பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 07, 2010

கண்டனங்கள் சாவதில்லை!

மான் இனத்தில் கவரிமான் என்றோர் இனம் உண்டு. ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் நீத்து விடுமாம். அவ்வளவு மானமுடையது என்று கேள்வி. இந்திய அரசியலின் நெடிய வரலாற்றில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில கவரிமான்கள் இருந்தனர். எங்கோ கண் காணாமல் தில்லியில் ரயில்வே மந்திரியாக இருந்த திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் அரியலூரில் நடைபெற்ற ராக்போர்ட் ரயில் குண்டுவெடிப்பிற்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதே போல் அவர் பிரதமரான பிறகு தாஷ்கண்ட் ஒப்பந்த்த்தில் ஏற்பட்ட சறுக்கலால் விளைந்த மன உளைச்சலில் தாஷ்கண்டிலேயே இறந்தார் அந்த கவரிமான். ஆனால் இன்று? தீவிரவாத சம்பவங்களுக்கு பல அப்பாவிகளின் உயிரை அவிர்ப்பாகமாக்க் கொடுத்த பின்னரும் கூட சிவராஜ் பாட்டீலை நாற்காலியை விட்டுத் தள்ளி விடாத குறையாக ராஜிநாமா செய்ய வலியுறுத்தப்பட்டது. சொல்லி வைத்தாற்போல் பதவியேற்ற பிறகு எண்ணற்ற ரயில் விபத்துக்கள்!! ம்ம்தா பானர்ஜி அசைந்து கொடுக்கவில்லை. ஒருமுறை மாவோயிஸ்டுகள் ரயிலையே கட்த்திச் சென்று விட்டனர். ஆனால் அவர் இதற்கும் புத்த்தேவ் மீது பழி போட்டார். அப்பேற்பட்ட அனைத்து ரோமங்களும் உதிர்ந்தும் உயிர் பிரிய மனமில்லாமல் இருக்கும் சீக்காளிக் கவரிமான்கள் இப்போதிருக்கும் அரசியல் வியாதிகள்.


நேற்றைய தினம் சத்தீஸ்கரில், மாவோயிஸ நக்ஸலைட்டுகள் நட்த்திய கண்ணி வெடித்தாக்குதலில் 80 சிபிஆஎஃப் ஜவான்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 80 என்ற புள்ளி விவரம் இன்று காலை வரைதான். இதைத்தவிர 150 ஜவான்கள் காணவில்லையாம். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. படுகாயமடைந்தோர் பலர். 43 ஆண்டுகால நக்ஸலைட் வரலாற்றில் மாவோயிஸ்டுகள் இதுபோன்ற கொடூரமான, பிரம்மாண்டமான தாக்குதலை நட்த்தவில்லை என மீடியாக்கள் பத்தி பத்தியாக எழுதித் தள்ளியிருக்கின்றன.


நேற்றைய முன்தினம்தான், ப.சிதம்பரம் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இந்த ஆட்சி முடிவடைவதற்குள் மாவோயிஸ்டுகள் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என்று கூறினார். அவருடைய குரலின் எதிரொலிப்பு கூட ஓய்ந்திருக்காது. மேற்கு வங்காளத்தில் எட்டு போலிஸார் கொல்லப்பட்டனர். அடுத்த தினமே 80 ஜவான்கள். வழக்கமான கண்டனம் மற்றும் அதிர்ச்சி சம்பிரதாயங்கள் முடிவடைந்து விட்டன. சிதம்பரம் கூறுகையில், மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது; ஏதோ மிகப்பெரிய தவறு நிகழ்ந்திருக்கிறது என்கிறார். பிரதமர் பாவம் என்ன கூறுவார்?? அவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. எனவே அதுபற்றி அதிகம் கூறத் தேவையில்லை.

