பிரபல பதிவர் ஒரு கட்டுரை எழுதிவிட்டு தன் வலைப்பதிவில் போட்டால் அவருடைய 'இமேஜ்' போய்விடும், உங்களுக்கு தான் எந்த இமேஜும் இல்லையே போடுங்கள் என்று அனுப்பினார். அந்த கட்டுரை இங்கே...
கிரேஸி மோகன் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி? “கடவுள் இல்லேன்றான் பாரு அவனை நம்பிடலாம்.. இருக்குன்றான் பாரு அவனையும் நம்பிடலாம். நான் தான் கடவுள்ன்றான் பாரு.. அவனை மட்டும் நம்பவே கூடாது” என்ன ஒரு பவர்ஃபுல் டயலாக்!
எப்போதோ படித்த கவிதை: என்னவரம் வேண்டும் என்றார் கடவுள். அதுகூடத் தெரியாத நீ என்ன கடவுள்? எழுதியவர் பெயர் மறந்துபோய்விட்டது :-( இப்படிப்பட்ட சாமியார்கள் மூலமாக ஒரு கடவுள் வருவாராயின், அதேதான் கேட்கத் தோன்றுகிறது. நீ என்ன கடவுள்?
நான்தான் கடவுள் என்று கடவுளே சொல்லிக்கொண்டாலும் அந்த வாக்கியத்தை அவர் சொல்லவேண்டிய தேவை என்ன? விளம்பரம், சேல்ஸ் பிட்ச் - எல்லாம் எதற்காக? எதையும் விற்காதவர்கள் ஏன் விளம்பரம் செய்யவேண்டும்? விற்பனை என்று சொல்லும்போதே எக்கனாமிக்ஸும் கூட வந்துவிடுகிறதே?
ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் ஆள் எந்தக் காவி/ மடம்/ பீடம் பின்னால் போகப்போவதில்லை. போகும் ஆட்கள், ஏமாற்றப்படக்கூடிய சாத்தியத்தை அறிவதில்லை/ கவலைப்படுவதில்லை.
ஜெஃப்ரி ஆர்ச்சரின் பிரபலமான கதை Not a Penny More, Not a Penny Less; எண்ணெய் தேடும் கம்பெனியின் பங்குகள் வாங்குவதில் ஏமாறும் சிலர் பழிவாங்கும் கதை. அவர்கள் ஏமாற்றத்துக்கு முக்கியமான காரணம், அந்தக் கம்பெனிக்கு எண்ணெய் கிடைத்துவிட்டதாக வரும் வதந்தி. வதந்தியை நம்பி வாங்கியதால், ஏமாற்றப்பட்டதாக வழக்குக்கூட போட முடியாமல் நிற்கிறார்கள் ஏமாந்தவர்கள்.
நித்யானந்தர் மீது யார் வழக்குப் போடமுடியும், ஏறத்தாழ இதே நிலையில்தான் நிற்கிறார்கள் பக்தர்கள். அவர் பிரம்மச்சாரி என்றும் கடவுள் என்றும் சொல்லப்பட்டதை நம்பி பணத்தையும் நேரத்தையும் செலவழித்திருக்கிறார்கள், இப்போது இரண்டும் இல்லை என்பது தெள்ளெனத் தெரிந்தாலும் எதுவும் செய்யமுடியாது.
இப்போது அவர்கள் முன் இருக்கும் தெரிவுகள் என்ன?
1. ஏமாற்றப்பட்டதை மறைத்துக்கொண்டு - ‘அவர் கடவுள்தான், வந்த காட்சி எல்லாம் கிராஃபிக்ஸ்’
2. ஆமாம், நான் ஏமாந்துவிட்டேன். நீயா இருந்தாலும் ஏமாந்திருப்பாய்.
