பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 03, 2010

உத்திரப் பிரதேசம் எங்கே செல்கிறது?

மாயாவதியின் பணமாலை சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்த சர்ச்சைக்கு ஆயத்தமாகி விட்டார் மாயாவதி. இப்பொழுது மாயாவதிக்கு கோவில் கட்டப் போகிறார்களாம். அதுவும் எங்கே? உத்திரப் பிரதேசத்தில் பொருளாதார மற்றும் இதர ரீதியாக பின்தங்கிய மாகாணமாக்க் கருதப்படும் மஹோபாவிலுள்ள பண்டேல்கண்ட் என்ற இடத்தில்.


இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்திரப் பிரதேசம் எல்லா விதங்களிலும் பின்தங்கிய ஒரு மாநிலமாக இன்றும் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்றும் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், அடிப்படை வசதிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத மாநிலம் ஒன்று உண்டென்றால் அது உத்திரப் பிரதேசமாகத்தான் இருக்க முடியும். அங்கு ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தையே நிர்மாணித்து கட்டிக் காத்து வருபவர் மாயாவதி. தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதில் இவருக்கு நிகர் இவரே.


இக்கோவிலை எழுப்பவிருப்பவர் கன்னையா லால் என்ற ஒரு வழக்கறிஞர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் உறுப்பினராக இல்லாத நிலையிலும் கூட மாயாவதியின் மீது பெருமதிப்பு உடையவர். காரணம் இவரும் ஒரு தலித். ஒரு தலித் பெண்மணிக்கு இவ்வளவு புகழ் வருவது கண்டு சிலர் பொறாமையால் மாயாவதியை விமர்சிக்கின்றனர் என்று மாயாவதியின் பணமாலைக்கு இவர் நியாயம் கற்பிக்கிறார். கூடவே 70 களில் இந்திராவுக்கு பண்டேல்கண்ட் மாகாணத்தில் எடைக்கு எடை வெள்ளி கொடுக்கப்பட்ட்தையும் நினைவு கூர்ந்து, அது மட்டும் நியாயம், பணமாலை நியாயமில்லையோ என்று எதிர் கேள்வி கேட்கிறார்.எனினும், உயிருடன் இருப்பவருக்கு கோவில் எழுப்ப்ப்படுவதால், அது சம்பத்தப்பட்ட நபரின் அனுமதி பெற்றே செய்யப்பட வேண்டும் என உள்ளூர் அதிகாரிகள் கன்னையா லாலுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். அவரும் மாயாவதிக்கு கோவில் கட்டுவதற்காக அவரிடமே மனு செய்துள்ளார். கரும்பு தின்னக் கசக்குமா என்ன? தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்ளும் நபர், அடுத்தவர் கட்டும் கோவிலுக்கு மறுப்பா தெரிவிக்கப் போகிறார்?


பாரத்த்தின் மிக உயரிய ஆன்மீகத்தலங்கள் இருக்கும் ஒரு மாநிலத்தில் இப்படியும் ஒருவருக்குக் கோவில்? உத்திரப் பிரதேசம் எங்குதான் சென்று கொண்டிருக்கிறதோ?

எது எப்படியோ மீடியாவும், மக்களும் இவர் செய்த ஊழல்களை மறந்துவிட்டார்கள் !

18 Comments:

ஜெயக்குமார் said...

//எது எப்படியோ மீடியாவும், மக்களும் இவர் செய்த ஊழல்களை மறந்துவிட்டார்கள் !//

இத, இத இதத்தான் எதிர்பார்த்தேன் என மாயாவதி நினைத்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.

உண்மையிலேயே கல்வியறிவு பெறாத எந்த இனமும் கீழ்மையடையும், அழியும். தனது தலைவிதியை தலைவர்கள் தீர்மானிப்பார்கள் என நினைத்துக்கொண்டிருந்தால் தலைவர்கள் மட்டுமே நன்றாய் இருப்பார்கள். தலித் மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் தராதவரையில் இதுபோன்ற தலைகள் மட்டுமே கிடைப்பார்கள்.

snkm said...

தமிழ் நாட்டுலயும் ஆரம்பிக்காம இருந்தா சரிதான்! இவங்க தனக்குத்தானே கோவில் மட்டும் தான் கட்டிக்கலைன்னு நினைக்கறேன்!

Anonymous said...

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

Anonymous said...