தீவிரவாதிகள் எப்போதுமே தனியாக, பொட்டல் வெளியில் இயங்குவதில்லை. மக்களோடு மக்களாகத்தான் இருக்கின்றனர். மாவோயிஸ்டுகளும் அதற்கு விதிவிலக்கில்லை.. நக்ஸல்களின் நோக்கம் என்னவென்று யாருக்கு்ம் விளங்காத ஒன்று. எந்த நோக்கத்திற்காக்க் போராடுகிறார்கள்?? உளுத்துப் போன மற்றும் சகதியாய்ப் போன கம்யூனிஸ சித்தாந்தங்களை நிலைநாட்டுவதற்காகவா? இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவில் மத்திய ஆட்சியை வேறு பிடிப்போம் என்கிறார்கள். நடக்கலாம். இன்னும் 20 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தால், மத்தியில் மாவோயிஸ்டுகள் ஆட்சியை நிர்மாணிப்பார்கள் என்பது திண்ணம்.


இந்தியாவைப் பொருத்தவரை மாவோயிஸ்டுகள் 150 மாவட்டங்களில் முழு அளவில் செயல்பட்டு வருகின்றனர். இவை ரெட் காரிடோர் மாகாணங்கள் என அழைக்கப்படுகின்றன. இதுவரை நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே நடைபெற்ற தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2009 இல் மட்டும் மற்ற் மாநிலங்களை விட மேற்கு வங்காளத்தில் சுமார் 109 பேர் கொல்லப்பட்டுள்ளனர் நக்ஸல்களால். இதில் லால்கர் சம்பவம் அதிகபட்ச உயிர்களை பலிவாங்கிய ஒன்று. ஒரிஸாவில் இதுவரை மாவோயிஸ்டுகள் 23 மாகாணங்களில் கோலோச்சியுள்ளனர். தவிர 2009 இல் மட்டும் 36 அப்பாவி மக்களும், 31 போலிஸ் ஜவான்களும் மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் வெறும் 12 பேர் மட்டுமே. பீஹாரில் நிதிஷ் குமாரின் கெடுபிடியான நடவடிக்கைகள் ஓரளவு நக்ஸல் நடவடிக்கைகளைத் தணித்துள்ளன. தணித்துள்ளன என்றால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடக் குறைவு என்பதே. 2009 இல் 71 பேர்.மாவோயிஸ்டுகளின் அட்டூழியங்கள் குறையாத்தற்கு முக்கியக் காரணமாக அதிகாரிகள் சுட்டிக் காட்டுவது, உள்ளூர் காவலர்களையும், பாராமிலிட்டரியையும் பயன்படுத்தாமல், வெளி மாநிலங்களிலிருந்து கொணர்வதே என்கின்றனர். ஏனெனில் மாவோயிஸ்டுகள் உள்ளூர் மக்களின் துணையோடு செயல்படுவதால், அவர்களின் நடவடிக்கைகளை வெளி மாநிலங்களிலிருந்து வரும் படையினரால் சீக்கிரம் கிரஹித்துக் கொள்வது கடினம் என்கின்றனர். தவிர மாவோயிஸ்டுகள் கொரில்லா தாக்குதல் முறையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பாதுகாப்பு படையினரோ தெரியாத எதிரியை நோக்கி வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தவிர, மாவோயிஸ்டுகளின் உளவு அமைப்பானது மிகவும் சிறப்பான ஒன்றாகச் செய்ல்படுகிறது. ஆனால் பாதுகாப்புப் படையினரோ உளவு வேலைகளுக்கு உள்ளூர் காவலர்களையே நம்ப வேண்டியிருப்பதால் எதுவுமே பலனளிக்காமல் போய் விடுகிறது.ஆயுதங்களைப் பொருத்தமட்டில் மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களுக்கு சிறிதும் குறைவில்லாமல் நவீன ரக ஆயுதங்களையும், தொடர்புக் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர். எனவே ஆயுத ரீதியாக பாதுகாப்புப் படையினருக்கு லாபம் என்று எதுவும் இல்லை.தற்போது தாக்குதல் நடைபெற்றுள்ள தண்ட்டேவாடா மாவட்டம், இந்தியாவின் புராதன நகரங்களுள் ஒன்று. இந்நகரம் முறையே ஒரிஸா, மஹராஷ்டிரா மற்றும் ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பிறகு இதனை சத்தீஸ்கர் மாநிமாக மாற்றி அறிவிக்கப்பட்ட்து. இம்மாவட்ட்த்தில் மக்களின் கல்வியறிவு வெறும் 30.2 சதவிகிதம்தான். இந்தியாவிலேயே மிக்க் குறைவான கல்வியறிவு பெற்ற் மாவட்டம் இதுவே. தவிர வறுமை வேறு. இதை மாவோயிஸ்டுகள் தங்களுக்குச் சாதகமான வழியில் பயன்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, மாவோயிஸ்டுகளின் கொடூரங்களுக்கு வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும்தான் காரணம் என மத்திய அரசு சமாதானம் சொல்கிறது.ஏற்கனவே மாவோயிஸ்டுகளை இன்னும் இரண்டாண்டுகளில் ஒழிப்போம் என்று வாயைக் கொடுத்து சூடு போட்டுக் கொண்டாகி விட்ட்து. அந்தப் பேச்சின் சுவடு மறைவதற்குள்ளாகவே மாவோயிஸ்டுகள் முந்திக் கொண்டு செயல்பட்டுவிட்டனர். நம்முடைய நடவடிக்கைகள் அனைத்து பேச்சளவிலும், பேப்பரளவிலும்தான் என்பது உலகப் பிரசித்தமான ரகசியம். இது மாவோயிஸ்டுகளுக்கு மட்டும் தெரியாதா என்ன? அடுத்து இத்தாக்குதலுக்குப் பிறகு மறுபடியும் அரசு தரப்பில், மாவோயிஸ்டுகள் இதற்குரிய விலையைக் கொடுத்தே தீருவர் என்று சூளுரைக்கப்பட்டுள்ளது. எதற்கு இந்த விளம்பரமும் வீராவேசமும்? போன உயிர்கள் உயிர்த்தெழவா போகின்றனர்? நடவடிக்கைகள் என்பது எப்போதுமே செயலளவில் இருக்க வேண்டும். பெயரளவில் அல்ல. இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே செயல்திட்ட்த்துடன் விளக்கப்படுகிறது. இருக்கவே இருக்கின்றன மீடியாக்கள். 24 மணிநேரமும் எங்கே என்ன திட்ட்த்துடன் எப்படி செயல்படுத்தப்படப் போகிறது என ஃபர்க்கா த்த் முதல் ப்ரணாய் ராய் வரை லைவாக காண்பிக்கின்றனர். இது போதாதா?