இரண்டும் இல்லாமல் மூன்றாம் ரூட்டில் பயணிக்கிறது ஒரு வண்டி. ‘ எனக்கு அப்போதே தெரியும், ஆனால் கடவுளைக்கண்டேன்; உங்களிடம் சொல்லி இருப்பேன், இங்கிலீஷில் கோடி காட்டினேன், என்ன செய்வது, ஆனால் எனக்குக் கவலையில்லை,புற்றுநோய்க்கு ஐ எஸ் ஓ வைத்தியர் அவர் ஆனால் அவன் ஒரு காமாந்தகாரன், வீடியோ வந்துவிட்டது ஆனால் மனைவி அங்கே இருக்கும்போது என்ன எழுதுவது?’ எதாவது புரிகிறதா? இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.
கருட புராணத்தண்டனைகளையும் செலெக்டிவான விழா நிகழ்வுகளையும் சூடாக பல மாதங்களுக்கு வைத்திருந்தவருக்கு, இந்த குழப்பாச்சி குப்பாச்சிக்கு என்ன தண்டனை கொடுப்பது? ஏன் படித்தாய் என்ற அற்புதமான கேள்வியையும் மீறி போர்ட் வைனுக்கு காசு தரவேண்டுமா?
இதைத்தான் கலகக்கார எழுத்து என்கிறார்களோ?
ஏமாற்றுதான், மோசடிதான், ஆனாலும் நித்யானந்தரை எந்த வழக்கும் தீண்டப்போவதில்லை - நம்பிக்கையை ஏமாற்றினார் என்பது, நேரடியான மோசடியாக இல்லாதவரை - அவர் பிரம்மச்சாரி என்று நம்பி பெண்ணைக் கொடுத்தால் மோசடி - அவர் கடவுள் என நம்பி பணத்தைக் கொடுத்தேன் என்பது எப்படி சட்டரீதியான மோசடியாக இருக்கமுடியும்?
நடிகையையும் எந்த வழக்கும் தீண்டப்போவதில்லை - தவறு செய்தாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது. கடவுள் மேல் காதலாக இருக்கலாம், இல்லை கடவுளே என் காலடியில் எனும் ஆர்வமாக இருக்கலாம், இல்லை எல்லாம் தெரிந்தும் இருக்கலாம் - அது நமக்குத் தேவையில்லாத விஷயம்.
வீடியோவை அரைமணிக்கொருமுறை போட்டவர்கள் வக்கிரமானவர்கள்தான். தங்கள் வருமானத்திற்காக நடிகையின் மானத்தை அடகு வைத்தது தவறுதான். (சாமியாரை அடகுவைத்தது எனக்குத் தவறாகக்கூடப் படவில்லை) - ஆனால் அவர்களும் சட்டரீதியாக மாட்டப்போவதில்லை.
கலகக்கார எழுத்தாளரும் சட்டரீதியாக எந்தத் தவறும் செய்யவில்லை. உளறுவது என்றிலிருந்து சட்டரீதியான தவறு ஆனது?
சாமியார்கள் காமியார்கள் ஆவது சாதாரணமாக ஆகிவிட்டதால் பெருத்த அதிர்ச்சி இல்லை. நடிகைகள் கூட இருப்பதும் ஆச்சரியமான விஷயம் இல்லை. தொலைக்காட்சிகளும் நியூஸ்பேப்பர்களும் இதுபோன்ற வக்கிரமான பணப்பற்றை வெளிப்படுத்துவதும் இதுதான் முதல்முறையும் இல்லை.
மிகச்சிறிய வாய்ப்பு கிடைக்கையிலும் அடுத்தவர் ஞானத்தை கிழித்து வசைபாடி, யாருக்கு எப்படி சினிமா வாய்ப்பு கிடைக்கிறது என்று அறச்சீற்றம் செய்பவர்கள்தான் முதல்முறை எல்லா முகமூடியும் இழந்து நிற்கிறார்கள்: ஆனால் இதுவும் இன்னும் கொஞ்ச நாளில் பழகிவிடும்.
ஆனால் எல்லாத்தரப்பும் தங்கள் Credibility ஐ இழந்தது மொத்தத்தில் நல்ல விஷயமாகத்தான் படுகிறது. எந்த நீதிமன்றமும், சட்டரீதியான தண்டனையும் இதை இவ்வளவு சுலபமாக்ச் செய்திருக்கமுடியாது!
