பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 11, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-4-2010

வணக்கம் முனி,

நான் இருக்கிறேனா இல்லையா என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள் அதனால் உடனே இந்த கடிதம் மூலம் குதித்திருக்கிறேன். சில நாட்கள் முன் மேம்பாலத்திலிருந்து தண்டவாளத்தில் பாய்ந்த கார் பற்றி செய்தி வந்தது. கார் விழுந்து விபத்து ஏற்பட்டவுடன் பாலத்தில் உடனடியாக தடுப்புகள் வைத்துள்ளார்கள். அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது வழக்கு போடாமல் கார் ஓட்டிக்கொண்டு வந்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். கார் ஓட்டிக்கொண்டு வந்தவர் காயத்துடன் உயிர் தப்பினார், இல்லை கார் மீது வழக்கு தொடர்ந்து தண்டனையும் வாங்கி தந்திருப்பார்கள். எங்க ஊரு வழக்குரைஞர்கள் ரொம்ப புத்திசாலி, எப்படி வேண்டும் என்றாலும் வாதாடுவார்கள்.இப்ப காலாவதியான மருந்து வழக்கில் மோசடி கும்பல் தலைவன் மீனாட்சிசுந்தரத்திற்கு ஆதரவாக நளினி சிதம்பரம் ஆஜராவதாக தகவல் வெளியாகியுள்ளன. நளினி சிதம்பரம், நம் ஹோம் மினிஸ்டர் ப.சிதம்பரத்தின் மனைவி. இதற்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அவங்க தொழிலில் யாருக்கு வேண்டும் என்றாலும் ஆஜர் ஆகலாம். முன்பு ராம் ஜெத்மலானி இந்த மாதிரி தான் ஆஜர் ஆனார். அதனால் இதில் ஒன்றும் தப்பு இல்லை. இந்த மாதிரி கேஸ்களுக்கு ஆஜராகவில்லை என்றால் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகள் போல ஆயிடுவார்கள்.

வக்கீல்கள் பத்தி பேசும் போது ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வருது:
"வக்கீல் சார் என் விவாகரத்து வழக்கு முடிஞ்சதும் உங்களைக் கட்டிகலாம்னு இருக்கேன்""ஏன்?""அடுத்த விவாகரத்துக்கு நான் வக்கீலைத் தேட வேண்டியதில்லயே, அதான்"

ஏழைகளுக்கு அளிக்கும் மருத்துவ சேவை என்பது இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்கிறார் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் என்.கே.ராஜேந்திரன். அரசு பணியைப் புறக்கணித்துவிட்டு கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் அவர், கண் தானம் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். ஆனால், தகுந்த பலன் கிடைக்கவில்லை. அதனால் தன் தாயார் பாப்பாத்தி அம்மாள் இறந்ததும், அவரது கண்களை தானே அகற்றி தானமாக வழங்கினார். இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன். மகனைப் போலவே ஒரு மகளையும் மருத்துவம் படிக்க வைத்துள்ளார். "கிராமத்து மக்களுக்கு மகப்பேறு பார்க்க நல்ல பெண் மருத்துவர் வேண்டுமே!" என்கிறார். சின்ன வயசில் இவர் தாயர் இவரை "என் கண்ணே " என்று வளர்த்திருக்க வேண்டும்.

