பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 26, 2010

ஆனந்த்-டொபலோவ் முதல் இரண்டு ஆட்டங்கள்

சென்ற வார இறுதியில் இரண்டு ஆட்டங்கள் நடந்தன. ஆட்டங்களின் முடிவில் சமநிலை ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் தலா ஒரு ஆட்டத்தை வெல்வர் என்று அதிகம் பேர் ஊகித்து இருக்க முடியாது.

பொதுவாக, இது போன்ற Match-களில் முதல் சில ஆட்டங்கள் மொக்கையாக இருக்கும். சென்ற முறை ஆனந்த கிராம்னிக்கை எதிர்த்து ஆடிய போது கூட, முதல் ஆட்டம் அப்படித்தான் அமைந்தது. ஆனால், டொபலோவ் அப்படி ஆட மாட்டார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனந்தும் டொபலோவுக்கு இணையாக, முதல் ஆட்டத்திலேயே பல sharp position நிறைந்த Grunfeld Opening-ஐ எடுத்து ஆடியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.To cut the long story short - முதல் ஆட்டம் டொபலோவுக்கு சுலபமான வெற்றியைத் தந்தது. ஆனந்த் டொபலோவ் போன்ற தேர்ந்த ஆட்டக்காரர்கள் ஆடும் போது, வெற்றி தோல்வி சகஜம்தான். எனினும், ஆனந்த் தோல்வியடைந்த விதம் அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கும்.

செஸ் ஆட்டக்காரர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை tactical players. அதிரடியாய் ஆடி, புதிய கோணங்களை உருவாக்கி, சில காய்களை பலி கொடுத்து, அதற்கு ஈடாய் சிலவற்றைப் பெற்று, ஒரு வழியாய் அமளி அடங்கும் போது, வலுவான நிலையில் இருக்கும் ஆட்டக்காரர்கள் இவர்கள். காஸ்பரோவ், ஃபிஷர், டொபலோவ் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

இரண்டாவது வகை Positional Players. இவர்கள் வலிக்காமல் அடிப்பதில் வல்லவர்கள். சிறிது சிறிதாய் முக்கிய கட்டங்களைப் பிடித்து, எதிராளி தனக்கு எந்த பாதகமும் இல்லை என்ற மாயை வலையைப் பின்னி, சிறிது சிறிதாய் ஆட்டத்தை தன் வசப்படுத்தும் ஆட்டக்காரர்கள் இவர்கள். கார்போவ், கிராம்னிக் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

ஆனந்தைப் பொறுத்த மட்டில் அவரை ‘universal player' என்றே வகைப்படுத்துகின்றனர். அதாவது இரண்டு வகை ஆட்டத்தையும் சரளமாக ஆடக் கூடியவர் ஆனந்த். எதிராளிக்கேற்ப தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதே ஆனந்தின் பெரிய பலம். கிராம்னிக்குக்கு எதிராக ஆனந்த் பெற்ற மகத்தான வெற்றிக்கும் இதுவே முக்கிய காரணம். Positional Player, நன்கு ஆராயப்பட்ட நிலைகளில் காய்களை வைத்திருக்கவே விரும்புவார். Tactical Player-ஓ அதிகம் ஆராயப்பட்டிராத நிலைகளை நோக்கி ஆட்டத்தை நகர்த்துவார்.

Tactical Player-ஆன டொபலோவுடன் ஆடும் பொது, ஆனந்த் Positional Play-வையே விளையாடி, அவரை பொறுமையிழக்கச் செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆனந்தோ முதல் ஆட்டத்தில், டொபலோவுக்கு பிடித்த வகையில், complicated சூழலை உருவாக்கினார்.

இருவரும் முதல் இருபது நிமிடங்களுக்குள் 20-க்கும் மேற்பட்ட நகர்த்தல்களை மின்னல் வேகத்தில் நகர்த்தினர். ஆட்டத்தைக் காண்பவர்களுக்கு அங்கு ஒரு ரேபிட் செஸ் ஆட்டம் நடப்பதாகவே தோன்றியது. இரு ஆட்டக்காரர்களும், ஆர அமர கணினியின் துணை கொண்டு வீட்டில் அமர்ந்து உருவாக்கிய திட்டங்களையே செயல்படுத்தி வந்தனர். முதல் 22 நகர்த்தல்களுக்குப் பின்னும் ஆட்டம் சமநிலையிலேயே இருந்தது. 23-ஆவது நகர்த்தலுக்கு ஆனந்த் நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். பிஷப்பை நகர்த்துவதே சரியான தற்காப்பாக இருக்கும் பட்சத்தில், ஆனந்த் சம்பந்தமே இல்லாமல் தனது ராஜாவை நகர்த்தினார். அந்த ஒரு நகர்த்தலே ஆனந்தின் தோல்விக்கு வழி வகுத்தது.