இப்போதைய தேவை நடவடிக்கை மட்டுமே!! வெறும் பேச்சுக்களும், கண்டன்ங்களும் அல்ல!!


- யதிராஜ்

பிகு: இந்திய அரசை அகற்றி எங்களது அரசை நிறுவ 2050 வரை காத்திருக்க மாட்டோம். அதற்கு முன்பே நாங்கள் அதைச் செய்து விடுவோம் என்று மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் கோடீஸ்வரர் ராவ் என்கிற கிஷன்ஜி எச்சரித்துள்ளார். இது சில நாட்கள் முன் வந்த செய்தி.

பிகு1: மக்கள் பிரச்னைகளுக்கு ஆயுதப் போராட்டம் மூலம் தீர்வு காண்பது என்ற மாவோயிஸ்டுகளின் வழிமுறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.​ அதே நேரத்தில்,​​ மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது என்று டி.ராஜா கூறியுள்ளார்.

A failed state is one in which the central government has lost control over significant areas of the country and the state is unable to function. இது மெக்ஸிகோ பற்றி சொன்ன வாசகம், நமக்கு பொருந்து!

18 Comments:

Hariharan # 03985177737685368452 said...

If chidambaram heads that department will become totally drowned. Finance suffered sbefore and now Interior saftey suffers.


As finance minister Chidhambaram did NOTHING to bring back the 70 lakhs crores of Indian Black money kept by indian politicos in One swiss bank alone (assume how much with other 69 switzerland based banks holding Indian politicos Black money)

In both casees common Indian is affected deeply.

India's worst decade of total immorality as ever spear headed by Indira Congress!

Our PM Manmohan can lose sleep for a Indian muslim Doctor and do everything to safeguard him just to hold Muslim Vote bank for Congress.