ஆனால் சில நாட்கள் முன் பணி நேரத்தின்போது பணியில் இல்லாமல், சென்னைக்குக் கிளம்ப முயன்று பிடிபட்ட வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாட்டிக்கொண்டவர்கள் 3 பேர் ஆனால் மாட்டாமல் இருப்பவர்கள் எவ்வளவு பேர் ? அரசு டாக்டர்கள் சரி, ஆனால் மற்ற அரசு ஊழியர்கள் பற்றி யார் கேள்வி கேட்பார்கள். அரசு ஊழியர்கள் கூட பரவாயில்லை, ஐ.டி துறையில் இருப்பவர்கள் கூட இந்த மாதிரி கட் அடிக்கிறார்கள், அதுவும் பெண்கள், இவர்களை எல்லாம் யார் கேள்வி கேட்பது? ட்விட்டரில் பார்த்தால் தெரியும், யார் யார் எப்படி எல்லாம் உழைக்கிறார்கள் என்று.
பெண்கள் என்றால் 33% கொடுக்காமல் நம் நாட்டில் பல சலுகைகள் கிடைக்கிறது. 'அங்காடித் தெரு' படத்தில் கனியாக அஞ்சலி அருமையாக நடித்திருக்கிறார். எங்கே கிராமத்து இமேஜ் வந்துவிடுமோ என்று கஷ்டப்பட்டு ஜீன்ஸ், டி.சர்ட் என்று டிவி 'லைவ்' நிகழ்ச்சியில் வந்து தலையை கோதிவிட்டுக்கொண்டு பதில் சொல்லுகிறார். அதே படத்தில் நடித்த மகேஷை யாரும் டிவியில் கேள்வி கேட்க அழைக்கவில்லை.

சினிமா பற்றிப் பேசிட்டு கமல் பற்றி பேசலைன்ன எப்புடி? ஸ்ரீவில்லிப்புத்தூர் மணிகண்டன் எழுதிய கமலஹாசனின் வாழ்க்கைக் கதை புத்தகம் கின்னஸ் பரிசீலனைக்குச் செல்கிறது. கமல் செய்த சாதனைகளுக்கு இல்லை, இந்த புத்தகத்தின் தலைப்பில் மட்டும் 330 வார்த்தைகள், 1458 எழுத்துக்கள். தலைப்பு எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்க!

ஏப்ரல் 14 அன்று பிறக்கும் விக்ருதி தமிழ்ப் புத்தாண்டு அன்று கேப்டன் டிவி தொடங்கப்படுகிறது. 1993-இல் இதே நாளில்தான் ஸ்ரீமுக வருஷத்தில், ஸ்ரீ மு.க.வின் பரிபூர்ண ஆசியுடன் சன் டிவி தொடங்கப்பட்டது. இத வருஷம் பொங்கல் அன்றே புத்தாண்டு கொண்டாடிய கலைஞர் டிவி சித்திரைத் திருநாளையும் அருந்ததி படம் போட்டுக் கொண்டாடுவது கூட தலைப்புச் செய்தி என்பதால் இதையும் கின்னஸ் சாதனை பரிசீலனைக்கு அனுப்பலாம்.

