பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 24, 2010

எங்கே அழகிரி?

நேற்று பாராளுமன்றம் இரு விவகாரங்களில் அமளி துமளிப் பட்டது. ஒன்று வழக்கம்போல் ஐபிஎல் விவகாரம். நாட்டு மக்கள் பல பேருக்கும் ஏன் பாராளுமன்றத்தில் பல பேருக்கும் என்ன பிரச்சனை என்று முழுவதும் தெரியுமா என்பது சந்தேகம் தான். அடுத்த விவகாரம் அழகிரி எங்கே என்பது.


அழகிரியால் சுமார் 15 நிமிஷம் ஒரு சலசலப்பு. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டு அமளி ஏற்பட்டிருக்கிறது. காரணம், வேறு எதுவுமில்லை!! அழகிரி வழக்கம்போல் அவையில் இல்லை. வழக்கமாக அழகிரி கேள்வி நேரங்களிலும், கேபினட் ஆலோசனைக் கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கிட்ட்த்தட்ட அவர் அமைச்சரான போதிலிருந்தே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அவருக்கு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் போதிய பரிச்சயம் இல்லை.

இதற்காக கேள்வி நேரத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதி கோரி அவர் சபாநாயகரிடம் ஒரு மனு அளித்திருந்தார். ஆனால் ஒரு கேபினட் அமைச்சர் ஆங்கிலத்திலேயோ அல்லது ஹிந்தியிலேயோதான் பதிலளிக்க முடியும், அல்லது விவாதிக்க முடியும் என்பது பாராளுமன்ற விதிமுறை. இவ்விதியை அழகிரியை முன்னிட்டுத் தளர்த்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பருப்புதான் என்னவோ வேகவில்லை.

இந்நிலையில் நேற்று மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அழகிரி எங்கே என்று பிரச்சனையைக் கிளப்பினர். நேற்றைய முன்தினம் கூட கேள்வி நேரத்தில் இப்பிரச்சனை கிளப்ப்ப்பட்ட போது, ப்ரணாப் முகர்ஜி எழுந்து விவகாரத்தை சமாளிக்க முயன்றிருக்கிறார். "அழகிரி வெளிநாட்டுக்கு போயிருக்கார் அதனால் அவையில் இல்லை" இது தான் அவர் சொன்ன சூப்பர் பதில்!.“சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், அழகிரியை பாராளுமன்றத்தில் பார்த்தே ஒரு வருடம் ஆகிறது என்றிருக்கிறார்.”இதற்கு பதிலளித்த லோக் சபை சபாநாயகர் மீரா குமார், அழகிரி எங்கு சென்றிருக்கிறார் என்று தெரியவில்லை, தவிர அவரிடமிருந்து எவ்விதமான தொடர்பும் இதுவரை இல்லை. மேலும் அவர் அயல்நாடு செல்வதற்கு முன்பு கூட அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என்னிடம் சொல்லிவிட்டு தான் செல்கிறார்கள் என்று சொன்னார். [ சரியாக சொல்ல வேண்டும் என்றால் Prime Minister Manmohan Singh and other ministers are very particular about it (courtesy and decorum). Whenever they go, they always inform my office.” ]

மேலும் கூறுகையில், அழகிரி எப்போது வந்தாலும் அவரிடம் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைக் கேட்டுத் தெளிவுபடுத்துவதாகவும் மீரா குமார் தெரிவித்திருக்கிறார்.


ராஜ்ய சபையில் இப்பிரச்சனை கிளப்ப்ப்பட்ட போது பதிலளித்த, சபாநாயகர் அன்ஸாரி அவர்கள், இது சற்றே சிக்கலான விவகாரம், இது தனியாக விவாதிக்கப்பட வேண்டும், இதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார்.ஆக மக்களால் ஜனநாயக்க் கடமைகளை நிறைவேற்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதுவும் ஒரு அமைச்சர், அவைக்கே வருவதில்லை. இது ஜனநாயகத்தின் சாபக்கேடா அல்லது மக்களின் துரதிருஷ்டமா?நேற்றைய தினம் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன், அழகிரி அவைக்கு வராமல் மக்களை ஏமாற்றுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களாகிய நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. ஓட்டிற்குத்தான் கணிசமாக்க் கிடைக்கிறதே!! அவர் அவைக்குச் சென்றால் என்ன அல்லது எங்கு சென்றால்தான் என்ன?


