பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 18, 2010

லக்ஷண இலச்சிணையும், அவலக்ஷண ஜால்ராக்களும்.

ஜால்ரா என்றால் ஜோடியாக-இரண்டு இருக்க வேண்டும். இந்த வாரம் கண்ணில்பட்ட ஜால்ரா, விடுதலை சிறுத்தைகள்-கி.வீரமணி காம்பினேஷன். (கி - என்பது கி கொடுத்தால் ஆடும் பொம்மை என்றும் பொருள் கொள்ளலாம் போல).
சில நாட்கள் முன்னாடி போடப்பட்ட பதிவு மக்களுக்கு நினைவிருக்கலாம். இந்தக் கடித்ததில் தமிழக அரசின் கோபுரச்சின்னம் மாற்றப்படலாம் என்ற செய்தி குறித்து எழுதியிருந்தேன். அது நடந்துவிடும் போல இருக்கு.தமிழக அரசு மதச்சார்பிண்மையை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசின் இலச்சிணையை மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல புது சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் விடுதலைச் சிறுத்தைகள் ஏதோ தங்களுக்கு உதித்த ஐடியா போல இந்த கோரிக்கையை வைத்துள்ளார்கள். நிச்சயம் கலைஞர் நீங்க கேட்பது போல கேளுங்க நாங்க செய்வதைப் போல செய்கிறோம் என்று சொல்லியிருக்க 100% வாய்ப்பு உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அரசு சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டுமாம். இவ்வளவு வருஷம் கழித்து தமிழ்ப் புத்தாண்டு போல மேலும் ஒரு ஞானோதயம்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை எப்படிப் பார்க்கவேண்டுமோ அதே போலத்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமும். அதைக் கோயிலாகப் பார்ப்பதை விட்டுவிட்டு தமிழ சின்னமாகப் பார்ப்பது தான் சரி. கோயில்கள் உடனடியாக தமிழகத்தை உணர்த்தும். அந்தச் சின்னத்தில் அசோகரின் சிங்கச் சின்னமும், தேசியக்கொடியும் இருக்கிறது. பாவம் இது எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. கோயில்கள் எல்லாம் வரலாற்றுச் சின்னம், ஆனால் தன் பெயர் வரலாற்றில் வரவேண்டும்/ நிலைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி எல்லாம் தோழமை கட்சிகளிடம் சொல்லிக்கொடுத்துப் பேச வைக்கிறார் முதல்வர்.

செம்மொழி மாநாடு வருகிறது அல்லவா? அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
தமிழக அரசின் முத்திரையில் இருக்கும் கோபுரத்துக்கு பதிலாக அய்யன் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கவேண்டும் என்பது இவர்களின் புதுக் கோரிக்கை. திருவள்ளுவரை யாரும் பார்த்தது கிடையாது, முன்பு பஸ்களிலும், பாலச்சந்தர் படத்திலும் உட்கார்ந்துக்கொண்டு இருந்தார். ஆனால் கன்னியாகுமரியில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். பாவம். ஏன் என்றால் அப்போதுதானே அவர் பெரிதாகத் தெரிவார்? கலைஞருக்கும் புகழ் கிடைக்கும்? வாழும் வள்ளுவன் புகழ் பெற நின்று கொண்டு எழுத வைக்கப்பட்ட வள்ளுவன் புகழ் வாழ்க!
சரி இரண்டு நாட்களுக்கு முன் பேசியதை பாருங்கள்


"...ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்.அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி".


இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.


இது 100வது குறள், இதனுடைய விளக்கம் "இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளைஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்" இது கருணாநிதி சொன்ன விளக்கம் தாம். சில மாதங்கள் முன்பு இவர் யாருடைய அறிக்கைக்கும் பதில் அறிக்கை விடமாட்டேன் என்று வசனம் பேசினார். இப்போது இப்படி ஒரு தரம் தாழ்ந்த பேச்சு. இந்த அழகில் இவர் திருவள்ளுவர் சின்னம் வைக்கப் பாடுபடுகிறார். நல்ல கூத்து.

சரி ஜெயலலிதா இப்படி செய்தார் என்றால் நீங்கள் என்ன செய்தீர்கள் ? தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர் போய் சேர்ந்துவிட்டார், ஆகவே எனக்கு வோட்டு போட்டு முதல்வர் ஆக்குங்கள், அப்படி ஒரு வேளை எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் முதல்வர் பதவியை திரும்ப அவரிடமே கொடுத்துவிடுகிறேன் என்று வோட்டு கேட்டதை சுலபமாக மறந்துவிட்டீர்கள்.