டிவி பற்றி பேசும் போது அதே மாதிரி வேற ஒரு செய்தி. விரைவில் கர்நாடகாவில் காவல் துறை டிவி, எப்.எம். வர போகிறதாம். முக்கிய குற்றவாளிகள், ஜேப்டி திருடர்கள் என்று டிவியில் காட்டப்போகிறார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க இந்த ஏற்பாடாம். எம்.பி. எம்.எல்.ஏ படங்களை காண்பிக்காமல் இருக்க வேண்டும். சம்பாதிக்க உதவுபவர்களைப் பற்றி அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று மக்களுக்குத் தெரியும்.
சம்பாத்தியம் பற்றிய செய்தி. ஒரு நாளில் 1000 ரூபாய் சம்பாதிக்க வேண்டுமா ? உடனே டெல்லிக்கு செல்லுங்கள். டெல்லியில் எந்த இடத்தில் நின்று பிச்சை எடுத்தாலும், ஒருவர் தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கலாமாம். ஆனால் தேசத்தைக் காக்கும் பணியில் தனது வலது கையை இழந்த அதிகாரிக்குக் கஞ்சத்தனமாக மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதை அறிந்துதானோ என்னவோ ராணுவத்தினரை பிச்சைக்காரர்களாக நடத்தாதீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த அறிவுரை பரவாயில்லை ஆனால் "எனது பெயரில் பேரவை என்பதை ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன்'' மு.க.அழகிரி அறிவித்துள்ளார். முன்பு ஆரம்பத்தில் அழகிரி பேரவை என்று ஆரம்பித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் "கட்சி தலைமையின் அனுமதியின்றி புதிய அணிகளையோ பேரணிகளையோ யாரும் உருவாக்கக் கூடாது" என்று பொது செயலாலர் அன்பழகன் சொன்னார். அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து திமுக பொதுக் குழுவின் போது, அண்ணா அறிவாலயத்திலேயே வைக்கப்பட்டன என்பது பலருக்கு மறந்திருக்கலாம். உடனே கட்சி தலைவர் கலைஞர் தாங்க இது சமூக விரோதிகளின் செயல் என்று சொல்லி அதை எடுத்துவிட்டார். ஆனால் சமீபத்தில் நடந்த அழகிரி வீட்டு நிச்சியதார்த்த விழாவில் இதே பேனர்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. இதுவும் சந்தேகம் இல்லாமல் சமூகவிரோதிகளின் செயல் தான். இது எல்லாம் அழகிரிக்கு சுத்தமாக பிடிக்காது என்பது நமக்கு தெரியாதா என்ன? அதனால் தான் மேலே சொன்ன அறிவுரை. கழக கொள்கை படி "வைக்க கூடாது, ஆரம்பிக்கக்கூடாது என்றால்? "வைக்க வேண்டும், ஆரம்பிக்க வேண்டும் என்பது தானே? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!அரசியலுக்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். மக்கள் விரும்பும்போது, களத்தில் இறங்குவேன். விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான். நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்கலப்பா!

விஜய் சொன்ன காரணம் கூட பரவாயில்லை ஆனால் நளினி விடுதலைக்கு அமைக்கப்பட்ட குழு சொன்ன சில காரணக்கள் அபத்தம். நளினியால் இழைக்கப்பட்ட குற்றம் மிகவும் கொடூரமானது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கூடவே அதில் நளினியின் தாயார் வசிக்கும் ராயப்பேட்டையைச் சுற்றிலும் அரசியல் பிரமுகர்களின் வீடுகள், அமெரிக்க தூதரகம் உள்ளது போன்ற அபத்த காரணங்களை சொல்லியுள்ளது

கொசுத்தொல்லை இங்கு மட்டும் இல்லை. கிரிக்கெட்டிலும் இருக்கு. கமெண்ட்டேடர் என்ற பெயரில் சிவராம கிருஷ்ணன், மாரிசன், அர்னால்ட் போன்றவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாம இருக்கு. அதிலும் எம்.ஆர்.எப். ப்ளிம்ப் - பிரான்டியர் டெக்னாலஜி என்று பத்து நிமிஷத்துக்கு நூறுமுறை அவர்கள் கூவும் காமெடி கேட்டு பத்திக்கொண்டு வருது. நான் இப்போல்லாம் மியுட் பண்ணிட்டுதான் IPL மேட்ச் பாக்கறேன். "ச்சீ"ர் லீடர்ஸ் பாக்க ஆடியோ எதுக்கு? இதுக்கு பாஷா படத்துல வர மாதிரி மற்றொரு பக்கமும் இருக்கு. அவர்கள் ஆடும் போது ஆடியோ கேட்காது. ஏன்னா, உங்க வீட்டில் "அவங்க" உங்களுக்கு கொடுக்கும் அடியில் உங்க ஆடியோ பெரிசாக இருக்கும். எல்லாத்துக்கும் மேல, எவன் ஜெயிச்சா நமக்கென்ன? இது தெரிஞ்சு இருந்தும் IPL பாத்து டைம் வேஸ்ட் பண்ணறதுல நம்ம மக்களுக்கு இணை அவர்கள்தான்.கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு முன்னணி வாசகர் சொன்னாரு. அவர் இப்போ ஆயிரத்தில் ஒருவன் என்று. நல்ல செய்திதானே? மக்கள்தான் முடிவு பண்ணனும்.


