பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 15, 2010

ஐ.பி.எல் மோடி வித்தை - பத்ரி சேஷாத்ரி


ஐ.பி.எல் என்னும் பணம் புரளும் கிரிக்கெட் அமைப்பில் சேறும் சகதியும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றதன.

இதுவரை 8 பிராஞ்சைஸ் அமைப்புகள் அனுமதிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கப்பட்டன. ரிலையன்ஸ் (முகேஷ் அம்பானி), இந்தியா சிமெண்ட்ஸ், டெக்கான் க்ரோனிகிள், சாராய விஜய் மல்லையா, நடிகர் ஷா ருக் கான், ஜி.எம்.ஆர் என்னும் தில்லி விமான நிலையத்தைப் பராமரிக்கும் நிறுவனம், பாம்பே டையிங் நிறுவன நுஸ்லி வாடியாவின் மகன் நெஸ் வாடியாவும் நடிகை பிரீத்தி ஜிந்தாவும் இணைந்து - என்று ஏழு பேர். இத்துடன் ராஜஸ்தான் அணியை மனோஜ் பதாலே என்பவர் தலைமையில் சிலர் வாங்கினர். பின்னர் நடிகை ஷில்பா ஷெட்டி கொஞ்சம் பணம் கொடுத்து குறிப்பிட்ட அளவு பங்குகளை வாங்கிக்கொண்டார்.


ஐ.பி.எல் என்பது கிரிக்கெட் மட்டும் அல்ல. இந்திய கிரிக்கெட்டில் எக்கச்சக்கப் பணம் கொட்டிக் கிடக்கிறது என்றாலும், ஐ.பி.எல் என்பது அதற்கெல்லாம் ஒருபடி மேலே என்று போய்விட்டது. இங்கே அணிகளை வாங்கலாம், விற்கலாம். வீரர்களை வாங்கலாம், விற்கலாம். ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் தனியாக எக்கச்சக்கமான விளம்பர டீல்களைப் போட்டுக்கொள்ளலாம். ஆட்டம் நடக்கும் இடத்தில் சாராயம் பரிமாறலாம். அரையாடைப் பெண்களை ஆடவிட்டு ரசிகர்கள் நரம்புகளுக்கு முறுக்கேற்றலாம். அவ்வப்போது விளம்பர இடைவேளைக்கு இடையில் ஓரிரு பந்துகளும் போடப்பட்டு கிரிக்கெட்டும் நடக்கும். வியர்வை, வேகம், விளையாட்டு, வெற்றி, இசை, ஆட்டம், உடல், பணம், வேட்கை, பொய், சண்டை ஆகியவற்றுடன் இப்போது ஊழலும் மிரட்டலும் சேர்ந்துகொண்டுள்ளன.

ஏற்கெனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் 2 அணிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் ராந்தேவு ஸ்போர்ட்ஸ் (தமிழ் பத்திரிகைகள் ரெண்டஸ்வுஸ் என்பார்கள்!) என்ற நிறுவனம் ஒரு அணியை வென்றது. மற்றொரு அணி சஹாராவுக்குச் சென்றது. ராந்தேவு அணி வெற்றிபெற மத்திய அமைச்சர், சர்ச்சைப் பிரியர் சஷி தரூர் பெரும்பாடு பட்டார். கேட்டால், எல்லாம் என் மாநிலம் கேரளாவுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் வரவேண்டும் என்ற காரணத்தால்தான் என்றார்.

