பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 12, 2010

ஞாநிக்கு ஒரு கடிதம்

இந்த வார குமுதத்தில் ஞாநி நித்தியானந்தாவுடன் இருந்த நடிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கார் ( அந்த கடிதம் கீழே ). ஞாநி.நெட்டில் நித்யானந்தா வீடியோ விவகாரம் என்ற கட்டுரையும் எழுதியிருக்கார். வழக்கம் போல ஞாநி தன் கருத்துக்களை தைரியமாக எழுதியுள்ளார்.

இந்த இரண்டு கட்டுரையும் படித்த பின்னர் ஞாநிக்கு இட்லிவடையின் சார்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம். இதற்கு ஞாநி பதில் சொல்லுவாரா என்று தெரியாது.

அன்புள்ள ரஞ்சிதாவுக்கு
வணக்கம்.

நித்யானந்த பரமஹம்சனை அம்பலப்படுத்துவதற்காகத்தொலைக்காட்சியும் பத்திரிகையும் செய்த நடவடிக்கையில் வேறெவரையும் விட மிக அதிகமாக இழிவுபடுத்தப்பட்டிருப்பது நீங்கள்தான் என்பதால், உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதத் தோன்றியது. நம் சமூகத்தில் எந்தப் பிரச்னையிலும் அதிகமாக அடிவாங்குவது பெண்ணாகத்தான் இருப்பாள். இதிலும் அப்படியே இருப்பதில் ஆச்சரியமில்லை.

உங்களுடைய தனி நபர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்றன. நீங்கள் விரும்பும் ஆணுடன் உறவு கொள்வது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. தங்களை அது பாதித்தாலன்றி, அதில் தலையிடவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படிப் பார்த்தால் அது அதிகபட்சம் உங்கள் குடும்பப் பிரச்னையாக இருக்கலாமே தவிர சமூகத்தின் பொதுப் பிரச்னையே அல்ல.

இதுவே மேலை நாடாக இருந்தால், நீங்கள் உங்கள் அந்தரங்கத்தில் அத்து மீறியதற்காக அத்தனை ஊடகங்கள், பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுத்து பெரும் தொகைகளை இழப்பீடாகப் பெறுவதற்கான சட்டபூர்வமான உரிமைகள் தெளிவாக இருக்கின்றன. நம் நாட்டில் அவையெல்லாம் இன்னும் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

நித்யானந்தா என்ற ஆன்மிகவாதி, ஊருக்கெல்லாம் பிரும்மச்சரியத்தை போதித்துவிட்டு தான் அதைப் பின்பற்றாத ஒரு போலி மனிதன் என்று அம்பலப்படுத்த ஒருவர் விரும்பினால், அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அரசியல் முதல் ஆன்மிகம் வரை, டி.வி. முதல் பத்திரிகை வரை, சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அம்பலப்படுத்த நடக்கும் முயற்சிகளை நான் ஆதரிப்பேன்.

அதே சமயம் அந்த வீடியோவில் உங்கள் முகத்தை மறைத்துவிட்டு வெளியிடுவதுதான் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும். ஏனென்றால், அம்பலப்படுத்தப்பட வேண்டிய போலி நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.

அந்த வீடியோவில் உங்களுக்குப் பதில் வேறு ஏதோ ஊர் பேர் தெரியாத பெண் அல்லது ஏதோ ஒரு அதிகாரி, தொழிலதிபர், அலுவலர் வீட்டுப் பெண் இருந்திருந்தால் இந்த அளவு மீடியா ஆனந்த தாண்டவம் ஆடியிருக்காது. நடிகை என்பவள் நம் சமூகத்தில் இன்னமும் பெருவாரியாகப் பலராலும் தவறாகவே கருதப்படுகிறாள். அவளைத் துகிலுரியவும், அதை ரசிக்கவும் கொண்டாடவும் மனநிலை இருக்கிறதே தவிர, அவளை மதிப்பதில்லை. புவனேஸ்வரி கைதின்போது வெளியான அவதூறு செய்திகளுக்காக வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கமும் நடிக நடிகைகளும் இப்போது உங்கள் விஷயத்தில் உரத்த மௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது. நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவு கொள்கிறீர்கள். அவ்வளவுதான்.

யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. ஆனால், என்னைப் போன்றவர்களுக்குப் புதிராக இருப்பதெல்லாம் உங்களைப் போன்ற பல பெண்கள் ஏன் சாமியார்களிடம் போய் சிக்கிக் கொள்கிறீர்கள் என்பதுதான். இப்போது கூட ஓர் உயர் பெண் அதிகாரி, ‘சுவாமிஜி இந்த சோதனையை எல்லாம் கடந்து வருவார்’ என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

பலருக்கும் அப்படிப்பட்ட முட்டாள்தனமான பக்தி இருக்கிறது. அப்படி இந்த சாமியார்கள் நமக்கு அளிப்பதாகக் கூறும் மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும் அவர்கள் சொல்லும் வழிகள் மூன்றுதான். யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம்.

இந்த மூன்றையும் கற்க கடவுளும் தேவையில்லை. மதமும் தேவையில்லை. சடங்குகளும் தேவையில்லை. கிருஷ்ணமாச்சாரியாரின் யோக மந்திரம் போன்ற பல அமைப்புகள் ஒரு பள்ளிக்கூடம் போல இவற்றை சொல்லிக் கொடுத்து விடுகின்றன. கடவுள் நம்பிக்கையற்றவர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் நம் முதலமைச்சர் கூட இவற்றால் பயனடைய முடிந்திருக்கிறது.

நீங்கள் எங்கே என்ன படித்தீர்கள், உங்கள் குடும்பப் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பெருவாரியான ஆண்களும் பெண்களும் சாமியார்களிடம் தஞ்சமடைவதற்குக் காரணம், நம் குடும்பங்களும் கல்வி முறையும்தான்.

