பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 05, 2010

வெள்ளி விமர்சனம் - Raid on Entebbe

நான் பல்கலையில் படித்துக் கொண்டிருக்கும்போது எனது பூச்சியியல் ஆசிரியர் திரு.கண்ணன் ஒருமுறை இஸ்ரேலியர்களின் விமானம் கடத்தப்பட்டதையும், அதை அவர்கள் மீட்டதையும் எப்படி என்பது குறித்துச் சொல்லி அது புத்தகமாக 90 மினிட்ஸ் அட் எண்டப்பி என்ற பெயரில் கிடைப்பதாகவும் அவசியம் படிக்கும்படியும் கூறியிருந்தார். அவர் சொன்னது 1992ல்.

அவர் விளக்கிய விதத்தில் என் மனதில் ஆழப் பதிந்திருந்த அந்த விஷயம் அதைத் தேடிப் படிக்க வேண்டும் என உந்துதல் இருந்துகொண்டே இருந்தது. புத்தகத்தை பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தேன். இந்த ஆண்டு விடுமுறையில் இந்தியாவில் எனது நண்பனின் புத்தகத் தொகுப்பில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். ஆனால் திரும்பித் தர வாய்ப்பில்லாததாலும் உடனே வேலைக்குத் திரும்ப வேண்டியிருந்ததாலும் படிக்க முடியாமலேயே இருந்தது.
அப்படி என்னதான் நடந்தது? அப்படியென்ன பிரமாதம் இதில்?

நம்மில் பலருக்கு காந்தஹார் விமானக் கடத்தலும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும் ஞாபகமிருக்கும். நமது ஜஸ்வந்த் சிங் தீவிரவாதிகளை காந்தஹாரில் பினைக்கதிகளுக்குப் பதிலாக விட்டு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்து வந்துவந்தார்.

இதே போன்றதொரு நிலை 1976ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்கும் வந்தது. டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய ஒரு ஏர் பிரான்ஸ் விமானம் பறக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கடத்தல்காரர்களின் வசமாகிறது.

அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பலநாட்டவர் இருந்தாலும், கடத்தியவர்களின் குறி அதில் பயணம் செய்த இஸ்ரேலியர்கள். பாப்புலர் ஃபிரண்ட் ஃபார் லிபரேஷன் ஆஃப் பாலஸ்தின் - எக்ஸ்டெர்னல் ஆப்பரேஷன் என்ற இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் குழு விமானத்தைக் கடத்துகிறது. ( இந்தப்பேரை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கோ?)

விமானத்தை லிபியாவிற்குக் கொண்டு ( இங்கு ஒரு பெண் பிரசவ வலி வந்ததுபோல நடிக்க கீழே இறக்கி விட்டு விடுகிறார்கள்) சென்று எரிபொருள் நிரப்பிக்கொண்டு இறுதியில் உகாண்டாவின் எண்டப்பி விமான நிலயத்திற்கு விமானம் கொண்டுவரப்படுகிறது.

அங்கிருந்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கிறார்கள் கடத்தல்காரர்கள். பிரிட்டன், அமெரிக்கா, கென்யா, மற்றும் இஸ்ரேலின் சிறைகளில் இருக்கும் அவர்களது ஆட்களை விடுதலை செய்வதே இந்தக் கடத்தலின் நோக்கம்.

கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமலும், தனது குடிமக்களை பலிகொடாமலும் எப்படி உகாண்டாவின் எண்டப்பிக்குச் சென்று எதிரிகளை வீழ்த்தி மீண்டு வருகின்றனர் என்பதை மிக அருமையாக எடுத்திருக்கின்றனர்.


இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கும் இஸ்ரேலின் சாதனை மலைப்பாக இருக்கிறது. உகாண்டாவிற்குச் செல்லும் முன்னர் அவர்கள் கடக்க வேண்டிய தடைகள் என்னென்ன? இது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவதுபோல காண்பிக்கப்படும் புனைவுத் தடைகள் அல்ல..இஸ்ரேல் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்த தடைகள்.