லலித் மோடி என்பவர்தான் (மோதி என்கிறார்கள் வடவர்கள். ஆனால் நாம் மோடி என்றே சொல்வோம்) ஐ.பி.எல் கிரிக்கெட் ஐடியாவை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கொண்டுவந்து அவர்களை அதை ஏற்கச் செய்து இப்போது பணம் கொழித்துக் கொடுப்பவர். ஆனால் அவரது தாய்வீடாகிய ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியைப் பிடித்ததும் முதல்வர் அஷோக் கெலாட்டின் முதல் வேலை என்ன என்று நினைக்கிறீர்கள்? ராஜஸ்தான் கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி லலித் மோடியை மாநில கிரிக்கெட்டிலிருந்து தோற்கடித்ததுத் துரத்தியதுதான். ஆனாலும் ஐ.பி.எல் பதவியைக் கெட்டியாகப் பிடித்துவைத்துள்ளார் மோடி. ஏனெனில் அவரை விட்டால் ஐ.பி.எல் பற்றிய முழு விவரமும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள வெறு யாருக்கும் சரியாகத் தெரியாது.

மோடி, பதாலே இருவருக்குமான உறவு, மனோஜ் பதாலே யார், இவர் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர்பாக என்ன செய்துவந்தார் போன்ற பல விஷயங்களுக்குள் போனால் இந்தக் கட்டுரையை முடிக்கமுடியாது. எனவே அதனை எடிட் செய்துவிட்டு மேலே தொடர்வோம்.

சஷி தரூர் உதவியுடன் ராந்தேவு கொச்சி அணியைப் பெற்றாலும், லலித் மோடி அவர்களுக்குக் கெட்டது செய்ய முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது. ராந்தேவு தரப்பினர் சொல்வது இதுதான்: “எங்களை அணியை விற்றுவிட்டு ஓடிவிட்டால் 50 மில்லியன் டாலர் தருவதாகச் சொன்னார் மோடி. இந்த அணியை வேறு யாருக்கோ கொடுக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். நாங்கள் மாட்டேன் என்றதும், விட்டேனா பார் கொச்சியை என்றார். மிரட்டினார். தொல்லை கொடுத்தார். இத்யாதி, இத்யாதி.”

உடனே சஷி தரூர் கொச்சி அணி சார்பில் முறையிட்டுள்ளார் போலும். ஆனால் லலித் மோடி சொல்கிறார்: “என்னை ஒரு மத்திய அமைச்சர் மிரட்டினார். ராந்தேவு ஸ்போர்ட்ஸ் யார் யார் கையில் இருக்கிறது தெரியுமா? சஷி தரூருடைய நெருங்கிய நண்பியான சுனந்தா புஷ்கர் என்பவருக்கு ராந்தேவு ஸ்போர்ட்ஸில் சும்மானாச்சிக்கும் அதாவது ஃப்ரீயாக நிறைய பங்குகளைக் கொடுத்துள்ளனர். அது ஏன்?”

சஷி தரூர், தனக்கும் ராந்தேவுக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதும் இல்லை, தான் எந்த வகையிலும் பணம் சம்பாதிக்கப்போவதில்லை என்கிறார். ஆனால் அவர் சுனந்தா புஷ்கரை மூன்றாவது திருமணம் செய்யப்போகிறார் என்று ஒரு வதந்தி. தினம் தினம் பேப்பரை எடுத்தால் புதிது புதிதாக “எக்ஸ் ஃபேக்டர்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அரைகுறை ஆடைப் பெண்மணி யாரையாவது காண்பிக்கிறார்கள். யாருக்கோ லலித் மோடி விசா கொடுக்காதே என்று சொல்ல, சஷி தரூர் கொடுத்தார் என்று ஒரு செய்தி!

ஐ.பி.எல் என்பதே நாசமாகப் போகட்டும் என்று சொல்வது ஒரு பக்கம். என் கட்சி அது அல்ல. எந்த ஒரு புது முறை புகுத்தப்பட்டாலும் அது சரியாக ரெகுலேட் செய்யப்படவேண்டும். ஃபேர்பிளே இருக்கவேண்டும். பொய், திருட்டு, புனைசுருட்டு, ஏமாற்றல் இல்லாமல் இருக்கவேண்டும்.

