பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 12, 2010

வெள்ளி விமர்சனம் - தி ஹர்ட் லாக்கர்

தி ஹர்ட் லாக்கர் படத்துக்கு 6 ஆஸ்கார் என்ற செய்தி வந்தவுடன் தான் நம்மில் பலருக்கு இந்த மாதிரி ஒரு படம் வந்திருக்கு என்று தெரிந்திருக்கும். உடனே நினைவுக்கு வந்தவர் ஜெய் ஹனுமான். வெள்ளிக்கிழமை விமர்சனம் எழுதி தர முடியுமா என்று கேட்பதற்குள் வெள்ளிக்கிழமை விமர்சனம் எழுதி தந்தால் போடுவீர்களா என்று கேட்டார். கரும்பு ஜூஸ் குடிக்க கூலி எதற்கு. இதோ விமர்சனம்.

ஆஸ்கார் வென்றிராவிட்டால் நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படத்தை பாத்திருக்கவே மாட்டோம். இராக்கில் நிஜமான போர்க்களத்தில் கிட்டத்தட்ட கள்ளன் - போலிஸ் விளையாட்டு விளையாட அனுப்பப்படும் ஒரு மூவர் குழுவின் அனுபவங்கள் எனச் சொல்லலாம். அதில் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் ஒருவனுக்கு மிக முக்கிய கதாபாத்திரம். அவ்வளவே. எல்லோரும் ஒரு குழு மனப்பாண்மையுடன் செயல்பட வேண்டிய நேரத்தில், ஒருவன் மட்டும் என்னமோ, சாவுக்கே பயப்படாதவன் போல செயல்படுவதும் , அதன்மூலம் பிறரை டென்ஷனாக்குவதன் மூலம் வரும் உரசல்களும், குழுவில் நிலவும் வெளிச்சொல்லப்படாத பந்தமுமே படம். இராக்கைப் பொருத்தவரை அமெரிக்கர்கள் இன்று வேண்டாத விருந்தாளி. அந்தக் கோணத்தில் இந்தப்படத்தைப் பார்த்தால் இன்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு ஒவ்வொரு இராக்கியனும் எதிரி, ஒவ்வொரு பொருளும், வாகனமும் வெடிகுண்டாகும் சாத்தியம் அதிகம். அந்த சூழ்நிலையில் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் ஒரு குழுவின் ஈராக்கிய அனுபவம் இது.


படம் முழுக்க ஆரம்பக் காட்சிமுதல் இறுதிவரை இராக்கின் தெருக்களிலும், பாலைவனத்திலும், சிறு சிறு சந்துகளிலும் அமெரிக்க தளத்திலும் நாம் இருப்பதுபோன்ற உணர்வினை அளிப்பதுதான் இப்படத்தின் மிக முக்கிய வெற்றி.

அமெரிக்கப் படைகளுக்கு இராக்கில் எப்படி எந்தவிதமாய் தாக்குதல் வரும் என்பதை அவர்களால் கணிக்க முடிவதில்லை. அதனால் ஏற்படும் பதட்டம் காலை கேம்ப்பை விட்டு வெளியே வந்தது முதல் மீண்டும் கேம்ப்புக்குள் திரும்பும் வரை தொடர்கிறது. காலையில் வெளியே கிளம்பினால் மீண்டும் திரும்பி வருவதுவரையான நேரத்தில் உயிரோடு திரும்பி வருவதற்காகவாவது சூழ்நிலையைக் கவனித்துச் செயல்படுவதும், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொண்டே இருப்பதும் மிக முக்கியம்.

