பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 12, 2010

கேள்விகள் 10+2


1000 ஃபாலோவர்ஸ் வந்தவுடன் எங்களிடம் ப்ரியா கதிரவன் கேட்ட கேள்விகள். சும்மா சொல்லகூடாது... நல்லா உழைத்திருக்கிறார்.நூத்தி எட்டாவது பதிவை முன்னிட்டு கேள்வி கேட்பவர் நீங்கள். இட்லிவடையை ருசிப்போர் ஆயிரம் ஆனதை முன்னிட்டு உங்களுக்கு சில கேள்விகள். பயப்படாதீர்கள்.'வலை'உலகப்புகழ் பெற்ற "நீங்கள் யார்?", "ஒருவரா? ஒன்பது பேரா?" என்ற ஊசிப்போன கேள்விகளை எல்லாம் கேட்பதாக இல்லை.


1. கடை சமீப காலமாக காத்தாடுகிறதே ஏன்? கடையில் ஆளில்லாத ஆரம்ப காலத்தில் எல்லாம் லிட்டர் லிட்டராக டீ ஆற்றிய நீங்கள் இப்போ ஆயிரம் பேர் தொடரும் நிலையில், சண்டே மண்டே என்று கடையை லீசுக்கு விட்டு விட்டு லீவு போட்டு விடுவது ஏன்?

கஷ்டப்பட்டு வாங்கிய நிலத்தை பிறகு குத்தகைக்கு விடுவதில்லையா? அது மாதிரி தான் இதுவும்.

2. இப்போதெல்லாம் யாரிடமும் சண்டை போடுவதில்லையே? திருந்தி விட்டீர்களா?

யார் சொன்னது ? அதுக்கு தானே சங்கம் எல்லாம் ஆரம்பிக்க போகிறோம்.

3. இந்த ஆயிரத்தை முன்னிட்டு உங்களுக்கு ஆயிரம் ருபாய் நோட்டு மாலை போட்டால் அதை வைத்து என்ன செய்வீர்கள்?

அதை இரண்டாக ( 500 ரூபாய் மாலையாக ) செய்து, இந்த மா(யாவ)திரி கேள்வி கேட்ட உங்களுக்கு ஒன்றை பரிசாக அளித்துவிடுவேன்.

4. IPLஇல் நீங்கள் எந்த அணியின் ரசிகர்? " IPL கிரிக்கெட் அல்ல;அதனால் நான் பார்ப்பது இல்லை" என்ற பதில் செல்லாது. அதோடு, சியர் லீடர்சை பற்றி பேசி கேள்வியை திசை திருப்புவதும் கூடாது என்று தெரிவித்து கொள்கிறேன்.

டெண்டுல்கர் விளையாடாத அணியின் ரசிகன் நான்.

5. எல்லாரும் என்ன டிவி நிகழ்ச்சி பார்க்கிறார்கள் என்று சொன்னீர்கள். இட்லிவடை விரும்பி பார்க்கும் டிவி நிகழ்ச்சி என்ன? ஏன்?

நிச்சயம் ஜூப்பர் சிங்கர் ஜூனியர் இல்லை. ஆனால் ஜூனியர்கள் பார்க்கும் சீனியர் நிகழ்ச்சிகளை கட்டாயம் பார்ப்பேன்.

6. சைடு பாரில் "சாதனை: திருமணம் ஆகவில்லை" பல காலமாக அப்படியே இருக்கிறதே...பயோடேட்டா அப்டேட் செய்யும் பழக்கம் ஏதும் இல்லையா???

சாதனையை சோதனை ஆக்கும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை.

7. முனி எங்கே? திருவிழா சீசனில் பிசியா?

திருவிழா இல்லை. டாஸ்மாக்.

8. ஸ்டாலின்,ராகுல் என்று எல்லா "வருங்கால" க்களையும் ஒரு வழி பண்ணுகிறீர்களே!மாட்டிக்கவே மாட்டோம் என்கிற எண்ணமா? என்றாவது மாட்டிக்கொண்டால் என்ன செய்வதாக உத்தேசம்?

கொ.ப.ச.வின் வால் போன பின் தான் எங்கள் தலை போகும். அதனால் முதல்ல நீங்க ஜாக்கிரதையாக இருங்க.