1. சஷி தரூருக்கும் சுனந்தா புஷ்கருக்கும் என்ன உறவு என்பது முக்கியமில்லை. ஆனால் சஷி தரூர் நெருங்கி உறவாடி கொச்சிக்கு ஐ.பி.எல் அணி கிடைக்கக் காரணமானவர் என்றால் சுனந்தா என்ற அவருடைய நண்பருக்கு ஃப்ரீ பங்குகள் கிடைப்பது புரைப்பரைட்டி ஆகாது. சொல்லப்போனால் இந்த ஃப்ரீ பங்குகள் என்பதே கொஞ்சம் ‘பஜனை’ மேட்டராக உள்ளது. ஐ.பி.எல் அணிகளின் குறைந்தபட்ச விலையே 70 மில்லியன் டாலர் என்று இருக்கும்போது, ‘இந்தா வைத்துக்கொள் சும்மா. எனக்கு மார்க்கெட்டிங் பண்ண உதவு’ என்று சொல்வது அபத்தமாகத் தெரிகிறது. தால் மே குச் காலா ஜரூர் ஹை!

2. சஷி தரூர் வெளிப்படையாக ராந்தேவு ஸ்போர்ட்ஸுக்கு ஆதரவாக ஈடுபட்டதில் தவறில்லை. ஆனால் சுனந்தா மேட்டரில் கொஞ்சம் கோட்டை விட்டுள்ளார்.

3. லலித் மோடி மிகவும் டேஞ்சரஸ் ஆன ஆள். இவ்வளவுதான் நான் வெளிப்படையாகச் சொல்லமுடியும். மற்றவை எல்லாம் ஆதாரமற்ற வதந்திகள் என்றாகிவிடும். ஐ.பி.எல் மட்டுமல்ல, கிரிக்கெட் ஆணையம் தொடர்பான எதிலுமே இந்த ஆசாமிக்குப் பதவி கொடுக்கக்கூடாது. ஆசாமி வாயைத் திறந்தால் கெட்ட பேசுதான். அமெரிக்கையாகப் பேசவே தெரியாது. பாலிவுட் ஃபிகர்களுடன் ஜல்சா செய்ய விரும்புகிறார் என்றால் இவர் பேசாமல் பாலிவுட் படங்கள் எடுக்கப் போகலாம்.


4. பி.சி.சி.ஐ என்பது ஒரு சாக்கடை. பதவு வெறி பிடித்தவர்கள், விவசாயம் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு கிரிக்கெட் பவார்தான் முக்கியம் என்பவர்கள், ஏற்கெனவே சீரழித்துவிட்டார்கள் கிரிக்கெட்டை. காரணம் ஒரு பக்கம் எக்கச்சக்கமான பணம். சரியான நிர்வாகிகள் கிடையாது. எனவே ஊழல் மலிந்த அரசியல்வாதிகளும் பவர்புரோக்கர்களும் மட்டும்தான் அங்கே இருப்பார்கள்.

இப்போது என்ன மாற்றம் நிகழலாம்?

* அரசால் நேரடியாக ஒன்றும் செய்யமுடியாது. அதற்கான ‘தில்’ அரசிடம் இல்லை. பாஜகவிடமும் இல்லை, காங்கிரஸிடமும் இல்லை.
* நிலைமை இன்னமும் மோசம் ஆகும். அதன் பின்னர் பி.சி.சி.ஐ உள்ளிருந்தே மாற்றங்கள் ஏற்படும். இப்போது இருக்கும் சில கிழ அரசியல்வாதிகள் மண்டையைப் போடுவதும் அதற்கு உதவலாம்.

* பாலிவுட் ஆசாமிகள் நிறையப் பணம் தோற்கவேண்டும். அவர்களை கையைச் சுட்டுக்கொண்டால், பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓடிவிடுவார்கள். அதற்கு எல்லாம் வல்ல பிராட்மேனை வேண்டிக்கொள்ளுங்கள்.


- பத்ரி


16 Comments:

cho visiri said...

Good analysis.

Jayakanthan - ஜெயகாந்தன் said...

என்ன சொல்ல வர்றீங்க ? மப்புல எழுதுன மாதிரி தெரியுது. // ஆசாமி வாயைத் திறந்தால் கெட்ட பேசுதான். அமெரிக்கையாகப் பேசவே தெரியாது. //

நாகு (Nagu) said...