26/11 bombay war waged by Muslims on India OR now the war waged by Chinese guided Communis Naxals OUR Government will just TALK... TALK.

Indian Media NDTV, CNN-IBN will fight for sponsoring Biriyani and facilities to Muslim Terrorists Afzal Gurus and Ajmal Kasabs

INTHA NAADUM ATHAN MA(A)KKALUM NAASAMAGA POGATTUM!

சிறியவன் said...

indha nilaiyum maarum nambuvomaga! irandha veerargalukku manamaarndha anjali

வரதராஜலு .பூ said...

//வழக்கமான கண்டனம் மற்றும் அதிர்ச்சி சம்பிரதாயங்கள் முடிவடைந்து விட்டன. //

அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். தகுதியே இல்லாதவர்கள் பதவியில் அமர்த்திய நாம்தான் இதில் முதல் குற்றவாளிகள்.

//சிதம்பரம் கூறுகையில், மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது; ஏதோ மிகப்பெரிய தவறு நிகழ்ந்திருக்கிறது என்கிறார். //

நாண்டுக்கிட்டு சாவலாம் இப்படி பேசறதுக்கு.

//பிரதமர் பாவம் என்ன கூறுவார்?? அவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. //

அளிக்கும் அளிக்கும். இன்னும் நிறைய இதை விட பெருசா நடந்தாலும் (என்ன நடந்தாலும், நிச்சயம் நடக்கதான் போகிறது) இதே ரியாக்ஷன் காட்டிக்கிட்டு வேடிக்கை பாக்கட்டும்.

Dharmarajan said...

Very sad news,
my regrets to 80 soldiers family..

Anonymous said...

its just another instance in the pages of india's shyfull history.

i think china funding the maos

mr.voter nevr going to care abt it, as long as he gets drink+money, they will elect 'so called so good' people to govern us.

lets pray to god, save this country from politions first

Don said...

Chidambaram is unfit to be a politician. India will be doomed if Chidambaram becomes PM. He gave the green flag to Telangana issue. And now by saying, there is no intention to use military against maoist, he has given green signal to them. I don't understand how he could treat maoists like a non-violent movement, when they're torching schools and damaging the public properties. Maoists are supported by the chinese, it's time these fools in the govt, wake up and curb them. Congress might have even used their "Rajathanthiram" and gave a MP seat/PM post to Kishenji to silence him. WTF.
Being surrounded by enemies, India needs a robust foreign affairs dept and should learn lessons from countries like Israel. Chidambaram's case proves that a Harvard education can be detrimental to one's career.
Apart from this, India being a giant in software services, it's painful to read this news - http://economictimes.indiatimes.com/infotech/internet/China-cyber-spies-target-India-Dalai-Lama-Report/articleshow/5769116.cms
I hoped they might have been alert after google reported this. This substantiates my claim that the public depts are all filled with fools/usurpers. India's future is doomed. Reminds me of Churchill's statement - "Indians can never govern themselves"

kggouthaman said...

அரியலூர் ரயில் விபத்து - குண்டுவெடிப்பால் நிகழ்ந்தது அல்ல, மனித தவறு (human error) - என்று ஞாபகம்.

Anonymous said...

இப்படுபாதக செயலை செய்த இந்த "ஹிந்து தீவிரவாதிகளை" அடியோடு ஒழிக்க வேண்டும்.

Anonymous said...

Check this link:

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7088952.ece

.......

jaisankar jaganathan said...

//இப்படுபாதக செயலை செய்த இந்த "ஹிந்து தீவிரவாதிகளை" அடியோடு ஒழிக்க வேண்டும்//

இந்த நேரத்துல இது வேறயா.

Anonymous said...

Two corrections:
1.Ariyalur accident was caused by a bridge washed away by floods.
2.The train was not"hijacked".It was captured by the villagers and they did not allow it to move further.They did not ham anybody.
Is it 'guerilla' or 'gorilla'?