9. பார்லிமெண்டிலேயே 33% கொடுத்தாகி விட்டது. நீங்கள் இன்னும் 'இட்லிவடை கூட்டணியில் பெண்கள் இல்லை' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே...இதென்ன அநியாயம்?

நீங்கள் அந்த கூட்டணியில் இருந்துக்கொண்டு இப்படி பேசக்கூடாது. சாரி, பெண்கள் பற்றி கேட்டீர்கள் அல்லவா யோசிக்கிறேன்.

10 நீங்கள் விரும்பி சாப்பிடுவது அம்மா சமையலா? மனைவி சமையலா? என்று ஒரு (வெட்டி)ஓட்டு பெட்டி வைத்து மனைவிகள் வயிற்று எரிச்சலை எல்லாம் கொட்டி கொண்டீர்களே!நினைவு இருக்கிறதா? தைரியம் இருந்தால் பொதுவில் சொல்லுங்கள் பார்ப்போம்.இட்லிவடைக்கு பிடித்தது அம்மா சமையலா? மனைவி சமையலா?

என்ன கேள்வி இது ? சந்தேகமே இல்லாமல் 'அம்மா' சமையல் தான்.

11. மேலே கேட்ட ஓட்டு பெட்டி பற்றிய இன்னொரு கேள்வி; அதில் மனைவிகள் எல்லாம் ஓட்டு போடும் வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டீர்களே...பெண்ணீயவாதிகள் யாரும் கோபிக்க வில்லையா?

அர்ஜுனின் அம்மா இப்படிப் பேசுவது சரியா?

12. எங்கள் வீட்டில் இட்லி மீந்து போனால், உதிர்த்து போட்டு உப்புமா பண்ணுவோம்;உங்க வீட்டில் என்ன செய்வா(வீ)ர்கள்?

எங்க வீட்டில் எப்போதும் இட்லி செய்தால் வடையும் செய்வோம். அதனால உப்புமாவுக்கு தொட்டுக்க வடைகறியும் உண்டு.

11 Comments:

பிள்ளையாண்டான் said...

கலக்கல் இட்லி!! கொ.ப.ச கடமையை சரியா செய்றாங்க!

KVR said...

Welcome back இ.வ.

குத்தகைக்கு விட வேண்டாம், ரொம்ப போர் அடிக்குது

kggouthaman said...

நானும் கேட்க நினைத்த கேள்விகள்தாம். ஆனால் பதில்கள் 'கழுவின மீன்ல நழுவின மீன்களாக' உள்ளன. கேள்விகளையும் பதில்களையும் ஒருவரே தயார் செய்திருப்பார் என்று ஒரு பலத்த சந்தேகம் வருவதை தவிர்க்க இயலவில்லை.

ஜெயக்குமார் said...

இது முரசொலி கேள்வி பதில் மாதிரியில்ல இருக்கு..

Sitrodai said...

கேள்விகள் (மட்டும்) நன்றாக இருந்தன.

இரண்டு செண்ட்டு said...

வர வர இட்லிவடை படு மொக்கையாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். வேலை அதிகமாக இருந்தால், ஒரு ப்ரேக் விட்டு ஃப்ரெஷ்ஷாக ஆரம்பிக்கவும். கெஸ்ட் பதிவுகள் பெரும்பாலும் கடியாக இருக்கின்றன.

Anonymous said...

4th question answer is very worst

மஞ்சள் ஜட்டி said...

மொக்கையோ மொக்கை.... இது ஒரு பதிவா? சரக்கு தீர்ந்து போச்சு...

ஹரன்பிரசன்னா said...

சரியான மொக்கையான பதிவு, டைம் வேஸ்ட்.

டெண்டுல்கரிடம் எத்தனை அடி வாங்கினாலும், ‘நீங்க ரொம்ப நல்லவர்’தான் என நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

அமைதி அப்பா said...

புலி பதுங்கியிருக்கிறது...

R.Gopi said...

என்னதான் 10+2 கேள்விகள்னாலும், எனக்கு பிடிச்சது அந்த 2வது கேள்வி பதில் தான்...

படு சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

இதோ நடிகர் விஜய் ஆரம்பிக்க இருக்கும் புதிய கட்சி பற்றிய ஒரு பதிவு...

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்” http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html