முதலில் பூகோள ரீதியாக இஸ்ரேலைச் சுற்றிலும் எதிரி நாடுகள்,

உகாண்டாவை அடைய பல எதிரிநாடுகளின் வான் வெளியைப் பயன்படுத்தியாக வேண்டும். நியாயமாய்க் கேட்டால் யாரும் அனுமதிக்கப்போவதில்லை. மேலும் எப்போது பறக்கும் சுட்டு வீழ்த்தலாம் எனக் காத்துக்கொண்டிருப்பர்.

அப்போதிருந்த காலகட்டத்தில் (1976) நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் கூட இருக்கவில்லை. ஓரிரு இடங்களில் இறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்ல வேண்டும்.

விமானம் சிறைவைக்கப்பட்டுள்ளதோ கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்படும், இஸ்ரேலுக்கு எதிரான இடிஅமீனின் இஸ்லாமிய அரசு.

மேலும் பல ஆண்டுகளாக ஒரு இஸ்ரேலியர்கூட எண்டப்பிக்குப் போனதில்லை. அதாவது அவர்களைப் பற்றி உளவுத் தகவல்கள் மிகக் குறைவு. அதனால் அந்த விமான நிலையம் எப்படி இருக்கும், இத்தனை ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கும் என்பதையெல்லாம் இஸ்ரேலியர்களே கணக்கிட வேண்டும்.

இத்தனை பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டு, திட்டமிட்டு, எப்படி தனது ஆட்களை விடுவித்தது இஸ்ரேல் என்பதை சொல்கிறது இத் திரைப்படம்.

வழக்கமாக ஆக்‌ஷன் திரைப்படங்கள் புனைவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும். அல்லது ஏதேனும் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும், பேர்ள் ஹார்பர் போல. இது உண்மையில் நடந்த கற்பனைக்கு எட்டாத ஒரு ஆப்பரேஷனை திரைவடிவம் ஆக்கியிருக்கின்றனர்.

இறுதியில் ஒரே ஒரு ராணுவ வீரனை மட்டும் பலிகொடுத்து அடைக்கப்பட்டிருந்த அனைவரையும் மீட்கின்றனர் இஸ்ரேலியர்.

எப்படி இஸ்ரேலியர்களுக்கு இது சாத்தியமனது?

ஒற்றுமை. நாட்டின் மானம் குறித்த அக்கறை.

தெளிவான கொள்கை கொண்ட அரசு.

முடிவெடுக்கத் தயங்காத ஆளும் கட்சி, அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எதிர்க்கட்சியினர்.

திறமையான ராணுவமும், உளவுப் பிரிவும். கிடைக்கும் துப்புகளை லாவகமாகப் பயன்படுத்தும் திறன்.


சமயோஜிதமாக சிந்தித்தல்.

இடி அமின் குறித்தும் இங்கே சொல்லியாக வேண்டும்..

இந்த கடத்தல் நாடகமே அவரின் முழு ஒத்துழைப்புடன்தான் நடக்கிறது. ஆனால் இஸ்ரேலில் இருக்கும் அவரது நண்பனிடம் ( இஸ்ரேல் சார்பாய் பேச்சுவார்த்தை நடத்துபவர்) ” நான் எதுவும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன்” என பொய் சொல்கிறார். கடத்தல்காரர்கள் என் பேச்சையெல்லாம் கேட்க மாட்டார்கள் என்கிறார்.


இஸ்ரேலியர்களுக்கு கடத்தல்காரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்படியும், பாலஸ்தீனர்களுடன் அமைதியாகப் போகும்படியும் உபதேசம் செய்கிறார்.

படம் முழுக்க அவரைக் காண்பிக்கும்போதெல்லாம் கலர் கலரான ராணுவ உடை, ஐரோப்பிய உடை என வித விதமாய் வந்து பிணைக்கைதிகளுக்கு ஆதரவாக பேசுவதுபோல பேசிச்செல்கிறார். பகுதி பகுதியாக ஆட்களையும் விடுதலை செய்கிறார்கள், இஸ்ரேலியர்களைத் தவிர.