பத்து வாழ்க்கைத் திறன்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கிறது. தன்னை அறிதல், தன்னைப் போல் பிறரை உணர்தல், இன்னொருவருடன் சரியாக உறவாடக் கற்றல், உரையாடக் கற்றல், எதையும் கேள்வி கேட்கப் பழகுதல், எதற்கும் நாமே பதில் தேடப் பழகுதல், தெளிவாக முடிவெடுத்தல், சிக்கல்களை அவிழ்த்தல், உணர்ச்சிகளை உணர்ந்துகொள்ளுதல், அழுத்தங்களை லேசாக்குதல் என்ற பத்து வாழ்க்கைத் திறன்களைப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிமையாகிவிடும்.

இந்த வாழ்க்கைத் திறன்களை நம் குடும்பத்தில் கற்கலாம். பள்ளியில் கற்கலாம். ஆனால், அதற்கு மாறாக ஒவ்வொரு பிரச்னை வரும்போதும் கடவுள், கோயில், சாமியார், மடம் என்று குடும்பமே நம்மை வேறு திசைக்கு இழுத்துப் போய்விடுகிறது. செக்ஸ் எப்படி முழுக்க முழுக்க அந்தரங்கமான விஷயமோ, அதே போல கடவுள் நம்பிக்கை என்பதும் முழுக்க முழுக்க அந்தரங்கமானதாக மட்டுமே இருந்தால் போதும் என்ற பார்வையை நாம் பெறுவதில்லை.

இதன் விளைவு உங்களைப் போன்றவர்கள் தன்னைத்தானே நம்பாமல், சாமியார்களை நம்பத் தொடங்குகிறீர்கள்.

பல வருடம் நம்முடன் பழகிய பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ காட்டாத வழியை முன்பின் தெரியாத ஒரு சாமியார் காட்டுவார் என்பதே பெரும் மூட நம்பிக்கைதான். இதைத்தான் தங்கள் முதலீடாக சாமியார்கள் வைத்துக் கொள்கிறார்கள்.

பேச்சுத் திறமை இருந்தால் அரசியலுக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இப்போது இல்லை. அங்கே வாய்ப்புகள் குறைந்துவிட்டன. குடும்பத்துக்குள்ளேயே போட்டாபோட்டி போடும் அளவுக்கு நெரிசலாகிவிட்டது.

எனவே, சாமியாராவது நல்ல மாற்றுத் தொழிலாக இருக்கிறது. கொஞ்சம் யோகா, கொஞ்சம் தியானம், கொஞ்சம் சடங்கு, பத்து வாழ்க்கைத் திறன்களிலிருந்தும் கொஞ்சம் கிள்ளியெடுத்து பேச்சில் தெளித்தல், இத்துடன் காவி காஸ்ட்யூம் சேர்த்தால் சாமியார் தயார். கறுப்புப் பணத்தை கொண்டு வந்து கொட்டத் தொழிலதிபர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் எந்த சாமியாரும் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்துக்குப் போவதில்லை. ஈரோடு, கோவை என்று வளமான பகுதிகளில் மடம் வைக்கிறார்கள்.

அடுத்த ஸ்டெப் அரசியல் செல்வாக்கு. உங்கள் நண்பர் நித்யானந்தா அதிலேதான் வழுக்கிவிட்டார். அரசியல் செல்வாக்கு இருக்கும் எந்த சாமியாரும் இதுவரை அம்பலப்பட்டதில்லை. பெரும் கூட்டத்தைத் திரட்டி அரசியல்வாதிகளை பயமுறுத்தினால், கூட்டணிக்கு வந்துவிடுவார்கள். வீட்டுக்கே அழைத்து ஆசி கேட்பார்கள். ஒரு கூட்டணி சிக்கலானால் இன்னொரு கூட்டணி அரசியலில் அமைப்பது போல இதிலும் அமைக்கலாம். அப்போது எதிலாவது சிக்கினாலும் வழக்கு சாட்சிகள் கூட பல்டி அடிப்பார்கள்.

இந்த தந்திரங்களை இன்னும் நித்யானந்தா சரியாகப் பழகிக் கொள்ளாததால் அடிபட்டுவிட்டார். கூட சேர்ந்து நீங்களும் அடிபட்டிருக்கிறீர்கள் என்பதுதான் பாவமாக இருக்கிறது.

சாவித்திரி முதல் கனகா, நீங்கள் வரை நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகமும் வேதனையும் நிரம்பியதாகவே முடிகின்றன. அதற்குக் காரணம் கல்வி இல்லாதது, தப்பானவர்களையே நம்புவது, எது உண்மையான ஆனந்தம் என்ற அறிவை வளர்த்துக்கொள்ளாதது, தாற்காலிக மகிழ்ச்சிகளில் தன்னைத்தானே தொலைத்துக் கொள்வது இவையெல்லாம்தான்.

உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவேண்டும். அதிலிருந்து வருங்கால நடிகைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கையை இன்னொருத்தர் தீர்மானிக்க விட்டுவிட்டால் என்னவெல்லாம் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். என் வாழ்க்கை என் கையில் என்ற உறுதியோடு நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் வளர, உங்கள் பங்களிப்பாக உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள்.

உங்களைச் சூழ்ந்துவிட்ட இழிவிலிருந்து விடுதலை பெற அது ஒன்றுதான் வழி.

அன்புடன்
ஞாநி
( நன்றி: குமுதம் )

அன்புள்ள ஞாநிக்கு,
மாலை வணக்கம்.

