பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 13, 2010

புதிய சட்டசபை காட்சிகள்.

புதிய சட்டசபை காட்சிகளைப் பலர் டிவியில் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த காட்சிகள் எப்படி இருக்கும் என்று வாசகர்களுக்கு தெரிவிப்பது நம் கடமை. நேற்று நடந்த சில காட்சிகள் இவை...


சபை கூடிய உடன் முதல் வேலையாக நடிகர் எஸ்.வி.சேகர் கலைஞர் இருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் ஃபோடோகிராபருடன் வந்து, "நேற்று எனக்கு உடம்பு சரியில்லை, டாக்டர் என்னிடம் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன் இது. நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற வந்தேன், படித்துப் பாருங்க ஆனா புரியாது" என்றார்.

உடனே கலைஞர் அது என்ன என்று பார்க்கும் போது ஃ போட்டோகிராபர் படம் எடுக்கிறார்.

ஃபோட்டோகிராபர் படம் எடுத்தவுடன் கலைஞரிடம் அந்த துண்டு சீட்டை வாங்கிகொண்டு தேசிய கொடி குத்திய பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஆஸ்கர் அவார்ட் வாங்கிய திருப்தியுடன் தன் இருக்கைக்கு சென்று அமர்கிறார்.

சபாநாயகர் வரும் போது எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதர்சனம் சபாநாயகர் பின்னாடியே வருகிறார். வழக்கம் போல அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் போடுகிறார்கள்.


சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தவுடன், தினமும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதர்சனம் மற்றும் சிலர் என் பின்னாடியே வருகிறார்கள், இது மரபு இல்லை. இது போல புதிய மரபுகளை கூட்டணி கட்சிக்காரர்கள் உருவாக்க வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்றவுடன்,

சுதர்சனம் அவர்கள் பேச ஆரம்பிகிறார். உங்க பின்னாடி வருவது எங்கள் தலையெழுத்து. நாங்க மட்டும் டிவியில் தெரிய வேண்டாமா? நீங்க சபைக்கு வரும் போது உங்களை காட்டுகிறார்கள், அதனால் உங்க பின்னாடி வந்தா எங்களையும் காட்டுவார்கள். எங்களை காட்டினால் தானே நாங்கள் சட்டசபைக்கு வருவதும் பேசுவதும் மக்களுக்குத் தெரியும்? எங்க மூஞ்சியும் டிவியில் தெரியும்? என்று கேள்வி எழுப்புகிறார்.

சபாநாயகர் குறிக்கிட்டு சுதர்சனம், நீங்கள் நேற்று இரண்டு முறை, 'டிவி'யில் வந்ததை நானே பார்த்தேனே என்கிறார்.

அப்போது கலைஞர் சுதர்சனத்திடம் ஏதோ சைகை செய்ய அவர் உடனே கலைஞர் இருக்கும் இடத்துக்கு போகிறார். பக்கத்தில் சென்றவுடன் பேராசிரியர் இருக்கை காலியாக இருக்க அதில் உட்கார வைக்கிறார். "இன்று என் ஆசைத் தம்பியை துணைக்கு அழைத்தேன். என்னை காண்பிக்கும் போது இவர் முகமும் சூரிய ஒளிபட்ட மாதிரி பிரகாசமாக டிவியில் தெரியும். சுதர்சனம் என்பது பெருமாள் சக்கரத்தின் இன்னொரு பெயர், ஆனால் அதற்கும் சூரிய ஒளியுடன் கூட்டணி தேவையாக இருக்கிறது". சுதர்சனம் உடனே எழுந்து "இன்று நான் என்ன பாக்கியம் செய்தேன்" என்று கூறி அமர்கிறார்.

அதிமுக எம்.எல்.ஏ எழுந்து நின்று "முதல்வர் ஏதோ தனியா உட்கார பயமாக இருக்கு என்று சுதர்சனத்தை கூப்பிட்டார், துணைக்கு அழைத்ததை ஏதோ துணை முதல்வர் பதவியே கொடுத்த மாதிரி சந்தோஷமா இருக்கிறார்" என்று சொன்னவுடன் அவையில் கூச்சல் குழப்பம் என்றவுடன், சிலர் டீ, காபி சாப்பிட சென்றுவிட்டார்கள்.


கொஞ்ச நேரத்தில் யாரோ ஒருவர் உள்ளே அவசரமாக ஒரு துண்டு சீட்டை எடுத்துக்கொண்டு வந்து காங்கிரஸ் தலைவரிடம் கொடுக்கிறார். படித்தவுடன் அவர் முகம் இறுகுகிறது. இதை கண்ட திமுக எம்.எல்.ஏக்கள் என்ன என்று விசாரிக்க "தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று கூறுகிறார்.

