பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 09, 2010

பாலாஜி - எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.சி.ஏ. etc

"மதுரை மாநகராட்சியின் 24 பள்ளிகளுக்கு சென்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள "மக்கு' பையன்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இரவு, பகலாக பயிற்சி அளித்து வெற்றி பெற செய்தேன். இந்தாண்டு 96 பேர் நூற்றுக்கு நூறு மார்க் பெற தயாராகி வருகின்றனர்'' என்று பெருமிதம் கொள்கிறார் பாலாஜி.


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக உள்ளார். எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.சி.ஏ., என்று இவரின் தகுதி நீள்கிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காகவே பிரெஞ்சு, சமஸ்கிருதம் என மொழிப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.""ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள் வரை தேர்வு செய்தோம். மாநகராட்சி கல்யாண மண்டபத்தில், இவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம் இலவச உணவு, கைடுகளை கொடுத்து நானும், எனது நண்பர்களும் பயிற்சி அளித்து வருகிறோம்.


தற்போது இந்த மாணவர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயிற்சி அளிக்க, திருமலை நாயக்கர் மகால் எதிரேயுள்ள பள்ளியை மாநகராட்சி ஒதுக்கி தந்துள்ளது'' என்று கூறும் பாலாஜி, பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்வி நுணுக்கங்கள், எப்படி சுருக்கமாக பதில் தருவது என பல "ரகசியங்களை' சொல்ல, இவரால் தேர்வில் வென்ற மாணவர்கள் இன்று வாழ்க்கையிலும் ஜெயித்துள்ளனர்.


""மாணவர்கள் மட்டுமில்லாது, எனது துறையில் வேலைபார்க்கும் ரிக்கார்டு கிளார்க், அலுவலக உதவியாளர்கள்15பேரை துறைத் தேர்வு எழுத வைத்து, அவர்களை இளநிலை உதவியாளராக பதவி உயர்த்தியுள்ளேன்'' என்று தனது இன்னொரு சேவை குறித்தும் மனம் திறக்கிறார் பாலாஜி.அடுத்த கட்டமாக, மாணவியருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ள பாலாஜி, தற்போது வீடியோ கான்பரன்சிங் மற்றும் "சிடி'க்கள் மூலம் பாடம் நடத்தவும் தயாராக இருக்கிறார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, மற்ற பள்ளி மாணவர்களும் பாலாஜியை 98653 87352ல் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

( நன்றி: தினமலர் )

நமது நாட்டில் 'பாவர்டி' பற்றி பேசும் நிறைய பேர் வெளிநாட்டில் கெஸ்ட் லெக்சரர்ஸ் !

23 Comments:

vedhanarayanan said...

Very good news.
Thanks and congrats to Balaji.
IV, thanks for publishing this news. The yellow comment is great.
Balaji.... May god bless you with wealth and health and greabt family to continue this service uninterrupted.

காலப் பறவை said...

//நமது நாட்டில் 'பாவர்டி' பற்றி பேசும் நிறைய பேர் வெளிநாட்டில் கெஸ்ட் லெக்சரர்ஸ் !


Nice comment

கிருஷ்ண பிரபு said...

Wow... great man...

ஸ்ரீராம். said...

நல்ல சேவை...

சைவகொத்துப்பரோட்டா said...

வளர்க திரு.பாலாஜியின்
சேவை.

ஜெயக்குமார் said...

நல்லா இருக்கட்டும். சும்மா அரசாங்கத்தையே குற்றம் சொல்லாம தன்னால முடிஞ்சத செய்கிறாரே, பாராட்ட வேண்டும்.

மஞ்சள் ஜட்டி said...

வெங்கி யை குத்துரீங்களா?? அவரைத்தான் ஆணி புடுங்க வேண்டாம்னு சொல்லியாச்சே நம்ம வருத்தமில்லா வாலிபர் சங்கத்திலேர்ந்து?

anantharaj said...

WELL DONE BALAJI. ALL THE BEST.

geetha santhanam said...

