பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 14, 2010

எது தமிழ் புத்தாண்டு ?

திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் தான் தமிழ் புத்தாண்டா ? அல்லது சித்திரை மாதம் துவக்கம் தான் தமிழ் புத்தாண்டா ? என்று சிலர் குழம்பி மற்றவர்களையும் குழப்பியுள்ளார்கள்.

வாழ்த்து சொல்லிப்பாருங்க அவர்களின் கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும் என்று வேற விளக்கியுள்ளார்கள். சரி.


இன்று வந்த சில தலைப்பு செய்திகளை பார்த்தால் தெரியும் யாருக்கு எந்த கொள்கை என்று.

தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து - தினமணி
தலைவர்கள் சித்திரை திருநாள் வாழ்த்து - தினத்தந்தி
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு - தினமலர்


மற்ற பத்திரிகைகள் என்ன தலைப்பு என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கலைஞர் மாற்றிவிட்டார் என்பதால் தமிழ் புத்தாண்டு சித்திரை புத்தாண்டாகிவிடுமா ? கலைஞர் தன்னுடைய பிறந்த தேதியை எப்படி மற்ற முடியாதோ அதே போல தான் தமிழ் புத்தாண்டை மற்ற முடியாது. சித்திரை தமிழ் புத்தாண்டு என்பது ஹிந்து மக்களின் நம்பிக்கை.

திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் தான் தமிழ் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்றால் செம்மொழி தமிழ் புத்தாண்டு என்று மாற்றிக்கொள்ளுங்கள். யார் கேட்கப்போகிறார்கள் ? சித்திரை மாதம் பிறக்கும் தமிழ் புத்தாண்டை மற்ற மதத்தினரும் கொண்டாடினால், நிச்சயம் கலைஞர் அதை மாற்றியிருக்க மாட்டார்.

எதுக்கு வம்பு என்று இரண்டையும் கொண்டாடலாம் என்று புத்திசாலியாக நினைப்பவர்கள், எனக்கு இரண்டு பிறந்த நாள் என்பது போல மடத்தனம். அப்படியே கொண்டாடினாலும், விலைவாசி ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் காய்கறி, பழம் எல்லாம் இரவோடு இரவாக ஸ்டாக் செய்து வைத்தால் இன்னும் விலை ஏறிவிடாதா ? அது கூட பரவாயில்லை காலையில் எழுந்து முகம் பார்க்கும் கண்ணாடியில் நாலும் கிழமையுமா பார்த்துக்கொண்டு இருந்தால் நல்லாவா இருக்கு ?

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு பிறகு தோனி இவ்வாறு பேசினார் "சென்னை மக்கள் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். முதலாவது சீசனில் நான் பைக்கில் வலம் வந்தேன். அப்போது சிக்னலில் நின்ற போது நிறைய பேர் என்னிடம் ஆர்வமாக தமிழில் பேசினார்கள். இதனால் நான் சென்னை காரனாகவே மாறி வருகிறேன். ரசிகர்கள் எல்லோருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'என்றார்.

இதை கலைஞர் கேட்டுக்கொண்டு இருந்தார்.விஷு என்று அழைக்கப்படும் மலையாள புத்தாண்டை மலையாளிகள் ஏப்ரல் 14-ந் தேதி சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அவர்களை பார்க்கும் போது மணிரத்தினம்பாலசந்தரின் அழகன் படத்தில் ஒரு குழந்தை "நாம வேற வீட்டில பிறந்திருக்கலாம்" என்று சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

எது எப்படியோ எல்லோருக்கும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துகள்.

64 Comments:

kaliraj - Qatar said...

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு,

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

”தை”-யா, சித்திரையா-ன்னு குழப்பம் வேண்டாம். எனக்கு தெரிந்து இலங்கை, மலேசியா,சிங்கை போன்ற நாடுகளில் வாழும் நம் இரத்தங்கள் மஞ்சத்துண்டையெல்லாம் ஒரு பொருட்டாவே ஏத்துக்கொள்வதில்லை.
அவர்கள் நாளைதான் கொண்டாடுகிறார்கள்.

அட இவ்வளவு ஏன்? அவர் வீட்டிலேயே அவர் சொல்லுறத கேக்காம அவரு பொண்டாட்டி பிள்ளைங்க எல்லாம் சாமி கூம்புடுறதும், யாகம் பண்ணுறதுமா திரியுதுக! சமயத்துல அவர் சொல்லுறத அவரே கேட்குறதில்லை.

நாம எதுக்கு கேட்கணுங்கிறேன்............

அதனால மீண்டும்.

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு,

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Nandakumar said...

/*அவர்களை பார்க்கும் போது மணிரத்தினம் படத்தில் ஒரு குழந்தை சொல்லும் "நாம வேற வீட்டில பிறந்திருக்கலாம்" என்று அந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது.*/அது விசு படம் இல்லை.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படம்

Anonymous said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொல்ல இட்லிவடைக்கு பயமா?

Anonymous said...

that's not Manirathnam's film. That's Balachander's. Azhagan.

Rakesh said...

//அவர்களை பார்க்கும் போது மணிரத்தினம் படத்தில் ஒரு குழந்தை சொல்லும் "நாம வேற வீட்டில பிறந்திருக்கலாம்//

அது மணிரத்னம் இல்ல, பாலச்சந்தர் (அழகன்)

Anonymous said...

Adhu mani rathnam padam illa.. Balachandar padam - Azhagan starring Mammootty, Banu priya, Madhu bala and Geetha and kutties..

Anonymous said...

January 1 : English New Year
January 12/13/14/15 : Tamil New Year
April 12/13/14/15 : Hindu New year.

Already we celebrate 2 new years.
No problems..

முகமூடி said...

//மணிரத்தினம் படத்தில் ஒரு குழந்தை சொல்லும் "நாம வேற வீட்டில பிறந்திருக்கலாம்//
நக்கீரன் வேலை - இது பாலசந்தர் படம், அழகன்.

ப்ரியா கதிரவன் said...

முன்/பின்/முக்கிய/ குறிப்பு: நான் கலைஞர் ஆதரவாளரோ, பகுத்தறிவுவாதியோ அல்ல.

'கலைஞர் சொல்லிட்டார்' அப்டிங்கறதுக்காகவே எல்லாத்தையும் எதிர்க்காதீங்க இட்லி.

//விசு என்று அழைக்கப்படும் மலையாள புத்தாண்டை மலையாளிகள் ஏப்ரல் 14-ந் தேதி சிறப்பாக கொண்டாடுகிறார்கள். //

அது தான் இல்லை. இன்று காலை எங்கள் அலுவலகத்தில் கேரள பெண் ஒருவர், ஹிந்து மதத்தை சாராதவர். அவரிடம் விஷு வாழ்த்து சொல்ல போக, அவர் பட்டென்று, "இது ஹிந்துக்களுக்கான பண்டிகை, எங்களுக்கானது அல்ல" என்று போட்டார் ஒரு போடு. மலையாளிகள் கொண்டாடவில்லை. மலையாள ஹிந்துக்கள் மட்டும் தான் கொண்டாடுகிறார்கள்.

தமிழ் நாட்டிலும் சித்திரை முதல் தேதியை ஹிந்துக்கள் மட்டும் தானே புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருக்கிறோம்? "தமிழ் புத்தாண்டு" என்று பெயர் வைத்தோமே தவிர, இது நமக்கு மட்டும் தானே பண்டிகையாக இருந்தது?

தமிழர்கள் எல்லாரும் "religion - no bar" என்று ஒரு நாளை தமிழ் புத்தாண்டு துவக்கமாக கொண்டாடுவது என்பது நல்ல விஷயம் தானே? தமிழ் மறை தந்த வள்ளுவர் ஆண்டின் துவக்கத்தை அப்படி ஒரு நாளாக அறிவித்ததில் என்ன குறை கண்டு விட்டீர்கள்? அதற்காக நம்மை சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடக்கூடாது என்று ஏதும் சட்டம் போட வில்லையே?

அல்லது உங்களுக்கு தை முதல் நாளுக்கு "தமிழ் புத்தாண்டு" என்ற பெயர் வைத்தது மட்டும் தான் பிரச்சனையா?