இதைத் தட்டிக்கேட்டால் ஒரு தலித் தலைவரை கேள்வி கேட்டார்கள் என்பார்கள். நமது நாட்டைப் பாருங்கள். பொம்மை போன்ற பிரதமர், ஜனாதிபதி. தன்னைத்தானே பாரட்டி பாராட்டுகளுக்கு மயங்கும் ஒரு மாநில முதல்வர். தனக்குத் தானே கோவில் கட்டும் ஒரு மாநில முதல்வர். பணம் வேண்டுமானாலும் தருகிறேன் ஆனால் தண்ணீர் தரமாட்டேன் என சொல்லும் முதல்வர்கள்.

அட போங்கப்பா நமக்கெல்லாம் இது போன்ற கவலைகள் தேவையில்லை. நமக்கு தேவை எது தெரியுமா? நித்தி...

ஒரு படத்தில் பி.எஸ்.வீரப்பா சொல்லுவார்: இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.

சட்டம் நம் கையில் said...

இந்தியாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். தலையெழுத்து!

snkm said...

இந்தியாவே எங்கு சென்று கொண்டிருக்கிறதோ! ஊழல் செய்யும் அரசியல் வியாதிகளால் தானே நாடு ஏழ்மையை அடைந்து இருக்கிறது!
இல்லையெனில் மக்கள் சக்தியை உபயோகித்து எவ்வளவோ அடைந்து இருக்கலாமே!

Anonymous said...

Long live our Nation.. Long live our Politicians.//BTW idly, have u seen the Telugu movie "Leader", it would be great if u post a review...
*Prashanth*

டகிள் பாட்சா said...

கோவிலுக்கு பதிலாக சமாதி கட்டினால், அனைவரி ஆதரவும் கிடைக்குமே!

Anonymous said...

UP is fast becoming a Pakistan within India and a natural breeding ground for terrorists. BJP shud come back asap, otherwise UP will be lost for ever.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சீனு said...

Oh my GOD...(not Mayawati)

ராஜ சுப்ரமணியன் said...

**அட போங்கப்பா நமக்கெல்லாம் இது போன்ற கவலைகள் தேவையில்லை. நமக்கு தேவை எது தெரியுமா?***

நன்றாகச் சொன்னீர்கள், அனானி. நமக்குத் தேவை “அது” மட்டுமல்ல; தினம்தினம் கூத்தடிக்கும் ஐபிஎல்-3ம் தான். பிரபல ஆங்கில மீடியாக்களைப் பாருங்கள் - 24 பக்கங்களில் 23 1/2 பக்கம் இந்த செய்திதான் !!

நாட்டுக்கு எப்போது விடிவு வரும்?

Anonymous said...

குஷ்புக்கு கோயில் கட்டினால் சரி, மாயவதிக்கு கட்டினால் தவறா? பல்லு இருக்கிறவன் சீடை திங்கறான் உனக்கு ஏய்யா கடுப்பு?

Anonymous said...

// ஒரு படத்தில் பி.எஸ்.வீரப்பா சொல்லுவார்: இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்//

;(

;(

;(

kggouthaman said...

அந்த கோவிலில் அர்ச்சகர் வேலை கிடைக்குமா?

jaisankar jaganathan said...

//அந்த கோவிலில் அர்ச்சகர் வேலை கிடைக்குமா?

//

இந்த வயசிலா. காஞ்சிபுரத்தில் கிடைக்கும்

Madhavan said...

//ராஜ சுப்ரமணியன் said...
நன்றாகச் சொன்னீர்கள், அனானி. நமக்குத் தேவை “அது” மட்டுமல்ல; தினம்தினம் கூத்தடிக்கும் ஐபிஎல்-3ம் தான். பிரபல ஆங்கில மீடியாக்களைப் பாருங்கள் - 24 பக்கங்களில் 23 1/2 பக்கம் இந்த செய்திதான் !!

--- நீங்க கூடத்தான், நல்லாவே சொல்லிப்புட்டீங்க.. நானும்தான், என்னால முடிஞ்சதை இங்க (http://madhavan73.blogspot.com/2010/03/i-p-l.html)
சொல்லியிருக்கேன்..

kggouthaman said...

ஜெயசங்கர் - அர்ச்சகர் வேலை கிடைத்தால் - தமிழில் அர்ச்சனை செய்ய மந்திரங்கள் தயார் பண்ணலாம் என்று பார்த்தால் நீங்க என்னுடைய ரூட்டையே மாத்தரீங்களே!