பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 27, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 27-4-2010


இட்லிவடை ஒட்டு கேட்ட சில டெலிபோன் உரையாடல்கள்.

மக்கா முனி,

நல்லா இருக்கயா? இங்கே ஏதோ பரவாயில்லை. ஒரு வழியா IPL முடிஞ்சு போச்சு . டிவி பொட்டிய ஆஃப் பண்ணிட்டு நல்ல பாட்டு ஏதாவது கேக்கலாமுன்னு ஆன் பண்ணா ஒரே பேஜாராப் போச்சுப்பா. முன்ன எல்லாம் ஓலைப் பாயில எதுவோ பெஞ்ச மாதிரி பொண்ணோ, பையனோ பேசுவாங்க. நேத்திக்கு என்னடானா ரொம்ப சுவாரஸ்யமான சம்பாஷனைகள் ஓடிச்சு. என்னமோ டெலிபோன்ல தான் ஒட்டுக் கேக்கறான் அப்டின்னு உபில கூவிக்கிட்டு இருக்காங்க. இங்க என்னடான்னா மக்கள் பேசிக்கறது லைவ் கமெண்ட்ரி மாதிரி ரேடியோல ஓடுது. நாட்டு நடப்ப அப்படியே தரேன். படிச்சுப் பாரு.

"ஹலோ"...."நான் மதுரையிலேர்ந்து பேசறேன்"
"சொல்லுங்க சார்"
"எனக்கு நாளைக்கு சென்னைக்கு ஃபிளைட் டிக்கெட் வேண்டும், அடித்த நாள் ரிடர்ன்"...
"சார் நேற்று தானே போய்விட்டு வந்தீங்க?"
யோவ், டிக்கெட் போடச்சொன்னா போடு, இதே மாதிரி ஒரு ரெண்டு மாசத்துக்கு மொத்தமாப் போடு....இல்லேன்னா நான் யார் கிட்டயும் சொல்லாம ஏதாவது ரிசார்ட்டுக்கு போயிடுவேன்"
"சரிங்க சார்.."

[ இந்த சம்பாஷனைக்கு பிறகு டி.எம்.எஸ் பாடிய பாட்டு ஒன்று வருகிறது ]

"சார் நாங்க ரிப்போட்டரிலேர்ந்து பேசறோம்"
"சொல்லுங்க"
"உடனே ஒரு சீரியல் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி "உ" போடலாமா ?"
"அதுக்கென்ன உடனே போட்டாப் போச்சு!"
அப்பறம், எல்லாம் சௌக்கியம்தானே?
"சௌக்கியம்தான். என்ன கொஞ்ச நாளா சாப்பாடுதான் சரி இல்லை...பார்வதிபவனும் பல்லிளிச்சுட்டாங்க...டாக்டரும் கொஞ்சம் டையட்ல இருக்க சொல்லி இருக்காரு."
....
.....
.....
(கொஞ்ச நேரம் சைலென்ட் )
(எழுத்தாளர்) ஹலோ...ஹெல்லோஒ, இருக்கீங்களா லைன்ல?
"சார், சாரி சார். ஒரு விஷயம் இப்ப எங்க பத்திரிகை எம்டி வந்தார். உங்க சீரியலை நிறுத்த சொல்லிட்டார்" என்னங்க இப்படி செய்யறீங்க? நீங்க சொன்னதுனால சுடச் சுட இப்போ கிடைச்ச நேரத்துல ஒரு அத்தியாயம் முடித்துவிட்டேன்
(பெருங் குரலில், அதிர்ச்சியுடன்) ஆ! "என்ன அதுக்குள்ளையா? "
"யு சீ, எனக்கு இது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. டிவிட் செய்யறதுதான் கஷ்டம். அதுக்குக் கூட நாலாஞ்சாமத்துலதான் டைம் கிடைக்குது...என்ன பண்ண? இப்பல்லாம் நான் சினிமாவுக்குதான் எழுதறேன். நீங்க கேட்டதுனால சீரியல் எழுத ஒத்துக்கிட்டேன். இப்பிடி எல்லாம் பண்ணறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. கோச்சுகாதீங்க சார். இப்போதிக்கு தொடரும் போட்டுடறேன். மாற்றம் வந்தா முற்றும் வரைக்கும் கொண்டு போயிடலாம். சரியா?