85 வயதிலும் அண்ணா சொன்ன கடமை உணர்வுள்ள/ கண்ணியமான/கட்டுப்பாடான பேச்சு. பலே!


முரசொலி 9ஆம் தேதி வெளியிட்ட பட்டிக்காடும் பட்டணமும் என்ற பகுதியில்

பட்டிக்காடு:- "ஏன்தம்பி; தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் உள்ள கோபுரத்துக்குப் பதிலாக திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் - என்ற கோரிக்கை எப்படி?"

பட்டணம்:- "வரவேற்கத் தகுந்த நல்ல யோசனைதான். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒருவர் - இதற்கான தீர்மானம் கொண்டுவந்து - எல்லாக் கட்சியினரும் ஒருமனதாய் நிறைவேற்றினால் சாத்தியமாகக்கூடிய கோரிக்கைதான்!"
என்கிறார்கள்.


ஆனால் தமிழக அரசு அலுவலகங்களில் இந்த மாற்றதுக்கு முன்பே திருவள்ளுவர் சிலையைக்கொண்ட சின்னம் வந்துவிட்டது. (பார்க்க ஸ்டாலின் படம்).
எல்லாம் நல்லாவே நடக்கிறது, கடைசியில் "வாய்மையே வெல்லும்!"


மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறை போல், கிருஸ்துவ அறநிலையத்துறை, முஸ்லிம் அறநிலையத்துறை என்ற இரண்டு புது துறைகளை புதிய சட்டமன்றத்தில் அறிவிக்கட்டும். வரலாற்று நிகழ்வாக இருக்கும் இதை செய்ய அவருக்கு மனமும் தைரியமும் கொடுக்க எல்லாம் வல்ல மதசார்பற்ற இறைவனைப் பிராத்திப்போம்.

33 Comments:

Anonymous said...

All Secular nations of the world follow their Xian ethos and cultures in their Govts.

India shud first think of independence of Hindu temples from Govt. Control, before getting into all these non-sense.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

அப்படியே அண்ணா அறிவாலயம் என்பதில் உள்ள ஆலயத்தையும் தூக்கிவிட்டால் இன்னும் சரியாக இருக்கும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Yellow comment - Nach!

வலைஞன் said...

கோபுரம்,
போயே போச்சு !
போயிந்தே!!
Its gone!!!
2011 லிலும்
இவர்களே வந்தால்????
மறைந்த திருவள்ளுவர்
OUT
வாழும் வள்ளுவர்(படம்)
IN

ஜெயக்குமார் said...

வள்ளுவனின் வாக்கு பலிக்கலாம்.. ஆனால் தமிழ்நாடு வாழவேண்டுமெனில் வலைஞனின் வாக்கு பலிக்கக்கூடாது.

ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ மன்னராட்சி நடப்பதைப்போல நினைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். மஞ்சள்துண்டு மறைந்ததும் இவர் செய்த எல்லா துக்ளக் சீர்திருத்தங்களும் மாற்றப்பட்டு மீண்டும் ஒரு நல்ல சமூகம் உருவாகும்.

அதுவரை மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்த கொடுமைக்கு இதையெல்லாம் அனுபவிக்க வேண்டியதுதான்.

படிச்சவன் சூதும், வாதும் செஞ்சால் அய்யோனு போவான், அம்போனு போவான் - மஹாகவி பாரதியார் ( சும்மா தகவலுக்காக)

ஜெயக்குமார் said...

மஞ்சள் கமெண்ட் சூப்பர் மற்றூம் எதார்த்தமான உண்மையும்கூட

அமர் said...

இது கட்டுரையாக இல்லை. வெறும் புலம்பலாக இருக்கிறது.

Srinivasan said...

Aiyya karuppu kannadi chinnamaga podumayyaa!! Ellorukkum therintha oru porul. Ithuvarayum iruntha thalaivargallellam anintha porul.

Venky said...

Hi,
very well said..Last few years of DMKs rule has reached heights of shameless rule of idiots...They think people are bunch of fools and it is easy to divert them..
If these leaders spend some money on power/electricity, water and roads, people would not follow these jokers anymore...
Hope some revolution would happen in TamilNadu and these real crooks will be out of the country..

Anonymous said...

பேய் ஆட்சி செய்தல் பிணம் தின்னும் சாத்திரங்கள். துக்ளக் ஆட்சி செய்தால் இப்படித்தான் ஏதாவது நடந்து கொண்டிருக்கும். தமிழகத்தின் தலைநகராக மதுரையை அறிவிக்காமல் இருந்தால் சரி.