இடிஅமீன், அவர் வாழ்ந்த காலத்தில் செய்திகளில் அடிபடுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவராக இருந்தார். உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் வித்தியாசமான உடைகளை, கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் அணிந்து செல்வார். எப்படியாவது செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருப்பது அவரது இயல்பு.


மிக சீரியசான படத்தில் இவரின் இடம் மிகப் பெரிய காமெடிப் பீசாக இருக்கிறது. தன்னைப்பற்றிய அபரிமிதமான பெருமிதமும், படாடோபமான பேச்சுமாக எல்லாம் என் தலைமையில்தான் நடக்கிறது எனபதைப் போன்ற தோற்றத்தையும் அவர் செய்யும் உதவிகளை அவரே பட்டியலிட பிணைக்கதிகள் கைதட்ட வேண்டும் என எதிர்பர்க்கிறார். சமகாலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நமது ஆட்சியாளர்கள் மூலமாய் நாம் அடிக்கடிப் பார்க்கிறோம்.


இஸ்ரேல் ராணுவம் எண்டபியில் சென்று விமானத்தை மீட்டு வருவது என முடிவானவுடன் எப்படி திட்டமிடுகிறார்கள், அதில் வரப்போகும் பிரச்சினைகள், எப்படி எதிர்கொள்வது. ஆப்பரேஷனின் மொத்த நேரம் எவ்வளவு? என்னென்ன செய்யப்போகிறோம்?

எப்படி எதிரிகளின் வான் எல்லைகளில் பறக்கும்போது கண்ணில படாமல் தப்பிப்பது, எரிபொருள் எப்படி போகும் வழியிலேயே நிரப்புவது என எல்லாம் பக்காவாக திட்டமிடுகின்றனர்.


இஸ்ரேலிய ராணுவக் கமேண்டோக்கள் உகாண்டாவின் ராணுவத்தினரின் சீருடையில் செல்கின்றனர்.


பகுதி, பகுதியாக விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் மொசாத் உளவுத் தகவல்களைப் பெற்று கடத்தல்காரர்களைப் பற்றிய அங்க அடையாளங்கள், தலைமுடி, உடல்வாகு எல்லாவற்றையும் கிட்டத்தட்ட கணித்து அவர்களைப் பற்ற்றிய படங்களைத் தயாரித்து விடுகின்றனர்.

ஆப்ரேஷனில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கமேண்டோவுக்கும் கடத்தல்காரர்களின் பட்டியல் படத்துடன் அளிக்கப்பட்டு இறங்கிய உடன் கவனச் சிதைவின்றி கடத்தல்காரர்களைதேடி அழிக்கும்படி பயிற்சி அளிக்கப்படுகிறது.


திட்டத்தின் உச்சமாக எண்டபியில் பிணைகைதிகள் இருக்கும் இடம் போல ஒரு மாடல் உருவாக்கி ( பிணைக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் இஸ்ரேல் கம்பெணி கட்டியது, அதன் வரைபடம் அந்தக் கம்பெனி வைத்திருந்ததைப் பயன்படுத்தியது ராணுவம்) எப்படிப் போகப் போகிறோம், யார் யார் எங்கு, எப்படி தாக்குதல் ஆரம்பம், பிணைகைதிகளுக்கு நாம் இஸ்ரேலியர்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி குழப்பத்தை உடனே குறைத்து அவர்களை ராணுவத்தின் ஆபரேஷனுக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்வது, தகவல் தொடர்புகள், என ஒவ்வொன்றையும் மிக அழகாக திட்டமிட்டிருக்கின்றனர்.