நம்ம ஊர்ல ஆட்டுக்கு தாடி வளர்ந்தாலே காலில் விழுவார்கள். சரி, அது கிடக்கட்டும், யார் இந்த பதிவை எழுதினார் என்று கண்டுபிடிப்பதில் டைம் வேஸ்ட் செய்யாதீங்க.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 05, 2010
நித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி!
Posted by IdlyVadai at 3/05/2010 04:11:00 PM
Labels: ஆன்மிகம், சமுதாயம், விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










25 Comments:
This is what I would call "a clinical dissection of amorous behaviour"
\\கிரேஸி மோகன் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி? “கடவுள் இல்லேன்றான் பாரு அவனை நம்பிடலாம்.. இருக்குன்றான் பாரு அவனையும் நம்பிடலாம். நான் தான் கடவுள்ன்றான் பாரு.. அவனை மட்டும் நம்பவே கூடாது” என்ன ஒரு பவர்ஃபுல் டயலாக்!\\
this must be the sonda dialogue (if you are a purist, read it as "improvisation"!) of kamal.
romba thelivaa irukku .
but tell me where does amour come here ?its just a physical satisfaction of two adults.how can we be judgemental?
http://www.guardian.co.uk/world/2010/mar/04/vatican-gay-sex-scandal this will be more interesting than nityanadha
அந்த வசனம் மதனுடையது அல்லது கமல்
எனக்கென்னமோ ஜெயமோகன் அல்லது அவரது விசிறிகள் எழுதியிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு வேலை இட்லிவடையே கூட எழுதி இருக்கலாம். ஏனென்றால் அவர் எப்போதுமே சாரு எதிர்ப்பாளர். ஆனால் நானும் இந்த பதிவிற்கு முழுக்க உடன்படுகிறேன்.
It's Charu who wrote this.
@Padma,
Yes you're right about this being a private matter.But that argument is not applicable in this case as Nithya's USP was his Bhramachariya and his godhood.Of course the people followed him are equally culpable for being gullible.
Now had he himself been open about his dalliances instead of being exposed and now absconding then this indeed is a personal matter.
//யார் இந்த பதிவை எழுதினார் என்று கண்டுபிடிப்பதில் டைம் வேஸ்ட் செய்யாதீங்க.//
அது இன்பான்னு தெரியும். இல்லைனா அடுத்த சாய்ஸ் சாரு
அருமை! இன்னும் நன்றாக எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்!
அட! எப்போதிலிருந்து இவ்வளவு தெளிவாக எழுத ஆரம்பித்தீர்கள் இடலி வடை?
இதை நான் தான் எழுதினேன்
இப்படிக்கு
உண்மையான பகுத்தறிவாளன்
சட்ட ரீதியான நடவடிக்கை சன் மீது எடுக்க வேண்டும். மொபைல் கமெராவில் ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் போடுவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
யார் வேணுமானாலும் யாருடைய அந்தரங்கத்தையும் படம் பிடித்து வெளியிடலாமா?
/*
இரண்டும் இல்லாமல் மூன்றாம் ரூட்டில் பயணிக்கிறது ஒரு வண்டி. ‘ எனக்கு அப்போதே தெரியும், ஆனால் கடவுளைக்கண்டேன்; உங்களிடம் சொல்லி இருப்பேன், இங்கிலீஷில் கோடி காட்டினேன், என்ன செய்வது, ஆனால் எனக்குக் கவலையில்லை,புற்றுநோய்க்கு ஐ எஸ் ஓ வைத்தியர் அவர் ஆனால் அவன் ஒரு காமாந்தகாரன், வீடியோ வந்துவிட்டது ஆனால் மனைவி அங்கே இருக்கும்போது என்ன எழுதுவது?’ எதாவது புரிகிறதா? இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். */
Ningal solvathu Charu?
//யார் இந்த பதிவை எழுதினார் என்று கண்டுபிடிப்பதில் டைம் வேஸ்ட் செய்யாதீங்க.//
*******
இன்பாவும் இல்லை... யதிராஜும் இல்லை... அப்படின்னா யாரு??