ஆட்டத்தை கவனித்த வல்லுனர்கள், “ஆனந்த் 23-வது நகர்த்தலின், ஆட்டத்தின் எந்த காயை நகர்த்தினால் நல்லது என்று யோசிக்கவில்லை. தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த home preparation-ஐ ஆட முயன்றார். அவர் தயார் செய்திருந்த நகர்த்தல் மறந்து விட்டதால், ஞாபகப்படுத்துக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டார். கடைசியில் ராஜாவை நகர்த்துவதுதான் தான் திட்டமிட்ட நகர்த்தல் என்று நினைத்து அதை ஆடவும் செய்தார். Most probably he mixed up on the order of the moves he memorized.", என்கின்றனர்.

ஆனந்துக்கு இது மிகப் பெரிய சறுக்கல். எதிராளியின் பலத்துக்குள் தானே போய் சிக்கிக் கொண்டு, எண்ணி வந்த ஆட்டத்தை மறக்கவும் செய்வார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

டொபலோவ் முன்பு சொன்னது போல, ஆனந்தின் வயது அவருக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதா?

40 மணி நேர கார் பயணமும், சாம்பியன் பட்டத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் கொடுக்கும் மன அழுத்தமும் ஆனந்தின் ஆட்டத்தை பாதிக்கின்றனவா?

12 ஆட்டங்கள் மட்டுமே நடக்கும் தொடரில், ஒவ்வொரு தோல்வியும் costly-ஆக அமையக் கூடும். ”இந்த அடியில் இருந்து ஆனந்த் மீள்வாரா?”

போன்ற கேள்விகள் செஸ் உலகெங்கும் எதிரொலித்தன.

“இதே போல ஆடினால், ஆனந்த் மிகப் பெரிய புள்ளி வித்தியாசத்தில் தோற்க நேரிடும்”, என்றெல்லாம் டொபலோவ் ரசிகர்கள் கொக்கரித்தனர். என் போன்ற தீவிர ஆனந்த் ரசிகனுக்குக் கூட, இவர்கள் சொல்வது உண்மையாகிவிடுமோ என்ற எண்ணம் எழாமலில்லை.

அடுத்த நாள் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் களமிறங்கினார். ஆனந்த் வெற்றியைக் குறி வைத்து ஆடுவாரா? அல்லது டிராவுக்காக ஆடுவாரா? டிராவுக்கு ஆடப் போய், over defensive-ஆகி அதுவே அவர் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டால்? இரண்டாவது ஆட்டத்திலும் தோற்றால், கிட்டத்தட்ட இந்தத் தொடரையே தோற்றார்ப் போல்தான். ஆனந்துக்கு, இரண்டாவது ஆட்டம் மிக மிக முக்கியமான ஒன்று.

இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் தனது positional player அவதாரத்தில் களமிறங்கினார். டொபலோவுக்கு எதிராக கிராம்னிக் வெற்றிகரமாக உபயோகித்த Catalan Opening-ல் ஆட்டத்தைத் துவக்கினார். 14 நகர்த்தல்கள் முடிந்த போது, ஆனந்தின் காய்கள் நல்ல நிலைகளை அடைந்திருந்த போதும், அவர் ஒரு pawn-ஐ பலி கொடுத்திருந்தார். டொபலோவின் காய்களின் அமைப்பு முழுவதுமாய் வளர்ந்திராத நிலையில், ராணியை exchange செய்ய ஆனந்த் அழைப்பு விடுத்தார். ஆட்டத்தை live-ஆக அலசிய பலருக்கு இது ஒரு புதிரான நகர்த்தலாக இருந்தது. ஆட்டம் நடக்கும் போது ஆனந்தை ஷார்ட் போன்ற கிராண்ட்மாஸ்டர்கள் திட்டித் தீர்த்தாலும், ஆட்டம் முடிந்த பின், "This was a weaker move. But, this may be pure genius from a psychological point of view.", என்றனர்.

ராணியுடன் ஆடியிருந்தால், டொபலோவ் புதியதொரு நிலைக்கு ஆட்ட்த்தை எடுத்துச் செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம். இருவரிடமும் ராணி இல்லாத போது, பொறுமையாய் முக்கிய கட்டங்களைப் பிடித்தல் அவசியமாகிறது.

