பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 05, 2010

மண்டேனா ஒன்று - 5/4/2010

இந்த வாரம் IPL ஸ்பெஷல் !

கிரிக்கெட் என்பது பொழுது போக்கு என்ற நிலையிலிருந்து வர்த்தகம் என்ற நிலைக்கு பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு தற்போது நடைபெறும் IPL போட்டிகள் கண்கூடான எடுத்துக்காட்டு. தற்போது மூன்றாவது சீசன் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டிற்காக இன்னும் இரண்டு அணிகள் முறையே புனே மற்றும் கொச்சி ஆகிய இரண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு அணிகளும் சுமார் 4000 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றன. இந்த 4000 கோடி ரூபாய் ஏலத்தொகை மற்ற எட்டு அணிகளும் மொத்தமாக ஏலம் போன தொகையை விடவே அதிகம். அந்த அளவிற்கு ஐபிஎல் புகழையும், வருமானத்தையும் ஈட்டித் தருகிறது.


இவ்வாண்டு ஐபிஎல் துவக்கமே பல சர்ச்சைகளுடன் துவங்கியது. முதலில் ஏலத்தில் பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் எவரும் விலை போகாத்தால், இது இரு நாடுகளுக்கிடையே நிலவும் உறவு சார்ந்த பிரச்சனையாக மீடியாக்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. அடுத்த்தாக பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் என ஆரம்பமே அமோகத் துவக்கம். அணியை பெரும் தொகைக்கு ஏலம் எடுத்த பணமுதலைகள் அதோடு நில்லாமல், தங்கள் அணிக்காக அயல்நாட்டு வீர்ர்களைப் பெரும் தொகைக்கு விலைக்கு வாங்கியிருக்கின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் கெய்ரன் போலார்டு மற்றும் நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஆகிய இருவரும் முறையே 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளனர். அதற்கு அடுத்த்தாக மேற்கிந்தியத் தீவுகளின் வேகப் பந்து வீச்சாளர் கிமார் ரோச் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளார். ஆனால் இதில் வேடிக்கையான விஷயமென்னவெனில், இவ்வாறு அதிக அளவில் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் எவருமே எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை என்பதே!! இவ்வாண்டு மட்டுமல்ல, சென்ற ஆண்டு 6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ப்ளிண்டாஃப் காய்ம் காரணமாக ஆட்டங்களிலேயே பங்கேற்கவில்லை.இதைத் தவிர மேலும் சில சுவாரஸ்யமான களத் தகவல்கள் உங்களுக்காக.இந்த ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக, இந்தியாவின் முன்னாள் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, Wide Angle என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். இவருக்கு புகைப்படக்கலை மற்றும் வனவிலங்குகள் ஆகிய இரண்டு விஷயங்களிலும் அயராத பிரேமை. அதனை வெளிப்படுத்தும் விதமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் சுற்றுப் பயணத்தில் தான் சென்ற வனவிலங்குகள் சரணாலயங்களில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் தனது அணியின் ட்ரெஸிங் ரூமில் எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அதன் விலை, அதிகமில்லை!! ரூபாய் 4900/- மட்டுமே!ஐபிஎல் –இல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணிகளான கொச்சி மற்றும் புனேவை முறையே Rendezvous Sports World Ltd உம், சஹாரா நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன. இதில் கொச்சி அணியின் உரிமையாள்ர் கூறுகையில், எனக்கு கிரிக்கெட்டைப் பற்றி எதுவுமே தெரியாது, முழுக்க முழுக்க வர்த்தக நோக்கிலேயே ஏலம் எடுத்துள்ளேன் என்றார். சஹாராவின் உரிமையாளர், கிரிக்கெட் என்பது தனது உணர்வோடு ஒன்றிய விஷயம், எனவே இதில் வரும் லாப நஷ்டங்கள் எனக்கு முக்கியமில்லை என்று தெரிவித்தார்.மும்பை கிரிக்கெட் ரசிகர்களுக்கும், யுவராஜ் சிங்கிற்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம். 2005 இல் ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மும்பையில் மோதிய போது, தன்னைக் கிண்டல் செய்த ஒரு ரசிகரை தனது பேட்டால் அடிப்பதற்கு சென்று விட்டார் யுவராஜ். அது முதல் யுவராஜ் என்றாலே மும்பை ரசிகர்களுக்கு எட்டிக் காய். முதல் சீசன் ஐபில் போட்டிகளின் போது யுவராஜை ஸ்டாண்டிலிருந்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்தனர். ஆனால் வெற்றி பெற்ற பின்னர் நடைபெற்ற பேட்டியின் போது, இந்தியாவிற்காக பஞ்சாப் வீர்ர்கள் சிலரும் ஆடுகின்றனர் என்பதை மும்பை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றார். தற்போது, மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் யுவராஜ் மைதானத்தில் நுழைந்தவுடனேயே மும்பை ரசிகர்கள் கிண்டலைத் துவக்கி விட்டனர். அந்த எரிச்சலில்தானோ என்னவோ சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார்.பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பெங்களூரில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு, அணித் தரப்பிலிருந்து கர்நாடக ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இலவச டிக்கெட் அனுப்ப்ப்பட்ட்தாம். ஆனால் எல்லா டிக்கெட்டுமே வெறும் 49 ரூபாய் மதிப்புள்ள கடைசி தர டிக்கெட்டுகளாம். இதனால் ஆளுங்கட்சி தரப்பு மல்லையாவுடன் கடும் அதிருப்தியில் இருக்கிறது.கிங் ஃபிஷர் நிறுவனம் பெங்களூர் அணியின் உரிமையாளர் மட்டுமல்லாது, மற்ற பிற அணிகளுக்கும் ஸ்பான்ஸர் செய்து வருகிறது. அதனால் கிங் ஃபிஷர் நிறுவனத்தின் லோகோவை சட்டையில் வீர்ர்கள் அணிய வேண்டுமென்பது விதி. ஆனால் கிங் ஃபிஷர் நிறுவனம் ஒரு மதுபானத் தயாரிப்பு நிறுவனம். மதுபானம் என் மத நம்பிக்கைக்கு எதிரானது எனக் கூறி, கிங் ஃபிஷர் லோகோவை அணிய மறுத்து விட்டார் ராஜஸ்தான் அணியின் அதிரடி நாயகன் யூசூஃப் பதான். பாராட்டுக்குரியவர்தான்!!ஐபிஎல்-இன் பதினாலு லீக் போட்டிகளை நேரில் கண்டு களிப்பதற்கான முதல் வரிசை டிக்கெட்டின் மொத்த விலை ரூபாய் 5.6 லட்சங்கள். இதை முன்பே முன்பதிவு செய்து விட வேண்டுமாம். ஐபிஎல் பைனல் போட்டிக்கான முதல் வரிசை டிக்கெட்டின் விலை ரூபாய் 1.6 லட்சம். இதைத் தவிர ஒவ்வொரு போட்டிக்குப் பின்னர் நடைபெறும் இரவு விருந்தில் வீர்ர்களுடன் பங்கேற்பதற்கான கட்டணம் ரூபாய் 40,000.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சென்ற ஆண்டுவரை ஆடி வந்த ரவீந்த்ர ஜடேஜா, சம்பளம் போதவில்லை என்று மறைமுகமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தோடு பேரம் பேசியுள்ளார். அது தற்போது ஐபில் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்து, அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. அதோடல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் ஆட ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.இதுவரை இந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ள அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதுவரை நடைபெற்றுள்ள 8 போட்டிகளில் 7 இல் தோல்வி கண்டு கிட்ட்த்தட்ட இந்த சீசனிலிருந்தே வெளியேறும் நிலையிலுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அணியின் சக வீர்ர்கள் கேப்டன் சங்க்க்காராவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேப்டன் பதவி யுவராஜிடமிருந்து பறிக்கப்பட்டு, சங்க்க்காராவிடம் கொடுக்கப்பட்டுள்ளதால் யுவராஜ் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், சரிவர ஒத்துழைப்பதில்லை எனவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் யுவராஜும், அணி நிர்வாகமும் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்.அநேக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் வர்த்தகமே கண்ணாக அனைத்து போட்டிகளிலும் ஏதோ ஒரு பொம்மை போல் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, மும்பை அணியின் உரிமையாளர் நீது அம்பானி சற்றே வித்யாசப்படுகிறார். எப்போதும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த குழந்தைகள் புடை சூழ, அவர்களோடு மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டும் சிரித்தவாறும் இருக்கிறார்.

