பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 22, 2010

ஐ.பி.எல் பற்றி துக்ளக் சோ


பண்டோராவின் பெட்டி ! - துக்ளக் தலையங்கம்


‘ஐ.பி.எல். – மத்திய அமைச்சர் சசிதரூர் – ஐ.பி.எல்.லின் சர்வாதிகாரியான லலித்மோடி’ என்ற முத்தரப்பு விவகாரம் இப்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இப்படி ஒரு சர்ச்சை தோன்றியிருப்பது வியப்புக்குரியதல்ல. இத்தனை நாள் இந்த ஐ.பி.எல்.லில் பெரிய விவகாரம் தோன்றாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.



உலகின் மற்ற நாடுகளில் எப்படியோ – தெரியவில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், விரைவு வருமானம் உள்ள சமாச்சாரங்களில், நேர்மைக் குறைவு பெரிய அளவில் இருக்கிறது. பண முதலீடு செய்து, பல வருடங்கள் உழைத்து, தரமான பொருளை உற்பத்தி செய்து, ஆரம்ப நஷ்டங்களைத் தாங்கி, போட்டிகளை எதிர்கொண்டு, வர்த்தகத் திறனைக் காட்டி... பின்னர் லாபத்தைக் காணக்கூடிய தொழில்கள் பல உண்டு. இவற்றில் நேர்மைப் பஞ்சம் அதிகம் இருக்காது.

சூதாட்டம் மாதிரி, முதலைப் போட்டு, உடனடி லாபம் எதிர்பார்க்கக் கூடிய வர்த்தகங்களும் உண்டு; இவற்றில் நேர்மைக்குப் பஞ்சம் அதிகம் இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தது. முதலீடு அதிகமாக இருந்தாலும், அதன் பின்னர் உழைப்பு அதிகம் இல்லாமலேயே, பெரும் லாபத்தைக் காணக்கூடிய வர்த்தகமாகி இருக்கிறது – ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட்.

சினிமா எடுப்பது கூட உடனடி லாபம் தரக் கூடியதே. ஆனால், அதில் ரிஸ்க் அதிகம். இது அப்படி அல்ல. விலை கொடுக்கிறபோது ஜாக்கிரதையாக இருந்தால், விரைவிலேயே நல்ல லாபத்தைப் பார்க்க வாய்ப்புள்ள வியாபாரம் இது.

இப்படி இருப்பதால்தான், இதில் பண முதலீடு தாராளமாக நடக்கிறது. முதலீடு செய்பவர்கள் ‘கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா இன்னமும் முன்னேற வேண்டும்’ என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டவர்கள் அல்ல. சிலருக்குப் பணம் மட்டுமே குறி; சிலருக்குப் பணத்துடன், கூடவே வருகிற விளம்பரத்திலும் ஒரு கண். இப்படிப்பட்டவர்கள் சேர்ந்து நடத்துகிற ஆட்டத்தை நிர்வகிக்கிற லலித்மோடி, ஏற்கெனவே ‘பிரபலம்’ ஆனவர் என்பது, இப்போதைய செய்தி ஒன்றிலிருந்து தெரிகிறது.

‘போதை மருந்து விற்க முயற்சி, அதில் ஆயுதம் கொண்டு மிரட்டல்.... போன்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்... இரண்டு வருடம் சிறையில் இருந்தவர்...’ என்றெல்லாம் லலித்மோடியைப் பற்றி, சசிதரூரின் உதவியாளர் குற்றம் சொல்ல, அது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைகளில் மட்டும் பிரசுரமானது; ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இந்தச் செய்தியை உறுதியும் செய்திருக்கிறது. ஆனால், மற்ற பல பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியாகவில்லை. லலித் மோடியின் ‘செல்வாக்கு’ அப்படிப்பட்டது போலிருக்கிறது.

இப்போதைய விவகாரம், ஐ.பி.எல்.லில் புதிதாக ‘கொச்சி அணி’ விலைக்கு வாங்கப்பட்டது பற்றியது. இதை வாங்கிய நிறுவனம், கணிசமான அளவு பங்கை, ஒரு பெண்மணிக்குக் கொடுத்திருக்கிறது; அதாவது, அவருடைய உழைப்பிற்காக இந்தப் பரிசு. அந்தப் பெண்மணி, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூருக்கு நன்கு அறிமுகமானவர். அவருக்குப் பங்கு வரும் என்பதாலேயே, சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்தக் கொச்சி அணியைப் பெறுவதற்கு சசிதரூர் தனது அமைச்சர் பதவி செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு வந்திருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டைக் கிளப்பி விட்டவர் லலித் மோடி என்றாலும் கூட, இதில் உண்மை இருக்கக் கூடும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஒரு மத்திய அமைச்சர், ஐ.பி.எல். விஷயத்தில் தலையிடுவானேன்? ‘கொச்சிக்கு ஒரு அணி கிட்ட வேண்டும் என்பதற்காகவே நான் பேசினேன்’ என்கிற சசிதரூரின் விளக்கம், கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறது.