பல சமயங்களில் உங்கள் கருத்தை நான் சிலாகித்ததுண்டு; சில சமயம் உங்கள் கருத்தோடு முரண்படுவதற்கும், சற்றே உரத்து உங்களைக் கேட்பதற்கும் உரிமை உள்ளது என்ற நிலையில் எழுதும் கடிதம் இது. பதில் வருமா வராதா என்று கவலைப்படவில்லை.

இந்த வார குமுதத்தில் நீங்கள் அந்த நடிகைக்கு எழுதிய ஆறுதல்/அறிவுரை மடலைப் படித்தேன். படித்த மாத்திரத்தில் நல்ல கடிதம் என்று தோன்றினாலும், புத்தகத்தை மூடியபின் எனக்குச் சில கேள்விகள் எழுந்துள்ளன.

உறவுகொள்வது ஒருவருடைய தனிமனித உரிமை, அதில் தாங்கள் பாதித்தாலொழிய யாரும் தலையிடுவதற்கு உரிமையில்லை என்று கூறியிருக்கிறீர்கள். தவிர அவர் ஒரு நடிகை என்பதாலேயே மீடியாக்கள் இதனை பெரிதுபடுத்துகின்றன என்றும் கூறியிருக்கிறீர்கள். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ஆனால் மத்த நடிகைகளின் ஆபாசப் படங்களைப் போட்டே பிழைப்பு நடத்தும் குமுதத்தில் அந்த நடிகைக்கு மட்டும் நீங்கள் அட்வைஸ் செய்வது ஏனோ?

நித்யானந்தா பற்றிய பிரச்சினையில் நித்யானந்தர் பெயரும், அவர் தொடர்பான சர்ச்சைகளுமே பிரதானமாக அடிபட்டுக் கொண்டிருந்த வேளையில், எங்கோ போய் கேரளாவில் பதுங்கியிருந்த அந்த நடிகையை மெனக்கெட்டு தொலைபேசியில் பிடித்து, அவரைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்டு மேலும் அவரை அழ வைத்து நோகடித்த பெருமை குமுதத்தைத்தானே சாரும்? பத்திரிகையின் முகப்பு அட்டையிலேயே அவரது படத்தைப் போட்டு, "பணிவிடைதானே செய்தேன்" என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்ததோடல்லாமல், அவரது விவாகரத்து வரை கேள்வி கேட்டது குமுதம்தானே? சொல்லப் போனால் அவருக்கு ஆறுதல் கடிதம் எழுதுவதை விட குமுதத்தைக் கண்டித்து ஒரு கடிதம் எழுதுவது அவருக்கு அதிக ஆறுதலையும் உங்கள் வாசகர்களுக்கு மிகச் சிறந்த அறிவுரையாக அமைந்திருக்குமே. அவர் நடிகை என்பதால்தானே குமுதமும் இதே தவறினை இழைத்து தன்னுடைய சர்க்குலேஷனை உயர்த்திக் கொள்ள முனைகிறது. இதை பத்திரிகையாளர் சங்கம் மூலமாக நீங்கள் கண்டிப்பீர்களா? சமுக பொறுப்பு ஏன் பத்திரிக்கைக்கு இல்லையா ? பத்திரிக்கை சுதந்திரம் என்பது இது தானா ? நிச்சயம் உங்களுக்கு கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் தான் எதிர்கட்சி மாதிரி கேள்வி கேட்கிறீர்கள் என்று சில வாரங்களுக்கு முன் எழுதியுள்ளீர்கள்.

தினமலர் விவகாரத்தில் நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கியது நடிகர் சங்கம். இப்பொழுது அந்த வீடியோ பதிவில் இருக்கும் நடிகை யார் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், அவருடைய சம்மதத்தின்பாற்பட்டே எல்லாமும் நிகழ்ந்திருக்கிறது என்ற பட்சத்தில் இதற்கு நடிகர் சங்கம் வக்காலத்து வாங்க வராதது வெட்கக்கேடு என்று நீங்கள் கூறியிருப்பது சற்றும் ஏற்கத்தக்கதாக இல்லையே?


நித்யானந்தா விவகாரத்தில் நடிகை அல்லாமல், வேறொரு குப்பாயியோ சுப்பாயியோ சம்பந்தப்பட்டிருப்பின் நீங்கள் குமுதத்தில் ஆறுதல்/அறிவுரைக் கடிதம் எழுதியிருப்பீர்களா? அப்படி எழுதியிருந்தால், ஏற்கனவே கருவறையில் நடந்த காம விளையாட்டில் தொடர்புடைய பெண்ணிற்கும், ஜெயேந்திரர் விவகாரத்தில் அடிபட்ட ஸ்ரீரங்கம் பெண்மணிக்கும் நீங்கள் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அப்பொழுதெல்லாம் ஏன் நீங்கள் கடிதம் எழுத முனையவில்லை. யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்தானே?

வருடத்துக்கு ஒரு முறை ஏப்ரல் ஃபூல் செய்யும் குமுதம் தொடந்து வாரா வாரம் நித்தியானந்தாவிடம் ஏப்ரல் ஃபூல் ஆனதற்கு நீங்கள் ஏன் அவர்களுக்கு அட்வைஸ் செய்யக்கூடாது?