அன்புடன்,
இட்லிவடை


பிகு: போன ஜென்மத்தில் அந்த அம்மணி கிரிக்கெட் ஸ்கோர் கீப்பராக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். 1000 வந்தவுடன், வில்லத்தனமான சில கேள்விகளை எனக்கு அனுப்பியுள்ளார். அதற்கு விடை யோசித்துவிட்டு நாளை பதிவிடுகிறேன் :-)

16 Comments:

பிள்ளையாண்டான் said...

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி!!!

வாழ்த்துக்கள் இட்லிவடை!

Dhasarathy said...

Congratulations! on 1000 followers.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது வழக்கு போடாமல் கார் ஓட்டிக்கொண்டு வந்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். கார் ஓட்டிக்கொண்டு வந்தவர் காயத்துடன் உயிர் தப்பினார், இல்லை கார் மீது வழக்கு தொடர்ந்து தண்டனையும் வாங்கி தந்திருப்பார்கள்//

இதை பற்றி நானும் பதிவிட்டுள்ளேன்

//[Photo]இப்ப காலாவதியான மருந்து வழக்கில் மோசடி கும்பல் தலைவன் மீனாட்சிசுந்தரத்திற்கு ஆதரவாக நளினி சிதம்பரம் ஆஜராவதாக தகவல் வெளியாகியுள்ளன. நளினி சிதம்பரம், நம் ஹோம் மினிஸ்டர் ப.சிதம்பரத்தின் மனைவி.//

சட்டம் தன் கடமையைச் செய்கிறதோ?

//ஏழைகளுக்கு அளிக்கும் மருத்துவ சேவை என்பது இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்கிறார் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் என்.கே.ராஜேந்திரன். அரசு பணியைப் புறக்கணித்துவிட்டு கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் அவர், கண் தானம் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். ஆனால், தகுந்த பலன் கிடைக்கவில்லை. அதனால் தன் தாயார் பாப்பாத்தி அம்மாள் இறந்ததும், அவரது கண்களை தானே அகற்றி தானமாக வழங்கினார்.//

வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்

//கழக கொள்கை படி "வைக்க கூடாது, ஆரம்பிக்கக்கூடாது என்றால்? "வைக்க வேண்டும், ஆரம்பிக்க வேண்டும் என்பது தானே? //

well said

Mugilan said...

me d first.. also 1000

ஜெயக்குமார் said...

முனிக்கு ஒரு நல்ல கடிதம். கிண்டலாகவே போய்விட்டது கொஞ்சமாச்சும் சீரியஸாய் இருக்க வேண்டிய நமது வாழ்க்கை.

வக்கீல் திருடனுக்கு வக்காலத்து வாங்குறாங்க.

அரசு அலுவலர்கள் தங்களது கடமையைச் செய்யாமல் பொதுமக்களுக்கு உயிர்போக காரணமாய் இருந்தது மட்டுமின்றி, விபத்தில் சிக்கியவன் மீதே வழக்கிடுகிறார்கள். ( இந்த கேஸின் முடிவை எப்படியாச்சும் தெரிந்து கொள்ள வேண்டும். நமது சட்டத்துறையின் லட்சனமும் தெரிய வரும்)

உயிர்காக்க வேண்டிய டாக்டர் சம்பளத்துக்காக மட்டும் கையெழுத்தைப் போட்டுவிட்டுப் போகிறார்.

பொதுமக்களுக்கு சேவை செய்தல் போன்ற எந்தவித லட்சியமும் இன்றி தனது பிரபலத்தைக் கசாக்க நடிகர்கள் அரசியலில் குதிக்கிறார்கள், சினிமாவில் சுருட்டியது போதாதென்று.

என்னத்தைச் சொல்ல..ஹூம் வெறுப்புதான் மிஞ்சுகிறது.

kggouthaman said...

வாழ்த்துகள்
வாழ்த்துகள்
ஆயிரத்தொரு முறை.

மடல்காரன்_MadalKaran said...

1001 பின் பற்று பவர் கள்...

