பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 16, 2010

க ஒ கு, ஆ கு க இ

முன் குறிப்பு: க ஒ கு. ஆ கு க இ = கழகம் ஒரு குடும்பம், ஆனால் குடும்பம் கழகம் இல்லை

தி.மு.க. எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றி கட்சி தலைவரை தவிர மற்றவர்கள் பேட்டி அளிப்பது ஏற்புடையது அல்ல" இது நேற்று கலைஞர் வெளியிட்ட அறிக்கை. இதை எச்சரிக்கை என்றும் சொல்லலாம்.

நிற்க.

நேற்று துக்ளக் வெளியிட்ட அட்டை படத்துக்கும் இந்த எச்சரிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் அவர் கொடுத்த அறிக்கை என்னை போன்றவர்களுக்கு, தி.மு.க.வினருக்கும், மு.க.வின் அனுதாபிகளுக்கும் இது எச்சரிக்கை. அந்த விவரம் கீழே...



அப்படி என்ன தான் சொல்லியிருக்கார் கலைஞர் ? என்று பார்க்கும் முன் அழகிரி என்ன சொல்லியிருக்கார் என்று பார்த்துவிடலாம்.

ஆரம்பம் இங்கே
"அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் முதல்வர் கருணாநிதி மட்டுமே எனக்குத் தலைவர்; தலைவர் கருணாநிதிக்குப் பிறகு, தி.மு.க.வில் யாரையும் நான் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்' இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியைக் கேட்டபோது, "எனக்குப் பிறகு எந்த ஆண்டு முதல்... என்பதே எனக்குத் தெரியாது; அழகிரியிடமே கேளுங்கள்' என்றார்.

முதலவர் விடவில்லை "நான் நினைத்ததை அப்படியே செய்து முடிப்பவர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்' என்று முதல்வர் கருணாநிதி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து வார இதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி அண்மையில் அளித்த பேட்டியில் "அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் உரசல் எதுவும் இல்லை; அப்படி அவர்கள் உரசிக் கொண்டால் அதனால் ஏற்படும் காயமும் அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்துக்குத்தான்' என்று கூறியுள்ளார்.

விடுவாரா அழகிரி விமானநிலையத்தில் பேட்டி கொடுத்தார்

கேள்வி:- தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா?

பதில்:- எங்கள் கட்சியான தி.மு.க. ஜனநாயக கட்சி. கட்சி தலைவர் பதவிக்கு போட்டி இருந்தால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கேள்வி:- மு.க.ஸ்டாலினை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா?

பதில்:- மு.க.ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக இருக்கிறார். தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால், அந்த பதவிக்கு நான் போட்டியிடுவேன்.

கேள்வி:- மு.க.ஸ்டாலினை உங்கள் தலைவராக (கட்சித்தலைவராக) ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- தற்போதைய சூழ்நிலையில் இந்த கேள்வி எழவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், தெம்புடனும் இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கத் தேவை இல்லை.


கடைசியாக "மனச்சாட்சியின்படி எனது கருத்தை தெரிவித்து இருக்கிறேன். எதை சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஜனநாயக முறையில் தேர்தல் (தலைவர் பதவிக்கு) வந்தால், நானும் போட்டியிடுவேன்" என்றார்

ஸ்டாலின் தன் பங்கிற்கு ஏதாவது சொல்ல வேண்டாமா ? ஒரு பத்திரிக்கைக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், "எனக்கு அதிரடி அரசியல் தெரியாது' என்று கூறியிருந்தார். அதற்கு மு.க.அழகிரி "அதுபற்றி ஸ்டாலினிடமே கேளுங்கள்' என்றார்

கடைசியாக "'என் தந்தையும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்பினால், எனது மத்திய அமைச்சர் பதவியை கனிமொழிக்காக விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால், கனிமொழிக்காக பதவியில் இருந்து விலகுவேன் என யார் சொன்னது?" என்று அழகிரி நேற்று முன் தினம் கூறியுள்ளார்.

அப்பா இரண்டு மகன்கள் தொலைப்பேசியிலே அல்லது நேரில் பேசாமல் பத்திரிக்கை இவ்வளவையும் பேசியுள்ளார்கள். ஆனால் கலைஞர் நேற்று விடுத்த அறிக்கை எப்படி ஆரம்பிக்கிறது ? ( இங்கெ சில பகுதிகள் தான் தந்துள்ளேன் மீது பகுதியை நீங்களே எங்காவது படித்துக்கொள்ளுங்கள் )

அரசியல் சம்மந்தமான அல்லது அவரவர் சொந்தக்கருத்துகள் பற்றி சர்ச்சைகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளில் சொன்னவை, சொல்லதவை என்று தங்கள், தங்களது எண்ணங்களுக்கேற்ப செய்திகளை வெளியிடுவதும், அதனால் தேவையற்ற குழப்பங்கள் தூண்டி விடப்படுவதும் - கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் நிகழ் காலத்திலும் நடப்பவைகளாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.


அப்பா, அண்ணன், தம்பி என்று இந்த மூவருக்கும் நடக்கும் இந்த பேச்சு போட்டியில் பாவம் அண்ணாவும் பெரியாரும் வரவில்லை என்றால் கழக கொள்கை என்ன ஆவது ?

