பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 06, 2010

சானியாவும், சர்ச்சைகளும்!!

சானியா மிர்ஸாவைச் சுற்றி எப்போதும் ஏதேனும் சர்ச்சைகள் இருந்தவண்ணமே இருக்கிறது.

முன்பு குட்டையான பாவாடை அணிந்து விளையாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது எனக் கூறி சில மத அமைப்புகள் சானியா அணியும் உடைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பிறகு ஜமாத்-உலேமா- ஹிந்த் தனது போராட்ட்த்தைக் கைவிட்டது.



பிறகு ஒரு நேர்காணலில் “பாதுகாப்பான உடலுறவு” பற்றி சானியா கருத்து தெரிவிக்கப் போக, அதற்கும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சானியாவிற்கு இஸ்லாத்தின் மீது நம்பிக்கையில்லை. இளைஞர்கள் மனதில் தனது கருத்துக்களின் மூலம் விஷத்தை விதைக்கிறார் என்று போராட்டங்கள் நடைபெற்றன. நல்லவேளை சானியா தப்பித் தவறி தமிழகத்தில் இதை சொல்லவில்லை. இல்லை திருமாவளவன் கருப்புக் கொடியைத் தூக்கிக்கொண்டு கிளம்பியிருப்பார்.
அடுத்த்தாக, இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் விளம்பரப் பட்த்தில் நடித்த்தற்காக பிரச்சனை கிளப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நிமிர்ந்து நிற்காமல் அவமதித்து விட்டார் என்ற வழக்கு அவர் மீது இருக்கிறது.

போன வருடம் இல் சானியாவிற்கும், ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் ஷோரப் மிர்ஸாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிறகு அது சில நாட்களிலேயே ரத்து செய்யப்பட்டது. சில கருத்து வேறுபாடுகளால், இருவரும் சம்மதித்தே ரத்து நடைபெற்றது எனவும், ஆயினும் இரு குடும்பங்களுக்குமிடையேயான நட்பு தொடரும் எனவும் சானியா மிர்ஸா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு சர்ச்சைகளின் பட்டியல் மிக நீளம். இவ்வரிசையில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள ஒன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடனான திருமண சர்ச்சை. ஆனால் இதில் சானியா தரப்பில் சர்ச்சைகள் எதுவும் இல்லை.

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் ஷோயம் மாலிக்கிற்கு ஏற்கனவே ஆயிஷா சித்திக் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று விட்ட்தாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. தங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதற்கான சான்றுகள் இருப்பதாகவும் ஆயிஷா கூறியுள்ளார். இதைத் தவிர இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டுள்ளார். இதில்தான் பெரிய குழப்பம். அச்சான்றிதழில் உள்ள கையெழுத்து தனதுதான் என்றும், ஆனால் தனக்கும் ஆயிஷாவிற்கும் திருமணமே நடைபெறவில்லை எனவும், தான் அவரைப் பார்த்த்தே இல்லை எனவும் ஷோயப் கூறுகிறார். ஆனால் அவருடன் எடுத்துக்கொண்ட படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஷோயப் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நடைபெற்ற பேட்டியின்போது, இது எனது மனைவியினுடைய ஊர். ஆகவே இங்கு நன்றாக விளையாடியதில் மகிழ்ச்சியே என்று கூறியிருக்கிறார். இதைத் தவிர, டெலிபோன் மூலம் செய்த நிக்காஹ் செல்லுபடியாகாது எனவும் கூறுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் பலவும் நடைபெற்று வருவதால் குழப்பமே மிஞ்சுகிறது.

டெலிபோன் மூலம் நிக்காஹ் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. நிக்காஹ்மாவில் உள்ள கையெழுத்தும் தனதுதான் என்றும் ஷோயப் கூறுகிறார். ஆயிஷா ஆள்மாராட்டம் செய்து தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் ஷோயப் கூறுகிறார். இந்நிலையில் டெலிபோன் மூலம் நடைபெற்ற நிக்காஹ் சட்டப்படி செல்லாது எனவும், இதற்கு சட்டரீதியாக விவாகரத்தும் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எது பொய்? எது நிஜம்?