ஆடும் வரை அவர் ஆடட்டும். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது. அது விரைவில்....

-மன்னார் சாமி

mak said...

தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா?

1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

உண்மையான இஸ்லாமியன் said...

நடுநிலை இந்துக்களை இந்து வெறியர்கள் ஆக்கும் மு.க.வாழ்க!!!

Anonymous said...

குரோம்பேட்டைக் குறும்பன் said...

அப்படியே அண்ணா அறிவாலயம் என்பதில் உள்ள ஆலயத்தையும் தூக்கிவிட்டால் இன்னும் சரியாக இருக்கும்.
..

அண்ணா அறிவுப்பள்ளிவாசல் என்பதில் வெறும் வாசல் மட்டும் தான் உள்ளது.
அண்ணா அறிவுத்தேவாலயத்திலும் தேவன் இருக்கிறான்.

அறிவாலயத்தில் தான் எதுவுமே இல்லை. அறிவு கூட இல்லை என்பது வேறு விசயம்.

Renu said...

yellow comment super, k.k idukalai manilam katathinalum katathuvar,k.k vaitha valluvar silaiyai vita itha kopuram satharanamanathu ena ninaithuvitar pola? k.k melum melum enkal pavathi kodikola vendam,

Renu said...

நடுநிலை இந்துக்களை இந்து வெறியர்கள் ஆக்கும் மு.க.வாழ்க!!!

ஜீயார் said...

எனக்கு ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது. கோபுரத்தை மாத்தலனா இனி 2 மணி நேரம் கரண்ட் கட் ஆகாதுன்னு சொல்ராங்களே அது உண்மையா. திருவள்ளுவர் சின்னம் வந்தா இனி பரிட்சை பேப்பரில் திருக்குறளுக்கு 20 மார்க் போடப்போறாங்களாமே அது உண்மையா? அப்புறம் எதுக்குய்யா குய்யோ முறையோன்னு கத்திட்டு இருக்கீங்க.

Anonymous said...

மாக் என்பவர் பெயருக்குத் தகுந்தாற் போலவே மாக்கானாக எழுதியிருக்கிறார். இந்தக் கோபுரம் சின்னத்தைத் தேர்ந்தெடுத்த எந்த வரலாறும் தெரியாத உளரல் அது. அப்படியானால் இந்திய இலச்சினையில் இருக்கும் புத்த மத அசோக சக்கரத்தையும் நீக்க வேண்டுமே? அப்படியே வள்ளுவரை சின்னத்தில் வைத்தால் அவர் சொன்ன இந்து மதக் கருத்துக்களையும் நீக்க வேண்டுமே? அப்படியே அரசாங்கத்தில் மதம் இருக்கக் கூடாது என்றால் என்ன மயித்துக்குடே இந்து அறநிலையத் துறை அரசுக்குக் கீழே வருகிறது? அதையெல்லாம் விட்டு விட வேண்டியதுதானே? ம்தசார்பின்மை அரசு வேண்டும் என்றால் எதற்கு பழநி கோவில் காசும் திருச்செந்தூர் கோவில் காசு மட்டும் உனக்கு வேண்டும்? ஆக கொள்ளையடிக்க மட்டும் உனக்கு மதம் வேண்டுமா? கோபுரம் என்பது தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் காணப் படும் ஒரு அரிய வகைச் கட்டிடக் கலையின் சின்னமாகும். அதைத்தான் வைத்திருக்கிறார்கள் ஆழ்ந்த ஆலோசனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு. வருடப் பிறப்பை மாற்றினார்கள் இப்பொழுது கோபுரத்தை நாளைக்கு எதையும் மாற்றுவார்கள் இவர்கள் சந்ததியினர் இதற்கு எல்லாம் பதில் சொல்லும் காலம் வரும். கருணாநிதி செய்யும் பாவத்திற்கு யார் விலை கொடுக்கப் போகிறார்களோ?

Anonymous said...

அந்த சின்னத்தில் இருக்கும் “வாய்மையே வெல்லும்” என்னும் வாக்கியமும், உபனிஷத் வாக்யம் தான். அதையும் எடுத்து விடுவார்களா?
[http://en.wikipedia.org/wiki/Satyameva_Jayate]

-ராஜேஷ்

Anonymous said...

What DMK Govt doing is correct only and should have been done earlier itself. jayalalithaa govt doesnt have the guts to do such things. why in a secular country there should be a representation of one religion?