//எதுக்கு வம்பு என்று இரண்டையும் கொண்டாடலாம் என்று புத்திசாலியாக நினைப்பவர்கள், //
இரண்டு மட்டும் அல்ல, ஆங்கில புத்தாண்டு என்று ஒன்று ஜனவரி முதல் நாள் வருகிறதே, அதையும் சேர்த்து மூன்றாக கொண்டாடுவோம். பண்டிகைகளின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் தான். அதை மடத்தனம் என்றால், அந்த மடத்தனத்தை செய்வதில் தவறென்ன?

ப்ரியா கதிரவன் said...

//எனக்கு இரண்டு பிறந்த நாள் என்பது போல மடத்தனம். //

நீங்கள் கூட வருடா வருடம், நட்சத்திரப்படி ஒரு பிறந்த நாளை கோவிலிலும், ஆங்கில தேதிப்படி ஒரு பிறந்த நாளை நண்பர்களுடனும் கொண்டாடுவதாக கேள்விப்பட்டேன். அப்படியா?

By the way,இட்லிவடைக்கும் இட்லிவடை வாசகர்களுக்கும்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

"படித்துறை" - விரைவில் இசை

உங்கள் ப்ளாக் மேலே இருக்கும் விளம்பரம் சூப்பர்!

இசை: இளையராஜா

பாடாலாசிரியர்கள்:

எஸ்.ராமகிருஷ்ணன்

நாஞ்சில் நாடன்

நா.முத்துக்குமார்

பழனிபாரதி

முத்துலிங்கம்

முன்பு ஜெயமோகன் அவர்களும் பாடல் எழுத இருப்பதாக செய்தி வந்ததே ?

அவர் எழுதவில்லையா ?

இசைஞானியின் இசைத் தாலாட்டை கேட்க ஆர்வமாக இருக்கிறோம்.

" விக்ருதி " தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...!!

மானஸ்தன் said...

இட்லிவடையின் கொபசெ அவர்களே. உங்களின் துடிப்பான கேள்விகள் கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறேன்.

சில கேள்விகள்:
(a) கலைஞருக்கு தை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்ல இப்போதுதான் (போன வருஷம்) ஞானோதயம் வந்ததா? இதுக்கு முன்னாடி எல்லாம் இருந்த போது அவர் ஏப்ரல் 14க்கு வாழ்த்து சொன்னது இல்லையா?

(b) 1993-ல் ஏப்ரலில் ஏன் சன் டிவி தொடங்கினர்? தமிழ் சேனல் தொடங்க அதை விட நல்ல நாள் கிடைக்கவில்லை என்பதாலா? அதை ஏன் தை ஒன்றாம் நாள் செய்து இருக்கலாமே!

(c) இந்த திராவிடக் குஞ்சுகளுக்கு கிறித்துவ அல்லது முஸ்லிம் பண்டிகை நாட்களை மாற்றி அறிவிக்க தைரியம் வருமா?

(d) ஒரு முதலமைச்சர் என்பவர் மக்களால் மக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இதில் அவர் விருப்பு-வெறுப்பு இருக்க கூடாது.
இவரது பல செயல்களும் இந்துக்களின் மனதை பலமுறை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு சின்ன எடுத்துக்காட்டு: கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம்; விடுமுறை தின (விநாயக சதுர்த்தி) சிறப்பு நிகழ்ச்சிகள்.

(e) தன்னிச்சையான இந்த முடிவை எடுப்பதற்கு முன்னாள் மக்களின் ஒப்பினியன் கேட்டாரா? அவர்கள் கொண்டாட வேண்டாம். திணிப்பு ஏன்?

(f) கடைசியாக, சட்டம் போட்டார்களா என்று ஒரு கேள்வி வேறு கேட்டுள்ளீர்கள். சட்டம் போட்டுள்ளனர். மாற்றம் அரசாணை உள்ளது. ஆனாலும் அந்தச் சட்டம் மக்களைக் கட்டுப்படுத்தாது. அவரவர்களுக்கு பிடித்ததை செய்கிறோம், அடுத்தவர்களைப் பாதிக்காதவரை. தயவு செய்து, நம்ம ஊரு அரசியல் வியாதிகள் - முக்கியமாக முன்னுக்கு முரணான திராவிடக் குஞ்சுகள் செயல்களை நியாயப்படுத்ததீர்கள்.

(g) கடைசியாக, பிறந்தநாள் பற்றி இட்லி வடையிடம் பர்சனல் கேள்வி வேறு. அதுக்கு அவர் பதில் சொல்வாரு என்று நம்பறேன். இருந்தாலும், நானும் சொல்லிக்கறேன். பிறந்த நாள் கொண்டாடுவது ஒருவரின் பிறப்புரிமை. பிறந்த நட்சத்திரத்தில் மாசா மாசம் கூடக் கொண்டாடலாம், அது கொண்டாடுபவருக்கு சந்தோஷத்தைத் தரும் என்றால், அடுத்தவர்களை கஷ்டப்படுத்தாது என்றால்.

(f) நான் பொறந்து ஒண்ணும் சாதிக்கவில்லை என்பதால் தமிழோ-ஆங்கிலமோ பிறந்த நாட்கள் கொண்டாடுவது இல்லை.

தங்கள் புரிதலுக்கு நன்றி.

ந.லோகநாதன் said...

Good Article. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சரியா கதிரவன்? said...

//தமிழ் நாட்டிலும் சித்திரை முதல் தேதியை ஹிந்துக்கள் மட்டும் தானே புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருக்கிறோம்? "தமிழ் புத்தாண்டு" என்று பெயர் வைத்தோமே தவிர, இது நமக்கு மட்டும் தானே பண்டிகையாக இருந்தது? தமிழர்கள் எல்லாரும் "religion - no bar" என்று ஒரு நாளை தமிழ் புத்தாண்டு துவக்கமாக கொண்டாடுவது என்பது நல்ல விஷயம் தானே?//

Fantastic. ப்ரியா கதிரவன் புல்லரிக்க வைக்கிறார்.

தமிழர் திருநாள் என்று சொல்லப்பட்டாலும், பல மதத்தினர் குறிப்பாக கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் தமிழர்களுக்கு என 'religion no bar' ஆக ஒரு தமிழர் திருநாள் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இப்படிப் பல திருநாள்களும், விடுமுறைகளும் இருந்தால் நல்லதுதானே? இந்தப் புதிய தமிழர் திருநாளை வேறொரு மாதத்தில் - கார்த்திகையில் வைத்துக் கொள்ளலாம். ஆக, சித்திரை, கார்த்திகை, தை என மூன்று மாதம் மூன்று பண்டிகை. ஹை, ஜாலி!

மாதப் பிறப்புகள் கூட இந்து மதத்தையே அடிப்படையாக வைத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கென்று தனியே காலண்டர் உண்டு. ஆங்கில மாதம் - ஆங்கிலேயர்களுடையது. அதனால் ‘religion no bar' ஆக எல்லா சமயத்துத் தமிழர்களுக்கென்று தனியே மாதங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனாலும் பழைய இந்து மத மாதம், ஆங்கில மாதம், இஸ்லாமிய மாதம், தனித்தமிழர் மாதம் என எல்லாமே இருக்கட்டும். எல்லாவற்றிலும் பண்டிகை கொண்டாடினால் நல்லதுதானே? ஹை ஜாலி!

இவற்றைப் போல ‘religion no bar' தீபாவளி இருந்தால் எல்லா மதத்தினரும் பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். வருடத்துக்கு ரெண்டு தீபாவளி. ஹை ஜாலி!

கருணாகரன் said...

வருடங்கள் எதற்கும் தமிழ் பெயரே இல்லாத போது, இது எப்படி தமிழ் புத்தாண்டாகும்.

மேலும் தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் அல்ல. தமிழ் புத்தாண்டு இந்துக்கள் பண்டிகையும் அல்ல.

ஏற்கனவே தீபாவளி, நவராத்திரி என்று ஏகப்பட்ட சமஸ்கிருத புராண இதிகாச இந்து பண்டிகைகள் இருக்கும் போது தமிழுக்கும் இந்துமத சாயம் பூச முயற்சிக்காதீர்கள்.