இந்த ஆபரேஷனை திட்டமிடும்போது இடிஅமீன் மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்கிறார். எனவே அவரே திரும்பி வருவதுபோல செட்டப் செய்து எண்டபிக்குள் இஸ்ரேலிய கமேண்டோக்கள் நுழைகின்றனர்.


ஆப்பரேஷன் நடந்து எல்லா இஸ்ரேலியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிடுகின்றனர்.


இதில் எண்டப்பியில் பிணைக்கைதியாய் இருக்கும் ஒரு பிரிட்டிஷ் கிழவிக்கு உடல் நலமில்லாமல் போகிறது. எனவே எண்டப்பியிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த தாக்குதல் நடக்கும் முன்னர் வரை மருத்துவமனையில் இருந்த கிழவி, தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போய்விட்டார் என்று உகாண்டா அரசு சொல்லிவிட்டது. அதாவது கோபம் கொண்ட உகாண்டா அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த ஒரே ஒரு கிழவியைக் கொன்று ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.கடத்தல்காரர்களைக் காண்பிப்பதிலும் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறார் இயக்குனர். அவர்களின் இலக்கு பாலஸ்தீனர்களை விடுவிப்பதே. ஒரே ஒரு இடத்தில் ஒரு பெண்ணிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்வது தவிர இதர இடங்களில் பயணிகளை நல்லவிதமாகவே நடத்துகின்றனர்.

இதர நாட்டவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு இஸ்ரேலியர்களை மட்டும் ஒரு தனியறையில் அடைத்து வைத்திருப்பார்கள். அப்போது ஒருவர் கடத்தல்காரர்களை கேட்பார், ஒருவேளை உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டல் என்ன செய்வீர்கள் என? கெடு முடிந்ததும் ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பிப்போம் என்பார் எந்தவித சலனமுமின்றி.

விமானத்திலிருந்து பயணிகளும், கமாண்டோக்களும் மகிழ்ச்சியுடன் டெல் அவிவ் விமான நிலைய ஓடுபாதையில் ஓடி வருவதுடன் படம் நிறைவு பெறுகிறது.

பெரும்பான்மையான நேரம் படம் இருட்டிலேயே நடக்கிறது. படம் முடியும்போது டெல் அவிவ் விமான நிலையத்தில்விமானம் இறங்கும்போது காலை நேரமாக இருக்கும். எல்லாப் பிரச்சினைகளும் விடிந்துவிட்டதுபோல...

இதைப்பற்றி முன்னரே அறிந்திருந்ததால் ஒன்றிப் பார்க்க முடிந்தது.

நம் நாட்டு அரசியல்வாதிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.


20 Comments:

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// தன்னைப்பற்றிய அபரிமிதமான பெருமிதமும், படாடோபமான பேச்சுமாக எல்லாம் என் தலைமையில்தான் நடக்கிறது எனபதைப் போன்ற தோற்றத்தையும் அவர் செய்யும் உதவிகளை அவரே பட்டியலிட பிணைக்கதிகள் கைதட்ட வேண்டும் என எதிர்பர்க்கிறார். சமகாலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நமது ஆட்சியாளர்கள் மூலமாய் நாம் அடிக்கடிப் பார்க்கிறோம்.//
நன்றாகச் சொன்னீர்கள்.
நாங்க எல்லாம் - ச பி தயாரிப்பில், க மா வழங்கிய நி . ர படம் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் நீங்க உபயோககரமாக ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்று இப்போது தெரிகிறது.

Anonymous said...

//சமீபத்தில் டோரெண்ட் மூலம் தேடியபோது இந்தப் படம் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் தரவிறக்கிய பின்னர் நேற்றுதான் பார்க்க முடிந்தது//

இது சட்டதிற்கு புறம்பான செயல் என்பது தெரிந்தாலும் வெளிப்படையாக சொல்லிக் கொண்டு பதிவில் விமர்சனம் எழுதுகிறீர்கள். இப்படி திருட்டுத்தனமா பாத்துதான் பட விமர்சனம் எழுதனும்னு அழுதாங்களா யாராச்சும்...