அடுத்த வார குமுதத்திலேயே- குமுதத்தைக் கண்டித்து எழுதுவீர்களா? கண்டித்து எழுதாவிட்டாலும் பரவாயில்லை, யாரிடம் ஏமாறக்கூடாது என்று நடிகைகளுக்கு அட்வைஸ் செய்யும் நீங்கள் பத்திரிகைகளுக்கும்- முக்கியமாய் உங்கள் ஓ-பத்திரிகை குமுதத்திற்கு- சின்ன அட்வைஸ் கொடுத்தாலும் ஓ.கே. அதுவும் முடியாவிட்டால், குமுதம் 140 வாரம் தன் கோவணம் போனதற்கு பரிகாரமாக
"நித்தியானந் ஆ" என்று விளக்கம் அளித்து, "நிர்வாணமாக நித்தியானந்தா" என்று கிளுகிளுப்பு படங்களுடன் நியூஸ் லெட்டர் போட்டு பரிகாரம் தேடிக்கொள்கிறது. நிச்சயம் இதற்கு நீங்கள் அவர்களுக்கு ஒரு சின்ன 'பூ'ச்செண்டாவது கொடுக்க வேண்டும். ( நிர்வாணமாக நித்தியானந்தா என்றால் யாராவது பார்க்க ஆசைப்படுவார்களா ? அவ்வளவு தரம் கெட்டவர்களா தமிழர்கள் ? )

"வாய்ப்புகள் பல இருந்தும் சினிமாவை விரும்பாததற்குக் காரணம், சினிமா என்ற மீடியம் அல்ல. அதை நடத்தும் வணிகச் சூழலின் மோசமான விதிகள்தான்" என்ற உங்கள் கூற்று உண்மையானல் அந்த மோசமான வணிகச் சூழல் சினிமாவில் மட்டும்தான் இருக்கிறதா? அல்லது இது நிழல் என்று சொல்லிவிட்டே காட்டும் சினிமாவைவிட அதன் அடிப்படைச் செய்திகளை அதைவிட மோசமான, கேவலமான வணிகச் சூழலுடன் காட்டிக்கொண்டிருக்கும்- பக்கத்திலேயே இருக்கும் பத்திரிகைச் சூழல் உங்கள் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு உங்களுக்கு தூரப் பார்வைக் கோளாறா?

உங்கள் "நித்யானந்தா வீடியோ விவகாரம் " கட்டுரையில் "குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவேண்டியது நித்யானந்தா மட்டுமல்ல, கலாநிதி மாறனும் கோபாலும்தான். ஆபாசப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிக்கவேண்டாமென்று தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார். நித்யானந்தாவுக்கு மட்டும் வழக்கு. கலாநிதிக்கும் கோபாலுக்கும் மட்டும் வேண்டுகோளா ? இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யும் நாணயம் வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்."

என்று எழுதியிருக்கிறீர்கள். சன் டிவியுன், நக்கீரனையும் கண்டிக்கும் நீங்கள் ஏன் குமுதத்தை மட்டும் விட்டுவிட்டீர்கள் ? அட்லீஸ்ட் முதல்வரை போல குமுதத்துக்கு ஒரு வேண்டுகோளாவது வைத்திருக்கலாமே ?

"ஒரு பத்திரிகையாளனாகவும் படைப்பாளியாகவும் நான் எப்போதும் இந்த சமூகத்தின் மனசாட்சியாக செயல்படவே முயற்சி செய்து வந்திருக்கிறேன்"( இது உங்களை வாசகம் தான்! ) என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் மனசாட்சியையும் காண ஆசைப்படும்...

அன்புடன்,
இட்லிவடை

41 Comments:

jaisankar jaganathan said...

//வருடத்துக்கு ஒரு முறை ஏப்ரல் ஃபூல் செய்யும் குமுதம் தொடந்து வாரா வாரம் நித்தியானந்தாவிடம் ஏப்ரல் ஃபூல் ஆனதற்கு நீங்கள் ஏன் அவர்களுக்கு அட்வைஸ் செய்யக்கூடாது//

இந்த படம் அந்த நடிகையே நடித்து வெளிவந்திருந்தால்(அதாவது இந்த படம் எடுக்க நடிகையே துணைபோயிருந்தால் என்ன)

Karthik said...

நறுக்கென்ற கேள்விகள்.. மறுக்க முடியாத உண்மைகள்..

Anonymous said...

I agree 100% with ngani and IV. It is for any indivual to decide whom he or she should share his or her bed with. It is not a public issue. I really pity for the female artist. The people who are cashing this issue namely Media are to be sued heavily. This includes Sun TV, Nakheeran, Kumudam, Dinamalar etc. Ngani should have the guts speak against Kumudam aswell.

Anonymous said...

I need to how to type the comments in tamil. Can anybody help?

Itsdifferent said...

A must read article, if anyone wants to know the mess India is in.
http://www.seanpaulkelley.com/?p=620

Anonymous said...

ஹி ஹி அரசியலில் இதல்லாம் சகஜமப்பா. ஞானி போன்ற போனி ஆகாத கேசு எல்லாம் பரிதாபம் என்னும் பெயரில் நடிகையை வெச்சு காசு பண்றாங்க. ஆபாச சுவரொட்டிய கிழிக்கறவங்க இன்னும் பக்கத்துல போயி பாக்கறவங்க மாதிரி . இவரு குமுதத்தை ஒரு இடிஇடுச்சு பொழப்ப கெடுத்டுக்கரதுக்கா. இது ஒரு சாக்கு. கலைஞரை போட்டு தாக்கியதுக்கு பரிகாரமா ஒரு ஒ போட்டுருக்காரு. இதே காம களியாட்டங்கள் அங்கயும் உண்டுங்கறது இந்த கோணி க்கு தெரியாதா. நடிகைக்கு ௧௦ அட்வைஸ் கொடுத்தவர் எழுத்தாளர்களுக்கும் கொஞ்சம் கொடுக்கலாம். ஒருத்தர் பாவம் பெரியார் கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு இப்ப பொலம்பிட்டு இருக்கார்.

Chennai Vennai said...

Please sir, ஞானி மாதிரி ஒன்ணு ரெண்டு பேரு தான் இன்னும் இருக்காங்க... the fine line between investigative journalism and paparazzi/ voyeur cams is being crossed rampantly by today's media and some one tries to question that. Your letter basically questions gnani on his integrity and words, fine, if there are other folks who write stuff the way you want them to write, go ahead and publish them in your blog... அதா விட்டுட்டு, வேலில போற ஓணான சட்டைல போட்டுட்டு குத்துது கொடயுதுநா... என்ன கொடுமை இட்லிவடை! சாரி சார், didn't expect this from you!