மஞ்சள் குறிப்பு: அழகிரி கோடை வெயிலிலிருந்து தப்பித்து குளுமை பெற மாலத்தீவிற்குச் சென்றுள்ளார் அழகிரி. இவரது தந்தையார் ஆட்சியில் கோடையில் மின்வெட்டினால் ஏற்படும் வெக்கையிலிருந்து தப்பிக்க ஸ்ரீமான் பொதுஜன்ங்கள் எந்த தீவிற்குச் செல்வது ?

24 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Manjal Comment super!

கால்கரி சிவா said...

திருடர்களுக்கும், ரௌடிகளுக்கும் கோமாளிக்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் பணம் வாங்கி பிரியாணி தின்று ஓட்டுப் பொட்ட தமிழர்களுக்கு தகுந்த அமைச்சர் பெருமான். இதற்கு மேல் எதிர்பார்த்தால் தமிழனுக்கு செருப்புதான்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

aahaa..............me the first!

Baski said...

இந்த மாதிரி சபை எல்லாம் அண்ணனுக்கு சரிவராதுபா.. நம்ம அண்ணனுக்கு கட்ட பஞ்சாயத்து தான்... ஒரு சோம்பு ஒரு ஆல மர நிழல்... சுற்றி சில அடி பொடிகள்... (ஜால்ராஸ்). அண்ணன் ராஜாங்கம் எப்படி இருக்குனு பாருங்க.

இந்த மீரா குமாருக்கு ரொம்ப லொள்ளு தான்.... இவர் கிட்ட சொல்லிக்கிட்டு போகலையாம்... பிரதமர் கூட சொல்லிட்டு தான் போவாராம்.

//இவரது தந்தையார் ஆட்சியில் கோடையில் மின்வெட்டினால் ஏற்படும் வெக்கையிலிருந்து தப்பிக்க ஸ்ரீமான் பொதுஜன்ங்கள் எந்த தீவிற்குச் செல்வது ?
//

தலையில் ஈரத்துண்டை போட்டு கொண்டு தயாநிதி எடுக்கும் படங்களின் திருட்டு வி.சி.டி. பார்த்தல் கோடை வெப்பம் தெரியாது... :-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அமைச்சரைக் காணோம்னு செய்தி போட்டீங்க, சரி, போட்டோல அவர் கையில இருக்கற புத்தகத்தில 100 days plan என்று இருக்கே, அப்போ நூறு நாளைக்கு காணாமப் போய்டுவாரா?

Madumitha said...

போனா மட்டும் என்ன ஆயிடப் போது.

Anonymous said...

அப்போ இன்னும் ஒரு இடய்தேர்தல் நிச்சயம்,மதுரைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்

ஜெயக்குமார் said...

இந்தியாவின் துரதிருஷ்டம்.. மதுரை மக்களின் நல்ல நேரம்

Matra said...

Idhukku munnala indha MP/MLA thogudhila thaan kaanama thedikittirundhanga. Ippo avayiluma ?.

Shankar said...

இவர் தந்தையார் , இவரின் எதிர்கால பாதுகாப்பு கருதியே இந்த அமைச்சர் பதவியை பெற்றுத் தந்தார். இவர் சபைக்கு போவார் என்று எதிர்பார்ப்பது நம் அறிவின்மை. அது சரி...ஏன் அழகிரி இட்லிவடை மெஸ்ஸில் (இட்லிவடை ப்ளாக் போட்டோ) சாப்பிடுகிறார்...:)

கிரி said...

மிஸ்டர் இட்லிவடைகாரு,
கேள்வி கேக்கறது ஈசிங்காணும். பதில் சொல்றது எத்தினி கஸ்டம் தெரியுமா?

Anonymous said...