அமைச்சரின் நிலை இது என்றால், லலித்மோடியின் நிலையும் கேள்விக்குரியதாக ஆகியிருக்கிறது. கொச்சி அணியை வாங்கிய நிறுவனத்தின் விவரங்களைக் கூறியது போல, மற்ற பல அணிகளைப் பெற்ற நிறுவனங்களின் விவரங்களையும் அவர் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ‘இந்த வர்த்தகத்தில் எல்லாம், மோடி எந்த அளவிற்கு, என்ன ஆதாயத்திற்காக தலையிட்டிருக்கிறார்?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமைச்சர் சசிதரூரைப் பொறுத்தவரையில், அவர் யாருடைய ‘தத்துப் பிள்ளை’ என்று தெரியவில்லை; முக்கியமான ஒருவருடைய பலத்த ஆதரவு இல்லாமல் அவர் மந்திரி சபையில் இத்தனை நாள் தொடர்ந்திருக்க முடியாது; அவ்வப்போது எதையாவது எசகுபிசகாகப் பேசி, அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதை, தனது பொழுதுபோக்காகக் கொண்டவர், இதுவரை அமைச்சரவையில் தொடர்வது விசித்திரம். ஆனால், இந்த விவகாரத்தில் அவர் தவறு செய்திருக்கிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும்.

அது ஒருபுறமிருக்க, அமைச்சரையே குறிவைத்துக் கொண்டு, அந்த சுவாரஸ்யத்தில் ஐ.பி.எல்.லின் லலித் மோடியைப் பற்றிக் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. ஒன்பது அணிகளை வாங்கியவர்களைப் பற்றி எதுவுமே பேசாத லலித்மோடி, கொச்சி அணியை வாங்கிய நிறுவனத்தைப் பற்றி மட்டும் கேள்விகளை எழுப்புவானேன்? அவர் விரும்பியபடி வர்த்தகம் நடக்காவிட்டால், அவர் பிரச்சனைகளை எழுப்புவாரா? அப்படி என்றால் அவர் விரும்புகிறவர்கள் எல்லாரும் வெவ்வேறு அணிகளைப் பெறுகிறபோது – அதில் இவருக்குக் கிட்டுகிற ஆதாயம் என்ன?

லலித்மோடி எடுத்து வந்துள்ள முடிவுகள் பற்றி இந்திய கிரிக்கெட் போர்ட் ஒரு விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் கூடவே, இவ்வளவு முடிச்சுகள் உள்ள ஐ.பி.எல். மேட்ச்கள் முறையாகத்தான் நடக்கின்றனவா, அல்லது முன்கூட்டியே செய்யப்பட்டுவிட்ட வர்த்தக அல்லது சூதாட்ட முடிவுகளின்படி பந்தயங்கள் நடந்து முடிகின்றனவா?

கிரேக்க புராணங்களில், பண்டோரா என்று ஒரு பெண்மணியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. மனிதர்களைப் பழி வாங்க கிரேக்க தெய்வத்தால் அனுப்பப்பட்ட பெண் அவள். முதல் பெண் சிருஷ்டி. அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து, அதைத் திறந்தால் பெரும் ஆபத்து என்று கூறி அனுப்பினான் இறைவன். அவள் ஒருவனை மணந்தாள். அவன் அந்தப் பெட்டியைத் திறந்தான்.

இன்று நாம் அனுபவிக்கிற அவ்வளவு தீமைகளும், துன்பங்களும் அந்தப் பெட்டியிலிருந்து வெளியே வந்தவை. அவற்றை மீண்டும் பெட்டியில் அடைக்க முடியவில்லை. அந்தப் பெட்டி, ‘பண்டோராவின் பெட்டி’ (Pandora's Box) என்று புகழ் பெற்றது.


சரி. லலித்மோடி, சசிதரூரை மட்டம் தட்டுவதற்காக ஐ.பி.எல்.லின் பண்டோரா பெட்டியைத் திறந்து விட்டார். இந்திய கிரிக்கெட்டில் பெரும் பணம் புகுந்ததினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் அனைத்தும், இனி பொதுப் பார்வைக்கு வரட்டும். சட்டப்படி தவறுகள் நடந்துள்ளனவோ, இல்லையோ – சமூகத்தின் காதில் நிறையவே பூ சுற்றப்பட்டிருக்கிறது என்பதாவது தெரிய வரட்டுமே!