டொபலோவை நன்குணர்ந்த ஆனந்த், அவர் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து சமநிலையைத் தகர்க்கும் நகர்த்தலைச் செய்யக் கூடும் என்று ஊகித்திருப்பார். அது, இருபத்தி ஐந்தாவது நகர்த்தலில் நடந்தது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தான் டிரா offer-கள் கொடுக்கப் போவதில்லை என்று டொபலோவ் அறிவித்திருந்தார். அதனால், எப்படியும் வெற்றியை நோக்கியே ஆட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். டொபலோவின் 25-ஆவது நகர்த்தலுக்குப் பின், ஆனந்தின் கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கியது. முன்பு பலி கொடுத்த pawn-ஐ மீட்டெடுத்தோடு, இன்னொரு pawn-ஐயும் ஆனந்த் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் ஆனந்தின் இரண்டு passed pawn-கள் டொபலோவை துன்புறுத்த ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், 43-ஆவது நகர்த்தலில் டொபலோவ் தோல்வையை ஒப்புக் கொண்டார்.

ஆனந்த் வெற்றி பெற எப்படி ஆட வெண்டும் என்று வல்லுனர்கள் ஊகித்தனரோ அதே வகையில் ஆனந்தின் ஆட்டம் அமைந்தது.

சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்தல், 40 மணி நேர கார் பயணம், எதிரியின் நாட்டில் வாசம், முந்தைய நாள் தோல்வி என்று ஆனந்தின் மனநிலையைக் கெடுக்கும் எண்ணற்ற காரணங்களுக்கிடையில், துல்லியமாய் ஆடிய ஆனந்தின் ஆட்டம் அவரது ரசிகர்களுக்குப் பெறும் நிறைவை அளித்திருக்கும்.

மூன்றாவது ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடுகிறார். சென்ற முறை ஆடியதை விட, ஆக்ரோஷமாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனந்த் மீண்டும் டொபலோவ் வழிக்கே சென்று அவரை வெல்ல முயல்வாரா அல்லது பொறுமையாய் டொபலோவை தவறு செய்யத் தூண்டுவாரா?

நாளை தெரிந்துவிடும்...


- லலிதா ராம்


தொடரும்... :-)

25 Comments:

Anonymous said...

@author

Very well written. Do continue.

கடைசி வரிகள் மட்டும் தமிழ்ப் பேப்பர்கள் எழுதுவது மாதிரி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

Ramesh Ramasamy said...

Its very interesting.. Now I am feeling, How i missed such great game!

I knew to play little bit, but not that much! hmm.. lets see!!

Anonymous said...

சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு?
Super article. Please continue.
Bala
Texas.

santa said...

அருமையாக எழுதபடிருக்கும் article.. இது போல் பல தொடர்கள் வந்தால் நன்றாக இருக்கும்..

ajay said...

You speak on vast subjects.. i am getting addicted to your blog as much as i am to idly vadai :p....
Though i have never seen international chess games your post makes me to ask " endha channela indha matchellam pakalam????"

Anonymous said...

http://www.youtube.com/watch?v=Ygg8t7UTmQ4
Bala
Texas

ஜெயக்குமார் said...

நல்ல விமர்சனம். செஸ் ஆட்டத்தையும் ரசிச்சுப் பாத்து அதை எழுதுபவருக்கும், அதை வெளியிடும் இட்லிவடைக்கும் வாழ்த்துக்கள்.

வீரராகவன் said...

கிரிக்கெட் ஆட்டத்திற்கு அப்பாற்பட்டு, மூளை ஒன்றையே மூலதனமாக கொண்டு ஆடப்படும் செஸ் ஆட்டத்தில் இவ்வளவு சுவாரசியங்களா? அருமையான பதிவு. சுஜாதா ஒரு நாவலில் (மேற்கே ஒரு குற்றம் என நினைக்கிறேன்) செஸ் ஆட்ட மேதை ஒருவர் கணேஷை செஸ் ஆடுவதற்காகவே அழைப்பது போல் அழைத்து ஒரு கொலை நாடகம் நடத்துவார். அதில் விவரிக்கப்பட்ட செஸ் ஆட்டங்களை போல் வேகமாக செல்கிறது ஆனந்த் - டொபலோவ் ஆட்டங்கள். சிறப்பான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

AAAAAAAAAHHHHHHH.....VERRRYYYYYYYYYY BIGGGGGGG BLOG...LIKE CHESS THIS IS BORING...PLEASE CUT SHORT IT.