இந்நிலையில் ஆயிஷாவின் குடும்பத்தினர் ஷோயப் மீது மூன்று பிரிவுகளில் கிரிமினல் மற்றும் ஏமாற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தியாவில், ஹைதரபாதில் இருக்கும் ஷோயப்பிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு, அவரது பாஸ்போர்ட்டையும் தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும், ஷோயப் வெளியேறாதவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய அரசாங்கம் மற்றும் சக வீரர்கள் அனைவரும் ஷோயப்பிற்கு ஆதரவாக உள்ளபடியாலும், ஆயிஷா தரப்பிலும் போலிசார் விசாரணை நட்த்தி வருவதாலும் இக்குழப்பங்கள் வெகு சீக்கிரம் ஒரு முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடரும் இச்சர்ச்சைகளினால் ஹைதரபாதில் ஏப்ரல் 15 அன்று நடைபெறுவதாக இருந்த திருமணம், பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய்க்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட்து. ஆனாலும் திருமணத் தேதி மற்றும் நடைபெறும் இடம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை, எல்லாம் நிர்ணயித்தவாறே நடக்கும் என நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டியளித்த சானியா மற்றும் ஷோயப் இருவரும் தெரிவித்தனர்.


எது உண்மையோ இதுவரை யாருக்கும் தெரியாது. மிஞ்சுவதெல்லாம் குழப்பமே. ஆயினும் சானியா ஷோயப் திருமணத்திற்கு சிவசேனாவும், உத்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இம்மாதிரியான எதிர்ப்புகளும், கண்டன்ங்களும் அர்த்தமற்றது. யார் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். இதில் சிவசேனாவோ அல்லது தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கும் உத்திரப் பிரதேச இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பிற்கோ எவ்வித உரிமையும் இல்லை. ஆயிஷா பிரச்சனை பெரிதாக இருக்க இந்த சர்ச்சைகளை மீடியா கண்டுகொள்ளவில்லை.

முன்பே கூட புகழ்பெற்ற மேற்கிந்திய கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் பாலிவுட் நடிகை நீனா குப்தாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆக இதெல்லாம் தனிப்பட்ட விஷயங்கள். தவிர இந்திய சட்டமும் இதனைத் தடை செய்யவில்லை. ஷோயப் இரண்டாம் கல்யாணம் செய்துக்கொண்டாலும் சட்டத்தின் படி அது தப்பு கிடையாது.


முஃப்தி சையத் சாதிக் மொஹைதீன் என்ற பாகிஸ்தானின் குறிப்பிட்த்தகுந்த மத்த்தலைவர் ஒருவர் இந்த சர்ச்சை அவர்களது திருமணத்தைப் பாதிக்காது எனகருத்து தெரிவித்துள்ளார். "ஆயிஷா சித்திக்கின் காரணங்கள், சானியா ஷோயப் திருமணத்தைத் தடை செய்வதற்கு போதுமானதாக இல்லை. ஏனெனில் இஸ்லாம் ஒரு ஆணிற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட திருமணங்களை (நான்கு மனைவிகளை) அனுமதிக்கிறது. ஒரு ஆண்மகன் ஒன்றிற்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை, அப்படி விரும்பினாலும் செய்யலாம்" என தெரிவித்துள்ளார். ஹைதராபாதைச் சேர்ந்த் மதகுரு ஒருவர் தெரிவிக்கையில், ஷோயப் வெளிநாட்டவர் ஆதலால், அவருக்குரிய சட்டரீதியான பயண ஆவணங்கள் சரியாக இருந்தாலே போதும். மற்றபடி எவ்விதமான பிரச்சனைகளும் ஷோயப் சானியா திருமணத்தைப் பாதிக்காது" என தெரிவித்தார்.

இந்த சர்ச்சைகள் தவிர ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் கிரிக்கெட் போட்டிகளில், அனைத்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த தொடரின்போது கிரிக்கெட் சூதாட்ட ஊழலில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சோயிப்புக்கு தடை விதித்தது. கிரிக்கெட் சூதாட்ட ஊழல் பணத்தில் இருந்து, சானியா மிர்சாவுக்கு சோயிப் ஏறத்தாழ ரூ.8 கோடி கொடுத்து இருப்பதாக பாகிஸ்தான் டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

BTW, சொல்ல மறந்துவிட்டேன், சானியா மிர்சா டென்னி்ஸ் விளையாட்டு வீராங்கனை.

21 Comments:

kggouthaman said...

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, சானியா இனிமேல் பாகிஸ்தானுக்காகத்தான் ஆடவேண்டும் என்று ஒரு தரப்பும், இல்லை, இல்லை இந்தியாவிற்காகத்தான் ஆடவேண்டும் என்று ஒரு தரப்பினரும் லாவணி பாடிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால், இறுதி நிலை வரை வராமல் ஏதேனும் ஒரு சுற்றில் எப்பவுமே 'அதிர்ச்சி தோல்வி' அடைபவர், எந்த நாட்டிற்காக ஆடினாலும் ஒன்றுதான்!

பா. ரெங்கதுரை said...