இவருக்கு (நித்யா) கருட புராணம் படி என்ன தண்டனை??
அவர் தவறு செயதார் என்று என்னால் சொல்ல முடியவில்லை,இன்னும் சொல்ல போனால் அந்த நடிகையும் தவறு ஏதும் செய்யவில்லை..இரண்டு பேரும் விருப்ப பட்டு தான் நெருக்கமாக இருந்தார்கள்....அவர்கள் செய்தது நமது கலாசாரத்திற்கு புறம்பானது...அதும் திரைமரையாக தான் செய்தார்கள்.....
என்னை பொறுத்த வரை மக்கள் தான் தவறு செய்திருக்கிறார்கள்...அவர்கள் அவரகளது நிம்மதிக்காக நமது கலாசாரத்தை அடமானம் வைத்து விட்டார்கள்...நிம்மதி நிம்மதி என்று இது போன்றவர்களை வளர்த்தி விட்டார்கள்... எனக்கு தெரிஞ்சு மக்கள் அனைவரும் இப்பொழுது நிம்மதி அடைந்திருப்பார்கள்.... இதுவும் ஒருவகை தியானம் தான்...சொல்வதற்கே கேவலமாக இருக்கிறது...அந்தாள் மேலயும் நடிகை மேலயும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்,,,மக்கள் மேல் யார் நடவடிக்கை எடுப்பது ???????
Will Charu write about himself? Whoever asked you to post his message in IV is afraid of Charu's backlash and hopes IV can bear it (romba nallavaru!). - R. J.
Funny you are talking about legal actions. But imagine the type of life they'll have to lead from now on if they foolishly try to retain their same faces. Nithyananda and the actresses now just need a new face(thanks to whoever invented plastic surgery). People have to wake up atleast now. But I don't see them learning, even the chit fund cheats seem to thrive well.
I hope the future Samiyars both true and fake shud concede their marital status. I dont understand why they wanna hold on to their brahmachariam status when it is utterly impossible in this kalyug.
Hinduism doesn't force Brahmachariam. It all depends on the individual. Even Raghavendra was married with a kid before he took sanyasam.
சன் டிவியில் ஓளிபரப்பின் போது வீட்டில் உள்ள குழந்தைகளின் நிலைய பாருங்க.. விடியோ வை பார்த்து விட்டு
என் வீட்டு குழந்தைகளின் கேள்விககு பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டது.. வேதனையானது..
மதுரை தினகரன் அலுவலக எரிப்பையும் இதேபோலத்தான் திரும்பத் திரும்ப டிவியில் காட்டினார்கள். இறந்துபோன மூவரும் ஏசி மெஷின் கோளாறினால் ஏற்பட்ட தீவிபத்தில்தான் இறந்தார்கள் என்று ஒரு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பளித்தார். ரஞ்சிதா கால் இடறி நித்யானந்தரின் மேல் விழுந்ததைத்தான் தவறாகச் சித்தரித்துவிட்டார்கள் என்று யாராவது தீர்ப்பளிக்கக் கூடும்.
http://manushyaputhiran.uyirmmai.com/post/e0aea8e0aebfe0aea4e0aeafe0aebee0aea9e0aea8e0aea4e0aeb0-e0ae9ae0aebfe0aeb2-e0ae95e0af81e0aeb1e0aebfe0aeaae0aeaae0af81e0ae95e0aeb3.aspx
தங்கள் வருமானத்திற்காக நடிகையின் மானத்தை அடகு வைத்தது தவறுதான். (சாமியாரை அடகுவைத்தது எனக்குத் தவறாகக்கூடப் படவில்லை)
enna sir gyayam ithu?
Nithya is a normal human.. Not only Nithya.. every samiyaar is human.. he will have a desire for sex.
Every dog has a tail, and no special dog is there with special straight a tail..
May be if public wants, keep a camera (not costly though) for all samiyars private places (in all religion?) and you have (ethical) television channels to publish the same.
neat!
Post a Comment