தினமணியும் தினமலரும் தமிழ் புத்தாண்டு என்றும் தினதந்தி சித்திரை திருநாள் என்றும் வெளியிடும் அரசியல் தமிழ் கூறும் நல்லுலகு நன்கு அறிந்ததே.

ஹரன்பிரசன்னா said...

கருணாநிதி செய்த அலங்கோலங்களில் முக்கியமானது இந்த மாற்றம். தன் பெயர் நிற்கவேண்டும் என்கிற புகழ் ஆசையில் அவர் செய்தது இது. ஆனால் அவர் காலத்துக்குப் பின் அவரது அறிவிப்பு நீடித்து நிற்கும் எனத் தோன்றவில்லை. ஒரு கட்டத்தில் இது கருணாநிதியின் தலையாய கோமாளித்தனமாகப் பார்க்கப்படும் என்றுதான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் அப்படி நடக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த அரசியலுக்காகவே ஒவ்வொருவரிடமும் வம்படியாக தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லவேண்டியிருக்கிறது. எனக்கு ‘சித்திரை நாள் வாழ்த்துகள்’-என்று வரும் எஸ் எம் எஸ், இமெயிலுக்கெல்லாம் பதிலுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இதுதான் இந்த அறிவிப்பின் மூலம் கருணாநிதி செய்த சாதனை.

ப்ரியா கதிரவன் said...

உள்துறை அமைச்சர் மானஸ்தன் அவர்களே,

தங்கள் கேள்விகள் எல்லாம் கழகத்திடம் கேட்க பட வேண்டியவை.
நான் அந்த லிஸ்டில் இல்லை. எனக்கு இரு புத்தாண்டுகளை கொண்டாடுவதில் பிரச்சனை இல்லை என்றும், இந்த "தமிழ் புத்தாண்டு" "ஹிந்து புத்தாண்டு" அறிவிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றும் தான் சொன்னேன். அதை கொளுத்தி போட்டுவிட்டு ஒருவர் கமென்ட் approve பண்ணிக்கொண்டு இருக்கிறார். அவராவது பிறந்த நாள் குறித்து பதில் சொல்வதாவது...

Guru said...

பண்டிகைகளின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் தான். அதை மடத்தனம் என்றால், அந்த மடத்தனத்தை செய்வதில் தவறென்ன?

Repeattu

kggouthaman said...

கீழ்க்கண்ட விவரங்கள் விக்கிபீடியா வில் உள்ளன.
இட்லி வடை வாசகர்கள் - இதில் உள்ள தகவல்கள் (அந்த அந்த பகுதியில் வசிப்பவர்கள் முக்கியமாக) சொன்னால் உபயோகமாக இருக்கும்.

New Year festivals in South and Southeast Asian cultures:
Assamese New Year, or Rongali Bihu (India's Assam state)
Bengali New Year, or Pohela Boishakh (Bangladesh and India's West Bengal state)
Burmese New Year, or Thingyan (Burma)
Hindu and Sikh New Year, or Vaisakhi (Punjab region)
Khmer New Year, or Chol Chnam Thmey, most commonly celebrated on April 13 (Cambodia)
Lao New Year, or Songkan / Pi Mai Lao, generally celebrated from 13 to 15 April (Laos)
Malayali New Year, or Vishu (India's Kerala state)
Nepali New Year, or Bikram Samwat / Vaishak Ek (Nepal)
Oriya New Year, or Maha Visuba Sankranthi (India's Orissa state)
Sinhalese New Year, or Aluth Avurudhu (Sri Lanka)
Tamil New Year, or Puthandu (India's Tamil Nadu state and Sri Lanka)
Thai New Year, or Songkran, celebrated from 13 to 15 April (Thailand)
Tuluva New Year, or Bisu (India's Karnataka state)

மஞ்சள் ஜட்டி said...

அகாடி..அகாடி... மானஸ்தன் திரும்ப வந்துட்டாரு.. வாங்க அய்யா.. சவுக்கியமா??

அனைத்து இ.வ ரசிகர்களுக்கும், அனானிகளுக்கும், இ.வ எதிர்பாளர்களுக்கும், தலைவர் மு.க விற்கும் சேர்த்து (இன்னா செய்தாரை....) இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

- மஞ்சள் ஜட்டி

jaisankar jaganathan said...

இட்லிவடை கொடநாடுல ரெஸ்ட் எடுக்குறவங்கள பத்தித்தான் கவலைப்படும்போல.பிரியாகதிரவன் இத போய் சீரியஸா எடுத்துக்காதீங்க

Anonymous said...

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் . திருடனா பார்த்து திருந்தாவிட்டா.........

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Rajaboy said...

The year Vikrudhi starts from today only , IF the new year starts from Thai month then the vikrudhi year should start from that month only know, why they didnt change this ?

♥Manny♥ said...

hmm...எது எப்டியோ ஒரு நாள் லீவு விடுறாங்களா, புது படம் ஒன்னு பார்த்தோமா, செட்டில் ஆனோமா-னு இருக்கலாம்.. :)

வலைஞன் said...

பிரியா கதிரவன்,
மு.க வின் நோக்கம் தவறானது.
அதனால்தான் அது எதிர்க்கப்படுகிறது.
ஆனால் அவரால் ஒரு நன்மை.இந்த மாநிலத்தில் முதுகெலும்பில்லாத கோழைகள் யார் என கண்டறிய இது வசதியாக உள்ளது.
The Hindu வை எடுத்துக்கொள்ளுங்கள்.
150 ஆண்டு பாரம்பரியம் மிக்க பத்திரிகை. தமிழ் புத்தாண்டு என்று சொல்லாமல் சித்திரை திருநாள் என்று கூறுகிறது.வெட்கம்.!!
குனியசொன்னால் மண்டியிடும் கும்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

Deepak said...

Muthalla June 3 aa thaan tamizh puthaandaaa arivikkratha irunthucchu....
Paya pullayga thonthravu nala pona poguthunu thai 1 kku vechiruukar...

Atha vidunga....KALAINGAR TVla "Chittirai Muthal Naal Special Nigazhchigallnu" Naal poora kaatnanga... Athe mathiri Vaikasi, AAni, Aadi, Purattasi Muthal Naal Sirappu Nigazchiggal pottanga na nalla irukkum.

Anonymous said...

My Thoughts are ..

(1) None of my Muslim / Christian friends celebrate Pongal ( by making pongal at their home on Pongal Day). They exchange Thamizhar Thirunaal greetings on that day. For them, it is a Hindu festival. Our Hindu saints like Sankaracharyaar Sri Jayendara saraswathi Swamigal never greets us on Thai-1 as "Thamilzhar ThirunaaL VaazhthukkaL".Instead he greets us as Makara Sankaraanthi aasikaL.

(2) As agreed by Tamil Scholors, it had been decided to have ThiruvaLLuvar aandu by adding 31 years to Christian Year. While agreeing to have Thiruvalluvar Aandu, why can not we agree to have Tamil New Year day on Thai-1.

(3)Changes are inevitable. As Mootharignar Rajaji mentioned on one occasion (about his change in a strategic decision)Maangani gives sweet taste when it becomes fruit. You should not question Maa vadu why you were not sweet earlier ?. Similar to that it is unnecessary to question Kalaignar Karunanidhi, why he has not implemented it earlier.

(5) How many of Chennaites made TamilppuththaaNdu feast ( Maankaippachadi, Veppankozhunthu rasam, Aviyal etc) and celebrated real Thamizhppththaandu today. Even most of the chennai thamizhars make cooker pongal on Pongal day. We adjust to that. For instance, by looking at Idly Vadai Mess Cartoon, the banana leaf has been kept in the wrong direction. (The arrow head portion of the leaf should be in the left hand side).

Karunanidhi did not start his Kalignar TV on April-14.

As Priya Kathiravan mentioned , let us not be against whatever Kalaignar Karunanidhi does.


Appreciate all the healthy discussions in Idly Vadai.

Anbudan
Madhavan Nambi

Anonymous said...

why shud a Hindu-Majority India celebrate a Christian New year on Jan 1st.??

Anonymous said...

எஸ். வி. சேகர் இன்று என்ன கொண்டாடுவார்? சித்திரைத் திருநாளா அல்லது தமிழ் புத்தாண்டா?