Anonymous said...

\\... நாளைக்கு எதையும் மாற்றுவார்கள்...//

எது வேண்டுமானாலும் மாறும் ஆனால் பெயரில் உள்ள நிதிகள், ஆங்கிலப் பெயர்கள், சுத்த சமஸ்கிருதப் பெயர்கள் எதுவுமே மாறாது. கூடவே வீட்டுப் பெண்களின் திலகமும், விரதம் உள்ளிட்ட மற்ற சாங்கியங்களும் மாறாது. வேணும்னா டாஸ்மாக்ல போயி ஒரு கட்டிங் அடிச்சுட்டுப் பேயாமப் படுங்க தல!

Itsdifferent said...

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க இது போன்ற சிக்கலான ஒன்றில் நேரத்தை செலவிட இவர்களுக்கு எப்படி தான் மனது வருகிறதோ என்று தெரியவில்லை.
அப்படி இந்து மதத்தின் பேரில் இவர்களுக்கு எல்லாம் என்னதான் வெறுப்போ தெரியவில்லை. இவர்கள் என்னை செய்தாலும், நாம் பொறுத்து கொண்டு இருப்பதினால் இவர்கள் நம்மை அலட்சியமாக நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். எல்லா விதத்திலும் ஏமாற்றப்பட்டு, நாம் கோயில் சொத்துக்கள் கொள்ளயடிக்கபட்டும் இவர்களுக்கு இன்னும் இந்த மத வெறி அடங்கவில்லை. இதனை பேசும் இவர்கள் "கஞ்சி" குடிப்பதையோ, "மேரி" யை கொஞ்சுவதையோ விட முடியுமா? வெட்கம் கெட்ட இந்த மனிதர்களை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.
மதசார்பற்ற அரசு நடத்த வேண்டும் என்றால் எல்லோரும், கேட்கும் படி, இந்து அறநிலைய துறையை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கட்டும், அல்லது, உள்ளூர் பெரியோரிடம் அதை கொடுக்கட்டும். அதில் வரும் பணம், உள்ளூர் மரியாதை, பதவி போதை இவர்களுக்கு வேண்டும், ஆனால் அதற்க்கான மரியாதையை கொடுக்க மனம் வராது.
இந்து மதம், இவ்வளவு பொறுமையாக இருப்பதினால் தான், இவர்கள் ஏறி விளையாடுகிறார்கள், இஸ்லாமிய மதத்தை பற்றி தப்பி தவறி ஒரு வார்த்தை சொல்லட்டுமே பார்போம் அல்லது கிருத்தவ மதத்தின் அட்டூழியங்களை பற்றி பேசட்டுமே, அவர்கள் மத மாற்றத்திற்கு செய்யும் கோடிகள் பற்றி ஒரு வார்த்தை பேசட்டுமே, இவர்களின் வீரத்தை நாம் மதிப்போம்.
வெட்கம் கெட்ட, கோழைகளே, இவை செய்ய முடியாத பட்சத்தில், நீங்கள் மத சார்பற்றவர்கள் இல்லை, நீங்கள் தான் நிஜ மத வெறியர்கள், இந்து மதத்தின் மீது வெறித்தனமான வெறுப்பு கொண்டவர்கள். உங்கள் வீடு பெண்களை முதலில் மதசர்பற்றவர்களாக இருக்கு சொல்லுங்கள் பார்ப்போம், பிறகு வீதிக்கு வந்து அடுத்தவருக்கு நீங்கள் அறிவுரை சொல்லலாம். பதவி இருக்கும் ஆணவத்தில் நீங்கள் ஆடும் ஆட்டம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும். அந்த நான் நாளை நோக்கி நம்பிக்கையுடன்...

ஸ்ரீனி said...

//அந்த சின்னத்தில் இருக்கும் “வாய்மையே வெல்லும்” என்னும் வாக்கியமும், உபனிஷத் வாக்யம் தான். அதையும் எடுத்து விடுவார்களா?” // இது முதல் ரவுண்டு Printing Contract தானே.. வாய்மையே வெல்லும் இன்னுமொரு வருஷத்துக்கப்புறம் மாத்தினா, அடுத்த காண்ட்ராக்டுலயும் காசு அடிக்கலாமே. ரெண்டையும் ஒண்ணாப் பண்ண இதெல்லாம் செய்யுறவங்க என்ன கேனைங்களா..

ஸ்ரீனி said...