( நன்றி: துக்ளக் )


ஐபிஎல்-4ல், காதில் பூ சுற்றப்பட்டிருக்கும் இந்த சமூகமே சியர்லீடர்ஸ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது!

14 Comments:

sowri said...

It will surely open up the other ugly side also. For press, one more news and business as usual. Nothing for the common man and society for sure!

snkm said...

எல்லா உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்தாலே நாட்டுக்கு வருமானம் நன்றாக வரும் போல இருக்கே ! வரி செலுத்தாமல் இருக்கவே விளையாட்டுகள் பெயரில் முதலீடுகள் செய்யப்படுகின்றனவோ!

kggouthaman said...

லலித்தும் சசியும் ஒருவர் காதை ஒருவர் பிடித்துக்கொண்டு உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என்று நிறைய தோப்புக் கரணம் போடவேண்டும் என்று நினைக்கின்றேன். ஐ பி எல் பார்க்கும் ரசிகர்கள் என்ன செய்வது?

வழிப்போக்கன் said...

புதிருக்குள் புதிராக, மர்ம முடிச்சுகளும்,பயங்கரத் திருப்பங்களும் நிறைந்த மர்மநாவலாக இருக்கும் போலிருக்கிறதே இந்த ஐ.பி.எல்.

சீனு said...

//ஐபிஎல்-4ல், காதில் பூ சுற்றப்பட்டிருக்கும் இந்த சமூகமே சியர்லீடர்ஸ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது!//

Lol...

உண்மையான இஸ்லாமியன் said...

நல்ல தலையங்கம்.. இதிலெல்லாம் உண்மை வெளீவரும் என நம்புகிறோமே.. நம்மைப்போல முட்டாள்கள் இருக்க முடியுமோ? இவ்வளவு பெரிய கிரிமினலை நம்பி இவ்வளவு பணம் போட்டிருக்கும் எல்லா கிரிமினல்களும் சேர்ந்து உண்மையை வெளியே வர விடுவார்களா? அதிலும் ஒரு குழுவின் முதலாலி ஒரு முஸ்லிம்.. அவர் பாதிக்கப்பட்டால் பிரதமர் எப்படி தூங்க முடியும்?

இந்த குழப்படிக்கெல்லாம் காரனம் மோடி என்ற பெயர் கொண்ட ஆள் என்பதால் ஏதேனும் கொஞ்சம் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம்..

Itsdifferent said...

The most shocking aspect in all of these is the fact that the Government of India was sleeping so long not even bothering to question the income and tax details of IPL for so long. This has not been done behind the scenes or hidden, every newspaper worth the salt kept publishing how much had been paid for each team/player etc. Even then they did not bother to question the buyers for their source of income, nor ask IPL to pay the taxes on their revenue.
If the govt cannot act on a case which involves thousands of crores, should we trust this govt on anything they say.
Congress is truly a curse on India, I wish I had some magic wand to wipe off "Con"gress.

Rammalar said...

ரோட்டில் நின்று கொண்டு டிவி கடைகளில் இருக்கும் டிவிகளில் கிரிக்கெட் பார்க்கும் பைத்தியங்களை செருப்பாலும் விளக்குமாற்றாலும் ஓட ஓட அடித்தால் தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஓயும்.

சீனு said...

//ரோட்டில் நின்று கொண்டு டிவி கடைகளில் இருக்கும் டிவிகளில் கிரிக்கெட் பார்க்கும் பைத்தியங்களை செருப்பாலும் விளக்குமாற்றாலும் ஓட ஓட அடித்தால் தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஓயும்.//

இப்ப என்ன ஆச்சுனு என்னையெல்லாம் திட்டறீங்க? ;)

Anonymous said...

Biggest comedy of IPL is... it's a "Taxfree charity organization" according to the Govt, despite there are thousands of Crores involved.

Wonder how Cho missed this important info in this write-up.

khaleel said...

your pandora story is unfinished.
After all the bad things come out of the pandora's box finally one little angel like thing will jump out of the box.
that angel name is called 'hope'.

அமுதப்ரியன் said...

நல்ல தலையங்கம்..

எப்படி அப்படியே துக்ளக்ல எழுதிட்டு இட்லிவடைலையும் எழுதிட்டேங்களா மிஸ்டர் சோ அவர்களே சாரி இட்லிவடை அவர்களே சாரி மானஸ்தன் அவர்களே சாரி ....
அமுதப்ரியன்

shivkumar said...

IPL controversy will be the breaking news for all print & media people till other sensational news available.everyone has forgotten wat happened at danttewada massacre.we the people of INDIA r responsible for our selective amneshia.shiv iyer

naarayanan said...

ரசிகர்களுக்கு என்ன குறை வந்து விட்டது. நன்றாக entertainment கிடைகிறதா இல்லையா, அது வரை சந்தோஷப் பட வேண்டியது தான்.