ராஜ சுப்ரமணியன் said...

புத்தகம் படியுங்கள். இன்னும் பிரமாதமாக இருக்கும். Fantastic.

Anonymous said...

Operation Thunderbolt...

Anonymous said...

This movie & book 90 minutes at entebbe are banned in india & Gulf countries.. You have no other option but download. On a different note, Had Anyone read Polyster Prince (banned in india)? Please write the synopsis of that book.. very interesting to Read..

- Rajesh

Vikram said...

\\This movie & book 90 minutes at entebbe are banned in india & Gulf countries\\

I saw a documentary on this aired in BBC (India) on the incident about 4 to 5 months back . It showed the real footages - Edi Amin talking to hostages, food being cooked & served for the hostages etc.
That was the first time I cam to know about this and was really astounded by the entire operation(like, "ippadi kooda nadakumma??!!).

Almost all of the stuff wrtitten in the review was shown in the documentary.
Additionally, the documentary also included the details of the captors - their background and nationality (if I remember correctly, one guy and one female were from Germany) and interviews with the commandos involved in the operation who are still alive.
One commando would say "I am lucky to survive" with a wry smile!

சந்தோஷ் = Santhosh said...

//நம் நாட்டு அரசியல்வாதிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.//
எதுக்கு? கந்தகார் கடத்தல் நடந்த பொழுது எத்தணை பேர் இது மாதிரியான ஒரு ஆப்ரேஷனுக்கு ஒத்துக்கொண்டு இருப்போம்? இஸ்ரேல் இது போன்ற ஒரு வெற்றிகரமான ஆப்ரேஷனை நடத்த எத்தனை தோல்விகளை சந்தித்து உள்ளது தெரியுமா? எத்தனை உயிர்களை பலி கொண்டது தெரியுமா? நம்ம ஊரில் இது மாதிரி ஒரு ஆப்ரேஷனில் சாமானிய மனுஷன் செத்தா சும்மா இருப்பீங்களா? ஊரை கூட்டி ஒப்பாரி இல்ல வெப்பீங்க? போங்க சார் எதுக்கு எடுத்தாலும் அரசியல்வாதிங்க மேல பழியை போடுவதை நிறுத்துங்க..

♥Manny mazhaikalam.blogspot.com♥ said...

Nice Review.

Will try to get this movie definitely.

May I know which site you are using to download torrents?

I use thepiratebay.org.

Thanks...

M Arunachalam said...

I fully agree with Santosh.

During Kandahar episode, all TV channells were only highlighting how the relatives of the captives are suffering, etc. to put pressure on the Govt. to stop thinking of any other alternative solution than exchange of terrorists prisoners for the captives.

All along the drama, I, as a concerned citizen, was feeling dejected with the way the general public's lack of empathy for the country & the damage they are inflicting on the collective soul of the country & its future generation's thinking.

If only our forefathers had thought as selfishly about their kith & kin alone, India would not have got freedom from the British rule.

Anonymous said...

Our people don't like such adventure films, they've been trained to watch BF movies only. No doubt, south India is fighting for No.1 place in AIDS population with South Africa. A kuthu song, a great climax fight, lot of sexist/rude behaviour packaged as jokes, romance scenes depicting everything except nudity and some sentiment scenes, is what makes a movie.

ஜெயக்குமார் said...

அரசின் மீது எப்படிக் குறைகூறாமல் இருப்பது?

நாட்டிற்கு நலம் பயக்கும் செயலைச் செய்ய யாருக்குப் பயப்பட வேண்டும்? ஊடகத்தின் அன்பு மிரட்டலாலோ, அல்லது பிடிக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள் மூலம் எழும் எமோஷனல் பிளாக்மெயில்களுக்காக பயந்தோவா ஒரு நாடு முடிவெடுக்க முடியும்?

எதிர்க்கட்சியினரிடம் நிச்சயம் பேச வேண்டும். ஆனால் முடிவு ஆளும் கட்சி நாட்டின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மட்டுமே முடிவெடுக்க வேண்டும்.