Erode Nagaraj... said...

இ.வ.விற்கும்(!), நஞ்சென்று ஒதுங்காமல், நச்சென்று பதிலளித்த மானஸ், உங்களுக்கும், பின்னூட்ட நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

ரிஷபன் said...

கொ.ப.செ

வித்தியாசமா எதாவது எழுதனும்னு எழுதனு மாதிரி இருக்கு.

எல்லாம் மலையாளிகளும் அப்படி
கிடையாது. வளைகுடாவில் ”விசு” வை மத வித்தியாசம் பார்க்காது கொண்டாடுவது நிஜம்.

//தமிழ் நாட்டிலும் சித்திரை முதல் தேதியை ஹிந்துக்கள் மட்டும் தானே புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருக்கிறோம்? "தமிழ் புத்தாண்டு" என்று பெயர் வைத்தோமே தவிர, இது நமக்கு மட்டும் தானே பண்டிகையாக இருந்தது?//

புல்லரிக்குது.

அப்ப அது இந்து பண்டிகை இல்லையா ? கலைஞர் கூட இந்த விளக்கம் சொல்லலையே! பேரிலேயே சூரியன் இருக்கு அதனால தானோ என்னவோ

இப்படி ரொம்ப!! நல்லவங்களவே இருந்தா ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்துவ பண்டிகை, ஜனவரில வேண்டாம்னு ஜூனுக்கு மாத்திட போறாங்க.

மானஸ்தன் said...

@madhavan nambi
முதல்ல ஒரு சின்ன சந்தேகம். நீங்க மாதவன் நம்பியா? இல்லை முகவின் தம்பியா? இப்டி அவருக்கு வக்காலத்து வாங்கறீங்க, அதுவும் இந்த வீக்கான கேசுல.

//(1)None of my Muslim / Christian friends celebrate Pongal ( by making pongal at their home on Pongal Day). They exchange Thamizhar Thirunaal greetings on that day. For them, it is a Hindu festival. Our Hindu saints like Sankaracharyaar Sri Jayendara saraswathi Swamigal never greets us on Thai-1 as "Thamilzhar ThirunaaL VaazhthukkaL".Instead he greets us as Makara Sankaraanthi aasikaL.//
சங்கராச்சாரியார் சங்கராந்தி என்று தான் சொல்லுவார் என்று நினைக்கிறேன். மகரம், கும்பம் எல்லாம் நீங்க சேக்காதீங்க. அவர், தை-1 அன்று தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்று சொல்லாததை இவ்வளவு ஊதிப் பெரிசாக்கக் கூடாது. இப்போ பாருங்க, மு.க. அறிவிப்புக்குப் பின்னாடி அவர் முதற்கொண்டு ஒரு கூட்டமே தை-1-ஐ தமிழ் வருஷப் பொறப்பு என்று மாத்தி சொல்லிட்டு இருக்காங்க.

//(2) As agreed by Tamil Scholors, it had been decided to have ThiruvaLLuvar aandu by adding 31 years to Christian Year. While agreeing to have Thiruvalluvar Aandu, why can not we agree to have Tamil New Year day on Thai-1.//

யாருக்கெல்லாம் தேவையோ, அவர்கள் சொல்லிட்டுப் போகட்டும். ஜனவரி, பிப்ரவரி....போல, சித்திரை, வைகாசி...என்றுதான் இன்று வரை உள்ளது. அதனால் தமிழ் புத்தாண்டு சித்திரையில் மட்டுமே. (இதப் படிச்சாங்கன்னா சீக்ரமே, தை,மாசி, பங்குனி.சித்திரை, வைகாசி என்று மாற்ற முயற்சி நடக்கும்)...வரலாறு முக்கியம் அமைச்சரே. :>

//(3)Changes are inevitable. As Mootharignar Rajaji mentioned on one occasion (about his change in a strategic decision)Maangani gives sweet taste when it becomes fruit. You should not question Maa vadu why you were not sweet earlier ?. Similar to that it is unnecessary to question Kalaignar Karunanidhi, why he has not implemented it earlier. //
மாவடு மாங்கனி ஆனால் பரவாயில்லை ஆனால் இங்கே மாங்கனி மாவடு ஆவது தான் பிரச்சனை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

//(5) How many of Chennaites made TamilppuththaaNdu feast ( Maankaippachadi, Veppankozhunthu rasam, Aviyal etc) and celebrated real Thamizhppththaandu today. Even most of the chennai thamizhars make cooker pongal on Pongal day. We adjust to that. For instance, by looking at Idly Vadai Mess Cartoon, the banana leaf has been kept in the wrong direction. (The arrow head portion of the leaf should be in the left hand side).//
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினவர்கள் கண்டிப்பா செய்திருப்பார்கள். எங்க வீட்டுல பண்ணாங்க. அப்டி சில வீடுகளில் பண்ணலைனா இப்போ இருக்கற (காய்கறி) விலைவாசி காரணமா இருக்கும்னு நினைக்கறேன். எதுக்கும் உங்கள் நண்பர்களிடம் விசாரிச்சுப் பாருங்க.

//For instance, by looking at Idly Vadai Mess Cartoon, the banana leaf has been kept in the wrong direction. (The arrow head portion of the leaf should be in the left hand side).//
நீங்க சொல்ற பாயிண்ட் சரி. ஆனா தப்பு இட்லிவடை மேல இல்லை (என் தனிப்பட்ட கருத்து). சாப்பிட உட்கார்ந்தவன் மேல. அந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கணும் சாப்ட. இருந்தாலும் பரிமாறுபவர் அவர் பசி கண்டு போனாப் போறது என்று அப்டியே போட்டுட்டாரு. இதுக்கெல்லாம் நீங்க நக்கீரரா அவதாரம் எடுக்க வேணாம். :>

//Even most of the chennai thamizhars make cooker pongal on Pongal day//.
சென்னை கிராமம் இல்லை. கலைஞர் செய்த மாற்றம் சென்னக்கு மட்டும் இல்லை. (இது புரியறது கொஞ்சம் கஷ்டம், புரியும் வரை மீண்டும் படிக்கவும்) :>

என்ன, பானைல சமையல் செய்து சாப்பிட்டு இருந்தால் "இன்னும் ஹெல்தியா" டிஸ்கஸ் பண்ணி இருக்கலாம்.
இருந்தாலும் உங்களுக்கும் , இட்லிவடைக்கும் இந்த ஹெல்த்தி டிஸ்கஷனுக்கு வாய்ப்புக் குடுத்ததுக்கு நன்றி.

Anonymous said...

ப்ரியா கதிரவன் அவர்களுக்கு, திரு.ராம் அவர்கள், இதை பற்றி விலகி இருக்கிறார் தவு செய்து படிக்கவும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் உள்ளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
http://hayyram.blogspot.com/2008/12/blog-post.html
http://hayyram.blogspot.com/2009/04/blog-post_16.html
http://hayyram.blogspot.com/2009/05/blog-post_3712.html
நன்றி சுவாமி

அமுதப்ரியன் said...

மு.க.வின் இந்த வார நிகழ்ச்சி நிரல்:

ஏப்ரல் 14 - புதன் - அம்பேத்கர் சுடர் விருது - விடுதலை சிறுத்தைகள் விழா

ஏப்ரல் 15 - வியாழன் - காமராஜர் சுடர் விருது - அகில இந்திய நாடார் பேரவை விழா

ஏப்ரல் 16 - வெள்ளி - முத்துஇராமலிங்கத் தேவர் சுடர் விருது - அகில இந்திய தேவர் பேரவை விழா

ஏப்ரல் 17 - சனி - அழகுமுத்துக்கோன் சுடர் விருது - யாதவமகா சபை விழா

ஏப்ரல் 18 - ஞாயிறு - விஸ்வநாததாஸ் சுடர் விருது - அகில இந்திய மருத்துவர்கள் சங்க பேரவை விழா

ஏப்ரல் 19 - திங்கள் - பாரதியார் சுடர் விருது - அகில இந்திய பிராமண சமாஜம் விழா

ஏப்ரல் 20 - செவ்வாய் - (இத்தனை சுடர் விருது வாங்கியதிற்காக) சுடருக்கெல்லாம் சுடர் விருது - திராவிடர் கழ(ல)க விழா (ஏன்னா இன்னிக்கி விடுதலைல போட நியீஸ் ஒண்ணும் இல்லை)

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பாபாபா....இப்பவே கண்ணக் கட்டுதே!!!!