உடனே அதிமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து கட்சி சார்பான நியூஸ் எல்லாம் சட்ட்சபையில் விவாதிக்க கூடாது என்று கூச்சல் போடுகிறார்கள். உடனே காங்கிரஸ் பகுதியில் இருந்து சன்னமான குரலில் யாரோ காங்கிரஸ் எப்போ கட்சியா இருந்து இருக்கு? எப்பவுமே கோஷ்டிதானே என்று சொல்லறார். இதறேகிடையே அன்பழகன் "மற்ற கட்சியாக இருந்தாலும் வாழ்த்து சொல்லுவது நமது மரபு" என்று சொல்ல அதற்கு ஒரு சில திமுக அனுதாபி காங்கிரஸ் கட்சிக்காரர்கள் "எல்லாம் கலைஞர் அரசின் சாதனை, திருமங்கலம், பென்னாகரம் எங்களுக்கு நிறைய கற்று தந்துள்ளது" என்று சொல்கின்றனர்.

பா.ம.க எம்.எல்.ஏ எழுந்து "முல்லை பெரியாறு பிரச்சனையில் திமுக எடுத்துள்ள நிலைபாடு என்ன என்று விளக்கம் தேவை" என்று கூற, கலைஞர் "தற்போது அந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது, தீர்ப்பு வரும் போது எங்களின் நிலைப்பாடு தெரியும்". அதிமுக எம்.எல்.ஏ எழுந்து "தீர்ப்பு வரும் போது வரட்டும், ஆனால் ஒரு முதலமைச்சர் என்ற முறையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன ?" கலைஞர் "தீர்ப்பு என்ன கொடநாட்டிலா இருக்கு, எப்படியும் ஒருநாள் வந்துவிடும்" என்று அறுதியிட்டுக் கூற? என்று சொல்ல அவையில் மறுபடி காபி டைம்.


திரும்ப சட்டசபை கூடிய போது விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ. மேலவை பற்றி பேசிக்கொண்டு இருந்தார் "இந்த தீர்மானத்தை மனமாறப் பாராட்டுகிறேன். சிறப்பாக செயல்பட்ட மேலவை எந்தச் சூழ்நிலையில் கலைக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இலங்கை பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேலவைக்கு சென்றபோது கலைக்கப்பட்டது".

"அப்படியானால் கலைஞர் தற்போது இலங்கை பிரச்சனையில் ராஜினாமா செய்துவிட்டு மேலவைக்கு செல்வாரா ?" கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ கேள்வி கேட்க, "எனக்கு தெரிந்தவரை ஒரு திவாலான நடிகை உறுப்பினராக நியமிக்கபட்டார். அதனால் தான் மேலவை இழுத்து மூடப்பட்டது" என்று ஒரு குரல் ஒலித்தது. உடனே சபாநாயகர் "இந்த மாதிரி திவாலான நடிகை"என்று குமுதம் கிசு கிசு மாதிரி பேசாதீர்கள். யார் என்று சன் நியூஸ் அல்லது நக்கீரன் மாதிரி குழந்தைகளுக்கும் விளங்கும்படி சொல்லிவிடுங்கள், சஸ்பென்ஸ் தாங்கவில்லை" என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார்.


எஸ்.வி.சேகர் அவர் பங்கிற்கு "சட்டசபை வேற, மேலவை வேற. இங்கே இருப்பவர்கள் புடவை கட்டிக்கொண்டு இருப்பாவர்கள் என்றால் மேலவையில் இருப்பவர்கள் பாவடை தாவணி போட்டவர்கள். அதாவது இங்கே இருப்பவர்கள் சீனியர்கள், அங்கே ஜூனியர்கள்" என்று காமெடி தனியாவர்தனம் செய்தார்.


அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் "இந்த மைனாரிட்டி அரசு இப்படி தான்.. " என்று ஏதோ சொல்ல முற்பட பதிலுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் "நீங்க டெபாசிட் இழந்த கட்சி" என்று வாக்குவாததில் ஈடுப்பட்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ எழுந்து "எங்கள் இந்த மாதிரி மைனாரிட்டி, டெபாசிட் இழந்த கட்சிகளுடன் தான் மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறோம்" எங்கள் தலைவிதி என்று ஆதங்கப்பட்டார்.

"நீங்க கைகொடுக்கிறீங்க, நாங்க கையில இருப்பதை கொடுக்கிறோம்" என்று கலைஞர் பதில் அளிக்க அவையில் இந்த ஜோக்கில் இருக்கும் விஷயம் புரியாமல் மேஜையை தட்டுகிறார்கள்.


உடனே பா.ம.க எம்.எல்.ஏ எழுந்து "நாங்கள் ஏன் மேலவையை ஆதரிக்கிறோம் என்றால், சட்டசபையில் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில்தான் பேச முடிகிறது. மேலவையில் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பேச முடியும். உதாரணத்துக்கு ஐ.பி.எல் பற்றி பேசலாம்" என்று சொல்ல, முதல்வர் உடனே, குறிக்கிட்டு அடேடே, நியாபகப் படுத்தினது நன்றி. நாலு மணி ஆகப் போகுது, ஆச்சு நானும் சச்சின் மேட்ச் பாக்கப் போகணும் என்று சொல்ல, கட்சி பாகுபாடில்லாமல் எல்லோரும் ஐ.பி.எல் பார்க்க வெளிநடப்பு செய்கிறார்கள்.