( இதற்கு பிறகு ஏதோ பேசிக்கொண்டார்கள், என்ன பேசிக்கொண்டார்கள் என்று , இலக்கியமாக கூட இருக்கலாம் )

ஓகே. பை.


ஹலோ
....
ஹலோ

தூக்கக் கலக்கத்தில ஒரு பெண் குரல் ...

ஹல்ல்லோஓஓ ..
அங்கே மேடம் இருக்காங்களா? (கிணற்றுக்குள்ளே இருந்து பேசுவது போல்) ரெஸ்ட் எடுக்கலாம் என்று இங்கே வந்தா....... (கொஞ்சம் சத்தமாக) ராங் நம்பர்........

திரும்பவும் அதே நம்பருக்கு ஃபோன்
"இந்த இணைப்பு துண்டிக்கப்படுள்ளது, திரும்பவும் செய்தால் நீங்கள் துண்டிக்கப்படுவீர்கள்...."

ஹலோ...
குழைவான குரலில்) குஜாலானந்தம்!
(அதிகாரமாக யாரோ பேசுகிறார்கள், போலீஸாக கூட இருக்கலாம்) "எங்கே இருக்கீங்க சாமி?
"சாமி எங்கேயும் இருப்பார்."
நான் அந்த சாமியை பற்றி கேட்கலை ஆ'சாமி' பற்றி கேட்கிறோம்.
இப்ப தான் கும்பமேளா முடித்துவிட்டு டையர்டா இருக்கேன் ..
பெங்களூர் வாங்க கும்ம வேண்டும்..
எல்லாம் கலிகாலம்...
உங்களுக்கு களிகாலம் ஆரம்பித்துவிட்டது...சீக்கிரம் வாங்க

ஹலோஹலோ டாக்டரா ?
ஆமாம்நான் மோடி பேசறேன்(உற்சாகமா)
ஜி. குட் மார்னிங். ஆமதாபாத்துல வெயில் எல்லாம் எப்படி?
நான் அந்த மோடி இல்லை ஐ.பி.எல் மோடி(கடுப்பில்)
சீ. நீங்களா என்ன வேணும்? ஒரே அஜீர்ன கோளாறு டாக்டர்.
பின்ன? வராம இருக்குமா? கோடி கோடியா இட்லிவடை சாப்பிட்டா இப்படி தான்.
சரி சரி, உங்களுக்கு ஒரு 200 ml "சஸ்பென்ஷன்" கொடுக்கிறேன். உள்ளே போய் கொஞ்ச நாள் இருந்து, களியோட சேர்த்து இதைச் சாப்பிட்டா எல்லாம் சரியா'ஆயி'டும்.


ஹலோ, யாருயா? வேற மொழிப் படம் பாத்து கதை தேடும் போது போன் பண்ணறது?
சார் உங்களூக்கு பதிவு தபாலில் ஒரு புத்தகம் வந்திருக்கு
என்ன தலைப்பு ?
11 பேர் மட்டுமே நடிக்கும் படியான கதை கொண்ட படமாம்.
எந்தத் தபாலில் வந்திருக்கு ?
பதிவுத் தபால் தான்
நெட்டுக்கு வந்தா பதிவு தொல்லை, வீட்டுக்கு வந்தா பதிவுத் தபால் தொல்லை
கதை எப்படி இருக்கு ?
கதை நல்லா தான் இருக்கு போன முறை தபாலில் வந்ததே அதே போல தான் கதை ஆனா இது சூப்பர்.
சரி, கே.எஸ்.ரவிகுமாருக்கு போன் போடு. வந்துடறேன். நானே பதினொரு ரோலையும் பண்ணிடறேன். படத்துக்கு தசாவதாரம்+1 ஒன்று பேர் பதிவு செய்துவிடுங்கள்.
(தயங்கியபடி)சார், இன்னூரு விஷயம்..சொல்லுயா...சார் உங்க மேல சுப்ரீம் கோர்டுல கேஸ் போட்டிருக்காங்க. உங்க சார்பில் வாதாட எந்த வக்கீலைப் போட?
யோவ், புரியாத ஆளா இருக்கியே? எதுக்குயா வக்கீலு? மாமிக்கு ஒரு ஃபோன் போடுங்க. அவங்க பேசிப்பாங்க.