Anonymous said...

Some references made in IVs response on Srirangam lady. Just to refresh some old memories, rewind of events... a showcase of our investigative yellow journalism...

Two days back, there were allegations that there is a woman named Usha in Srirangam who has been ``close`` to Sri Jayendrar. This information was submitted to the High Court in the move to deny bail to Sri Jayendrar and the state claimed that they would need to locate this Usha who has been ``absconding`` and who has received ``substantial`` sums of money from the Mutt and that Sri Jayendrar has spent as many as 900 pulses (a measure of telephone call duration; a pulse might be 6 seconds) talking to this woman in the early morning. Looking at the Shankaracharya`s schedule for morning puja, he doesn`t have the time to talk to anybody for 90 minutes.

Well, this woman showed up at the Kanchipuram district police HQ at 12:30 pm. The police who were supposedly ``anxious to locate her and question her`` made her wait till 5:30 pm and then served her with summons to appear before the SP of Kanchipuram at 10 am the next day. So, this is the ``urgency`` that the state shows in actually talking to a potential witness. However, the innuendo is that Sri Jayendrar has illicit relations with this woman. Usha said in a statement that she is a cancer patient abandoned by her husband, that she received aid from the Mutt, and that back in October she was questioned by the police who then told her that they had no use for her, and that she moved to Chennai from Srirangam and was not absconding.

-----------
If you dont want to know above version and be comfortable with investigative journalism, you can still go by http://thatstamil.oneindia.in/news/2004/11/30/usha.html

Baski said...

ஞாநி எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் அருமை. உங்கள் பதில் கடிதம் கலைஞரின் பிதற்றல் போல தான் இருக்கிறது.

+ இதற்க்கு முன் வழக்குகளில் சிக்கிய பெண்கள் உங்கள் முன் வந்து நின்றால் கூட உங்களுக்கு அவர்கள் யார் என தெரியாது. ஆனால் ரஞ்சிதா?
+ சன், நக்கீரன் உடைய வக்கிர வீடியோ வும், குமுதம் கவர்ச்சி படங்களையும் ஒப்பிடுவது குழந்தைதனம்.
+ குமுதம் செய்யும் அனைத்து தவறுகளையும் குமுததில் வெளியிடுனுமா? இட்லி வடையில் வேணுமென்றால் கமெண்ட் போடலாம்.

Anonymous said...

very good letter to Gnani.....i think Gnani will be always over confident...and now Idly vadai ...teach lesson to Gnani

கிரி said...

இட்லிவடை கலக்கல்

Itsdifferent said...

I dont know what are we wasting such energy on such useless things arguing.
I would rather put all this creativity into seeing through Kalam's dream of India 2020.
Read this http://www.huffingtonpost.com/2010/03/11/india-aims-to-become-worl_n_494544.html

And remember what was Dhirubhai Ambani's vision was? He says, there is enough demand out there or we can create demand, but govt approves only half of what is needed. And he kept building capacity even without approvals, and he was pilloried for that.
Same is the case here, procedures, govt mandates.
I think Tamil Blog world is mature enough to move in this direction.

ராமுடு said...

This was my comment to Kumudam Magazine admin.

"Dont you have sense? Till last week you were publishing his articles and now you are making business out of videos...

Dont you think that you are doing the matter which is worst than a prostitute?

I had some respect to Kumudam Publications. You made a black mark to Mr.SAP. Bloddy crap.. you people wanted to make business out of flush...

I stopped reading your articles from any magazine coming out of your group. I am not a follower of that poor guy. But media especially you, Nakeeran and SUN TV made good profit out of it. I dont see a difference between you and the burglers who snatch chain from dead body.

Regs
Ramudu."

Kumudam is doing internet prostitute and they are far more worst that porn sites. At-least in porn-sites people will get monetary benefit. But all these media gained so much of money by publishing other's personal privacy.

santa said...

ரஞ்சிதவினால் "அசோகவனம்" படத்திற்கு ஏதும் பாதிப்பு வருமா? நமது தாய் குலங்கள் தான் பத்தினி தான் நடிக்கணும்னு opinion உள்ளவர்கள் ஆச்சே!!

@Anonymous you can use transliterate tool by google (http://www.google.com/transliterate/tamil) for typing in tamizh..

Anonymous said...

//யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. ஆனால், என்னைப் போன்றவர்களுக்குப் புதிராக இருப்பதெல்லாம் உங்களைப் போன்ற பல பெண்கள் ஏன் சாமியார்களிடம் போய் சிக்கிக் கொள்கிறீர்கள் என்பதுதான்//
"எங்களை எல்லாம் பாத்தா உங்களுக்கு சேவை பண்ணனும்னு தோணலையா?"

வற்றாயிருப்பு சுந்தர் said...