சுபம்.


மக்களே ஐபிஎல்லில் மூழ்கி இருக்கும் நேரமிது. எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும், முதலமைச்சரும் மக்களில் ஒருவர்தானே. போனாத் தப்பில்லை.
என்ன ஒரு வித்தியாசம், நரேந்திர மோதியும், சரத் பவாரும் கிரௌண்டுக்குப் போறாங்க. நம்ம முதலமைச்சர் போறதில்லை. அப்படி போனால் "ஐ.பி.எல் போன முதல்வர்" என்று பாராட்டுவிழா நடத்திவிட போகிறார்கள் என்ற பயம் காரணமாக இருக்கலாம் யார் கண்டது


19 Comments:

Anonymous said...

we cant digest the way members behaving in assembly.It seems comedy is there always like aditya channel.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////புதிய சட்டசபை காட்சிகளைப் பலர் டிவியில் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த காட்சிகள் எப்படி இருக்கும் என்று வாசகர்களுக்கு தெரிவிப்பது நம் கடமை. நேற்று நடந்த சில காட்சிகள் இவை...//////


பகிர்ந்தமைக்கு நன்றி .

ஜெயக்குமார் said...

We are fortunate to have such a great leaders and Members of legislative assembly.

Every other country in the world is collapsing everyday starting from Kirgystan, Thailand,Poland and so on.

Economy of India is in the brink of collapse. The so-called writers has the rites to say the Maoists as " Gandhians"

So, our MLA's and Ministers.

It is a surprise that how our country is united till now?

சீனு said...

கொஞ்ச நேரத்துக்கு இதெல்லாம் நிஜமே என்று நம்பிவிட்டேன். பிறகு விழித்துக் கொண்டேன். நல்ல வேளை. இதெல்லாம் நடக்கல.

மஞ்சள் கமென்ட் (வழக்கம் போல்) சூப்பர்...

Anonymous said...

சந்தேகமே இல்லை.
சரியான சர்க்கஸ் கூடாரமேதான்.

jaisankar jaganathan said...

//It is a surprise that how our country is united till now?
//
தனித்தமிழ்நாடு வாழ்க. வளர்க

Anonymous said...

http://www.hindu.com/2010/04/13/stories/2010041361650400.htm . I don't understand the need for upper house. I think it is meant as a backdoor to assembly for unelected folks in the party. Instead of solving hot issues of the people, these politicians are united for something favourable to them. As the article suggests, if great personalities like ManMohan Singh can't be got through elections then why do we have elections?. Are elections a failure?

ந.லோகநாதன் said...

thanks for the great information sharing ...

Swami said...

happy tamil new year to all readers

மகேஷ் (Magesh) said...

They just showed Kalaignar watching IPL in stadium. Manjal comment is invalid now.

pachhamilaka said...

முதல்வரும் இட்லிவடை படிச்சிட்டு மேட்ச் பாக்கவந்துவிட்டார் எங்கப்பா பாராட்டு விழா

Nanban said...

Idhu unmaya ille comedya?

IdlyVadai said...

//Idhu unmaya ille comedya?//

ஆமாம், இது முழுவதும் கற்பனை. இதே போல் நடந்திருந்தால் நான் பொறுப்பில்லை.

kggouthaman said...

நானும் அதையேதான் கேட்க நினைத்தேன். இது உண்மையா அல்லது கற்பனையா?

Anonymous said...

மட்டமான டிசைன்ல ஒரு சட்டசபை. ஏதோ புகைகூண்டு மாறி இருக்கு. பழசே தேவலாம். ஒரு விதான் சௌதா மாறி கட்டியிருக்கலாம்.

VENG said...

முகமது பின் துக்ளக் நாடகம் மாதிரி ஒர் நாள் இப்படி நடந்தாலும் ஆச்சரியம் இல்லை...!

SAN said...

IV,
mudhalvar tam padaaiudan ( durai murugan,ponmudi etc) watched ipl yesterday chennai super kings match.

R.Gopi said...

//It is a surprise that how our country is united till now?//

*******

இந்த ஒலகம் இன்னுமா இவிய்ங்கள நம்பிட்டு இருக்கு... அய்யோ அய்யோ

பொடிப்பையன் said...

"ஐ.பி.எல். பார்க்க போன முதல்வருக்கு பாராட்டு விழா" என்றதும் என் நண்பர் தந்த ஒரு சுவையான கட்டுரை நினைவில்வர, அதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அக்கட்டுரை இங்கே..
http://podippaiyan.blogspot.com/