியராக இருப்பவர் வரதராஜன். இவர் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக குமுதம் இதழின் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வரதராஜன் மீது 323, 344, 341, 342, 365, 307, 25(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது விசாரித்தனர். பின்னர் வரதராஜன் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


குழுமத்தின் குழுவின் எம்.டி வரதராஜன் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமுதம் குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜவஹர் பழனியப்பனுக்கும், வரதராஜனுக்கும் இடையிலான பிரச்சனையே இந்த ‘திடீர்’ நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன் குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான சிநேகிதி இதழின் ஆசிரியர் லோகநாயகி, சக ஊழயரான திருவேங்கிட சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கே சென்று பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் அளித்துள்ளார்.

அது தொடர்பாக குமுதம் அலுவலகத்திற்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். இன்றும் அவ்வாறு வந்த காவல் துறையினருடன் குமுதம் குழுமத் தலைவர் வரதராஜன் பேசியுள்ளார். பிறகு அவர்களோடு கீழிறங்கிவந்து புறப்படும் போதுதான் அவரை காவல் துறையினர் ஏது ஒரு காரணத்தையும் தெரிவிக்காமல் ‘அழைத்து’ச் சென்றுள்ளனர்.

இன்று தன்னை வரதராஜன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திருவேங்கிட சரவணனை அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


27 Comments:

kggouthaman said...

Very unfortunate situation for a mag like Kumudam. Some powerplay surfacing?

அமுதப்ரியன் said...

எங்கெல்லாம் கோடிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கேடிகள் இருப்பார்கள் போல..

அமுதப்ரியன்

அப்பாதுரை said...

எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது, என்றாலும் வருத்தமான செய்தி.

Anonymous said...

ivlo kevalamanaa pathiva kumuthathula kooda padika mudiyaathu

Anonymous said...

அன்று சுஜாதா போன்றவர்களால் வளர்க்கப்பட்ட குமுதம்!
இன்று:
எப்படியிருந்த குமுதம் !இப்படி(ஆய்)யாயிடுத்தே

Anonymous said...

மிக நல்ல செய்தி இந்த மஞ்சள் பத்திரிகை இழுத்து மூடப் படுமானால் தமிழர்களுக்கு ஒரு சின்ன விடிவு காலம். அதே போல மற்றொரு மஞ்சள் பத்திரிகையான விகடன் அடித்துக் கொண்டு மூடப் போகும் நாளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

vaayu said...

சாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்?!?!

அமைதி அப்பா said...

சொல்வதற்கு ஒன்றுமில்லை...!

ஸ்ரீராம். said...

அரசியலும், ஆக்கிரமிப்பும் இல்லாத இடமே இல்லை போல...நட்பின் மரணம்..

kggouthaman said...

குமுதம் நிகழ்வுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இட்லிவடை வாசகர்கள்,
டா டா ஸ்கை நிறுவனத்தின் எதேச்சதிகாரப் போக்கை எப்படி திருத்துவது என்று யோசனை கூறுங்கள்.
முன்பு பொதிகை ஒரு தனி சானலாக வந்துகொண்டு இருந்தது.
பிறகு அதை ஆக்டிவ் தூர்தர்ஷன் சானலுக்கு மாற்றினார்கள்.
நான்கு நாட்களுக்கு முன்னாள் ஆக்டிவ் தூர்தர்ஷன் - வரவே இல்லை. பிறகு, நேற்று அது ஆக்டிவ் ஸ்டார் நியூஸ் ஆனது. இன்று மறுபடியும், ஆக்டிவ் தூர்தர்ஷன் வருகிறது.
நெட் ரிசல்ட் - வேளுக்குடி கிருஷ்ணனின் 'கண்ணனின் கதையமுது' இரண்டு மூன்று பகுதிகள் பார்க்கமுடியவில்லை.
டா டா ஸ்கை ஏன் இப்படி வாடிக்கையாளர் அதிருப்தியை அடிக்கடி சம்பாதிக்கிறது?

jaisankar jaganathan said...

//சாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்?!?!
//
சாருவோட ராசி கலக்குது. உங்க வீட்டுக்கு அவர் வராம பாத்துக்குங்க

jaisankar jaganathan said...

//சாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்?!?!
//
சாருவோட ராசி கலக்குது. உங்க வீட்டுக்கு அவர் வராம பாத்துக்குங்க

jaisankar jaganathan said...

//சாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்?!?!
//
சாருவோட ராசி கலக்குது. உங்க வீட்டுக்கு அவர் வராம பாத்துக்குங்க

Anonymous said...

