பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 31, 2010

பொன்னாகரம் வெற்றி யாருக்கு ?

எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. திமுக தோல்வி அடைந்திருந்தாலும், அல்லது அதிமுக வெற்றி பெற்றாலும் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது, ஏன் விஜயகாந்த் கட்சியே வெற்றி பெற்றிருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் பா.ம.க இந்த இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு வந்தது பெரிய அதிசயம். அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அவர்களின் வெற்றியாகவே அதை நினைத்துக்கொள்ளலாம்.


ஜனவரி மாத மத்தியிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட்து. திமுக முதலில் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு அது சாதகமாகவே அமைந்து விட்டது.

இடைத்தேர்தலில் அமைச்சர்களின் வேலை என்னவோ அதை ஒழுங்காக செய்தார்கள். களத்தில் இறங்கி பணம், பொருள் என்று விளையாடினார்கள். பிறகு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டவுடன் முழு மூச்சுடன் இரண்டாம் கட்ட இலவச விநியோகத்தில் இறங்கியதோடல்லாமல், அவசர அவசரமாக சில அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து நல்ல பெயர் சம்பாதிக்க திமுக முனைந்த்து. இதைத் தவிர, பணம் வாங்கியவர்கள் மாற்றி ஓட்டுப் போட்டால் தெரியவரும் என்ற மிரட்டல் வேறு!

நரேஷ் குப்தா இந்த முறை டெலிவிஷனில் தோன்றி வாக்குப் பதிவு வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும், யார் யாருக்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்ற விஷயம் தெரியாது என்றும், அதனால் மக்கள் பயமில்லாமல் தங்கள் ஓட்டைப் பதிவு செய்யலாம் என்றும் கூறினார். ஆனால் இவ்வளவு கூறும் இவரது அரசாங்க இயந்திரத்தால் இலவச விநியோகத்தை மட்டும் தடுக்க இயலாமற் போனது ஜனநாயகத்தின் துரதிருஷ்டமே.

இனி திராவிடக் கட்சிகள் பா.ம.கவை விரட்டியடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு, இந்த இடைத்தேர்தல் திரும்பவும் பா.ம.கவை கூப்பிட பிள்ளையார் சுழியாக அமைந்துவிட்டது.

பத்திரிக்கைகள் சமீபகாலத்தில் ராமதாஸுன் காமெடி பேச்சுக்களை போடுவதை நிறுத்திவிட்டது. இனிமேல் அது மீண்டும் தொடரும்.


எந்த கட்சியுடனும் கூட்டு இல்லாமல் பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. திமுக தனித்து நின்றால் சரியான போட்டியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். போன முறை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது, மக்களவைத் தேர்தலில் பொன்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் கிடைத்த வாக்குகள் 32,753. ஆனால் தற்போது தனித்து கிடைத்த வாக்குகள் 41,285. நிச்சயம் அதிமுக அதிர்ச்சியில் இருக்கும்.

மற்ற தொகுதிகளில், இதே கணக்கு சரிப்பட்டு வருமா என்று தெரியாது ஆனால் 2011 தேர்தலில், பா.ம.க பேரம் பேச இந்த கணக்கு நிச்சயம் உதவும். ஒரு வேளை அதிமுக இந்த தேர்தலையும் புறக்கணித்து இருந்தால், அவர்களுக்கு லாபமாக இருந்திருக்கும். அட்லீஸ்ட் டெபாஸிட் தொகை போகாமல் இருந்திருக்கும். அதிமுக வாக்குகள் பா.ம.கவிற்கு சென்றது என்று கூறியிருக்கலாம். இப்ப அம்மா இருக்கும் நிலமைக்கு அவர் கொடா நாடு சென்று நல்ல ரெஸ்ட் எடுப்பது தான் நல்லது. அங்கே கூட்டணியை பற்றி ஒழுங்காக சிந்தித்து ஏதாவது முடிவு எடுத்தால் அடுத்த முறை எதிர்கட்சியாக இருக்கலாம்.