அமுதப்ரியன்.

Anonymous said...

Thanks a lot Maanasthan for a detailsd response.

Anbudan
Madhanvan Nambi

வழிப்போக்கன் said...

விக்ருதி ஆண்டுப் பிறப்பை ஒட்டி, தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏதும் நடத்தக்கூடாது என்று முக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தாக ஜெய செய்தி வெளியிட்டுள்ளதே!

Gaana Kabali said...

தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?

ஆங்கில புத்தாண்டை நள்ளிரவு கோவிலுக்கு சென்று வழிப்படும் மனம் படைத்த தமிழனுக்கு, திருவள்ளுவர் ஆண்டை தமிழ் புத்தாண்டாக ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் ஏன் வரவில்லை?

சித்திரை மாதம் 14 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடக் கூடாது என்று சட்டம் ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா?

ஆங்கில புத்தாண்டை கொண்டாட கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா?

எது விருப்பமோ அதை கொண்டாடிவிட்டு போங்களேன்.

திருவள்ளுவர் ஆண்டை தமிழ் புத்தாண்டாக கொண்டாடக் கூடாது என்று சொல்ல தமிழனுக்கு எப்படி மனம் வருகிறது?

எனது ஆரம்ப வரிகளை இன்னொரு முறை படித்து விட்டு மனசாட்சியைத் திறந்து யாரவது இதற்கு பதில் சொல்லுங்களேன்?

Anonymous said...

உங்க எழுத்து நடை எல்லாமே ச்+ஓ மாதிரியே இருக்கே!!!

புரியலையே!!!!

Nonsense No Bar said...

//தமிழர்கள் எல்லாரும் "religion - no bar" என்று ஒரு நாளை தமிழ் புத்தாண்டு துவக்கமாக கொண்டாடுவது என்பது நல்ல விஷயம் தானே? தமிழ் மறை தந்த வள்ளுவர் ஆண்டின் துவக்கத்தை அப்படி ஒரு நாளாக அறிவித்ததில் என்ன குறை கண்டு விட்டீர்கள்?//

ஹிந்துக்கள், ஜைனர்கள் தவிர வேறு எந்த மதத்தினரும் வள்ளுவரின் முதல் அதிகாரத்தையும் (கடவுள் வாழ்த்து), அதில் சொல்லியிருக்கும் தத்துவங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. மனிதனும் கடவுளாகலாம் என்று சொல்லும் அந்த அதிகாரத்தை, இஸ்லாமியர்களிடம் அது உங்களுக்கும் பொருந்தும் என்று சொன்னால் இணை வைத்த குற்றத்துக்காக உங்களுக்கு ஃபத்வா தந்துவிடுவார்கள். அப்படியிருக்க, அய்யன் வள்ளுவன் மட்டும் 'religion no bar' ஆன தனித்தமிழ்மகனாக எப்படி ஆனான்? அவன் தினத்தை மட்டும் எல்லா மதத்தினரும் எப்படி ஏற்றுக்கொண்டு தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள்?

//நம்மை சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடக்கூடாது என்று ஏதும் சட்டம் போட வில்லையே? //

சுத்த பைத்தியக்காரத்தனமான கருத்து. சட்டம் வேண்டுமானால் போடாமல் இருந்திருக்கலாம். அரசுக்கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டுப் பூசைகள் நடக்கக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கைத் தரப்பட்டிருக்கிறது. இதனால் பெரும்பாலான கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு அன்று நடக்கும் ‘பஞ்சாங்கம் படித்தல்’ நிகழ்ச்சியோ, சிறப்பு வழிபாடுகளோ நடைபெறவில்லை.

ரிஷபன் said...

//Even most of the chennai thamizhars make cooker pongal on Pongal day//.
சென்னை கிராமம் இல்லை. கலைஞர் செய்த மாற்றம் சென்னக்கு மட்டும் இல்லை. (இது புரியறது கொஞ்சம் கஷ்டம், புரியும் வரை மீண்டும் படிக்கவும்) :>


நெத்தியடி நெத்தியடின்னு சொல்வாங்களே அது இது தானா ?

Madhavan said...

I draw you attention to

Reasons for April 13/14 to be Tamil-New Year..
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/


I agree with the author of the article said above.

Gaana Kabali said...

"தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?"

என்று நான் எழுதியிருந்ததை மட்டும் யாருமே கண்டுக்கவே மாட்டேன்என்கிறீர்களே!

இதை மட்டும் வசதியாக விட்டு விட்டு மற்றவற்றிற்கு பதில் சொல்ல முயலும் நண்பர்களுக்கு நான் பரிதாபப் படுகிறேன்.

Gaana Kabali said...

"யாருக்கெல்லாம் தேவையோ, அவர்கள் சொல்லிட்டுப் போகட்டும். ஜனவரி, பிப்ரவரி....போல, சித்திரை, வைகாசி...என்றுதான் இன்று வரை உள்ளது. அதனால் தமிழ் புத்தாண்டு சித்திரையில் மட்டுமே. (இதப் படிச்சாங்கன்னா சீக்ரமே, தை,மாசி, பங்குனி.சித்திரை, வைகாசி என்று மாற்ற முயற்சி நடக்கும்)...வரலாறு முக்கியம் அமைச்சரே."

"வரலாறு முக்கியம்" என்று அடித்து கூறும் திருவாளர் மானஸ்தன் அவர்களே !

தமிழன் ஆதி காலத்தில் இருந்தே தமிழ் புத்தாண்டை அறுபது வடமொழி பெயரில் தான் கொண்டாடி வந்தானா?

இடையில் தானே யாரோ இப்படி இடைச்செருகல் செய்து மாற்றி விட்டார்கள்.

இப்படி இடையில் மாற்றுவதற்கு ஒரு சிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் அதை சரி செய்து தமிழ் புத்தாண்டு கொண்டாட இன்றையத் தமிழனுக்கு உரிமை இல்லையா?

உங்கள் வரலாறு என்ன கூறுகிறது?

திருவள்ளுவர் காலத்திலேயே வடமொழி பெயரில் தான் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடி வந்தார்களா?
வரலாற்று ஆசிரியர் மானஸ்தன் அவர்களின் பதில் என்ன?

மனசாட்சியை தொட்டு உண்மையாக பதில் சொல்லுங்கள். ஆனால் அது உங்களால் முடியாது அன்பரே!

sathyakumar said...

தமிழ் மொழியால் ஒன்றுபட்ட அனைவரும் ஒற்றுமையாக, தங்களுக்குப் பொதுவான விழாவாக தைப் பொங்கல் நாள்: தமிழர்க்குப் புத்தாண்டாக, தை முதல் தேதி மட்டுமே!

இது வரையில் ஏப்ரல் 14 – ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது. இந்த ஆண்டு(2008) முதல் பொங்கல் திருநாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அரசாங்கத்தின் ஆணை. இவ்வாறு அரசு புதிய ஆணை விடுத்ததற்கான காரணங்களைப் பார்ப்போம்.


சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி தமிழுக்கென்று தனித் தமிழ்புத்தாண்டு வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தற்போது பழக்கத்திலுள்ள பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் ஆண்டுகள் ஜோதிடர்களால் நிர்ணயம் செய்யப்படுகின்ற ஆண்டுகள்.

தவிரவும் அவை வட மொழிப் பெயர்கள். தமிழ்ப் பெயர்கள் அல்ல;

அவைகளுக்குத் தொடர்ச்சியாக எண்கள் கிடையாது. இவ்வாறாகப் பல காரணங்களால் தனித் தமிழ்ப் புத்தாண்டு வேண்டுமென்று முடிவு செய்து பொங்கல் திருநாளான தை முதல் நாளன்று திருவள்ளுவர் பிறந்தார் என்று கணக்கிட்டு அன்று புத்தாண்டு கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.