"அதனால்தான் தந்தை பெரியார் அவர்களால் ''என் திராவிட ஜீவரத்தினங்களே'' என்று அழைக்கப் பெற்றவர்களும், அண்ணா அவர்களால், ''ஒரு தாயின் வயிறு இடம் தராத காரணத்தால் பல தாய்களின் வயிற்றில் உதித்த சகோதர்கள் நாம்'' என்று உணர்ச்சி பொங்க குறிக்கப்பட்டவர்களுமான உடன்பிறப்புக்களின் பாசறையாம்

இந்தக் கழகமும் - கழகத்தை வழி நடத்துவோரும் - முன்னணி தளகர்த்தர்களும் - படை நடத்தும் பாங்கறிந்தோரும் - எழுத்தாளர், பேச்சாளர், செயல்வீரர் என்று எண்ணறிந்த அண்ணன் தம்பியரும் - அக்காள் தங்கைகளும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே உறுதியானதும், இறுதியானதுமான இந்த அறிக்கையை நாள் வெளியிட நேர்ந்துள்ளது.


மேலே பாருங்க அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. இப்ப சொல்லுங்க கழகம் ஒரு குடும்பம் தானே ?

சரி கடைசியாக என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள்
"வெறும் வாயை மெல்லுவோருக்கு கொஞ்சம் அவல் கொடுப்பதைப் போல'' நமது கழகத்தினர் யாராயினும், எவராயினும், எந்த அமைப்பில், பொறுப்பில் இருப்பவராயினும் அல்லது அவரது குடும்பத்தினராயினும் கட்சித் தொடர்புடைய செய்திகளை கட்சியின் தலைமை தான் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடப்படும் கருத்துகளை செயல்படுத்துவது மட்டும் தான் தங்கள் பணி எனக் கொண்டு அனைவரும் தொண்டாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அழகிரியிடம் 1ரூபாய்க்கு ஒரு போன் போட்டு சொல்ல வேண்டியதை இரண்டு பக்க அறிக்கையாக நமக்கு சொல்லியிருக்கார். ஏன் என்றால் ஸ்டாலினை போல கலைஞருக்கு அதிரடி அரசியல் தெரியாது!

10 Comments:

Sreenivasan said...

//அண்ணன் தம்பியரும் - அக்காள் தங்கைகளும் தங்கள் பொறுப்புணர்ந்து

மனைவி, துணைவி, பேரனுங்க, மருமகனுங்கள விட்டுட்டியே பெருசு

//"'என் தந்தையும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்பினால், எனது மத்திய அமைச்சர் பதவியை கனிமொழிக்காக விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன்.

அட பணத்துக்கு ஓட்ட வித்த கூமுட்டைங்களா நாங்க ஓட்டுக்கு குடுத்த பணம் பணமில்ல உங்களுக்கு வாய்க்கரிசி அதுனாலதான் இப்படி உரிமையா குடும்பத்துகுள்ளரயே விட்டுகுடுக்குறோம்.

snkm said...

நேரடியா சொன்ன உடனே ஏதாவது நடந்துட்டா, அந்த நினைப்பு கருணாநிதிக்கும் இருக்கிறது! மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியவர்கள் தன் மக்கள் மட்டும் தான் மக்கள் என நினைத்துக்கொண்டு இருக்கும் வரை இவையெல்லாம் இருக்கும்!

jaisankar jaganathan said...

//"க ஒ கு, ஆ கு க இ"//

ம க இ வ் த சு கே ம கு வே த ம ச ரி க ம ப த நி

(இதுக்கு எந்த அர்த்தமும் இல்லை)

Madumitha said...

இவங்க லொள்ளு
தாங்கமுடியலப்பா.

சாய்ராம் கோபாலன் said...

Super

சாய்ராம் கோபாலன் said...

போட்டோ பொன்மணி:

//எம்மாடி...! எங்க தலைவர் வந்திருக்காக... கழுத்து சுளுக்கற மாதிரி திரும்பிப் பாக்குறாக... கொஞ்சம் முன்னால வந்து மூஞ்சைக் காட்டும்மா, மின்னல்...!! ( நன்றி: தினமணி )//

ஜொள்ளு எங்கள் பிறப்புரிமை. நாங்கள் உடன் பிறந்த ஒரே காரணத்துக்காகா அக்கா, தங்கைகளை தவிர மற்ற எவரையும் "பிகர்" என்று ஜொள்ளு விடும் உத்தமர்கள் !

Anonymous said...

///Pey aatchi seythaal pinam thinnum saathirangal/////

Prashanth

Anonymous said...

==மக்களே இங்கே ஒரு விளம்பரம் வர இருக்கிறது. மதி நுட்பத்தால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். க்ளு எல்லாம் கேட்கபிடாது !==

i hope its not Joseph vijays sUrA :(

- Vijayidamirundu makkalai kaapatrum kazagam

சீனு said...

Lol

Anonymous said...

'Kudumba arasiyal' and ' Vaarisu arasiyal' enpathum namakku ondrum puthithu allavey ?

Mothilal-Jawaharlal-Indra-Sanjay-Rajiv-Soniya-Rahul

Subbarayan-Mohan Kumaramangalam-Rangarajan Kumaramangalam

Lallu-rabridevi

Babu Jagajivanram- Mira kumari

Karunanidhi-Maaran-Stalin-Kanimozhi-Azhagiri-Dayanidhi Maran

MGR-Janaki-Jayalalitha

Ramadoss-AnbumaNi

Karunakaran(Kerala)-Muralidharan

Ayya Era Chezhiyan-Era nedunchezhiyan

EVK Sambath - Sulochana Sambath- EVKS Elangovan -Iniyan Sambath

Ayya Mooppanar- GK Vasan

KA Mathiyazhagan- KA Krishnasamy

Captain Vijaykanth-Anni & Satheesh

vaayppu kidaikkaatha varai nam naattil yellorum yOkkiyarkaLE (Lack of opportunity is otherwise called as chastity ...enpathu pOla)

soraNaiyaRRa pothu janam.