அடுத்த தேர்தலில், அதிமுக ஒரு மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள், திமுக, காங்கிரஸ் ஒரே கூட்டணியில் இருக்கும் வரை நிச்சயம் அவர்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறார்கள். இந்த தேர்தல், நிச்சயம் காங்கிரஸை சற்றே யோசிக்க வைக்க உதவும்.

18 Comments:

ஜெயக்குமார் said...

ஜெயலலிதாவின் இந்த சாதனை பிரமிக்க வைக்கிறது. கட்சியை குழப்பத்திலிருந்து மீட்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பறியதிலாகட்டும், அதே கட்சியை கடைசி நிலைக்கு கொண்டு சென்றதிலாகட்டும், எதிர்கட்சிகள் செய்வதற்கு ஒன்றுமே வைக்கவில்லை.. அவரே ஆரம்பித்து, அவரே முடித்து வைத்துவிட்டார். எனக்கென்னமோ அ.தி.மு.க மரனப்படுக்கையில்தான் இருப்பதாகத் தெரிகிறது.

யதிராஜ சம்பத் குமார் said...

அதிமுக மரணப்படுக்கையிலிருப்பது போன்ற தோற்றம்தான் ஏற்பட்டிருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏக்கள் பெரும் தொகைக்கு விலைக்கு வாங்கப்பட்டனர். இப்பொழுது புதிய வழக்கமாக இடைத்தேர்தல்களுக்கு இடைத்தேர்தல் மக்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். மற்றபடி அதிமுக எந்த நிலையிலிருந்ததோ, அதே நிலையில்தான் இன்னமும் இருக்கிறது.

கூட்டணிகள் மாறினால் காட்சிகள் மாற வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் அதிமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில், திமுக முன்பு போல் பண விநியோகம் செய்ய முடியாதவாறு தேர்தல் ஆணையம் கடுமை காட்டும். இப்பொழுது மாநில தேர்தல் ஆணையம் முதல் அரசு இயந்திரம், போலீஸ் போன்றவையும் அரசிற்கு சாதகமாக நடந்து கொள்வதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலை எதிர்காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

Rangan Kandaswamy said...

பென்னாகரத்தில் குடும்பத்திற்கு இரண்டு கிராம் தங்க காசு கொடுத்து இருக்கிறார்கள் பா.ம.க.

சம்பாரித்து வைத்தது எல்லாம் என்ன செய்வதாம்?

மற்ற கட்சிகள் எல்லாம் என்ன செய்தனவோ ( அ.தி.மு.க தவிர - ஒரு பைசா செலவு இல்லை, பிரியாணி, க்வார்டர் தவிர ) அதை செய்தார்கள்.

அடுத்து முறை நிச்சயம் முப்பது சீட்டுக்கள கேட்டு இருபதில் முடித்து தி.மு.க. கூட்டணியில் இருப்பார்கள்.

டிசம்பரில் தேர்தல் வரும்.

Anonymous said...

For those talking about DMK distributing money, why are you conveniently leaving the money distribution done by other parties? Today every major parties distribute money.Why is Vijayakanth searching for wealthy business people and give seats?

Anonymous said...

Sampath Kumar: EC , Govt machinery, police and cinema people will never change. They will be suckers of the ruling party. You are talking as if other parties are pure and never indulge in money distribution.Next time when ADMK comes to power they will do the same thing and the departments you say will keep taking their orders.

முரளி said...

bad time for ADMK.. almost in the edge of getting in to history books..

here is my posting on pennagaram result and AIADMK's action..

http://myownscribblings.blogspot.com/2010/03/blog-post_30.html

jaisankar jaganathan said...

//காங்கிரஸ் அதிமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில்// /

யதி இது எப்படி நடக்கும். ஒரு உறையில் இரண்டு கத்தியா. சான்ஸே இல்லை

khaleel said...

very sad. ADMK has lost deposit. heheheh

கவுண்ட மணி said...