I understand why IV has a vested interest in this issue.As Varadarajn stopped serials written by Pa.Ra and Chokkan IV is unduly happy with this arrest. But who knows, at some point the foes today may become friends again. For Jawahar more than the money it is prestige that matters.He wont allow the magazine founded by his father to be wound up.As a compromise he might agree that some persons not in the good books of Varadarajan will not be allowed to write or work in Kumudam group.
So IV dont be unduly happy.This may not be the end for Varadarajan in Kumudam.

Anonymous said...

'முதல்வர் இந்த வழக்கின்மீது தனி அக்கறை செலுத்துவார் என்று நம்பலாம்.'

We noticed that IV's notorious Manjal Comment is missing in this.
Why?. Does IV has some faith in CM now.This is not a public issue.It is an issue between two individuals and their business.Why should CM show any interest in this.Perhaps IV thinks that this is an important issue for Pa.Raghavan and Chokkan and hence a public issue.I wont be surprised if IV suddenly becomes friendly towards DMK or stops criticising CM and DMK.

Anonymous said...

இதெல்லாம் முன்பே எதிர்பார்த்ததுதான். எங்கோ உட்கார்ந்து கொண்டு ஒரு பெரிய பத்திரிகையின் பொறுப்பை நண்பராகவே இருந்தாலும் நம்பி விட்டால் இப்படித்தான். சில ஆண்டுகளுக்கு முன்னரே பிரச்சனை வெடித்தது. ஆச்சி தலையீட்டால் சமாதானமானது. இப்போது வெளியே வந்திருக்கிறது. ஆனால் இதுமாதிரி என்றாவது ஒருநாள் பிரச்சனை வரும் என்பது குமுதத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

சீக்கிரமே புல்லுருவிகள் அகற்றப்பட்டு தரமான முறையில் ’ஜங்ஷன்’ பாணியில் இதழ் வெளிவர ’அனந்தரை’ பிரார்த்திக்கிறேன்.

கானாடுகாத்தான் கண்ணாயிரம்

ஜெயக்குமார் said...

குமுதம் மூடப்படுவதால் தமிழ்நாட்டின் நடுத்தர மக்களுக்கு மிகநல்லது.. பர்சுக்கும், மனசுக்கும்.. இதைவிட மோசமாக மஞ்சள் பத்திரிக்கையைக் கூட நடத்த முடியாது.. அவ்வளவு மட்டம்..போய்த்தொலையட்டும்

பார்வையாளன் said...

இந்த உட்கட்சி போராட்டம்தான், மாலன் அங்கிரிந்து வெளியேற காரணமா ?

Anonymous said...

Mathi's cartoon is in bad taste and racist. Kindly remove or change it..

Anonymous said...

idhil yarum mahilshi adaya mudiyadhu.SAP yum Parthasarathiyum uyir nanbargal.KOPERNCHOLAN&PISIRANTHAYAR mathiri.Avargal Natpukku oru illakkanam.Avargal pillaigal sandai poduvathil kulir kayvathu pavam.Ippodhu manjal pathrikai yendru solbavargal ethnaimurai porattam nadathhinargal.Oru periya pathrikaikku indha pinnadaivu varundhathakkudhu. kumudham definitely was milestone in Tamil journalism.one cant ignore that.it was Kumudham and Thinathanthi which created a reader base in Tamilnadu.One cant wish it away.Kumudham has mothered several good authorsINCLUDING Sujatha.Let us all wish for its well being..

Ravi said...

It is not an internal war, possibly an external attack.

There is a general rumour that Vikatan group was bought over by Arkat veerasamy (binamy of MK) and Vikatan Bala and Srinivasan are binamies of him.

My feeling is that MK or Sun TV would have tried to buy over Kumudam and possibly negotiating with Mr. Jawahar Palaniappan with a huge sum with external payment. But would continue in Jawahar's name.

THis could have caused all rift between Varatharajan and Jawahar.

By taking over Kumudam, MK would have full control over Tamil media.

This is purely a media capturing war.

Wait and see what happens.

அரவிந்தன் நீலகண்டன் said...

குமுதம் ஜோதிடத்துல இத ஏஎமார் முன்னமே சொல்லலையா?

Anonymous said...

குமுதம் சர்ச்சையின் பிண்ணனியில் சர்ச் என்று தமிழ்ஹிந்துவில் ஸ்டோரி எதிர்பார்க்கலாம் :).

Anonymous said...