பாவம் சானியா. இவருடைய யோக்கியதை தெரிந்ததால், உள்ளூர் முஸ்லீம் எவரும் கட்டத் தயாராக இல்லை. இளிச்சவாய் பாகிஸ்தானி ஒருவர்தான் கட்ட முன்வந்திருக்கிறார். அதைக் கெடுக்க வேண்டாம். சானியாவை வாழ்த்தி பாகிஸ்தானுக்கு வழியனுப்புவோம்.

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

///////ஆயிஷா ஆள்மாராட்டம் செய்து தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் ஷோயப் கூறுகிறார்//////

அது கிடக்கட்டும்! நீங்க spelling இலேயே மாறாட்டம் பண்ணிட்டீங்களே?!

நன்றி!

சினிமா விரும்பி

ரிஷபன் said...

நம் நாட்டில் இருக்கும் 24 மணிநேர நியூஸ் சானல்கள் செய்கிற அலும்பு தாங்க முடியலை.

ப்பராசிகள் போல இப்படி தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்கையில் மூக்கை நுழைப்பதை பார்க்க சகிக்கலை !! காமிரா வைத்து கொண்டு அவர் வீட்டுக்கு முன்னால் பலியாய் கிடக்கிறார்கள்.

இந்த மாத்ரி செய்திகளை நம் மீது அநாவசியமாகத் திணிக்கிறார்கள்.

இட்லி வடை சொன்ன மாதிரி ,
அவர் யாரையும் கல்யாணம் பண்ண அவருக்கு உரிமை உள்ளது, இதில நாம சொல்ல என்ன இருக்கு !!

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Dear IV,

We can say it is personal freedom for Sania to marry a pakistani as she likes it but the arguement is not tenable.

Suppose, an indian lady likes to marry Kasab or Afzal Guru, will it be acceptable?

The point is she could have selected any muslim of Afghan/Saudi or other Arab nationality but certainly not Pakistan as pakistan is undoubtedly our enemy.

It is unfortunate that Sania could not select one muslim male out of millions living in India. Muslims and the pseudo secular media in India should now understand the true colours of Sania.

When i was young, my neighbours and friends used to say,when India plays Pakistan in a cricket match, the indian muslims will always support pakistan.I never bought that statement and asserted that we all are indians and it iwas a wrong notion to insult indian muslims.

Thanks to sania that she disproved me and now it is evident that she will definitely support only Pakistan and our media will celebrate that by asking for interviews, coverage ,etc.

"பாவம் சானியா. இவருடைய யோக்கியதை தெரிந்ததால், உள்ளூர் முஸ்லீம் எவரும் கட்டத் தயாராக இல்லை. இளிச்சவாய் பாகிஸ்தானி ஒருவர்தான் கட்ட முன்வந்திருக்கிறார். அதைக் கெடுக்க வேண்டாம். சானியாவை வாழ்த்தி பாகிஸ்தானுக்கு வழியனுப்புவோம்."

Repeat and Good bye!

Madhavan said...

//kggouthaman said..."இறுதி நிலை வரை வராமல் ஏதேனும் ஒரு சுற்றில் எப்பவுமே 'அதிர்ச்சி தோல்வி' அடைபவர், எந்த நாட்டிற்காக ஆடினாலும் ஒன்றுதான்!"//

Please use Golden color bg for 'அதிர்ச்சி தோல்வி'

Well said.

ஜெயக்குமார் said...

அவர் யாரையாவது கலியாணம் செஞ்சு, எப்படியாச்சும் இருக்க அவருக்கு உரிமை இருக்கும்போது நம்ம எதுக்கு வெட்டியா கவலைப்பட்டுகிட்டு இருக்கோம்.

இஸ்லாமிய திருமண சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிய ஒரு வாய்ப்பு இது.. அதைத்தாண்டி இதில் ஒரு விஷயமும் இல்லை..

சுழியம் said...

The news from the inner-circles is that the Sania-cricketer marriage is arranged by a Hyderabadi business magnet who has underworld connections.

The agreement is that Sania is to be given an affluent settlement in exchange of not playing tennis and act against Islam.

Because of the arrangement, the cricket player is "asked" to marry Sania and Sania is "asked" to cancel the previous marriage arrangement with the childhood sweet heart.

When they thought that everybody is paid to shut their mouth, the former wife of the cricketer has raised it as a big issue.

As per the current report, these people are not accepting any monetary bribing and want to stop the marriage. But, as per Sharia they have no stand and sure to fail in the court. So, they will be paid more than the current bribe level to keep mum.

One thing is sure - Sania's marriage will happen with the cricketer as decided.

jaisankar jaganathan said...

//ஏதேனும் ஒரு சுற்றில் எப்பவுமே 'அதிர்ச்சி தோல்வி' அடைபவர்//

இப்போ சானியா இருக்கிறது 90 வது இடம். யாரை கல்யானம் பண்ணினா என்ன எனக்கு சான்ஸ் இல்லையே

ஜீயார் said...

அவர் திருமணம் செய்வதோ டென்னிஸ் விளையாடுவதோ அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த பால்தாக்கரேவை நான் சந்திக்கணும்னு நான் ஆசை படுறேன். உண்மையிலே அவர் மனதில் என்ன நினைச்சிட்டு இருக்கிறார்.

வாக்காளன் said...

The point is she could have selected any muslim of Afghan/Saudi or other Arab nationality but certainly not Pakistan as pakistan is undoubtedly our enemy.

=== very funny === immatured anony... hahaha.. just could laugh at you .. what else we can do for this kind of a comment..

jaisankar jaganathan said...

//இந்த பால்தாக்கரேவை நான் சந்திக்கணும்னு நான் ஆசை படுறேன்//

அனுப்புங்க ஜீயாரை சீக்கிரம்

Anonymous said...

Now we know where the real allegiance of Indian Muslims lie.

They always look at Porkistan as "their" Nation and Porkis as their compatriots.

ராதை said...

என் கல்லூரிக் காலங்களில் சானியாவின் புகைப்படங்களையும், அவரின் வெற்றிப் புன்னகையோடு பத்திரிக்கைகளில் வெளியான படங்களையும்(including the second one published here!) கத்தரித்து, என் அலமாரிக் கதவுகளில் ஒட்டி வைத்து... தினம் தினம் அதைப் பார்த்து ஊக்கம் அடைந்து.. என் பாடங்களைப் படித்து நான் வெற்றி பெற்ற அனுபவங்கள் எல்லாம் உண்டு :)

அவர் செய்த சாதனைகளை மறுப்பதற்கு இல்லை.. எனினும் சோயேப் உடனான திருமணத்தைப் பற்றி நான் சொல்வதற்குப் புதிதாக ஏதும் இல்லை ;)

Don said...

It's media that built the image for Sania as a face of Indian women in sports. Indian media reports even if she sneezes. Now with this decision to marry a Pak(though private), she has tarnished not only her image but also the media. One can imagine how ashamed the media would have felt. Even the newspaper boy would have had some patriotism and felt ashamed for carrying news about Sania.(It's the same dejection one would feel, if Sachin marries a Pak lady). Atleast from now onwards, media has to think twice before giving such fools, the limelight.
Ironically, when our jawans are dying in the borders, these people are sending their daughters to Pak to procreate. WTF? I've more respect for prostitutes in India. (I, very much support/appreciate Thackeray here)

Baski said...

//என்னைக் கேட்டால், இறுதி நிலை வரை வராமல் ஏதேனும் ஒரு சுற்றில் எப்பவுமே 'அதிர்ச்சி தோல்வி' அடைபவர், எந்த நாட்டிற்காக ஆடினாலும் ஒன்றுதான்!//

இவருடைய தற்போதைய சர்ச்சையால் இவருடைய திறமையை குறைத்து பேச வேண்டாமே?
பெண்கள் டென்னிசில் இவர் தான் இந்தியாவின் நம்பர் ஒன். இரண்டாவது, மூன்றாவது சுற்று வரையாவது விளையாடும் ஒரே இந்தியர்.
இவர் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து மீண்டும் நல்ல முறையில் விளையாட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
இவர் யாரை கல்யாணம் பண்ணவேண்டும் என்பது அவர் சொந்த விஷயம்.

Dr.P.Kandaswamy said...

//எது உண்மையோ இதுவரை யாருக்கும் தெரியாது. மிஞ்சுவதெல்லாம் குழப்பமே.//

ஆஹா, நம் நாட்டில் இதுவரை இல்லாத ஒன்று பாகிஸதானிலிருந்து இறக்குமதியாயிருக்கிறது. கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்ச்சி! :-)

Vivekan-Sydney said...

பாகிஸ்தானுலே ஆணி புடுங்க முடியாமல், இங்கே வந்து சாணியை மேர்ச்சா இது தான் நடக்கும்.

R.Gopi said...

//இல்லை திருமாவளவன் கருப்புக் கொடியைத் தூக்கிக்கொண்டு கிளம்பியிருப்பார்.//

******

ஆமாம்... இங்க வேற என்ன வெட்டி முறிக்கற வேலை.... “தல”க்கு பாராட்டு விழாக்கு ரெடி ஆயிட்டு இருக்கார்...

மஞ்சள் ஜட்டி said...

//Vivekan-Sydney said...

பாகிஸ்தானுலே ஆணி புடுங்க முடியாமல், இங்கே வந்து சாணியை மேர்ச்சா இது தான் நடக்கும்.//

Well Said..... humorously..

அறிவிலி said...

மஞ்ச பெயிண்ட் அடிச்ச தகவல் மிகவும் உபயோகமான ஒன்று.

:-)