பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 23, 2010

ஐபிஎல் ஜெயிக்க போவது யாரு ?

ஐபிஎல் ஜெயிக்க போவது யாரு ? விஞ்ஞான ரீதியான விளக்கம்தற்போதுள்ள கிரஹநிலைப்படி செவ்வாய்க்கு புதனும் கேதுவும் நண்பர்கள். எனவே சென்னை அணி இந்த வருட ஐபிஎல் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேற்கண்டவை ஒரு கணக்கு. அவ்வளவுதான்.

18 Comments:

LK said...

:)

Anonymous said...

இதென்ன பயங்கர காமெடியா இருக்கே!யாருய்யா இந்தக் கணக்க போட்டது.

ஹரன்பிரசன்னா said...

மும்பை இண்டியன்ஸ்க்கு 2ல சனி
சென்னைக்கு 9ல செவ்வாய்
இட்லிவடைக்கு நாக்குல சனி

ப்ரியா கதிரவன் said...

//இட்லிவடைக்கு நாக்குல சனி//

எப்படியோ சொன்னது நடந்தா சரி தான்.

Anonymous said...

சென்னை ஜெயிச்சாலும் பழியில் இருந்து தப்ப முடியாது. 12ல் கேது பாடாப் படுத்தாம உடாது. கேஸ், வழக்கு என்று அலைய வேண்டி வரும்.

இதுவும் ஒரு கணக்கு தான் :)

Rakesh said...

யாரு காசு அதிகமா கொடுக்கறாங்களோ அவங்க ஜெயிப்பாங்க!!

Madumitha said...

இப்படி எத்தனை
பேருப்பா
கெளம்பிருக்கீங்க.

Gaana Kabali said...

என் நண்பன் ஒருத்தனோட மனைவி கர்ப்பமா இருந்தாங்க. அவன் ஒரு சாமியார் கிட்ட போய் எனக்கு என்ன குழந்தை பிறக்கும்னு கேட்டான் .

அவன் " ஆண் குழந்தை பிறக்கும் . அப்படி பிறந்தால் குழந்தை எடைக்கு எடை வெள்ளி கொண்டாந்து ஆசரம உண்டியல்ல போடு"ன்னு சொல்லிட்டான்.

மனுஷனுக்கு குழந்தை பிறந்தா அது ஆணா இருக்கும் இல்ல பெண்ணா இருக்கும். இவன் சொன்னது சரின்னா எடைக்கு எடை வெள்ளி கிடைக்கும். இலேன்னா ஒன்னும் நஷ்டம் இல்ல. அந்த ஆள் இந்த சாமியார் கிட்ட மறுபடியும் வரமாட்டான் . அவ்வளவு தான்.

ஆனா மனுஷனுக்கு குரங்கு , பண்ணி , நாய்னு பல விதமா பொறக்கறதா இருந்தா தான் சாமியாருக்கு என்ன பொறக்கும்னு சொல்றது கஷ்டம். ரெண்டே ரெண்டு ஆப்ஷன் இருந்தா சொல்றது சுலபம் தானே?

இருக்கிறது ரெண்டே அணி தான். இதுல எதாவது ஒன்னு தான் ஜெயிக்கணும். சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெயிச்சா இட்லிவடை ஜோசியர் " நான் சொன்ன மாதிரியே நடந்தது பார் " னு காலர தூக்கி விட்டுட்டு கம்பீரமா நடக்கலாம்.
இல்லேன்னா எல்லோரும் இத ஒரு பொருட்டா மதிக்காம மறந்துவிடுவாங்க.

இந்த ஜோசியத்தை காலிறுதியில நாலு அணி இருக்கும் போதே சொல்லியிருக்க வேண்டியது தானே!
இதெல்லாம் ஒரு ஜோசியம் .
இதையும் விஞ்ஞான பூர்வமா நீங்க போடறீங்க! போங்கப்பா!

Anonymous said...

யாரு காசு அதிகமா கொடுக்கறாங்களோ அவங்க ஜெயிப்பாங்க!!

இதுதான் சரி.

இந்தியன் பைசா லீக்.

ramya said...

Chennai super kings la 's' miss aaguthey ??

வால்பையன் said...

வொளங்கும்!

IdlyVadai said...

//Chennai super kings la 's' miss aaguthey ??//

'sssss' அட ஆமாம். இமேஜ் செய்யும் போது கட் செய்துவிட்டேன். அதனால பயப்படாதீங்க முடிவு மாறாது :-)

IdlyVadai said...

//இட்லிவடைக்கு நாக்குல சனி//

நீங்க விமர்சனம் செய்யும் போது உங்க நாக்குல ...?

Baski said...

லலித் மோடி கம்ப்யூட்டர் ஐ ஹாக் பண்ணி, அவரு பிளான் என்னனு சொன்னா தான் சரியாக இருக்கும்.

மேட்ச் டிரா ஆகும் படி திட்டம் போட்டிருந்தாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை.

kggouthaman said...

kggouthaman = 5 = Budhan.
idlyvadai = 4 = Raahu.
செவ்வாய்க்கு கேதுவும் புதனும் நண்பர்கள்.
நான் ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்பதற்கு விளக்கம் கிடைத்துவிட்டது.
ஆனா - இந்தக் கட்டுரையை
'ராகு' காலத்தில் (Idly vadai column) படித்ததுதான் மனசுக்கு சஞ்சலமாக இருக்கு! ஈஸ்வரோ ரக்ஷது!

Palay King said...

இட்லிவடைக்கு நாக்குல சனி

Congrats

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//செவ்வாய்க்கு புதனும் கேதுவும் நண்பர்கள். //

ஆனா, மும்பை இந்தியன்சுக்கு பீல்டிங்கும் பேட்டிங்கும் நண்பர்கள், அதுனால.....சரி எதுக்கும் மேட்ச் பார்ப்போம்.

Gaana Kabali said...

நீங்க சொன்னபடியே நடந்துவிட்டது. பாராட்டுக்கள் !

உலக கோப்பை 20 -20 யில் ஜெயிக்க போவது யார் முடிந்தால் இப்போதே சொல்லுங்களேன்.

அரையிறுதி ஆடம் முடிந்த பின்னால் தான் உங்களால் சொல்லமுடியும் என்று நினைக்கிறேன்.

அப்பொழுது தான் ஒத்தையா ரெட்டையா பிடிக்க முடியும்.

நீங்க சொன்னா மாதிரி நடந்துட்டா "நான் சொன்ன மாதிரியே நடந்தது பார்த்தீர்களா" என்று சொல்லிக்கொள்ளலாம்.

அப்படி இல்லை என்றால் எல்லோரும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

உங்க வசதிப் படி செய்யுங்கள்.