(போன சம்பாஷனையின் போது வந்த கிராஸ் டாக் )
ஹலோ உங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போடிருக்கேன்.
நீங்க தானா அது கேவலமா இருக்கே என்று பார்த்தேன். அதை அப்பவே டெலீட் செய்துவிட்டேன்..
நீங்க டெலீட் செய்தால் நான் தனி பதிவா போடுவேன்.
(மறு முனையில் ஏதோ டமால் என்ற சத்தம்)


(ரொம்ப பவ்யமான குரலில்) ஐயா ஒரு விழா........
ஓ, அப்படியா. உடனே வரேன்னு சொல்லுய்யா..
ஐயா, உடனே போகமுடியாது, அப்படியே போனாலும் 101 சிலைகளை நீங்க திறந்து வைக்கணும்...
யோவ், என்னய்யா சொல்லற? 101ஆ?
ஆமாங்கய்யா...மாயாவதி அவங்க சிலைகளை எல்லாம் திறக்க உங்களை கூப்பிட்டிருக்காங்க..
திறந்து வைத்த பிறகு 101 சிலைகளை திறந்து வைத்தவர் என்று அப்படியே ஒரு பாராட்டு விழா நடத்தறாங்களாம்.
பாராட்டு விழா இருக்கா?
அப்போ சரிய்யா...பாவம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்க வேற....போயிட்டு வந்துடலாம்....

இதற்கு பிறகு வீட்டில் மின்சாரம் போய்விட்டதால் மேற்கொண்டு கேட்கமுடியவில்லை.

மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத அவலநிலையில்,
இட்லிவடை

12 Comments:

Seenu said...

ATTAHAASAM

RAJAGOPALAN-DUBAI

சீனு said...

ஒன்னுமே பிரியல...

சட்னி சாம்பார் said...

ஹலோ சார்
என்னய்யா
ஒரு பதிவு போடணும், டெலிபோன் ஒட்டுகேட்பு பத்தி, அதான் யார் யாரையெல்லாம் வம்புக்கு இழுக்கலாம்னு..
என்னய்யா இது நிம்மதியா துக்ளக் படிக்க விடமாற்றீங்க, சரி சரி, இப்போ ஐ பி எல் மோடி சுருட்டின கொடிகள் தான் ஹாட், அதைப்போடு,
சரிங்க சார்..
அப்புறம், பாராட்டு விழா பைத்தியத்தை பத்தி போடு, அப்படியே அவரோட 'ஜாதி' பாசத்தையும் சேர்த்து போடு,
சரிங்க,
அதுக்கு முன்னாடியே முன்னாளின் ரெஸ்ட் பங்களா பதியும் போடு, அப்பத்தான் எவனும் நம்ம மேல 'பச்சை' குத்த தயங்குவான்
சரிங்க,
அப்புறம் தந்திரன் பத்தி ஏதாவது...
யோவ், அவரு நம்மாளுயா வேணும்னா ஒலக தரத்த பத்தி போடு,
சரிங்க,
நடுவுல மானே தேனே எல்லாம் போட்டுக்க..
அது எப்படிங்க சார் எப்பவும் உங்களுக்கு புடிக்காதவங்க பதியே தப்பா எழுதி காலாத ஓட்டுறீங்க,
அதான் யா இந்த சட்னிசாம்பார், நடுநிலை மாதிரி நடிக்க நமக்கு கத்தா கொடுக்கணும் ?!?

keyven said...

நச...பதிவு.. சிரிச்சி வயிறு புண்ணாகிட்டுது..

Anonymous said...

” ஐய்யா.. இட்லி வடையா”
”ஆமாம்.. யார் பேசறது?”
“ மைலாப்பூர் கபாலி.. வூடு அட்ரஸ் கொடுங்கோ.”
“ எதுக்கு>”
“ ஆட்டோல வந்துகிட்டு இருக்கேங்க.”
“ எதுக்கு வர்றீங்க?”
“ இல்லீங்க.. புதுசா சைக்கிள் செயின் வாங்கினேன். அதை டெஸ்ட் பண்ணி பாக்கணும்..”
டொடக்

Gaana Kabali said...