சுத்தமான நேரவிரயம் என்று தெரிந்தும் சும்மா இருக்காமல் பின்னூட்டம்! குமுதத்தை ஏன் கண்டிக்கவில்லை என்பதில் எனக்குக் கருத்து எதுவும் இல்லை. ஆனால்

//நித்யானந்தா விவகாரத்தில் நடிகை அல்லாமல், வேறொரு குப்பாயியோ சுப்பாயியோ சம்பந்தப்பட்டிருப்பின் நீங்கள் குமுதத்தில் ஆறுதல்/அறிவுரைக் கடிதம் எழுதியிருப்பீர்களா? அப்படி எழுதியிருந்தால், ஏற்கனவே கருவறையில் நடந்த காம விளையாட்டில் தொடர்புடைய பெண்ணிற்கும், ஜெயேந்திரர் விவகாரத்தில் அடிபட்ட ஸ்ரீரங்கம் பெண்மணிக்கும் நீங்கள் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அப்பொழுதெல்லாம் ஏன் நீங்கள் கடிதம் எழுத முனையவில்லை. யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்தானே?//

இதில் நிறையவே இடிக்கிறது. மற்ற சம்பவங்களில் தொடர்புடைய பெண்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களை தினமும் ஊடகங்கள் பெயரையும் படத்தையும் போட்டு சந்தி சிரிக்கச் செய்தனவா? இல்லையே. நித்தியானந்தா விவகாரத்திலும் ஒரு குப்பாயியோ சுப்பாயியோ இருந்திருந்தால் மீடியாக்கள் அவர்களைச் சீந்தியிருக்கவே மாட்டார்கள். சம்பந்தப்பட்டது ஒரு நடிகை - முகம் பெயர் தெரியாத B Grade நடிகையல்ல - பொதுமக்களுக்கு அறிமுகமான நடிகை. அவரைப் பற்றி அனுதினமும் அச்சு, ஒளி ஊடகங்கள் நாறடிப்பதுதான் பிரச்சினையே - அதனால்தான் ஞாநி அவருக்குக் கடிதம் எழுதுகிறார். ஒரு முகந்தெரியாத குப்பாயி சுப்பாயிக்கு ஊடகங்களினால் ஏற்பட்ட பாதிப்பைவிட ரஞ்சிதாவுக்கு ஏற்பட்ட அவமானம் அதிகம் என்பதால் கடிதம். இதில் என்ன தவறு கண்டீரென்று புரியவில்லை. மற்றபடி வாய்ப்புணர்ச்சி வீடியோக்களை குமுதத்தில் வெளியாகும் கவர்ச்சிப் படங்களுடன் ஒப்பிட்டு ஏன் குமுதத்தைக் கண்டிக்கவில்லை என்று கேட்பது சிறுபிள்ளைத் தனம். ஞானி இந்தக் கடிதத்தை குமுதத்தில் எழுதினாலென்ன துக்ளக்கில் எழுதினாலென்ன. அதற்கும் அப்பத்திரிகையின் மற்ற பகுதிகளுக்கும் முடிச்சுப் போடுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்.

மற்றபடி ஞானியின் தனிமனித உரிமை மீறல் குறித்தான கருத்துகளோடு (அது நித்தியானந்தா, ரஞ்சிதா இருவருக்கும் பொருந்தும்) நான் உடன்படுகிறேன். நித்தியானந்தாவை நம்பி ஏமாறியவர்கள்தான் என்ன செய்வது என்று யோசிக்கவேண்டுமேயொழிய நீங்களும் நானுமாகிய திருவாளர் பொதுஜனம் யோசிக்க, விவாதிக்க ஒன்றுமில்லை. ஆபாசம் பாலியல் உணர்வுகளைத் தூண்டுதல் என்று வழக்கு போடவேண்டுமெனில் குற்றவாளிக்கூண்டில் நிற்கவேண்டியது சன் டிவியும் அந்த வீடியோவை வெளியிட்ட ஊடகங்களும்தான்.

கக்கு - மாணிக்கம் said...

// நித்யானந்தா விவகாரத்தில் நடிகை அல்லாமல், வேறொரு குப்பாயியோ சுப்பாயியோ சம்பந்தப்பட்டிருப்பின் நீங்கள் குமுதத்தில் ஆறுதல்/அறிவுரைக் கடிதம் எழுதியிருப்பீர்களா? அப்படி எழுதியிருந்தால், ஏற்கனவே கருவறையில் நடந்த காம விளையாட்டில் தொடர்புடைய பெண்ணிற்கும், ஜெயேந்திரர் விவகாரத்தில் அடிபட்ட ஸ்ரீரங்கம் பெண்மணிக்கும் நீங்கள் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அப்பொழுதெல்லாம் ஏன் நீங்கள் கடிதம் எழுத முனையவில்லை. யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்தானே? //

அட அசடே, அவாள்ளாம் நம்மவா இல்லியோ? இப்டி ஜோட்டால அடிச்ச மாத்ரி பேச படாதுடா கொழந்தே !

Rajesh said...

Nalla aani adicha maathiri ketinga boss... Good Letter...

Mothathil intha letter ngani oru kaaramana Idly Vaddai :D

Krish said...

ஞானியின் எழுத்துக்கள் நேர்மையானவை! அவற்றை வெளியிட குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கை களுக்கு அருகதை இல்லை.

'''இட்லிவடையின் சார்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.""""

யாரெல்லாம் சேர்ந்து எழுதினீங்க???

seetha said...

இட்லிவடை, குமுதம், நகீரன், சன், எல்ல கழிசடைகளையும் தள்ளிவித்து பார்த்தால்,ஞானி எழுதியதில் ஞயம் புரியும்.michael clarke's girl friemd(today ex) sued the guy who was her boy friend(footballer) once and who circulated nude pictures of hers that he had taken when they were together. that guy has been sacked from football, and big politicians are supporting her in her crusade against such bullying behaviour.

Anonymous said...

தமிழ்நாடே தனி தான்.
இங்கு வேலியே பயிர் முழுமையும் மேயும்.
தந்தை எட்டடி பாய்ந்தால் தனயன் பத்தடி பாய்வான்.
தாத்தாவுக்கு இரண்டு என்றால் பேரனுக்கு மூன்று.
-இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் உபதேசங்கள் எல்லாம் எடுபடாது.

அரவிந்தன் நீலகண்டன் said...