திருவள்ளுவர் ஏசு கிறிஸ்துவுக்கு சுமார் 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று கணக்கிடப்பட்டு அந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆண்டுகளுக்கு எண்கள் கொடுக்கப்பட்டு ஆண்டு எண்ணைக் குறிக்கிறார்கள். இத்தகைய 75 ஆண்டுகால
முடிவுக்குத்தான் தற்போதுள்ள அரசு செயல் வடிவம் ஆணையாகக் கொடுத்துள்ளது.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மாதங்கள் என்று உட்பிரிவு எதுவும் கிடையாது.

ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டை ஜோதிடர்கள் கூறும் புத்தாண்டு என்று கூறிய தமிழ் அறிஞர்கள் ஒன்றை கருத்தில் கொள்ளவில்லை.

பொங்கல் திருநாளும் ஜோதிடர்கள் கணக்குப்படியே கொண்டாடப்படுகிறது.

சூரியன் மகரத்திற்கு வரும் முதல் நாளே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. மகரத்திற்கு என்று வருகிறது என்பதை ஜோதிடர்கள்தான் தீர்மானிக்கின்றனர்.

சில ஆண்டுகளில் ஜனவரி 13 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 14 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 15 ம் தேதியும் வருகிறது. ஓரே நாளில் நிரந்தரமாக வருவது இல்லை.

டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. இதிலே எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் பொங்கல் பண்டிகை அப்படி அல்ல. ஜோதிடர்கள் என்று மகரராசியில் சூரியன் பிரவேசிக்கிறது என்று கூறுகிறார்களோ அன்றுதான் பொங்கல் பண்டிகை.

சிலர் பிறந்த நாள் கொண்டாடுவர். ஆங்கிலத் தேதியை அனுசரித்துக் கொண்டாடுவர். பின்பு நட்சத்திரத்தின்படி கொண்டாடுவர். ஆக இரண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவர். அதைப்போல் நாம் புத்தாண்டை பொங்கல் அன்றும் கொண்டாடலாம். அதாவது அரசு அறிவித்துள்ள பண்டிகையாகக் கொண்டாடலாம்.

தமிழ் மொழியால் ஒன்றுபட்ட அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, தங்களுக்குப் பொதுவான விழாவாக தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும்.

மேலும், திருவள்ளுவர், அனைத்து சமயங்களையும் சேர்ந்த தமிழர்க்கும் பொதுவான தமிழறிஞர் என்பதாலும்,
உழவுத் தொழில் அனைத்து மக்களுக்கும் அவசியமானது என்பதாலும் சூரியன் அனைவருக்கும் பொது என்பதாலும், திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமான, சூரியனைப் போற்றும் தைப் பொங்கல் நாள் தமிழர் திருநாளுக்குப் பொருத்தமானதாக ஏற்கப்பட்டது. தமிழர்க்குப் புத்தாண்டாக, தை முதல் தேதி மட்டுமே! இது ஓர் ஒற்றுமைத் திருநாள் எனலாம்


பின்பு ஹிந்து சிந்தாந்ததின்படி ஏப்ரல் மாதத்திலும் கொண்டாடலாம். ஆனால் ஹிந்துக்களின் பண்டிகையாக ஏப்ரல் மாதத்தில் மட்டுமே கொண்டாட முடியும்.

தமிழ் மொழியால் ஒன்றுபட்ட அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, தங்களுக்குப் பொதுவான விழாவாக தைப் பொங்கல் நாள் தமிழர்க்குப் புத்தாண்டாக, தை முதல் தேதி மட்டுமே!

Anonymous said...

தமிழ் மொழியால் ஒன்றுபட்ட அனைவரும் ஒற்றுமையாக, தங்களுக்குப் பொதுவான விழாவாக தைப் பொங்கல் நாள்: தமிழர்க்குப் புத்தாண்டாக, தை முதல் தேதி மட்டுமே!

இது வரையில் ஏப்ரல் 14 – ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது. இந்த ஆண்டு(2008) முதல் பொங்கல் திருநாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அரசாங்கத்தின் ஆணை. இவ்வாறு அரசு புதிய ஆணை விடுத்ததற்கான காரணங்களைப் பார்ப்போம்.


சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி தமிழுக்கென்று தனித் தமிழ்புத்தாண்டு வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தற்போது பழக்கத்திலுள்ள பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் ஆண்டுகள் ஜோதிடர்களால் நிர்ணயம் செய்யப்படுகின்ற ஆண்டுகள்.

தவிரவும் அவை வட மொழிப் பெயர்கள். தமிழ்ப் பெயர்கள் அல்ல;

அவைகளுக்குத் தொடர்ச்சியாக எண்கள் கிடையாது. இவ்வாறாகப் பல காரணங்களால் தனித் தமிழ்ப் புத்தாண்டு வேண்டுமென்று முடிவு செய்து பொங்கல் திருநாளான தை முதல் நாளன்று திருவள்ளுவர் பிறந்தார் என்று கணக்கிட்டு அன்று புத்தாண்டு கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.

திருவள்ளுவர் ஏசு கிறிஸ்துவுக்கு சுமார் 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று கணக்கிடப்பட்டு அந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆண்டுகளுக்கு எண்கள் கொடுக்கப்பட்டு ஆண்டு எண்ணைக் குறிக்கிறார்கள். இத்தகைய 75 ஆண்டுகால
முடிவுக்குத்தான் தற்போதுள்ள அரசு செயல் வடிவம் ஆணையாகக் கொடுத்துள்ளது.பொங்கல் திருநாளும் ஜோதிடர்கள் கணக்குப்படியே கொண்டாடப்படுகிறது.

சில ஆண்டுகளில் ஜனவரி 13 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 14 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 15 ம் தேதியும் வருகிறது. ஓரே நாளில் நிரந்தரமாக வருவது இல்லை.

டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. இதிலே எந்த மாற்றமும் இல்லை.
சிலர் பிறந்த நாள் கொண்டாடுவர். ஆங்கிலத் தேதியை அனுசரித்துக் கொண்டாடுவர். பின்பு நட்சத்திரத்தின்படி கொண்டாடுவர். ஆக இரண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவர். அதைப்போல் நாம் புத்தாண்டை பொங்கல் அன்றும் கொண்டாடலாம். அதாவது அரசு அறிவித்துள்ள பண்டிகையாகக் கொண்டாடலாம்.

தமிழ் மொழியால் ஒன்றுபட்ட அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, தங்களுக்குப் பொதுவான விழாவாக தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும்.

மேலும், திருவள்ளுவர், அனைத்து சமயங்களையும் சேர்ந்த தமிழர்க்கும் பொதுவான தமிழறிஞர் என்பதாலும்,
உழவுத் தொழில் அனைத்து மக்களுக்கும் அவசியமானது என்பதாலும் சூரியன் அனைவருக்கும் பொது என்பதாலும், திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமான, சூரியனைப் போற்றும் தைப் பொங்கல் நாள் தமிழர் திருநாளுக்குப் பொருத்தமானதாக ஏற்கப்பட்டது. தமிழர்க்குப் புத்தாண்டாக, தை முதல் தேதி மட்டுமே! இது ஓர் ஒற்றுமைத் திருநாள் எனலாம்


பின்பு ஹிந்து சிந்தாந்ததின்படி ஏப்ரல் மாதத்திலும் கொண்டாடலாம். ஆனால் ஹிந்துக்களின் பண்டிகையாக ஏப்ரல் மாதத்தில் மட்டுமே கொண்டாட முடியும்.

தமிழ் மொழியால் ஒன்றுபட்ட அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, தங்களுக்குப் பொதுவான விழாவாக தைப் பொங்கல் நாள் தமிழர்க்குப் புத்தாண்டாக, தை முதல் தேதி மட்டுமே!

மாவீரன் சிவாஜி said...

மஞ்சத்துண்டு மாதிரியே இப்போது தமிழ்நாட்டில் இன்னும் ஒருவர்(ன்) திரைத்துறையில் உருவாகி கொண்டிருக்கிறான். ஜோசப் என்ற அந்த நபருக்கு இந்துக்களின் காசில் மஞ்சக்குளிக்க மட்டும் பிடிக்கும் போலிருக்கிறது.

Anonymous said...