"ஹலோ ! நான் ஷார்க் பேசறேன்!'

"ஷார்க் எந்த காலத்துல பேசியிருக்குது ? யாருயா நீ?"

"நான் தான்ணா சுறா.
நம்ப படத்தை டாப் 10 மூவீஸ்ல மொதல்ல போட்டு,அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு விளம்பரம் போட்டு எப்பிடியாவது ஒடவச்சிடுங்கணா ."

"நடிச்சி முடிச்சி படத்த எங்க கிட்ட வித்துட்டா போதும் அதுக்கப்புறம் நாங்க பாத்துப்போம் டப்பா படத்துக்கும் டாப் டாக்கரா விளம்பரம் பண்ணுவோம்.
அங்காடித்தெரு படம் டாப் 10 லிஸ்ட்லே வரவே இல்ல பாத்தீங்களா. அதே மாதிரி தான் நல்ல படத்த இருட்டடிப்பு செய்துட்டு டப்பா படத்த ஆஹா ஓஹோன்னு புகழ்வோம்.உங்க படத்தையும் புகழ்ந்து தள்ளிடுவோமில்ல "

"இதல்லாம் உங்களுக்கு சொல்லிதர வேண்டியதில்லன்னு எனக்கு தெரியுங்கண்ணா. இருந்தாலும் ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லிடலாம்னு தாங்கண்ணா போன் பண்ணேன் ."

வலைஞன் said...

>>நச...பதிவு.. சிரிச்சி வயிறு புண்ணாகிட்டுது..<<
வயிறு எரிய வேண்டிய விஷயம் நம்மை சிரிக்க வைக்குது.இத வச்சு அவன் கோடிக்கணக்கிலே கொள்ளை அடிச்சுகிட்டு இருக்கான்.நாம் சிரிச்சுக்கிட்டு இருக்கோம்.ஏழைங்க கஷ்டப்படறாங்க!
நல்ல ஜனநாயகம்! நல்ல மக்கள்!! நல்ல அரசு!!

Anonymous said...

//(ரொம்ப பவ்யமான குரலில்) ஐயா ஒரு விழா........
ஓ, அப்படியா. உடனே வரேன்னு சொல்லுய்யா..
ஐயா, உடனே போகமுடியாது, அப்படியே போனாலும் 101 சிலைகளை நீங்க திறந்து வைக்கணும்...
யோவ், என்னய்யா சொல்லற? 101ஆ?
ஆமாங்கய்யா...மாயாவதி அவங்க சிலைகளை எல்லாம் திறக்க உங்களை கூப்பிட்டிருக்காங்க..
திறந்து வைத்த பிறகு 101 சிலைகளை திறந்து வைத்தவர் என்று அப்படியே ஒரு பாராட்டு விழா நடத்தறாங்களாம்.
பாராட்டு விழா இருக்கா?
அப்போ சரிய்யா...பாவம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்க வேற....போயிட்டு வந்துடலாம்....//

sooper!!!

நீச்சல்காரன் said...

//இதற்கு பிறகு வீட்டில் மின்சாரம் போய்விட்டதால் மேற்கொண்டு கேட்கமுடியவில்லை.

மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத அவலநிலையில்,
இட்லிவடை//

தலைவா!
கரண்ட போனாலும் பேசக்கூடிய போன் மார்கெட்ல விக்குது அத வாங்கி ட்ரை பண்ணுங்க

R.Gopi said...

இட்லி....

நீங்க சொல்லி அடிக்கறதுல “குச்சி”
இப்போ சொல்லாம அடிச்சதுல சொக்கா கிழிஞ்சி போச்சி....

Anonymous said...

கருணாநிதி என்ன கடவுளா?

http://www.dinamani.com/edition/story.aspx?Title=கருணாநிதி+என்ன+கடவுளா?&artid=233685&SectionID=133&MainSectionID=133&SEO=&SectionName=Editorial

அலர்ட் ஆறுமுகம் said...

கீழ கண்ட லிங்க் ஐ படிக்கவும்... நித்தியானந்தா தான்"டம்சா" என்று கூறி இருக்கிறார்??

http://timesofindia.indiatimes.com/india/Im-not-a-man-Nityananda-told-CID-sleuths/articleshow/5874923.cms