வழக்கமாக வரும் அர்ஜூன் படத்தில் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்வதுபோல்தான் இவரும் செய்கிறார், அதே மஞ்சள் வயரையும், பச்சை வயரையும் வெட்டுகிறார். ஆனால் வழக்கமாக நாம் பார்க்கும் வெடிகுண்டைச் செயலிழக்க வைக்கும் நிபுனர்களுக்கும், இந்தபடத்தில் வில்லியம் ஜேம்ஸாக (Jeremy Renner)வருபவருக்கும் உள்ள வித்தியாசம் குண்டை செயலிழக்க வைக்கப்போகிறோம், அதை எவ்வளவு வெளிப்புறப் பதட்டம் இல்லாமல் செய்ய முடியுமோ அவ்வளவு எளிதாய் செய்ய முயல்வது. ஜேம்ஸ் விரும்பியபடி எளிதாகச் செய்வதென்றால், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் சிறப்பு உடையை கழட்டி வைப்பதும், சக படையணிவீரர்களின் தொடர்ந்த அறிவுறுத்தல்களை தவிர்க்க தகவல் தொடர்பு சாதனத்தை கழட்டி வைப்பதுமாக இருக்கிறார். இது குழுவில் உள்ள இதர உறுப்பினர்களுக்கு (Film Name: Antony & Briyan) பதட்டத்தையும், எரிச்சலையும் உருவாக்குகிறது. அந்த எரிச்சல் ஜேம்ஸை கொன்று விடலமா என நினைக்கும் அளவு உருவாகிறது. இதையும் மீறி ஜேம்ஸின் திறமையினால் தொடர்ச்சியாக குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுக்கொண்டிருப்பதும், அவரது குழுவினர் அவருக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தந்துகொண்டிருப்பதுமாக கழிகிறது.

தீவிரவாதிகள் இருப்பார்கள் என சந்தேகித்து சோதனைக்குச் செல்லும் இடத்தில் உடல் முழுதும் ரத்தமாக ஒரு பிணம் கிடக்கும். அதன் உடலுக்குள்ளிருந்து ஒரு வெடிகுண்டை எடுத்துச் செயலிழக்கச் செய்யும் காட்சியும், படத்தில் ஒரு மனித குண்டு கடைசி நேரத்தில் மனம் மாறி தன்னைக் காப்பாற்றும்படிக் கெஞ்சும் காட்சியும், அவரைக் காப்பாற்ற முயன்று ஆனால் முடியாமல் ”சாரி” சொல்லிவிட்டு அவரை வெடிக்க விட்டுவிடும் காட்சியும், அந்த மனித வெடிகுண்டு எல்லா நம்பிக்கைகளையும், இழந்து இறைவனை துதித்தபடியே வெடித்துச் சிதறும் காட்சியும் மிக முக்கியமானவை. மனித வெடிகுண்டுகளின் வகைகளாக திரையில் பார்ப்பது எந்த வரையரைக்கும் உட்படாத காட்சிகள். உடலெங்கும் குண்டுகளைக் கட்டி அதை மனித வெடிகுண்டே மனம் மாறி கழட்டி வைக்க நினைத்தால் கூட சாத்தியப்படாத அளவு பெரிய பெரிய பூட்டுகளாக போட்டு அனுப்புகிறார்கள் தீவிரவாதிகள்.
ஈராக்கும், ஆப்கானிஸ்தானமும் இன்று கிட்டத்தட்ட மனித வெடிகுண்டுகளின் நாடுகளாகவும், அவர்களின் தாக்குதலிலிருந்து தனது படையையும் அந்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதே இன்று அமெரிக்கா அங்கு செய்து வருவது. அதை எடுத்திருக்கும் விதத்தில்தான் இதன் சிறப்பு இருக்கிறது.


படம் பார்க்கும்போதும் சரி, படம் பார்த்து முடிந்த பின்னும் சரி, நாம் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றினாலும், மும்பை குண்டுவெடிப்புகள் நாம் ஈராக் போல ஆவதற்கு பலகாலம் இல்லை என்றே எண்ண வைக்கிறது.
அமெரிக்கப் படைகள் ஒரு பாலைவனத்தில் தீவிரவாதிகளுடன் மோதும் காட்சியும், ஒரு குழுவாக அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அனைவரையும் அழித்து விட்டு வருவதும் மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது


இசை:

இந்தப்படத்தில் இசையும், ஒலி மற்றும் ஒளிப்பதிவும் மிக அருமை. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தில் கதைமாந்தர்கள் அடையும் அதே உணர்வுடன் பார்ப்பவர்களையும் வைத்திருப்பதில் இசையும், துல்லியமான ஒலிப்பதிவும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

சிறு, சிறு சப்தங்கள் கூட மிக கவனமாய் கோர்க்கப்பட்டு படத்துடன் முழுதும் ஒன்றிவிட முடிகிறது. ஒளிப்பதிவும் அதேபோல மிகத்துல்லியம். குண்டு வெடித்து அது தரையின் மேல் பகுதியை பிய்த்துக்கொண்டு வருவதும், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் அமெரிக்க சிப்பாய்கள் தடயங்களை தேடும் இடத்திலும், குண்டுவைத்தவர்களை தேடிக்கொண்டு செல்லும் இடத்திலும் ஒளிப்பதிவு கலக்கலாக இருக்கிறது.