//// பத்திரிக்கைகள் சமீபகாலத்தில் ராமதாஸுன் காமெடி பேச்சுக்களை போடுவதை நிறுத்திவிட்டது. இனிமேல் அது மீண்டும் தொடரும்.////

தமிலு நாட்டுல மத்த தலீவர்கல்லாம் அப்ப்டீ என்ன தல சீரீசா பேசிபுட்டாங்க.....!
இவரை மட்டும் இந்த தாக்கு தாக்குறீங்களே தல..
ஒண்ணுமே வெளங்கல தல....!!

ராம கிருஷ்ணன் said...

இந்த நாட்டின் அத்துணை ஜனநாயக நெறிமுறைகள் அழிக்கப்பட்டது பற்றியெல்லாம் கவலை எந்த ஜனநாயக வாதிகளுக்கும் இல்லை. இந்த நாடு ஒரு குடும்பத்திற்காக மட்டும் சுரண்டபடுவது எவர் கண்களுக்கும் தப்பாக தெரியவில்லை. சன் தரப்பால் நித்யானந்தாக்கள் அம்பல படுவதற்கும் கள்ள மருந்து கும்பல்கள் ஏன் பிடிபடுகிறார்கள் என்பதற்கான காரண காரியங்கள் யாராலும் ஆராயப்படுவதில்லை. ஆனால் 'உண்மையான' ஜனநாயவாதிகளுக்கு பாமகாதான் முக்கிய பிரச்சனையே. எவனுக்கும் பாமகவை நினைத்தால் தூக்கம் வரமாட்டேன் என்கிறது.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் ,முக்கிய கட்சி பிரமுகர்கள் , ஒன்றிய சேர்மென்கள், அமைச்சர் பரிவட்டங்கள், துணை முதல்வர், முதல்வர் இவர்களுடன் அதிகார பலம், பணபலம், மீடியா, இலவச வேட்டி சேலை , தங்க அன்பளிப்புகள் இவை அல்லாமல் கூட்டணி கட்சிகள் சிறுத்தைகள், கருஞ்சட்டை வீரமணியின் தற்கொலைப்படை, முசுலிம் மற்றும் கிருஸ்தவர்கள் , உழவர்கள் கட்சி, புரட்சி பாரதம், இன்னும் ஆம் இந்திய தியாக காங்கிரசு ஆதரவுடன் போட்டியிட்டும் பாதிக்கும் குறைவான ஓட்டுக்களே பெற முடிந்ததென்றால் தி மு க வின் பரிதாப நிலையைநினைத்துப்பார்க்கவே முடிய வில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாமக எடுத்த அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை கடந்த சட்டசபை தேர்தலில் எடுத்திருந்தால் இன்றைய மைனாரிட்டி திமுக அரசே உருவாக்கி இருக்காது. அறுபது இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக வடமாவட்டங்களிலும் திமுகவின் தொண்ணூற்றி ஆறு சீட்களின் வெற்றி வாய்ப்பை குறைத்திருக்கும். யாரால் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்திருக்கிறாரோ கருணாநிதி அந்த கட்சியையே அழிக்க நினைத்ததன் விளைவுதான் இன்று பீனிக்ஸ் பறவையாக பாமகவை நிலைக்க வைத்திருக்கிறது.

விசைய காந்து வரை யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் ஆனால் பாமக எக்காரணம் கொண்டும் ஜெயிக்ககூடாது என இட்லி வடை வரை நினைக்க காரணம் என்ன?

இந்த நாட்டில் வன்னியர்கள் இழைத்த தீங்குதான் என்ன?
ராமதாஸ்தான் ஜெயலலிதா, கருணாநிதி, விசைய காந்து இவர்களை விட அப்படியென்ன கெடுதல்களை இந்த நாட்டு மக்களுக்கு செய்துள்ளார்? இட்லி வடை தெளிவு படுத்த வேண்டும்.