தலையில் ஈரத்துண்டை போட்டு கொண்டு தயாநிதி எடுக்கும் படங்களின் திருட்டு வி.சி.டி. பார்த்தல் கோடை வெப்பம் தெரியாது... :-)


அதெப்படி கரெண்ட் இருந்தாத்தானே வி சி டி பாப்பீங்க? அதுக்குத்தான் நாங்க ஆற்காடு வீராச்சாமின்னு ஒரு ஆளை வைத்து கரெக்டா கட் பண்ணிருவோமே, அந்த ஆளின் ஒரே தகுதி எந்தக் காலத்திலேயோ எலக்ட்ரிசிடி ஆஃபீசில ப்யூனா வேலை பார்த்தவன் என்பது மட்டுமே. பச்சையப்பா காலேஜிலே மொத்தமே 2 மாசம் டெம்ப்ரவரியா லெக்சரர் வேலை பார்த்தவன் எல்லாம் பேராசிரியர் என்று அழைக்கப் படுவது போல இவர் மின் வெட்டு மந்திரி. காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்ட பாவத்துக்கு உங்களுக்கு எல்லாம் இதுவும் வேணும் இன்னமும் வேண்டும்.. நல்லா அடி வாங்குங்கடா

Anonymous said...

கையில இருக்கற புத்தகத்தை நன்றாகப் பாருங்கப்பூ...

ஒன்று : முப்பது நாட்களில் ஹிந்தி பாஷை -By மன்மோகன் சிங்

இரண்டு : முப்பது நாட்களில் ஆங்கில பாஷை.- By அன்னை சோனியா

மூன்று : நாற்பது நாட்களில் நாலாயிரம் கோடி சம்பாதிப்பது எப்படி - By கலைஞர்.

Anonymous said...

தமிழன் என்று சொல்லடா
தலை கவிழ்ந்து நில்லடா!

தேடுதல் said...

ஐயா என் கெணத்த காணோம்... என் கெணத்த காணோம்....

Guru Prasath said...

Yes. That "100 Days Plan" is for Maldives trip. People misunderstood it.

ஜீயார் said...

அண்ணன் 30 நாளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்பது என புத்தகம் வாங்கி படிச்சிட்டு இருக்கிறார். சீக்கிரம் படித்து முடித்துவிடுவார். அதுவரை பொதுமக்களும் பாராளுமன்றமும் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
aahaa..............me the first!//

********

மானஸ்தனின் ஆஸ்தான இடமான முதல் இடத்தை பிடித்த வீரரே ... வாழ்க....

வலைஞன் said...

ஓட்டுபோடும் மக்களில் அறுபது % உண்மையான இட்லி வடையையே பார்த்திருக்க மாட்டார்கள் .இன்டர்நெட் இட்லி வடையின் கருத்துப்பற்றி யாருக்கு என்ன கவலை?
அல்லது அம்மா ஆட்சியில் மட்டும் என்ன பாலும் தேனும் ஓடியிதா என்ன?
அவர் கோடா நாட்டுக்குப் போய் மாதக்கணக்கில் டேரா போடவில்லையா?

L.Guruprasad said...

Ever since he was sworn in as a minister, he is travelling by air every 3 days - read in Indian Express newspaper!

Vijay said...

Annan does not know Hindi, English can barely write Tamil. So we have a real Illiterate for a Minister.

Madhavan said...

oooooops.. what to say.. 'hey bhagwaan, sabko Aanand theejiye!'
'Bhagawaane, ellorukkum, aanandham thaarunkal..'

காழியன் said...

பாராளுமன்றத்தில் பேச அடிபடையில் ஆங்கிலமோ இந்தியோ தெரிந்திருக்க வேண்டும். இவருக்கு இரண்டும் தெரியாது ஆனால் இவர் அமைச்சர். அரசாங்க அடிமட்ட வேலைக்குக்கூட 1008 நுழைவு தேர்வுகள் இருக்கு. ஆனால் ஏன் இது போன்ற பதவிகளுக்கு அடிப்படை தகுதி ஏதுமில்லை?. தமிழ்நாடு மற்றொரு பீகார்.

காழியன் said...

// வலைஞன் said...
அம்மா ஆட்சியில் மட்டும் என்ன பாலும் தேனும் ஓடியிதா என்ன?
அவர் கோடா நாட்டுக்குப் போய் மாதக்கணக்கில் டேரா போடவில்லையா//

சரி, அது சரி இல்லை என்றுதான மக்கள் இதுக்கு ஒட்டு போட்டனர். இதுவும் அதை காரணமாக காட்டி மோசமாக நடந்தால் அதுவே இருந்துட்டு போகட்டுமே.