Anonymous said...

today chidambaram said that they will not use air force to face the naxals.if we have home minister like this we will be loosing our force and jawans! what we expect more than this from person who cheated his co contest by using the power to win the election to retain his ministership!
யதிராஜ் .நீங்களும், நானும், ந்ம்மை போன்ற்வர்க்ளும் வெறும் ஆத்ங்கம் மட்டுமே படமுடியும்!
ஆனா தமிழ்நாட்ல இதைபத்தி யாராவது யோசிப்பாங்களான்னு சந்தேகந்தான்!!தி.மு.க விற்கு ஸ்டாலினா,அழகிரியான்னு கவலை!
ஜெவிற்கோ 29 சி பஸ் சைதாபேட்டைல நிக்கல்ன்னு போராட்ட்ம் பண்ணலாமா இல்ல பங்களூர்(ரு.?) மெயில் கூடுவாஞ்சேரில நிக்கணும்னு போராட்டம் பண்ணலாமான்னு கவலை!
ஊடககுங்களுக்கோ அடுத்து எந்த (எவன்)பெட்ரூம்ல் கேமரா வெக்கலாம் இல்ல நேர நீலப்படத்த போட்டு தாக்கி டி ஆர் பி ரேட்ட ஏத்தலாமான்னு கவலை!!
தமிழ் வலைப்பதிவாளர்களுக்கோ எந்த கதயில,கட்டுரைல ஏதவது ஒரு வார்த்தய புடிச்சுண்டு '' ""ஆஹா .இது பார்பணீயத்தின் சதி" , ""குடுமி ஆடுகிறது பூணல் நெளிகிறது"",
"இட்லி வடையின் பாஸிஸ பார்பண பார்வை"அப்படீன்னு ஒரு பதிவ எப்ப போட்டு ஹிட்ஸ ஏத்திக்கிலாம்ன்னு கவலை!!

மக்களுக்கோ ,நித்தியை போலீஸ் அரெஸ்ட் செய்வார்களா,செல்வம் தொடரில் பாக்கியமாள் உண்மையிலேயே திருந்திவிட்டரா?, அந்த லேககியம் சாப்பிட்டா அவன் சொல்ற மாதிரி கரண்டு கம்பம்போல் (ம்.. கரண்டு கம்பந்தான்!) நிற்குமா?

இந்தமாதி ஆயிரம் உன்னத் கவலைகள் இருக்கும்போது நீங்க வந்தீடீங்க சொம்ப தூக்கிட்டு ஜவாங்கள் ம்ரணம்,தேவை நடவடிக்கை மட்டுமே!! வெறும் பேச்சுக்களும், கண்டன்ங்களும் அல்ல!!அப்படீன்னு
'''மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது என்று டி.ராஜா கூறியுள்ளார்''''
இந்தமாதிரி ஆட்க்கள் இருக்கிறவரையில் ,எல்லாம் செவிடன் காதில ஊதின சங்கு மாதரிதான்

ஊர் உருபடாது சார்

யதிராஜ சம்பத் குமார் said...

'''மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது என்று டி.ராஜா கூறியுள்ளார்''''//


மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்கு முன்னர் கம்யூனிஸ்டுகளை சீனாவிற்கு நாடு கடத்தி விட்டால் பாரதம் சுபிக்‌ஷம் பெறும். மேற்கண்ட கருத்தைக் கூறிய ராஜா நல்ல கதியைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

பாலாஜி said...

தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

R.Gopi said...

//இப்படுபாதக செயலை செய்த இந்த "ஹிந்து தீவிரவாதிகளை" அடியோடு ஒழிக்க வேண்டும்//

எரியும் தீயில் ஏழாயிரம் லிட்டர் பெட்ரோல் ஊற்றுங்கள்ள்ள்ள்ள்......

Anonymous said...