// (தமிழ் பத்திரிகைகள் ரெண்டஸ்வுஸ் என்பார்கள்!)//
:-)

யாரோ ஒரு அரசியல்வாதி ராந்தேவூவை ஓடிவிடு என்று மிரட்டினார் என்கிறார்கள். அது யார் என்று என்னைத்தவிர எல்லோருக்கும் தெரிகிறது.

சூதாடிகள் இன்னும் பஞ்சாபை எத்தனை போட்டிகளில் ஜெயிக்க வைக்கப்போகிறார்கள்?

நாகு (Nagu) said...

ஐ பி எல்லில் மேட்ச் பிக்சிங் எல்லாம் கிடையாதாம். வெறும் 'MODI'fied தானாம்.

Dr.P.Kandaswamy said...

விளையாட்டு வினையாவது இப்படித்தானோ?

kggouthaman said...

ஓஹோ, இதுல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? அதிக அளவு - (கோடி கோடியாகப்) பணம் புழங்கும் இடங்களில் ஊழலுக்கு பஞ்சமே இருக்காது போலிருக்கு.

jaisankar jaganathan said...

//பாலிவுட் ஆசாமிகள் நிறையப் பணம் தோற்கவேண்டும். அவர்களை கையைச் சுட்டுக்கொண்டால், பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓடிவிடுவார்கள்//
அவங்க பணம் சம்பாரிச்சா உங்களுக்கு ஏன் கஷ்டம்

M Arunachalam said...

Regarding the likely changes to come out in future due to the IPL Kochi episode, is the author guessing or cursing?

Zee Group Subhash Chandra (of ICL fame) must be feeling happy for the plight Modi is undergoing now.

DMK billionaires must be wondering how come we missed the IPL bus.

R. Jagannathan said...

/ அவங்க பணம் சம்பாரிச்சா உங்களுக்கு ஏன் கஷ்டம் / -ஐபியெல் விளம்பரதாரர்கள் தான் அவர்களுக்கு பணம் கொட்டித் தருகிறார்கள். அந்த பொருள்களின் விலை எப்படி cheappaga இருக்க முடியும்? அவற்றை வாங்கும் நாம் தான் பணம் இழக்கிறோம். - ரா. ஜகன்னாதன்

ந.லோகநாதன் said...

This is too much on the CRICKET. People do more than politics ...ONLY big people involved in this

Gaana Kabali said...

லலித் மோடி இளம் வயதில் கொள்ளைக்காரனாகவும் இருந்திருக்கிறார். ஆதாரத்திற்கு கீழ்கண்ட வலை
இணைப்பை சொடுக்குக:
http://timesofindia.indiatimes.com/articleshow/5814316.cms

dondu(#11168674346665545885) said...

//ஃபேர்பிளே இருக்கவேண்டும்.//
அதெல்லாம் இருக்காது. ஃபோர்பிளே வேண்டுமானால் வேணது இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Fantastic article.. Cricket has lost its glory loong back. I really pity abt the ppl following sincerly on the scores and points...amidst these controversies one should not forgot that the INdian HOCKEY players fighting for their salaries. Definitely Cricket is a CASHCOW in India and IPL is a Successful Example of how to make money out of ppl passion...

** prashanth

Anonymous said...

That's why these people won't allow true cricketers like KAPIL DEV inside BCCI. What a shame!
KAPIL DEV only started this type of formate T20 league first in India.

PALANI

Anonymous said...

That's why these people won't allow true cricketers like KAPIL DEV inside BCCI. What a shame!
KAPIL DEV only started this type of formate T20 league first in India.

PALANI

செந்தழல் ரவி said...

தீயை மிதிச்சுக்கிட்டே ஓடுற மாதிரி இருக்கு கட்டுரை...

கொஞ்சம் சரியா புரியலைன்னாலும் குட் கட்டுரை.