பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 20, 2010

மதி கார்ட்டூன்ஸ் !விவரங்களுக்கு இங்கே செல்லவும்

மதியின் கார்ட்டூன்ஸுக்கு நான் அடிமை. அவரை கார்ட்டூன் வழியாக தான் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் கலர்கலராக அவர் கார்ட்டூன் புத்தகங்கள் வெளிவந்தது. புத்தகக் கண்காட்சியில் உடனே வாங்கினேன், அட்டை படத்தில் பார்த்த போது தான் கொஞ்சம் அதிர்ச்சி. மதி சீரியல் நடிகர் மாதிரி அழகாக இருந்தார்.

நான் கட்டாக புத்தகங்கள் வாங்கிய சமயம் புத்தகக் கண்காட்சியில் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தார், அவரிடம் கையெழுத்தைக் கேட்க கூச்சமாகவும் பயமாகவும் இருந்ததால் வந்துவிட்டேன்.

இட்லிவடையில் அவர் கார்ட்டூன் 'சைடு பாரில்' வருவதை பார்த்திருப்பீர்கள். ஒரு நாள் ஒரு பெரிய மனுஷர் "நீங்க மதியின் கார்ட்டூன்ஸை போட அவர் பர்மிஷன் கொடுத்தாரா ?, நீங்க இப்படி போடுவது நியாயமா ?" என்றார். நான் "மதியே சொல்லட்டும் எடுத்துவிடுகிறேன்" என்றேன். இன்றுவரை மதி எடுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை ( ஏன் என்றால் அவர் இட்லிவடை பார்ப்பதில்லை :-)

ஆர்.கே.லக்ஷ்மன் அவர்களின் கார்ட்டூன் புத்தகம் ஒன்று வந்திருக்கு இந்தியா 1947-2000 என்று நினைக்கிறேன். அது மாதிரி மதி ஒரு தொகுப்பு கொண்டு வர வேண்டும், நிச்சயம் அது ஒரு வரலாற்று புத்தகமாக இருக்கும்.

மதியின் கார்ட்டூன் புத்தக விளம்பரம் இட்லிவடையில் வருவது எனக்கு சந்தோஷம். யார் கண்டது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இட்லிவடையாக அவரிடம் இந்த புத்தகத்தை நேரில் வாங்கினாலும் வாங்குவேன் :-)

அன்புடன்,
இட்லிவடை

6 Comments:

சீனு said...

//மதியின் கார்ட்டூன்ஸுக்கு நான் அடிமை.//

Me 2...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மதியின் கார்ட்டூன்களுக்கு நானும் அடிமைதான்.

ஜெயக்குமார் said...

//யார் கண்டது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இட்லிவடையாக அவரிடம் இந்த புத்தகத்தை நேரில் வாங்கினாலும் வாங்குவேன் :-)//

என்னோட பேரையும் குலுக்கல்ல தேர்ந்தெடுத்துருங்க..

:-)

NIZAMUDEEN said...

//இன்றுவரை மதி எடுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை ( ஏன் என்றால் அவர் இட்லிவடை பார்ப்பதில்லை :-)//

அப்ப சரி, நானும் சொல்லலை.
ஆனா, கொஞ்சம் பெரிசா மட்டும்
இனிமே போட்டுடுங்கோ!!!

eramurukan said...

மதியின் கார்ட்டூன்கள் பற்றி எனக்கு ஒரே ஒரு விமர்சனம் தான். பேச்சு அதிகம். சில சமயம் படத்தை விடவும் அதிகம். ஆர்.கே.லக்ஷ்மண், டேவிட் லோ, உன்னிகிருஷ்ணன் (மாத்ருபூமி), கேசவ் கார்ட்டூன்களில் பேச்சு கச்சிதமாக இருக்கும். காந்தி படத்தின் கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதியின் காதைக் கடித்து, 'காந்தி, சார்' என்று அடையாளம் சொல்கிற ஆர்.கே.எல் கார்ட்டூன் உதாரணம்

யோசிப்பவர் said...

விளம்பரத்தை முன்கூட்டியே எனது ’மதி’யூகத்தால் சரியாக சொன்ன எனக்கு, இட்லிவடை இந்தப் புத்தகத்தை பரிசளிப்பாரா?