ஊடகங்களின் அத்துமீறலின் தொடர்ச்சிதானே பம்பாய் தாக்குதலின்போது தீவிரவாதிகளுக்கு பர்கா தத்துகள் பாதுகாப்புப்படையினரின் நடவடிக்கைகளை நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தது?

ஊடகங்களின் சுதந்திரத்திற்கான விலை நாட்டின் பாதுகாப்பின் சமரசம் அல்ல.

எப்போது ஊடகங்கள் நாட்டின் இறையான்மைக்கும், பாதுகப்புக்கும் குந்தகம் விளைவிக்கிறதோ, அப்போதே அதன்மீது நாட்டின் சட்ட திட்டங்களுக்கேற்ப தண்டனை தருவதன் மூலமே கட்டுக்குள் கொண்டுவர முடியும். இல்லையெனில் ஊடகங்களின் ஆட்சிதான் நடக்கும், அரசு என்பது பெயரளவில்தான் இருக்கும்.

வலிமையான, முதுகெலும்புள்ள ஒரு அரசு அமைவதற்காக பிரார்த்திப்பதைத் தவிர நம்மால் இப்போதைக்கு செய்யக்கூடியது ஏதுமில்லை.

வலைஞன் said...

//...இது சட்டதிற்கு புறம்பான செயல் என்பது தெரிந்தாலும்...//

தம்பி ஊருக்கு புதுசா?

Welcome to India!

Amudhinee said...

Please share us the torrent fil

IdlyVadai said...

நண்பர்களே டோரெண்ட் பற்றி இங்கே டிஸ்கஸ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
இவ

Asir said...

Anonymous said...
//சமீபத்தில் டோரெண்ட் மூலம் தேடியபோது இந்தப் படம் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் தரவிறக்கிய பின்னர் நேற்றுதான் பார்க்க முடிந்தது//

இது சட்டதிற்கு புறம்பான செயல் என்பது தெரிந்தாலும் வெளிப்படையாக சொல்லிக் கொண்டு பதிவில் விமர்சனம் எழுதுகிறீர்கள். இப்படி திருட்டுத்தனமா பாத்துதான் பட விமர்சனம் எழுதனும்னு அழுதாங்களா யாராச்சும்...


Hello Annony ,

Auto venuma ?

@IV
Congrats

Anonymous said...

BJP never wanted 2 release the terrorists. But Cong. and the media put too much pressure on Vajpayee to release the terrorists, but now both conveniently accuse BJP of releasing them.

"Last king of scotland" is another movie about Idi-amin. Remembering karunanidhi while watching dat movie wud be un-avoidable.

♥Manny mazhaikalam.blogspot.com♥ said...

Hi,

I saw this movie yesterday night. Really a nice movie.

As you said the palastine terrorists gave some respect to the hostages through out the movie. I liked Idi-amin charater a lot. The person who acted as Idi Amin did a good job.

I have a question?
Once the palastine terrorist ask him 'Any other problem Mr.Spokesman?' He replied 'My name is Daniel Cooper'

who is that Daniel Cooper? Any Idea?

Sujatha said...

I have read the book and seen the movie. My parents were in Tanzania at the time of this event and my mum used to tell us about it. I became very interested and read the book. Gripping !

santa said...

எல்லாமே perfect planning and execution..இடி அமினின் கார் கலர் சிறிது நாட்கள் முன்பு மாற்றப்பட்டதால் ஒரு சின்ன fumble.. மற்றபடி எல்லாம் செம கெத்து..இறந்தவர் தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடன்யஹு வின் மூத்த சகோதரர்...

-- mt -- said...

This operation lasted 52 minutes.

The original movie based on this event is Mivtsa Yonatan. Yonatan is actually the only Israeli soldier who was killed in the raid and his brother is the PM of Israel (Benjamin)

This was a very inspirational raid and 4th successful for IDF.

Good Post.