இட்லி வடை

நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள். ஒரு புறம் இந்தக் காவலர்கள் கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறீர்கள், நக்சலைட்டுகளை வன்மையாகக் கண்டிக்கிறீர்கள் மறுபுறம் இதே நக்சலைட்டுகள் தமிழ் நாட்டில் நடத்துப் பள்ளிக் கூடங்களுக்கு நிதியுதவி கேட்டு இலவச விளம்பரம் அதே இட்லி வடையில் போடுகிறீர்கள். எது உண்மை? இந்தக் கண்டனமா அந்த ஆதரவா? அந்த விளம்பரம் இட்லி வடையில் இருந்து எடுக்கப் படாது வரை உங்கள் கைகளிலும் இந்தக் காவலர்களின் ரத்தம் வழிவதாகவே நான் கருதுவேன் நக்சலைட்டுகளின் கூட்டாளியாகவே நான் உங்களைக் கருதுவேன். இறந்து போன இந்த 80 காவலர்களுக்கு ஒரு மரியாதையயாகவாவது நக்சல் ஆதரவாளர்களுக்கான அந்த இலவச விளம்பரத்தைத் தயவு செய்து நீக்கி விடுங்கள். இன்பா என்பவர் ஒரு நக்சல் ஆதரவாளரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஒரு நக்சல் பள்ளிக் கூடத்திற்கு நிதியுதவி கேட்டு அவர் ஒரு பதிவு போடும் பொழுதே அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. தயவு செய்து அந்தப் பதிவை நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால் இந்தக் கண்டனங்கள் எதற்கும் அர்த்தம் இல்லாமல் போய் விடும்

விஸ்வாமித்ரா

IdlyVadai said...

அன்புள்ள விஸ்வாமித்ரா,

அந்த பதிவு எழுதியது இன்பா, இந்த பதிவு எழுதியது யதிராஜ். இரட்டை வேடம் எங்கே இருக்கிறது ?

நீங்கள் உங்கள் கண்டனங்களை எழுதி தாங்க அதை ஒரு தனி பதிவாக போடுகிறேன்.

புரிந்துக்கொண்டதற்கு நன்றி,
அன்புடன்,
இட்லிவடை

Anonymous said...

இ வ

அது இன்பா இது எதிராஜர் என்பது தெரியும் :)) இரண்டுமே போடப் பட்ட இடம் இட்லி வடை அல்லவா? இட்லி வடையின் மதிப்புக்குக் குந்தகம் வரக் கூடாது என்ற அக்கறையில் சொல்கிறேன். இன்பாவிடம் கொஞ்சம் அன்பா சொல்லி அதை நீக்கச் சொல்லுங்கள் அல்லது இன்பாவிடம் அன்பாகச் சொல்லி விட்டு நீங்களே எடுத்து விடுங்கள் என்கிறேன். நாளைக்கு யாராவது இட்லி வடையைப் படித்து விட்டு பத்தாயிரம் ரூபாய் கொடுக்க அந்த ரூபாயில் துப்பாக்கி வாங்கினார்கள் என்றால் அவப் பெயர் யாருக்கு? இட்லி வடையில் வரும் ஒவ்வொரு அறிவிப்பும் பொறுப்புள்ள அறிவிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் முத்துராமனுக்கு உடல்நிலை இல்லை என்று சொன்னவுடன் இட்லி வடை சொன்னதால் நான் உடனே உதவி செய்யப் போகிறேன். அது போல இட்லி வடையில் வந்ததை நம்பி இத்தனை நேரம் எத்தனை பேர் காசு அனுப்பினார்களோ யார் கண்டது? நான் இதை மீண்டும் மீண்டும் போடுவதற்குக் காரணம் உங்களுக்குச் சொல்வதற்காக அல்ல. அதைப் படித்து விட்டு யாரும் காசு கொடுத்து விடக் கூடாதே என்பதற்காக மட்டுமே. உங்களிடம் சொல்வதாயிருந்தால் ஒரு மெயில் ஒரு சாட் அனுப்பி தனியே சொல்லியிருப்பேனே? படிப்பவர்களுக்கு இன்பா செய்த டேமஜை கண்ட்ரோல் செய்ய வேண்டுமே என்ற அவசரத்தில்தான் பின்னூட்டமாகப் போடுகிறேன். ஆகவே நீங்கள் அதை நீக்கும் வரை இ வ வாசகர்களுக்கு அந்தக் கல்யாணி சுகுமாரன் நக்சல் ஆதரவாளர்களுக்கு ஆதரவு அளித்து விடாதீர்கள் என்று என் கோரிக்கை வைத்துக் கொண்டேயிருப்பேன்

விஸ்வாமித்ரா