நாமும் ஒரு அமெரிக்கப் படைவீரனாக ஈராக்கிய தெருக்களில் பதட்டத்துடன் சுற்றி வந்த உணர்வை அடைவோம். அதுவும் இப்படத்தில் ஒரு பலம். ஆனால் ஆஸ்கார் வெல்லும் அளவு இதில் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

ஒரு டாக்குமெண்டரி படமாக ஆகியிருக்கும் வாய்ப்புள்ள இந்தத் திரைப்படம், அதில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வ பந்தங்களினால திரைப்படமாகிறது.
ஹர்ட் லாக்கர் என்றால் அதிக பட்ச வலி என்று பொருளாம். வியட்நாம் போரில்தான் இந்த வார்த்தை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மைதான். குண்டு வெடிப்பில் சிக்கினால் ஏற்படும் வலியும், சக நண்பனை சாகக் கொடுப்பதும் கூட இந்த இலக்கணத்தின்படி ஹர்ட் லாக்கர்தான்.

இந்தப்படம் குறித்து சில தகவல்கள்.

இந்தப் படம் முழுக்க ஈராக்கிற்கு வெகு அருகிலிருக்கும்ஜோர்டானில் படமாக்கப்பட்டுள்ளது.

இதன் திரைக்கதை 2004ல் பாம் ஸ்குவாடுடன் பயணம் செய்த மார்க் போயன் என்பவரால் எழுதப்பட்டது.

இது அமெரிக்க போர்த் திரைப்படமாக இருப்பினும் இத்தாலியில் கேன் திரைப்பட விழாவில் முதலிலும் (2008), அதன் பின்னர் டோரோண்ட்டோ உலகத்திரையிலும் திரையிடப்பட்ட பின்னர் அமரிக்காவில் வெளியிடப்பட்டது, (2009)

ஆஸ்காருக்கு 9 பிரிவுகளில் போட்டியிட்டு ஆறு விருதுகளை வென்றிருக்கிறது.

கேத்ரின் பிகெலோ தான் ஆஸ்கார் விருது பெறும் முதல் பெண் இயக்குனர் ஆவார்

10 Comments:

Vijayashankar said...

Mark Boal - boyanaa? He was a writer for Playboy!

Also you didnt write about the producer who was banned to enter the auditorium. ( was mentioned in thanks speech )

தேடுதல் said...

நானும் இப்படத்தை பார்த்தேன். படம் பார்த்து வெளி வந்தவுடன் நமக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை. படத்தை இரண்டே நாளில் மறந்து விடுவோம். இந்த படத்திற்க்கு 6 ஆஸ்கார் அவார்டு என்பது தேவையற்றது. ஆஸ்கார் விருது மேல் உள்ள மதிப்பே போய் விட்டது

zeno said...

அதே மாதிரி இந்த படத்தோட டைரக்டர் "கேத்ரின் பிகெலோ",அவதார் படம் எடுத்த கேமரூனோட முன்னாள் மனைவி மற்றும் சிறந்த இயக்குனர் பிரிவில் அவரை ஜெயித்ததையும் சொல்லி இருக்கலாம். :)

வலைஞன் said...

//ஆஸ்கார் விருது மேல் உள்ள மதிப்பே போய் விட்டது//
அதுதான் போன வருஷம் Slumdog ற்கு
கிடைத்த உடனே போயிடுச்சே!!

ஜீயார் said...