IDLY ANNA....LEARN LESSON FROM KUMUDHAM......

New writers in your blog one day may highjack your shop....

Murali

ஹரன்பிரசன்னா said...

Fantastic attempt Ram. pl do continue.

kargil Jay said...

very good commentary indeed. How qualified is the writer on chess? Got any ratings? eager to know.

பார்வையாளன் said...

excellent... we love article as much as we love ananth game...

wonderful....

Tamilvanan said...

நல்ல விமர்சனம்.

யோசிப்பவர் said...

This was really nice!!!
தமிழில் செஸ் குறித்த இது போன்ற கட்டுரைகள் படிப்பதற்கு வித்தியாசமாய் இருக்கிறது.

Ram said...

Dear All,

Thanks for the comments.

Kargil Jay: My Chess Rating is less than my shoe size:-) I'm just a enthusiast and like to share my thoughts as an Anand Fan.

Lalitha Ram

ரிஷபன் said...

செஸ் என்பது , செய்திகளில் வானிலை அறிக்கை வருவதற்கு முன் "விஸ்வநாதன் ஆனந்த்" எதோ ஒரு ரஷ்யப் பெயர் உள்ளவரை வென்றார் என்ற நிலையில் தான் அதிகமான (என்னைப் போன்ற) தமிழர்களுக்கு தெரியும். அல்லது கம்ப்யூட்டரில் "ஈஸி" ஆப்சன் செலக்ட் செய்து விளையாடி அதிலும் கம்ப்யூட்டருடன் தோற்பது.

செஸ்-ஐ இவ்வளவு உன்னிப்பாக கவனித்து ரசிக்க முடியும் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. கட்டுரையாளர் மிக நேர்த்தியாக, சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறார்.

அழகிரி பின்னாலும் ஐ,பி.எல் பின்னாலும் திரிவதை விட இது போல வித்தியாசமான கட்டுரைகளை வெளியிடலாம்

Sabarinathan Arthanari said...

செஸ் ஆட்டம் பற்றிய வர்ணணைகள் நன்று.

பகிர்விற்கு நன்றி

Saran said...

Really good work..very informative.we come to know about some terminolgies over chess.quiet interesting. please CONTINUE this..

Anonymous said...

Please cover all the matches in this championship. It's very interesting to read in Tamil.

Go Anand. you'll be the World champion yet again.

R.Gopi said...

என் இனிய தமிழ் மக்களே...

இவ்வளவு நாள் செக்ஸ் விளையாட்டு மற்றும் செக்ஸை மையமாக வைத்த செய்திகளை மட்டுமே வாசித்து வந்த நீங்கள் இப்போது “செஸ்” பற்றியும் அறிந்து கொள்ள துடிப்பது மனதிற்கு மிகிழ்ச்சி வரவழைப்பதாக இருக்கிறது..

Anonymous said...

Nice article. Please continue.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

செஸ் பற்றி இதற்கு முன் இப்படி யாராவது ஆராய்ந்து விலாவாரியாக எழுதி இருக்கிறார்களோ, தெரியவில்லை!

பழம் கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சிகளுடன், கர்நாடக சங்கீத தீவிர ரசிகராக, விமரிசகராகவும் கலக்கி வரும் லலிதா ராமின் இன்னொரு புதிய பரிமாணம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நான் சந்திக்க முடிந்த நல்ல நெட் நண்பர்களில் ஒருவர், என்னைத் தன் ‘ஹ்யூமர் குரு’ என்று அன்போடு சொல்லிக்கொண்டு தன் ‘ஜிஎன்பி’ புத்தகத்தைப் பரிசளித்த சிஷ்யன், வாழ்க, வளர்க!

Anonymous said...

aiya - 4 aatam mudinju pochu - anand nallavadhu aatathulla kellichitaaru...
sattu puttunuu update panunga :-)

ராஜ சுப்ரமணியன் said...

மூன்றாவது ஆட்டத்தை ட்ரா செய்து, 4-வது ஆட்டத்தில், வெள்ளை காய்களுடன் அபாரமாக ஆடி, இன்று 29-04-2010 ஆனந்த் 2.5 க்கு 1.5 என்ற கணக்கில் மேல்நோக்கி இருக்கிறார். உலக சாம்பியன் பட்டம் வென்றிட ஆனந்துக்கு வாழ்த்துக்கள்.

vv said...

I o... Fantastic... Writing...