சமுதாயத்திற்கு நல்லது செய்யும் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர் போன்ற நல்ல மக்களை அடையாளம் காட்டும் இட்லி வடைக்கும் வாழ்த்துக்கள்.
பச்சை comment-ல் மஞ்சள் comment -ஐவிட நக்கல் கூடுதலாக இருக்கே.---கீதா

kggouthaman said...

பாலாஜி போன்றவர்கள் - வாழ்க பல்லாண்டு வளமுடன் - என்று வாழ்த்துகிறேன்.

ரா.கிரிஷ் said...

இவரின் சேவை பாராட்டுக்குரியது. சேவை தொடர வாழ்த்துகள்.

அநன்யா மஹாதேவன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி! வாழ்க உங்கள் சேவை மனப்பான்மை!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பாலாஜியின் சேவை மனப்பான்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.....திடீரென்று அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து இந்த சேவைக்கு ஆப்பு வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

Don said...

If the guest lecturers abroad speak of poverty, it sends a chill in the spine of Indian politicians. Our politicians are afraid that educated and rich people can be more influential and might someday become a unformidable political opponent. If any such person hints about Indian politics in their books/articles, they'll be roped into the party/power in no time, as can be seen in cases of Shashi Tharoor, Nandan Nilekani etc.,. Congress is very intelligent in that aspect.

padma said...

இவர் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும் .தேடி தேடி செய்திகள் தரும் இட்லி வடைக்கு நன்றி

IdlyVadai said...

//இவர் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும் .தேடி தேடி செய்திகள் தரும் இட்லி வடைக்கு நன்றி//

இந்த செய்தியை எனக்கு ஒரு அனானி நண்பர் அனுப்பினார். எல்லா நன்றியும் அவருக்கே!

வலைஞன் said...

//...பாலாஜி, தற்போது வீடியோ கான்பரன்சிங் மற்றும் "சிடி'க்கள் மூலம் பாடம் நடத்தவும் தயாராக இருக்கிறார். //

'அந்த' CD க்கள் முற்றிலும் அழிந்து 'இந்த' CD க்கள் பன்மடங்கு வளர நான் பிரார்த்திக்கிறேன்.

வாழ்த்துக்கள் பாலாஜி!

kggouthaman said...

Can Mr Balaji - try to take classes through Openmentor?

யதிராஜ சம்பத் குமார் said...

திடீரென்று அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து இந்த சேவைக்கு ஆப்பு வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.//

இதுதான் சூப்பர் கமெண்ட்....நம்ம ஊர்ல நல்லது பண்றவங்களோட நிலைமை எல்லாம் இதுதான்.

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...
வெங்கி யை குத்துரீங்களா?? அவரைத்தான் ஆணி புடுங்க வேண்டாம்னு சொல்லியாச்சே நம்ம வருத்தமில்லா வாலிபர் சங்கத்திலேர்ந்து?//

*********

ஆஹா... வாங்க தல... திடீர், திடீர்னு வந்து அணுகுண்டு மாதிரி கமெண்ட் போட்டுட்டு எஸ்கேப் ஆயிடறீங்களே.... இன்னமும் ஆஸ்திரேலியா தானா??

R.Gopi said...

வாழ்த்துக்கள் பாலாஜி...

இவரை போல, பல பாலாஜிகளின் சேவை நமக்கு தேவை...

“தல” இவருக்கு ஆப்பு வைக்காம இருக்கணும்....

மஞ்சள் ஜட்டி said...

//ஆஹா... வாங்க தல... திடீர், திடீர்னு வந்து அணுகுண்டு மாதிரி கமெண்ட் போட்டுட்டு எஸ்கேப் ஆயிடறீங்களே.... இன்னமும் ஆஸ்திரேலியா தானா??//


அண்ணா !! வணக்கமுங்கோ!! இப்போ மலேசியாவுக்கு டிரான்ஸ்பர் ஆயிருக்கேன்... அடிக்கடி வந்த நல்லா இருக்காது.. அப்ப அப்ப வந்து நச்சுன்னு ஒரு கமென்ட் போட்டுட்டு போயிடறது... எப்படி இருக்கீங்க? இப்பெல்லாம் வர வர இட்லிவடை நெறைய தேவையில்லாத ஆணி புடுங்குற மாதிரி தெரியுது.. ??

Baski said...

Kudos to Balaji.