கல்வி கொள்ளை, இயற்கையை அழிக்கும் மணல் கொள்ளை, மக்களை அழிக்கும் மதுவை ஒழிக்க, நல்ல தமிழை வளர்க்க, சீரழிவு காலசாரத்தை தடுக்க மக்கள் டிவி, இன்னும் இன்னும் எத்தனையோ மக்களுக்காக இந்த ராமதாஸ் போராடுவது தவறென்றால் , இந்த இந்திய நாட்டுக்கு வன்னியர்கள் மட்டும் வேண்டாத பாவங்கள் என்றால், பாமக ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவே கூடாதென்றால், இவ்வளவு காழ்புணர்ச்சி இருக்கிறதென்றால் , சகிப்பு தன்மையே இல்லைஎன்றால், வன்னியர்கள் தீண்டத்தகாத சக்திஎன்றால், இலங்கையில் [ஈழத்தில் (?)] லட்சம் தமிழர்களை கூண்டோடு கிளஸ்டர் குண்டுகளும் விஷ வாயுக்களை வீசி அழித்தது போல வன்னியர்களை
ஒட்டு மொத்தமாக அழித்துவிடுங்கள்.

இதுதான் உங்கள் அத்தனை பேரின் ஆசைகளுக்கும் ஒரே தீர்வு. ஆம்.

யதிராஜ சம்பத் குமார் said...

யதி இது எப்படி நடக்கும். ஒரு உறையில் இரண்டு கத்தியா. சான்ஸே இல்லை//

எதுவும் நடக்கலாம். திமுக இந்திரா காந்தியை செய்த விமர்சனத்திற்கு மானமுள்ள காங்கிரஸார் எவரும் திமுகவினுடனான கூட்டணியை விரும்பியிருக்க மாட்டார்கள். அப்பேற்பட்ட கூட்டணியே ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், ஜெயலலிதா அப்படி ஒன்றும் பெரிதாக சோனியாவை விமர்சித்து விடவில்லை. அவருடைய வெளிநாட்டுப் பின்னணி பலமட்டங்களிலும் விமர்சிக்கப்படுகிறது. ஆக இது பெரிய விஷயமில்லை.

Sreenivasan said...

@ராம கிருஷ்ணன்

இட்லிவடை எதனால் பா.மா.க. ஜெயிக்க கூடாது என்று நினைத்தது என்று யான் அறியேன்.
நான் அவ்வாறு நினைக்க காரணம், 40 வருஷங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சிக்கு வர பிரச்சாரம் செய்தவைகளில் மிக முக்கியமென்று சொல்லியது 1) தனித்தமிழ்நாடு 2) பார்ப்பனீய எதிர்ப்பு.

அவ்வாறு சொல்லி ஆட்சி அமைத்த தி.மு.க-வினால் இன்று தமிழகம்(மற்றும் இந்தியா) கண்ட பலன்தான் என்ன. அணைத்து இடங்களிலும் ஊழல், சட்ட ஒழுங்கு சீர்கேடு etc.,

நிற்க. இப்பொழுது ராமதாஸ்-உம் அதே pattern-இல் தான் தனது கட்சியை இட்டு செல்கிறார். ஒரே மாறுதல் தான் சார்ந்த இனத்துக்காக போராடுவதாக கூறி கொள்கிறார் (மற்றபடி மது ஒழிப்பு, இயற்க்கை வளம் காபாற்றபடவேண்டியது சம்பந்தமான அவர் கருத்துக்கள் எனக்கு உடன்பாடே). எந்த ஒரு இனமும் அழியவேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் லாபம் இல்லை.

ஜெ.வின் இப்பொழுதுள்ள சொத்து எவ்வாறு வந்தது மற்றும் மஞ்சள் பையோடு சென்னை வந்த மு.க-விற்கு இப்பொழுதுள்ள செழுமை எவ்வாறு வந்தது என்ற கேள்விக்கான பதில்தான் ராமதாசுடைய தைலபுர தோட்டம் மற்றும் அறிவு கோயில் ஆகியவை வந்ததற்க்கான பதிலும் கூட.

