பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 21, 2010

முடிவல்ல ஆரம்பம் – நாடகம் – மினி விமர்சனம்

சென்ற சனிக்கிழமை, நண்பர் திருமலை ராஜன் புண்ணியத்தில் மணி ராமின் புதிய நாடகமான ‘முடிவல்ல ஆரம்பம்’ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
(இங்கு கலிபோர்னியா – கூப்பர்டினோ டீ-ஆன்சா அரங்கில்)...

நிகழ் கால அரசியலை மையமாக வைத்து நாடகம் போடுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அதுவும் மணி ராம், சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கு, அவர்களின் நிஜ வாழ்க்கை உண்மைப் பெயர்களையே வேறு கொடுத்து அசத்தி விட்டார். இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான துணை முதல்வர் ரோலில் நடித்து பட்டையைக் கிளப்பியதும் மணிராம் தான். 90 நிமிடம் நம்மை இருக்கையில் கட்டிப்போட்ட இந்த நாடகம் (இடைவேளை கிடையாது) ஹே ராம் படம் மாதிரி, கிளைமாக்ஸில் ஆரம்பித்து, விறுவிறுவென்று பின்னோக்கிச் சென்றது.

எனக்குத் தெரிந்த வரை, இந்த நாடகத்தில் ஒரு சிறிய குறை என்னவென்றால், துணை முதல்வரின் அள்ளக்கைகள் சிலர் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் தான். மற்றபடி, மணி ராமின் ‘அவதார்ஸ்’ நாடகக் குழு, மீண்டும் ஒரு முறை தன் தொழில் முறை நேர்த்தியை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ள நாடகம் இது.

இந்த நாடகம், இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், அரங்கேறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அப்படித் தப்பித் தவறி அரங்கேற்றினால், உங்கள் இல்லத்துக்கு, ஆட்டோவில் உருட்டுக்கட்டைகள் மற்றும் சர்வாயுதபாணிகளாய், பல அழையா விருந்தாளிகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Any way, மணி ராம் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய Hats off !

இந்த நாடகம் பற்றிய விரிவான விமர்சனத்தை நீங்கள் அடுத்த மாத ‘தென்றல்’ இதழில் எதிர்பார்க்கலாம்.

The new poster for Mudivalla Arambam. Set in a political backdrop, it is an intense drama in which the lives of the common people intertwine with the powers that be.

Chief Minister Ilavendan’s Interview…….


(கூட்டாஞ்சோறு வலைப்பதிவில் வந்த விமர்சனம், நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் இங்கே. நன்றி: http://koottanchoru.wordpress.com )

5 Comments:

Anonymous said...

”தென்றல்” இதழ் எங்கே கிடைக்கும்? அதற்கு வலைமனை முகவரி ஏதும் உள்ளதா?

யோசிப்பவர் said...

http://www.tamilonline.com/thendral/

பாரதி மணி said...

இம்மாதிரி நாடகங்களை தமிழ்நாட்டை விட்டு ஏழு கடல் தாண்டித்தான் மேடையேற்றவேண்டியிருக்கிறது!

அந்தக்காலத்தில், சோவுக்கு இந்த தைரியம் இருந்தது! அவரது ‘கோ வாடிஸ்’, துக்ளக் உதாரணங்கள்.

யதிராஜ சம்பத் குமார் said...

பாரதி மணி அவர்களுக்கு..

உண்மையே உன் விலை என்ன?, நேர்மை உறங்கும் நேரம் இவற்றை விட்டு விட்டீர்களே?

Anonymous said...

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
மூதாட்டியை கால் பதிக்கவிடாமல் திருப்பி அனுப்பியது பற்றி எல்லோரும் உரத்த குரலில் 'எரிந்த கட்சி, எரியாத கட்சி' பாடிக்கொண்டிருப்பதற்கு என்னடா காரணம் என்று பார்த்தால், அண்ணன் அஞ்சா நெஞ்சன் ஒரு தீவை வாங்குவதற்காக, தன ரத, கஜ, துரக, பினாமி அடியாட்களுடன், (பிரதமர் அலுவலக அனுமதி கூட பெறாமல்,) சென்றிருக்கிறாராமே. அவர் விமானமேறி சென்ற விவரங்கள் ஊடகத்தில் வராமல் வேறு திசையில் மக்களைத் திருப்பத்தான், பார்வதி அம்மாள் விவகாரங்கள் பரப்பப்பட்டு, அதில் டோண்டு போன்றவர்கள் கூட மாட்டிக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறதே?