பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 04, 2010

அத்வானி - அஞ்சுகுப்தா

அஞ்சுகுப்தா என்ற பெண்மணி பற்றி அதிகம் யாரும் கண்டுகொள்ளவில்லை. 1992 டிசம்பர் ஆறாம் நாள் பாபர் மசூதியை இடித்த நாள் என்பது பலருக்கு தெரியும். அந்த நாளுக்கு பிறகு இந்து முஸ்லீம் இருவருக்கும் இடையே நிலவிய ஒற்றுமை ( அட்லீஸ்ட் கொஞ்சமாவது நிலவிய ) கொஞ்சம் சரிந்து போனது என்பது வரலாற்று உண்மை.


பா.ஜ.க அரசியலில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை நிறைவு பெறவில்லை என்றாலும், டெல்லியில் கொஞ்சம் நாள் இருந்தார்கள். இருந்த வரை பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ் மாஸ்டர்களாகவும் இவர்கள் ஸ்லேவாக இருக்கிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்தார்கள். அத்வானி என்ற தைரியசாலி ஜின்னா பற்றி பேசிய போது ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு தெரிவிக்கவே உடனே அவர் பல்டி அடித்தார். இவர் பிரதமராக ஆகியிருந்தால் ஒவ்வொரு பேச்சும் ஆர்.எஸ்.எஸிடம் கேட்டு தான் பேசியிருப்பார்.

அந்த பாபர் மசூதி இடிப்பு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் சங்கப் பரிவார் முன்னனியில் நடந்த பாபர் மசூதி இடிப்பில் "மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படமால் கரசேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோள் எடுபடவில்லை. உணர்ச்சியின் உச்சத்தில் தொண்டர்கள் மசூதியை தகர்த்து விட்டனர், அதை எங்களால் தடுக்க முடியவில்லை" என்று அத்வானி & கோ சொல்லிவந்தார்கள்.

ஆனால் அந்த உணர்ச்சியை தூண்டிவிட்டதே அத்வானி & கோ தான் என்று அஞ்சுகுப்தா தற்போது பேசியுள்ளார்.

"கோயிலை இங்கே கட்டியே தீருவோம்" என்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன் மசூதியை உடைக்கும் நோக்கத்தைத் தூண்டிவிடும் வகையில் பேசியதால் தான் மசூதி இடிக்கப்பட்டது என்று சொல்லியுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அத்வானி அருகில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார் இவர் இந்த அஞ்சுகுப்தா.

"மசூதியை இடித்தபோது அத்வானியும் மற்ற தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டு, இனிப்புகள் சாப்பிட்டனர். நான் அப்போது காவல் கண்காணிப்பாளரைத் தொலைபேசியில் கூப்பிட்ட போது அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று சாட்சியமளித்துள்ளார் அஞ்சுகுப்தா.


அஞ்சுகுப்தா நிஜமாகவே அஞ்சாத குப்தா!

27 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

அஞ்சு குப்தாவின் அறிக்கையில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஏனெனில் இவ்விஷயத்தை திடீரென்று இவ்வளவு காலம் கழித்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்ட்து என்று புரியவில்லை. இது ஏதோ ஏற்படுத்தப்பட்ட அவசியம் போல்தான் தோன்றுகிறது. நானாவதி கமிஷன் அறிக்கை வெளியாகி பாராளுமன்றத்தில் பெரிய புயல் கிளப்ப்ப்பட்டபோது கூட அஞ்சு குப்தா இம்மாதிரியான விஷயத்தை வெளியிட்டிருக்கலாம். அப்போது ஏன் செய்யத் தவறினார் என்பதும் தெரியவில்லை.

அத்வானி தனது சுயசரிதையில் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னால் நடந்தவை பற்றியும், பின்னர் நடந்தவை பற்றியும் மிகத் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

Anonymous said...

When did you change your color from ஆரஞ்சு to பச்சை, IV?

சொல்லவே இல்ல?

அஞ்சா நஞ்சன் said...

ஹூம்..இந்த விசாரனைஎல்லாம் எப்ப முடிஞ்சு .. எப்ப தண்டனை கொடுத்து.. கண்ணை கட்டுதே...

ஜெயக்குமார் said...

ஓஹோ, இத்தனைநாள் இந்தம்மா எங்க இருந்துச்சாம்?

IdlyVadai said...

//When did you change your color from ஆரஞ்சு to பச்சை, IV?

சொல்லவே இல்ல?//

இட்லிக்கு இரண்டு மூன்று சட்னி வைப்பார்கள். சிகப்பு, பச்சை, வெள்ளை. சிகப்பு, பச்சை நன்றாக இருந்தாலும், எனக்கு என்னவோ வெள்ளை சட்னி தான் எனக்கும் பிடிக்கும்.

யதிராஜ சம்பத் குமார் said...

http://blogs.hindustantimes.com/separated-at-birth/2010/03/29/a-gupta-whom-they-call-rizvi/

இந்த லிங்க பார்த்தா அஞ்சு குப்தா ஏன் அப்படி சொல்லிருப்பாங்கன்னு கூட யூகிக்கலாம்.

ஜெயக்குமார் said...

// IdlyVadai said...

இட்லிக்கு இரண்டு மூன்று சட்னி வைப்பார்கள். சிகப்பு, பச்சை, வெள்ளை. சிகப்பு, பச்சை நன்றாக இருந்தாலும், எனக்கு என்னவோ வெள்ளை சட்னி தான் எனக்கும் பிடிக்கும்.//

தேங்காய்ச் சட்னிதான் பிடிக்கும்னு நேராச் சொல்லவேண்டியதுதான...

:-)

IdlyVadai said...

//
தேங்காய்ச் சட்னிதான் பிடிக்கும்னு நேராச் சொல்லவேண்டியதுதான...
//

சொல்லலாம் ஆனால் பின்னூட்டம் போட்டவருக்கு கொலஸ்டரால் இருந்தால் ? அதனால் தான்!

Anonymous said...

கொலஸ்ட்ரால் இருந்தால் நானும் உங்களை மாதிரி பதிவு போடுவேன். பின்னூட்டம் போட மாட்டேன்.

அதே அனானி.

IdlyVadai said...

//கொலஸ்ட்ரால் இருந்தால் நானும் உங்களை மாதிரி பதிவு போடுவேன். பின்னூட்டம் போட மாட்டேன்.

அதே அனானி.//

தீய கொலஸ்டிரால் அளவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவும் மாறி போயிருக்கு. எதற்கு டாக்டரிடம் போய் செக்கப் செய்துக்கொள்ளுங்கள்.

ஹரன்பிரசன்னா said...

வஹாபி இஸ்லாம் என்றெல்லாம் என்னவோ எழுதி ஒரு விமர்சனம் வந்தது. இப்போது இதைப் போட்டு சமநிலைப்படுத்தியாகிவிட்டது. மீண்டும் அடுத்து இஸ்லாத்தைத் தாக்கி ஒரு பதிவும், அதை அடுத்து ஹிந்துத்துவத்தைத் தாக்கி ஒரு பதிவும் போட்டு தொடர்ந்து சமநிலை செய்துகொண்டே இருக்க வாழ்த்துகள்!

Madumitha said...

இதனால் என்ன
பிரயோஜனம்?

Itsdifferent said...

I dont know why IV is also trying to act like the sickular media.
She is now married to a muslim, and her full name is Anju Gupta Rizvi. Atleast by publishing her full name, the readers can make their own inferences on her intentions.

கால்கரி சிவா said...

ஒரு பழைய கட்டிடம் இடிந்ததை வைத்து மாவு அரைக்கிறார்கள் இந்தியாவில்.

SAN said...

IV,
Her name is Anju Gupta Rizvi.Her husband Rizvi a muslim is a
PS in Home Ministry directly reporting to PC

Anony8 said...

Even if it's true that Advani was jubiliant after that old building's (in Ram's Birth place)collapse, is it a crime to be happy? Those perpetrators who demolished the building are the criminals, not those who were happy for that.

IV is doing a nice balancing act. that won't mean IV can become yet another Pseudo Secular blog and side with the Jihadis.

Mayilvahanan said...

//
1990-batch IPS officer,Anju Gupta played a huge role in administrative arrangements in Faizabad in the days before the Babri Masjid demolition. As additional superintendent of police in Lucknow in the early 90s,the physics post-graduate cracked down on criminals.Married to batchmate Shafi Hasan Rizvi,she received the Police Medal for meritorious services in 2009.P6 //

She is a muslim, her testimony needs to be taken with a pinch of salt.

வலைஞன் said...

ம்ம்ம்ம்....... விட்டால் மகாத்மா காந்தியை யாரும் சுடவில்லை.அவரே துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டார் என்று கூட அன்று பிரார்த்தனை கூட்டத்தில் அவர் அருகே இருந்த யாராவது சாட்சியம் அளிப்பர்.

Anonymous said...

இ வ

இந்த அஞ்சு குப்தா இப்பொழுது ஒரு ரா ஏஜெண்ட் என்பதும் இவர் ஒரு முஸ்லீம் என்பதுமாவது உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் ரிசர்ச் செய்து விட்டு நியூஸ் ஐட்டங்களை வெளியிடவும். ரா வில் எத்தனைக் குழுக்கள் உள்ளன அவர்கள் எந்தெந்த அரசியல் எஜமானர்களுக்கு வேலை பார்க்கிறார்கள் என்பதாவது தெரியுமா? மேலும் அஞ்சு குப்தா கொடுத்த வாக்குமூலத்தை முழுமையாகப் படித்தீர்களா? அதில் அத்வானி பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சற்று உற்றுப் படியுங்கள். மேலும் அவர் யார் யார் கொண்டாடினார்கள் என்ற லிஸ்டைப் படித்தீர்களா? எதையுமே படிக்காமல் சும்மா தட்ஸ் தமிழில் ஏ கே கான் போடும் செய்திகளைப் படித்து விட்டு பதிவு போடுவதாயிருந்தால் அதுக்கு தட்ஸ் தமிழே போதுமே எதுக்கு இட்லி வடை? எதையுமே மேம்போக்காக படிக்காமல் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பதிவு போட்டால் படிப்பவர்களுக்கு கொஞ்சமாவது பலன் கிட்டும்.

அஞ்சுகுப்தாவின் வாக்குமூலத்தில் தெளிவாக அத்வானி கும்முட்டத்தின் மேலே இருந்தவர்களை இறங்கச் சொல்லி கெஞ்சுவதற்காக அவர் அங்கே செல்ல முயன்றதையும் அதே இதே அஞ்சு குப்தா அதைத் தடுத்ததையும் சொல்லியிருக்கிறார். நம் பத்திரிகைகள் எல்லாவற்றையுமே திரித்து வெளியிடும் இட்லி வடையும் அதைக் காப்பி அடித்தால் என்னத்தைச் சொல்ல?

Sreenivasan said...

statement by anju gupta lacks credibility.

R.Gopi said...

ஏற்கனவே எரிகிற தீயில் இப்போது இவர் பெட்ரோல் ஊற்றாமல் இருந்தால் தான் என்ன!!!???

ஜீயார் said...

ஃஃஃஒரு பழைய கட்டிடம் இடிந்ததை வைத்து மாவு அரைக்கிறார்கள் இந்தியாவில்ஃஃஃஃஃ

அப்புறம் ஏன் அதே இடத்தில் இன்னொரு கட்டிடம் கட்டவேண்டும் என்று ........றார்கள்.

jaisankar jaganathan said...

//அப்புறம் ஏன் அதே இடத்தில் இன்னொரு கட்டிடம் கட்டவேண்டும் என்று ........றார்கள்//

இப்படி வந்தேறிகளுக்கு சப்போட் பண்ணினா எப்படி திராவிடன் முன்னேறுவது ஜீயார்

Anonymous said...

Advani led a movement for constructing a temple for Ram in that place. He undertook a rath yatra and toured the country giving speeches on the subject. So you dont need anybody's evidence saying "Advani gave fiery speeches".And if he was not happy on the Masjith falling, who else would be?(You cannot build a temple in that place unless the masjith is removed-it is obvious!) The real questions to be asked are:
Did Advani actually take part in demolishing the mosque or was he involved in any conspiracy to mobilise people with weapons for the demolision?
When it was so well known to the whole world that the karsewaks had assembled there with shovels etc.,and demolision of the mosque is the only item on their agenda, why adequate steps were taken by the sworn secularists to prevent it ?

ஜீயார் said...

இத சப்போர்ட்னு நீங்க ஏன் எடுத்து கொள்கிறீர்கள் jaisankar jaganathan.
என்னைப் பொருத்தவரை மசூதியும் வேண்டாம், ராமர் கோவிலும் வேண்டாம். இடிந்துபோன கட்டிடம் என்று சொன்ன கால்கரி சிவா இராமர் கோவிலும் (கட்டிடம்) வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன்.

நான் படித்தவரை அஞ்சு குப்தா விசாரணையின் போதுதான் மேற்கூறிய தகவல்களை தெரிவித்தார் என அறிகிறேன்.

ஃஃஃஃஅஞ்சு குப்தாவின் அறிக்கையில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்ஃஃ

ஃஃஓஹோ, இத்தனைநாள் இந்தம்மா எங்க இருந்துச்சாம்?ஃஃ

வஹாபி இஸ்லாம் என்றெல்லாம் என்னவோ எழுதி ஒரு விமர்சனம் வந்தது. இப்போது இதைப் போட்டு சமநிலைப்படுத்தியாகிவிட்டது. மீண்டும் அடுத்து இஸ்லாத்தைத் தாக்கி ஃஃ

ஃஃம்ம்ம்ம்....... விட்டால் மகாத்மா காந்தியை யாரும் சுடவில்லை.அவரே துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டார் என்று கூட அன்று பிரார்த்தனை கூட்டத்தில் அவர் அருகே இருந்த யாராவது சாட்சியம் அளிப்பர்.ஃஃ
ஃஃஇந்த அஞ்சு குப்தா இப்பொழுது ஒரு ரா ஏஜெண்ட் என்பதும் இவர் ஒரு முஸ்லீம் என்பதுமாவது உங்களுக்குத் தெரியுமா?ஃஃ

விசாரணை முடியட்டுமே. அதற்குள் ஏன் இந்த அவசரம்

SAN said...

IV,
Here is a link for IV followers.
Decide yourself about the peaceful religion.

ஜீயார் said...

இத சப்போர்ட்னு ஏன் நினைக்கிறீங்க jaisankar jaganathan. என்னைப் பொருத்தவரை மசூதி கோவில் இரண்டுமே வேண்டாம்.