ஞாநி ஒன்றும் கருத்து நேர்மை கொண்ட ஆசாமி அல்ல. இல்லையென்றால் குமுதத்தில் எழுதுவாரா? தான் வைக்கும் மதிப்பீடுகளுக்கு நேரெதிரான ஊடகத்தில் தன் எழுத்துக்களை விற்கும் ஒரு மனிதன் எப்படி நேர்மையாளனாக இருக்கமுடியும்? தன்னை சமரசமற்ற கலகக்காரனாக காட்டிக்கொள்ளும் ஞாநி ஒரு கருத்தியல் புரட்டு பேர்வழி. நித்தியானந்தா என்ற பெயரில் அகப்பட்ட போலி ஆன்மிகவாதியும், சாரு நிவேதிதா என்கிற பெயரில் எழுதும் போலி இலக்கியவியாதியும் ஞாநி என்கிற பெயரில் குமுதத்தில் எழுதும் நேர்மைவாதியாக தன்னை நிலைநிறுத்தி பீலா விடும் ஆசாமியும் சில அலைவரிசைகள் வித்தியாசமே தவிர ஒரே நிறமாலையில்தான் இருக்கிறார்கள். நித்தியானந்தாவுக்கு பொறி வைத்து பிடிக்க முடியும் இந்த வார்த்தைகளில் விளையாடும் எத்துவாளிகளுக்கோ எந்த பொறியும் கிடையாது.

Don said...

Advise to Idly: Don't give free PR for people like Charu and Gnani. I wonder why there are so many fan boys for them. I've seen with my own eyes, Gnani twisting facts for proving his points in VijayTV(neeya naana). People who twist facts to validate their claims, can only mislead people and they are not to be considered as true journalists. They're not much different from Nithyananda, in my opinion. The only difference is Nithyananda got a chance and these people didn't get it.

Anonymous said...

தமிழில் comment எழுதுவதற்கு வழி சொன்னதற்கு Santa அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

இட்லிவடைக்கு ஒரு கடிதம் என்று பதில் எழுதுவார்,அப்புறம் அதற்கு பதில் கடிதம்,பதிலுக்கு பதில் கடிதம் என்று கடி(தம்) தொடரப் போகிறது.
ஞாநி குமதத்தில் ஒரு பத்தி எழுதுகிறார் அவரா குமுதம் எந்தப் படத்தைப் போடவேண்டும் என்று முடிவு செய்கிறார்.
அறிவியல் பற்றி பேசுபவர்கள் சோதிடம் பற்றி புத்தகம் வெளியிட்டால் அதற்கும் அவர்களுக்கு கடிதம் எழுதுவீர்களா என்று ஞாநி கேட்டால் கைவசம் பதில் இருக்கிறதா?.

Anonymous said...

’சாரு நிவேதிதா என்கிற பெயரில் எழுதும் போலி இலக்கியவியாதியும் ஞாநி என்கிற பெயரில் குமுதத்தில் எழுதும் நேர்மைவாதியாக தன்னை நிலைநிறுத்தி பீலா விடும் ஆசாமியும் சில அலைவரிசைகள் வித்தியாசமே தவிர ஒரே நிறமாலையில்தான் இருக்கிறார்கள். நித்தியானந்தாவுக்கு பொறி வைத்து பிடிக்க முடியும் இந்த வார்த்தைகளில் விளையாடும் எத்துவாளிகளுக்கோ எந்த பொறியும் கிடையாது.’
சமூகத்தை இவர்களிடமிருந்து மீட்க
ஜெயமோகன்,அரவிந்தன் நீலகண்டன் ஆன்மிக இயக்கம் துவக்க போகிறார்களா?.அப்படியானால் அதில் இட்லிவடைக்கு என்ன பதவி?

Anonymous said...

அடுத்து இட்லிவடையில் ஆனந்தம் தரும் பயிற்சி வகுப்புகளுக்கான விளம்பரங்களை எதிர்பார்க்கலாம் :)

பாலாஜி.ச.இமலாதித்தன் said...

//வாழ்க்கைத் திறன்கள்

01.தன்னை அறிதல்,
02.தன்னைப் போல் பிறரைஉணர்தல்,
03.இன்னொருவருடன் சரியாக உறவாடக் கற்றல்,
04.உரையாடக் கற்றல்,
05.எதையும்கேள்வி கேட்கப் பழகுதல்,
06.எதற்கும் நாமே பதில் தேடப் பழகுதல்,
07.தெளிவாகமுடிவெடுத்தல்,
08.சிக்கல்களை அவிழ்த்தல்,
09.உணர்ச்சிகளை உணர்ந்துகொள்ளுதல்,
10.அழுத்தங்களை லேசாக்குதல் //

இந்த திறன்கள் எல்லாருக்கும் இருந்தால் நல்லா.எனக்கு இந்த திறன்கள் பிடிச்சிருக்கு.


// சாமியாராவது நல்ல மாற்றுத் தொழிலாக இருக்கிறது. கொஞ்சம் யோகா,கொஞ்சம் தியானம், கொஞ்சம் சடங்கு, பத்து வாழ்க்கைத் திறன்களிலிருந்தும் கொஞ்சம் கிள்ளியெடுத்து பேச்சில் தெளித்தல், இத்துடன் காவி காஸ்ட்யூம் சேர்த்தால் சாமியார் தயார்.//


இதுதான் இன்றைய உண்மை நிலை.// சாவித்திரி முதல் கனகா, நீங்கள் வரை நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகமும் வேதனையும் நிரம்பியதாகவே முடிகின்றன. அதற்குக் காரணம் கல்வி இல்லாதது, தப்பானவர்களையே நம்புவது,//


ஒருவருக்கு கல்வி இருந்தால் மட்டும் அவர்கள் அதி புத்திசாலியாக் மாறிவிடுவார்களா...?உண்மையை சொல்லப்போனால் இங்கே, அதிகம் படித்தவன் தான் அதிகமான முட்டாள்தனத்தை செய்கிறான்.மேலும் மூடத்தனத்தை முழுமையாய் நம்புகிறான். (நான் 'சாரு'வை சொல்லங்க.)

lok said...