இது பற்றி முன்னரே சுரேஷ்கண்ணன் கூறியிருந்தார் பிச்சைபாத்திரத்தில். இப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என. அவரது கூற்று சரியாகி விட்டது. அப்புறம் சுரேஷ் போன்றவர்களின் விமர்ச்சனத்தில் ஒரு உயர்ந்த தரம் இருக்கும். இட்லி வடைக்கு சந்தனத்தை கொண்டு வந்தாலும் அதையும் சாக்கடை சேற்றை தெளித்து நாறடித்து விடுகின்றனர். அதனால் நல்ல படம் என உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து இட்லிவடையில் எழுதாதீர்கள். பாராளுமன்றத்தில் கூட மெஜாரிட்டி கிடைத்துவிடும். ஆனால் உங்கள் வாசகர்கள்(இதுசரியா) மத்தியில் எந்த படமும் நல்லபடமாக மெஜாரிட்டி பலத்துடன் வெற்றிபெறமுடியாது.

Anonymous said...

There was an article in THE HINDU today, taking a dig at the OSCARs, for having bestowed this film with 6 oscars, though there was another film, which the reviewer had felt deserved it better that this HL. The punch line was that oscars got carried away by the HYPE of the female director, who happened to be the ex-wife of james! the link is below: better, you translate it and publish for all of us.

http://www.hindu.com/cp/2010/03/12/stories/2010031250280800.htm

Why The Hurt Locker sweep hurts

Sudhish Kamath is irked that Kathryn Bigelow's work bagged the honours at the Oscars though The Messenger was a smarter creation. After all, the brilliance of a film is in the storytelling, not in the story

The Hurt Locker, was well… an Improvised Explosive Device.

What if Kathryn had directed Avatar and James Cameron made The Hurt Locker? That would've made it two films on Iraq made by men and one epic fantasy made by a woman. And, Avatar may have won.

It hurts that the Academy ruled on the basis of sentiment (most of it generated due to the media hype of independent filmmaker Kathryn being studio-backed James Cameron's ex-wife) than merit, denying Quentin Tarantino a well-deserved award for Best Original Screenplay.

Kathryn Bigelow won. Sadly, for all the wrong reasons.

Anonymous said...

Mr. Jai Hanuman, when writing reviews it is important to not reveal key plot lines, or if that is difficult, include "spoiler alert" so those who haven't seen the movie can avoid them. Good film reviewers do this.

Anonymous said...

Avatar deserved more awards.

Hurt Locker is a pretty ordinary one.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆஸ்கர் அவார்டு கிடைப்பதற்கு முன்பே இந்தப் படத்தைப் பார்த்தேன். படம், மகா திராபை, குப்பை, ரம்பம்.

’அவ்தார்’ படம் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக என்பது போல் இங்கே மிக பலமான பிரசாரம் செய்யப்பட்டது. ‘ஹர்ட் லாக்கர்’ அமெரிக்க ராணுவத்தினருக்கு மிகுந்த மரியாதை அளிப்பது போலவும் அரசியல் பண்ணப்பட்டது. போதும் போதாதற்கு கேத்லீன் பிகெலோ ஜேம்ஸ் கேம்ரானின் முன்னாள் மனைவி!

பயங்கர நஷ்டத்துடன் (மொத்த கலெக்‌ஷனே 15 மில்லியன்) தியேட்டரை விட்டே ஓடி விட்ட ‘ஹர்ட் லாக்கர்’ லோக்கல் அரசியலால் மட்டுமே ஆஸ்கரில் தூக்கி நிறுத்தப்பட்டது.

தவிரவும், ‘அவ்தார்’ அனிமேஷன் படமா, 3 D மோஷன் கேப்சரில் நடிகர்களின் நிஜமான பங்களிப்பு என்ன என்பதிலெல்லாம் செலக்‌ஷன் மெம்பர்களுக்கு பயங்கர குழப்பம். Frankly, James Cameron is ahead of his time and has pioneered many new techniques in this movie.

2 பில்லியன் கலெக்‌ஷனையும் தாண்டி உலக முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படம் ஆஸ்கரில் தோற்ற அழுகுணிக் கதை இது தான்!

Anonymous said...

Hurt locker - "the ultimate pain".may be for the ppl who have heard about the movie winning oscars:) Its a gud movie but it doesnt deserve oscars. Quentin Tarantinos movie Inglorious Bastards is a sincere effort. Avatar, is way ahead of time and a wonderful movie which deserves..its a shame for the Oscar Board.
**** Prashanth*****