நீங்களே கூட, "வன்னியர்கள் தீண்டத்தகாத சக்திஎன்றால்", "இந்திய நாட்டுக்கு வன்னியர்கள் மட்டும் வேண்டாத பாவங்கள் என்றால்" என்று அவர்களை மட்டுமே முன்வைக்கிறீர்கள். இங்கு யாரய்யா வன்னியரை அழிக்க அலைவது. மு.க. மட்டுமே தமிழகம் என்று நீர் நினைதால் நீர் ஒரு கடைந்து எடுத்த மடயரையா. அதே போல் வன்னியரின் நலம் மட்டுமே தமிழக நலன் என்று நினைத்தால் அது உமது சுயநலத்தையும், "தன்னைபோனி" மனோபாவத்தயுமே காட்டுகிறது.

மேலும் பா.ம.க ஆட்சி அமைத்தால் வன்னிய இனமே மேம்பட்டுவிட்டது என்று அர்த்தமாகிவிடாது மாறாக அவ்வாறு நினைப்பவரின் அறிவீனதயே அது தண்டோரா போடுகின்றது.

முடிவாக, ஏற்கனவே 100 தீமைகள் இருக்க, 2 நன்மைகள் மற்றும் 20 தீமைகளுடன் வரும் பா.ம.க-வை யார் ஏற்றுகொள்வார் ?

பி.கு. பா.ம.க-வும் 2 கிராம் தங்கம் கொடுத்துதான் இரண்டாவது இடத்தை பொன்னாகரத்தில் பிடிக்க முடிந்தது.

jaisankar jaganathan said...

//இதுதான் உங்கள் அத்தனை பேரின் ஆசைகளுக்கும் ஒரே தீர்வு. ஆம்.//

ராம கிருஷ்ணா. வன்னியர் வாழ்க. வளர்க. போதுமா.

R.Gopi said...

எப்போதும் தமிழ்நாட்டு மக்களுக்கு “அல்வா” தந்தே பழக்கப்பட்ட “தல” பொன்னாகரம் இடை தேர்தல் வெற்றியை கொண்டாட “லட்டு” அளித்ததே மற்ற கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சி...

ந.லோகநாதன் said...

எனக்கும் ஒன்றும் புரியவில்லை. மற்ற கட்சிகள் எல்லாம் ஒழுங்காக செயல்படுகின்றனவா?

Anonymous said...

Sivanesachelvan writes,
This is a sad day for people of TN. They donot want democracy to flourish but only interested in freebies like TVs Sugar Thoordhal ,gas cylinders Cinema etc, etc.
On Her part J J is behaving like old Maharajas and Kings inquiring if there is rain, three times a month. She is not meeting & allowing party cadres to have a say . She thinks of very high of herself and never cares to meet leaders of her own party and this could be the Reward one can get !.
The Cauctus around her esp. that Mannargudi family is planting their men in all vantage positions -Never allows others to meet J J . and that is why the party is going to ruins and definite it is ,if She does not mend her ways. there will be no AIADMK at all
Or could there be secret understanding between Sasikala and Kalaignar ? For she holds Tasmac Liquors selling rights already !

ஜீயார் said...

ராம கிருஷ்ணன் க்கான பதில்,

ஐயா பாமக தோற்கவேண்டும் என நினைத்ததற்கு, அவர் இரண்டு கழகங்களிடமும் பேரம் பேசியதுதான் காரணம். முதல் தேர்தலில் தேர்தலில் ஜே யுடன் கூட்டணி வைப்பது தாயையும் தாரத்தையும் ஒரே மாதிரி நினைப்பது என்று சொன்னார். அடுத்த தேர்தலில் அதே ஜே அன்பு சகோதரியானார். இதே கதைதான் முகவிற்கும். இந்த பச்சோந்தித் தனத்தை யாரால் மன்னிக்கமுடியும். மதுஒழிப்பு நல்ல திட்டம் தான். ஆனால் பாமகவே ஆட்சிக்கு வந்தாலும் அமல் படுத்த முடியாத திட்டம்.

Anonymous said...

Don't think that this is the end of ADMK. You know in 2001 election DMK got only 17500 votes in Pennagaram. Even in the Lok Sabha election held during last year ADMK won as many as seats and it is only based on alliance.

G.R.