இட்லிவடை , ரொம்ப அறிவாளிதனமா நீங்க கேட்ட கேள்விகள் ..
ரஞ்சிதாவுக்கு மட்டும் கடிதம் எழுதியது ஏன் ?
மற்ற நடிகைகளுடையது அவர்களுடைய ஆபாச படமல்ல சினிமாவில் வந்த ஆபாச காட்சிகளின் படங்கள்..
நடிகைகளை அந்த படங்களுடன் தொடர்புபடுத்தி பார்ப்பது உங்கள் சின்னபுத்தி
குமுதத்தை கேள்வி கேட்காதது ஏன் ?
அவர்தான் மீடியா என்று பொதுவாக திட்டுகிறார் , அதில் குமுதமும் அடங்கும். குமுதம் என்று பெயர் சொல்லி திட்டுங்கள் என்று சொல்லி அவருக்கு பிரச்சனை வர எதிர்பார்க்கும் உங்கள் புத்தியை என்ன சொல்லுவது :(
மற்ற சாமியார் விசயங்களில் அடிபட்ட பெண்களுக்கு வருதபடாமல் நடிகைக்கு மட்டும் வருதபடுவது ஏன் ?
மற்ற சாமியார் விசயங்களில் அடிபட்ட பெண்கள் இவ்வளவு பாதிக்க படவில்லை, 99% பேருக்கு அவர்கள் பெயர் கூட தெரியாது.. வேண்டும் என்றால்
இட்லிவடையில் ஒரு poll வைத்து பாருங்கள் எதனை பேருக்கு தெரியும் என்று...
குமுதத்திற்கு ஏப்ரல் பூல் ஆனதிற்கு பூச்செண்டு குடுபீர்களா ?
ஒரு கட்டுரையில் உள்ள சரக்கை மட்டும் பார்த்து வெயிட வேண்டும் ஒழிய , எழுதியவரின் அந்தரங்களை ஆராய்வது எப்படி பத்திரிக்கை வேலையாக இருக்க முடியும் ? குமுதம் ஏப்ரல் பூல் ஆனதாக எப்படி சொல்ல முடியும் ?

அஞ்சா நஞ்சன் said...

//தாத்தாவுக்கு இரண்டு என்றால் பேரனுக்கு மூன்று//

வெளங்கலையே...

khaleel said...

Whatever you and gnani said is very correct. But applying the same yard stick anybody can see that you are settling personal scores with charu niveditha using this controversy.
this is no different from suntv or nakkeran.

shanmuganathan said...

நானும் ஞானி குமுதத்தில் எழுதிய உரையை படித்தேன்..எனக்கும் அதில் சில உடன்பாடு இல்லாமல் இருக்கிறது..ஒரு இடத்தில் "நீங்கள் என்ன விபசாரம செய்திர்களா....இல்லவே இல்லை...நீங்கள் விரும்பிய ஒருவருடன் உறவு வைத்து கொண்டிர்கள் என்று..." கேட்டிருந்திர்கள்...அவ்வாறு என்றால் விபசாரம் செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சொல்லவும்.அவர்களும் அதை தானே செய்கிறார்கள்...
இறுதியாக இட்லிவடை சொல்வது மாதிரி அவர் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது..

vedhanarayanan said...

Let us leave Gnani. He already fought against Vikatan for writing against MK and came out of that group. Now I am sure, he must be talking to Kumudam about what you have mentioned, but it is better for him not to come out of kumudam. Then where else he will go, most other magazines are less popular. He writes boldly and we need such people. And if he is too principled then he may become a jayakandhan and may not be in limelight.

Personally I feel one can become swamy only after he enjoys married life and kids. He should experience what is family before preaching the public to renounce it.

On specifi note, there are three more popular swamijis left. One is diffcult to even touch even in dreams, in spite of the fact that he is a child abuser. Another swamy is a IT city swamy and let us see who will expose him. The third is married and divorced and scaling mountains and let us see how disciplined he is.

goindu said...

நெத்தியடி !

Anonymous said...

GNANI is great in his writings... but he has to answer for this.

க.மு.சுரேஷ் said...

சாமியாராவது எப்படி??
course details
urgent 1 night
speed 30 days
ordinary 90 days
strong 6 months
contact more details ???
your nearest ???.

Anonymous said...

ஞானி ஒரு எழுத்து வியாபாரி. குமுதம் கொடுக்கும் காசுக்கு எழுதுகிறார்..முன்பு நித்தியானந்தன் எழுதியமாதிரி. இதில் அவர் ஏன் குமுதம் குறித்த சிந்தனைக்குள் போகபோகிறார்.
ஓரு கண்ணை மட்டும் அக...லத்திறந்து, மறு கண்ணை இறுக்க மூடிக்கொண்டு எழுதினால்த்தான் இவரது யாவாரம் நடக்கும்.

செந்தேள் said...

சும்மா "நச்" சின்னு கேட்டு இருக்கீங்க...

இனிமேல் ஞானி ரொம்ப யோசிச்சி தான் எழுதுவார் ...

sasikumar said...

ஞாநி அவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டது . மிகவும் அருமையான பதிவு..

Sheik Mujibur said...

Its very interesting.U rightly advised the writer.

Rathna said...

உங்கள் கேள்வி அனைத்தும் சாட்டை அடி போல் உள்ளன...
ஞானி இனியாவது யோசித்து எழுதட்டும், பேனா என் கையில் என நினைத்து கொண்டு இஷ்டத்துக்கு எழுதுவது இனியாவது குறையுமா என பார்ப்போம்...