//திருவள்ளுவர் ஏசு கிறிஸ்துவுக்கு சுமார் 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று கணக்கிடப்பட்டு //

பகுத்தறிவு பேசுகிறது...
யேசுவோட சீடர் தோமா திருவள்ளுவருக்கு கத்து தந்தாங்களாமே
ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே

jaisankar jaganathan said...

//மஞ்சத்துண்டு மாதிரியே இப்போது தமிழ்நாட்டில் இன்னும் ஒருவர்(ன்) திரைத்துறையில் உருவாகி கொண்டிருக்கிறான். ஜோசப் என்ற அந்த நபருக்கு இந்துக்களின் காசில் மஞ்சக்குளிக்க மட்டும் பிடிக்கும் போலிருக்கிறது.

//

தலயோட தீவர ரசிகர் போல

jaisankar jaganathan said...

//பகுத்தறிவு பேசுகிறது...
யேசுவோட சீடர் தோமா திருவள்ளுவருக்கு கத்து தந்தாங்களாமே
ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே
//

தோமாவுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை. தெரிய்மா

ஜெயக்குமார் said...

சரி..சரி..எல்லோருக்கும் ஹேப்பி புது சித்திரை மாசப்பிறப்பு வாழ்த்துக்கள்.

பருப்பு said...

அய்யா இட்லி வடை அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

சீனு said...

//ஏப்ரல் 14 - புதன் - அம்பேத்கர் சுடர் விருது - விடுதலை சிறுத்தைகள் விழா

ஏப்ரல் 15 - வியாழன் - காமராஜர் சுடர் விருது - அகில இந்திய நாடார் பேரவை விழா

ஏப்ரல் 16 - வெள்ளி - முத்துஇராமலிங்கத் தேவர் சுடர் விருது - அகில இந்திய தேவர் பேரவை விழா

ஏப்ரல் 17 - சனி - அழகுமுத்துக்கோன் சுடர் விருது - யாதவமகா சபை விழா

ஏப்ரல் 18 - ஞாயிறு - விஸ்வநாததாஸ் சுடர் விருது - அகில இந்திய மருத்துவர்கள் சங்க பேரவை விழா

ஏப்ரல் 19 - திங்கள் - பாரதியார் சுடர் விருது - அகில இந்திய பிராமண சமாஜம் விழா

ஏப்ரல் 20 - செவ்வாய் - (இத்தனை சுடர் விருது வாங்கியதிற்காக) சுடருக்கெல்லாம் சுடர் விருது - திராவிடர் கழ(ல)க விழா (ஏன்னா இன்னிக்கி விடுதலைல போட நியீஸ் ஒண்ணும் இல்லை)//

ஓ! இத்தனை ஜாதி இருக்கா?

//மற்ற பத்திரிகைகள் என்ன தலைப்பு என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.//

கலைஞர் டி.வி. - சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்.

சன் டி.வி. - தமிழ் புத்தாண்டு இல்லை. சித்திரை திருநாள் இல்லை. சன் டி.வி.யின் 17வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்!!! என்ன ஆச்சு கலாநிதி மாறனுக்கு? மாறிட்டாரா?

சீனு said...

//ஏப்ரல் 14 - புதன் - அம்பேத்கர் சுடர் விருது - விடுதலை சிறுத்தைகள் விழா

ஏப்ரல் 15 - வியாழன் - காமராஜர் சுடர் விருது - அகில இந்திய நாடார் பேரவை விழா

ஏப்ரல் 16 - வெள்ளி - முத்துஇராமலிங்கத் தேவர் சுடர் விருது - அகில இந்திய தேவர் பேரவை விழா

ஏப்ரல் 17 - சனி - அழகுமுத்துக்கோன் சுடர் விருது - யாதவமகா சபை விழா

ஏப்ரல் 18 - ஞாயிறு - விஸ்வநாததாஸ் சுடர் விருது - அகில இந்திய மருத்துவர்கள் சங்க பேரவை விழா

ஏப்ரல் 19 - திங்கள் - பாரதியார் சுடர் விருது - அகில இந்திய பிராமண சமாஜம் விழா

ஏப்ரல் 20 - செவ்வாய் - (இத்தனை சுடர் விருது வாங்கியதிற்காக) சுடருக்கெல்லாம் சுடர் விருது - திராவிடர் கழ(ல)க விழா (ஏன்னா இன்னிக்கி விடுதலைல போட நியீஸ் ஒண்ணும் இல்லை)//

ஓ! இத்தனை ஜாதி இருக்கா?

//மற்ற பத்திரிகைகள் என்ன தலைப்பு என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.//

கலைஞர் டி.வி. - சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்.

சன் டி.வி. - தமிழ் புத்தாண்டு இல்லை. சித்திரை திருநாள் இல்லை. சன் டி.வி.யின் 17வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்!!! என்ன ஆச்சு கலாநிதி மாறனுக்கு? மாறிட்டாரா?

தமிழன் said...

பார்பணர்கள் தவிர வேற யாரும் ஏப்ரல் 14ஐ ப்த்தாண்டாக (தமிழ் நாட்டில்)கொண்டாடுவதில்லை.என் இனிய பார்ப்பண புத்தாண்டு வாழ்த்துக்கள்!Haapy paaps new year.நீங்க்களெல்லாம் ஒங்க நாட்டுக்கு போய் இந்த புது வருடத்தை கொண்டாடவேண்டியதுதனே? அதுசரி ஒங்களுக்னு ஒரு நாடு இருந்துதானே?
ஒண்டவ்ந்த பிடாரிகள்.சாமி ,பூதம்னு உழைக்கும் ம்க்களை ஏமாற்றி அவ்ர்கள் தலைமீது உட்கார்ந்து கொண்டுவிட்டீர்கள்!உங்களைவிட தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒரு தமிழன் நாட்டையும் (உங்க்ளையும)ஆண்டு மாற்றம் கொண்டுவருவதால் உள்ள வயிற்றுறெரிச்சல்!
வேற என்ன சொல்வது?

!!மாற்றம் ஒன்று மட்டுமே மாற்ற முடியாதது"

Anonymous said...

Dear Thamilan,

Tamil Hindus follows Solar Calendar .

The Tamil New Year follows the nirayanam vernal equinox and generally falls on April 13 or 14th of the Gregorian year. April 13 or 14th marks the first day of the traditional Tamil calendar and this remains a public holiday in both Tamil Nadu and Sri Lanka. Tropical vernal equinox fall around 22 March, and adding 23 degrees of trepidation or oscillation to it, we get the Hindu sidereal or Nirayana Mesha Sankranti (Sun's transition into nirayana Aries)(similar to Sanskrit pandits call Pongal as Makara Sankaranthi)

Anonymous said...

////பார்பணர்கள் தவிர வேற யாரும் ஏப்ரல் 14ஐ ப்த்தாண்டாக (தமிழ் நாட்டில்)கொண்டாடுவதில்லை.//

oh is it..

///சாமி ,பூதம்னு உழைக்கும் ம்க்களை ஏமாற்றி அவ்ர்கள் தலைமீது உட்கார்ந்து கொண்டுவிட்டீர்கள்!////

unga thalaivarum - (manjal thundu) anda listla sertukkanga

///உங்களைவிட தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒரு தமிழன் நாட்டையும் (உங்க்ளையும)ஆண்டு மாற்றம் கொண்டுவருவதால் உள்ள வயிற்றுறெரிச்சல்!
வேற என்ன சொல்வது?

!!மாற்றம் ஒன்று மட்டுமே மாற்ற முடியாதது"//////

Hope he doesnt change his stand.and yes !மாற்றம் ஒன்று மட்டுமே மாற்ற முடியாதது

citizen***

ஜீயார் said...

நான் எந்த நாளையும் கொண்டாடுவதில்லை. மொபைல் போனை ஆப் செய்துவிட்டு நல்லா தூங்கிடுவேன். என்னை பின்பற்றுங்கள் எந்த பிரச்சனையும் இல்லை.

Anonymous said...