8 Comments:

kggouthaman said...

நல்ல ஆய்வுக் கட்டுரை. ஐ பி எல் - போட்டிகளை மையமாக வைத்து சூதாடும் கும்பல் கைது என்று செய்தி பார்த்தேன். ஒன்றுதானா? ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றுக்குக் குறைவில்லாமல் இருக்கும் என்று தோன்றுகிறது.

Anonymous said...

இட்லிவடை ஐயா நீங்களும் ஐபிஎல் கூட்டத்தில் சேர்ந்து விட்டீர்களா?

ராதை said...

செய்திகளின் தொகுப்பு அருமை.. படங்களும் :)

Anonymous said...

For 'spending' time without money you have to remain at home or walk to the beach or park. These days there is no entertainment without money!

Vikram said...

enna naina - neeyum vada naatu media madiri namma chennai teama kanddukave illa :-(
at least, oru trisha potovadhu podu ma :)

Vikram..

Han!F R!fay said...

IPL வடையை அழகாக பரிமாறி இருக்கீங்க .....

வடை சூப்பர் அண்ணே.....

வழிப்போக்கன் said...

எனக்குக் கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாத ஞானசூன்யம்.
ஆனால் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றதால், அதன் “ஏலதாரர்” கம்பெனியின் பங்குகள் பட்டம் போல ஏறினவாம்.
இதென்ன சூதாட்டம்?

Baski said...

That's India's power. International players begging for opportunity to play in Indian league matches.

We (India) need to pay more attention to Sports., I think IPL got it in right way. As of now sport is an useless focus for an Indian youth, as less(no) opportunities here.

I very well know hockey/swimming/football/basketball/volleyball/tennis can be attempted in similar fashion.. At-least people who are interested in this game will have some future.

Govt can ask (rather force) these organizations to focus on few other games and to spend a percentage on other sports.