வாழ்த்துக்கள்.
இந்த ஆயிரத்தில் நானும் ஒருவன்.

அன்புடன்,
கி.பாலு

panguvanihan said...

இந்த பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டம்.தமிழில் சித்தர்கள் பற்றிய பதிவொன்று தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது. இலங்கையைச் சேர்ந்த பெண்மணியொருவர் பதிகிறார்.

http://siththarkal.blogspot.com/

முடிந்தால் லிங்ஸ் லிங்குசாமியின் பட்டியலில் இடம்பெறச்செய்யுங்கள் பலருக்கும் போய்ச் சேரும்.

-சரவணக்குமார்.

Sreenivasan said...

வருஷம் 2004 ஆரம்பம். ஒரு பிரபல வங்கி தனது ஊழியர்களை (சுமார் 379 பேர்) சட்டத்திற்கு புறம்பாக பணிநீக்கம் செய்தது. பாதிக்கப்பட்டோர் ஒரு அமைப்பை நிறுவி வங்கிக்கு எதிராக நீதி கேட்டு வழக்கு தொடுக்க முடிவெடுத்து அந்த பிரபலமான வழக்கறிஞரை அணுகினர். வழக்கறிஞரும் ஒத்துக்கொண்டு வழக்குக்கு தேவையான document-சை வாங்கிகொண்டு ஆரம்பகட்ட வேலையில் இறங்கினார். இது நடந்த மூன்றாவது நாள் காலை சுமார் காலை 11 மணி சமீபமாக ஒரு phone call நிர்வாகிகளுக்கு வந்தது. தகவல் சாராம்சம் இதுதான் - இப்பொழுதுள்ள வழக்குகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை ஆகையால் இந்த வழக்கை தன்னால் ஏற்று நடத்த முடியாது, ஆகையால் தாங்கள் கொடுத்த முன்பணத்தையும், ஆவணங்களையும் வந்து வாங்கி செல்லவும்.

அப்புறம் தான் தெரிந்தது அந்த தனியார் வங்கி அந்த வழக்கறிஞரம்மவுக்கு 2C கொடுத்து அவங்க நேரத்தை வாங்கிட்டங்கன்னு.
அந்த வழக்கறிஞர் யாருன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

இந்த ஜென்மங்கல்லாம் வேலை செஞ்சாலும் காசு, செய்யாட்டியும் காசு; அரசு ஊழியர்களாட்ட்ம்.

பணத்துக்காக எதவேனுமுன்னாலும் விப்பானுங்க.

jaisankar jaganathan said...

//நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்கலப்பா!
//
repeataiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

Anonymous said...

அப்பாடா! காலாவதியான மருந்து/போலி மருந்து ஊழலில் அமைச்சர்குழாம், அரசியல்குழாம், மற்ற மற்ற குழாம்கள் வாய்மூடி மௌன அழுகை அழுதுகொண்ட்டிருப்பதை யாரும் கவனித்தாகத் தெரியவில்லை.

R.Gopi said...

1001 “தலை”கள் வாங்கிய அபூர்வ இட்லிவடை....

வாழ்த்துக்கள்....

நானும் அந்த 1001ல் ஒருவன்...

தேடுதல் said...

தல........கிரிக்கெட்டுக்கு நீங்க போட்ட படம் சூப்பரு தல..

ஒரிசா குடிமகன். said...

விஜய்...

எங்கிருந்தாலும் அரசியலுக்கு வரவும்... பாவம் தமிழக மக்கள்.

இப்படிக்கு,
ஒரிசா குடிமகன்.

கிரி said...

இட்லிவடை வாழ்த்துக்கள் :-)நான் தொடர்ந்து படிக்கும் சில தளங்களில் உங்கள் தளமும் ஒன்று.

R. Jagannathan said...

I advise Nalini Chidambaram to represent Maoists / Naxals also to ensure PC to resign and be her assistant lawyer. I am appalled to see top lawyers protect the known villains. - R. Jagannathan