நம் சாஸ்திரப்படி உயிருள்ளவர்கள் பிறந்த நட்சத்திரம் மூலமும், இறந்தவர்கள் இறந்த நாள் (திதி) மூலமும் போற்றப்படுகிறார்கள். இறந்த பொழுதின் நட்சத்திரம் பதியப்படுவதில்லை. உயிருள்ள ஜீவனுக்கே நட்சத்திரம், கோள்களின் impact இருக்கும். இறந்த ஆத்மாக்கள் இவைகளிலிருந்து விடுபட்டவை. ஆங்கில நாளை (birthdate) கொண்டாடுவதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை. இ.வ. நட்சத்திரத்தையே கொண்டாடுவது சிறந்தது.

Anonymous said...

//சூரியன் மகரத்திற்கு வரும் முதல் நாளே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. மகரத்திற்கு என்று வருகிறது என்பதை ஜோதிடர்கள்தான் தீர்மானிக்கின்றனர்.

சில ஆண்டுகளில் ஜனவரி 13 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 14 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 15 ம் தேதியும் வருகிறது. ஓரே நாளில் நிரந்தரமாக வருவது இல்லை.//


தமிழகத்தில் காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. தமிழ் மாதத் தேதிகளை ஆங்கில காலண்டர் நாள் மூலம் கண்டு பிடிக்கிறார் இந்தப் பகுத்து அறியும் வேந்தர்.

//டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. இதிலே எந்த மாற்றமும் இல்லை//
ஏன்னா அது கிருத்துவ காலண்டர். கிறித்து பிறந்த நட்சத்திரம் அவுங்க ஊரு சோசியர் பதிஞ்சு வைக்கலை. அத்தான் மேட்டர்.

ஆமா - திருவள்ளுவர்ன்னு ஒருத்தர் கிறித்துவுக்கு முன்னால பொறந்தார்னு உங்களுக்கு எந்த ஜோசியன் சொன்னான்? எப்படி நம்புறீங்க? பகுத்து அறிஞ்ச விஷயத்த கொஞ்சம் சொன்னா புரிஞ்சுக்குவோம்.
வள்ளுவன், வள்ளுவன் ஒருத்தர் இருந்தார் என்பதற்கு ராமன், கிருஷ்ணன் இருந்தார்கள் என்பதற்கு எவ்வளவு ஆதாரமோ அவ்வளவு கூட ஆதாரம் கிடையாது. அவர் மனைவி பெயர் வாசுகி, கிணற்று வாளி பாதிலேயே நின்னது என்கிற கதையைத் தவிர வேற என்ன வள்ளுவரப் பத்தி தமிழர்களுக்கு தெரியும்? அது போகட்டும், திருக்குறள் மனப்பாடச் செய்யுள சாய்ஸ்-ல விட்டுட்டு வரக்கூடிய பயபுள்ளைக தான் இன்றைய தமிழக மாக்கள்.

இவ்வளோவும் போக மஞ்சத்துண்டார் சொல்லிட்டாராம் - so புது வருஷம் மாறணுமாம். இவ்வளோ வருஷமா சித்திரை முதல் நாள வருஷப் பிறப்பா கொண்டாடிட்டு வந்த நம்ம முன்னோர்கள் அனைவரும் மாக்கான்கள் - மஞ்சத் துண்டு அய்யா தான் மகா அறிவாளியா? நம் முன்னோர்களின் அறிவைக் கேலி செய்யும் இந்த கோமாளியை செருப்பால் அடிக்க வேண்டாம்? அதவிட்டுட்டு மணி ஆட்டிட்டு இருக்கீங்க?

Anonymous said...

//தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?//

இந்த பகலவன்களின் தொந்தரவு தாங்க முடியல...அய்யா பகலவன்களே - நீங்க தமிழ் மாசப் பெயர்கள்னு வச்சிருக்கீங்களே.. சித்திரை, வைகாசி, etc.., இதெல்லாம் தமிழ் பெயருங்களாங்கோ? அப்புடீன்னா ஒவ்வொண்ணுத்துக்கும் அர்த்தம் என்னான்னு சொல்லுங்களேன்? 27 நட்சத்திரங்கள், 12 மாதங்கள், 60 வருடங்கள் இவையனைத்துமே நம்முடைய நாள்காட்டி (calendar). ஒன்றுபட்ட இந்தியனாக இருக்கப் பழகுங்கள். இல்லாத ஒன்றினை இருப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ், தமிழ் என்று பொழுது போகா பொய்யர்களின் பேச்சைக்கேட்டு வாழ்கையை வீணாக்காதீர்கள். எப்படி சொன்னாலும் புரியாதே? ஊதறத ஊதி வைப்போம்.

Gaana Kabali said...

"அய்யா பகலவன்களே - நீங்க தமிழ் மாசப் பெயர்கள்னு வச்சிருக்கீங்களே.. சித்திரை, வைகாசி, etc.., இதெல்லாம் தமிழ் பெயருங்களாங்கோ? அப்புடீன்னா ஒவ்வொண்ணுத்துக்கும் அர்த்தம் என்னான்னு சொல்லுங்களேன்?" =Anony

அன்புள்ள அனானி அவர்களே !
மரம் , செடி, கல் , இட்லி , தோசை என்ற வார்த்தைகளெல்லாம் தமிழ் பெயர்களே!
இவை யாவும் இடுகுறிப் பெயர்களே. இவற்றிற்கு பொருள் சொல்ல முடியாது.
அது போலவே தை , மாசி , பங்குனி போன்ற மாதங்கள் இடுகுறிப் பெயர்கள்.
பண்டைக்காலத்தில் தமிழ் மாதங்கள் கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டன:

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

இவை இன்றும் பழந்தமிழ் சேர நாடான கேரள நாட்டில் வழக்கில் உள்ளன.
தமிழகத்தில் இவை மருவி வழங்கப்பட்டு வருகின்றன.

"அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?" என்று நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிக் கொண்டு , வேறென்னவோ விதண்டாவாதம் செய்கிறீர்களே!

Anonymous said...

அன்பு Gaana Kabali அவர்களே:
நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் பெயர்களும், ராசிப் பெயர்களே.. சித்திரை மேஷம், வைகாசி ரிஷபம், ஆனி மிதுனம், ஆடி கடகம் to பங்குனி மீனம்.. இது நான் சிறுவனாக இருந்த போது வாய்பாட்டாகப் படித்த பால பாடம்.. ராசிகளை சிலவற்றிற்கு மொழி பெயர்த்து, சிலதினை அவ்வாறே கொண்டு அவற்றையே தமிழ் மாதங்கள் என்று நீங்கள் நிறுவ முயற்சிப்பது போல் தெரிகிறது..இதனுடைய அடிப்படை ஆதாரம் எங்கிருக்கிறது என்பதனை அறியக் கொடுங்கள்.. பிறகு யார் உங்களிடம் இதனைப் புகுத்தினார்கள், அன்னாளில் இருந்த தமிழறிஞர்கள் எல்லாம் இளிச்சவாயர்களா? அவர்களுக்கு இன்று இருப்பவர்களை விட தூயதமிழின் மீதிருந்த ஆளுமை குறைவா, அல்லது மஞ்சத் துண்டார் மட்டுமே தமிழன், மற்றவன் எல்லாம் மாக்கான் என்பதா - இன்ன பிற விவாதத்திற்குறிய பல கேள்விகள் வரும்.. ஆகவே புகுத்தினார்கள் என்று ஓப்பாரி வைப்பதை விட, நம் முன்னோர்கள் அவற்றை ஏன் ஏற்றுக் கொண்டனர் என்பதனில் நம் ஆராய்ச்சியைச் செலுத்தினால், புதிய பரிமாணங்கள் புலப்படும்..
-- அதே அன்பு அனானி...

Gaana Kabali said...

ஏமாற்றுபவர்கள் எல்லாம் அதிபுத்திசாலிகளாகத்தான் இருப்பார்கள். ஏமாறுபவர்கள் அறிவாளிகளாக இருந்தாலும் அப்பாவிகளாக இருப்பார்கள் . உதாரணத்துக்கு நித்யானந்தரிடம் ஏமாந்த எத்தனையோ பெரிய புள்ளிகளை சொல்லலாம்.
அப்படிதான் நடந்திருக்கிறது அன்றும்.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர்.
சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.
சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.
1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.
இன்னும் விளக்கம் தேவையா அன்பரே!