பழனியப்பன் அமெரிக்காவில் பிரபல மருத்துவர். அவருக்கு குமுதத்தில் கிடைக்கும் வருமானம் பாக்கெட் மணி போன்றது.

" IDLY ANNA...Dr.Palaniappan is a Nuclear Cardiologist in states. He may earn 300k to 400k per annum, after 45 % tax cut, anna u calculate his take away income.

He is a upper middle class in states and WHAT HE EARNS IN STATES IS HIS POCKET MONEY.

Annaji, you are weak in economics. Our people mindset is whoever works in states are millionaire's.

INCOME FROM KUMUDHAM IS NOT A POCKET MONEY FOR HIM...

**********MURALI FROM STATES****8

Anonymous said...

//கொஞ்ச நாள் முன்னால் பா.ராகவன் எழுதிய தொடர் சொக்கன் எழுதிய தொடர் இரண்டும் ரிப்போர்ட்டரில் தீடீர் என்று நிறுத்தப்பட்டது நினைவிருக்கும். அப்படி நிறுத்திய போது பல வெளியூர்களில் தொடரும் என்று இருந்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் முற்றும்!. இதுவும் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்று பேசிக்கொண்டனர்.//

ஹி...ஹி... ரொம்ப காமெடியாக இருக்கிறது நீங்கள் சொல்வது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் ஐயா, முடிச்சுப் போடுகிறீர்? ராகவன், சொக்கனின் தொடர் நிறுத்தப்பட்டதற்குக் காரணம், அது சுவாரஸ்யமில்லாமல் பக்கங்களை நிரப்புவதாய் இருந்ததும், வேறு ஒரு க்ரைம் தொடரை ஆரம்பிக்க எண்ணம் இருந்ததும்தான். வெளியூர செல்லும் இதழ்கள எல்லாம் முன்னமேயே பிரிண்ட் ஆகிப் போய் விடும் என்பது உமக்குத தெரியாதா? இதற்கும் குமுதத்தின் தற்போதைய பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமுமில்லை ஐயா...

முதல் காரணம் ஸ்டாலினின் பேட்டி சென்னை இதழ்களில் மட்டுமே வெளியாகி, தமிழகம் முழுமையும் வெளியாகாமல் இருந்ததுதான். பேட்டி எடுத்தவருக்கு அது கோபத்தைத் தந்து இந்த அளவிற்கு பிரச்சனையாகி விட்டது. இரண்டாவது திருவேங்கிமலை சரவணனை ரொம்ப சாதாரணமான ஆளாய் நினைத்தது. அவர் யாருக்கு நெருக்கமானவர் என்பது பத்திரிகை உலகிற்கே தெரிந்த விஷயம். அவர் எழுதிய தொடரை நிறுத்தினால்.... அவர் மீது போய் புகார் அளித்தால்....

இதுதவிர தவிர சில உட்கட்சிக் குழப்பங்கள், கோஷ்டி மோதல்கள் எல்லாமும் தான் இப்போதைய பிரச்சனைகளுக்குக் காரணம். இவை வெகு விரைவிலேயே தீர்க்கப்பட இருக்கின்றன. முதல்வரும் ஓகே சொல்லி விட்டார். ஆகையால கவலைப்பட வேண்டாம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் இருக்கிறது உங்கள் செயல். வாழ்க வளமுடன் நீவிர்!

- கோயிஞ்சாமி கோபாலபுரம்

சுழியம் said...

//குமுதம் ஜோதிடத்துல இத ஏஎமார் முன்னமே சொல்லலையா?//

இல்லையாம்.

”குமுதம் ஜோதிடம்” இதழுக்கு ஒரு போஸ்ட் கார்டில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஜாதங்களோடு, கேள்வி கேட்டால் பதில் சொல்லி இருப்பார்.

குமுதம் குழுமத்தில் இருந்து வருகிற ஒரே ஒரு நல்ல பத்திரிக்கை “குமுதம் ஜோதிடம்” மட்டுமே. சாதி, மதம், வயது வித்தியாசங்கள் இல்லாமல் அனைவரும் படிக்கும் இதழ்.

அது மட்டும் நல்லபடியாக வெளிவர ஆசைப்படுபவர்கள் தமிழ்நாட்டில் அனேகம்.

இப்படிக்கு,
ஏ எம் ஆர் ரசிகர் மன்றத் தலைவர்,
கன்னியாகுமரி கிளை.

Ravi kumar Karunanithi said...

// எங்கெல்லாம் கோடிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கேடிகள் இருப்பார்கள் //

this line is maybe true