// கருணாநிதி செய்யும் பாவத்திற்கு யார் விலை கொடுக்கப் போகிறார்களோ?// வேறு யாரு!! காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் மக்கள்தான்..நம்ம மக்களுக்குத்தான் கள்ளும் பிரியாணியும் காசும் குடுத்தாச்சுன்னா எது எப்டிப்போனா என்ன..என் வீட்ல நேரடியாகக் கைவெக்காதவரைக்கும் என்ன வேணாப் பண்ணிக்கோங்கிற இந்த மனோபாவத்துக்கு விலை கொடுக்கப்போவது அவர்கள் தானே !!

Sreenivasan said...

மறுபடியும் சொல்லுறேன் ஓட்டுக்கு அவனுங்க கொடுத்தது காசு இல்ல, மாறாக காசு வாங்கிகிட்டு ஓட்டு போட்ட கம்மினாட்டிங்களுக்கு அது வாய்க்கரிசி.

R.Gopi said...

இந்த பகுத்தறிவு பகலவனின் தொல்ல தாங்க முடியலேடா நாராயணா...

கேட்பார் பேச்சு கேட்டு ஆடும் பொம்மை போல் ஆகி விட்டாரே...

கடமை, கண்ணியம், தட்டுப்பாடு - இது தான் இன்றைய என் அரசின் உறுதிப்பாடு (”தல” சொல்லாதது... நம்மளாவது சொல்லுவோம்...)

Anonymous said...

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

இதைத்தான் கலைஞர் செவ்வனே பின்பற்றி வருகிறார்

விருச்சிக காந்த் said...

//அப்படியே அண்ணா அறிவாலயம் என்பதில் உள்ள ஆலயத்தையும் தூக்கிவிட்டால் இன்னும் சரியாக இருக்கும்.//

அறிவாலயம் ன்னு சொல்லுறதுக்கு பதிலா "கருணாநிதி நிதியாலயம்" ன்னு பேரை மாத்தி வெச்சிடலாம்..பின்னால வர்ற அவரோட சந்ததிகளுக்கு ஒட்டு கேக்க வசதியா இருக்கும்..
மேலும், இந்த ப்ளாக் ல பின்னூட்டம் எழுதுற பாதி பேர் தி.மு.கவுக்கு ஒட்டு போட்ட அறிவிலிகளே.

மஞ்சள் ஜட்டி said...

திமுக சொல்கிறது மின்சாரத்தை மக்கள் குறைவாக பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என்று,,,இதோ இன்னும் கொஞ்சம் வருடங்களில் உணவு பற்றாகுறை ஏற்படும்,,அப்போது திமுக சொல்லும் மக்கள் இனிமேல் தினமும் ஒரு வேலை மட்டுமே உணவு உட்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்,,,முட்டாள்களின் கைகளுக்கு ஆட்சி சென்றால் தமிழகம் இருளில்தான் இருக்கும்,,இதற்கு சான்று தற்போது நடப்பில் இருக்கும்,,சராயகடைகள்,,,மின்சாரம் கட்,,போன்றவை.

Gazy... said...

நல்ல முடிவுதான்

சீனு said...

மஞ்சள் கமென்ட் சூப்பர்.

//இங்கே ஒரு விளம்பரம் வர இருக்கிறது//

தினமணி 'மதி' நுட்பம்?

CM ரகு said...

I agree with the comment of "Itsdifferent"....

//தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க இது போன்ற சிக்கலான ஒன்றில் நேரத்தை செலவிட இவர்களுக்கு எப்படி தான் மனது வருகிறதோ என்று தெரியவில்லை.
இந்து மதத்தின் மீது வெறித்தனமான வெறுப்பு கொண்டவர்கள். உங்கள் வீடு முதலில் மதசர்பற்றவர்களாக இருக்கு சொல்லுங்கள்.//

Repeatu

Anonymous said...

திருவள்ளுவர் என்கிற ஒரு இந்துப் பார்ப்பானை (பார்பான் தானே?) சின்னமாக வைத்தால் அது எப்படி மதசார்பற்றதாகும்? பகுத்து அறியும் போது ஒழுங்காக பகுக்கவோ, அறியவோ சொறியவோ மாட்டீர்களா?

காழியன் said...

ஹஜ் பயணத்துக்கு கொடுக்கப்படும் மானியம் மதசார்புடயது என்று அது நிறுத்தப்படுமா? இது பற்றி முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவாரா? அல்லது "இது அதிமுக காலத்தில் கூட வழங்கப்பட்டது" என்று கூறுவார?