பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 20, 2010

மேனேஜ்மெண்ட் குரு சி.கே.பிரஹலாத்

உலகின் மிக முக்கியமான நிர்வாகச் சிந்தனையாளர்களில் ஒருவரான சி.கே.பிரஹலாத் உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 68.

சி.கே.பிரஹலாத் தனது கடைசி காலத்தில் மனைவி காயத்ரி, மகன் முரளி, மகள் தீபாவுடன் வாழ்ந்து வந்தார்.

கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரஹலாத். உலக அளவில் நிர்வாகச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவர். 1941 ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை - லயோலா கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் படித்த அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் நிர்வாகவியல் படித்தார். பின்னர், பாஸ்டனிலுள்ள ஹாவர்ட் பிஸினஸ் ஸ்கூலில்1975 ஆம் ஆண்டு டி.பி.ஏ. (Doctor of Business Administration) பட்டம் பெற்றார்.

பின்னர் இந்தியா திரும்பியவர், அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் 1976-77 வரை பேராசிரியராக பணியாற்றினார். மிச்சிகனில் உள்ள ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாகவியல் பேராசிரியராக பல ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார்.

நிர்வாகவியல் குறித்து பயனுள்ள புத்தகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். நிர்வாகவியல் குறித்த இவரது கருத்தரங்குகளும், உரைகளும் ஆர்வத்தைத் தூண்டவல்லவை.

கடந்த 2009 -ம் ஆண்டில் பிரவேசி பாரதிய சாம்னம் விருதையும், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பதம பூஷன் விருதையும் பெற்றவர். கடந்த ஆண்டு 'தி டைம்ஸ்' இதழ் வெளியிட்ட உலகின் 50 பிஸினஸ் சிந்தனையாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றது சிறப்புக்குரியது.

மேனேஜ்மெண்ட் குரு...

உலகின் மிக முக்கியமான நிர்வாகச் சிந்தனையாளர்களில் முதலிடத்தைப் பெற்றவர் சி.கே.பிரஹலாத். உலக அளவில் உள்ள நிர்வாகப் பேராசிரியர்கள் இவரை 'மேனேஜ்மென்ட் குரு' என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. வியாபாரம் என்பதற்கு புது இலக்கை நிர்ணயித்தவர் இவர்தான். அவரது கருத்தின்படி, வியாபாரம் என்பது பணம் படைத்த சிலரை மட்டுமே மனதில் கொண்டு செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. பெரும்பாலான ஏழை மக்களைக் குறிவைத்து நடத்தப்படுவதாக இருக்கவேண்டும். 'பாட்டம் ஆஃப் த பிரமிட்' என்று இதைக் குறிப்பிடுகிறார்.

இந்த நோக்கில் பிஸினஸ் நிறுவனங்கள் யோசிக்க ஆரம்பித்த பிறகு, விற்பனை பல மடங்காகப் பெருகியது. ஒரு கிலோ பாக்கெட் வெண்ணெய்க்குப் பதிலாக 100 கிராம் பாக்கெட் வெண்ணெய் மார்க்கெட்டுக்கு வருவதும் 20 லட்ச ரூபாய் காருக்குப் பதிலாக ஒரு லட்ச ரூபாய் நானோ கார் விற்பனைக்கு வருவதும் பிரஹலாத்தின் புதிய சிந்தனையால் ஏற்பட்ட தாக்கம்தான்.

இந்தியாவில் பஸ் போகாத இடத்துக்குக்கூட செல்போன்கள் நிறுவனங்கள் செல்ல முடிந்ததற்குக் காரணம் பிரஹலாத்தின் புதிய சிந்தனையே!
( நன்றி: விகடன் )

கொஞ்சம் தொடர்புடைய பதிவு

5 Comments:

பிரகாஷ் said...

நம் காலத்தின் மிகப் பெரிய நிர்வாகவியல் நிபுணரை, புதிய சிந்தனையாளரை நாம் இழந்து விட்டோம்.

கேரி ஹேமல் உடன் இவர் எழுதிய
"Competing For The Future" என்கிற புத்தகம் Strategy பற்றிய ஒரு புத்தம் புதிய பார்வையை, இதற்கு முன் யாரும் சிந்தித்திராத ஒரு அணுகுமுறையை இந்த உலகிற்குத் தந்தது.

இவர் Core Competency,
Strategic Intent,
looking to Next Practices (as opposed to Best Practice),
Co Creation and
Fortune at the Bottom of the Pyramid
போன்ற பல புதிய கருத்தாக்கங்களை அளித்துள்ளார்.

தனது India@75 என்கிற கட்டுரையில் இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தில் (2022-ஆம் ஆண்டில்) ஒரு பொருளாதார வல்லரசாக உருவாக அத்தியாவசியமான 6 முக்கிய வழிமுறைகளைக் கூறிய பிரகலாத் அந்த நாளைப் பார்க்கும் முன்பே நம்மை விட்டு மறைந்தது வருந்தத் தக்கது.

Anonymous said...

Starting from nano cars,Pure-it water purifier...wheel washing powder....
All small Shampoo Sachs pockets...
Which and all useful for the common man is because of His visionary thinking...

சாதாரண கிராமத்தான் said...

அவர் ஒரு சிறந்த நிர்வாக சிந்தனையாளராக இருக்கலாம். ஆனால் அவரின் திறமை இந்தியாவுக்கு ஒரு ஆண்டுதான் பயன்பட்டது எனும்போது வருத்தமாக இருக்கிறது. எதனால் இப்படி ஆகிறது என்பதற்கு ஒரு தீர்வு சீக்கிரம் வர வேண்டும். மேலும் அணைத்து தேர்வுகளும் திறமை அடிப்படையில் இருக்க வேண்டும். இட்லி management படிபதருக்கு எவ்ளவு செலவு ஆகும்? அரசு நடத்தும் management schools எவ்ளவு இருக்கிறது?

சாதாரண கிராமத்தான் said...

அவர் ஒரு சிறந்த நிர்வாக சிந்தனையாளராக இருக்கலாம். ஆனால் அவரின் திறமை இந்தியாவுக்கு ஒரு ஆண்டுதான் பயன்பட்டது எனும்போது வருத்தமாக இருக்கிறது. எதனால் இப்படி ஆகிறது என்பதற்கு ஒரு தீர்வு சீக்கிரம் வர வேண்டும். மேலும் அணைத்து தேர்வுகளும் திறமை அடிப்படையில் இருக்க வேண்டும். இட்லி management படிபதருக்கு எவ்ளவு செலவு ஆகும்? அரசு நடத்தும் management schools எவ்ளவு இருக்கிறது?

kggouthaman said...

'எங்கள்' ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.